2010–2019
அவர் உங்களுக்கு என்ன சொல்கிறாரோ, அதின்படி செய்யுங்கள்
ஏப்ரல் 2017


அவர் உங்களுக்கு என்ன சொல்கிறாரோ, அதின்படி செய்யுங்கள்

“தேவன் நம்மிடம் என்ன சொன்னாலும்” அதைச் செய்ய நாம் முடிவு செய்யும்போது, நாம் நேர்மையாக நமது அன்றாட நடத்தையை தேவ சித்தத்தோடு இணைக்க ஒப்புக் கொடுக்கிறோம்.

இரட்சகர் நிறைவேற்றிய பதிவுசெய்யப்பட்ட முதல் அற்புதம் கலிலேயாவிலுள்ள கானாவூர் கல்யாண விருந்தில்தான். அவரது தாயாகிய மரியாள், மற்றும் அவரது சீஷர்களும் அங்கிருந்தனர். விருந்தின் வெற்றிக்கு மரியாள் தகுந்தபடி பொறுப்பை உணர்ந்தாள். கொண்டாட்டத்தின்போது, ஒரு பிரச்சினை வந்தது, கல்யாண வீட்டில் திராட்சரசம் தீர்ந்தது. அக்கறையுடைய மரியாள் இயேசுவிடம் சென்றாள். அவர்கள் சுருக்கமாகப் பேசினர், வேலைக்காரர்களிடம் திரும்பி மரியாள் சொன்னாள்

“அவர் உங்களுக்கு என்ன சொல்கிறாரோ அதின்படி செய்யுங்கள்

“ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. ...[இந்த கற்சாடிகள் தண்ணீரை தேக்கி வைக்க பயன்படுத்தப்படவில்லை, ஆனால் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, சுத்திகரிப்பு விழாவுக்காக பயன்படுத்தப்பட்டன.]

“இயேசு வேலைக்காரரை நோக்கி, ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார். அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.

“அவர் அவர்களை நோக்கி, நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்தி விசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார். அவர்கள் கொண்டு போனார்கள்.

“பந்தி விசாரிப்புக்காரன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசி பார்த்தான்.” விருந்தில் கடைசியில் சிறந்த திராட்சரசம் பரிமாறப்பட்டது என ஆச்சரியத்துடன் தெரிவித்தான்.1

தண்ணீரை திராட்சரசமாக மாற்றுவது தேவ வல்லமையைக் காட்டும், அது ஒரு அற்புதம் என்பதால், நாம் வழக்கமாக அந்த நிகழ்ச்சியை நினைவுகொள்கிறோம். அது ஒரு முக்கிய செய்தி, ஆனால் யோவானின் விவரத்தில் இன்னொரு முக்கிய செய்தி இருக்கிறது. மரியாள் “விலையேறப்பெற்ற தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரம்,”2 தேவ குமாரனையே பெற்று, போஷித்து வளர்க்க தேவனால் அழைக்கப்பட்டவள். பூமியில் யாரையும் விட அவரைப் பற்றி அதிகம் அறிந்தவள். அவரது அற்புதமான பிறப்பின் உண்மையை அவள் அறிவாள். அவர் பாவமற்றவர் என அவள் அறிவாள். “அவர் பிற மனுஷர் போல பேசவில்லை, அவர் போதிக்கப்படவுமில்லை, யாரும் அவருக்கு போதிக்க தேவை இருக்கவில்லை”.3 கல்யாண விருந்துக்கு திராட்சரசம் கொடுத்ததுபோல, தனிப்பட்டவை உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் அசாதாரணத் திறமைகளை மரியாள் அறிவாள். அவரிலும் அவரது தெய்வீக வல்லமையிலும் அவள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தாள். அவளது எளிய நேரடியான, வேலைக்காரர்களுக்கு கொடுத்த அறிவுரைக்கு, எச்சரிக்கையோ, தகுதியோ, அளவோ இல்லை: “அவர் உங்களுக்கு என்ன சொல்கிறாரோ அதின்படி செய்யுங்கள்.”

காபிரியேல் தூதன் அவளுக்குத் தரிசனமானபோது, அவள் இளம் பெண்ணாயிருந்தாள். முதலில் “கிருபை பெற்றவளே,” “ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவளே” என்று அழைக்கப்படுவதற்காக அவள் “கலங்கினாள்”. இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதாயிருக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.” காபிரியேல் தான் கொண்டுவந்த செய்தி நல்லது, அவள் பயப்படத் தேவையில்லை என உறுதியளித்தான். அவள் “உன்னதமானவரின் குமாரனை வயிற்றிலே சுமப்பாள்,” அவர் “யாக்கோபின் வம்சத்தாரை என்றென்றைக்கும் ஆளுகை செய்வார்.”

