ஊழிய அழைப்புகள்
பிரதான தலைமைச் செய்தி


“பிரதான தலைமைச் செய்தி,” என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான வழிகாட்டி (2023)

“பிரதான தலைமைச் செய்தி,” என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்

பிரதான தலைமைச் செய்தி

அன்பான உடன் ஊழியக்காரரே:

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் நீங்கள் ஒரு ஊழியக்காரராக இருக்க உங்களுக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பிற்காக நாங்கள் உங்களை பாராட்டுகிறோம். இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பதை விடக் கட்டாயமான அல்லது முக்கியமான வேலை எதுவும் இல்லை.

என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்பது நீங்கள் சிறப்பாக ஆயத்தப்பட்ட, ஆவிக்குரிய விதமாக அதிக முதிர்ச்சியடைந்த ஊழியக்காரராக இருக்க உதவும் நோக்கம் கொண்டது. நீங்கள் அதிக திறமையான ஆசிரியராக இருக்க உதவும் நோக்கமும் கொண்டது. உங்களின் தனிப்பட்ட மற்றும் தோழருடன் படிக்க தினமும் அதைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் சேகர ஆலோசனைக்குழு கூட்டங்கள் மற்றும் மண்டல மாநாடுகளில் இதைப் பயன்படுத்தவும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். குறிப்பிடப்பட்ட வசனங்களைப் படித்து, கோட்பாடுகளையும் கொள்கைகளையும் கற்றுக்கொள்ளுங்கள்.

நமது பரலோக பிதாவுக்கு அவரது மகிமையான பணியில் அவருக்கு உதவ, ஒரு புதிய அர்ப்பணிப்பு உணர்வில் எழுச்சிபெற உங்களை அழைக்கிறோம். ஒவ்வொரு ஊழியக்காரரும் கர்த்தரின் பணியில் “மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டுவர,” அவருக்கு உதவும் முக்கிய பங்கு பெற்றிருக்கிறார். (மோசே 1:39).

நீங்கள் பணிவுடன் அவருக்கு சேவை செய்ய உங்களை அர்ப்பணிக்கும்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். பரலோக பிதாவின் பிள்ளைகள் மத்தியில் நீங்கள் பிரயாசப்படும்போது மிகுந்த ஆனந்தமும் மகிழ்ச்சியும் நீங்கள் காண்பீர்கள்.

பிரதான தலைமை