வேதங்கள்
மார்மன் 8


அதிகாரம் 8

நேபியர்களை லாமானியர் தேடி அழித்துப் போடுதல் – மார்மன் புஸ்தகம் தேவ வல்லமையினால் வெளிவரும் – கர்த்தருடைய கிரியைக்கு விரோதமாக உக்கிரமாகவும் கோபமாகவும் நடந்துகொள்பவரின் மேல் சாபம் அறிவிக்கப்படுதல் – துன்மார்க்கம், ஒழுக்கமின்மை, மதமாறுபாடு நிறைந்த நாளில், நேபிய பதிவேடு வெளிவரும். ஏறக்குறைய கி.பி. 400–421.

1 இதோ மரோனியாகிய நான் என் தகப்பனாகிய மார்மனின் பதிவேடுகளை முடிக்கிறேன். இதோ, என் தகப்பனால் எனக்குக் கட்டளையிடப்பட்ட, எழுதவேண்டிய சில உண்டு.

2 இப்பொழுதும், அந்தப்படியே, குமோராவில் நடந்த அந்தப் பெரிதும் பயங்கரமுமான யுத்தத்திற்குப் பிறகு, இதோ, தென்தேசத்திற்குள் தப்பித்துப்போன நேபியர்கள் யாவரும் அழிக்கப்படும்வரைக்கும் லாமானியரால் வேட்டையாடப்பட்டனர்.

3 என் தகப்பனும் அவர்களால் கொல்லப்பட்டான், என் ஜனத்தினுடைய அழிவைப்பற்றிய சோகக் கதையை எழுத நான் மாத்திரம் மிஞ்சியிருக்கிறேன். ஆனால் இதோ, அவர்கள் போய்விட்டார்கள், நான் என் தகப்பனின் கட்டளையை நிறைவேற்றுகிறேன். அவர்கள் என்னைக் கொல்லுவார்களா என்பதையும் நான் அறியேன்.

4 ஆதலால் நான் பதிவேடுகளை எழுதி, அவைகளை பூமியிலே மறைத்து வைப்பேன்; நான் எங்கு போகிறேன் என்பது முக்கியமல்ல.

5 இதோ, என் தகப்பன் இந்தப் பதிவேட்டை எழுதி, அதற்கான நோக்கத்தையும் எழுதியிருக்கிறார். இதோ, தகடுகளின்மேல் இடமிருந்தால் நான் அதையும் எழுதுவேன், ஆனால் நான் எழுதவில்லை; தாதுக்களும் என்னிடமில்லை, நானோ தனியாய் இருக்கிறேன். என் தகப்பனும் என் உற்றாரும் யுத்தத்திலே கொல்லப்பட்டார்கள், எனக்கு நண்பர்களோ, போவதற்கு இடமோ இல்லை; நான் ஜீவித்திருக்கும்படி கர்த்தர் என்னை எவ்வளவு காலம் அனுமதிப்பார் என்று, நான் அறியேன்.

6 இதோ, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமானவருடைய வருகை துவங்கி, நானூறு வருஷங்கள் கடந்துபோயின.

7 இதோ, என்னுடைய ஜனமாகிய நேபியர் இல்லாது போகுமட்டும், அவர்களை லாமானியர் பட்டணந்தோறும், இடந்தோறும் வேட்டையாடினார்கள்; அவர்களுடைய வீழ்ச்சி பெரிதாயிருந்தது; ஆம், நேபியர்களாகிய என் ஜனத்தினுடைய அழிவு, பெரிதும் விசித்திரமுமாயிருக்கிறது.

8 இதோ, கர்த்தருடைய கரம் அதைச் செய்திற்று. லாமானியர் ஒருவரோடு ஒருவர் யுத்தம் செய்வதையும் காணுங்கள்; இந்த தேசத்தின் பரப்பு கொலையும் இரத்தம் சிந்துதலும் கொண்ட ஒரு தொடர் சுற்று; யுத்தத்தின் முடிவை ஒருவனும் அறியான்.

