இளைஞரின் பெலனுக்காக
இளைஞரின் பெலனுக்காக: உங்களுக்கான இரட்சகரின் செய்தி
மார்ச் 2024


“இளைஞரின் பெலனுக்காக: உங்களுக்கான இரட்சகரின் செய்தி,” இளைஞரின் பெலனுக்காக, மார். 2024.

இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, மார்ச் 2024

இளைஞரின் பெலனுக்காக: உங்களுக்கான இரட்சகரின் செய்தி

இயேசு கிறிஸ்துவுடனும் அவருடைய கோட்பாட்டுடனும் உங்களுடைய தேர்வுகளை இணைக்க இந்த வழிகாட்டி உதவுகிறது.

படம்
இயேசு கிறிஸ்து

வாசற்படியிலே நின்று தட்டுகிறேன் – ஜெ. கிர்க் ரிச்சர்ட்ஸ்

நீங்கள் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பூர்வகால கலிலியோவில் வாழ்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். நீங்களும் உங்கள் நண்பர்களும் உள்ளூர் ஜெப ஆலயத்தில் நடைபெறும் இளைஞர் பக்தி விருத்தி கூடுகைக்கு அழைக்கப்பட்டுள்ளீர்கள், இதில் விசேஷமான சிறப்பு பேச்சாளர்: நாசரேத்தின் இயேசு அவருடைய செய்தியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், இயேசு அவரிடம் கேள்விகளைக் கேட்க பார்வையாளர்களில் இளைஞர்களை அழைக்கிறார்.

என்ன வகையான கேள்விகளை நீங்கள் கேட்பீர்கள் என்று நினைக்கிறீர்கள்?

சில கேள்விகள் அக்கால கலாச்சாரத்தையும் சூழ்நிலையையும் பிரதிபலிக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அவற்றில் பல இன்று நம்மிடம் உள்ள கேள்விகளைப் போலவே ஒலிக்கும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.

உதாரணமாக, புதிய ஏற்பாட்டில், மக்கள் இரட்சகரிடம் இது போன்ற கேள்விகளைக் கேட்டார்கள்:

  • நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் ?1

  • நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேனா? நான் சொந்தமானவனா?2

  • என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? 3

  • எதிர்காலத்தில் இந்த உலகிற்கு என்ன நடக்கப் போகிறது? நான் பாதுகாப்பாக இருப்பேனா?4

  • என் அன்புக்குரியவரை உங்களால் குணப்படுத்த முடியுமா? 5

  • எது சத்தியம்?6

  • நான் சரியான வழியில் செல்கிறேனா என்று எனக்கு எப்படித் தெரியும்?7

நாம் அனைவரும் அவ்வப்போது ஒரே விஷயத்தை குறித்து ஆச்சரியப்படுகிறோம் அல்லவா? பல நூற்றாண்டுகளாக, கேள்விகள் பெரிதாக மாறவில்லை. இரட்சகரின் இரக்கமும் கேட்பவர்கள் மீது மாறியதில்லை வாழ்க்கை எவ்வளவு துயரமாகவும் குழப்பமாகவும் இருக்கும் என்பது அவருக்குத் தெரியும். நாம் வழி தவறுவது சுலபம் என்பதை அவர் அறிவார். நாம் சில சமயங்களில் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதை அவர் அறிவார். அவர் நீண்ட காலத்திற்கு முன்பு தம்மைப் பின்பற்றுபவர்களிடம் கூறியது போலவே உங்களுக்கும் எனக்கும் கூறுகிறார்:

  • “உங்கள் இருதயம் கலங்காமலிருப்பதாக.”8

  • ”நானே வழியும் சத்தியமாயிருக்கிறேன்.”9

  • “என்னைப் பின்பற்றிவா”10

நீங்கள் செய்ய முக்கியமான தேர்வுகள் இருக்கும்போது, இயேசு கிறிஸ்துவும் அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷமும் சிறந்த தேர்வாகும். உங்களிடம் கேள்விகள் இருந்தால், இயேசு கிறிஸ்துவும் அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷமும் சிறந்த பதில்.

