2010–2019
“என் சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன்.”
ஏப்ரல் 2017


“என் சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன்”

அவர்களை அவர் விட்டுப்போகும்போது அவருடைய சீஷர்களுக்கு அவர் சமாதானத்தை வாக்களித்தார். அதே வாக்களிப்பை அவர் நமக்கும் செய்தார்.

என்னுடைய அன்பான சகோதரிகளே, இன்றிரவு தேவனின் ஆவியால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். வல்லமைமிக்க தலைவர்களான சகோதரிகளிடமிருந்து உணர்த்தப்பட்ட செய்திகளும் இசையும் நமது விசுவாசத்தைப் பாதுகாத்து, நமது பரலோக பிதாவுடன் நாம் செய்த பரிசுத்த உடன்படிக்கைகளைக் கைக்கொள்ள நமது விருப்பத்தை அதிகரித்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மீதுள்ள நமது அன்பின் அதிகரிப்பையும் அவருடைய பாவநிவாரண பலியின் அற்புத வரத்திற்கான பாராட்டுதலையும் நாம் உணர்ந்தோம்.

இன்றிரவு எனது செய்தி எளிமையானது. நாம் அனைவரும் இன்றிரவு சமாதானத்தை உணர்ந்திருக்கிறோம். நம்மிலும், நமது குடும்பங்களிலும், நம்மைச் சுற்றியுள்ள ஜனங்களிடமும், அடிக்கடி அப்படிப்பட்ட சமாதானத்தை உணர நாமனைவரும் விரும்புகிறோம். அவர் அவர்களை விட்டுப் பிரியவிருந்தபோது கர்த்தர் தன் சீஷர்களுக்கு சமாதானத்தை வாக்களித்தார். அதே வாக்குத்தத்தத்தை அவர் நமக்கும் செய்திருக்கிறார். ஆனால் உலக வழியிலல்ல, அவரது வழியில் சமாதானத்தைக் கொடுப்பதாக அவர் சொன்னார். சமாதானத்தை அனுப்பும் அவரது வழியை அவர் விவரித்தார்

“என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. (யோவான் 14:26–27).

லாமானியர்களிடம் தங்களின் ஊழியத்திற்காக அவர்கள் பிரயாணப்பட்டபோது மோசியாவின் குமாரர்களுக்கு சமாதானத்தின் வரம் தேவைப்பட்டது. ஒரு சிறிது ஆர்வத்திற்கும் அதிகமாய் அவர்களின் வேலையின் மகத்துவத்தை அவர்கள் உணர்ந்தபோது மறுநிச்சயத்திற்காக அவர்கள் ஜெபித்தார்கள். “கர்த்தர் தம் ஆவியானவராலே அவர்களை அணுகி, அவர்களை நோக்கி, திடன்கொள் என்றார். அவர்களும் ஆறுதலடைந்தார்கள்” (ஆல்மா 17:10; ஆல்மா 26:27 ஐயும் பார்க்கவும்.)

சில சமயங்களில் அதிகரிக்கிற சவால்களாக உங்களுக்குத் தோன்றுகிற நிச்சயமின்மையை நீங்கள் எதிர்கொள்ளும்போது நீங்கள் சமாதானத்துக்காக ஏங்கலாம். மரோனிக்கு கர்த்தர் போதித்த பாடத்தை மோசியாவின் குமாரர்கள் கற்றார்கள். “மனுஷர் என்னிடத்தில் வந்தால், நான் அவர்களுக்கு அவர்களுடைய பெலவீனத்தைக் காண்பிப்பேன். மனுஷர் தாழ்மையாய் இருக்கும்படிக்கு நான் அவர்களுக்கு பெலவீனத்தைத் தருகிறேன். எனக்கு முன்பாகத் தாழ்மையாய் இருக்கிற அனைத்து மனுஷருக்கும் என் கிருபையே போதுமானதாயிருக்கிறது. அவர்கள் எனக்கு முன்பாக தாழ்மையாயிருந்து, என்னிடத்தில் விசுவாசமாயிருந்தால் நான் அவர்களுக்கு பெலவீனமுள்ளவைகளைப் பெலமுள்ளவைகளாக்குவேன்” (ஏத்தேர் 12:27)

