2010–2019
பணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்
ஏப்ரல் 2017


பணிக்காக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்

ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிரயாசப்பட பணிக்கப்படுதல் தேவையானது மற்றும் முக்கியமானது, ஆனால் பணியின் அழைப்புக்கு இரண்டாம் பட்சமானது.

தலைவர் மான்சன் உங்கள் குரலைக் கேட்கவும் உங்கள் அறிவுரையைப் பெறவும் நாங்கள் புழகாங்கிதம் அடைகிறோம். நாங்கள் உங்களை நேசிக்கிறோம், உங்களை ஆதரிக்கிறோம், எப்போதும் உங்களுக்காக ஜெபிக்கிறோம்.

ஒவ்வொரு தேசத்துக்கும், இனத்திற்கும், பாஷைக்கும், ஜனத்துக்கும்1 சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிற மகத்தான பணிக்கு சம்பந்தப்பட்ட கொள்கைகளை நாம் ஒன்று சேர்ந்து கருத்தில்கொள்ளும்போது பரிசுத்த ஆவியின் உதவிக்காக நான் ஜெபிக்கிறேன். 1

சேவை செய்ய அழைக்கப்பட்டு பிரயாசப்பட பணிக்கப்பட்டிருக்கிறீர்கள்

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான வாலிபர்களும், இளம் பெண்களும், அநேக மூத்த தம்பதியரும் சால்ட் லேக் சிட்டியிலிருந்து ஒரு விசேஷித்த கடிதத்தைப் பெற ஆர்வமுடன் எதிர்பார்க்கிறார்கள். அனுப்பப்படுகிறவர்களுக்கும், அப்படியே குடும்பத்தினருக்கும், அதிக எண்ணிக்கையில் மற்ற ஜனங்களுக்கும் அந்த கடிதத்தின் சாராம்சம் என்றென்றைக்குமாய் தாக்கம் ஏற்படுத்துகிறது. அந்த கடிதம் வந்தடையும்போது, சரியாகவும் பொறுமையுடனும் அல்லது ஆர்வத்துடனும், மிகுந்த துரிதத்துடனும் கிழிக்கப்பட்டு திறக்கப்படுகிறது. இந்த விசேஷித்த கடிதத்தைப் படிப்பது என்றென்றைக்கும் மறக்கமுடியாத ஒரு அனுபவம்.

இந்தக் கடிதம் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவரால் கையொப்பமிடப்பட்டு, முதல் இரண்டு வாக்கியங்கள் பின்வருவதைப் போலிருக்கிறது. இதன்படி பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் ஒரு ஊழியக்காரராக சேவை புரிய நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். ---------------ஊழியத்தில் பணிபுரிய நீங்கள் பணிக்கப்பட்டிருக்கிறீர்கள்.

கர்த்தருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் ஒரு முழுநேர ஊழியக்காரராக சேவை செய்ய ஒரு அழைப்பே முதல் வாக்கியம் என்பதை தயவுசெய்து கவனிக்கவும். இரண்டாவது வாக்கியம் ஒரு குறிப்பிட்ட இடம் மற்றும் ஊழியத்தில் பிரயாசப்பட ஒரு நியமிப்பை குறிப்பிடுகிறது. இந்த இரண்டு வாக்கியங்களிலும் தெரியப்படுத்தப்பட்டிருக்கிற முக்கியமான விசேஷப் புரிந்துகொள்ளுதல் நம் அனைவருக்கும் அத்தியாவசியமானது.

