2010–2019
தேவனுடைய வல்லமையுடனும் அதிகாரத்துடனும் ஊழியம் செய்தல்
ஏப்ரல் 2018


தேவனின் வல்லமையுடனும் அதிகாரத்துடனும் ஊழியம் செய்தல்

அவரது நாமத்தினாலும், வல்லமையுடனும் அதிகாரத்துடனும், அவரது அன்புமிக்க தயவுடனும் நாம் ஊழியம் செய்வோமாக.

எனக்கன்பான சகோதரரே, கர்த்தருக்கும் அவருடைய பணிக்கும் உங்களின் அர்ப்பணிப்புக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். உங்களுடனிருப்பது உண்மையிலேயே ஒரு சந்தோஷம். ஒரு புதிய தலைமையாக உங்களுடைய ஜெபங்களுக்காகவும் ஆதரிக்கும் முயற்சிக்காவும் நாங்கள் உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம். உங்களுடைய வாழ்க்கைக்காகவும் கர்த்தருக்கு உங்களின் சேவைக்காகவும் நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். கடமைக்கு உங்களின் அர்ப்பணிப்பும், உங்கள் சுயநலமற்ற சேவையும், எங்களுடைய அழைப்புகளில் இருப்பதைப்போல உங்களின் அழைப்புகளிலும், முக்கியமாயிருக்கிறது. எங்கே ஒருவர் சேவை செய்துகொண்டிருக்கிறாரென்பது உண்மையில், ஒரு பொருட்டல்ல என, இந்த சபையில் வாழ்நாள் சேவையின் மூலம் நான் கற்றுக்கொண்டேன். எவ்வாறு ஒருவர் சேவை செய்கிறாரென்பதிலேயே கர்த்தர் அக்கறையாயிருக்கிறார்.

50 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு ஒரு எடுத்துக்காட்டாயிருந்த தலைவர் தாமஸ் எஸ். மான்சனுக்கு எனது ஆழமான நன்றியை தெரிவிக்கிறேன். அவருடைய ஆலோசகர்களாயிருந்த தலைவர் ஹென்றி பி. ஐரிங் மற்றும் தலைவர் டியட்டர் எப். உக்டர்ப்புக்கு ஆழ்ந்த பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். கர்த்தருக்கும் அவருடைய தீர்க்கதரிசிகளுக்கும் அவர்களுடைய சேவைக்காக நான் அவர்களைப் பாராட்டுகிறேன். இந்த அர்ப்பணிப்பான ஊழியக்காரர்கள் இருவரும் புதிய பணிகளைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஆற்றலுடனும் பொறுப்புடனும் தொடர்ந்து சேவை செய்கிறார்கள். அவர்கள் இருவரையும் நான் கனம்பண்ணுகிறேன், நேசிக்கிறேன்.

அவருடைய அதிகாரத்துடனும் வல்லமையுடனும் கர்த்தரின் உண்மையான ஜீவிக்கிற சபையில் சேவை செய்வது ஒரு விசேஷித்த ஆசீர்வாதம். ஆசாரியத்துவத்தின் திறவுகோல்களையும் சேர்த்து, தேவனின் ஆசாரியத்துவத்தின் மறுஸ்தாபிதம், தகுதியான பரிசுத்தவான்களுக்கு ஆவிக்குரிய மிகப்பெரிதான ஆசீர்வாதங்களைத் திறக்கிறது. உலகமுழுவதிலுமுள்ள பெண்கள், ஆண்கள் மற்றும் பிள்ளைகளிடத்தில் அந்த ஆசீர்வாதங்கள் பொழிவதை நாம் காண்கிறோம்.

