2010–2019
சில குறிப்பிட்ட பெண்கள்
ஏப்ரல் 2017


குறிப்பிட்ட பெண்கள்

குறிப்பிட்ட பெண்கள் இரட்சகரான இயேசு கிறிஸ்துவில் மையம்கொண்டு அவருடைய பாவநிவாரண பலியின் வாக்களிப்பின் மூலமாக நம்பிக்கைகொண்ட சீஷர்களாக இருக்கிறார்கள்.

என்னுடைய அன்பான சகோதரிகளே, நாங்கள் உங்களை எவ்வளவு நேசிக்கிறோம், பிரதான தலைமையின் #IWasAStranger முயற்சி அழைப்புக்கு பதிலளித்த உங்களுடைய இளகிய மனதிற்கும் மிகஆர்வமான பங்கெடுப்புக்கும் நாங்கள் உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம். பரிசுத்த ஆவியின் மெல்லிய குரலுக்கு செவிகொடுத்து, நீங்கள் பெறுகிற உணர்த்துதலில் செயல்பட்டு ஜெபித்துக்கொண்டிருங்கள்.

நான் உள்ளூரிலோ அல்லது உலகமுழுவதிலுமோ பிரயாணம் செய்தாலும் “என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என யாரோ ஒருவர் கேட்பது வழக்கத்திற்கு மாறானதல்ல. வேதனையோடு நான் குறைவுள்ளவளாயிருப்பதால் எப்போதுமே எனக்கு பெயர்கள் நினைவில் நிற்பதில்லை. ஆயினும் அவருடைய விலையேறப்பெற்ற குமாரத்திகளையும் குமாரர்களையும் நான் சந்திக்கும்போது அந்த உண்மையான அன்பை உணர பரலோக பிதா என்னை அனுமதித்திருக்கிறாரென்பது எனக்கு நினைவிருக்கிறது.

சமீபத்தில், சிறையிலிருந்த சில அன்பான சகோதரிகளை சந்திக்க எனக்கு வாய்ப்பிருந்தது. மனதைத் தொட்ட வழியனுப்புதல்களை நாங்கள் சொன்னபோது, “சகோதரி பர்ட்டன், தயவுசெய்து எங்களை மறந்துவிடாதீர்கள்” என்று ஒரு அன்பான பெண் வேண்டிக்கொண்டாள். உங்களோடு சில சிந்தனைகளை நான் பகிர்ந்துகொள்ளும்போது நினைக்கப்பட விரும்புகிற அவளும் மற்றவர்களும் அப்படியேதான் உணருவார்கள் என நான் நம்புகிறேன்.

இரட்சகரின் நாளில் குறிப்பிட்ட பெண்கள் இரட்சகர் இயேசு கிறிஸ்துவில் மையங்கொண்டிருந்தார்கள்.

காலங்காலமாக நமது சகோதரிகள், நாமும் முயற்சித்துக்கொண்டிருக்கிற சீஷத்துவத்தின் உண்மையான மாதிரியை செய்துகாட்டினார்கள். “இயேசு கிறிஸ்துவிலும் அவருடைய [பாவநிவர்த்தியிலும்] விசுவாசம் வைத்து, அவருடைய போதனைகளைக் கற்று அதன்படி வாழ்ந்து, அவருடைய ஊழியத்தையும், அற்புதங்களையும், மகத்துவத்தையும் பற்றி சாட்சியளித்த பெயரறிந்த, அறியாத பெண்களின் விவரங்கள் புதிய ஏற்பாட்டில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த பெண்கள் முன்மாதிரியான சீஷர்களாகி இரட்சிப்பின் பணியில் முக்கியமான சாட்சிகளானார்கள்.”1

படம்
குறிப்பிட்ட பெண்கள்

லூக்கா புத்தகத்தில் உள்ள இந்த விவரங்களைக் கருத்தில்கொள்ளவும். முதலாவதாக இரட்சகரின் ஊழியத்தின்போது:

“பின்பு அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைப் பிரசங்கித்து வந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.