சபையின் கலாச்சாரத்தில் அர்ஜென்டினா, போலந்து, கொரியா, அல்லது அமெரிக்க ஐக்கிய நாடுகளைப்போன்ற ஒரு நாட்டிற்கு அழைக்கப்படுதலைப்பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம். ஆனால் ஒரு ஊழியக்காரர் ஒரு இடத்திற்கு அழைக்கப்படுவதில்லை மாறாக அவன் அல்லது அவள் சேவை செய்ய அழைக்கப்படுகிறார்கள். 1829ல் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலம் கர்த்தர் அறிவித்ததைப்போல, “தேவனுக்கு ஊழியம் செய்ய நீங்கள் வாஞ்சையுள்ளவர்களாயிருந்தால், இப்பணிக்கு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.” 2

ஒவ்வொரு ஊழிய அழைப்பும் நியமனமும், அல்லது பின்னர் மறுநியமனமும் கர்த்தரின் ஊழியக்காரர்கள் மூலமான வெளிப்படுத்தலின் விளைவு. பணிக்கான ஒரு அழைப்பு சபையின் தலைவர் மூலமாக தேவனிடமிருந்து வருகிறது. உலகமுழுவதிலும் தற்போது இயங்கிக்கொண்டிருக்கிற 400 ஊழியங்களுக்கும் மேலானவற்றில், ஒரு நியமனம், கர்த்தரின் ஜீவிக்கிற தீர்க்கதரிசியால் அதிகாரமளிக்கப்பட்டு செயல்படுகிற, பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் ஒரு அங்கத்தினர் மூலமாக தேவனிடமிருந்து வருகிறது. தீர்க்கதரிசனத்தின் ஆவிக்குரிய வரங்களும் வெளிப்படுத்தலும் அனைத்து ஊழிய அழைப்புகளுடனும் நியமனங்களுடனும் வருகிறது.

1832ல் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தால் ஸ்டீபன் பர்னட்டுக்கு கொடுக்கப்பட்ட ஒரு ஊழிய அழைப்பின் விவரமே கோட்பாடும் உடன்படிக்கையின் பாகம் 80. சகோதரர் பர்னட்டின் இந்த அழைப்பை ஆராய்வது, (1) ஒரு ஊழியப் பணிக்கு அழைக்கப்படுதலுக்கும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிரயாசப்பட நியமிக்கப்படுவதற்குமிடையிலுள்ள வேறுபாடுகளை மிகத்தெளிவாக புரிந்துகொள்ளவும், (2) சுவிசேஷத்தை பிரகடனப்படுத்த நமது தனிப்பட்ட மற்றும் தெய்வீக நியமனத்தின் பொறுப்பை முழுவதுமாக பாராட்டவும் நமக்குதவுகிறது.

இந்த பாகத்திலுள்ள 1வது வசனம்  சேவை செய்ய ஒரு அழைப்பு. : “மெய்யாகவே, என்னுடைய ஊழியக்காரனாகிய ஸ்டீபன் பர்னட்டுக்கு இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார். நீ போ. நீ உலகத்திற்குள் போய் உன்னுடைய சத்தம் கேட்கும் இடம்வரை ஒவ்வொரு சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கி”. 3

அவருடைய ஊழியக் கூட்டாளியைப்பற்றி சகோதரர் பர்னட்டுக்கு வசனம்  2 அறிவிக்கிறது. ”நீ ஒரு கூட்டாளியை விரும்புகிறபடியே, என்னுடைய ஊழியக்காரனாகிய ஏடென் ஸ்மித்தை நான் உனக்குக் கொடுப்பேன்.” 4

இந்த இரண்டு ஊழியக்காரர்கள் எங்கே பிரயாசப்படவேண்டுமென வசனம் 3 குறிப்பிடுகிறது. ஆகவே, வடக்கோ, தெற்கோ, கிழக்கோ, மேற்கோ, அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் போய் என்னுடைய சுவிசேஷத்தை அறிவியுங்கள். ஏனெனில் நீங்கள் வழிதவறிப்போக முடியாது.” 5