தங்களுடைய அழைப்புகளிலும், தரிப்பித்தலிலும், பிற ஆலய நியமங்களிலும் இயற்கையான வல்லமையைப் புரிந்துகொள்கிற விசுவாசமுள்ள பெண்களை நாம் காண்கிறோம். தங்கள் கணவன்மார்களையும், தங்கள் பிள்ளைகளையும் தாங்கள் நேசிக்கிற மற்றவர்களையும் பாதுகாக்கவும் பெலப்படுத்தவும் பரலோக வல்லமைகளிடம் செல்வதென்று இந்த பெண்கள் அறிந்திருக்கிறார்கள். வழிநடத்தி, போதித்து, தேவனின் வல்லமையுடனும் அதிகாரத்துடனும் பயமின்றி தங்கள் அழைப்புக்களில் ஊழியம் செய்கிற இவர்கள் ஆவியில் பலமான பெண்கள்! 1 அவர்களுக்காக நான் எவ்வளவு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்!

அதைப்போன்றே, ஆசாரியத்துவத்தைத் தாங்கியிருப்பவர்களாக தங்கள் சிலாக்கியங்களின்படி வாழ்கிற விசுவாசமிக்க ஆண்களை நாம் காண்கிறோம். அன்புடனும், இரக்கத்துடனும், பொறுமையுடனும் கர்த்தருடைய வழியில் தியாகத்தால் அவர்கள் வழிநடத்துகிறார்கள், சேவை செய்கிறார்கள். அவர்கள் தரித்திருக்கிற ஆசாரியத்துவத்தின் வல்லமையால் மற்றவர்களை அவர்கள் ஆசீர்வதித்து, வழிநடத்தி, பாதுகாத்து பெலப்படுத்துகிறார்கள். தங்களுடைய திருமணங்களையும் குடும்பங்களையும் அவர்கள் பாதுகாப்பாய் வைத்து, அவர்கள் சேவை செய்கிறவர்களுக்கு அற்புதங்களைக் கொண்டுவருகிறார்கள். அவர்கள் தீமையைத் தவிர்த்து, இஸ்ரவேலில் பராக்கிரம மூப்பர்களாயிருக்கிறார்கள். 2 நான் அவர்களுக்காக மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.

இப்போது ஒரு அக்கறையைப்பற்றி நான் பேசட்டுமா? இதுதான் அது. நம்முடைய அநேக சகோதரர்களும் சகோதரிகளும் ஆசாரியத்துவத்தின் வல்லமை மற்றும் அதிகாரத்தின் கருத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. அவருடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்க தேவனுடைய வல்லமையைப் பயன்படுத்துவதைவிட தங்களுடைய சுயநல விருப்பங்களையும் தேவைகளையும் திருப்தி செய்கிறதில் திருப்தியாவோம் என்பதைப்போன்று அவர்கள் நடந்துகொள்கிறார்கள்.

அநேக நம்முடைய சகோதரர்களும் சகோதரிகளும், அவர்களுடையதாயிருக்கிற சிலாக்கியங்களை பற்றிக்கொள்ளாதிருக்கிறார்களென நான் பயப்படுகிறேன்.3 உதாரணமாக, நம் சகோதரர்களில் சிலர் ஆசாரியத்துவம் என்றால் என்னவென்றும், எது அவர்கள் செய்ய எதை சாத்தியமாக்குமென்றும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பது போன்று நடக்கிறார்கள். சில குறிப்பிட்ட உதாரணங்களை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