“மகதேலேனா என்னப்பட்ட மரியாளும், ,  யோவன்னாளும்,  …  சூசன்னாளும் மற்ற அநேக ஸ்திரீகளும்,  அவருக்கு ஊழியம் செய்தார்கள்.”2

அடுத்து அவருடைய சிலுவையிலறைதல் தொடருகிறது:

“ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள்  அதிகாலமே கல்லறையினிடத்திற்குப் போய்;

“அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதரைத் தரிசித்தோம்  என்று சொல்லி எங்களை பிரமிக்கப்பண்ணினார்கள்.”3

விசேஷித்த குறிப்பிடுதலாகத் தோன்றுகிற “குறிப்பிட்ட பெண்கள்” என்பதை இதற்கு முன்பு நான் அநேக முறை படித்து கடந்துபோயிருக்கிறேன், ஆனால் சமீபத்தில் நான் மிக கவனமாக தியானித்தபோது, அந்த வார்த்தைகள் மிக முக்கியமானவைகளாகத் தோன்றியது. குறிப்பிட்ட என்ற வார்த்தையின் அர்த்தம், விசுவாசமிக்க குறிப்பிட்ட பெண்கள்: என்பதோடு தொடர்புடைய ஒத்தவார்த்தைகளைக் கருத்தில் கொள்ளுங்கள், “திருப்தியான”, “நேர்மறையான”, “திடநம்பிக்கையுள்ள”, “உறுதியான”, “நிச்சயமான”, “உறுதியளிக்கப்பட்ட”, “நம்பத்தகுந்த.”4

அந்த வல்லமைமிக்க விளக்க வார்த்தைகளைப்பற்றி நான் தியானிக்கும்போது, இரட்சகர் பற்றி நேர்மறையான, தன்னம்பிக்கையுள்ள, உறுதியான, உறுதியளிக்கப்பட்ட சாட்சிகளைக் கொடுத்த அந்த சில புதிய ஏற்பாட்டு குறிப்பிட்ட பெண்களில் இருவரை நான் நினைவுகூருகிறேன். அவர்களும் நம்மைப்போலவே குறைவுள்ள பெண்களாயிருந்தாலும் அவர்களுடைய சாட்சி உணர்த்துதலாயிருந்தது.

இரட்சகரைப்பற்றி அவள் கற்றுக்கொண்டவற்றை வந்து பார்க்கும்படி மற்றவர்களை அழைத்த கிணற்றடியிலிருந்த பெயர் குறிப்பிடப்படாத பெண்ணைப்பற்றி நினைத்துப்பாருங்கள். ஒரு கேள்வியின் வடிவத்தில் குறிப்பிட்ட சாட்சியை அவள் பகர்ந்தாள். “அவர் கிறிஸ்துதானோ?”5 அவளுடைய சாட்சியும் அழைப்பும் மிகவும் வசீகரமாயிருந்து “அநேகர்  அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.”6

படம்
இரட்சகர் குறித்து மார்த்தாள் சாட்சி கொடுக்கிறாள்

அவளுடைய சகோதரனான லாசருவின் மரணத்தைத் தொடர்ந்து, கர்த்தரின் அன்பான சீஷையாயும் தோழியாகவுமிருந்த மார்த்தாள், “ஆண்டவரே, நீர் இங்கேயிருந்திருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான்” என்ற மிக உணர்ச்சியுடன் அறிவித்தாள். “இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன்” என அவள் தொடர்ந்ததில் அவளுடைய உறுதியைக் கருத்தில்கொள்ளவும். “நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்”7 என அவள் கூடுதலாக சாட்சியளித்தாள்.

