2010–2019
மூப்பர் குழுமம்
ஏப்ரல் 2018


மூப்பர்கள் குழுமம்

ஒரு தொகுதியில் ஒரு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ குழுமம் இருப்பது இரட்சிப்பின் பணியின் அனைத்து தன்மைகளையும் அடைய ஆசாரியத்துவம் தரித்தவர்களை ஒன்றிணைக்கிறது.

இவ்வூழியக்காலத்தில் சபை ஸ்தாபிக்கப்பட்ட பிறகு, கர்த்தர் ஒரு வெளிப்படுத்தலில் சொன்னார், “எனது சபையை எப்படி ஆளுகை செய்வது மற்றும் எனக்கு முன்பாக அனைத்தையும் எப்படி சரியாக வைத்திருக்க முடியும் என நீ அறியும்படிக்கு, உனது விசுவாச ஜெபத்தினால் நீ என் நியாயப்பிரமாணத்தைப் பெறுவாய்.” 1 அப்போதிலிருந்தே, இந்த கொள்கை சபையில் பின்பற்றப்படுகிறது, அந்த வாக்குத்தத்தம் கர்த்தரால் கனம்பண்ணப்படுகிறது. ஆசாரியத்துவ அலுவல்களும் குழுமங்களும் முதலில் நமது நாட்களில் ஏற்படுத்தப்பட்டபோது, தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திலிருந்து தொடங்கி அவ்வப்போது ஆசாரியத்துவ ஸ்தாபிதம் மற்றும் சேவை மாதிரிகள் வெளிப்படுத்தப்படுத்தப்பட்டிருக்கின்றன. பன்னிருவர் குழுமம், எழுபதின்மர், பிரதான ஆசாரியர்கள், மற்றும் மெல்கிசேதேக்கு மற்றும் ஆரோனிய ஆசாரியத்துவ பிற அலுவல்கள், குழுமங்கள் பொருத்தவரை, தலைவர்கள் ப்ரிகாம் யங், ஜான் டெய்லர், ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பல் மற்றும் பிறரின் காலங்களில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் வெளிப்படுத்தப்பட்டு அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன. 2 இப்போது சில மாதங்களுக்கு முன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையில் தலைவர் ரசல் எம். நெல்சன் மேலும் ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்தார்.

அவரது அறிவிப்பை நான் திரும்பக் கூறினால், “கர்த்தரின் பணியை அதிக சிறப்பாக நிறைவேற்ற, இன்றிரவு நாங்கள் நமது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ குழுமங்களின் குறிப்பிடத்தக்க சீரமைப்பை அறிவிக்கிறோம். ஒவ்வொரு தொகுதியிலும் பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் ஒரே மூப்பர்கள் குழுமமாக இணைக்கப்படுவர், [பிணைய பிரதான ஆசாரியர்கள்] குழும அமைப்பு தற்போதைய ஆசாரியத்துவ அழைப்புக்களின் அடிப்படையில்இருக்கும்.”

தலைவர் நெல்சன் சொன்னார்

“இந்த மாற்றங்கள் அநேக மாதங்களாக ஆய்விலிருந்தது. நாம் நமது அங்கத்தினர்களை கவனிக்கிற விதத்தை முன்னேற்ற ஒரு அவசர தேவையை நாங்கள் உணர்ந்தோம்.... அதைச் சிறப்பாக செய்ய, தன் பரிசுத்தவான்களுக்கு கர்த்தர் கொடுக்க நினைக்கிற அன்பையும் ஆதரவையும் கொடுக்க அதிக வழிநடத்தல் கொடுக்க நாம் நமது ஆசாரியத்துவ குழுமங்களை பலப்படுத்த வேண்டும்

. இந்த மாற்றங்கள் கர்த்தரால் உணர்த்தப்பட்டவை என நான் சாட்சியளிக்கிறேன். நாம் அவற்றை அமுல்படுத்தும்போது, நாம் முன்பு எப்போதும் இருந்ததை விட அதிக ஆற்றலுள்ளவர்களாக இருப்போம்.” 3

பிரதான தலைமையின் வழிநடத்தலில், மூப்பர் ரோனால்ட் ஏ. ராஸ்பாண்டும் நானும், சில விளக்கங்களை சேர்க்கிறோம், அது உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