அவருடைய ஊழியக்காரர்கள் பிரயாசப்படுகிறார்களென அவர் கவலைப்படவில்லை என குறிப்பிடுகிற இந்த வேதவசனத்தில் கர்த்தரால் பயன்படுத்தப்படுகிற “ஒரு பொருட்டல்ல” என்ற சொற்றொடரை நான் நம்பவில்லை. உண்மையில் அவர் ஆழ்ந்த அக்கறையுள்ளவர். ஆனால் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதின் பணி அவருடைய பணியாயிருப்பதால், அவர் உணர்த்துகிறார், வழிநடத்துகிறார், அவருடைய அதிகாரம்பெற்ற ஊழியக்காரர்களுக்கு வழிகாட்டுகிறார். ஊழியக்காரர்கள் எப்போதையும்விட அவருடைய கரங்களில் அதிக தகுதியும் ஆற்றலுமுள்ளவர்களாகவும் ஆக முயற்சித்து, தங்கள் கடமைகளை உண்மையுள்ளவர்களாக நிறைவேற்ற சிறப்பாய் செய்யும்போது, அவர்கள் எங்கு ஊழியம் செய்தாலும் அவருடைய உதவியுடன் அவர்களால் “வழி தவறிப் போக முடியாது.” ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிரயாசப்பட பணித்தல் அத்தியாவசியமானதும் முக்கியமானதுமாகும். ஆனால் பணிபுரிய அழைப்புக்கு அது இரண்டாவதாயிருக்கிறதென்பது ஒருவேளை இந்த வெளிப்படுத்தலில் இரட்சகர் நமக்குப் போதித்துக்கொண்டிருக்கும் பாடங்களில் ஒன்றாயிருக்கலாம்.

எல்லா ஊழியக்காரர்களுக்கும் முக்கியமான தகுதிகளை அடுத்த வசனம் முக்கியப்படுத்துகிறது. “ஆகவே நீங்கள் கேட்ட மெய்யாகவே நீங்கள் நம்புகிறசத்தியமென அறிந்த காரியங்களை அறிவியுங்கள்.” 6

ஊழியம் செய்ய உண்மையிலேயே யாரிடமிருந்து அழைப்பு வருகிறதென சகோதரர் பர்னட்டுக்கும் நம் அனைவருக்கும் கடைசி வசனம் நினைப்பூட்டுகிறது. “இதோ, இதுவே உங்களை அழைத்தவரும், உங்கள் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் சித்தமாயிருக்கிறது. ஆமென்.”7

தவறான புரிந்துகொள்ளுதலை மேற்கொள்ளுதல்

பணிக்கு அழைக்கப்படுதலுக்கும் பிரயாசப்பட நியமிக்கப்படுதலுக்குமிடையில் வேறுபாடு தெளிவாகத் தோன்றுகிற பொதுமாநாட்டின் ஆசாரியத்துவக்கூட்டத்தில் கலந்துரையாட நான் ஏன் தெரிந்துகொண்டேன் என உங்களில் சிலர் உங்களுக்குள்ளே கேட்டுக்கொள்ளலாம். என்னுடைய பதில் மிக நேரடியானது. சபையின் அநேக அங்கத்தினர்களால் இந்த கொள்கைகள் மிகச் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை என்பதை எனது அனுபவம் எனக்குக் கற்றுக்கொடுத்தது.

இந்தக் காரியத்தைக்குறித்து நான் பேசுவதற்கான ஒரு பெரிய காரணம், தங்களுடைய சேவையின்போது, வேறு பல காரணங்களுக்காக வேறு களத்திற்கு மறுநியமனம் செய்யப்பட்ட அநேக ஊழியக்காரர்களால் உணரப்பட்ட அக்கறை, கவலை, குற்றவுணர்வைப்பற்றி காலப்போக்கில் நான் கற்றுக்கொண்டதே. விபத்துகள், காயங்கள், விசா கிடைப்பதிலுள்ள தாமதங்கள், சவால்கள், அரசியல் நிலையின்மை, புதிய ஊழியங்கள் உருவாக்கி பணியமர்த்தல், அல்லது உலகமுழுவதிலும் சுவிசேஷத்தைப் பிரகடனப்படுத்தும் பணியில் மாறுதலின் தேவைகளினால் சிலசமயங்களில் இத்தகைய மறுநியமனமங்கள் அவசியமாயிருக்கின்றன. 8

ஒரு வித்தியாசமான பிரயாச களத்துக்கு ஒரு ஊழியக்காரர் நியமிக்கப்படும்போது, அந்த நடைமுறை முதல் நியமனத்தைப்போன்றே இருக்கும். இத்தகைய மறுநியமிப்புகள் எல்லாவற்றையும் செய்வதில் பன்னிருவர் குழுமத்தின் அங்கத்தினர்கள் உணர்த்துதலையும் வழிகாட்டுதலையும் நாடுகிறார்கள்.

