2010–2019
எச்சரிக்கையின் குரல்
ஏப்ரல் 2017


எச்சரிக்கையின் குரல்

எச்சரிக்கும் கடமை தீர்க்கதரிசிகளால் விசேஷமாகவும் கவனமாகவும் உணரப்பட்டாலும், இது பிறராலும் கூட பகிரப்பட வேண்டிய கடமை ஆகும்.

லேகியும் அவனது குடும்பமும் எருசலேமை விட்டுப் போவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கதரிசி எசேக்கியேல் பிறந்தான். கி.மு 597ல், 25வது  வயதில் பாபிலோனுக்கு நேபுகாத்நேச்சரால் சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்பட்ட அநேகரில் எசேக்கியேல் ஒருவனாயிருந்தான். நாம் சரியாகச் சொல்லவேண்டுமென்றால் தனது எஞ்சிய வாழ்க்கையை அவன் அங்கே கழித்தான். 1 அவன் ஆரோனிய ஆசாரியத்துவ வம்சத்தவனாயிருந்தான். அவனுக்கு 30 வயதானபோது அவன் தீர்க்கதரிசியானான். 2

எசேக்கியேலை நியமிக்கும்போது ஒரு காவற்காரனின் உவமையை யேகொவா பயன்படுத்தினார்.

“தேசத்தின்மேல் பட்டயம் வருவதைக்கண்டு, காவற்காரன் எக்காளம் ஊதி ஜனத்தை எச்சரிக்கும்போது,

“எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கிறவன் அதைக் கேட்டும் எச்சரிக்கையாயிராமல் பட்டயம் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின் மேல் சுமரும்.” 3

மாறாக, “காவற்காரன் பட்டயம் வருவதைக்கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும் பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால். . . . அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.” 4

பின்னர் எசேக்கியேலிடம் நேரடியாகப் பேசி யேகொவா அறிவித்தார், “மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவற்காரனாக வைத்தேன். ஆகையால் நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.” 5 பாவத்திலிருந்து திரும்பவே இந்த எச்சரிக்கை.

“நான் துன்மார்க்கனை நோக்கி, துன்மார்க்கனே, நீ சாகவே சாவாய் என்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்தில் இராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால் அந்த துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான், ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.

“துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன் வழியைவிட்டுத் திரும்பாமற்போனால் அவன் தன் அக்கிரமத்திலே சாவான். நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய். . . .

“பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன் பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியுஞ்செய்து,  

“அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை, அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான்.” 6

இந்த எச்சரிக்கை நீதிமான்களுக்கும் பொருந்துகிறது. “பிழைக்கவே பிழைப்பாய் என்று நான் நீதிமானுக்குச் சொல்லும்போது, அவன் தன் நீதியை நம்பி, அநியாயஞ் செய்தால் அவனுடைய நீதியில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை. அவன் செய்த தன் அநியாயத்திலே சாவான்.” 7

அவருடைய பிள்ளைகளிடத்தில் வேண்டிக்கொண்டு எசேக்கியேலிடம் தேவன் கூறுகிறார், “கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பி பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்புங்கள், நீங்கள் ஏன் சாகவேண்டும்?” 8

கண்டனம் செய்வதற்கு ஆர்வமாயிருத்தலை விட, நமது பரலோக பிதாவும் நமது இரட்சகரும் நமது சந்தோஷத்தை நாடி, “துன்மார்க்கமானது எப்போதும் மகிழ்ச்சியாயிருந்ததில்லை” 9 என்பதை மிக நன்றாக முழுமையாக அறிந்திருந்து, மனந்திரும்ப நம்மிடம் வேண்டுகிறார்கள். ஆகவே, எசேக்கியேலும் ஒவ்வொரு தீர்க்கதரிசியும் முன்பும் எப்போதும் முழுஇருதயத்தோடு தேவனின் வார்த்தையைப் பேசிக்கொண்டு, தங்களுடைய ஆத்துமாக்களின் எதிரியான சாத்தானிடமிருந்து விலகுகிறவர்களான, “மனுஷர் யாவருக்கும் மகத்துவமுள்ள மத்தியஸ்தரானவரின் மூலம் விடுதலையையும், நித்திய ஜீவனையும் தேர்ந்தெடுக்கிறவர்கள்” 10 என அனைவரையும் எச்சரித்தார்கள்