இந்த குறிப்பிட்ட பெண்கள் இரட்சகரான இயேசு கிறிஸ்துவில் மையங்கொண்டு, அவருடைய பாவநிவாரணபலியின் வாக்குத்தத்தத்தின் மூலமாக நம்பிக்கையாயிருந்தார்கள் என இந்த சகோதரிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம்

உடன்படிக்கையைக் கைக்கொள்ளுகிற குறிப்பிட்ட மறுஸ்தாபிதத்தின், பெண்கள்: தியாகம் செய்ய சித்தமானவர்கள்

பூர்வகாலத்தில், சில குறிப்பிட்ட பெண்கள் சாட்சியளித்து, இயேசு கிறிஸ்துவின் போதனைகளின்படி வாழ்ந்தபோது அவர்கள் தியாகம் செய்தார்கள். மறுஸ்தாபிதத்தின் ஆரம்ப நாட்களில் குறிப்பிட்ட பெண்கள் இதைத்தான் செய்தார்கள். கிளே மாகாணம் மிசௌரியில் துன்புறுத்தலின்போது புதிதாக மனமாறியவர்களாக பாடுபட்டவர்களுக்கு மத்தியில் டுருசில்லா ஹென்டிரிக்கும் அவளுடைய குடும்பத்தினருமிருந்தார்கள். க்ரூகட் நதி யுத்தத்தின்போது அவளுடைய கணவன் நிரந்தரமாக முடமாக்கப்பட்டார். அவரைக் கவனித்துக்கொண்டு அவளுடைய குடும்பத்தையும் அவள் பராமரிக்க விடப்பட்டாள்.

“குடும்பத்திற்கு உணவில்லாத ஒரு குறிப்பிட்ட கவலைக்குள்ளான நேரத்தில், ‘நிறுத்து, ஏனெனில் கர்த்தர் கொடுப்பார்’ என்று ஒரு குரல் அவளுக்குக் கூறியதை அவள் நினைவுகூர்ந்தாள்”.

அவளுடைய மகன் மார்மன் பெட்டாலியனில் சேரவேண்டியதிருந்தபோது, முதலில் டுருசில்லா அதைத் தடுத்து, “‘உன்னத மகிமை உனக்கு வேண்டாமா?’ என ஒரு குரல் அவளிடம் சொன்னதைப்போலிருந்ததுவரை கர்த்தருடன் ஜெபத்தில் அவள் போராடினாள். ‘ஆம் என இயற்கையாகவே அவள் பதிலளித்தாள். ‘மகத்தான தியாகங்களைச் செய்வதைத் தவிர அதை அடைய எப்படி நீ நினைக்கலாமென?’’’ அந்தக்குரல் தொடர்ந்தது.8

உடன்படிக்கையைக் கைக்கொள்ள, தியாகத்திற்கான விருப்பங்கள் தேவையாயிருக்கிறதென இந்த சில குறிப்பிட்ட பெண்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம்.

இன்று குறிப்பிட்ட பெண்கள்: அவருடைய திரும்பவருதலைக் கொண்டாட நினைக்கிறார்கள், ஆயத்தப்படுகிறார்கள்.

இரட்சகரின் நாட்கள் மற்றும் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தின் ஆரம்பகால குறிப்பிட்ட பெண்களைப்பற்றி நான் குறிப்பிட்டேன். நம்முடைய நாட்களிலுள்ள குறிப்பிட்ட பெண்களைப்பற்றி என்ன சொல்வது?

படம்
ஆசியாவிலுள்ள சகோதரிகளுடன் சகோதரி பர்ட்டன்

சமீபத்தில் என்னுடைய ஆசியா பயணத்தில், நான் சந்தித்த அநேக குறிப்பிட்ட பெண்களால் நான் மீண்டும் ஒரு முறை உணர்த்தப்பட்டேன். குறிப்பாக, தங்களுடைய குடும்பங்களில், எப்போதுமே குடும்ப மற்றும் நாட்டின் கலாச்சாரங்களோடு மோதுகிறதால் சுவிசேஷ வாழ்க்கைக்கு சிலநேரங்களில் அதிக தியாகம் செய்து, சுவிசேஷ கலாச்சாரத்தின்படி வாழ முயற்சிக்கிற இந்தியா, மலேசியா, இந்தோனிசியாவிலுள்ள நான் சந்தித்த முதல் தலைமுறை அங்கத்தினர்களால் உணர்த்தப்பட்டேன். ஹாங்காங் மற்றும் தைவானிலுள்ள பல தலைமுறைகளின் சில குறிப்பிட்ட பெண்கள் தங்கள் குடும்பங்களைத் தொடர்ந்து ஆசீர்வதிக்கிறார்கள்.. சபை அங்கத்தினர்களும் சமுதாயங்களும் இரட்சகரை மையமாக வைத்து உடன்படிக்கையைக் கைக்கொள்ள விருப்பமுடன் தியாகம் செய்கிறார்கள். இதைப்போன்ற குறிப்பிட்ட பெண்கள் சபை முழுவதிலும் காணப்படுகிறார்கள்.