மூப்பர்களும் பிரதான ஆசாரியத்துவக் குழுமங்களும்

முதலில், தொகுதி பிரதான ஆசாரியர் குழுக்கள் மற்றும் மூப்பர்கள் குழுமங்களுக்கு என்ன மாற்றங்கள் உள்ளன என வலியுறுத்திச் சொல்ல. தொகுதிகளில் மூப்பர்கள் குழுமங்கள் மற்றும் பிரதான ஆசாரியர் குழுக்களின் அங்கத்தினர்கள் இப்போது ஒரு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவமாக ஒரு குழும தலைமையின் கீழ் இணைக்கப்படுகிறார்கள். எண்ணிக்கையிலும் ஒற்றுமையிலும் அதிகரித்திருக்கிற இக்குழுமம், மூப்பர்கள் குழுமம் என அழைக்கப்படும். பிரதான ஆசாரியர் குழுமங்கள் தொடராது. மூப்பர்கள் குழுமம், தொகுதியிலுள்ள மூப்பர்கள் மற்றும் முன்னேறிக்கொண்டிருக்கும் மூப்பர்கள், தற்போது ஆயத்திலும், பிணைய தலைமையிலும், பிரதான ஆலோசனைக்குழுவிலும், அல்லது செயல்பட்டுக்கொண்டிருக்கிற கோத்திர பிதாவாகவும் தற்போது சேவையில் இல்லாத பிரதான ஆசாரியர்களையும் உள்ளடக்கியது. பிணையத்தின் பிரதான ஆசாரியர் குழுமம், பிணைய தலைமையிலும், ஆயத்திலும், பிரதான ஆலோசனைக்குழுவிலும் சேவை செய்துகொண்டிருக்கும் அந்த பிரதான ஆசாரியர்களைக் கொண்டதாக இருக்கும்.

மூப்பர்கள் குழும தலைமை.

மூப்பர்கள் குழும தலைமை எப்படி அமைக்கப்படுகிறது? பிணைய தலைமை தற்போதைய பிரதான ஆசாரியர்கள் குழு தலைமையையும், மூப்பர்கள் குழும தலைமையையும் விடுவித்துவிட்டு, புதிய மூப்பர்கள் குழும தலைவரையும் ஆலோசகர்களையும் ஒவ்வொரு தொகுதியிலும் அழைப்பர். புதிய மூப்பர்கள் குழும தலைமை, ஒரே குழும தலைமையில் பணியாற்றுகிற வித்தியாசமான வயதும் அனுபவமும் உள்ள மூப்பர்களையும் பிரதான ஆசாரியர்களையும் கொண்டிருக்கும். ஒரு மூப்பர் அல்லது பிரதான ஆசாரியர், குழும தலைவராக அல்லது தலைமையில் ஒரு ஆலோசகராக சேவை செய்யலாம். இது பிரதான ஆசாரியர்களால் மூப்பர்கள் குழுமம் “அபகரிக்கப்படுவதல்ல.” குழும தலைமையிலும், குழும சேவையிலும், மூப்பர்களும் பிரதான ஆசாரியர்களும் எந்த விதமான இணைப்பிலும் சேர்ந்து பணியாற்றுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த குழும அனுசரிப்புகள் சௌகரியமாக சாத்தியப்பட்ட உடனே அமுலாக்கப்படலாம்.

மூப்பர்கள் குழுமத்தில் ஆசாரியத்துவ அலுவல்கள்.