அவன் “இந்த வார்த்தைகளைக் கேட்டபோது அவன் “தேற்றப்பட்டான்” என மரோனி சொன்னான் (ஏத்தேர் 12:29) அது நம் அனைவருக்கும் தேறுதலாக இருக்குமென நான் நம்புகிறேன். தங்களுடைய பெலவீனங்களைப் பார்க்காதவர்கள் முன்னேறுவதில்லை. உங்களுடைய பெலவீனங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பது ஒரு ஆசீர்வாதம், ஏனெனில் நீங்கள் தாழ்மையாயிருக்க அது உங்களுக்கு உதவி, உங்களை பெலமாக்க ஆற்றலுடைய இரட்சகரிடத்திற்கு உங்களை திரும்ப வைக்கிறது. ஆவி உங்களைத் தேற்றுவது மட்டுமல்ல, ஆனால் உங்களுடைய தன்மையிலேயே பாவநிவர்த்தி செய்கிற மாற்றத்தின் முகவராகவும் அவர் இருக்கிறார். பின்னர் பலவீனமானவை பெலமுள்ளவையாகின்றன.

சிலசமயங்களில் உங்கள் விசுவாசம் சாத்தானால் சவால் விடப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் எல்லோருக்கும் இது நடக்கிறது. பரிசுத்த ஆவியை உங்கள் துணையாக வைத்துக்கொள்வதே இந்த தாக்குதல்களுக்கு எதிரான உங்கள் பாதுகாப்பு. அவர் உங்கள் ஆத்துமாவுக்கு சமாதானத்தைப் பேசுவார். விசுவாசத்தில் முன்னேறிச் செல்ல அவர் உங்களைக் கட்டாயப்படுத்துவார். இயேசு கிறிஸ்துவின் ஒளியையும் அன்பையும் நீங்கள் உணர்ந்தபோதுள்ள சமயங்களின் நினைவுகளை அவர் திரும்பக் கொண்டுவருவார்.

பரிசுத்த ஆவி உங்களுக்குக் கொடுக்கக்கூடிய மிகவிலையேறப்பெற்ற வரங்களில் நினைவுகூர்தலும் ஒன்றாயிருக்கும். அவர் “[கர்த்தர்] உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவான் 14:26). அந்த நினைவு பதிலளிக்கப்பட்ட ஜெபமாயிருக்கலாம், பெற்றுக்கொண்ட ஒரு ஆசாரியத்துவ நியமமாயிருக்கலாம், உங்கள் சாட்சியின் நிச்சயமாயிருக்கலாம், அல்லது உங்கள் வாழ்க்கையில் தேவனின் கரத்தை நீங்கள் கண்ட ஒரு நேரமாயிருக்கலாம். ஒருவேளை வருங்காலத்தில் ஒரு நாளில் உங்களுக்கு பெலன் தேவைப்படும்போது, இந்தக் கூட்டத்தின்போது நீங்கள் கொண்டிருக்கிற உங்களுடைய உணர்வுகளை பரிசுத்த ஆவி உங்கள் நினைவுக்குக் கொண்டுவரலாம். இது இப்படியே இருக்க நான் ஜெபிக்கிறேன்.

அநேக ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்ப்ரக் ஆஸ்திரியாவில், ஒரு தகர கொட்டகையில் நடந்த மாலை திருவிருந்துக்கூட்டத்தைப் பற்றி, பரிசுத்த ஆவி அடிக்கடி என் மனதிற்குக் கொண்டுவருகிற ஒரு நினைவிருக்கிறது. அக்கொட்டகை ஒரு இருப்புப் பாதைக்கு அடியிலிருந்தது. அங்கே, மரபெஞ்சுகளில் அமர்ந்திருந்தவர்கள் பன்னிரண்டு பேர்களே. சிலர் வயதானவர்களாகவும், சிலர் இளைஞர்களாகவும் இருந்த அவர்களில் அநேகர் பெண்கள். இந்த சிறிய சபைக்கு மத்தியில் திருவிருந்து பரிமாறப்பட்டபோது நன்றியுணர்வின் கண்ணீர்களை நான் கண்டேன். அந்தப் பரிசுத்தவான்கள் மீது இரட்சகரின் அன்பை உணர்ந்தேன், அவர்களும் அப்படியே. ஆனால் அந்த தகரக் கூடாரத்தில் நான் பார்த்த சமாதானத்தின் உணர்ச்சியை தம்முடன் கொண்டு வந்த ஒளியின் அற்புதம் எனக்கு மிகத் தெளிவாக நினைவிருக்கிறது. அது இரவு நேரமாயிருந்தது, அங்கே ஜன்னல்கள் எதுவுமில்லை, இருந்தும் மத்தியானவேளையின் சூரியஒளியைப்போன்று அறை பிரகாசித்தது.

