ஒத்தாசைச் சங்கமும் மூப்பர்கள் குழுமமும்
பொது மாநாட்டிலிருந்து செய்திகளை கற்பித்தல், கற்றுக்கொள்ளுதல், பயன்படுத்துதல்


என்னைப் பின்பற்றி வாருங்கள்

பொது மாநாட்டிலிருந்து செய்திகளை கற்பித்தல், கற்றுக்கொள்ளுதல், பயன்படுத்துதல்

இரட்சிப்பின் மற்றும் மேன்மையடைதலின் பணியில் மூப்பர் குழுமமும் ஒத்தாசைச் சங்கமும் முக்கிய பங்கை வகிக்கின்றன. அவர்களது ஞாயிறு கூட்டங்களின் போது, சமீபத்திய பொது மாநாட்டு செய்திகளில் உள்ள போதனைகளை இந்த பணியில் தங்கள் முயற்சிகளுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று விவாதிக்கின்றனர். உறுப்பினர்களின் தேவைகள் மற்றும் பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலின் அடிப்படையில், ஒவ்வொரு ஞாயிறு கூட்டத்தின்போதும், மூப்பர் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்கத்தின் தலைமைகள் ஒரு மாநாட்டுச் செய்தியைத் தேர்ந்தெடுக்கின்றன. எப்போதாவது, ஆயர் அல்லது பிணையத் தலைவரும்கூட ஒரு செய்தியை பரிந்துரைக்கலாம். பொதுவாக, பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழும அங்கத்தினர்களின் செய்திகளை தலைவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். எப்படியாயினும், மிக சமீபத்திய பொது மாநாட்டிலிருந்து எந்த செய்தியாவது கலந்துரையாடப்படலாம்.

பொது மாநாட்டுச் செய்திகளில் உள்ள போதனைகளை உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்த உதவுவது என்பதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்துகின்றனர். கூட்டங்களுக்கு முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை அங்கத்தினர்கள் படிக்க ஊக்குவிக்க தலைவர்களும் ஆசிரியர்களும் வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள்.

மூப்பர் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்கக் கூட்டங்களைப்பற்றி அதிகத் தகவலுக்கு General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 8.2.1.2, 9.2.1.2, ChurchofJesusChrist.org பார்க்கவும்.

கற்பிக்க திட்டமிடுதல்

கற்பிக்க பொது மாநாட்டு செய்தி ஒன்றைப் பயன்படுத்த அவர்கள் திட்டமிடும்போது பின்வரும் கேள்விகள் ஆசிரியர்களுக்கு உதவ முடியும். தேவைக்கேற்ப, ஆசிரியர்கள் இந்தக் கேள்விகளைப்பற்றி சிந்திக்கும்போது, மூப்பர் குழுமம் அல்லது ஒத்தாசைச் சங்கத்தின் தலைமையிடம் ஆலோசனை கேட்கிறார்கள்.

  • மூப்பர் குழுமம் அல்லது ஒத்தாசைச் சங்கத்தின் தலைமை ஏன் இந்தச் செய்தியை கலந்துரையாட தேர்ந்தெடுத்தது? இந்தச் செய்தியை கலந்துரையாடிய பிறகு உறுப்பினர்கள் அறிந்து என்ன செய்வார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்?

  • உறுப்பினர்கள் எதைப் புரிந்துகொள்ளவேண்டுமென உரையாற்றுபவர் விரும்புகிறார்? அவர் அல்லது அவள் என்ன சுவிசேஷக் கொள்கைகளைப் போதித்துக்கொண்டிருக்கிறார்? எனது மூப்பர் குழுமம் அல்லது ஒத்தாசைச் சங்கத்திற்கு இந்த கொள்கைகள் எவ்வாறு பொருந்தும்?

  • அவர் அல்லது அவளுடைய செய்திக்கு ஆதரவாக உரையாற்றுபவர் எந்த வேத வசனங்களைப் பயன்படுத்தினார்? தங்களுடைய புரிந்துகொள்ளுதலை ஆழப்படுத்துகிற, உறுப்பினர்கள் வாசிக்கக்கூடிய, பிற வசனங்களிருக்கின்றனவா? (செய்தியின் முடிவுகுறிப்புகள் அல்லது வேதங்களுக்கு வழிகாட்டியில் சிலவற்றை நீங்கள் காணலாம்.[scriptures.ChurchofJesusChrist.org].)