மரியாள் ஆச்சரியப்பட்டு, சத்தமாக, “அது எப்படியாகும், புருஷனை அறியேனே?” என்றாள்.

தூதன் சுருக்கமாக அவளுக்கு உறுதியளித்து “தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை,” என விளக்கினான்.

தேவன் சொன்னதை அவள் செய்வதாக மரியாள் தாழ்மையாகப் பதிலளித்தாள், அறிந்துகொள்ள விவரங்களை கேட்காமல், அவளது வாழ்க்கையின் தாக்கங்கள் பற்றி எண்ணற்ற கேள்விகள் இருந்தும், சந்தேகப்படவில்லை. ஏன் அவன் அவளிடம் அதைக் கேட்கிறான், என்ன நடக்கும் என சரியாகத் தெரியாமல், அவள் தன்னை அர்ப்பணித்தாள். என்ன நடக்கவிருக்கிறது என்பதை கொஞ்சம் அறிந்திருந்து, நிபந்தனையில்லாமலும், உடனேயே அவள் தேவனின் வார்த்தையை ஏற்றுக் கொண்டாள்.4 தேவனில் எளிய நம்பிக்கையுடன் மரியாள் சொன்னாள், “இதோ நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது.”5

“தேவன் நமக்குச் சொல்வதை” நாம் செய்யும்போது, நாம் நமது அன்றாட நடத்தையை தேவ சித்தத்துக்கு இணக்கமாக்க முடிவுசெய்கிறோம். தினமும் வேதம் வாசித்தல், ஒழுங்காக உபவாசம் இருத்தல், மற்றும் உண்மையான நோக்கத்தோடு ஜெபித்தல் போன்ற எளிய செயல்கள், அநித்தியத்தின் தேவைகளைச் சந்திக்க நமது ஆவிக்குரிய திறனின் கிணற்றை ஆழப்படுத்தும். காலப்போக்கில் நம்பிக்கையின் எளிய பழக்கங்கள், அற்புதமான விளைவுகளுக்கு வழிநடத்தும். அவை நமது விசுவாசத்தை விதையிலிருந்து, நமது வாழ்க்கையில் நன்மைக்கேதுவான திறன்மிக்க வல்லமையாக மாற்றும். பின் நமது வழியில் சவால்கள் வரும்போது, கிறிஸ்துவில் வேர் விட்டிருப்பது, நமது ஆத்துமாக்களுக்கு உறுதியைக் கொடுக்கிறது. தேவன் நமது பலவீனங்களை ஒதுக்கி, நமது ஆனந்தத்தை அதிகரித்து, “நமது நன்மைக்கேதுவாக சகலத்தையும் கிரியை செய்யப்பண்ணுவார்.”6

சில ஆண்டுகளுக்கு முன் தனது தொகுதியின் அங்கத்தினர்களுக்கு, ஒவ்வொரு வாரமும் ஆலோசனையளிக்க பல மணிநேரங்கள் செலவிட்ட ஒரு இளம் ஆயருடன் நான் பேசினேன். அவர் முக்கியமான ஒன்றைக் கவனித்தார். அவரது தொகுதி அங்கத்தினர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை, எங்கெங்கும் சபையார் எதிர்கொண்டனர் என அவர் சொன்னார். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை எப்படி உருவாக்குவது, வேலை, குடும்பம், சபைக்கடமைகளை எப்படி சமன்படுத்துவது, ஞானவார்த்தைக்கு சவால்கள், அல்லது ஆபாசப்படம், அல்லது அவர்கள் புரிந்து கொள்ளாத சபைக் கொள்கை அல்லது வரலாற்று சிறப்பு மிக்க கேள்வி பற்றி சமாதானம் பெறுவதில் பிரச்சினை.

தலைவர் தாமஸ்  எஸ். மான்சனால் நாம் செய்யும்படி ஆலோசனையளிக்கப்பட்டபடி, மார்மன் புத்தகம் படித்தல், தசமபாகம் கொடுத்தல், அர்ப்பணிப்புடன் சபையில் ஊழியம் செய்தல், போன்ற விசுவாசத்துக்குத் திரும்புகிற எளிய விசுவாச செயல்கள் உள்ளிட்டவையே அடிக்கடி தொகுதி அங்கத்தினர்களுக்கு அவரது ஆலோசனை. எனினும் அடிக்கடி அவர்களது பதில் சந்தேகமாகவே இருந்தது. “ஆயரே நீங்கள் சொல்வதை சம்மதிக்கவில்லை. அவை செய்வதற்கு நல்லவை என எங்கள் அனைவருக்கும் தெரியும். சபையில் அவற்றைப் பற்றி நாம் எப்போதும் பேசுகிறோம். ஆனால் நீங்கள் என்னைப் புரிந்துகொண்டீர்களா என எனக்குத் தெரியாது. நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் அவற்றைச் செய்வதற்கும் என்ன சம்மந்தம்?”