தனது இருதயத்தின் ஆழமான உணர்வுகளை என்னுடன் பகிர்ந்துகொண்ட ஒரு விசுவாசமிக்க மனிதனுடன் நான் சமீபத்தில் பேசினேன். பணிக்கு அழைக்கப்படுதலுக்கும் பிரயாசம் ஒன்றிற்கு நியமிக்கப்படுதலுக்குமிடையிலுள்ள வித்தியாசத்தைப்பற்றி ஒரு கூட்டத்தில் நான் விவரித்தேன். இந்த நல்ல சகோதரர் என் கைகளைக் குலுக்கி தனது கண்களில் கண்ணீரோடு என்னிடம் சொன்னார், இன்று நான் கற்க நீங்கள் உதவிய காரியங்கள் 30ஆண்டுகளுக்கும் மேலாக நான் சுமந்துவந்த ஒரு சுமையை என்னுடைய தோள்களிலிருந்து இறக்கியிருக்கிறது.. ஒரு இளம் ஊழியக்காரனாக நான் தென் அமெரிக்காவில் பிரயாசப்படும் ஒரு களத்துக்கு நான் முதலில் பணிக்கப்பட்டிருந்தேன். விசா எனக்குக் கிடைக்காததால் என்னுடைய நியமனம் ஐக்கிய அமெரிக்க நாட்டிற்கு மாற்றப்பட்டது. நான் அழைக்கப்பட்ட இடத்தில் என்னால் ஏன் பணிபுரிய முடியவில்லை என இத்தனை ஆண்டுகளாக நான் வியப்புற்றிருந்தேன். பணிக்காக நான் அழைக்கப்பட்டேன், ஒரு இடத்திற்கு அல்ல என்பதை இப்போது நான் அறிந்துகொண்டேன். இந்த புரிந்துகொள்ளுதல் எனக்கு எவ்வளவு உதவியதென்பதை என்னால் உங்களுக்குக் கூறமுடியவில்லை.

இந்த நல்ல மனிதனுக்காக என் இருதயம் வலித்தது. உலகமுழுவதிலும் இந்த அடிப்படையான கொள்கைகளை நான் போதித்திருக்கிறேன். நான் இப்போது விவரித்த அந்த மனிதனைப்போல எண்ணிலடங்காத தனிப்பட்டவர்கள் அதே உணர்வை என்னிடம் தனிப்பட்ட வகையில் தெரிவித்தனர். சபையின் ஒரு அங்கத்தினர்கூட பிரயாசப்பட பணிக்கப்படுவதைப்பற்றி தவறுதலான புரிந்துகொள்ளுதலின், நிச்சயமின்மையின், குற்றஉணர்வின் ஒரு அவசியமில்லாத சுமையை சுமக்கக்கூடாதென்பதற்காகவே இதைப்பற்றி நான் இன்று பேசுகிறேன்.

“ஆகவே, வடக்கோ, தெற்கோ, கிழக்கோ, மேற்கோ, அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் போய் என்னுடைய சுவிசேஷத்தை அறிவியுங்கள். ஏனெனில் நீங்கள் வழி தவறிப் போக முடியாது.” 9 இந்த வேதவசனத்தின் வார்த்தைகளை நீங்கள் தியானித்து, உங்கள் இருதயங்களைத் திறக்கும்போது, புரிந்துகொள்ளுதலுக்கும், குணப்படுதலுக்கும், உங்களுக்கு தேவையான சரிப்படுத்தலுக்கும் உங்கள் ஆத்துமாவுக்குள் ஆழமாகக் கொண்டுபோக பரிசுத்த ஆவியை நீங்கள் அழைப்பீர்களென நான் நம்புகிறேன், ஜெபிக்கிறேன்.