எச்சரிக்கும் கடமை குறிப்பாக தீர்க்கதரிசிகளால் கவனமாக உணரப்பட்டபோது, பிறரால் பகிர்ந்து கொள்ளப்பட்ட கடமையும் கூட. உண்மையில், “எச்சரிக்கப்பட்ட ஒவ்வொரு மனுஷனும் அவனுடைய அண்டைவீட்டானை எச்சரிக்கவேண்டும்.” 11. மகத்தான சந்தோஷத்தின் திட்டத்தைப்பற்றிய அறிவையும் அதன் செயல்படும் கட்டளைகளையும் பெற்ற நாம் அனைவரும் இங்கேயும் நித்தியத்திலும் எல்லா வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிற அந்த அறிவைப் பகிர்ந்துகொள்ள ஒரு விருப்பத்தை உணர வேண்டும். “நான் எச்சரிக்க வேண்டிய அண்டை வீட்டான் யார்”, என நீங்கள் கேட்டால் நிச்சயமாக “ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்.” 12 என்று ஆரம்பிக்கிற ஒரு உவமையில் பதில் காணப்படும்.

யார் என்னுடைய அண்டைவீட்டான் என்ற கேள்விக்கு இரண்டு மகத்தான கட்டளைகளுடன் இணைக்கப்பட்டிருக்கிற இந்த அர்த்தமுடைய நல்ல சமாரியனின் உவமையைக் கருத்தில்கொள்வது நமக்கு நினைப்பூட்டுகிறது. “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழுஇருதயத்தோடும், உன் முழு பலத்தோடும், உன் முழுசிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்பு கூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக.” 13 எச்சரிப்பின் குரலை உயர்த்தும் நோக்கம் அன்பு, தேவனிடத்திலும் சகமனிதர்களிடமும் அன்பு. எச்சரிப்பு கவனிப்பதாகும். “மென்மையுடனும், சாந்தத்துடனும், 14 ஊக்கத்தாலும், நீடிய சாந்தத்தாலும், தயவாலும் , தாழ்மையாலும், மாறாத அன்பாலும்” 15 அது செய்யப்படவேண்டுமென கர்த்தர் அறிவுறுத்தினார். நெருப்பில் அவன் அல்லது அவளது கையை வைக்கக்கூடாதென ஒரு குழந்தையை நாம் எச்சரிக்கும்போதுள்ள அவசரம்போல இது இருக்கிறது. இது தெளிவாகவும் சிலசமயங்களில் உறுதியாகவுமிருக்கலாம். “பரிசுத்த ஆவியால் அசைக்கப்படும்போது” 16 ஆனால் எப்போதும் அன்பால் வேர்கொண்டிருந்து,17 சில சந்தர்ப்பத்தில் எச்சரிக்கை கண்டனத்தின் வடிவத்திலிருக்கலாம். உதாரணத்துக்கு நமது ஊழியக்காரர்களின் சேவையையும் தியாகத்தையும் தூண்டுகிற அன்பைப் பாருங்கள்.

