2021
ஞான வார்த்தை
ஆகஸ்ட் 2021


“ஞான வார்த்தை,” நண்பன், ஆக. 2021.

நண்பன் மாதாந்தர செய்தி, ஆகஸ்ட் 2021

ஞான வார்த்தை

படம்
ஜோசப் ஸ்மித் ஒரு ஆண்கள் குழுவுக்கு போதித்தல்

சுவிசேஷம் பற்றி ஜனங்களுக்கு போதிக்க ஜோசப் ஸ்மித் கூட்டங்கள் நடத்தினார். சில நேரங்களில் ஆண்கள் புகைபிடித்தார்கள் மற்றும் புகையிலையை மென்றார்கள்.

படம்
ஜோசப்பும் எம்மா ஸ்மித்தும்

அது எம்மா ஸ்மித்தை கவலையடையச் செய்தது. புகை மற்றும் புகையிலை பெரிய மாசு படுத்தியது, அதில் ஏதோ சரியாகத் தோன்றவில்லை. இதைப் பற்றி தேவன் எப்படி உணர்ந்தார் என்று எம்மாவும் ஜோசப்பும் ஆச்சரியப்பட்டார்கள்.

படம்
ஜோசப் ஸ்மித் ஜெபித்தல்

ஜோசப் ஜெபம் செய்தார், கர்த்தர் அவருக்குப் பதிலளித்தார். சபையாரை புகைபிடித்தல் மற்றும் புகையிலை பற்றி கர்த்தர் எச்சரித்தார். அவை நமது உடலுக்கு நல்லதல்ல என அவர் சொன்னார். தேநீர், காபி, ஆல்கஹால் குடிப்பது குறித்தும் அவர் எச்சரித்தார்.

படம்
காய்கறிகள்

பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுமாறு தேவன் சொன்னார். இந்த போதனைகளை ஞான வார்த்தை என்று அழைக்கிறோம்.

படம்
சிறுமி சாப்பிடுதல்

நான் ஞான வார்த்தையை கடைபிடிக்க முடியும். நான் என் உடலை கவனித்துக்கொள்வதால் பரலோக பிதா என்னை ஆசீர்வதிப்பார்.

வண்ணமிடும் பக்கம்

நான் என் உடலை கவனித்துக் கொள்ள முடியும்

படம்
பிள்ளைகள் கயிறு தாண்டுதல்

உன் உடலை கவனித்துக்கொள்ள நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

பதிவிறக்கம் செய்ய படத்தில் கிளிக் செய்யவும்.

பட விளக்கம்-ஏப்ரில் ஸ்டாட்