அந்த மாலையில் பரிசுத்த ஆவியின் ஒளி பிரகாசமாயும் ஏராளமாயும் இருந்தது. தங்கள் பாவங்களுக்காக மன்னிப்பை நாடியும், எப்போதும் அவரை நினைவுகூர ஒப்புக்கொடுக்கவும் கர்த்தருக்கு முன்பாக வந்த அந்த பரிசுத்தவான்களின் தாழ்மையான இருதயங்களே ஒளியை உள்ளேவிட்ட ஜன்னல்கள். அப்போது அவரை நினைவுகூருதல் கடினமாயிருக்கவில்லை, அதைப் பின்தொடர்ந்த ஆண்டுகளில் அவரையும் அவரது பாவநிவர்த்தியையும் நினைவுகூர, அந்த பரிசுத்த அனுபவத்தின் நினைவு எனக்கு எளிதாக்கிற்று. அந்த நாள் ஆவியானவர் நம்முடன் இருப்பார் என்ற திருவிருந்து ஜெபத்தின் வாக்குத்தத்தம் நிறைவேற்றப்பட்டது, ஆகவே ஒளி மற்றும் சமாதானத்தின் உணர்வைக் கொணடுவந்தது.

எனக்கு ஆறுதல் தேவைப்படும்போது தேற்றரவாளனோடு கர்த்தர் என்னை அணுகிய அநேக வழிகளுக்காக, உங்களைப்போலவே நானும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஆனால் பரலோகத்திலுள்ள நமது பிதா நமது ஆறுதலில்மட்டுமல்ல நமது முன்னேற்றத்திலும் அக்கறைகொண்டிருக்கிறார். வேதங்களில் பரிசுத்த ஆவி விளக்கப்பட்டிருக்கிற அநேக வழிகளில் ஒன்றே தேற்றரவாளன். இங்கே மற்றொன்று. “இப்போது, நான் உங்களுக்கு மெய்யாகவே, மெய்யாகவே சொல்லுகிறேன், நன்மை செய்ய நடத்துகிற அந்த ஆவியிலே உங்கள் நம்பிக்கையை வையுங்கள்” (கோ.உ 11:12). எப்போதுமே, நீங்கள் செய்ய அவர் நடத்தவிருக்கிற நன்மை, வேறொருவர் தேவனிடமிருந்து ஆறுதல் பெறுவதற்கு உதவுதலில் அடங்கும்.

அவருடைய ஞானத்தில் உங்களை அவர் சபையின் அமைப்புகளிலும் வகுப்புகளிலும் கர்த்தர் ஒன்றாகக் கொண்டு வந்திருக்கிறார். நன்மை செய்ய உங்கள் ஆற்றலை அதிகரிக்கவே இதை அவர் செய்திருக்கிறார். இந்த அமைப்புகளில் அவருக்காக மற்றவர்களுக்கு சேவை செய்ய உங்களுக்கு குறிப்பிட்ட கடமைகளிருக்கின்றன. உதாரணமாக, நீங்கள் இளம்பெண்ணாயிருந்தால், சிலசமயங்களில் ஊக்கமிழந்தவர் என நாம் அழைக்கிற ஒரு மியா மெய்டை நீங்கள் அணுகும்படி உங்கள் ஆயரால் அல்லது உங்கள் இளம்பெண்கள் தலைவரால் நீங்கள் கேட்கப்படலாம். ஆயர் அல்லது இளம்பெண்கள் தலைவரைவிட உங்களுக்கு அவளை நன்றாய் தெரிந்திருக்கலாம். ஒருவேளை வீட்டில் அல்லது பள்ளிக்கூடத்தில், ஒருவேளை இரண்டு இடத்திலுமே அவளுக்கு பிரச்சினைகளிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவளை அணுக உங்களைக் கேட்க அவர்கள் ஏன் உணர்ந்தார்களென உங்கள் தலைவர்கள் அறியாதிருக்கலாம் ஆனால், கர்த்தர் அறிகிறார், அவருடைய ஆவியின் உணர்த்துதல் மூலமாக இந்தப் பணியை அவர் வழிநடத்துகிறார்.