தங்களின் நெருக்கமான அண்டைவீட்டாரான, தங்களுடைய சொந்த பிள்ளைகளையும் எச்சரிக்க நிச்சயமாக அன்பு பெற்றோரைக் கட்டாயப்படுத்தும். சுவிசேஷத்தின் சத்தியங்களை போதிப்பதுவும், சாட்சியளிப்பதுவும் அதற்கு அர்த்தம். அதாவது பிள்ளைகளுக்கு கிறிஸ்துவின் கோட்பாடுகளை போதிப்பது, விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம், மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வரம். 17 “ஒளியிலும் சத்தியத்திலும் உங்கள் பிள்ளைகளை வளர்த்துவர நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்” 18 என கர்த்தர் பெற்றோருக்கு நினைப்பூட்டுகிறார்.

எச்சரிக்கும் பெற்றோரின் கடமையின் ஒரு முக்கியமான காரியம் ஒழுக்கத்தைக் கெடுக்கிற பாவத்தின் விளைவுகளைக் காட்டுவது மட்டுமல்ல, ஆனால் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் மகிழ்ச்சியையும் கூட. பாவங்களின் மீட்பைப் பெற்று, மனமாறியவனாக மாற தேவனைத் தேட எது அவனை வழிநடத்தியதென்பதைப்பற்றி ஏனோஸின் வார்த்தைகளை நினைவுகூருங்கள்:

“இதோ, காடுகளில் விலங்குகளை வேட்டையாட நான் சென்றேன், நித்திய ஜீவனைக்குறித்தும், பரிசுத்தவான்களின் மகிழ்ச்சியைக்குறித்தும் என் தகப்பன் பேசியது அடிக்கடி என் இருதயத்தில் பதிந்திருந்த்து.

“என்னுடைய ஆத்துமா ஏங்கி, என்னுடைய சிருஷ்டிகர் முன் முழங்கால்படியிட்டு வல்லமையான ஜெபத்தாலும் வேண்டுதலாலும் அவரிடத்தில் நான் கண்ணீர் விட்டேன்.” 19

பிறர் மீது அவருடைய ஒப்பிடமுடியாத அன்பாலும், மற்றவர்கள் மேலும் அவர்களுடைய சந்தோஷத்தினிமித்தமும் அக்கறையினிமித்தமும், இயேசு எச்சரிக்க தயங்கவில்லை. அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் “இயேசு மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.” 20 பரலோகத்துக்கு எந்த வழியும் வழிநடத்தாது என அறிந்ததால் அவர் கட்டளையிட்டார்,

“இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழிவிசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்:

“ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” 21

“நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” 22 எனச் சொல்லி பாவிகளுக்காக அவர் நேரம் ஒதுக்கினார்.

வேதபாரகர், பரிசேயர், சதுசேயரைப் பொருத்தவரையில், அவர்களுடைய மாய்மாலத்தைக் கண்டிக்க இயேசு சமரசம் செய்யாதிருந்தார். அவருடைய எச்சரிக்கைகளும் கட்டளைகளும் நேரடியாயிருந்தது. “மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ. நீங்கள் ஒற்தாமிலும், வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.” 23 இந்த வேதபாரகரிடத்திலும், பரிசேயரிடத்திலும் இயேசு அன்பில்லாதிருந்ததற்காக நிச்சயமாக யாரும் இயேசுவை குற்றம் சுமத்தியிருக்கமாட்டார்கள். அவர்களையும் இரட்சிக்கவே அவர் பாடுபட்டு மரித்தார். அவர்களை நேசித்து, தெளிவாக அவர்களை சரிசெய்யாமல் பாவத்திற்குள் போக விட மாட்டார். ஒருவர் குறிப்பிட்டார், , “அவர் செய்ததைப்போலவே செய்யும்படி அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு இயேசு போதித்தார்,” யாவரையும் வரவேற்று, ஆனால் பாவத்தைப் பற்றியும் அவர்களுக்குப் போதியுங்கள், ஏனெனில் அவர்களை எது காயப்படுத்தும் என மக்களை எச்சரிக்க அன்பு கோருகிறது. 24