படம்
ஆசியாவிலுள்ள சகோதரிகளுடன் சகோதரி பர்ட்டன்

பலஆண்டுகளாக என்னுடைய வாழ்க்கையை ஆசீர்வதித்து கடந்த 15 ஆண்டுகளாக பலவீனத்திலும் கஷ்டத்திலும், இன்குளோசன் பாடி மையோசிட்டிஸ் நோயின் முற்றிய நிலையில் போராடிக்கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட பெண். சக்கரநாற்காலியில் முடங்கிக்கிடந்தாலும் நன்றியுள்ளவளாயிருக்க முயற்சிக்கிறாள். என்னால் சுவாசிக்க முடியும், என்னால் உண்ணமுடியும், என்னால் ஜெபிக்க முடியும், இரட்சகரின் அன்பை என்னால் உணரமுடியுமென, அவளால் செய்ய முடிகிற முடியும் என்ற பட்டியலை உண்டாக்குகிறாள். அவளுடைய கிறிஸ்துவை மையமாக வைத்திருக்கிற சில குறிப்பிட்ட சாட்சிகளை, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அநேகமாக ஒவ்வொரு நாளும் அவள் பகர்கிறாள்.

ஜென்னியின் கதையை சமீபத்தில் நான் கேட்டேன். அவள் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது பெற்றோர்கள் விவாகரத்து செய்தாலும், அவள் ஊழியம் செய்து முடித்து வந்தவள். வீட்டிற்குத் திரும்புகிற நினைவு மரண பயத்தை உண்டாக்கியதாக அவள் கூறினாள். ஆனால் அவளுடைய இத்தாலி ஊழியத்தின் முடிவில் அமெரிக்காவிற்கு போகும் வழியில் ஊழியவீட்டிற்கு அவள் போனாள். ஊழியத் தலைவரின் மனைவியான ஒரு குறிப்பிட்ட பெண் அவளுடைய தலையை வாரி அன்புடன் அவளுக்கு பணிவிடை செய்தார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், தொகுதி ஒத்தாசைச் சங்கத் தலைவராக ஜென்னி அழைக்கப்பட்டபோது மற்றொரு குறிப்பிட்ட பெண்ணான, பிணைய ஒத்தாசைச் சங்கத் தலைவரும் கிறிஸ்துவின் சீஷருமான டெரி, ஜெனியின் வாழ்க்கையை ஆசீர்வதித்தார். அந்த நேரத்தில் டாக்டர் பட்டத்திற்கான கட்டுரைக்காக ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தாள். ஜெனியை சரிப்படுத்தமட்டுமல்ல ஒரு தலைவராகவும் டெரி சேவை புரிந்தாள், ஆனால் லுக்கேமியா நோயிருப்பதாக எச்சரிக்கை ஜெனிக்கு தெரிந்தபோது மருத்துமனையில் அவளுடன் 10 மணிநேரம் டெரி இருந்தாள். டெரி மருத்துமனைக்கு சிகிச்சைக்காக ஜெனியை அழைத்துப்போனாள். “அநேக முறைகள் அவளுடைய காரில் தூக்கிவீசப்பட்டதாக நினைத்தேன்” என ஜெனி மனம் வருந்தினாள்.

