வேதங்கள்
உங்கள் தனிப்பட்ட வேதப் படிப்பை மேம்படுத்த ஆலோசனைகள்


“உங்கள் தனிப்பட்ட வேதப் படிப்பை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள்,” வேதப் படிப்பு ஆலோசனைகள் (2021)

“உங்கள் தனிப்பட்ட வேதப் படிப்பை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள்,” வேதப் படிப்பு ஆலோசனைகள்

படம்
பெண், வேதங்களைப் படித்தல்

உங்கள் தனிப்பட்ட வேதப் படிப்பை மேம்படுத்த ஆலோசனைகள்

வேதங்களில் தேவ வார்த்தையைப்பற்றிய உங்கள் படிப்பை மேம்படுத்த இங்கே சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உணர்த்துதலுக்காக ஜெபிக்கவும்

தேவ வார்த்தை வேதங்களில் அடங்கியிருக்கின்றன. நீங்கள் அவற்றைப் படிக்கும்போது, உங்கள் பரலோக பிதாவிடம் அவருடைய வழிகாட்டுதலைக் கேட்டு, அவற்றைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ அவருடைய ஆவியைப் பெறுங்கள்.

இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களைத் தேடவும்

எல்லா காரியங்களும் கிறிஸ்துவைக் குறித்து சாட்சி சொல்கின்றன என வேதங்கள், நமக்குப் போதிக்கின்றன (2 நேபி 11:4; மோசே 6:63 பார்க்கவும்), ஆகவே வேதங்களிலுள்ள நிகழ்ச்சிகள், கதைகள் மற்றும் போதனைகளிலிருந்து அவரைத் தேடவும். இரட்சகர் மற்றும் அவரை எப்படி பின்பற்றுவதைப்பற்றி போதிக்கிற வசனங்களைக் குறிக்க அல்லது குறியிடுவதைக் கருத்தில் கொள்ளவும்.

உணர்த்தும் வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் தேடவும்.

உங்களுக்காகவே குறிப்பாக அவைகள் எழுதப்பட்டது போலவே வேதங்களிலுள்ள குறிப்பிட்ட வார்த்தைகளும் சொற்றொடர்களும் உங்களைக் கவருவதை நீங்கள் காணலாம். தனிப்பட்ட விதமாக பொருத்தமானதாக அவை உணர்த்தலாம், உங்களை உணர்த்துவதாகவும், தூண்டுவதாயும் இருக்கலாம். அவற்றை உங்கள் வேதங்களில் அடையாளப்படுத்துவது அல்லது ஒரு படிப்பு கையேட்டில் எழுதுவதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

சுவிசேஷ சத்தியங்களைத் தேடவும்

சில சமயங்களில் சுவிசேஷ சத்தியங்கள் (அடிக்கடி கோட்பாடு அல்லது கொள்கைகள் என அழைக்கப்படுகின்றன) நேரடியாக கூறப்பட்டுள்ளன, மற்றும் சில சமயங்களில் ஒரு எடுத்துக்காட்டு அல்லது ஒரு கதை மூலம் குறிப்பிடப்படுகின்றன. “இந்த வசனங்களில் என்னசுவிசேஷ சத்தியங்கள் போதிக்கப்படுகின்றன?” என உங்களை நீங்களே கேளுங்கள்.

பரிசுத்த ஆவிக்குச் செவிகொடுங்கள்

நீங்கள் எதை வாசிக்கிறீர்களோ அதற்கு சம்பந்தம் இல்லாததாக இருந்தாலும், உங்கள் சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் கவனம் செலுத்துங்கள். அந்த எண்ணங்களே, நீங்கள் கற்றுக்கொள்ளவும் உணரவும் வேண்டும் என்று உங்கள் பரலோக பிதா விரும்புகின்ற காரியங்களாகக் கூட இருக்கலாம்.

படம்
பெண், வேதங்களை படிக்கிறாள் 2

வேதங்களை உங்கள் வாழ்வுக்கு ஒப்பிடுங்கள்

நீங்கள் வாசிக்கிற கதைகளும் போதனைகளும் உங்கள் வாழ்க்கைக்கு எப்படி பொருந்துகின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவும். உதாரணமாக, “நான் வாசிப்பதற்கு ஒத்த என்ன அனுபவங்களை நான் பெற்றேன்?” அல்லது “இந்த வேத வசனங்களிலுள்ளவரின் எடுத்துக்காட்டை நான் எப்படி பின்பற்ற முடியும்?” என நீங்கள் உங்களையே கேட்கலாம்.

கேள்விகள் கேட்கவும்.