  • செய்தியிலுள்ள போதனைகளை தியானிக்கவும் உறுப்பினர்களுக்கு உதவக்கூடிய என்ன கேள்விகளை நான் கேட்கமுடியும்? அவர்களுடைய வாழ்க்கையிலும், அவர்களுடைய குடும்பங்களிலும், கர்த்தருடைய பணியிலும், இந்த போதனைகளின் பொருத்தத்தைப் பார்க்க என்ன கேள்விகள் அவர்களுக்குதவும்?

  • நமது கூட்டங்களில் பரிசுத்த ஆவியை வரவழைக்க நான் என்ன செய்யமுடியும்? கதைகள், ஒப்புமைகள், இசை அல்லது கலைப் படைப்பையும் சேர்த்து கலந்துரையாடலை மேம்படுத்த எதை நான் பயன்படுத்தமுடியும்? அவருடைய அல்லது அவளுடைய செய்தியைப் புரிந்துகொள்ள உறுப்பினர்களுக்கு உதவ உரையாற்றுபவர் என்ன செய்தார் ?

  • உரையாற்றுபவர் எந்த அழைப்புகளையும் கொடுத்தாரா? அந்த அழைப்புகளின்படி செயல்பட விருப்பத்தை உறுப்பினர்கள் உணர நான் எப்படி உதவக்கூடும்?

நிகழ்ச்சிக்கான யோசனைகள்

பொது மாநாடு செய்திகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் பயன்படுத்தவும் உறுப்பினர்களுக்குதவ ஆசிரியர்களுக்கு அநேக வழிகளிருக்கின்றன. இங்கே ஒரு சில உதாரணங்கள் உள்ளன; ஆசிரியர்கள் தங்கள் மூப்பர் குழுமம் அல்லது ஒத்தாசைச் சங்கத்தில் சிறப்பாக பயன்படக்கூடிய பிற யோசனைகள் அவர்களுக்கிருக்கலாம்.

  • நமது வாழ்க்கையோடு சத்தியங்களைப் பொருத்தவும். தனிநபர்களாகவோ அல்லது மூப்பர் குழுமமாகவோ அல்லது ஒத்தாசைச் சங்கமாகவோ தேவன் அவர்களுக்குக் கொடுத்த பணியை நிறைவேற்ற உதவும் சத்தியங்களைத் தேடும் மாநாட்டுச் செய்தியை மதிப்பாய்வு செய்ய உறுப்பினர்களை அழைக்கவும். உதாரணமாக, ஊழியக்காரர்களாக நமக்கு உதவும் எதை நாம் கற்றுக்கொள்கிறோம்? பெற்றோராக? உறுப்பினர் ஊழியக்காரர்களாக? நமது சிந்தனைகளிலும், உணர்வுகளிலும், செயல்களிலும் இந்த செய்தி எவ்வாறு செல்வாக்கு ஏற்படுத்துகிறது?

  • குழுக்களில் கலந்துரையாடுங்கள். உறுப்பினர்களை சிறிய குழுக்களாகப் பிரித்து, வாசிக்கவும், கலந்துரையாடவும் மாநாட்டு செய்தியின் வெவ்வேறு பகுதியை ஒவ்வொரு குழுவுக்கும் பணிக்கவும். பின்னர் ஒவ்வொரு குழுவும் அவர்கள் கண்டறிந்த உண்மையையும் அது அவர்களுக்கு எவ்வாறு பொருந்தும் என்பதையும் பகிர்ந்து கொள்ளச் சொல்லுங்கள். அல்லது செய்தியின் வெவ்வேறு பிரிவுகளைப் படித்த உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களை நீங்கள் உருவாக்கி, அவர்கள் கண்டறிந்ததை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கலாம்.