அவளுடைய நோய்க்கும் அப்பால் தொகுதி ஒத்தாசைச் சங்கத் தலைவராக ஜெனி தொடர்ந்து ஆற்றலுடன் சேவை புரிந்தாள். அவளுடைய நோயின் முதிர்ச்சியிலும் படுக்கையிலிருந்துகொண்டே தொலைபேசியில் அழைத்தாள், உரை அனுப்பினாள், மின்அஞ்சல் செய்தாள், அவளை வந்து பார்க்கும்படி சகோதரிகளை அழைத்தாள். வாழ்த்து மடல்களையும் குறிப்புகளையும் அவள் அனுப்பி, ஒரு தொலைவிலிருந்து சகோதரிகளை நேசித்தாள். தங்களுடைய தொகுதி வரலாற்றிற்காக அவளுடைய தலைமையின் புகைப்படம் ஒன்றை அவளுடைய தொகுதி கேட்டபோது இதைத்தான் அவர்கள் பெற்றார்கள். ஒரு குறிப்பிட்ட பெண்ணாக ஜெனி இருந்ததால் அவளுடையதையும் சேர்த்து மற்றவர்களின் பாரங்களைப் பகிர்ந்துகொள்ள அனைவரையும் அவள் அழைத்தாள்.

படம்
தொகுதி ஒத்தாசைச் சங்க தலைமை தொப்பி அணிந்திருக்கிறார்கள்

“மற்றவர்களுக்கு சேவை செய்வது மட்டுமல்ல நமக்கும் சேவை செய்யவே இங்கே நாமிருக்கிறோம் என ஒரு குறிப்பிட்ட பெண்ணாக ஜெனி சாட்சியளித்தாள். இயேசு கிறிஸ்துவுடன் பங்காளியாயிருப்பதிலிருந்து, அவருடைய கிருபையையும் அவருடைய பாவநிவர்த்தியையும், சபையின் பெண்களுக்காக அன்பின் அவரது உணர்வுகளைப் புரிந்துகொள்வதிலிருந்து அந்த இரட்சிப்பு வருகிறது. ஒருவரின் முடியை வாரிவிடுதல், ஒரு உணர்த்துதலுடன் தெளிவான, நம்பிக்கையின் வெளிப்படுத்தலின் செய்தியுடன் ஒரு குறிப்பை அனுப்புதல் அல்லது நமக்கு சேவை செய்ய பெண்களை அனுமதிப்பது போன்ற எளிய காரியங்கள் மூலம் அது நடைபெறுகிறது.”9

சகோதரிகளே, நாம் தடுமாறும்போது, சந்தேகப்படும்போது, ஏமாற்றமடையும்போது, பாவமுள்ளவர்களாகும்போது, துக்கமடையும்போது, ஆத்துமவிரிவின்போது, கிணற்றடியில் குறிப்பிட்ட பெண் செய்ததைப்போல அவருடைய ஜீவதண்ணீரைக் குடிக்க கர்த்தரின் அழைப்பை நாம் ஏற்றுக்கொள்வோமாக. அதையே செய்ய மற்றவர்களையும் அழைத்து, நாமும் “அவர் கிறிஸ்துதானோ?” என்ற நமது சொந்த குறிப்பிட்ட சாட்சியைப் பகிர்வோமாக.

வாழ்க்கை சரியில்லாததாகத் தோன்றும்போது, அவளுடைய சகோதரனின் மரணத்தில் மார்த்தாளுக்குத் தோன்றியபோது, தனிமையின் மனவேதனைகளை, வறுமையை, அன்பானவர்களை இழத்தலை, திருமணம், குடும்பத்திற்கான சந்தர்ப்பங்களை இழத்தலை, பிரிந்துபோன குடும்பங்களை, பலவீனப்படுத்தும் மனஅழுத்தத்தை, சரீர அல்லது மனநோயை, கடுமையான அழுத்தம், ஆர்வத்தை, போதைக்கு அடிமையாயிருப்பதை, பணநெருக்கடியை, அல்லது பிற சாத்தியங்களின் மிதமிஞ்சியதை நாம் அனுபவிக்கும்போது “நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் அறிந்து  விசுவாசிக்கிறேன்” என்ற மார்த்தாளை நினைவுகூர்ந்து அதைப்போன்ற குறிப்பிட்ட சாட்சியை நாம் அறிவிப்போமாக.