9 இப்பொழுது, இதோ, அவர்களைக் குறித்து நான் ஒன்றும் சொல்வதில்லை. ஏனெனில் தேசத்தின் மேல் லாமானியர்களையும், திருடர்களையும் தவிர வேறொருவரும் இல்லை.

10 ஜனங்களுடைய துன்மார்க்கம் பெரிதாகி அவர்களை ஜனங்களோடு தரித்திருக்க கர்த்தர் அனுமதியாமல் போகும்வரைக்கும் தேசத்தில் இருந்த, இயேசுவின் சீஷர்களைத் தவிர அங்கே வேறொருவனும் மெய்யான தேவனை அறிந்திருக்கவில்லை; அவர்கள் தேசத்தில் இருக்கிறார்களா என்று ஒருவனும் அறியான்.

11 ஆனால் இதோ, என் தகப்பனும் நானும் அவர்களைக் கண்டிருக்கிறோம். அவர்கள் எங்களுக்குப் பணிவிடை செய்திருக்கிறார்கள்.

12 இந்தப் பதிவேட்டைப் பெற்று, இதிலிருக்கும் பரிபூரணமின்மையினிமித்தம் அதை குறை சொல்லாதிருக்கிறவன், இவற்றைக் காட்டிலும் பெரிய காரியங்களை அறிந்துகொள்வான். இதோ, நான் மரோனி, கூடுமானால் நான் சகலவற்றையும் உங்களுக்குத் தெரிவிப்பேன்.

13 இதோ, இந்த ஜனத்தைக் குறித்துப் பேசுவதை நான் நிறுத்துகிறேன். நான் மார்மனின் குமாரன். என் தகப்பன் நேபியின் சந்ததியாராவார்.

14 நானே இப்பதிவேட்டினைக் கர்த்தருக்குள் மறைத்து வைக்கிறேன்; கர்த்தருடைய கட்டளையினிமித்தம், அந்தத் தகடுகளுக்கு மதிப்பில்லை. ஏனெனில் லாபம் பெறுவதற்கென ஒருவனும் அதைப் பெறப்போவதில்லையென்று அவர் உண்மையாகவே சொல்கிறார்; அதன் குறிப்புகளோ பெரும் மதிப்புள்ளவை; அதை வெளிச்சத்திற்குக் கொண்டு வருபவனை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

15 தேவனால் அருளப்பட்டாலொழிய ஒருவனும் அதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரக்கூடிய வல்லமையைப் பெற்றிருக்கமாட்டான்; தேவனுக்குச் சித்தமாயிருந்தால் அவருடைய மகிமைக்கென்ற ஒரே நோக்கத்திற்காகவோ, அல்லது கர்த்தருடைய பூர்வகால, நீண்டகாலத்துக்கு முன்பே சிதறடிக்கப்பட்ட, உடன்படிக்கையின் ஜனங்களின் நலனுக்காகவோ அது நடந்தேறும்.

16 இந்தக் காரியத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவருபவன் பாக்கியவான்; ஏனெனில் தேவ வார்த்தையின்படியே அது இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வரும். ஆம், அது பூமியிலிருந்து வெளிக்கொண்டு வரப்பட்டு, இருளிலிருந்து பிரகாசித்து, ஜனங்களினுடைய ஞானத்திற்கேதுவாய் வரும்; அது தேவ வல்லமையினால் நடக்கும்.

17 பிழைகள் இருக்குமாயின் அது மனிதனாலான பிழைகளே. ஆனால் இதோ, நாங்கள் ஒரு பிழையையும் அறியோம்; இருப்பினும் தேவன் சகலத்தையும் அறிந்திருக்கிறார்; ஆகவே, ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன், நரக அக்கினியின் ஆபத்துக்குட்படாதபடிக்கு ஜாக்கிரதையாய் இருப்பானாக.