சமீபத்தில் ஒரு திருவிருந்துக்கூட்டத்தில் நான் பங்கேற்றேன், அங்கே ஒரு குழந்தை பெயரிடவும் தகப்பனின் ஆசீர்வாதம் கொடுக்கப்படுவுமிருந்தது. இளம் தகப்பன் தன்னுடைய அருமையான குழந்தையை தன் கைகளில் ஏந்தி அவளுக்கு ஒரு பெயரிட்டான், பின்னர் ஒரு அழகான ஜெபத்தை ஏறெடுத்தான். ஆனால் அந்தக் குழந்தைக்கு அவன் ஆசீர்வாதத்தைக் கொடுக்கவில்லை. அந்த இனிமையான பெண் குழந்தை பெயர் இடப்பட்டாள், ஆனால் ஆசீர்வாதமில்லை. ஒரு ஜெபத்திற்கும் ஆசாரியத்துவ ஆசீர்வாதத்திற்குமிடையிலுள்ள வித்தியாசம் அந்த அன்பான மூப்பருக்குத் தெரியவில்லை. அவருடைய ஆசாரியத்துவ அதிகாரத்துடனும் வல்லமையுடனும் தன்னுடைய குழந்தையை அவர் ஆசீர்வதித்திருக்கமுடியும், ஆனால் அவர் செய்யவில்லை. என்ன ஒரு தவறவிடப்பட்ட சந்தர்ப்பம்! என நான் நினைத்தேன்.

மற்ற சில உதாரணங்களை நான் குறிப்பிடுகிறேன். சகோதரிகளை, ஆரம்பவகுப்பு, இளம்பெண்கள், அல்லது ஒத்தாசைச் சங்கத் தலைவர்களாக, ஆசிரியர்களாக தெரிந்தெடுக்கிற சகோதரர்களை நமக்குத் தெரியும். ஆனால் அவர்கள், தங்களுடைய அழைப்புகளை நிறைவேற்ற வல்லமையுடன் அவர்களை ஆசீர்வதிக்க தவறுகிறார்கள்—அவரது அழைப்புக்களை நிரைவேற்ற வல்லமையுடன் அவர்களை ஆசீர்வதியுங்கள். அவர்கள் புத்திமதிகளையும் அறிவுரைகளையும் மட்டுமே கொடுக்கிறார்கள். அவனுடைய மனைவிக்கும், அவனுடைய பிள்ளைகளுக்கும் அது மிகச்சரியாக தேவைப்படும்போது அவர்களுக்கு ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களைக் கொடுக்கத் தவறுகிற ஒரு தகுதியான தகப்பனை நாம் காண்கிறோம். ஆசாரியத்துவ வல்லமை இந்த பூமியின்மேல் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது, இருந்தும் எப்போதும் ஒரு உண்மையான ஆசாரியத்துவ ஆசீர்வாதத்தை பெறாமல் அநேக சகோதரர்களும் சகோதரிகளும் வாழ்க்கையின் பயங்கரமான சோதனைகள் ஊடே செல்கிறார்கள். என்ன ஒரு பரிதாபம். அது நம்மால் நீக்கப்படமுடிகிற ஒரு துயரம்.

சகோதரரே, நாம் தேவனின் பரிசுத்த ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிறோம் அவருடைய ஜனங்களை ஆசீர்வதிக்க அவருடைய அதிகாரம் நமக்கிருக்கிறது. “எவர்களை நீ ஆசீர்வதிக்கிறாயோ அவர்களை நான் ஆசீர்வதிப்பேன்” 4 என அவர் சொன்னபோது, கர்த்தர் நமக்குக் கொடுத்த விசேஷித்த நிச்சயத்தை நினைவுகூருங்கள். அவர்களுக்காக அவருடைய சித்தத்தின்படி தேவனுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்க இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செயல்படுவது நமது சிலாக்கியம். பிணையத் தலைவர்களே, ஆயர்களே, உங்களுடைய உக்கிராணத்துவத்திற்குள்ளுள்ள குழுமங்களிலுள்ள அனைத்து அங்கத்தினரும், தனிப்பட்ட தகுதியையும், முழுமையான தேவனின் வல்லமையை அழைக்க தேவையான ஆவிக்குரிய ஆயத்தத்தையும் சேர்த்து, ஒரு ஆசாரியத்துவ ஆசீர்வாதத்தை எவ்வாறு கொடுப்பதென்பதைப் புரிந்துகொள்வதை தயவுசெய்து நிச்சயப்படுத்துங்கள். 5

ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற அனைத்து சகோதரர்களே, தங்களுடைய உடன்படிக்கைகளைக் கைக்கொள்ள, உபவாசமிருந்து ஜெபிக்க, வேதங்களைப் படிக்க, ஆலயத்தில் தொழுதுகொள்ள, தேவனின் ஆண்களாக, பெண்களாக விசுவாசத்தில் சேவை செய்ய, அங்கத்தினர்களுக்கு உணர்த்த, நான் உங்களை அழைக்கிறேன். கீழ்ப்படிதலும், நீதியும் அவர்களை இயேசு கிறிஸ்துவினிடத்தில் நெருக்கமாகக் கொண்டுவருமென்றும், பரிசுத்த ஆவியின் தோழமையில் மகிழவும், வாழ்கையில் சந்தோஷத்தை அனுபவிக்கவும் அவர்களை அனுமதிக்கும் என்பதை விசுவாசத்தின் கண்களுடன் பார்க்க அனைவருக்கும் நாம் உதவலாம்!

கர்த்தரின் உண்மையானதும் ஜீவீக்கிறதுமான சபையின் தர அடையாளம், தேவனின் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் ஊழியம் செய்ய ஸ்தாபிக்கப்பட்ட மற்றும் வழிகாட்டப்பட்ட முயற்சியாகும். 6 இது அவருடைய சபையாயிருப்பதால் அவருடைய ஊழியக்காரர்களாக, அவர் செய்ததைப்போல ஒருவருக்கு நாம் ஊழியம் செய்வோம். 7 அவருடைய வல்லமையுடனும் அதிகாரத்துடனும் அவருடைய அன்பான தயவுடனும் அவருடைய நாமத்தில் நாம் ஊழியம்செய்வோம்.

ஒருவர் ஒருவருக்கு ஊழியம் செய்தலின் சிலாக்கியம் எவ்வளவு ஆற்றலுள்ளதென போஸ்டனில் 60 ஆண்டுகளுக்கு முன்பு, நான் பெற்ற ஒரு அனுபவம் எனக்குக் கற்றுக்கொடுத்தது. அப்போது மாசசூசட்ஸ் பொது மருத்துவ மனையில் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராக, ஒவ்வொரு நாளும், அடுத்த நாள் இரவிலும், ஒவ்வொரு வாரக்கடைசியிலும் கடமையிலிருந்தேன். என்னுடைய மனைவியுடன், எங்கள் நான்கு பிள்ளைகளுடன், சபை நடவடிக்கைகளுக்கு எனக்கு குறைவான நேரமிருந்தது. இருந்த போதிலும், சகோதரர் காக்ஸ் மீண்டும் சபை நடவடிக்கைக்கு திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் வில்பர் மற்றும் லியோனாரா காக்ஸ் வீட்டை சந்திக்க என்னுடைய கிளைத்தலைவர் என்னை நியமித்தார். அவரும் லியோனாராவும் ஆலயத்தில் முத்திரிக்கப்பட்டிருந்தார்கள்.8 இருந்தும் வில்பர் அநேக ஆண்டுகளாக சபையில் பங்கேற்கவில்லை.

என்னுடைய கூட்டாளியும் நானும் அவர்களுடைய வீட்டிற்குச் சென்றோம். நாங்கள் உள்ளே நுழைந்தபோது சகோதரி காக்ஸ் அன்புடன் எங்களை வரவேற்றார், 9 ஆனால் சகோதரர் காக்ஸ் வேகமாக வேறொரு அறைக்குள் போய் கதவை அடைத்துக்கொண்டார்.

மூடிய கதவுக்கருகில் நான் சென்று கதவைத் தட்டினேன். சிறிது நேரத்திற்குப்பின் உள்ளே வாருங்கள் என்ற மெல்லிய குரலைக் கேட்டேன். நான் கதவைத் திறந்து, நிறைந்திருந்த பொழுதுபோக்கு வானொலிக் கருவிகளுக்குப் பின்னால் சகோதரர் காக்ஸ் அமர்ந்திருந்ததைக் கண்டேன். அந்த சிறிய அறையில் அவர் ஒரு சுருட்டைப் பற்ற வைத்தார். என்னுடைய சந்திப்பு வரவேற்கத்தக்கதல்ல என்பது தெளிவாயிருந்தது.