சிலசமயங்களில் எச்சரிக்கையின் குரலை எழுப்புகிறவர்கள் நியாந்தீர்க்கிறவர்களாக தள்ளப்படுகிறார்கள். எனினும், சத்தியம் சம்பந்தப்பட்டதென்றும், ஒழுக்க தரங்கள் தனிப்பட்ட விருப்பம் என்றும் கூறுகிறவர்கள் சரியான சிந்தனையின் தற்போதைய தரத்தை ஏற்றுக்கொள்ளாத மக்களை அவர்களே மிகக்கடினமாக விமர்சிக்கிறவர்கள். “வெட்கக்கேடான கலாச்சாரம்” என ஒரு எழுத்தாளர் இதைக் குறிப்பிடுகிறார்.

“உங்கள் மனச்சாட்சி உணருகிறதைக் கொண்டு, நீங்கள் நல்லவரா, கெட்டவரா என்று ஒரு குற்றஉணர்வின் கலாச்சாரத்தில் நீங்கள் அறிகிறீர்கள். வெட்கக் கலாசாரத்தில், அது உங்களை மதித்தாலும் அல்லது புறந்தள்ளினாலும், உங்களைப் பற்றி உங்கள் சமுதாயம் என்ன சொல்கிறது என்பதைக் கொண்டு நீங்கள் நல்லவரா அல்லது கெட்டவரா என நீங்கள் அறிகிறீர்கள். [வெட்கக் கலாசாரத்தில்] ஒழுக்க வாழ்க்கை சரி, தவறு என்ற அபிப்பிராயத்தின் மீது கட்டப்படுவதில்லை, சேர்த்துக் கொள்ளல் மற்றும் புறந்தள்ளல் அபிப்பிராயத்தின் மேல் கட்டப்படுகிறது. …

“…சேர்த்துக் கொள்ளல் மற்றும் புறந்தள்ளல் அடிப்படையிலான ஒழுக்க முறையில், ஒவ்வொருவரும் நிரந்தரமாக பாதுகாப்பின்றி இருக்கிறார்கள். நிரந்தர தரங்கள் இல்லை, கும்பலின் மாறுகிற தீர்ப்பே இருக்கிறது. இது அதிக உணர்ச்சிமிக்க, அதிக எதிர்வினையாற்றுகிற மற்றும் எப்போதும் ஒழுக்க குழப்பங்கள் உள்ள கலாச்சாரம், அப்போது ஒவ்வொருவரும் ஒத்துப்போக கட்டாயப்படுத்தப்படுவதாக உணர்கிறார்கள். ...  

…”குற்ற உணர்வின் கலாச்சாரம் கடினமாயிருக்கக்கூடும் ஆனால் குறைந்தது நீங்கள் பாவத்தை வெறுத்து, பாவியை நேசிக்கமுடியும். தற்கால வெட்கக் கலாச்சாரம், சேர்த்துக்கொள்ளுதலையும், பொறுமையாயிருத்தலையும் தெளிவாக மதிக்கிறது, ஆனால் அதை ஒப்புக்கொள்ளாதிருப்பவர்களிடத்திலும், அதற்கு சம்மதிக்காதவர்களிடத்திலும் இரக்கமில்லாதிருக்கிறது.” 25

இதற்கு எதிர்மறையாக, நீதி மற்றும் நற்குணத்தின் நிலையான நிரந்தரமான அஸ்திபாரமாக நமது கன்மலையாகிய மீட்பரிருக்கிறார். 26 ஊர்ஜிதம் செய்யமுடியாத விதிகளுக்கும், சமூக ஊடக கூட்டத்தின் கோபத்திற்கும் பிணைக்கைதிகளாயிருப்பதைவிட நமது இலக்கை நாம் தேர்ந்தெடுக்க செயல்படக்கூடிய தேவனின் மாறாத சட்டத்தைக் கொண்டிருப்பது எவ்வளவு சிறப்பானது. இங்கேயும் அங்கேயும் வீசப்பட்டு, எல்லா கோட்பாட்டு காற்றாலும் அடித்துச்செல்லப்படுவதை விட சத்தியத்தை அறிவது எவ்வளவு சிறந்தது. 27 சரி என்றும் தவறு என்றும் ஒன்றில்லை என்று பாசாங்கு செய்து பாவத்திலும் வருத்தத்திலும் உழல்வதைவிட மனந்திரும்பி சுவிசேஷத் தரங்களுக்கு உயர்வது எவ்வளவு சிறப்பானது.