அநேக ஆண்டுகளாக ஊழியக்காரர்களை நியமிப்பதில் என்னுடைய தனிப்பட்ட அனுபவமே இந்த தலைப்பை விவாதிக்க நான் உணர்ந்த ஒரு கூடுதலான காரணமாய் இருக்கிறது. அவரவரது பிரயாச களங்களுக்கு ஊழியக்காரர்களை நியமிக்க எங்கள் பொறுப்பை நாங்கள் நிறைவேற்றுகிறபோது கர்த்தரின் சித்தத்தை பகுத்தறிய நாடுதலைவிட மிக வல்லமையாக இருந்துகொண்டிருக்கிற பிற்கால வெளிப்படுத்தலின் உண்மை எதுவுமே பன்னிருவருக்கு உறுதிசெய்வதில்லை. ஒவ்வொருவருவராக, பெயர் பெயராக நம் ஒவ்வொருவரையும் இரட்சகர் அறிந்திருந்து, அக்கறையுள்ளவராயிருக்கிறாரென நான் சாட்சியளிக்கிறேன்.

பணிக்காக ஒரு அழைப்பிற்கு ஆயத்தப்படுதல்

ஒரு அடிப்படையை இப்போது நான் சுருக்கமாக, ஆனால் பணிக்காக ஆயத்தப்படுதலை வழக்கமாக தவிர்ப்பது பற்றி கலந்துரையாட விரும்புகிறேன்.

ஆசாரியத்துவம், ஆலயம், ஊழியம் என்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று வார்த்தைகள் தேவனின் குமாரர்களுக்காக ஆயத்தப்படுதல் மற்றும், முன்னேற்றத்தின் ஒரு மாதிரியை விவரிக்கிறது. சிலசமயங்களில் பெற்றோராக, நண்பர்களாக, சபை அங்கத்தினர்களாக, முழுநேர ஊழிய சேவைக்கு முன்னால், நிறைவேற்றப்படவேண்டிய உடன்படிக்கையின் பாதையினூடே பிற முக்கிய படிகளை ஒரு அளவிற்கு உதாசீனப்படுத்தி, இளம் ஆண்களுக்கான ஊழிய ஆயத்தப்படுதலில் நாம் அதிக அளவில் கவனம் செலுத்துகிறோம். ஒரு ஊழியக்காரராக பணிபுரிவது நிச்சயமாக முக்கியமானது, ஆனால் ஆவிக்குரிய வளர்ச்சியிலும் சேவையிலும் ஒரு வாழ்நாள் முழுவதுக்குமான ஒரு பெலமான அஸ்திவாரத்தை உருவாக்குவதில் இது ஒன்று மட்டுமே கட்டுமான கல் அல்ல. ஆசாரியத்துவ மற்றும் ஆலய ஆசீர்வாதங்கள் இரண்டுமே நியமிக்கப்பட்ட பிரயாச களம் செல்வதற்கு முன்வருகிறது, அவைகளும் நமது வாழ்நாள் முழுவதற்கும் ஆவிக்குரியவிதமாக பாதுகாக்கவும் பெலப்படுத்தவும் அத்தியாவசியமானவை.