படம்
சிலுவையருகில் பெண்கள்

சிலுவையில் அவர் பாடுபட்டு மிக்க வேதனையை அனுபவித்தபோது நமது விலையேறப்பெற்ற இரட்சகரை கைவிட மறுத்து, சில மணிநேரங்களுக்குப் பின்னர், அவருடைய மகிமையான உயிர்த்தெழுதலின் முதல் குறிப்பிட்ட சாட்சிகளாயிருப்பதற்கான சிலாக்கியம் பெற்றவர்களாயிருந்த அநேக குறிப்பிட்ட பெண்களை நாம் நினைவுகூர்வோம். ஜெபத்திலும் வேதப்படிப்பிலும் அவருக்கு நெருக்கமாயிருக்க நாம் காணப்படுவோமாக. வாரந்தோறும் திருவிருந்து நியமத்தின்போது அவருடைய பாவநிவர்த்தியின் பரிசுத்த அடையாளங்களுக்காக ஆயத்தப்படுதலிலும் பங்கேற்பதிலும், மற்றவர்களின் தேவையான நேரங்களில் அவர்களுக்கு சேவை செய்வதில் உடன்படிக்கைகளை நாம் கைக்கொள்ளும்போது அவரை நாம் நெருங்குவோமாக, அவர் மீண்டும் வருகிறபோது அவருடைய திரும்பவருதலைக் கொண்டாடப்போகிற  இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக,  குறிப்பிட்ட பெண்களில் ஒருவேளை அப்போது நாம் பங்காளிகளாயிருக்கலாம்.

படம்
இரண்டாம் வருகையில் இரட்சகர்

சகோதரிகளே, அன்பான பரலோக பெற்றோர்கள், நமது இரட்சகர், இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய அளவில்லாத பாவநிவர்த்தி பற்றி எங்கள் சார்பில் நான் சாட்சியளிக்கிறேன். மறுஸ்தாபிதத்தின் தீர்க்கதரிசியாக ஜோசப் ஸ்மித் முன்நியமிக்கப்பட்டிருக்கிறாரென நான் அறிவேன். மார்மன் புஸ்தகம் சத்தியமானதென்றும், தேவனின் வல்லமையினால் மொழிபெயர்க்கப்பட்டதெனவும் நான் அறிவேன். நமது நாட்களில் ஒரு ஜீவிக்கிற தீர்க்கதரிசியான தலைவர் தாமஸ்  எஸ்.மான்சனால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். இந்த சத்தியங்களில் நான் நிச்சயமாயிருக்கிறேன் இயேசு கிறிஸ்துவின நாமத்தில், ஆமென்.

குறிப்பு: ஏப்ரல் 1, 2017ல் சகோதரி பர்ட்டன் ஒத்தாசைச் சங்க பொதுத்தலைவரிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

குறிப்புகள்

  1. Daughters in My Kingdom: The History and Work of Relief Society (2011), 3.

  2. லூக்கா 8:1–3; முக்கியத்துவம் சேர்கப்பட்டுள்ளது.

  3. லூக்கா 24:22–23; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  4. ஆங்கிலத்தில் குறிப்பிட்ட என்ற வார்த்தைக்கு, “தேர்வு செய்யப்பட்ட” அல்லது “ஒரு விதமான” என்ற இரண்டாம் அர்த்தம் உள்ளது. ஆனால் உறுதி, தன்னம்பிக்கை, விசுவாசமுடைமை என்ற அர்த்தத்தில் நான் அதிகம் முக்கியத்துவப் படுத்த விரும்புகிறேன்.

  5. யோவான் 4:29.

  6. யோவான் 4:39.

  7. யோவான் 11:21–22,27; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  8. See Jennifer Reeder and Kate Holbrook, eds., At the Pulpit: 185 Years of Discourses by Latter-day Saint Women (2017), 51–52.

  9. சபை வரலாற்றுத் துறையில் 19ம் நூற்றாண்டு பெண்களின் வரலாற்றில் நிபுணரான ஆசிரியர் ஜென்னிபர் ரீடர் அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டது.