ஆச்சரியத்துடன் அறையை நான் சுற்றிப்பார்த்து சொன்னேன், “சகோதரர் காக்ஸ், நான் எப்போதுமே பொழுதுபோக்கு வானொலியைப்பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பினேன். இதைப்பற்றி எனக்குக் கற்றுக்கொடுக்க நீங்கள் விரும்புவீர்களா. மன்னிக்கவும் இன்றிரவு என்னால் மேலும் அதிக நேரம் தங்கமுடியாது ஆனால் வேறொரு நேரம் நான் திரும்ப வரலாமா?”

சிரிது நேரம் அவர் தயங்கினார், பின்னர் சரி என்று சொன்னார். ஒரு அற்புதமான நட்பாக மாறினதற்கு இது ஒரு ஆரம்பமானது. நான் திரும்பவும் வந்தேன் அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தார். நான் அவரை நேசிக்கவும் மதிக்கவும் ஆரம்பித்தேன். எங்கள் பல சந்திப்புகளின் மூலமாக இந்த மனிதனின் பெருமை உயர்ந்தது. நாங்கள் மிக நல்ல நண்பர்களானோம். எங்களுடைய அன்பான நித்திய தோழிகள் கூட. பின்னர், காலம் கடந்தபோது எங்கள் குடும்பம் இடம் பெயர்ந்தது. காக்ஸ் குடும்பத்தை உள்ளூர் தலைவர்கள் தொடர்ந்து போஷித்தனர்.10

முதல் சந்திப்பிற்கு சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் போஸ்டன் பிணையம் உருவாக்கப்பட்டது.11 அதன் முதல் பிணையத் தலைவர் யாராயிருந்தார் என உங்களால் கற்பனை செய்யமுடிகிறதா? ஆம்! சகோதரர் காக்ஸ்! அடுத்து வந்த ஆண்டுகளில் அவர் ஊழியத்தலைவராகவும் ஆலயத் தலைவராகவும் ஊழியம் செய்தார்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர், பன்னிருவர் குழுமத்தின் ஒரு அங்கத்தினராக யூட்டா, சான்பெட்டே கவுன்டியில் ஒரு புதிய பிணையத்தை உருவாக்க நான் நியமிக்கப்பட்டேன். வழக்கமான நேர்காணலின்போது மீண்டும் என்னுடைய அன்பான நண்பர் காக்ஸைப் பார்க்க நான் மனமகிழ்வுடன் ஆச்சரியப்பட்டேன். ஒரு புதிய பிணைய கோத்திரத்தலைவனாக அவரை அழைப்பதில் நான் வியப்புற்றதை உணர்ந்தேன். நான் அவரை நியமித்த பின் நாங்கள் ஒருவருக்கொருவரை அணைத்துக்கொண்டு, அழுதோம். ஏன் இந்த வளர்ந்த மனிதர்கள் அழுகிறார்களென அறையிலிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். ஆனால் எங்களுக்குத் தெரியும். சகோதரி காக்ஸூக்குத் தெரியும். எங்களுடைய கண்ணீர் ஆனந்தக்கண்ணீர். 30 ஆண்டுகளுக்கும் மேல், ஒரு இரவில், அவர்களுடைய வீட்டில் ஆரம்பித்த அன்பின், மனந்திரும்புதலின் நம்பமுடியாத பாதையை நாங்கள் அமைதியாக நினைவுகூர்ந்தோம்.