“இந்தக் கடைசி நாட்களில் நான் தெரிந்துகொண்ட எனது சீஷர்களின் வாய்களால் சகல ஜனங்களுக்கும் எச்சரிக்கையின் குரல் கொடுக்கப்படும் என கர்த்தர் அறிவித்தார்”. 28 காவற்காரர்கள், மற்றும் சீஷர்களைப்போல இந்த “அதிக மேன்மையான வழியில்” 29 நாம் நடுநிலையிலிருக்கமுடியாது. எசேக்கியேலைப்போல “தேசத்திற்குள் பட்டயம் வருவதைக்கண்டும் எக்காளம் ஊதாமலிருக்க நம்மால் முடியாது”. 30 நாம் நமது அயலானின் கதவைத் தட்டவோ, பொது இடத்தில் நின்றுகொண்டு “மனந்திரும்புங்கள்!” என கத்தவோ சொல்லுவதில்லை. உண்மையாக நீங்கள் இதைப்பற்றி சிந்திக்கும்போது, கடையாந்தரத்தில் இருக்கிற மக்கள் உண்மையிலே விரும்புவதை நாம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தில் பெற்றிருக்கிறோம். ஆகவே எச்சரிப்பின் குரல் பொதுவாக பழக்கமானது மட்டுமல்ல, சங்கீதக்காரனின் சொற்றொடரில் இது “கெம்பீரமாய்ப் பாடுங்கள்.” 31

அமைதியாகயிருத்தலிலுள்ள கேட்டின் எடுத்துக்காட்டை டெசரட் நியூஸ் அபிப்பிராய ஆசிரியர் ஹால் பாய்ட் குறிப்பிட்டார். அமெரிக்காவிலுள்ள உயர் சமூகத்தினருக்கு மத்தியில் திருமணம் இன்னமும் ஒரு “அறிவுப்பூர்வமான விவாதமாயிருக்கிறது”, வழக்கத்தில் அவர்களுக்கு திருமணமே ஒரு விவாதிக்கப்படுகிற காரியமில்லாமலிருக்கிறது, என அவர் குறிப்பிட்டார். “உயர் சமூகத்தினர் திருமணம் செய்து, நிலையான திருமணத்தின் பலனை தங்களுடைய பிள்ளைகள் அனுபவிப்பதை உறுதிசெய்கிறார்கள். ஆனாலும் பிரச்சினை என்னவென்றால் அவர்கள் பழக்கத்தில் வைத்திருப்பதை போதிக்க எண்ணுவதில்லை. தங்களுடைய ஒழுக்க தலைமைத்துவத்தை, உண்மையாகவே யாரிடம் பயன்படுத்த முடியுமோ, அவர்கள் மீது “சுமத்த” விரும்புவதில்லை, ஆனால் கல்வியும் பலமான குடும்பங்களும் பெற்றிருப்பவர்கள், நடுநிலைமையில் பாசாங்கு செய்வதை நிறுத்தி திருமணத்திற்கும் பெற்றோராயிருப்பதற்கும் சம்பந்தப்பட்ட, தாங்கள் வழக்கத்தில் வைத்திருப்பதை போதிக்கத் தொடங்க ஒருவேளை இதுவே நேரம். . . . தங்களுடைய சக அமெரிக்கர்கள் பின்பற்ற உதவ வேண்டும்.” 32