இது ஒரு நல்ல கேள்வி. காலப்போக்கில், “சிறிய எளிய காரியங்களில்”7 எச்சரிக்கையாய் இருப்பவர்கள், கொஞ்சம் கீழ்ப்படிபவர்கள், கீழ்ப்படிதலின் உண்மையான செயல்களுக்கு அப்பாலும் விசுவாசத்துடனும் பெலனுடனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள், உண்மையாகவே முற்றிலும் அவர்களுக்கு சம்மந்தப்படாததாகத் தோன்றுகிறதாக அந்த இளம் ஆயரும் நானும் கவனித்திருக்கிறோம். நாம் எதிர்கொள்கிற பெரிய சிக்கலான பிரச்சினைகளுக்கும், அடிப்படையான அன்றாட கீழ்ப்படிதலின் செயல்களுக்கும், தீர்வுகளுக்கும், இடையே தொடர்பு ஏற்படுத்துவது கடினமாகத் தோன்றலாம். ஆனால் அவை தொடர்புடையவை. அவை எதுவாக இருந்தாலும், என் அனுபவத்தில் சிறிய அன்றாட விசுவாசப் பழக்கவழக்கங்களை சரிப்படுத்துவது, வாழ்க்கையின் தொல்லைகளுக்கு மத்தியில் நம்மை பலப்படுத்தும் ஒரே வழியாகும். நம்மை விரக்தியடையச் செய்யும் குறிப்பிட்ட பிரச்சினைகளிலிருந்து முக்கியமற்றதும் முழுவதுமாக தொடர்பில்லாததுமான விசுவாசத்தின் சிறு செயல்கள் நாம் செய்கிற எல்லாவற்றிலும் நம்மை ஆசீர்வதிக்கும்.

“அசீரிய சேனைகளின் தலைவனும், தைரியமிக்க பெலசாலியான” குஷ்டரோகி நாகமானைக் கருத்தில் கொள்ளுங்கள். இஸ்ரவேலின் தீர்க்கதரிசி நாகமானைக் குணமாக்க முடியும் என ஒரு வேலைக்காரப் பெண் சொன்னாள், ஆகவே அவன் அவ்வாறே வேலைக்காரர்களுடனும், போர் வீரர்களுடனும், இஸ்ரவேலுக்கு பரிசுகளுடன் எலிசாவின் வீட்டுக்கு வந்தான். எலிசாவல்ல, எலிசாவின் வேலைக்காரன், நாகமானுக்கு கர்த்தரின் கட்டளையாகிய “ஏழுதரம் யோர்தானுக்குப் போய் கழுவுமாறு” அறிவித்தான். ஒரு எளிய காரியம். ஒருவேளை இந்த எளிய மருந்து குறிப்பு சரிப்படாததாகவும், எளிமையாகவும், அந்த ஆலோசனை காயப்படுத்துவதாகவும், அவன் நினைக்கிற அவனது கௌரவத்துக்கு கீழானது எனவும் அந்த பெலன் மிக்க வீரன் நினைத்திருக்கலாம். குறைந்த பட்சம் எலிசாவின் அறிவுரை நாகமானுக்கு புத்திசாலித் தனமானதாகத் தெரியவில்லை. “ஆகவே அவன் கடுங்கோபங்கொண்டு புறப்பட்டுப் போனான்.”

ஆனால் நாகமானின் வேலைக்காரர்கள் மெதுவாக அவனிடம் சென்று, எலிசா கேட்டிருந்தால் அவன் “பெரிய காரியங்களைக்கூட” செய்திருப்பான் என்றனர். ஏன் என அவன் புரிந்துகொள்ளாவிட்டாலும், எளிய காரியத்தையே கேட்டதால் அவன் செய்யக்கூடாதா? என கூறினர். நாகமான் தனது செயலை மறுபரிசீலனை செய்து, சந்தேகத்துடன் ஆனால் கீழ்ப்படிதலுடன் “அவன் இறங்கி ஏழுதரம் யோர்தானில் முழுகியபோது,” அற்புதமாக குணமானான்.8