18 எனக்குக் காட்டு. இல்லாவிட்டால் நீ அடிக்கப்படுவாய் என்று சொல்லுகிறவன், கர்த்தரால் தடை செய்யப்பட்டதை, கட்டளையிடாதபடிக்கு, ஜாக்கிரதையாய் இருப்பானாக.

19 ஏனெனில் இதோ, துரிதமாய் நியாயம் விசாரிக்கிறவன் மறுபடியும் துரிதமாய் நியாயம் விசாரிக்கப்படுவான்; ஏனெனில் அவனுடைய கிரியைகளின்படியே அவனுடைய சம்பளமும் இருக்கும்; ஆகவே அடிக்கிறவன் திரும்ப கர்த்தரால் அடிக்கப்படுவான்.

20 வேதவாக்கியம் சொல்வதைப் பாருங்கள், மனுஷன் அடிக்கவும் வேண்டாம், அவன் நியாயம் விசாரிக்கவும் வேண்டாம்; ஏனெனில் நியாயத்தீர்ப்பு என்னுடையது. பழிவாங்குதலும் என்னுடையது. நான் சரிக்கட்டுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

21 கர்த்தருடைய கிரியைகளுக்கு விரோதமாகவும், இஸ்ரவேலின் வீட்டாராகிய கர்த்தருடைய உடன்படிக்கையின் ஜனங்களுக்கு விரோதமாகவும் கோபம்கொண்டு பிணக்குகளை ஏற்படுத்தி, கர்த்தருடைய கிரியையை அழிப்போம். இஸ்ரவேலின் வீட்டாரிடம் தாம் செய்த தம்முடைய உடன்படிக்கையை கர்த்தர் நினைவுகூர்வதில்லை, என்று சொல்கிறவன் வெட்டப்பட்டு, அக்கினிக்குள் போடப்படுகிற அபாயத்திலிருக்கிறான்.

22 ஏனெனில் அவருடைய எல்லா வாக்குத்தத்தங்களும் நிறைவேறுமளவும், கர்த்தருடைய நித்திய நோக்கங்கள் தொடரும்.

23 ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களை ஆராயுங்கள். இதோ, அவைகளை நான் எழுதமுடியாது. ஆம், இதோ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இந்த தேசத்தை சுதந்தரித்து எனக்கு முன்னே போன அந்த பரிசுத்தவான்கள் கூக்குரலிடுவார்கள்; ஆம், புழுதியிலிருந்து அவர்கள் கூக்குரலிடுவார்கள். கர்த்தர் ஜீவிக்குமளவும் அவர் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூருவார்.

24 அவர்களின் ஜெபங்கள், அவர்களுடைய சகோதரருக்காகவே என்று அவர் அறிவார். அவர் அவர்களுடைய விசுவாசத்தை அறிந்திருந்தார். ஏனெனில் அவருடைய நாமத்தில் அவர்கள் மலைகளைப் பெயர்க்க முடிந்தது. அவருடைய நாமத்தில் அவர்களால் பூமியை அசையப் பண்ண முடிந்தது. அவருடைய நாமத்தின் வல்லமையால் அவர்களால் பூமியை அசைக்க முடிந்தது. அவர்கள் அவருடைய வார்த்தையின் வல்லமையினாலே, சிறைச்சாலைகளை பூமியில் விழச் செய்தார்கள்; ஆம், கடுமையான சூளையோ, காட்டு மிருகங்களோ, விஷ சர்ப்பங்களோ, அவருடைய வார்த்தையின் வல்லமையினிமித்தம் அவர்களுக்கு எந்தக் கேடும் விளைவிக்கவில்லை.

25 மேலும் இதோ, இக்காரியங்களைக் கொண்டுவரும்படியாக கர்த்தர் அனுமதிப்பவனுக்காகவும் அவர்களுடைய ஜெபங்கள் இருந்தன.

