வேதங்கள்
மார்மன் புஸ்தகத்தின் தலைப்புப் பக்கம்


மார்மன் புஸ்தகம்

நேபியின் தகடுகளிலிருந்து எடுக்கப்பட்ட
தகடுகளின் மீது
மார்மனின் கரத்தால்
எழுதப்பட்ட விவரம்

ஆதலால் இது நேபியின் ஜனங்கள் மற்றும் லாமானியர்களின் குறிப்பின் சுருக்கமாக இருக்கிறது – இஸ்ரவேல் வீட்டாரில் மீதியானவர்களாகிய லாமானியருக்கும் யூதருக்கும், புறஜாதியாருக்கும் எழுதப்பட்டது – கட்டளையின் வாயிலாகவும், தீர்க்கதரிசன ஆவி மற்றும் வெளிப்பாட்டின்படியேயும் எழுதப்பட்டவையாகும் – அவைகள் அழிக்கப்படமுடியாதபடி எழுதப்பட்டு, முத்திரையிடப்பட்டு, கர்த்தருக்குள் மறைத்து வைக்கப்பட்டன – தேவனுடைய வரத்தாலும், வல்லமையினாலும் மொழிபெயர்க்கப்படுவதற்கு அதிலிருந்து வெளியே வர புறஜாதியார் வாயிலாக ஏற்ற காலத்தில் வெளியே வரும்படிக்கு, மரோனியின் கரத்தால் முத்திரிக்கப்பட்டு, கர்த்தருக்குள்ளாக மறைத்து வைக்கப்பட்டது. அதிலிருக்கும் மொழிபெயர்ப்போ தேவனுடைய வரம்.

பரலோகத்துக்குச் செல்ல கோபுரத்தைக் கட்டிக்கொண்டிருந்தபொழுது, ஜனங்களின் பாஷையை கர்த்தர் தாறுமாறாக்கிய சமயத்தில், சிதறடிக்கப்பட்ட யாரேதின் ஜனங்களின் குறிப்பாகிய ஏத்தேரின் புஸ்தகத்திலிருந்து எடுத்த சுருக்கம் – இது கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்கு எவ்விதமான மகத்தான காரியங்களைச் செய்தார் என்பதையும், இஸ்ரவேல் வீட்டாரில் மீதியானோர் கர்த்தருடைய உடன்படிக்கைகளையும் அவர்கள் என்றென்றைக்குமாய் தள்ளப்படவில்லை என்பதையும் அறிந்துகொள்ளக் காட்டுவதாயிருக்கிறது. எல்லா தேசங்களுக்கும் தம்மை வெளியரங்கமாக்குகிற இயேசுதான் கிறிஸ்துவாகிய நித்திய தேவன் என்பதை யூதருக்கும் புறஜாதியாருக்கும் அறிவுறுத்துகிறதுமாயிருக்கிறது, இப்பொழுதும் இதில் குறைகள் இருப்பின் அவைகள் மனுஷர்களின் தவறுகளாகவே இருக்கின்றன. ஆகையால் நீங்கள் கிறிஸ்துவின் நியாயாசனத்தின் முன் கறையற்றவர்களாகக் காணும்படி, தேவனுடைய காரியங்களைக் கண்டனம் பண்ணாதிருப்பீர்களாக.

தகடுகளிலிருந்து ஆங்கிலத்தில் மூலமொழிபெயர்ப்பு
ஜோசப் ஸ்மித் இளையவரால் செய்யப்பட்டது.