கீழ்ப்படிதலின் சில பிரதிபலன்கள் விரைவாகவே வருகின்றன, பிற சோதிக்கப்பட்ட பிறகு மட்டுமே வருகின்றன. விலையேறப்பெற்ற முத்துவில் பலிகள் கொடுக்க கட்டளைகளைக் கைக்கொள்ள ஆதாமின் சோர்வற்ற ஈடுபாடு பற்றி நாம் வாசிக்கிறோம். ஆதாம் ஏன் பலிகொடுக்கிறான் என தூதன் கேட்டபோது அவன் பதிலளித்தான், எனக்குத் தெரியாது “கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டது தவிர.” அவனது பலிகள் “பிதாவின் ஒரே பேறானவரின் சாயலானவை” என தூதன் விளக்கினான். அவன் ஏன் பலிகள் கொடுக்க வேண்டும் என “அநேக நாட்கள்” அறியாமல் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, ஆதாம் தனது ஒப்புக்கொடுத்தலை காட்டினான், என அந்த விளக்கம் வந்தது.9

அவரது சுவிசேஷத்துக்கு உறுதியான கீழ்ப்படிதலுக்கும், அவரது சபைக்கு அர்ப்பணிப்புக்கும் தேவன் எப்போதும் நம்மை ஆசீர்வதிப்பார், ஆனால் முன்னமே அப்படிச் செய்வதற்கான கால அட்டவணையை அவர் அரிதாக காட்டுகிறார். மொத்தத்தில் முழு காட்சியை அவர் நமக்குக் காட்டுவதில்லை. அங்குதான் கரத்தரில் விசுவாசமும், நம்பிக்கையும் வருகிறது.

அவரைப் பொறுத்து, நம்பி பின்பற்ற தேவன் நம்மைக் கேட்கிறார். நீங்கள் “காணாததினிமித்தம், வாக்குவாதம் பண்ணாதிருங்கள்,” என கெஞ்சுகிறார். பரலோகத்திலிருந்து எளிய பதில்களோ, உடனடி நிவாரணமோ நாம் எதிர்பார்க்கக் கூடாது என அவர் நம்மை எச்சரிக்கிறார். நமது “விசுவாசத்துக்கு சோதனை” வரும்போது, நாம் உறுதியாக நிற்கும்போது, , எனினும் தாங்க சோதனை கடினமாக இருந்தாலும், வருகிற பதில் தாமதமானாலும், காரியங்கள் வாய்க்கும்.10 நான் “குருட்டுத்தனமான கீழ்ப்படிதலைப்” பற்றி பேசவில்லை.11 ஆனால் கர்த்தரின் பரிபூரண அன்பிலும் பரிபூரண நேரத்திலும் சிந்தனையுள்ள தன்னம்பிக்கை பற்றி பேசுகிறேன்.

விசுவாசத்தின் சோதனை எப்போதும் எளிய அன்றாட விசுவாச செயல்களில் தரித்திருப்பதை உள்ளடக்கியது. பின்பு மட்டும், நாம் எதிர்பார்க்கிற தெய்வீக பதில், பெறுவோம் என அவர் வாக்களிக்கிறார். எப்போது, ஏன், எப்படி, என அறிய நிபந்தனையில்லாமல் அவர் கேட்பதை நாம் செய்ய சித்தமாயிருப்பதை நிரூபித்தால், நாம் நமது “விசுவாசம், அக்கறை, பொறுமை, மற்றும் நீடிய சாந்தம் ஆகியவற்றின் பிரதிபலன்களை அறுவடை செய்வோம்.”12 நிபந்தனையில்லாமல் முன்கூட்டியே, உண்மையான விசுவாசம் தேவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறது.13

ஒந்நொரு நாளும் அறிந்தோ அறியாமலோ, நாம் அனைவரும் தினமும், “யாரை சேவிப்பது” என தெரிந்து கொள்கிறோம்.14 அர்ப்பணிப்பின் அன்றாட செயல்களில் தினமும் நாம் விசுவாசத்துடன் ஈடுபட்டு கர்த்தருக்கு சேவை செய்ய நமது உறுதியைக் காட்டுகிறோம். நமது பாதைகளைக் காட்ட கர்த்தர் வாக்களிக்கிறார்.15 ஆனால் அவர் அதைச் செய்ய, “அவரே வழியாக” இருப்பதால், அவர் வழியை அறிகிறார் என நம்பி நாம் நடக்க வேண்டும்.16 நாம் விளிம்பு வரை நமது தண்ணீர் ஜாடிகளை நிரப்ப வேண்டும். நாம் அவரை நம்பி பின்பற்றும்போது, நமது வாழ்க்கை தண்ணீரிலிருந்து திராட்சரசம் போல மாறும். நாம் வேறுவிதமாக இருப்பதை விட அதிகமாகவும் நன்றாகவும் ஆகிறோம். கர்த்தரை நம்பி, உங்களிடம் “அவர் எதைச் சொன்னாலும் அதைச் செய்யுங்கள்.” இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.