உங்களுடைய முயற்சிகளில் வெற்றி, உங்கள் இருதயத்திலும் மீட்க நீங்கள் அனுப்பப்பட்ட இளம்பெண்ணுடைய இருதயத்திலும் ஒரு மாற்றத்தின் அற்புதம் செய்யும். அதற்கு பரிசுத்த ஆவியின் துணை தேவைப்படுகிறது. ஊக்கமிழந்த லாரலை கர்த்தர் பார்ப்பதைப்போல நீங்கள் அவளைப் பார்க்க ஆவி உங்களை அனுமதிக்க முடியும். கர்த்தர் அவளது இருதயத்தையும் உங்கள் இருதயத்தையும் அறிந்திருக்கிறார், இருதயங்கள் மாற்றப்படுவதின் சாத்தியங்களை அவர் அறிந்திருக்கிறார். தாழ்மையையும், மன்னிப்பையும், அன்பையும் உணர்த்த அவருடைய ஆவியுடன் உங்கள் இருவரையும் அவர் சந்திக்க முடியும்.

மந்தைக்கு திரும்பிவர ஒரு ஆட்டுக்குட்டியை அழைக்க தேவையான வார்த்தைகளையும், செயல்களையும், பொறுமையையும் அந்த ஆவி உணர்த்த முடியும்.. அவள் திரும்பிவரும்போது அவள் வீட்டிற்கு வந்ததாக உணரும்படியாக காணாமற்போன ஆட்டுக்குட்டியிடம் அன்பு செலுத்தவும் வரவேற்கவும் லாரல் மந்தையின் இருதயங்களை அவர் தொட முடியும்.

தேவனின் குமாரத்திகளின் ஒரு குழுவாக நன்மை செய்யும் உங்கள் ஆற்றல், அதிக அளவில் உங்கள் மத்தியிலிருக்கிற ஒற்றுமையையும் அன்பையும் பொருத்திருக்கிறது. பரிசுத்த ஆவியின் மூலமாக வருகிற இது மற்றொரு சமாதான வரம்.

ஆல்மா இதைப் புரிந்திருந்தான். ஆகவேதான் “ஒருவரோடு ஒருவர் வாக்குவாதம்பண்ணாமலும், அன்னியோனியத்திலே அவர்களுடைய உள்ளங்கள் ஒன்றாய் இணைக்கப்பட்டு, ஒருவருக்கொருவர் அன்பாயிருந்து, விசுவாசத்திலும் ஞானஸ்நானத்திலும் ஒருமனப்பட்டவர்களாய் இருக்கவேண்டுமென” அவன் அவனுடைய ஜனங்களிடத்தில் வேண்டிக்கொண்டான். (மோசியா 18:21).

நமது வகுப்பிலும், குடும்பத்திலும் ஆவியைப் பெற்றிருக்க ஒற்றுமை தேவை. ஆனால் என்னைப்போல நீங்களும் அப்படிப்பட்ட அன்பான ஒற்றுமை பாதுகாக்கப்பட கடினமானது என அனுபவத்திலிருந்து அறிவீர்கள். நமது கண்களைத் திறக்கவும், நமது உணர்வுகளை பலமாக்கவும் பரிசுத்த ஆவியானவரைத் தோழனாகக் கொள்வது தேவைப்படுகிறது.

கட்டிலை உடைக்குமளவுக்கு அதன்மேல் குதித்துக்கொண்டிருந்த ஏழு அல்லது எட்டு வயதுள்ள எங்கள் மகனை நான் பிடித்தது எனக்கு நினைவில் வருகிறது. நான் உடனே விரக்தியடைந்து என் வீட்டை ஒழுங்குபடுத்த போனேன். அவனுடைய சிறிய தோள்களைப் பிடித்து எங்கள் கண்கள் சந்திக்கிற அளவுக்கு அவனை உயரத் தூக்கினேன்.

ஆவி வார்த்தைகளை என் மனதில் வைத்தது. அது அமைதியான குரலாகத் தோன்றியது, ஆனால் என் இருதயத்தைத் துளைத்தது. “நீ ஒரு மாபெரும் மனுஷனை தூக்கியிருக்கிறாய்.” நான் அவனை மெதுவாக படுக்கையில் திரும்ப வைத்து மன்னிப்புக் கேட்டேன்.

40ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த ஆவி என்னைப் பார்க்க வைத்த அவன் இப்போது பெரிய மனிதனாயிருக்கிறான். அவர் அவனைப் பார்த்ததைப்போல தேவனின் பிள்ளையை நான் பார்க்கும்படியாக பரிசுத்த ஆவியை அனுப்பியதில் அன்பில்லாத உணர்வுகளிலிருந்து கர்த்தர் என்னை பாதுகாத்ததற்காக, நான் நித்தியத்திற்கும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.