இதனால்தான் நான் இளைஞரின் பெலனுக்காக: தேர்ந்தெடுப்புகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டியை நான் நேசிக்கிறேன். நம்மை இயேசு கிறிஸ்துவிடம் சுட்டிக்காட்டுகிறது, அதனால் நாம் அவருடைய பெலத்தை பெறமுடியும். நான் எப்போதும் ஒரு பிரதியை என் சட்டைப் பையில் வைத்திருப்பேன். இயேசு கிறிஸ்துவின் சபையின் உறுப்பினர்களாகிய நாம் செய்கிறவற்றை ஏன் செய்கிறோம் என்பதை அறிய விரும்பும் உலக ஜனங்களை நான் சந்தித்தால், இந்த வழிகாட்டியை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஏனெனில்இளைஞரின் பெலனுக்காக இரட்சகரையும் அவருடைய வழியையும் பற்றிய நித்திய சத்தியத்தைக்கற்பிக்கிறது. அந்த சத்தியத்தின் அடிப்படையில் தேர்வுகளை மேற்கொள்ள இது உங்களை அழைக்கிறது. மேலும், அவரைப் பின்தொடர்பவர்களுக்கு அவரால் வாக்களிக்கப்பட்டஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த வழிகாட்டியை தயவு செய்து படிக்கவும், சிந்திக்கவும், பகிரவும்!

அவரை உங்களுக்குள் அழைக்கவும்

தினந்தோறும், நல்ல மற்றும் கெட்ட நேரங்களிலும் இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கையின் நிலையான ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறார் பாதையின் முடிவில் நீங்கள் அவரைப் பற்றிப் பிடிப்பதற்காக அவர் காத்திருக்கவில்லை அவர் உங்களுடன் ஒவ்வொரு அடியிலும் நடப்பார். அவரேவழி!

ஆனால் அவர் உங்கள் வாழ்க்கையில் அவரது வழியை திணிக்க மாட்டார். உங்கள் தேர்வுகள் மூலம் நீங்கள் அவரை உள்ளே அழைக்கிறீர்கள். இதனால்தான் இளைஞரின் பெலனுக்காகவழிகாட்டி தேர்வுகளை மேற்கொள்வதற்கு மிகவும் விலைமதிப்பற்றது. இரட்சகரின் நித்திய சத்தியங்களின் அடிப்படையில் நீங்கள் ஒரு நீதியான தேர்வு செய்யும் ஒவ்வொரு முறையும், உங்கள் வாழ்க்கையில் அவர் இருக்கவேண்டும் என்பதைக் காட்டுகிறீர்கள். அந்தத் தேர்வுகள் பரலோக வாயிலைத் திறக்கின்றன, அவருடைய பெலன் உங்கள் வாழ்க்கையில் ஊற்றப்படுகிறது.11

ஒரு வலுவான இணைப்பை உருவாக்கவும்

இரட்சகர் தம்முடைய வார்த்தைகளைக் கேட்டு நடப்பவர்களை “ கன்மலையின் மீது தனது வீட்டைக் கட்டிய” ஞானவானுடன் ஒப்பிட்டதை நீங்கள் நினைவில் வைத்திருக்கலாம். அவர் விளக்கினார்:

பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை, ஏனெனில் அது கன்மலையின்மேல் கட்டப்பட்டிருந்தது12

வீடு வலுவாக இருப்பதால் மாத்திரம் புயலில் நிலைத்திருக்கவில்லை. பாறை வலுவாக இருப்பதாலேயும் வீடு புயலில் நிலைத்திருக்கவில்லை. அந்த வலிமையான பாறையில் உறுதியாகப் பிணைந்திருப்பதால் மாத்திரமே புயலில் வீடு நிலைத்திருக்கிறது. பாறையுடனான இணைப்பின் வலிமை முக்கியமானது.

அதேபோல், நாம் நம் வாழ்க்கையை கட்டியெழுப்ப, நல்ல தேர்வுகளை மேற்கொள்வது முக்கியம். இரட்சகரின் நித்திய சத்தியத்தைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆனால், வாழ்க்கையின் புயல்களைத் தாங்குவதற்கு நமக்குத் தேவையான பெலன், நம்முடைய தேர்வுகளை இயேசு கிறிஸ்துவுடனும் அவருடைய கோட்பாட்டுடனும் இணைக்கும்போது வருகிறது. இதையேஇளைஞர்களின் பெலனுக்காகநமக்கு செய்ய உதவுகிறது.

