வேதங்கள்
முன்னுரை


முன்னுரை

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் விசுவாசம் மற்றும் கோட்பாட்டின் அநேக விசேஷித்த தன்மைகளை ஒத்த தலைச்சிறந்த எழுத்துக்களின் ஒரு தேர்ந்தெடுத்தலே விலையேறப்பெற்ற முத்து. இவை தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன, அவரது காலத்தில் சபை பத்திரிகைகளில் அநேகமானவை வெளியிடப்பட்டன.

விலையேறப்பெற்ற முத்துவின் தலைப்பைக் கொண்டிருந்த முதல் சேகரிப்பின் தொகுப்பு, அப்போது பன்னிருவர் ஆலோசனை குழுமத்தில் ஒரு அங்கத்தினராயும், பிரிட்டிஷ் ஊழியத்தின் தலைவருமாயிருந்த மூப்பர் பிராங்க்ளின் டி. ரிச்சர்ட்ஸால் 1851ல் உருவாக்கப்பட்டது. ஜோசப் ஸ்மித்தின் காலத்தில் குறைந்த புழக்கத்திலிருந்த சில முக்கிய கட்டுரைகள் மிகத் தயாராக கிடைக்கும்படியாகச் செய்வதே இதன் நோக்கமாயிருந்தது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதிலும் சபை அங்கத்தினர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், இவை கிடைக்கும்படியாகச் செய்வது அவசியமாயிருந்தது. விலையேறப்பெற்ற முத்து மிகப் பரந்த உபயோகத்தைப் பெற்றது, அதைத் தொடர்ந்து பிரதான தலைமையாலும், மற்றும் அக்டோபர் 10, 1880ல் சால்ட் லேக் சிட்டியில் நடந்த பொது மாநாட்டாலும், அது சபையின் ஒரு தரமான புஸ்தகமானது.

சபையின் தேவைக்கேற்ப பொருளடக்கத்தில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டன. முதல் பதிப்பில் அடங்கியிராத மோசே புஸ்தகத்தின் பகுதிகள் 1878ல் சேர்க்கப்பட்டன. மறுமுறை பதிவான விலையேறப்பெற்ற முத்துவின் சில குறிப்பிட்ட பகுதிகளும், கோட்பாடும் உடன்படிக்கைகளுமிலும் திரும்பவும் இருந்தவை 1902ல் நீக்கப்பட்டன. அதிகாரங்களாகவும் வசனங்களாகவும் அடிக்குறிப்புகளுடன் 1902ல் அமைக்கப்பட்டன. சொல்லகராதியுடன் இரண்டு பத்திகளுடனான பக்கங்கள், 1921ல் அமைக்கப்பட்டன. ஏப்ரல் 1976வரை வேறெந்த மாற்றங்களும் செய்யப்படாமல் இரண்டு வெளிப்படுத்தல்கள் மட்டுமே அப்போது சேர்க்கப்பட்டன. 1979ல் விலையேறப்பெற்ற முத்துவிலிருந்து இந்த இரண்டு பகுதிகள் நீக்கப்பட்டு, கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் சேர்க்கப்பட்டு இப்போது அவைகள் பாகங்கள் 137 மற்றும் 138 ஆக தோன்றுகின்றன. முந்தைய ஆவணங்களுடன் ஒத்ததாயிருக்க இப்பகுதியைக் கொண்டுவர தற்போதைய பதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பின்வருபவை தற்போதைய பொருளடக்கத்திற்கு ஒரு சுருக்கமான முன்னுரை:

  1. மோசேயின் புஸ்தகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவைகள். ஜூன் 1830ல் ஜோசப் ஸ்மித் ஆரம்பித்த அவரின் வேதாகம மொழிபெயர்ப்பின் ஆதியாகமம் புஸ்தகத்திலிருந்து ஒரு சாரம்.

  2. ஆபிரகாமின் புஸ்தகம். ஆபிரகாம் எழுதியவைகளின் ஒரு உணர்த்துதலான மொழிபெயர்ப்பு. சில எகிப்திய பழங்கால பாப்பிரஸ்களைப் பெற்றபின்பு 1835ல் ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பை ஆரம்பித்தார். நாவூ, இலினாயில் மார்ச் 1, 1842ல் தொடங்கி Times and Seasons (டைம்ஸ் அண்ட் சீசன்ஸில்) மொழிபெயர்ப்பு தொடராக வெளியிடப்பட்டது.

  3. ஜோசப் ஸ்மித்—மத்தேயு. வேதாகமத்தின் ஜோசப் ஸ்மித்தின் மொழிபெயர்ப்பில் மத்தேயுவின் சாட்சியிலிருந்து ஒரு சாராம்சம். (புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பை ஆரம்பிக்க தெய்வீக உத்தரவிற்காக கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:60–61 பார்க்கவும்)

  4. ஜோசப் ஸ்மித்—வரலாறு. 1838–1839ல் அவரும் அவருடைய எழுத்தர்களும் ஆயத்தம் செய்து, மார்ச் 15, 1842ல் ஆரம்பித்து, நாவூ, இலினாயில் Times and Seasons (டைம்ஸ் அண்ட் சீசன்ஸில்) தொடராக வெளியிடப்பட்ட ஜோசப் ஸ்மித்தின் அதிகாரப்பூர்வமான சாட்சியிலிருந்தும், வரலாற்றிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவை.

  5. பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் விசுவாசப் பிரமாணங்கள். சபையின் ஒரு சுருக்க வரலாற்றுடன் இணைத்து வென்ட்வொர்த் கடிதமென அறியப்பட்டதுடன், மார்ச் 1, 1842ல் Times and Seasons (டைம்ஸ் அண்ட் சீசன்ஸில்) ஜோசப் ஸ்மித்தால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை.