வேதங்கள்
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1


ஜோசப் ஸ்மித்—வரலாறு

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் வரலாற்றிலிருந்து சாராம்சங்கள்

அதிகாரம் 1

ஜோசப் ஸ்மித் தனது முன்னோர், குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் அவர்களது முந்தைய வசிப்பிடங்கள் குறித்து கூறுதல் – மேற்கு நியூயார்க்கில் ஒரு அசாதாரண மத ஆர்வம் நிலவுதல் – யாக்கோபு வழிகாட்டியது போல ஞானத்தை நாட அவர் தீர்மானித்தல் – பிதாவும் குமாரனும் தோன்றுதலும், ஜோசப் தன் தீர்க்கதரிசன ஊழியத்துக்கு அழைக்கப்படுதலும் (வசனங்கள் 1–20).

1 சபையாகவும் உலகில் அதன் முன்னேற்றத்தாலும், இதன் நடத்தைக்கு எதிராக படை திரட்டுவோர் அனைவராலும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தோற்றத்துக்கும் முன்னேற்றத்துக்கும் தொடர்புடைய, தீமையான நோக்கமுடைய திட்டமிடுபவர்களாலும், புழக்கத்தில் விடப்பட்டுள்ள அநேக அறிக்கைகளினிமித்தம், பொதுஜனத்தின் மனதிலுள்ள அவதூறுகளை நீக்கவும், என் வசத்திலுள்ள உண்மைகளைப் பொருத்தவரை, எனக்கும் சபைக்கும் சம்மந்தப்பட்ட, அவை கொடுக்கப்பட்டபடியே, நிஜமாயுள்ளவற்றை ஆராய்பவர்கள் யாவரையும் சத்தியத்தின் பாதையில் வைக்க, இந்த வரலாற்றை எழுத நான் தூண்டப்பட்டுள்ளேன்.

2 சத்தியத்திலும் நீதியிலும் இந்த சபைக்கு சம்பந்தப்பட்ட அவை நடந்தபடி அல்லது சொல்லப்பட்ட சபை ஸ்தாபனத்திலிருந்து இப்போது எட்டாவது வருஷம் வரையில் (1838) தற்போது அவைகளிருப்பதைப்போல வெவ்வேறு சம்பவங்களை இந்த வரலாற்றில் நான் வழங்குகிறேன்.

3 வெர்மான்ட் மாநிலத்தின் வின்ட்சர் மாகாணத்தில் ஷாரோன் பட்டணத்தில் நமது கர்த்தருடைய வருஷமான ஆயிரத்து எண்ணூற்று ஐந்தாவது வருஷம், டிசம்பர் மாதம் இருபத்து மூன்றாம் நாளில் நான் பிறந்தேன். எனக்கு பத்து அல்லது ஏறக்குறைய அந்த வயதாயிருக்கும்போது என்னுடைய தகப்பனான ஜோசப் ஸ்மித் மூத்தவர், வெர்மான்ட் மாநிலத்தைவிட்டு நியூயார்க் மாநிலத்தின் ஒன்டாரியா (இப்போது வெயின்) மாகாணத்திலுள்ள பல்மைராவுக்கு குடிபெயர்ந்தார். பல்மைராவிற்கு என்னுடைய தகப்பன் வந்துசேர்ந்து சுமார் நான்கு வருஷங்களுக்குப் பின் அதே மாகாணமான ஒன்டாரியாவிலுள்ள மான்செஸ்டருக்கு தன்னுடைய குடும்பத்துடன் அவர் குடிபெயர்ந்தார்.

4 என்னுடைய தகப்பன் ஜோசப் ஸ்மித் என்னுடைய தாய் லூசி ஸ்மித் (அவருடைய திருமணத்திற்கு முன் சாலொமோன் மாக்கின் மகளான அவருடைய பெயர் மாக்) என்னுடைய சகோதரர்கள் ஆல்வின் (அவருடைய 26வது வயதில் 19, நவம்பர் 1823ல் மரித்தவர்), ஹைரம், நான், சாமுவேல் ஹாரிசன், வில்லியம், டான் கார்லோஸ் என்னுடைய சகோதரிகள், ஸோப்ரோனியா, காத்தரின் மற்றும் லூசி என்ற பதினோரு ஜீவன்களுடன் அவருடைய குடும்பம் அடங்கியிருந்தது.

5 மான்செஸ்டரிலிருந்து நாங்கள் வெளியேறிய பின் ஏறக்குறைய இரண்டாவது வருஷத்தில் நாங்கள் வசித்த இடத்தில் வழக்கத்திற்குமாறான ஒரு மதக்கிளர்ச்சி எழுந்தது. மெதடிஸ்ட்களுடன் அது முதலில் ஆரம்பமானது, ஆனால் விரைவிலேயே அந்த நாட்டின் பகுதிகளிலுள்ள எல்லா பிரிவுகளுக்கு மத்தியிலும் அது பொதுவானது. உண்மையில் நாட்டின் முழு மாநிலமும் அதனால் பாதிக்கப்பட்டதைப்போலத் தோன்றியது. வெவ்வேறு மதப்பிரிவுகளுக்கு மிகத்திரளானவர்கள் தங்களுக்குள் இணைந்து, “இதோ இங்கே!” எனச் சிலரும், “அதோ அங்கே!” என மற்றவர்களும் கூக்குரலிட்டு ஜனங்களிடையே பெரிய குழப்பத்தையும் பிரிவையும் அது உண்டுபண்ணியது. சிலர் மெதடிஸ்ட்டின், சிலர் பிரஸ்பிட்டேரியனின், சிலர் பாப்டிஸ்ட்டின் நம்பிக்கைகளுக்காக போரிட்டார்கள்.

6 ஏனெனில் அவர்களது மனமாற்றத்தின்போது, பல்வேறு விசுவாசங்களுக்கு மனமாறிய அவர்கள், தெரிவித்த மாபெரும் அன்பு பொருட்டின்றி, அவர்கள் விரும்புகிறபடி அழைத்து, ஒவ்வொருவரும் மனமாற்றப்படும்படி, இந்த அசாதாரண மத ஆர்வத் தோற்றத்தை ஏற்படுத்தவும், அதிகப்படுத்தவும், அந்தந்த குருமாரின் பெரும் ஆர்வப்படி அவர்கள் எந்தக் குழுவிலும் சேரட்டும். ஆனால் அந்த மனமாறியோர் சிலர் ஒரு பிரிவிலும், பிறர் மறுபிரிவிலும் சேர வரிசையில் நிற்கத்தொடங்கும்போது, குருமார் மற்றும் மனம்மாறியோரின் ஆர்வமாகத் தெரிந்தவை, உண்மையை விட பாசாங்காகத் தோன்றியது. ஏனெனில் பெரும் குழப்பம் மற்றும் கெட்ட உணர்வின் காட்சி தெரிந்தது. குருமார் பிற குருமாருடனும், மனமாறியோர், பிற மனமாறியோருடனும் பிணக்கு கொண்டனர். அதனால் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த நல்லெண்ணம், அவர்களிடம் ஏதாவது இருந்திருந்தாலும்கூட அது வார்த்தைப் போர்களிலும், அபிப்பிராய போட்டிகளிலும் முற்றிலும் தொலைந்துவிட்டது.

7 இந்த சமயத்தில் எனக்கு பதினைந்து வயதாயிருந்தது. என்னுடைய தகப்பனின் குடும்பம் பிரஸ்பிட்டேரியன் நம்பிக்கைக்கு மதமாறி, என்னுடைய தாயார் லூசி, என்னுடைய சகோதரர்கள் ஹைரம், சாமுவேல் ஹாரிசன், என்னுடைய சகோதரி ஸோப்ரோனியா என்ற அவர்கள் நான்குபேரும் அந்த சபையில் சேர்ந்தார்கள்.

8 இந்த பெரும் கிளர்ச்சியின் சமயத்தில் மிகுந்த சிந்தனைக்கும் பெரும் அமைதியின்மைக்கும் என்னுடைய மனம் தள்ளப்பட்டது; ஆனால் என்னுடைய உணர்வுகள் ஆழமானதாகவும் வழக்கமாக நெஞ்சை வருடக்கூடியதாகவும் இருந்தாலும், சந்தர்ப்பம் அனுமதிக்கிற அளவிற்கு அவர்களுடைய ஏராளமான கூட்டங்களில் நான் பங்கேற்றாலும்கூட இன்னமும் நான் இந்த எல்லாப் பிரிவுகளிலுமிருந்தும் ஒதுங்கியே இருந்தேன். காலப்போக்கில் என் பாதிமனதோடு மெதடிஸ்ட் பிரிவில் ஓரளவிற்கு நான் ஈடுபட்டு அவர்களோடு இணைந்திருக்க சிறிது விருப்பத்தை நான் உணர்ந்தேன்; ஆனால் வெவ்வேறு பிரிவுகளுக்குள்ளே குழப்பமும் பூசல்களும் மிகுதியாய் இருந்ததால் யார் சரியானவர்கள் யார் தவறானவர்கள் என்ற ஒரு நிச்சய முடிவுக்கு வரவும் மனுஷர்களோடும் காரியங்களோடும் மிகுந்த பரிச்சயமடையவும் என்னைப்போன்ற ஒரு வாலிபனுக்கு அது சாத்தியமில்லாததாய் இருந்தது.

9 அதிகமான கூக்குரலும் சந்தடியும் இடைவிடாதிருந்தது, சிலநேரங்களில் என்னுடைய மனம் அதிகமாய் கிளர்ச்சியடைந்தது. பாப்டிஸ்டுகளுடனும் மெதடிஸ்டுகளுடனும் எதிராயிருக்க பிரஸ்பிட்டேரியன்கள் தீவிரமாய்த் தீர்மானித்திருந்து, அவர்களின் தவறுகளை நிருபிக்க, குறைந்தது அவர்கள் தவறானவர்களென மக்கள் நினைக்கவைக்க, காரணம் மற்றும் பொய்வாதங்கள் இரண்டின் எல்லா சக்திகளையும் பயன்படுத்தினார்கள். இல்லையென்றால் தங்களுடைய சொந்தக் கருத்தை ஸ்திரப்படுத்தி மற்ற எல்லாவற்றையும் தவறென்று நிரூபிக்க முயற்சிப்பதில் பாப்டிஸ்டுகளும் மெதடிஸ்டுகளும் தங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தில் சரிசமமாக மிகுந்த ஆர்வமுள்ளவர்களாய் இருந்தார்கள்.

10 இந்த வார்த்தை யுத்தத்திற்கும் கருத்துக்களின் சந்தடிக்கும் நடுவில் நான் அடிக்கடி என்னையே கேட்டுக்கொண்டேன்: என்ன செய்யப்படவேண்டும்? இந்த பிரிவுகளில் யாரெல்லாம் சரியானவர்கள் அல்லது மொத்தத்தில் அவர்கள் எல்லோருமே தவறானவர்களா? அவைகளில் எதாவது ஒன்று சரியாயிருந்தால் அது எது, அதை நான் எவ்வாறு அறிந்துகொள்வது?

11 மதவாதிகளின் இந்த பிரிவுகளின் போட்டிகளால் ஏற்படுத்தப்பட்ட மிகுந்த பிரச்சினைகளின்கீழ் நான் போராடிக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் யாக்கோபு முதலாம் அதிகாரம் ஐந்தாவது வசனத்தை நான் படித்துக்கொண்டிருந்தேன், அதில் எழுதப்பட்டிருந்தது: உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

12 இச்சமயத்தில் எனக்கு ஏற்பட்ட வல்லமையைவிட அதிகமானது மனுஷனின் இருதயத்தில், வேதத்தின் எந்த பகுதியாலும் வந்ததில்லை. அது எனது இருதயத்தின் ஒவ்வொரு உணர்விலும் பெரும் சக்தியுடன் நுழைவது போலத் தோன்றியது. எந்த மனுஷனுக்காவது தேவனிடத்திலிருந்து ஞானம் தேவைப்பட்டதானால் அது நான்தான் என அறிந்து அதை மீண்டும் மீண்டும் நான் சிந்தித்தேன். ஏனெனில் எப்படி செயல்படுவது என எனக்குத் தெரியவில்லை. அப்போது நான் பெற்றிருந்த ஞானத்தை விட அதிகம் பெறாவிட்டால் நான் ஒருபோதும் அறியமாட்டேன். ஏனெனில் வேதாகமத்திலிருந்து பதிலைப்பெற்று அக்கேள்வியை சரிப்படுத்தும் நம்பிக்கையை அழிக்கும்படியாக, பல்வேறு பிரிவுகளின் மதபோதகர்கள், வேதத்தின் அதே பகுதியை வேறுவிதமாக புரிந்துகொண்டனர்.

13 இறுதியாக, இருளிலும் குழப்பத்திலும் நானிருக்கவேண்டுமா அல்லது யாக்கோபு வழிகாட்டுகிறதைப்போல அதாவது தேவனிடத்தில் கேட்கவேண்டுமா என்ற தீர்மானத்திற்கு நான் வந்தேன். இறுதியில், ஞானத்தில் குறைவுள்ளவர்களுக்கு அவர் ஞானத்தைக் கொடுத்தால் சம்பூரணமாய் கொடுப்பார், கடிந்து கொள்ளமாட்டார். என்னால் முயற்சிக்க முடியுமென்ற முடிவுக்கு வந்தவனாக, தேவனைக் கேட்பதென்ற தீர்மானத்திற்கு நான் வந்தேன்.

14 ஆகவே தேவனைக் கேட்பதென்ற என்னுடைய தீர்மானத்தின்படி, முயற்சி செய்ய காட்டுக்குள் நான் திரும்பினேன். ஆயிரத்து எண்ணூற்று இருபதாம் வருஷத்தின் வசந்த காலத்தின் ஆரம்பத்தில் ஒரு அழகிய தெளிவான காலையாக அது இருந்தது. அத்தகைய ஒரு முயற்சியை நான் எடுத்தது என் வாழ்நாளிலேயே அதுவே முதல் முறையாயிருந்தது, ஏனெனில் என்னுடைய எல்லா ஆர்வங்களுக்கும் மத்தியிலே சத்தமாக ஜெபிக்க இதுவரை ஒருபோதும் நான் முயற்சிக்கவில்லை.

15 போகவேண்டுமென முன்பே நான் தீர்மானித்த இடத்திற்கு நான் திரும்பி என்னைச் சுற்றிலும் நோக்கி நான் தனியாக இருப்பதைக்கண்டு, நான் முழங்கால்படியிட்டு தேவனிடத்தில் என்னுடைய இருதயத்தின் வாஞ்சைகளை சமர்ப்பிக்க ஆரம்பித்தேன். நான் அப்படிச்செய்ய ஆரம்பித்த உடனேயே முற்றிலுமாக என்னை ஆக்கிரமித்த ஏதோவொரு சக்தியால் உடனே நான் இறுகப்பற்றப்பட்டபோது நான் பேசமுடியாதபடிக்கு என்னுடைய நாக்கைக் கட்டவைக்க அத்தகைய ஒரு ஆச்சரியமான செல்வாக்கு என்மீது வந்தது. அடர்த்தியான இருள் என்னைச் சுற்றிலும் சூழ்ந்து, நான் திடீரென அழிவிற்குள் விதிவசப்பட்டேனோ என ஒரு நேரத்தில் எனக்கு அது தோன்றியது.

16 ஆனால் என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த சத்துருவின் வல்லமையிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள, எனது ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தினேன். நான் விரக்தியில் மூழ்கவும், அழிவுக்கு என்னை நானே விட்டுவிடவும் ஆயத்தமானபோது, ஒரு கற்பனையான அழிவுக்கு அல்ல, ஆனால் நான் யாரிடமும் ஒருபோதும் உணராத, அதிசயமான வல்லமை பெற்றிருந்த, காணக்கூடாத உலகத்தில் உள்ளவனின் உண்மையான வல்லமையுடைய, இந்தப் பெரும் ஆபத்தின் தருணத்தில், சூரிய பிரகாசத்துக்கும் அதிகமான, ஒரு ஒளிக்கற்றை சரியாக என்மீது இறங்குவதை நான் கண்டேன். அது என் மீது விழும் வரை மெதுவாக இறங்கியது.

17 என்னைக் கட்டியிருந்த எதிரியிடமிருந்து விடுவிக்கப்பட்டதாக நான் கண்டதைவிட விரைவாய் இருந்ததாகத் தோன்றியது. ஒளி என்மீது விழுந்தபோது, எல்லா விளக்கத்திற்கும் சவாலான பிரகாசத்திலும் மகிமையிலுமிருந்த, எனக்கு மேலே காற்றில் நின்றுகொண்டிருந்த இரண்டு பிரமுகர்களை நான் கண்டேன். அவர்களில் ஒருவர் என்னுடன் பேசி, என்னைப் பெயர் சொல்லி அழைத்து மற்றவரைச் சுட்டிக்காட்டிச் சொன்னார், இவர் என் நேசகுமாரன் இவருக்குச் செவிகொடு.

18 எதில் சேரவேண்டுமென்பதை அறிந்து கொள்ளும்படியாக பிரிவுகள் எல்லாவற்றிலும் எது சரியானதென அறிந்துகொள்ள, கர்த்தரை விசாரிக்கப்போவது என்னுடைய நோக்கமாயிருந்தது. ஆகவே விரைவிலேயே, பேசமுடியும்படியாக என் நிலைமைக்குத் திரும்பி ஒளியில் எனக்கு மேலே நின்றுகொண்டிருந்த பிரமுகர்களிடம் பிரிவுகள் எல்லாவற்றிலும் எது சரியானது, (ஏனெனில் அந்த நேரத்தில் எல்லாமுமே தவறானதென்பது ஒருபோதும் என் இருதயத்திற்குள் நுழையவில்லை) எதில் நான் சேரவேண்டுமென நான் கேட்டேன்.

19 அவைகளில் எதிலும் நான் சேரவேண்டாமென நான் பதிலளிக்கப்பட்டேன், ஏனெனில் அவைகள் எல்லாமுமே தவறானவைகள்; அவருடைய பார்வையில் அவர்களுடைய மதக்கோட்பாடுகள் எல்லாம் அருவருக்கத்தக்கவை எனவும் அந்த நம்பியவர்கள் யாவரும் மோசமானவர்கள் என்றும் அவர்கள் தங்கள் உதடுகளினால் என்னிடத்தில் சேர்ந்து அவர்களுடைய இருதயமோ எனக்குத்தூரமாய் விலகியிருக்கிறது, தேவதன்மையின் வடிவத்தில் அவர்கள் மனுஷர்களுடைய கோட்பாடுகளையும் கட்டளைகளையும் போதிக்கிறார்கள்; ஆனால் அதிலுள்ள வல்லமையை அவர்கள் மறுக்கிறார்கள் என என்னிடம் பேசிய பிரமுகர்கள் சொன்னார்கள்.

20 அவைகளில் எதிலும் சேருவதிலிருந்து என்னை அவர் தடுத்தார்; மேலும் இந்த நேரத்தில் என்னால் எழுதமுடியாத அநேக பிறகாரியங்களையும் அவர் என்னிடம் சொன்னார். மீண்டும் எனக்கு நினைவு திரும்பியபோது, வானத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டு மல்லாந்து நான் படுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். வெளிச்சம் அகன்றபோது என்னிடம் பெலனில்லாமல் போனது; ஆனால் சீக்கிரமே ஓரளவிற்கு மீண்டும் தெம்பு வந்தபோது நான் வீட்டிற்குப் போனேன். நெருப்பு மூட்டத்திற்கருகில் நான் சாய்ந்தபோது என்ன விஷயமென தாயார் விசாரித்தார். “ஒன்றுமில்லை எல்லாமுமே சரியாகத்தானிருக்கிறது, நான் நன்றாகத்தானிருக்கிறேன்” என நான் பதிலளித்தேன். பின்னர் நான் என் தாயிடம் சொன்னேன், “பிரஸ்பெட்டேரியனிஸம் உண்மையானதல்லவென நானே அறிந்துகொண்டேன்”. அவனுடைய ராஜ்யத்திலே ஒரு தொந்திரவு கொடுப்பவனாகவும் தீங்கிளைப்பவனாகவும் நிரூபிக்க நான் விதிக்கப்பட்டிருக்கிறேன் என என்னுடைய வாழ்நாளின் ஆரம்பகாலத்திலேயே எதிரி அறிந்து கொண்டிருப்பானோ எனத் தோன்றியது; இல்லையெனில் அந்தகாரத்தின் வல்லமைகள் எனக்கெதிராக ஏன் ஒன்று சேரவேண்டும், ஏறக்குறைய என்னுடைய குழந்தைப் பருவத்திலேயே ஏன் எதிர்ப்பும் துன்புறுத்தலும் எனக்கெதிராக எழவேண்டும்

சில பிரசங்கிகளும் பிற மதநம்பிக்கையுடையவர்களும் முதல் தரிசனத்தின் விவரத்தை மறுத்தார்கள் – ஜோசப் ஸ்மித்மீது துன்புறத்தல்கள் குவிந்தன – தரிசனத்தின் உண்மையை அவர் சாட்சியளிக்கிறார். (வசனங்கள் 21–26.)

21 இந்த தரிசனத்தை நான் கண்டு ஒரு சிலநாட்களுக்குப்பின்னர், முன்பு குறிக்கப்பட்ட மதஆர்வங்களில் அதிகமாய் ஈடுபட்டிருந்த மெதடிஸ்டு பிரசங்கிகளில் ஒருவரோடு நான் சேர்ந்திருக்க நேர்ந்து, மதக் காரியங்களைப்பற்றி அவரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது நான் கண்ட தரிசனத்தைப்பற்றி ஒரு விவரத்தை அவருக்குக் கொடுக்க நான் தருணத்தை எடுத்துக்கொண்டேன். அவர் நடந்துகொண்டவிதம் என்னை அதிகமாய் வியப்புக்குள்ளாக்கியது; இந்த நாட்களில் தரிசனங்கள் அல்லது வெளிப்படுத்தல்கள் போன்ற அத்தகைய காரியங்கள் எதுவுமில்லை என்றும் அத்தகைய காரியங்கள் அப்போஸ்தலர்களுடன் நின்றுபோயினவென்றும், இனியும் அவைகள் ஒருபோதுமிருக்காது என்பதாலும் அது எல்லாமுமே பிசாசானவனாலே எனச்சொல்லி என்னுடைய உரையாடலை அவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டது மட்டுமல்லாது அதிகமாய் புறக்கணித்தார்.

22 நான் கதையைச் சொல்வது மத போதகர்களுக்கு மத்தியிலே எனக்கெதிராக தவறான கருத்தின் பெரும் கிளர்ச்சியை உண்டு பண்ணி, தொடர்ந்து அதிகரித்துவந்த பெருந்துன்புறுத்தலுக்குக் காரணமாயிருந்தது; வெறும் பதினான்கு வயதுக்கும் பதினைந்துக்குமிடையில் நான் ஒரு அறியாச் சிறுவனாயிருந்தபோதிலும் உலகத்தில் ஒரு சிறுவனுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாததுபோல வாழ்க்கையில் என்னுடைய சூழ்நிலைகளானது, இருந்தும் எனக்கெதிராக பொதுஜனங்கள் போதுமான அளவுக்கு கிளர்ச்சியடையவும் ஒரு கசப்பான துன்புறுத்தலை உருவாக்கவும் பெரிய மனுஷர்கள் பார்த்துக்கொண்டார்கள், எல்லா பிரிவுகளுக்கு மத்தியிலும் இது பொதுவாயிருந்தது, என்னைத் துன்புறுத்த அவர்கள் ஒன்றுசேர்ந்தார்கள்.

23 அது என்னைக் கடுமையாக சிந்திக்க வைத்தது. ஒரு தெளிவு பெறாத, பதினான்கு வயதுக்கு சற்று அதிகமான வயதுடைய, தன் குறைந்த பராமரிப்புக்கும்கூட சம்பாதிக்க தினசரி உழைக்க வேண்டிய கட்டாயத்திலுள்ள சிறுவன், அன்றைய மிகப் பிரபலமான பிரிவினரின், பெரிய மனிதர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவில் நினைக்கப்படத்தக்கவனாய், அப்போதிலிருந்து அடிக்கடி அவர்களால் மிகக் கசப்பான துன்புறுத்தலும், இகழ்ச்சியும் செய்யப்படுகிற அளவுக்கு செய்தது எனக்கு மிக வியப்பாக இருந்தது. வியப்போ இல்லையோ, அது அப்படித்தான் இருந்தது. அடிக்கடி அது எனக்கு அதிக கவலை அளித்தது.

24 ஆயினும், நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன் என்பது உண்மை. பவுல் ஒரு ஒளியைக் கண்டு ஒரு சத்தத்தை கேட்டு அவனுக்குக் கிடைத்த தரிசனத்தின் விவரத்தைச் சொல்லியபோது அகிரிப்பா ராஜாவுக்கு முன்பாக தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சித்த அவனைப்போல நான் உணர்ந்தேனென அப்போதிலிருந்து நான் நினைத்தேன்; ஆனால் இன்னமும் ஒருசிலர் அவனை நம்பினார்கள், அவன் நேர்மையற்றவன் என சிலர் சொன்னார்கள், அவன் பயித்தியமென மற்றவர்கள் சொன்னார்கள்; அவன் ஏளனம் செய்யப்பட்டு அவதூறு செய்யப்பட்டான். ஆனால் இது எல்லாம் அவனுடைய தரிசனத்தின் உண்மையை அழிக்கவில்லை. அவன் ஒரு தரிசனத்தைக் கண்டான், அவன் கண்டானென அவன் அறிவான், வானத்தின்கீழ் சகல துன்புறுத்தல்களும் அதை வேறுமாதிரியாகச் செய்யமுடியவில்லை; மரணம்வரையிலும் அவர்கள் அவனைத் துன்புறுத்தினாலும்கூட, இருந்தும் அவன் அறிவான், அவன் ஒரு ஒளியைக் கண்டானென்றும் ஒரு சத்தம் அவனுடன் பேசியதை அவன் கேட்டானென்றும் வேறுமாதிரியாக அவனை நினைக்கவைக்கவோ சிந்திக்கவைக்கவோ முழு உலகத்தாலும் முடியாதென்பதையும் அவனுடைய கடைசி மூச்சுவரை அவன் அறிவான்.

25 அப்படித்தான் எனக்குமிருந்தது. உண்மையிலேயே நான் ஒரு ஒளியைக் கண்டேன், அந்த ஒளியின் மத்தியிலே இரண்டு பிரமுகர்களை நான் கண்டு, உண்மையிலேயே அவர்கள் என்னிடம் பேசினார்கள்; நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன் என சொன்னதற்காக நான் வெறுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டாலும்கூட, இருந்தும் அது உண்மை; அவர்கள் என்னைத் துன்புறுத்திக்கொண்டு, அவதூறுசெய்துகொண்டு எல்லாவிதமான தீமையானவற்றை எனக்கெதிராக பேசிக்கொண்டு பொய்யாக அப்படிச் சொல்லிக்கொண்டிருந்தபோது என்னுடைய இருதயத்திற்குள் சொல்ல நான் நடத்தப்பட்டேன்; உண்மையைச் சொல்வதற்கு என்னை ஏன் துன்புறுத்தவேண்டும், உண்மையில் நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன்; தேவனுக்கு முன்பாக நிற்க முடிகிறதற்கு நான் யார் அல்லது உண்மையில் நான் கண்டதை என்னை மறுக்கவைக்க ஏன் உலகம் நினைக்கிறது; ஏனெனில் நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன் அதை நான் அறிவேன், அதை தேவன் அறிவாரென நான் அறிவேன், அதை என்னால் மறுக்க முடியாது, அதைச்செய்ய எனக்கு துணிவுமில்லை, அப்படிச் செய்வதால் தேவனை நான் சினம்கொள்ளச்செய்து ஆக்கினைக்குள்ளாகுவேன் என்பதை நான் அறிந்திருந்தேன்.

26 அவர்கள் யாருடனும் சேர்வது எனது கடமையல்ல எனவும், இனிமேலும் வழிநடத்தப்படுவதுவரை முன்பு நான் இருந்ததுபோல தொடரவேண்டும் எனவும், பரந்து கிடக்கிற உலகத்தைப் பொருத்தவரையில், இப்பொழுது நான் என் மனதைத் திருப்திப்படுத்திக் கொண்டேன். ஞானத்தில் குறைவுள்ள மனுஷன் தேவனிடம் கேட்க வேண்டும், கடிந்து கொள்ளப்படாதபடி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற யாக்கோபின் சாட்சி சத்தியமானது எனவும் நான் கண்டுகொண்டேன்.

ஜோசப் ஸ்மித்துக்கு மரோனி தரிசனமாகிறான் – சகல தேசங்களுக்கும் மத்தியிலே நன்மைக்கும் தீமைக்கும் ஜோசப்பின் பெயர் அறியப்பட்டிருக்கிறது – மார்மன் புஸ்தகத்தைப்பற்றியும், கர்த்தரின் வரப்போகிற நியாயத்தீர்ப்புகளையும் வேதங்களின் அநேக மேற்கோள்களையும் மரோனி அவனுக்குக் கூறுகிறான் – தங்கத் தகடுகள் மறைக்கப்பட்டிருந்த இடம் வெளிப்படுத்தப்பட்டது – தீர்க்கதரிசிக்கு மரோனி தொடர்ந்து அறிவுறுத்துகிறான். (வசனங்கள் 27–54.)

27 நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன் என்பதை நான் தொடர்ந்து உறுதிப்படுத்தியதற்காக மதவாதிகள், மதத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் இரண்டுபேரின் எல்லா பிரிவுகளின் கைகளில் எல்லா நேரத்திலும் பெருந்துன்புறுத்தல்களை அனுபவித்துக்கொண்டு ஆயிரத்து எண்ணூற்று இருபத்து மூன்றாம் வருஷம் செப்டம்பர் இருபத்தொன்றாம் நாள்வரை வாழ்க்கையில் என்னுடைய பொதுவான வேலையை நான் தொடர்ந்தேன்.

28 நான் தரிசனம் கண்ட சமயத்துக்கும், ஆயிரத்து எண்ணூற்று இருபத்து மூன்றாம் வருஷத்துக்கும் இடைவெளியில் வந்த நேரத்தில், அன்றைய மதப்பிரிவுகள் எதிலும் சேர்வதிலிருந்தும் தடைசெய்யப்பட்டதாலும், மிக இளம் வயதிலிருந்ததாலும், என் நண்பர்களாயிருந்து என்னை அன்பாய் நடத்தியிருக்க வேண்டியவர்கள், நான் ஏமாற்றுகிறேன் என எண்ணியிருந்ததாலும், என்னைத் திருத்த சரியானபடியும் பொருத்தமானபடியும் முயற்சித்திருக்க வேண்டியவர்களால் துன்புறுத்தப்பட்டதாலும், நான் எல்லாவிதமான துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டேன். சமுதாயத்தின் சகலவிதமானோருடனும் கலந்து பழகி, முட்டாள்தனமான தவறுகள் செய்து, வாலிபத்தின் பலவீனத்தைக் காட்டி, மனித குணத்தின் தவறுகளையும் செய்ததால், தேவனின் பார்வையில் குற்றமான அநேக சோதனைகளுக்கு வழிநடத்தப்பட்டேன் எனக் கூற மிகவும் வருந்துகிறேன். இதை அறிக்கையிடுவதால் மாபெரும் தீய குற்றவாளி என என்னை யாரும் கருத வேண்டியதில்லை. அப்படிச் செய்யும் எண்ணம் என் குணத்தில் ஒருபோதும் இல்லை. ஆனால் என்னைப்போல தேவனால் அழைக்கப்பட்ட ஒருவனால், கடைபிடிக்கப்பட வேண்டிய நடத்தைக்கு தகுதியில்லாத, பக்தி குறைந்தவன் என்ற குற்றமுடையவன், மேலும் சில சமயங்களில் வேடிக்கையான நண்பர்களுடன் நட்பு வைத்திருந்தேன். ஆனால் என் இளமையைப்பற்றி சிந்திப்பவர்களுக்கும் எனது சொந்த உற்சாகமான மனோபாவத்தை அறிந்தவர்களுக்கும் இது மிகவும் வினோதமாகத் தோன்றாது.

29 இந்தக் காரியங்களின் விளைவாக என்னுடைய பலவீனங்களுக்காகவும் நிறைவின்மைக்காகவும் அடிக்கடி நான் குற்றப்படுத்தப்பட்டதாக உணர்ந்திருக்கிறேன், மேலே குறிப்பிடப்பட்ட செப்டம்பர் இருபத்தோராவது நாளின் சாயங்காலத்தில் இரவில் நான் என் படுக்கைக்குப்போன பின்பு என்னுடைய எல்லாப் பாவங்களுக்காகவும் அறிவின்மைக்காகவும் மன்னிப்பிற்காகவும் சர்வவல்லமையுள்ள தேவனிடம் ஜெபம் மற்றும் வேண்டுதலுக்காக நான் முயற்சி செய்யவும், என்னுடைய நிலைமையை நான் அறியத்தக்கதாக எனக்கு ஒரு வெளிப்படுதலுக்காக அவருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தேன்; ஏனெனில் முன்பு எனக்குக் கிடைத்ததைப்போல ஒரு தெய்வீக வெளிப்படுத்தலைப் பெற எனக்கு முழு நம்பிக்கையிருந்தது.

30 இவ்விதமாக தேவனிடம் ஜெபிக்கும் செயலில் நானிருந்தபோது, நண்பகலின் ஒளியைவிட அதிகரிக்கும்வரை தொடர்ந்த ஒரு ஒளி என் அறையில் தோன்றுவதைக் கண்டேன்; அவருடைய கால்கள் தரையைத் தொடாதிருந்ததால் காற்றில் நின்றுகொண்டிருந்த ஒரு நபர் அப்போது உடனேயே என் படுக்கைக்கு அருகில் தோன்றினார்.

31 மிக அற்புதமான வெண்மையான தளர்ந்த ஆடையிலிருந்தார். பூமியில் நான் எப்போதும் பார்த்திருக்கிறதற்கும் அப்பால் இது வெண்மையாயிருந்தது அல்லது பூமியிலுள்ள எதுவும் இவ்வளவு அதிக வெண்மையாகவும் பிரகாசமாகவும் தோன்றும்படியாக செய்யப்பட்டிருக்க முடியுமாவென நான் நம்பவில்லை. இடுப்பிற்கு சிறிதுமேலே அவருடைய கைகளும், மணிக்கட்டுக்கு கொஞ்சம் மேலே கரங்களும் வெறுமையாயிருந்தன, அப்படியே கணுக்கால்களுக்கு சிறிதுமேலே அவருடைய பாதமும் கால்களும்கூட வெறுமையாயிருந்தன. அவருடைய தலையும் கழுத்தும்கூட வெறுமையாயிருந்தன. அவருடைய மார்பை நான் பார்க்கும்படியாக அது திறந்திருந்ததால் இந்த ஆடையைத்தவிர வேறெந்த உடையுமில்லாததை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.

32 அவருடைய ஆடை மிகுந்த வெண்மையாயிருந்தது மாத்திரமல்ல, அவருடைய முழுசரீரமும் விளக்கத்திற்கும் அப்பால் மகிமையாயிருந்தது, அவருடைய முகம் உண்மையில் மின்னலைப் போன்றிருந்தது. அறை மிகுந்த ஒளியாயிருந்தது, ஆனால் அவருடைய சரீரத்தைச் சுற்றியிருந்ததைப்போல மிக பிரகாசமாய் இருக்கவில்லை. முதலில் நான் அவரை நோக்கிப் பார்த்தபோது நான் பயந்தேன்; ஆனால் விரைவிலேயே பயம் என்னைவிட்டுப்போனது.

33 அவர் என்னைப் பெயர் சொல்லி அழைத்து, தேவபிரசன்னத்திலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட அவர் ஒரு தேவதூதனெனவும் அவருடைய பெயர் மரோனியெனவும், நான் செய்யும்படியாக தேவனிடம் ஒரு பணியிருக்கிறதென்றும் சகல ஜாதிகளுக்கும், கோத்திரங்களுக்கும், பாஷைக்காரர்களுக்கும் மத்தியில் நன்மையாயும் தீமையாயும் என்னுடைய பெயரிருக்கும் அல்லது சகல ஜனங்கள் மத்தியிலும் நன்மையாயும் தீமையாயும் பேசப்படுமென அவர் என்னிடம் சொன்னார்.

34 இந்தக் கண்டத்திலுள்ள முந்தைய குடிகளைப்பற்றியும் அவர்கள் எங்கிருந்து பரவினார்களென்ற ஆதாரத்தைப்பற்றியும் ஒரு குறிப்பைக் கொடுக்கிற தங்கத் தகடுகளில் எழுதப்பட்ட ஒரு புஸ்தகம் வைக்கப்பட்டிருக்கிறதென அவர் சொன்னார். பூர்வகுடிகளுக்கு இரட்சகரால் கொடுக்கப்பட்டதைப்போல நித்திய சுவிசேஷத்தின் பரிபூரணம் அதில் அடங்கியிருக்கிறதென்றும் அவர் சொன்னார்;

35 மேலும், அங்கே வெள்ளியிலான வளைந்த சட்டத்தினுள் இரண்டு கற்களிருந்தன, மார் பதக்கத்துடன் கட்டப்பட்ட, தகடுகளுடனே புதைக்கப்பட்ட இக்கற்கள் ஊரீம் மற்றும் தும்மீம் என்றழைக்கப்பட்டன; இக்கற்களை வைத்திருந்து உபயோகப்படுத்துவோர் பூர்வ காலங்களில் அல்லது முந்தைய காலங்களில் ஞானதிருஷ்டிக்காரர் என அழைக்கப்பட்டனர். இந்த புஸ்தகத்தை மொழிபெயர்க்க உதவியாக இருக்கும் நோக்கத்திற்காக தேவன் அவைகளை ஆயத்தப்படுத்தினார் என்றும் சொன்னான்.

36 இவற்றைச் சொன்னபின்பு எனக்கு அவர் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை மேற்கோள் காட்டத் தொடங்கினார். அவர் முதலில் மல்கியா மூன்றாம் அதிகாரத்தின் ஒரு பகுதியைக் குறிப்பிடத் தொடங்கினார். நமது வேதாகமத்திலிருந்து சிறிது வித்தியாசமாக அதே தீர்க்கதரிசனத்தை நான்காம் அல்லது கடைசி அதிகாரத்திலிருந்து மேற்கோள் காட்டினார். நமது புஸ்தகங்களில் இருப்பதுபோல, முதல் வசனத்தைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, இவ்விதமாய்க் குறிப்பிட்டார்.

37 இதோ, சூளையைப் போல எரிகிற நாள் வரும், அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள், ஏனெனில் வரப்போகிற அவர்கள் அவர்களைச் சுட்டெரிப்பார்கள், அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

38 மீண்டும், இவ்விதமாக ஐந்தாவது வசனத்தை அவர் மேற்கோள் காட்டினார்: இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே எலியா தீர்க்கதரிசியின் கையில் ஆசாரியத்துவத்தை நான் உங்களுக்கு வெளிப்படுத்துவேன்.

39 அடுத்த வசனத்தையும் வித்தியாசமாக அவர் மேற்கோள் காட்டினார்: பிதாக்களுக்குச் செய்யப்பட்ட வாக்குத்தத்தங்களை பிள்ளைகளின் இருதயங்களில் அவன் நடுவான், பிள்ளைகளின் இருதயங்கள் தங்கள் பிதாக்களிடத்திற்கு திரும்பும். இல்லையெனில், அவரது வருகையில் பூமி முழுவதும் நிச்சயமாய்ப் பாழாக்கப்படும்.

40 இவைகளுக்கும் கூடுதலாக, ஏசாயாவின் பதினோராம் அதிகாரத்தையும் அவர் மேற்கோள் காட்டி அது நிறைவேறவிருப்பதாகச் சொன்னார். அப்போஸ்தலர் நடபடிகளின் மூன்றாவது அதிகாரத்தின் இருபத்திரண்டு மற்றும் இருபத்தி மூன்றாவது வசனத்தையும் நமது புதிய ஏற்பாட்டில் துல்லியமாக அவைகளிருப்பதைப்போலவே அவர் மேற்கோள்காட்டினார். அந்த தீர்க்கதரிசி கிறிஸ்துவே என்று சொன்னார். ஆனால் அவருடைய சத்தத்தைக் கேளாதவர்கள் ஜனங்களின் மத்தியிலிருந்து அறுப்புண்டு போகும் அந்த நாள் இன்னமும் வரவில்லை, ஆனால் சீக்கிரமே வரும்.

41 யோவேல் இரண்டாவது அதிகாரம் இருபத்தெட்டாவது வசனத்திலிருந்து கடைசிவரையும் அவர் மேற்கோள் காட்டினார். இது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை, ஆனால் சீக்கிரமே நிறைவேற்றப்படுமென்றும் அவர் சொன்னார். புறஜாதியாரின் நிறைவேறுதல் சீக்கிரமே வருமென்றும் கூடுதலாக அவர் சொன்னார். வேதத்திலிருந்து அநேக பிற பகுதிகளையும் அவர் மேற்கோள்காட்டி, இங்கே குறிப்பிடப்படாத அநேக விளக்கங்களையும் அவர் வழங்கினார்.

42 அவைகள் பெறப்படவேண்டிய நேரம் இன்னமும் நிறைவேறாததால் அவர் எனக்குக் கூறிய அந்த தகடுகளை நான் பெற்றபோது, அவற்றை அல்லது மார்புக்கவசத்தோடுள்ள ஊரீம் தும்மீமையும் யாரிடமும் நான் காட்டக்கூடாதெனவும், அவைகளைக் காட்டவேண்டுமென நான் கட்டளையிடப்பட்டவர்களுக்கு மட்டுமே காட்டவேண்டுமென மீண்டும் என்னிடம் அவர் கூறினார்; நான் அப்படிச் செய்தால் நான் அழிக்கப்படவேண்டும். தகடுகளைப்பற்றி அவர் என்னிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, தகடுகள் வைக்கப்பட்டிருக்கிற இடத்தை நான் பார்க்கும் படியாகவும் மீண்டும் அங்கு வரும்போது மிகத்தெளிவாகவும் குறிப்பாகவும் இடத்தை நான் அறிந்து கொள்ளும்படியாக என் மனதிற்கு தரிசனம் திறக்கப்பட்டது.

43 இந்த உரையாடலுக்குப் பின் உடனேயே அறையிலுள்ள ஒளி என்னுடன் பேசிக்கொண்டிருந்த நபரைச் சுற்றி கூடிவர ஆரம்பித்ததை நான் கண்டேன், அவரைச் சுற்றிலும் தவிர மீண்டும் அறை இருளாக விடப்படும்வரை அது தொடர்ந்தது; அது அப்படியிருப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது சடிதியில் வானம்வரை குழாயைப்போல ஒன்று திறக்கப்பட்டு அவர் முற்றிலுமாக மறையும்வரைக்கும் அதில் அவர் ஏறிப்போனார், இந்த வானத்து ஒளி அதன் தோற்றத்தைக் கொடுப்பதற்கு முன் போன்று அறை விடப்பட்டது.

44 காட்சியின் சிறப்புத்தன்மையில் வியப்புற்றும், இந்த அசாதாரணமான தூதரால் எனக்குக் கூறப்பட்டவற்றில் அதிகமாய் ஆச்சரியப்பட்டுக்கொண்டும் நான் படுத்திருந்தேன்; என்னுடைய தியானத்தின் நடுவிலே நானிருந்தபோது திடீரென என்னுடைய அறை வெளிச்சமாக ஆரம்பித்ததை நான் கண்டேன், அப்படியிருக்கும்போது ஒரு கணநேரத்தில் வானத்து தூதர் மீண்டும் என் படுக்கையருகில் வந்தார்.

45 எந்த சிறிய மாற்றமும் இல்லாமல் அவருடைய முதல் சந்திப்பிலே அவர் செய்ததைப்போலவே அதே காரியங்களை மீண்டும் சொல்ல அவர் ஆரம்பித்தார். செய்து முடித்து, பஞ்சத்தாலும், பட்டயத்தாலும், கொடிய நோயாலும் பெரிய பாழ்க்கடிப்புகள் பூமியில் வருகிற மகா நியாயத்தீர்ப்புகளையும், இந்த தலைமுறையில் பூமியின்மேல் இந்த கொடிய நியாயத்தீர்ப்புகள் வருமென்றும் அவர் எனக்கு அறிவித்தார். இந்தக் காரியங்களைச் சொன்னபின்பு முன்பு செய்ததைப்போல மீண்டும் அவர் ஏறிச் சென்றார்.

46 உறக்கம் என் கண்களிலிருந்து வெளியேறுகிற அளவுக்கு இந்த நேரத்தில் என்னுடைய மனதில் மிகுந்த ஆழமான உணர்வுகள் எழுந்தன, நான் பார்த்தவற்றாலும் கேட்டவற்றாலும் ஆச்சரியத்தில் கவலையோடு நான் படுத்திருந்தேன். ஆனால், மீண்டும் அதே தூதரை என் படுக்கையருகில் நான் கண்டு முன்பைப்போலவே அதே காரியங்களை சொல்வதை அல்லது மீண்டும் என்னிடம் திரும்பக் கூறுவதை நான் கேட்டேன் என்பது எனது ஆச்சரியம். ஆஸ்திமானாகும் நோக்கத்திற்காக தகடுகளை எடுக்க சாத்தான் என்னை சோதிக்கலாமென்ற (என்னுடைய தகப்பனின் குடும்பத்தின் பற்றாக்குறையின் சூழ்நிலைகளின் விளைவாக) கூடுதலாக எனக்கு ஒரு எச்சரிக்கையைக் கொடுத்தார். தேவனை மகிமைப்படுத்த மட்டுமே தவிர தகடுகளைப் பெறுவதில் என் மனதில் வேறெந்த நோக்கமுமிருக்கக்கூடாது, அவருடைய ராஜ்யத்தைக் கட்டுவதைத்தவிர வேறெந்த நோக்கமும் என்னை செல்வாக்கடையச் செய்யக்கூடாதெனச் சொல்லி அவர் என்னை தடைசெய்தார்; இல்லையெனில் என்னால் அவைகளைப் பெறமுடியாது.

47 அவருடைய மூன்றாவது சந்திப்புக்குப்பின் முன்பைப்போல மீண்டும் அவர் வானத்திற்கு ஏறிப்போனார், நான் இப்போதுதான் அனுபவித்த வியப்புகளின் நிமித்தம் மீண்டும் நான் சிந்திக்க விடப்பட்டேன்; மூன்றாவது முறையாக வானத்து தூதர் என்னிடமிருந்து ஏறக்குறைய ஏறிப்போன உடனேயே கோழி கூவினது, எங்களுடைய நேர்காணல் அந்த இரவு முழுவதுமிருந்திருக்கவேண்டும், பகல் நெருங்கிக் கொண்டிருந்ததை நான் கண்டேன்.

48 என்னுடைய படுக்கையைவிட்டு எழுந்த பின்பு சீக்கிரத்திலேயே அந்த நாளுக்கான அவசியமான வேலைகளுக்கு நான் சென்றேன்; ஆனால் மற்ற நேரங்களைப்போல வேலை செய்ய நான் முயற்சித்தபோது என்னுடைய பலம் அதிகமாக பெலவீனமாகி முற்றிலுமாக முடியாத நிலைக்கு விடப்பட்டதைக் கண்டேன். என்னோடு வேலை செய்துகொண்டிருந்த என்னுடைய தகப்பன் என்னிடம் ஏதோ தவறு இருப்பதாகக் கண்டுபிடித்து என்னை வீட்டிற்குப் போகும்படி சொன்னார். வீட்டிற்குப் போகும் எண்ணத்தோடு நான் புறப்பட்டேன் ஆனால் நாங்களிருந்த வயலின் வேலியைத் தாண்ட நான் முயற்சித்தபோது என்னுடைய பெலம் முற்றிலுமாக என்னைவிட்டுப்போய் முடியாதவனாக தரையில் விழுந்து சிறிதுநேரம் எதைப்பற்றியும் நினைவிழந்தவனாக இருந்தேன்.

49 பெயர் சொல்லி என்னை அழைத்த ஒரு சத்தம் என்னோடு பேசியது, நான் நினைத்துப் பார்க்க முடிகிற முதல் காரியம். நான் நிமிர்ந்து பார்த்து, முன்பு போலவே ஒளியால் சூழப்பட்டு என் தலைக்குமேலாக அதே தூதன் நின்று கொண்டிருப்பதை நான் கண்டேன். பின்னர் முந்தைய இரவில் அவர் என்னிடம் கூறிய எல்லாவற்றையும் மீண்டும் என்னிடம் கூறினார்; மேலும் என்னுடைய தகப்பனிடம் சென்று தரிசனத்தைப் பற்றியும் நான் பெற்ற கட்டளைகளைப்பற்றியும் அவரிடம் கூறும்படி எனக்குக் கட்டளையிட்டார்.

50 நான் கீழ்ப்படிந்தேன், வயலில் என்னுடைய தகப்பனிடத்திற்கு நான் சென்று முழுக் காரியத்தையும் அவரிடத்தில் சொன்னேன். இது தேவனிடமிருந்தென்றும், போய் தூதரால் கட்டளையிடப்பட்டதைப்போல செய் என்றும் அவர் எனக்குப் பதிலளித்தார். நான் வயலைவிட்டு தகடுகள் வைக்கப்பட்டிருக்கிறதென தூதர் எனக்குச் சொன்ன இடத்திற்குப் போனேன். நான் அக்கறையாயிருந்த தரிசனத்தின் பெருமதிப்பினால் அங்கே போன உடனேயே நான் அந்த இடத்தை அறிந்தேன்.

51 நியூயார்க்கிலுள்ள ஓன்டாரியோ மாகாணத்தின் மான்செஸ்டர் கிராமத்திற்கு அருகில் கணிசமான அளவிலும் அக்கம்பக்கத்திலிருந்ததை விட மிக உயரமாகவும் ஒரு குன்று நின்றுகொண்டிருக்கிறது. இந்த குன்றின் மேற்குப் பக்கத்தில் உச்சிக்கு அருகிலேயே ஒரு கல் பெட்டியிலே கணிசமான அளவிலிருந்த ஒரு கல்லின்கீழ் தகடுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த கல்லின் நடுப்பகுதி தரைக்கு மேலே காணும்படியாக மேல் பகுதியின் மத்தியைச் சுற்றி தடிப்பாகவும் ஓரங்களைச்சுற்றி மெல்லியதாகவுமிருந்தது, ஆனால் ஓரம் முழுவதும் மண்ணால் மூடப்படிருந்தது.

52 மண்ணைத்தோண்டி ஒரு நெம்புகோலை எடுத்து கல்லின் ஓரத்தின் கீழ் வைத்து ஒரு சிறிய நெம்புதலில் அதைத் தூக்கினேன். நான் உள்ளே பார்த்தேன், உண்மையில் தூதர் சொன்னதைப்போல தகடுகளையும், ஊரீம் தும்மீமையும் மார்பு கவசத்தையும் நான் கண்டேன். அவைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டி ஒரு வகை சிமென்டால் ஒட்டப்பட்ட கற்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. பெட்டியின் அடிப்பகுதியில் பெட்டியின் குறுக்காக இரண்டு கற்கள் வைக்கப்பட்டு இந்த கற்களின்மேல் தகடுகளும் பிற காரியங்களும் அவைகளோடு வைக்கப்பட்டிருந்தன.

53 அவைகளை வெளியே எடுக்க நான் முயற்சித்தேன், ஆனால் தூதுவனால் தடுக்கப்பட்டு அவைகளை வெளியே கொண்டுவர நேரம் இன்னும் வரவில்லை, அந்த நேரத்திலிருந்து நான்கு வருஷங்கள்வரை அது வருவதுமில்லையென மீண்டும் அறிவிக்கப்பட்டேன், ஆனால் அந்த நேரத்திலிருந்து சரியாக ஒரு வருஷத்தில் அதே இடத்திற்கு நான் வரவேண்டுமெனவும், அவர் அங்கே என்னை சந்திப்பதாகவும், தகடுகளைப் பெறுகிற நேரம்வரும்மட்டும் தொடர்ந்து நான் அப்படிச் செய்யவேண்டுமென்றும் அவர் என்னிடம் கூறினார்.

54 நான் கட்டளையிடப்பட்டதன்படி ஒவ்வொரு வருஷத்தின் முடிவிலும் நான் சென்று, ஒவ்வொரு முறையும் அதே தூதரை அங்கே நான் கண்டேன், மேலும் கர்த்தர் என்ன செய்யப் போகிறாரென்பதற்கும் கடைசி நாட்களில் அவருடைய ராஜ்யம் எந்த வகையில் நடத்தப்படுமென்பதற்கும் தொடர்புடையதற்கு எங்களுடைய ஒவ்வொரு உரையாடலின்போதும் அறிவுரையையும் அறிவுக் கூர்மையையும் பெற்றேன்.

எம்மா ஹேலை ஜோசப் ஸ்மித் திருமணம் செய்கிறார் – மரோனியிடமிருந்து தங்கத் தகடுகளை அவர் பெறுகிறார், சில எழுத்துக்களை மொழிபெயர்க்கிறார் – எழுத்துக்களையும் மொழிபெயர்ப்பையும் பேராசிரியர் ஆந்தனுக்கு மார்டின் ஹாரிஸ் காட்ட “ஒரு முத்திரையிடப்பட்ட புஸ்தகத்தை என்னால் படிக்கமுடியாது” (வசனங்கள் 55–65) என்று அவர் சொல்கிறார்.

55 என்னுடைய தகப்பனின் உலகப்பிரகாரமான சூழ்நிலைகள் மிகவும் எளிமையாயிருந்ததால், நாங்கள் எங்கள் கைகளால் உழைக்கவேண்டிய அவசியத்தின் கீழிருந்தோம், சந்தர்ப்பம் கிடைப்பதைப்போல நாளின் வேலைக்கு அமர்த்தப்பட்டோம். சிலநாட்களில் நாங்கள் வீட்டிலிருந்தோம், சிலசமயங்களில் வெளியிலிருந்தோம், தொடர்ந்து வேலை செய்ததினிமித்தம் வசதியான ஒரு பராமரிப்பு கிடைத்தது.

56 1823 ஆம் வருஷத்தில் என்னுடைய மூத்த சகோதரன் ஆல்வினின் மரணத்தால் என்னுடைய தகப்பனின் குடும்பம் ஒரு பெருந்துயரை சந்தித்தது. 1825, அக்டோபர் மாதத்தில் நியூயார்க் மாநிலத்தின் செனான்கோ மாகாணத்தில் வசித்துவந்த ஜோசியா ஸ்டோல் என்ற பெயருடைய ஒரு முதிய நல்ல மனுஷன் என்னை வேலைக்கு அமர்த்தினார். பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள சஸ்கொயினா மாகாணத்தின் ஹார்மனியில் ஸ்பெயின்காரர்களால் திறக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளி சுரங்கத்தைப்பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தார். என்னை வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பு முடிந்தால் சுரங்கத்தைக் கண்டுபிடிக்கும்படியாக தோண்டிக்கொண்டிருந்தார். அவரோடு வாழ்வதற்கு நான் சென்ற பின்பு வெள்ளி சுரங்கத்திற்காக தோண்ட மற்ற தொழிலாளிகளுடன் என்னையும் அழைத்துச் சென்றார், எங்களுடைய முயற்சியில் வெற்றிகாணமுடியாமல் அங்கே ஏறக்குறைய ஒரு மாதம் நான் தொடர்ந்து வேலை செய்தேன், இறுதியாக அதை தோண்டுவதை நிறுத்த அந்த முதிய நல்ல மனுஷனை வழிக்குக் கொண்டுவந்தேன். அப்போதிலிருந்து நான் பணம்தோண்டுபவனாக இருந்தேன் என்ற கதை நடைமுறையில் வந்தது.

57 இவ்விதமாக நான் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தபோது, அந்த இடத்திலுள்ள திரு. ஐசக் ஹேலுடன் தங்கவேண்டியதிருந்தது; அங்குதான் என்னுடைய மனைவியான (அவருடைய மகள்) எம்மா ஹேலை நான் முதலில் பார்த்தேன். திரு.ஸ்டோலிடம் இன்னமும் வேலை செய்துகொண்டிருந்தபோது 18 ஜனுவரி 1827ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.

58 நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன் என்பதை நான் தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொண்டிருந்ததால் இன்னமும் துன்புறுத்துதல் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது, நாங்கள் திருமணம் செய்துகொள்வதற்கு என்னுடைய மனைவியின் தகப்பனின் குடும்பம் அதிகமாய் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆகவே அவளை வேறெங்காவது அழைத்துக் கொண்டுபோவதின் அவசியத்தின்கீழ் நானிருந்தேன்; ஆகவே நாங்கள் சென்று நியூயார்க்கிலுள்ள செனான்கோ மாகாணத்தின் தெற்கு பெயின்பிரிட்ஜில், ஸ்கொயர் டார்பில் வீட்டில் திருமணம் செய்துகொண்டோம். என்னுடைய திருமணத்திற்குப் பின்பு உடனேயே திரு. ஸ்டோலைவிட்டு என்னுடைய தகப்பனிடத்தில் சென்று அந்த பருவகாலத்தில் அவருடன் விவசாயம் செய்தேன்.

59 தகடுகளையும், ஊரீம் மற்றும் தும்மீம் மற்றும் மார்புக் கவசத்தையும் பெற்றுக்கொள்ளும் நேரம் சீக்கிரத்திலேயே வந்தது. ஆயிரத்து எண்ணூற்று இருபத்தேழாவது வருஷம், செப்டம்பர் இருபத்திரண்டாவது நாளில் அவைகள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு மற்றொரு வருஷத்தின் முடிவில் வழக்கம்போல போயிருந்தபோது அதே வானத்து தூதர் இந்தக் கட்டளைகளோடு அவைகளை என்னிடம் கொடுத்தார். அவைகளுக்கு நான் பொறுப்புள்ளவனாக இருக்கவேண்டும்; கவனக்குறைவால் அல்லது எதாவது என்னுடைய அலட்சியத்தினாலோ அவைகளை நான் போகவிட்டால் நான் அறுப்புண்டு போகவேண்டும்; ஆனால் தூதனானவர் அவைகளைக் கேட்கும்வரை அவைகளைப் பாதுகாக்க என்னுடைய எல்லா முயற்சிகளையும் நான் பயன்படுத்தி, அவைகள் பாதுகாக்கப்படவேண்டும்.

60 அவைகளைப் பத்திரமாக வைத்திருக்க அத்தகைய கட்டாயமான கட்டளைகளை நான் ஏன் பெற்றேன் என்றும் நான் செய்யவேண்டியதை நான் செய்துமுடித்தபோது அவைகளை அவர் கேட்பாரென்று தூதர் சொன்னதன் காரணத்தையும் விரைவிலேயே நான் கண்டுபிடித்தேன். ஏனெனில் என்னிடம் அவைகளிருக்கின்றன என்றறியப்பட்டவுடனேயே அவைகளை என்னிடமிருந்து எடுத்துப்போக அதிக ஆற்றலான முயற்சிகள் பயன்படுத்தப்பட்டன. கண்டுபிடிக்கமுடிகிற ஒவ்வொரு தந்திரமும் அந்த நோக்கத்திற்காகவே முயற்சி எடுக்கப்பட்டது. முன்பைவிட துன்புறுத்தல் அதிகக் கொடூரமாகவும் கடுமையாகவுமிருந்தது, மேலும் கூடுமானால் அவைகளை என்னிடமிருந்து எடுத்துப்போக கலகக் கும்பல் தொடர்ந்து விழிப்புடன் இருந்தார்கள். ஆனால் என்னிடம் எதிர்பார்க்கப்பட்டதை நான் முடிக்கும்வரை தேவனின் ஞானத்தால் அவைகள் என் கைகளில் பாதுகாப்பாயிருந்தன. ஏற்பாடுகளின்படி அவைகளை தூதர் கேட்டபோது நான் அவைகளை அவரிடம் கொடுத்தேன். ஆயிரத்து எண்ணூற்று முப்பத்தெட்டாவது வருஷம் மே இரண்டாம் நாளான இந்த நாள்வரை அவருடைய பொறுப்பில் அவரிடம் அவைகளிருக்கின்றன.

61 ஆயினும் கிளர்ச்சி இன்னமும் தொடர்ந்தது, மேலும் என்னுடைய தகப்பனின் குடும்பத்தைப்பற்றியும் என்னைப்பற்றியும் பொய்யானவைகளைப் பரப்புவதில் அவளுடைய ஆயிரம் நாவுகளால் வதந்தி எப்போதுமே பயன்படுத்தப்பட்டது. அவைகளின் ஆயிரத்தில் ஒரு பகுதியை நான் சொல்லப்போனால் அது அதிக பக்கங்களை நிரப்பும். ஆயினும் துன்புறுத்தல் பொறுக்கமுடியாத அளவிற்குப்போய் மான்செஸ்டரை விட்டுப்போகிற அவசியத்தின் கீழ் நானிருந்ததால், பென்சில்வேனியாவிலுள்ள சஸ்கொயினா மாகாணத்திற்கு என்னுடைய மனைவியுடன் போய்க் கொண்டிருந்தேன். மிக ஏழ்மையாயிருந்ததாலும், எங்கள்மீது துன்புறுத்துதல் மிகப் பலமாக இருந்ததாலும் எந்த சாத்தியக் கூறுமில்லாமல் வேறுவழியேயில்லாமல் புறப்பட ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது, எங்களுடைய உபத்திரவங்களுக்கு நடுவிலே மார்டின் ஹாரிஸ் என்ற பெயருடைய ஒரு நல்ல மனுஷனான ஒரு நண்பனை நாங்கள் கண்டோம், அவர் எங்களிடத்தில் வந்து, எங்களுடைய பயணத்திற்கு உதவியாக ஐம்பது டாலர்களை என்னிடம் கொடுத்தார். நியூயார்க் மாநிலத்தில் வெயின் மாகாணத்தின் பல்மைரா பட்டணத்தில் வசித்துவந்த திரு.ஹாரிஸ் மதிப்புமிக்க விவசாயியாயிருந்தார்.

62 இந்த ஏற்றகாலத்தின் உதவியால் என்னுடைய இலக்கின் இடமான பென்சில்வேனியாவை என்னால் அடையமுடிந்தது. நான் அங்குபோய் சேர்ந்த உடனேயே தகடுகளிலுள்ள எழுத்துக்களை பிரதி எடுக்க ஆரம்பித்தேன். அவைகளின் ஒரு கணிசமான அளவை நான் பிரதி எடுத்து, ஊரீம் மற்றும் தும்மீம் உதவியால், என்னுடைய மனைவியின் தகப்பன் வீட்டிற்கு வந்து சேர்ந்த டிசம்பர் மாதத்திற்கும் பின்வந்த பிப்ருவரிக்குமிடையில் அவைகளில் சிலவற்றை நான் மொழிபெயர்த்தேன்.

63 பிப்ருவரி மாதத்தின் ஒரு நேரத்தில் முன்பு குறிப்பிடப்பட்ட திரு.மார்டின் ஹாரிஸ் எங்களுடைய இடத்திற்கு வந்து தகடுகளில் நான் வரைந்திருந்த எழுத்துக்களைப் பெற்றுக்கொண்டு அவைகளோடு நியூயார்க் பட்டணத்திற்குப் புறப்பட்டார். அவருக்கும் எழுத்துக்களுக்கும் சம்பந்தப்பட்ட வகையில் என்ன நடந்ததென்பதை அவர் திரும்பிவந்து என்னிடம் சொன்னதைப்போல சூழ்நிலைகளைப்பற்றிய அவருடைய சொந்தக் குறிப்பை நான் குறிப்பிடுகிறேன், அவைகள் பின்வருகிறது,

64 “நியூயார்க் பட்டணத்திற்கு நான் சென்று மொழிபெயர்க்கப்பட்ட எழுத்துக்களையும் அதனுடன் மொழிபெயர்க்கப்பட்டவைகளையும் அவருடைய இலக்கிய சாதனைகளுக்காகப் பாராட்டப்பட்ட ஒரு நல்ல மனுஷனான பேராசிரியர் சார்லஸ் ஆந்தனுக்கு சமர்ப்பித்தேன். எகிப்திய பாஷையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு முன்பு அவர் பார்த்த எதையும்விட மொழிபெயர்ப்பு மிகச் சரியாக இருந்ததாக பேராசிரியர் ஆந்தன் சொன்னார். பின்னர் இன்னமும் மொழிபெயர்க்கப்படாதவைகளை அவரிடம் நான் காட்டினேன், அவைகள் எகிப்திய, சால்டீயக், அசீரிய, அரேபிய மொழிகளென்று அவர் சொன்னார், மேலும் அவைகள் உண்மையான எழுத்துக்களென்றும் அவர் சொன்னார். அவைகள் உண்மையான எழுத்துக்களென்றும் அவைகள் மொழிபெயர்க்கப்பட்ட அத்தகைய மொழிபெயர்ப்புகள் சரியானதென்றும் பல்மைராவின் ஜனங்களுக்கு சான்றளித்து எனக்கு அவர் ஒரு சான்றிதழைக் கொடுத்தார். சான்றிதழை நான் வாங்கி என்னுடைய சட்டைப்பையில் போட்டுக்கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்டபோது திரு. ஆந்தன் என்னை திரும்ப அழைத்து, அவைகளை அவன் கண்டுபிடித்த இடத்தில் அந்த தங்கத் தகடுகளிருந்தன என்பதை எவ்வாறு அந்த வாலிபன் கண்டான் என என்னைக் கேட்டார். ஒரு தேவதூதன் அதை அவனுக்கு வெளிப்படுத்தினார் என நான் பதிலளித்தேன்.

65 “பின்னர் அவர் என்னிடம் கேட்டார், ‘அந்த சான்றிதழை நான் பார்க்கட்டும்’. அதன்படி என்னுடைய சட்டைப் பையிலிருந்து அதை வெளியே எடுத்து அவரிடத்தில் கொடுத்தேன், அதை அவர் எடுத்தபோது, தூதர்கள் பணிவிடை செய்தல் என்ற அத்தகைய காரியம் இப்போது எதுவுமில்லை என்றும் தகடுகளை நான் அவரிடத்தில் கொண்டு போனால் அவர் அவைகளை மொழிபெயர்ப்பாரென்றும் சொல்லி, அதைத் துண்டுகளாக கிழித்துப்போட்டார். தகடுகளின் பகுதி முத்திரை செய்யப்பட்டிருப்பதாகவும் அவைகளைக் கொண்டுவர நான் தடைசெய்யப்பட்டிருக்கிறேன் எனவும் நான் தகவலளித்தேன். ‘முத்திரையிடப்பட்ட புஸ்தகத்தை என்னால் படிக்கமுடியாதென’ அவர் பதிலளித்தார். அவரிடத்திலிருந்து, எழுத்துக்களையும் மொழிபெயர்ப்பையும்பற்றி பேராசிரியர் ஆந்தன் சொன்னவற்றை ஏற்றுக்கொண்ட டாக்டர் மிச்சலிடம் நான் சென்றேன்”.

· · · · · · ·

மார்மன் புஸ்தகத்தை மொழிபெயர்ப்பதில் ஆலிவர் கௌட்ரி எழுத்தராக பணிபுரிகிறார் – யோவான் ஸ்நானனிடமிருந்து ஆரோனிய ஆசாரியத்துவத்தை ஜோசப்பும் ஆலிவரும் பெறுகிறார்கள் – அவர்கள் ஞானஸ்நானம்பெற்று, நியமிக்கப்பட்டு தீர்க்கதரிசன ஆவியைப்பெறுகிறார்கள். (வசனங்கள் 66–75.)

66 ஏப்ரல் 1829ன் 5வது நாளில், ஆலிவர் கௌட்ரி என் வீட்டிற்கு வந்தார், அந்த நேரம்வரை அவரை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. என்னுடைய தகப்பன் வசித்துவந்த பக்கத்து ஊரில் கல்வி கற்கும் பள்ளிக்கூடமிருந்ததாகவும் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை அனுப்பியவர்களில் என்னுடைய தகப்பன் ஒருவராயிருந்தாரெனவும், அவருடைய வீட்டில் சிறிதுகாலம் தங்கும்படியாக அவர் சென்றதாகவும், அங்கிருந்தபோது தகடுகளை நான் பெற்ற சூழ்நிலையைப்பற்றி எனது குடும்பத்தினர் அவருக்குச் சொன்னதாகவும் அதன்படி என்னிடம் விசாரிக்கும்படியாக வந்திருப்பதாகவும் என்னிடம் அவர் சொன்னார்.

67 திரு. கௌட்ரி வந்துசேர்ந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர் (ஏப்ரல் 7ஆம் நாளாயிருந்தது) மார்மன் புஸ்தகத்தை நான் மொழிபெயர்க்க ஆரம்பித்தேன், எனக்காக அவர் எழுத ஆரம்பித்தார்.

· · · · · · ·

68 நாங்கள் இன்னமும் மொழிபெயர்ப்பு பணியைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தோம், தொடர்ந்துவந்த மாதத்தில் (மே, 1829), தகடுகளின் மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்ததை நாங்கள் கண்டு பாவங்களின் மன்னிப்பிற்காக ஞானஸ்நானத்திற்கு சம்பந்தப்பட்டதைப்பற்றி ஜெபிக்கவும், கர்த்தரிடத்தில் விசாரிக்கவும் ஒரு குறிப்பிட்ட நாளில் காட்டிற்குள் நாங்கள் சென்றோம். இவ்விதமாக ஜெபித்துக் கொண்டும் கர்த்தரைப் பணிந்து கொண்டும் நாங்கள் ஈடுபட்டிருந்தபோது பிரகாசமான மேகத்தில் வானத்திலிருந்து ஒரு தூதர் இறங்கிவந்து அவருடைய கைகளை எங்கள் மேல் வைத்து பின்வருமாறு சொல்லி எங்களை நியமனம் செய்தார்:

69 என் சக ஊழியக்காரர்களாகிய உங்கள்மேல், மேசியாவின் நாமத்தில், தேவதூதர்களின் பணிவிடை, மனந்திரும்புதலின் சுவிசேஷம் மற்றும் பாவங்களின் மீட்பிற்காக முழுக்கு ஞானஸ்நானம் ஆகியவற்றின் திறவுகோல்களைக் கொண்டிருக்கிற, ஆரோனின் ஆசாரியத்துவத்தை நான் அருளுகிறேன். லேவியின் குமாரர்கள் மீண்டும் நீதியிலே காணிக்கையைக் கர்த்தருக்குப் படைக்குமட்டும் இது மீண்டும் ஒருபோதும் பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

70 பரிசுத்த ஆவியின் வரத்திற்காக கைகள் வைக்கப்படுதலுக்கான வல்லமை இந்த ஆரோனின் ஆசாரியத்துவத்திற்கு இருக்காது, ஆனால் இப்போதிலிருந்து இது எங்கள்மேல் அருளப்படவேண்டுமென்று அவர் சொன்னார்; போய் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படியாக எங்களுக்கு அவர் கட்டளையிட்டார். ஆலிவர் கௌட்ரிக்கு நான் ஞானஸ்நானம் கொடுக்கவேண்டுமென்றும், பின்னர் அவன் எனக்கு ஞானஸ்நானம் கொடுக்கவேண்டுமென்றும் எங்களுக்கு வழிகாட்டுதல்களைக் கொடுத்தார்.

71 அதன்படியே நாங்கள் போய் ஞானஸ்நானம் பெற்றோம். முதலில் நான் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன், பின்னர் அவர் எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தார், அதன்பின்னர் அவருடைய தலையின்மேல் என்னுடைய கைகளை வைத்து ஆரோனிய ஆசாரியத்துவத்திற்கு அவரை நியமனம் செய்தேன், பின்னர் அவர் அவருடைய கைகளை என்மேல் வைத்து அதே ஆசாரியத்துவத்திற்கு என்னை நியமனம் செய்தார், ஏனெனில் இப்படியாக நாங்கள் கட்டளையிடப்பட்டோம்.*

72 இந்த சந்தர்ப்பத்தில் எங்களை சந்தித்து இந்த ஆசாரியத்துவத்தை எங்கள்மேல் அருளிய தூதர் அவருடைய பெயர் யோவான் என்றார், அதுவே புதிய ஏற்பாட்டில் யோவான் ஸ்நானன் என்றழைக்கப்படுகிறது, ஏற்றகாலத்தில் எங்கள்மேல் அருளப்படப்போகிற ஆசாரியத்துவமான மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் திறவுகோல்களைத் தரித்திருந்த பேதுரு, யாக்கோபு, யோவான் வழிகாட்டுதலின்கீழ் அவர் செயல்பட்டதாகவும், சபையின் முதல் மூப்பராக நானும் அவர் (ஆலிவர் கௌட்ரி) இரண்டாவது மூப்பராகவும் அழைக்கப்படவேண்டுமென்றும், அவர் சொன்னார். இந்த தூதரின் கைகளால் நாங்கள் நியமனம் செய்யப்பட்டு, ஞானஸ்நானம் பெற்ற அது மே 1829, பதினைந்தாவது நாளாயிருந்தது.

73 நாங்கள் ஞானஸ்நானம் பெற்றபின் தண்ணீருக்கு வெளியே வந்த உடனேயே நமது பரலோக பிதாவிடமிருந்து மகத்தான மகிமையான ஆசீர்வாதங்களை நாங்கள் அனுபவித்தோம். ஆலிவர் கௌட்ரிக்கு நான் ஞானஸ்நானம் கொடுத்த மாத்திரத்தில் பரிசுத்த ஆவியானவர் அவர்மேல் இறங்கி, அவர் எழுந்து நின்று விரைவிலேயே வரப்போகிற அநேகக் காரியங்களை தீர்க்கதரிசனமுரைத்தார். மீண்டும் அவரால் நான் ஞானஸ்நானம் பெற்ற உடனேயே நானும் தீர்க்கதரிசன ஆவியைப்பெற்று, எழுந்து நின்றபோது இந்த சபையின் எழுச்சியைக் குறித்தும் சபைக்கு சம்பந்தப்பட்ட பிற அநேகக் காரியங்களைக் குறித்தும், மனுபுத்திரர்களின் இந்த தலைமுறையைக் குறித்தும் நான் தீர்க்கதரிசனமுரைத்தேன். பரிசுத்த ஆவியால் நாங்கள் நிரப்பப்பட்டு நமது இரட்சிப்பின் தேவனில் களிகூர்ந்தோம்.

74 எங்களுடைய மனங்கள் தெளிவுபெற்று, நாங்கள் புரிந்துகொள்ளும்படிக்கு வேதங்கள் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட ஆரம்பமாயின, மற்றும் அவைகளின் உண்மையான அர்த்தமும் அதிக மர்மமான பகுதிகளின் உள்நோக்கமும் முன்பு ஒருபோதும் எங்களால் அடைந்திர முடியாத அல்லது முன்பு எப்போதுமே நினைத்துப்பார்க்க முடியாத ஒரு வகையில் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டன. அதேசமயத்தில் ஏற்கனவே அக்கம்பக்கத்தில் தலைதூக்கியிருந்த துன்புறுத்தலின் நிலையில் ஆசாரியத்துவத்தைப் பெற்றுக்கொண்ட நாங்கள், ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட சூழ்நிலைகளை இரகசியமாகக் காத்துக்கொள்ள வற்புறுத்தப்பட்டோம்.

75 அவ்வப்போது கும்பலாகக் கூடியவர்களால் நாங்கள் பயமுறுத்தப்பட்டோம், இதுவும்கூட மத நம்பிக்கையாளர்களாலேயே. என்னிடம் மிகவும் நட்பாக இருந்த, கலகக்காரர்களுக்கு எதிர்ப்பாயிருந்த, தடையில்லாமல் மொழிபெயர்ப்புப் பணி தொடர நான் அனுமதிக்கப்பட வேண்டுமென விரும்பிய என்னுடைய மனைவியின் குடும்பத்தினரின் செல்வாக்கால் மட்டுமே எங்களை கும்பலாகக் கூடியவர்களின் நோக்கங்களை எதிர்க்கமுடிந்தது. ஆகவே அவர்களால் இயன்ற அளவில் எல்லா சட்டவிரோத செயல்களிலிருந்தும் எங்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க வாக்களித்தார்கள்.

  • இந்த நிகழ்ச்சிகளை ஆலிவர் கௌட்ரி இப்படியாக விவரிக்கிறார்: “இந்த உள்ளத்தின் மிகச் சிறந்த நன்றியுணர்வை எழச்செய்து, பரலோகத்தின் உணர்த்துதலால் கட்டளையிடப்பட்ட குரலின் சத்தத்தின்கீழ் அமர்ந்த, இந்த நாட்களை ஒருபோதும் மறக்கமுடியாது. ஊரீம் தும்மீமுடன் அல்லது நேபியர்கள் சொன்னதைப்போல ‘மார்மன் புஸ்தகம்’ என அழைக்கப்பட்ட வரலாறு அல்லது பதிவேட்டின் ‘பாஷை வியாக்கியானம்’ செய்பவற்றைக்கொண்டு அவர் மொழிபெயர்த்தபோது, ஒவ்வொரு நாளும் தடையில்லாமல் அவருடைய வாயிலிருந்து வந்தவற்றை நான் தொடர்ந்து எழுதினேன்.

    “ஒரு சில வார்த்தைகளில் சொல்வதானால், ஒருமுறை நேசிக்கப்பட்டு, பரலோகத்தால் ஆதாயம் பெற்ற ஜனத்தைப்பற்றி மார்மனாலும் அவனது உண்மையுள்ள குமாரனாகிய மரோனியாலும் கொடுக்கப்பட்ட ருசிகரமான விவரம், தற்போதைய வடிவத்தை மிஞ்சும். ஆகவே நான் இதை வருங்காலத்துக்கு தள்ளிவைப்பேன். நான் முன்னுரையில் சொன்னது போல சபையின் தோற்றத்துக்கு உடனடித் தொடர்புடைய சம்பவங்களுக்கு நேரடியாக நான் கடந்து செல்வேன். குருட்டுத் தன்மையானவர்களின் வெறுப்புக்கும், மாயக்காரர்களின் சதிக்கும் மத்தியில், முன்னே அடியெடுத்துவைத்த சில ஆயிரக்கணக்கானவர்களுக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைத் தழுவியவர்களுக்கும் விருந்தாகத் தோன்றும்.

    “தங்களுடைய ஆழ்ந்த சிந்தனையின் உணர்வுகளில் இரட்சகரின் வாயிலிருந்து நேபியர்களுக்கு கொடுக்கப்பட்ட, அவருடைய சபையை மனுஷர்கள் கட்டவேண்டிய துல்லியமான முறையில், குறிப்பாக இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் ஒரு நல்மனசாட்சிக்கு பதிலளிக்க, தண்ணீர் கல்லறையில் அடக்கம்பண்ணப்படுவதில் இருதயத்தின் வாஞ்சையைக் காட்டும் சிலாக்கியத்தை விரும்பாமல் மனுஷர்களுக்கு மத்தியிலே பழக்கத்திலேயிருக்கிற எல்லா வடிவங்கள் மற்றும் நடைமுறைகள்மீது ஒரு நிச்சயமில்லாத புரட்டு பரவியிருக்கும்போது வழிகாட்டுதல்களை மொழிபெயர்க்கவும் எழுதவும் எந்த மனுஷர்களாலும் முடியாது. ’

    “இந்தக் கண்டத்தின்மேல் யாக்கோபுவின் சந்ததியின் மீதியானோருக்கு இரட்சகரின் ஊழியத்தைப்பற்றிக் கொடுக்கப்பட்ட குறிப்பை எழுதியபின்பு, இருள் பூமியைமூடி ஜனங்களின் மனங்களை காரிருள் மூடுமென்று தீர்க்கதரிசி சொன்னதைப்போல காண்பதற்கு அது எளிதாயிருந்தது. மேலாக சிந்தித்ததில், மதத்தைப்பற்றிய மிகுந்த சண்டைக்கும் கூச்சலுக்குமிடையில் அது காண்பதற்கு மிக எளிதாயிருந்தது, சுவிசேஷத்தின் நியமங்களை நிர்வகிக்க தேவனிடமிருந்து எவருக்குமே அதிகாரமில்லாதிருந்தது. ஏனெனில், அவருடைய சாட்சி, தீர்க்கதரிசன ஆவியைவிட குறைந்ததாயில்லாதபோது உடனடியான வெளிப்படுத்தல்களால் அவருடைய மதம் அடிப்படையாயிருந்து, கட்டப்பட்டு ஆதரிக்கப்பட்டபோது, உலகத்தின் சகல காலங்களிலும் பூமியில் அவருக்கு ஜனங்களிருந்தபோது வெளிப்படுத்தல்களை மறுக்கிற மனுஷர்களுக்கு கிறிஸ்துவின் நாமத்தில் நிர்வகிக்க அதிகாரமிருக்குமா என்ற கேள்வி கேட்கப்படலாம். இந்த உண்மைகள் புதைக்கப்பட்டு மனுஷர்களின் முகத்தில் பிரகாசிக்கப்பட ஒருமுறை அனுமதிக்கப்பட்டால் அவர்களுடைய தந்திரம் அபாயத்திலிருக்கிற மனுஷர்களால் கவனமாக மூடப்பட்டால் அவைகள் இனியும் நமக்குக் கிடைக்காது. எழுந்து ஞானஸ்நானம் பெறு என்ற கட்டளை கொடுக்கப்பட மட்டுமே நாங்கள் காத்திருந்தோம்.’

    “இது புரிந்துகொள்ளப்படுவதற்கு முன்பாக இது நீண்ட காலமாக விரும்பப்படவில்லை. மனுஷர்கள் வசிக்குமிடத்திலிருந்து ஒதுங்கி, ஒரு ஆழ்ந்த அக்கறையுடன் நாங்கள் ஜெபித்தபின்பு தாழ்மையானவனின் உறுதியான ஜெபத்திற்கு எப்போதுமே பதிலளிக்க விருப்பமாயிருக்கிற இரக்கத்தில் ஐசுவரியவரான கர்த்தர், அவருடைய சித்தத்தை நமக்கு வெளிப்படுத்த விருப்பமாயிருக்கிறார். நித்தியத்தின் நடுவிலிருந்து மீட்பரின் சத்தம் சமாதானத்தை நம்மிடம் பேசியது, திடீரென திரை விலகியபோது மகிமையின் வஸ்திரம் தரித்தவராக தேவதூதன் கீழிறங்கிவந்து செய்திக்காக ஆர்வமுடன் நோக்கியிருந்தவர்களுக்கு மனந்திரும்புதலின் சுவிசேஷத்தின் திறவுகோல்களை வழங்கினான். என்ன ஒரு சந்தோஷம்! என்ன ஒரு அற்புதம்! என்ன ஒரு ஆச்சரியம்! உலகம் இன்னலிலும் கலக்கத்திலுமிருக்கும்போது, கோடிக்கணக்கானோர் குருடனைப்போல சுவரைத்தடவிக்கொண்டிருக்கும்போது, மனுஷர்கள் யாவரும் நிச்சயமின்மையிலிருக்கும்போது, ஒரு பொதுஜனங்களாக பிரகாசிக்கிற நாளில், எங்களுடைய கண்கள் கண்டன, எங்களுடைய காதுகள் கேட்டன, ஆம், மே மாத சூரியஒளியின் மின்னுதலுக்கும் மேலாக, பின்னர் இயற்கையின் முகத்தின்மேல் அதன் பிரகாசம் பொழிந்தது! பின்னர் அவருடைய சத்தம் மிருதுவாயிருந்தாலும் மையத்திற்கு கிழித்துக்கொண்டுபோனது, நானே உங்களுடைய சக ஊழியக்காரனென்ற அவருடைய வார்த்தைகள் சகல பயத்தையும் துரத்தியது. நாங்கள் கேட்டோம், நாங்கள் உற்றுநோக்கினோம், நாங்கள் ஆச்சரியப்பட்டோம்! அது மகிமையிலிருந்து வந்த ஒரு தூதனின் சத்தமாயிருந்தது! அது உன்னதத்திலிருந்து ஒரு செய்தியாயிருந்தது, அவருடைய அன்பு எங்களுடைய ஆத்துமாக்களை உயிரூட்டி, சர்வவல்லவரின் தரிசனத்தில் நாங்கள் சூழப்பட்டு நாங்கள் கேட்டு களிகூர்ந்தோம்! சந்தேகத்திற்கு எங்கே இடமிருக்கிறது, எங்குமில்லை, நிச்சயமின்மை ஓடிவிட்டது, கட்டளையும் ஏமாற்றமும் என்றென்றைக்குமாக ஓடியபோது இனியும் எழமுடியாமல் சந்தேகம் மூழ்கிப்போனது!

    “ஆனால் அன்புள்ள சகோதரரே, சிந்தியுங்கள், ஒருகணம் கூடுதலாக சிந்தியுங்கள், அவர் சொன்னதைப்போல அவருடைய கையினால் பரிசுத்த ஆசாரியத்துவத்தை நாங்கள் பெற்றபோது ‘என்னுடைய சக ஊழியக்காரர்களாகிய உங்கள்மேல் மேசியாவின் நாமத்தில், லேவியின் புத்திரர் நீதியாய் கர்த்தருக்கு ஒரு காணிக்கையைச் செலுத்தும் வரைக்கும் இந்த ஆசாரியத்துவத்தையும் இந்த அதிகாரத்தையும் நான் அருளுகிறேன்! என்று சொன்னபோது என்ன ஒரு சந்தோஷம் எங்களுடைய இருதயங்களை நிரப்பியது, என்ன ஒரு ஆச்சரியத்தில் நாங்கள் தலைகுனிந்தோம் (ஏனெனில் அத்தகைய ஒரு ஆசீர்வாதத்திற்காக யார் முழங்காற்படியிட்டிருக்கமாட்டார்கள்?)

    “இந்த இருதயத்தின் உணர்வுகளையோ அல்லது மகத்துவமான அழகையும் இந்த சந்தர்ப்பத்தில் நம்மைச் சுற்றியிருக்கிற மகிமையையோ உங்கள்மேல் சாயம்பூச நான் முயற்சிக்கமாட்டேன், ஆனால் காலத்தின் சாதுர்யத்துடன் பூமியோ அல்லது மனுஷர்களோ இந்த பரிசுத்த நபரைப்போல ஆர்வமூட்டுகிறதும், உண்ர்ச்சியூட்டுகிறதுமான வகையில் பாஷைக்கு உடுத்த ஆரம்பிக்க முடியாது என நான் சொல்லும்போது நீங்கள் என்னை நம்புவீர்கள். இல்லை; அல்லது இந்த பூமிக்கும் சந்தோஷத்தைக் கொடுக்க, சமாதானத்தை அருள அல்லது பரிசுத்த ஆவியின் வல்லமையால் அவைகள் வழங்கப்பட்டதைப்போல ஒவ்வொரு வாக்கியத்திலும் அடங்கியிருக்கிற ஞானத்தைப் புரிந்துகொள்ளவும் வல்லமையில்லை, மனுஷன் தன் சகமனுஷனை ஏமாற்றலாம், மோசடி மோசடியைத் தொடரலாம், சமீபகாலம்வரை முட்டாளையும் கல்வியில்லாதோரையும் தன்வசப்படுத்த துன்மார்க்கப் புத்திரர் ஒருவருக்கு வல்லமையிருக்கலாம், ஆனால் கட்டளை அநேகரை போஷிக்கிறது, பொய்மையின் கனி அதன் சுழற்சியில் கல்லறைக்கு தலைசுற்றலுள்ளவரைக் கொண்டுபோகிறது; ஆனால் அவருடைய விரலின் ஒரு தொடுதலில், ஆம், மேல் உலகத்திலிருந்து மகிமையின் ஒரு ஒளிக்கதிர் அல்லது நித்தியத்தின் நெஞ்சியிலிருந்து இரட்சகரின் வாயிலிருந்து ஒரு வார்த்தை முக்கியத்துவமில்லாத ஒன்றுக்கு அடித்துக்கொண்டுபோய் மனதிலிருந்து என்றென்றைக்குமாய் அதை அழித்துவிடுகிறது. ஒரு தூதனின் சமுகத்தில் நாங்களிருந்தோம் என்ற உறுதியிலும், இயேசுவின் சத்தத்தை நாங்கள் கேட்டோமென்ற நிச்சயத்திலும் தேவனின் சித்தத்தால் கட்டளையிடப்பட்ட ஒரு தூய்மையான நபரிடமிருந்து அது பொழிந்ததைப்போல அசுத்தமில்லாத சத்தியமும் எனக்கு பழைய விளக்கம்; நான் ஜீவித்திருக்க அனுமதிக்கப்பட்டபோது இரட்சகரின் நன்மையின் இந்த வெளிப்படுத்துதலை ஆச்சரியத்துடனும் நன்றியறிதலுடனும் எப்போதுமே நான் நோக்குகிறேன்; பரிபூரணம் வாசம்செய்கிற, பாவம் ஒருபோதும் வராத அந்த வாசஸ்தலங்களில் ஒருபோதும் நின்றுவிடாத அந்த நாளில் வாசம்செய்ய நான் நம்புகிறேன்.” Messenger and Advocate, பாகம் 1 (அக்டோபர் 1834), பக்கம் 14–16.