வாலிபர்களே, உங்கள் கடமைகளை நீங்கள் நிறைவேற்றுவதில், ஆரோனிய ஆசாரியத்துவம் அல்லது குறைந்த ஆசாரியத்துவத்தைக் கனம்பண்ணுவதில், மெல்கிசேதேக்கு அல்லது உயர்ந்த ஆசாரியத்துவத்தைப் பெறவும் அதன் ஆணை மற்றும் உடன்படிக்கையை நிறைவேற்றவும் நீங்கள் ஆயத்தப்படுகிறீர்கள். 10 உயர் ஆசாரியத்துவத்தைப் பெறுவதற்கு மிக முக்கியமாகத் தேவையான ஒன்று தனிப்பட்ட தகுதி. வாழ்நாள் முழுவதற்குமான ஆசாரியத்துவ சுயநலமில்லா சேவை உங்களுக்கு முன்னிருக்கிறது. அடிக்கடி அர்த்தமுள்ள சேவையை அளிப்பதால் இப்போது ஆயத்தப்படுங்கள். தகுதியாயிருப்பதை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். தகுதியுள்ளவராயிருங்கள். தகுதியில் நிலைத்திருங்கள்.

மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தையும் சேவை செய்ய ஒரு அழைப்பையும் பெற்ற பின்பு, பரிசுத்த ஆலயத்தின் உடன்படிக்கைகள் நியமங்கள் மூலமாக, ஒரு இளம் ஆண் வல்லமையினால் பாதுகாக்கப்படுகிறான். 11 ஆலயத்திற்கு போகுதலும், ஆலயத்தின் ஆவி உங்களுக்குள்ளே போகுதலும், ஒரு முழுநேர ஊழியக்காரராக ஆற்றலுள்ள சேவைக்கு முன்செல்லும். இளம் ஆண்களான உங்களுக்கும் சபையின் அங்கத்தினர்கள் அனைவருக்கும் ஆலயத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு தனிப்பட்ட தகுதி மிக முக்கியமான தேவையாயிருக்கிறது. சுவிசேஷத் தரங்களின்படி நீங்கள் வாழும்போது கர்த்தரின் ஆலயத்திற்குள் நீங்கள் பிரவேசிக்க முடிந்து, உங்கள் குமரப்பருவம் முழுவதிலும் பரிசுத்த நியமங்களில் பங்கேற்கமுடியும். ஆலய நியமத்தில் உங்கள் நேசமும் புரிந்துகொள்ளுதலும் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களை பெலப்படுத்தி உங்களை ஆசீர்வதிக்கும். தகுதியாயிருப்பதையும் நிலைத்திருப்பதையும் தயவுசெய்து நேசியுங்கள். தகுதியுள்ளவராயிருங்கள். தகுதியில் நிலைத்திருங்கள்.

அநேக வாலிபர்களும் இளம் பெண்களும் ஏற்கனவே தற்போதைய வரையறுக்கப்பட்ட பயன்பாட்டு ஆலய சிபாரிசை வைத்திருக்கிறார்கள். ஆரோனிய ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவராக, உங்கள் சொந்த குடும்ப பெயர்களை நீங்கள் கண்டுபிடித்து, ஆலயத்தில் உங்கள் குடும்பத்தினருக்காக ஞானஸ்நானங்களையும் திடப்படுத்துதல்களையும் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஆலய சிபாரிசை வைத்திருத்தல் உங்கள் தகுதியைக் காட்டுகிறது, ஆலயத்தில் மற்றவர்களுக்கு சேவை செய்தல் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்திற்காக ஆயத்தப்படுத்துதலின் ஒரு முக்கியமான பாகம்.

வாலிபரே, இப்போது நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு ஊழியக்காரர். உங்களைச் சுற்றிலும் எப்போதும் இருப்பவர்கள் “அதை எங்கே காண்பதென அறியாதிருக்கிறபடியால் சத்தியத்திலிருந்து விலக்கப்பட்ட” 12 நண்பர்களும் அண்டை வீட்டாருமாயிருக்கின்றனர். பரிசுத்த ஆவியால் நீங்கள் வழிகாட்டப்படும்படி, நீங்கள் ஒரு சிந்தனையை பகிர்ந்துகொள்ளலாம், ஒரு அழைப்பைக் கொடுக்கலாம், மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் சத்தியங்களை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு குறுஞ்செய்தியை அல்லது ட்வீட்டை அனுப்பலாம். ஊழியப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவதற்கான உங்கள் அதிகாரப்பூர்வ அழைப்புக்கு நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

ஆசாரியத்துவ, ஆலய, ஊழிய ஆசீர்வாதங்கள் ஒன்றாக சேகரிக்கப்பட்டு “கிறிஸ்துவுக்கள் கட்டப்படும்போது”, 13 ஒரு இளம் ஊழியக்காரரின் இருதயத்திலும் ,மனதிலும் ஆத்துமாவிலும் செயல்பட்டு, அவர் பணிக்கு தகுதி பெற முடியும். 14 அதிகாரத்தோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாயிருக்க பொறுப்பை நிறைவு செய்ய அவரது தகுதி அதிகரிக்கிறது. ஆசாரியத்துவ மற்றும் ஆலய உடன்படிக்கைகளை கனம்பண்ணுதலுமாகிய ஆவிக்குரிய இணைப்பு, ஆசாரியத்துவ உடன்படிக்கைகள்16 மூலமாக தெய்வீகத்தின் வல்லமையைப்15 பெறுதல், சுயநலமில்லாமல் சேவை செய்தல், தேவனின் பிள்ளைகளுக்கு நித்திய சுவிசேஷத்தைப் பிரகடனப்படுத்துதல், ஒரு வாலிபனை “விசுவாசத்தில் உறுதியாய் அசைக்கமுடியாதவனாக்கி”, 17 “கிறிஸ்துவில் வேர்கொண்டவர்களாகவும் கட்டப்பட்டவர்களாகவுமாக்குகிறது.” 18

நம்து வீடுகளிலும் சபையிலும், தேவனின் விசுவாசமுள்ள குமாரர்களுக்காக ஆயத்தப்படுத்தல் மற்றும் முன்னேற்றத்தில் கர்த்தரின் மாதிரியின் மூன்று காரியங்களுக்கும் சமமான முக்கியத்துவத்தை நாம் கொடுக்கவேண்டும். அவை, ஆசாரியத்துவம், ஆலயம், ஊழியம். தகுதியாயிருத்தல் மற்றும் தகுதியில் நிலைத்திருத்தலை நேசிக்க நமக்கு இந்த மூன்றும் தேவையாயிருக்கிறது. தகுதியாயிருங்கள், தகுதியில் நிலைத்திருங்கள்.

வாக்களிப்பும் சாட்சியும்

என்னுடைய அன்பான சகோதரரே, சுவிசேஷத்தைப் பிரகடனப்படுத்தும் பணிக்கான உங்கள் அழைப்பிலும், ஒரு குறிப்பிட்ட களம் அல்லது களங்களுக்கு உங்கள் நியமனத்திலும் வெளிப்படுத்துதலின் ஆவிக்குரிய வரம் உங்களுக்கு கிடைக்கும் என நான் வாக்களிக்கிறேன். சுயநலமற்ற ஆசாரியத்துவ மற்றும் ஆலய சேவையின் மூலமாக இப்போது சிரத்தையுடன் நீங்கள் ஆயத்தப்படும்போது, கர்த்தர் ஜீவிக்கிற உண்மையான உங்கள் சாட்சி பெலப்படுத்தப்படும். அவர் மீதுள்ள, அவருடைய பணி மீதுள்ள அன்பு உங்கள் இருதயத்தை நிரப்பும். தகுதியாயிருத்தலை நீங்கள் நேசிக்கக் கற்றுக்கொள்ளும்போது அநேக மக்களை ஆசீர்வதிக்கவும் சேவை செய்யவும் கர்த்தரின் கரங்களில் நீங்கள் ஒரு வல்லமையுள்ள கருவியாக மாறுவீர்கள்.

நமது பரலோக பிதாவும் அவருடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் ஜீவிக்கிறார்களென ஆனந்தத்துடன் நான் சாட்சியளிக்கிறேன். அவர்களுடைய சேவையில் ஈடுபட்டிருத்தல் நாம் எப்போதுமே பெறக்கூடிய மகத்தான ஆசீர்வாதங்களில் ஒன்றாயிருக்கும். அதை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.