உதாரணமாக, நீங்கள் அவமதிக்கும் அல்லது புண்படுத்தும் மொழியைப் பயன்படுத்த மாட்டீர்கள் என்று உங்கள் நண்பர்கள் அறிந்திருக்கலாம் பள்ளியில் பெரும்பாலானவர்கள் புறக்கணிக்கும் அல்லது துன்புறுத்தும் குழந்தையை நீங்கள் சந்திப்பதை அவர்கள் பார்க்கலாம். ஆனால், இயேசு கிறிஸ்து “உங்களிடமிருந்து வேறுபட்டவர்கள் உட்பட எல்லா ஜனங்களும் உங்கள் சகோதர சகோதரிகள் “ என்று போதித்ததால் நீங்கள் இந்தத் தேர்வுகளைச் செய்கிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா?13

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நீங்கள் சபைக்குச் செல்வதை உங்கள் நண்பர்கள் அறிந்திருக்கலாம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட பாடலை நிறுத்தும்போது அல்லது குறிப்பிட்ட திரைப்படத்தைப் பார்ப்பதற்கான அழைப்பை நிராகரிக்கும்போது அவர்கள் கவனிக்கக்கூடும். ஆனால், “பரலோக பிதாவுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் ஒரு மகிழ்ச்சியான உடன்படிக்கை உறவை” நீங்கள் கொண்டிருப்பதாலும், இரட்சகரைப் பின்பற்றுவதற்கான அந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, “பரிசுத்த ஆவியானவரை உங்கள் நிலையான துணையாகக் கொண்டிருப்பதற்கும்” நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பதால் நீங்கள் இந்தத் தேர்வுகளை செய்கிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா?14

நீங்கள் குடிப்பதில்லை அல்லது புகைபிடிப்பதில்லை அல்லது பிற தீங்கு விளைவிக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதில்லை என்பதை ஜனங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்து “உங்கள் சரீரம் புனிதமானது”, என்றும் அவருடைய சாயலில் உருவாக்கிய, பரலோக பிதாவிடமிருந்து வந்த ஒரு அற்புதமான பரிசு” என்றும் போதித்ததால் நீங்கள் இந்தத் தேர்வுகளைச் செய்கிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா?15

நீங்கள் ஏமாற்றவோ பொய் சொல்லவோ மாட்டீர்கள் என்பதையும், கல்வியை நீங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதையும் உங்கள் நண்பர்கள் அறிந்திருக்கலாம். ஆனால், “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு கிறிஸ்து போதித்ததே இதற்குக் காரணம் என்று அவர்களுக்குத் தெரியுமா?16

எல்லாவற்றிற்கும் மேலாக, “இயேசு கிறிஸ்து உங்கள் பெலன்” என்பதை நீங்கள் அறிந்திருப்பதால், கிறிஸ்துவின் தரங்களுக்கு உண்மையாக இருக்க சில சமயங்களில் பிரபலமில்லாத இந்த தேர்வுகளை நீங்கள் செய்கிறீர்கள் என்பது உங்கள் நண்பர்களுக்குத் தெரியுமா?17

அவரே உங்கள் பெலன்.

பிரகாசமான மற்றும் மகிமையான எதிர்காலத்திற்கு - உங்கள் எதிர்காலத்திற்கான வழி இயேசு கிறிஸ்து என்பதை நான் உங்களுக்கு சாட்சியளிக்கிறேன். மேலும் அவர் ஒரு பிரகாசமான மற்றும் புகழ்பெற்ற நிகழ்காலத்திற்கான வழி. அவருடைய வழியில் நட, அவர் உன்னோடு நடப்பார். இதை உங்களால் செய்ய முடியும்!

என் அன்பான இளம் நண்பர்களே, இயேசு கிறிஸ்து உங்கள் பெலன் அவருடன் தொடர்ந்து நடந்து செல்லுங்கள், “கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து” அவர் உங்களுக்காக தயார் செய்துள்ள நித்திய மகிழ்ச்சியை நோக்கி எழும்ப அவர் உங்களுக்கு உதவுவார்.18