வருங்காலத்தில் அவருடைய பணியின் வெற்றிக்காக கர்த்தர் நம்பியிருக்கிற விசேஷமாக வளர்ந்துவரும் தலைமுறையான நீங்களும், இளைஞர்களும், இளம் வயதுவந்தோரும் சுவிசேஷத்தின் போதனைகளையும் சபையின் தரங்களையும் பொதுவிலும் தனிப்பட்டவகையிலும் தாங்குவீர்களென நாங்கள் நம்புகிறோம். அறியாமையில் துடித்து தோற்றுக்கொண்டிருக்கிற சத்தியத்தை வரவேற்பவர்களை கைவிடாதீர்கள். சகிப்புத் தன்மையின் பொய்யான கருத்துக்களுக்கு அல்லது வசதியின்மை, ஏற்றுக்கொள்ளாமை, அல்லது பாடுகளின் பயத்திற்கு இடம்கொடாதிருங்கள். இரட்சகரின் வாக்களிப்புகளை நினைவுகூருங்கள்.

“என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

“சந்தோஷப்பட்டு, களிகூருங்கள். பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.” 33

நமது தேர்ந்தெடுப்புகளுக்கும், நமது வாழ்க்கையை எப்படி நாம் வாழ்கிறோமென்பதற்கும் நாம் அனைவரும் பொறுப்புள்ளவர்களாயிருக்கிறோம். “இரட்சகர் அறிவித்தார், நான் சிலுவையில் உயர்த்தப்படவும், நான் சிலுவையின்மேல் உயர்த்தப்பட்ட பின்பு நான் எல்லா மனுஷரையும் என்னிடத்தில் இழுக்கும்படியாகவும், மனுஷரால் நான் உயர்த்தப்பட்டதுபோல, பிதாவினால் மனுஷரும் உயர்த்தப்பட்டு, எனக்கு முன்பாக நின்று, தங்களுடைய கிரியைகள் நன்மையானவையோ அல்லது தீமையானவையோவென்று நியாயந்தீர்க்கப்படும்பொருட்டே பிதா என்னை அனுப்பினார்” 34.

கர்த்தரின் உன்னதமான இதை அடையாளம் கண்டு, ஆல்மாவின் வார்த்தைகளில் நான் கெஞ்சுகிறேன்:

ஆகவே என் சகோதரரே, [சகோதரிகளே], என் உள்ளத்தின் ஆழத்திலிருந்தும், வேதனைக்குள்ளாக அதிக வியாகுலத்தோடும், நீங்கள் என் வார்த்தைக்குச் செவிகொடுத்து, உங்கள்  பாவங்களை புறம்பே தள்ளி, உங்களுடைய மனந்திரும்புதலின் நாளை தள்ளிப்போடாமலும்,

“கர்த்தருடைய சமூகத்தில் உங்களையே தாழ்த்தி, அவருடைய பரிசுத்த நாமத்தைத் தொழுது, உங்கள் திராணிக்கு அதிகமாய் நீங்கள் சோதிக்கப்படக்கூடாதபடிக்கு இடைவிடாமல் ஜெபித்து, பரிசுத்த ஆவியாலே வழிநடத்தப்பட்டு. . . . ,

“கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, நித்திய ஜீவனைப்பெறுவீர்கள் என்ற நம்பிக்கையைக்கொண்டு கடைசிகாலத்தில் உயர்த்தப்பட்டு அவருடைய இளைப்பாறுதலினுள் பிரவேசிப்பீர்கள்” 35

தாவீதுடன் சேர்ந்து கரத்தரிடத்தில் நாம் ஒவ்வொருவரும் சொல்வது சாத்தியமாயிருப்பதாக: உம்முடைய நீதியை நான் என் இருதயத்துக்குள் மறைத்து வைக்கவில்லை. உமது சத்தியத்தையும் இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன். உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நான் ஒளித்து வைக்கவில்லை. கர்த்தாவே உமது இரக்கங்களை எனக்கு கிடையாமற் போகப்பண்ணாதேயும்.” 36 இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.