26 அவை வராது என்று ஒருவனும் சொல்லவேண்டாம், ஏனெனில் அவை நிச்சயமாகவே வரும். ஏனெனில் கர்த்தர் அதைச் சொல்லியிருக்கிறார்; கர்த்தருடைய கரத்தினால் அவைகள் பூமியிலிருந்து வெளிவரும், ஒருவனும் அதைத் தடுக்கமுடியாது; அற்புதங்கள் ஒழிந்துவிட்டன என்று சொல்லப்படும் நாளிலே அது வரும்; மரித்தோரிலிருந்து ஒருவன் பேசுகிற வண்ணமாய் அது வரும்.

27 இரகசிய சங்கங்களாலும், காரிருளின் கிரியைகளினிமித்தமும், பரிசுத்தவான்களின் இரத்தம் கர்த்தரிடத்தில் கூக்குரலிடும் நாளில் அது வரும்.

28 ஆம், தேவ வல்லமை மறுதலிக்கப்பட்டு, சபைகள் தீட்டுப்படுத்தப்பட்டு தங்கள் இருதயங்களின் பெருமையினால் உயர்த்தப்பட்டிருக்கும் நாளிலே, ஆம், தங்கள் சபைகளைச் சார்ந்திருப்போர் பொறாமை கொள்ளும்படிக்கு, ஆம், சபைத் தலைவர்களும், ஆசிரியர்களும் தங்கள் இருதயங்களின் பெருமையில் உயர்த்தப்படும் நாளிலே அது வரும்;

29 ஆம், அந்நிய தேசங்களிலே அக்கினி, சூறாவளி, புகைக்காடு என்று கேள்விப்படும் நாளிலே அது வரும்.

30 ஆம், மேலும் பல இடங்களிலும் யுத்தங்கள், யுத்த வதந்திகள், பூமி அதிர்ச்சிகளைப்பற்றி கேள்விப்படுவார்கள்.

31 ஆம், பூமியின் பரப்பின் மீது பெரும் சீர்கேடுகள் இருக்கும் நாளிலே அது வரும்; அங்கே கொலைகளும், களவுகளும், பொய்யுரைகளும், வஞ்சனைகளும், வேசித்தனங்களும், சகலவிதமான அருவருப்புகளும் இருக்கும்; அங்கே அநேகர் இதைச் செய், அல்லது அதைச் செய், அதனால் ஒன்றுமில்லை, கர்த்தர் அப்படிப்பட்டவர்களை கடைசி நாளிலே காப்பார் என்பார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு ஐயோ. அவர்கள் கசப்பான பிச்சிலும், அக்கிரமக்கட்டிலும் இருக்கிறார்களே.

32 ஆம், சபைகள் கட்டப்பட்டு, என்னிடத்தில் வாருங்கள். உங்களின் பணத்தினிமித்தம், உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும், என்று சொல்லும் நாளில் அது வரும்.

33 துன்மார்க்கமும், மாறுபாடும், வணங்காக்கழுத்துமுள்ள ஜனமே, நீங்கள் ஏன் லாபம் பெறுவதற்கென சபைகளைக் கட்டியிருக்கிறீர்கள்? உங்கள் ஆத்துமாக்களின் மேல் ஆக்கினைத்தீர்ப்பைக் கொண்டுவரும்படியாக, ஏன் தேவ வார்த்தையை மாற்றிப்போட்டீர்கள்? இதோ, தேவனின் வெளிப்படுத்தல்களைப் பாருங்கள்; ஏனெனில் இதோ, இவைகளெல்லாம் நிறைவேறும் காலம் அந்நாளில் வருகிறது.

34 இதோ, இக்காரியங்கள் உங்களுக்குள் வரும் அந்நாளிலே, விரைவாய் வரவேண்டியதைக் குறித்த பெரிதும், அற்புதமுமான காரியங்களை கர்த்தர் எனக்குக் காண்பித்தார்.