சுவிசேஷத்தைப்பற்றிய கேள்விகளைக் கேட்பது, எதைப் படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு உதவும். வேதங்களை நீங்கள் படிக்கும்போது, உங்கள் மனதில் கேள்விகளும் எழக்கூடும். நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பதற்கு அல்லது பொதுவாக உங்கள் வாழ்க்கைக்கு இந்தக் கேள்விகள் தொடர்புடையதாக இருக்கலாம். நீங்கள் வேதங்களைத் தொடர்ந்து படிக்கும்போது இந்தக் கேள்விகளைக் குறித்து சிந்தித்து பதில்களைத் தேடுங்கள். உங்கள் படிப்புக்குப் பிறகு, தேவன் இன்னும் உங்களை என்ன கற்க வைத்திருப்பார் என்று கேளுங்கள், மேலும் வரும் மணிநேரங்கள் மற்றும் நாட்களில் பதில்களைக் கவனியுங்கள்.

வேதப் படிப்பு உதவிகளைப் பயன்படுத்தவும்

நீங்கள் வாசிக்கும் வசனங்களைப்பற்றிய கூடுதல் உள்ளுணர்வுகளைப் பெற, அடிக்குறிப்புகளைப் பயன்படுத்துங்கள், Topical Guide, the Bible Dictionary, the Guide to the Scriptures (scriptures.ChurchofJesusChrist.org), மேலும் பிற படிப்பு உதவிகள்.

வேத வசனங்களின் உள்ளடக்கத்தை கருத்தில் கொள்ளவும்

உள்ளடக்கம் அல்லது வசனத்தின் சூழலை அல்லது பின்னணியை கருத்தில் கொண்டால் ஒரு வசனத்தைப்பற்றிய அர்த்தமுள்ள உள்ளுணர்வுகளை நீங்கள் காணமுடியும். உதாரணமாக, ஜனங்களின் பின்னணியையும் நம்பிக்கையையும்பற்றி அறிந்திருந்து ஒரு தீர்க்கதரிசி பேசுவது, அவனுடைய செய்திகளின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.

படம்
வேதங்களை ஒரு மனிதன் படித்தல்

உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் பதிவு செய்யவும்

நீங்கள் படிக்கும்போது, வருகிற எண்ணங்களை பதிவு செய்ய அநேக வழிகள் இருக்கின்றன. உதாரணமாக, ஒரு அர்த்தமிக்க வார்த்தை அல்லது சொற்றொடரை நீங்கள் குறியிட்டு, உங்கள் வேதங்களில் ஒரு குறிப்பாக உங்கள் சிந்தனைகளைப் பதிவு செய்யலாம். நீங்கள் பெறுகிற உள்ளுணர்வுகள், உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் அடங்கிய குறிப்பிதழை நீங்கள் வைத்திருக்கலாம். அல்லது உங்கள் படிப்பைத் தொடங்குவதற்கு முன் நீங்கள் கேட்ட கேள்வியையும், அதற்குப் பின் நீங்கள் வழிநடத்தப்பட்ட பதில்களையும் பதிவு செய்யலாம்.

பிற்கால தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் வார்த்தைகளைப் படிக்கவும்

வேதங்களில் நீங்கள் காணும் கொள்கைகளைப்பற்றி பிற்கால தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் போதித்திருப்பனபற்றி வாசிக்கவும். அவர்களது செய்திகள் “General Conference,” “Magazines,” மற்றும் பிற சுவிசேஷக நூலக சேர்க்கைகளில் கிடைக்கின்றன.

கதைகளை வாசியுங்கள்

வேதங்களில் உள்ள கதைகளை வாசித்து, அவற்றின் உள்ளடக்கத்தை (நேரம், இடம், செய்தியாளர் மற்றும் பார்வையாளர்கள்) புரிந்துகொள்ள முயலவும். குறிப்பாக வேதத்துடன் குறைவான பரிச்சயமுள்ள பிள்ளைகள் மற்றும் உறுப்பினர்களுக்கு சித்தரிக்கப்பட்ட வேதக் கதைகள் இதற்கு ஒரு சிறந்த ஆதாரமாக இருக்கின்றன.

உள்ளுணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும்

உங்கள் தனிப்பட்ட படிப்பிலிருந்து கிடைக்கும் உள்ளுணர்வுகளை கலந்துரையாடுவது மற்றவர்களுக்கு போதிப்பதற்கான சிறந்த முறை மட்டுமன்றி, அது நீங்கள் வாசித்ததைப்பற்றிய உங்கள் புரிந்துகொள்ளுதலையும் பெலப்படுத்த உதவுகிறது.

நீங்கள் கற்பதன்படி வாழுங்கள்

வேதப் படிப்பு நம்மை ஊக்குவிப்பது மட்டுமன்றி நம் வாழும் வழியையும் மாற்ற நம்மை நடத்துகிறதாயிருக்க வேண்டும். நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் செய்ய வேண்டுமென பரிசுத்த ஆவி தூண்டுவதற்கு செவிகொடுத்து, பின்னர் அந்த தூண்டுதல்களின்படி செயல்பட ஒப்புக் கொடுக்கவும்.