வேதங்கள்
எட்டு சாட்சிகளின் சாட்சியம்


எட்டு சாட்சிகளின் சாட்சியம்

இந்த மொழிபெயர்ப்பைப் பெறும் எல்லா தேசத்தாரும், இனத்தாரும், பாஷைக்காரரும், ஜனங்களும் இதனால் அறிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், இந்தப் பணியின் மொழிபெயர்ப்பாளரான ஜோசப் ஸ்மித் இளையவர் என்பவர், சொல்லப்பட்டிருக்கிறதும், தங்கத்தின் தோற்றத்தை உடையதுமான தகடுகளை எங்களிடத்தில் காண்பித்தார். சொல்லப்பட்ட ஸ்மித் என்பவர் எத்தனைத் தகடுகளை மொழிபெயர்த்தாரோ அத்தனையையும் நாங்கள் கைகளில் எடுத்தோம். அவைகளில் பொறிக்கப்பட்டுள்ளவைகளையும் நாங்கள் பார்த்தோம். அவை எல்லாம் பழங்கால வேலையாகவும், சிறந்த வேலைப்பாடு அமைந்த தோற்றமுடையதாயும் இருந்தன. பேசப்பட்ட ஸ்மித் அவைகளை எங்களுக்குக் காண்பித்தார் என்பதைத் தெளிந்த புத்தியுள்ள வார்த்தைகளினால் சாட்சி கொடுக்கிறோம். ஏனெனில் நாங்கள் அவைகளைப் பார்த்தோம், கைகளினால் தூக்கிப் பார்த்தோம். நாங்கள் சொன்ன அத்தகடுகளைப் பேசப்பட்ட ஸ்மித் என்பவர் பெற்றிருந்தார் என்பதை நாங்கள் நிச்சயமாக அறிவோம். நாங்கள் பார்த்தவைகளுக்காக உலகத்திற்கு சாட்சிகளாக இருப்பதற்கு, உலகத்திற்கு எங்கள் பெயர்களைக் கொடுக்கிறோம். இதற்கு தேவன் சாட்சி கொடுப்பதால், நாங்கள் பொய்யுரைக்கவில்லை.

கிறிஸ்டியன் விட்மர்

ஜேக்கப் விட்மர்

பீட்டர் விட்மர், இளையவர்

ஜான் விட்மர்

ஹைரம் பேஜ்

ஜோசப் ஸ்மித், மூத்தவர்

ஹைரம் ஸ்மித்

சாமுவேல் ஹெச். ஸ்மித்