35 இதோ, நீங்கள் இருப்பதைப்போல நான் உங்களிடத்தில் பேசுகிறேன். ஆனாலும் நீங்கள் இல்லை. ஆனால் இதோ, இயேசு கிறிஸ்து உங்களை எனக்குக் காண்பித்திருக்கிறார். நான் உங்களுடைய நடவடிக்கைகளை அறிந்திருக்கிறேன்.

36 நீங்கள் உங்களுடைய இருதயங்களின் பெருமையோடு நடக்கிறீர்கள் என்று நான் அறிவேன்; மேன்மையான வஸ்திரங்களை அணிந்து அதினிமித்தம் பொறாமைக்குள்ளும், பிணக்குகள், வெறுப்புகள், துன்புறுத்தல்கள் மற்றும் எல்லாவிதமான அக்கிரமங்களால், தங்கள் இருதயங்களின் பெருமையினால் உயர்த்தப்படாதிருக்கிறவர்கள் வெகு சிலரே; உங்களுடைய சபைகள், ஆம், ஒவ்வொருவரும் உங்களின் இருதயங்களின் பெருமையினால் கெட்டுப்போனீர்கள்.

37 ஏனெனில் இதோ, நீங்கள் எளியவரையும், வறியவரையும், வியாதியஸ்தரையும், உபத்திரவப்படுவோரையும் நேசிப்பதைக் காட்டிலும், அதிகமாய் நீங்கள் பணத்தையும், உங்கள் பொக்கிஷங்களையும், உங்களின் மேன்மையான வஸ்திரங்களையும், உங்கள் சபைகளை அலங்காரம் செய்வதையும் நேசிக்கிறீர்கள்.

38 துருப்பிடித்துப் போகிறவைகளுக்காக, தங்களையே விற்கும் நாசக்காரரே, மாய்மாலக்காரரே, ஆசிரியரே, நீங்கள் ஏன் தேவனின் பரிசுத்த சபையைக் கெடுத்தீர்கள்? ஏன் கிறிஸ்துவின் நாமத்தை உங்கள் மேல் எடுத்துக்கொள்ள வெட்கப்படுகிறீர்கள் என்றும் தீராத துர்பாக்கியத்தைக் காட்டிலும், நித்திய மகிழ்ச்சியின் மதிப்பு பெரியது, என்று நீங்கள் ஏன் நினைப்பதில்லை, உலகப்பிரகார பெருமையினிமித்தமா?

39 ஜீவனற்று இருப்பவைகளால் நீங்கள் உங்களையே அலங்கரித்துக்கொண்டு, பசியுள்ளோரும், வறியவரும், வஸ்திரமில்லாதோரும், வியாதியஸ்தரும், உபத்திரவப்படுவோரும் உங்களைக் கடந்துபோக அனுமதித்து அவர்களைக் கவனியாதிருப்பது எதனாலே?

40 ஆம், லாபம்பெற நீங்கள் ஏன் உங்களுடைய இரகசிய அருவருப்புகளை உருவாக்கி, விதவைகள் கர்த்தருக்கு முன்பாக துக்கிக்கவும், அனாதைகளும் கர்த்தருக்கு முன்பாக துக்கிக்கச் செய்கிறீர்கள், மேலும் உங்கள் தலைகளின்மேல் பழிதீர்க்க, அவர்களுடைய பிதாக்கள் மற்றும் அவர்களுடைய புருஷர்களின் இரத்தம் கர்த்தரிடத்தில் பூமியிலிருந்து கூக்குரலிடச் செய்வது ஏன்?

41 இதோ, பழிதீர்த்தலின் பட்டயம் உங்கள்மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது; பரிசுத்தவான்களின் இரத்தத்துக்காக அவர் உங்கள்மேல் பழிதீர்க்கிற காலம் சீக்கிரமாய் வரும். ஏனெனில் இனிமேலும் அவர் அவர்களுடைய கூக்குரல்களைச் சகித்துக் கொள்ள மாட்டார்.