  • கேள்விகளுக்கான பதில்களைத் தேடவும். மாநாட்டுச் செய்தியைப்பற்றிய பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க உறுப்பினர்களை அழைக்கவும்: இந்தச் செய்தியில் நாம் என்ன சுவிசேஷ சத்தியங்களைக் காண்கிறோம்? இந்த சத்தியங்களை நாம் எவ்வாறு பிரயோகப்படுத்தமுடியும்? என்ன அழைப்புகளும் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களும் கொடுக்கப்பட்டன? நாம் செய்யவேண்டுமென தேவன் விரும்புகிற பணியைப்பற்றி இந்த செய்தி நமக்கு என்ன போதிக்கிறது? அல்லது செய்தியைப்பற்றி ஆழமாக சிந்திக்க அல்லது அது கற்பிக்கும் உண்மைகளைப் பயன்படுத்த உறுப்பினர்களை ஊக்குவிக்கும் சில கேள்விகளை நீங்களே உருவாக்குங்கள். இந்தக் கேள்விகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, செய்தியில் பதில்களைக் கண்டறிய உறுப்பினர்களை அனுமதிக்கவும்.

  • செய்தியிலிருந்து அறிக்கைகளைப் பகிரவும். இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியில் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற ஊக்குவிக்கும் மாநாட்டு செய்தியிலிருந்து அறிக்கைகளைப் பகிர்ந்து கொள்ள உறுப்பினர்களை அழைக்கவும். தங்களுக்கு அன்பானவர்களையும், அவர்கள் ஊழியம் செய்கிறவர்களையும் சேர்த்து, ஒருவரை ஆசீர்வதிக்க இந்த கேள்விகளை அவர்கள் எவ்வாறு பகிர்ந்து கொள்ளமுடியும் என்பதைக் கருத்தில்கொள்ள ஊக்குவிக்கவும்.

  • ஒரு பொருள்சார் பாடத்தை பகிர்ந்துகொள்ளவும். மாநாட்டு செய்தியைப்பற்றி போதிக்க அவர்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்களை வீட்டிலிருந்து கொண்டுவர முன்கூட்டியே, ஒரு சில உறுப்பினர்களை அழைக்கவும். கூட்டத்தின்போது, அந்த பொருட்கள் எவ்வாறு செய்திக்கு சம்பந்தப்பட்டிருக்கிறதெனவும் அவர்களுடைய வாழ்க்கைக்கு செய்தி எவ்வாறு பொருந்துகிறதெனவும் விவரிக்க உறுப்பினர்களைக் கேட்கவும்.

  • வீட்டில் கற்பிக்க ஒரு பாடத்தை ஆயத்தப்படுத்தவும். மாநாட்டு செய்தியின் அடிப்படையில் ஒரு இல்ல மாலைப் பாடத்தைத் திட்டமிட ஜோடிகளாக பணியாற்ற உறுப்பினர்களைக் கேட்கவும். இது போன்ற கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியும்: செய்தியை எப்படி நம் குடும்பங்களுக்குப் பொருத்தமானதாக நம்மால் மாற்ற முடியும்? நாம் ஊழியம் செய்கிற மக்களுடன் இந்த செய்தியை எவ்வாறு நாம் பகிர்ந்துகொள்ளலாம்?

  • அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும். மாநாட்டு செய்தியிலிருந்து பல்வேறு அறிக்கைகளை ஒன்று சேர்ந்து படிக்கவும். இந்த அறிக்கைகளில் கற்பிக்கப்பட்ட கோட்பாட்டை விளக்கும் அல்லது வலுப்படுத்தும் வேதங்களிலிருந்தும் அவர்களின் வாழ்க்கையிலிருந்தும் எடுத்துக்காட்டுகளைப் பகிர்ந்து கொள்ள உறுப்பினர்களைக் கேளுங்கள்.

  • ஒரு சொற்றொடரைக் கண்டுபிடிக்கவும். உறுப்பினர்களுக்கு அர்த்தமுள்ளதான சொற்றொடர்களைத் தேடி, மாநாட்டுச் செய்தியைத் தேட அவர்களை அழைக்கவும். சொற்றொடர்களையும் அவற்றிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்வதையும் பகிர்ந்து கொள்ளும்படி அவர்களிடம் கேளுங்கள். கர்த்தருடைய பணியை நிறைவேற்ற இந்தப் போதனைகள் அவர்களுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதைப் பகிர்ந்துகொள்ளும்படி அவர்களிடம் கேளுங்கள்.

பொது மாநாட்டுச் செய்திகளிலிருந்து எவ்வாறு படிப்பது மற்றும் கற்பிப்பது என்பதைப்பற்றிய கூடுதல் யோசனைகளுக்கு, “Ideas for Learning and Teaching from General Conference” பார்க்கவும். (Gospel Libraryல். “General Conference”ன் கீழ் “Ideas for Study” தட்டவும்)