விவரம் அங்கே முடியவில்லை. சகோதரர் மற்றும் சகோதரி காக்ஸ் குடும்பம், 3 பிள்ளைகள், 20 பேரப்பிள்ளைகள், 54 கொள்ளுப் பேரப்பிள்ளைகளையும் சேர்த்து வளர்ந்தது. அதற்குக் கூடுதலாக நூற்றுக்கணக்கான ஊழியர்களிடத்திலும், ஆலயத்தில் ஆயிரக்கணக்கானோருக்கும் அதிகமானோரிடத்திலும், வில்பர் காக்ஸ் கைகளில் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதங்களைப் பெற்ற நூற்றுக்கணக்கானோரிடத்திலும் அவர்களின் தாக்கமிருந்தது. அவருடைய மற்றும் லியோனோராவுடைய செல்வாக்கு உலகமுழுவதிலும் அநேகத் தலைமுறைகளுக்கு தொடர்ந்து சுழலும்.

வில்பர் மற்றும் லியோனோரா காக்ஸின் இத்தகைய அனுபவங்கள், இந்த சபைக்குள் ஒவ்வொரு வாரமும், ஒருவேளை ஒவ்வொரு நாளும் நடக்கும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அர்ப்பணிப்பான ஊழியக்காரர்கள், அவருடைய வல்லமையுடனும் அதிகாரத்துடனும் அவருடைய பணியை எடுத்துச்செல்கிறார்கள்.

சகோதரரே, நாம் திறக்கக்கூடிய கதவுகள், நாம் கொடுக்கக்கூடிய ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள், நம்மால் குணமாக்கக்கூடிய ஆத்துமாக்கள், நம்மால் இறக்கப்படக்கூடிய பாரங்கள், நம்மால் பெலப்படுத்தக்கூடிய சாட்சிகள், நாம் இரட்சிக்க முடிகிற வாழ்க்கை, பிற்காலப் பரிசுத்தவான்களின் வீடுகளில் நம்மால் கொண்டுவரக்கூடிய சந்தோஷம், இருக்கின்றன. இவை அனைத்தும் நாம் தரித்திருக்கிற தேவனின் ஆசாரியத்துவத்தினாலேயே. ஆண்களாகிய நாம் இந்தப் பணியைச் செய்ய “நம்முடைய மிகுந்த விசுவாசத்தினிமித்தம் உலக அஸ்திபாரம் முதற்கொண்டு தேவனுடைய முன்னறிவிற்குத்தக்கதாக அழைக்கப்பட்டு ஆயத்தப்படுத்தப்பட்டோம்”. 12

நம்முடைய மகத்தான நித்திய சகோதரத்துவத்தில் என்னோடு எழுந்து நிற்க இன்றிரவு உங்களை நான் அழைக்கிறேன். உங்களுடைய ஆசாரியத்துவ அலுவலின் பெயரை நான் குறிப்பிடும்போது தயவுசெய்து எழுந்து நின்றுகொண்டிருங்கள். உதவிக்காரர்கள், தயவுசெய்து எழவும்! ஆசிரியர்கள் எழவும்! ஆசாரியர்கள்! ஆயர்கள்! மூப்பர்கள்! பிரதான ஆசாரியர்கள்! கோத்திரத்தலைவர்கள்! எழுபதின்மர்! அப்போஸ்தலர்கள்!

இப்போது, சகோதரரே, நீங்கள் தயவுசெய்து நின்றுகொண்டே “Rise Up, O Men of God”? 13 என்ற பாடலின் முழு மூன்று வாக்கியங்களையும் எங்கள் இசைக் குழுவினருடன் நீங்களும் சேர்ந்து பாடுங்கள். நீங்கள் பாடும்போது, கர்த்தருடைய இரண்டாம் வருகைக்காக உலகத்தை ஆயத்தப்படுத்த உதவ தேவனுடைய பராக்கிரம சேனையாக உங்கள் கடமையை நினைவுகூருங்கள். இது நமது பொருப்பு. இது நமது சிலாக்கியம். அப்படியே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.