நாம் ஒருவருக்கொருவர் பார்க்கும்போதும் நாம் ஒருவரையொருவர் நினைக்கும்போது கூட நாம் பார்க்கிறவற்றில் தாக்கம் ஏற்படுத்த பரிசுத்த ஆவியை நாம் அனுமதிக்கும்போது நமது குடும்பங்களிலும் சபையிலும் நாம் தேடுகிற ஒற்றுமை வரும். கிறிஸ்துவின் தூய அன்புடன் நாம் ஒருவரையொருவர் பார்க்க அவர் நமக்குதவுவார். தயாளத்தை விவரிக்க, மார்மன் பயன்படுத்திய வார்த்தைகளைக் கேளுங்கள். அதை நீங்கள் உணர்ந்த நேரங்களை நினையுங்கள்:

“தயாளத்துவம் நீடிய பொறுமையும் தயவுமுள்ளது, பொறாமைப்படாது, இறுமாப்படையாது, சுயமாய் நாடாது, எளிதில் கோபப்படாது, பொல்லாப்பு நினையாது, அக்கிரமத்தில் களிகூராமல் சத்தியத்தில் களிகூரும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.

“ஆகையால் எனக்குப் பிரியமான சகோதரரே, உங்களுக்கு தயாளத்துவம் இல்லையெனில் நீங்கள் ஒன்றுமில்லை, ஏனெனில் தயாளத்துவம் ஒருக்காலும் ஒழியாது. ஆதலால் சகலத்திலும் மேன்மையான தயாளத்துவத்தைப் பற்றிக்கொள்ளுங்கள், ஏனெனில் சகலமும் ஒழிந்துபோகும்.

“தயாளத்துவம் கிறிஸ்துவின் தூய அன்பாய் இருக்கிறது. அது என்றென்றும் சகித்திருக்கும். கடைசி நாளின்போது அதை உடையவனாய்க் காணப்படுகிற எவனும் நன்மையை அடைவான்.

“ஆகையால் எனக்குப் பிரியமான சகோதரரே, பிதா தம்முடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுகிறவர்களாய் இருக்கிற யாவர் மேலும் அவர் அருளின இந்த அன்பினால் நீங்களும் நிரப்பப்படவும், தேவனுடைய குமாரர்களாகவும், அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருக்கவும், இந்த நம்பிக்கையை நாம் கொண்டிருக்கவும், அவர் தூயவராயிருப்பதைப்போலவே நாமும் தூய்மையாக்கப்படவும், அவரிடத்தில் இருதயத்தின் முழுஊக்கத்தோடும் ஜெபியுங்கள்” (மரோனி 7:45–48)

இதுதான் பரலோகத்திலுள்ள உங்கள் பிதா அவருடைய விலையேறப்பெற்ற குமாரத்திகளான உங்களுக்காக வைத்திருக்கும் இலக்கு. இது ஒரு தொலைவான ஒரு இலக்காக உங்களுக்கு தோன்றலாம் ஆனால் அவருடைய பார்வையில் நீங்கள் அவ்வளவு தூரத்திலில்லை. ஆகவே, உங்களைத் தேற்றவும், உங்களை ஊக்குவிக்கவும், தொடர்ந்து செல்ல உங்களை உணர்த்தவும் அவருடைய ஆவியுடன் உங்களை அவர் சந்திக்கிறார்.

பிதா உங்களை அறிகிறார், உங்கள் தேவைகளையும் உங்கள் பெயரையும் அறிந்திருக்கிறார், உங்களை நேசிக்கிறார், உங்கள் ஜெபங்களைக் கேட்கிறார், என்ற நிச்சயமான சாட்சியை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். அவரிடத்தில் வர அவருடைய நேசகுமாரன் உங்களை அழைக்கிறார். அவர்களுக்காக உங்களுடைய முயற்சிகளில் பரிசுத்த ஆவியானவர் பங்கேற்க, அவர்கள் பரிசுத்த ஆவியானவரை அனுப்புகிறார்கள்.

இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம், பரிசுத்த ஆவியானவரின் தொடர்ந்த தோழமை உங்கள் ஆவி மீது பரிசுத்தமாக்கி, சுத்திகரிக்கும் தாக்கத்தைப் பெறும். தன் சீஷர்களுடன் விட்டுச் செல்வதாக இரட்சகர் வாக்களித்த சமாதானத்தைப் பின்னர் நீங்கள் உணர்வீர்கள். அவருடைய ஜீவிக்கிற தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தல் மூலமாக அவருடைய ராஜ்யத்தை நடத்துகிற பிதாவிடமிருந்தும் அவரது நேச குமாரனிடமிருந்தும் சமாதானத்துடன் பிரகாசமான நம்பிக்கையும், ஒளியின் உணர்ச்சியும் வரும் அவ்விதமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.