குழும அமைப்பிலுள்ள இந்த அனுசரிப்பு குழும அங்கத்தினர்கள் வகிக்கிற ஆசாரியத்துவ அலுவலை மாற்றுகிறதா? இல்லை, இச்செயல் கடந்த காலத்தில் எந்த குழும அங்கத்தினரும் நியமிக்கப்பட்ட எந்த ஆசாரியத்துவ அலுவலையும் குறைப்பதில்லை. நீங்கள் அறிந்தபடியே, தன் வாழ்நாளில் ஒருவர் வெவ்வேறு ஆசாரியத்துவ அலுவல்களில் நியமிக்கப்படலாம், அவர் புதிய ஒன்றை பெறும்போது அவர் முந்தைய நியமிப்பை இழப்பதில்லை அல்லது விட்டுவிடுவதில்லை. ஒரு பிரதான ஆசாரியன் ஒரு கோத்திர பிதாவாகவோ, அல்லது ஆயராகவோ சேவைசெய்யும்போது, ஒரே நேரத்தில் அனைத்து ஆசாரியத்துவ அலுவல்களிலும் குறிப்பாக செயல்படாததுபோல, சில சமயங்களில் ஒரு ஆசாரியத்துவம் தரித்தவர் ஒரே நேரத்தில் ஒன்றை விட அதிக அலுவல்களில் பணியாற்றலாம். ஆயர்களும் எழுபதின்மர்களும் உதாரணமாக, அவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகு அல்லது ஓய்வுபெற்றவர் என அறிவிக்கப்பட்ட பிறகு, அந்த அலுவல்களில் செயல்பட முடியாது. அவ்வாறே, ஒருவர் எந்த பிற ஆசாரியத்துவ அலுவலில் அல்லது அலுவல்களில் இருந்தாலும், அவர் மூப்பர்கள் குழுமத்தின் அங்கத்தினராக இருக்கும்போது அவர் ஒரு மூப்பராக சேவையாற்றுகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன், தலைவர் பாய்ட் கே. பாக்கர், கூறினார், “ஆசாரியத்துவம் அதன் எந்த அலுவலையும் விட மேலானது. ஆசாரியத்துவம் பிரிக்கக்கூடியது அல்ல. ஒரு மூப்பர் ஒரு அப்போஸ்தலர் போலவே ஆசாரியத்துவம் தரித்திருக்கிறார். (கோ.உ 20:38 பார்க்கவும்). ஒருவர் அவர் மீது ஆசாரியத்துவம் அருளப்பட்டிருக்கும்போது, அவர் அதன் அனைத்தையும் பெறுகிறார். எனினும், அதிகாரம் மற்றும் பொறுப்பின் பிரிவுகள் என்ற ஆசாரியத்துவத்துக்குள் அலுவல்கள் உள்ளன... சில சமயங்களில் ஒரு அலுவல் மற்றொன்றைவிட உயர்வானதாக அல்லது கீழானதாக பேசப்படுகிறது. மாறாக அதைவிட உயர்வான அல்லது தாழ்வான மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ அலுவல்கள் வெவ்வேறு சேவை தளங்களை குறிப்பிடுகிறது.” 4 சகோதரரே, மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தில் மற்றொரு அலுவலுக்கு முன்னேறுவதைப்பற்றி நாம் இனிமேலும் பேசமாட்டோம் என நான் அர்ப்பணிப்புடன் நம்புகிறேன்.

மூப்பர்கள் அவர்கள் பிணைய தலைமைக்கோ, பிரதான ஆலோசனைக்குழுவுக்கோ, அல்லது ஆயத்துக்கோ அல்லது ஜெபத்தில் கருத்தில் கொள்ளப்பட்டும் உணர்த்தப்பட்டும், பிணையத் தலைமையால் தீர்மானிக்கப்படுகிற பிற சமயங்களில், மூப்பர்கள் தொடர்ந்து பிரதான ஆசாரியர்களாக நியமிக்கப்படுவார்கள். ஒரு பிணைய தலைமையிலோ, பிரதான ஆலோசனைக்குழுவிலோ, அல்லது ஆயத்திலோ அவர்களது சேவைக்காலம் நிறைவடையும்போது, பிரதான ஆசாரியர்கள் தங்கள் தொகுதியின் மூப்பர்கள் குழுமத்தில் மீண்டும் சேர்வார்கள்.

மூப்பர்கள் குழும தலைவருக்கு வழிகாட்டுதல்கள்.

மூப்பர்கள் குழுமத் தலைவரின் வேலைகளை வழிடத்துவது யார்? பிணையத்தில் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்துக்கு பிணைய தலைவர் தலைமை தாங்குகிறார். ஆகவே மூப்பர்கள் குழும தலைவர் நேரடியாகவே பிணைய தலைவருக்கு பொறுப்பேற்க வேண்டும். அவர் பிணைய தலைமையிலிருந்து அல்லது பிரதான ஆலோசனைக்குழு மூலம் பயிற்சியும் வழிகாட்டுதல்களும் கொடுக்கிறார். ஆயர், தொகுதியில் தலைமை தாங்கும் பிரதான ஆசாரியராக, தவறாமல் மூப்பர்கள் குழும தலைவரை சந்திக்கிறார். ஆயர் அவருடன் ஆலோசனை கலந்து, தொகுதியின் அனைத்து அமைப்புகளுடனும் இசைவாக பணியாற்றி, தொகுதி அங்கத்தினர்களுக்கு எவ்வளவு சிறப்பாக சேவை செய்து ஆசீர்வதிப்பது என்பதைப்பற்றி பொருத்தமான வழிகாட்டல்கள் கொடுக்கிறார். 5

இந்த மாற்றங்களின் நோக்கம்.

மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ குழுமத்துக்கு மாற்றங்களின் நோக்கம் என்ன. ஒரு தொகுதியில் ஒரு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ குழுமம் இருப்பது, முன்பு பிரதான ஆசாரியத்துவ குழுக்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப் பணி உள்ளிட்ட இரட்சிப்பின் பணியின் அனைத்து காரியங்களையும் நிறைவேற்ற ஆசாரியத்துவம் தரித்தவர்களை ஒன்றுபடுத்துகிறது. ஒருவருக்கொருவர் மற்றும் வாழ்க்கையின் பல நிலையிலிருப்பவர்களின் பார்வையிலும் அனுபவத்திலுமிருந்து, அனைத்து வயதுடையோர் மற்றும் பின்னணியுடையவர்கள் பயன் பெறும் வகையில் குழும அங்கத்தினர்களை அனுமதிக்கிறது. முன்னேறிக்கொண்டிருக்கிற மூப்பர்கள், புதிய அங்கத்தினர்கள், இளம் வயதுவந்தோர் மற்றும் சபை நிகழ்ச்சிக்கு திரும்ப வருவோர் உள்ளிட்ட பிறரை அனுபவம் வாய்ந்த ஆசாரியத்துவம் தரித்தவர்கள் உருவாக்கிட இது கூடுதல் சந்தர்ப்பம் அளிக்கிறது. எதிர் காலத்தில் மூப்பர் குழுமங்கள் அளிக்கவிருக்கிற அதிகமான முக்கிய பங்கைக் குறித்து நான் எவ்வளவு மகிழ்கிறேன் என போதுமானபடி என்னால் விவரிக்க முடியவில்லை. இக்குழுமங்களில் காணப்படவிருக்கிற ஞானம், அனுபவம், ஆற்றல், மற்றும் பலம், சபை முழுவதிலும் ஒரு புதிய நாள் மற்றும் புதிய ஆசாரியத்துவ சேவை தரத்தை முன்னறிவிக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன் பொது மாநாட்டில், எழுபதின்மரின் மூப்பர் வாண் ஜே. பெதர்ஸ்டோன் முதலில் சொன்ன கதையை நான் சொன்னேன், அதை திரும்பவும் சொல்வது தகும் என நம்புகிறேன்.

“1918ல் சகோதரர் ஜார்ஜ் கோட்ஸ் யூட்டாவின் லேகியில் பீட்ரூட் பயிரிட்ட விவசாயி. அந்த ஆண்டில் குளிர்காலம் சீக்கிரம் வந்து, நிலத்திலிருந்த பீட்ரூட் பயிரை உறைய வைத்தது. ஜார்ஜுக்கும் அவரது இளம் மகன் ப்ரான்ஸிஸுக்கும் அறுவடை வேகமாயும் கடினமாயும் இருந்தது. அச்சமயம் ஒரு தொற்று காயச்சல் பரவியது. அந்த பயங்கர நோய் ஜார்ஜின் மகன் சார்ல்ஸையும், இரு சிறுமிகள் மற்றும் ஒரு பையனான சார்ல்ஸ் ஆகிய மூன்று குழந்தைகளின் உயிரையும் எடுத்துக் கொண்டது. ஆறு நாட்களுக்குள், துக்கமடைந்த ஜார்ஜ் கோட்ஸ், அடக்கம் செய்ய சரீரங்களை வீட்டுக்குக் கொண்டுவர யூட்டாவின் ஆக்டனுக்கு மூன்று முறை பயணங்கள் செய்தார். இநத பயங்கரமான இடையீட்டின் முடிவில், ஜார்ஜும் ப்ரான்ஸிஸும் தங்கள் வண்டிகளைப் பூட்டிக்கொண்டு, பீட்ரூட் வயலுக்கு சென்றனர்.

“[வழியில்] அண்டையிலுள்ள விவசாயிகளால் ஓட்டப்பட்டு, தொழிற்சாலைக்குக் கொண்டு போகப்பட்ட பீட்ரூட் வண்டிகள் அவர்களைக் கடந்து சென்றன. அவர்கள் கடக்கும்போது, பாராட்டு தெரிவித்தனர், “ஹை ஜார்ஜ் மாமா”, “கண்டிப்பாக வருந்துகிறேன் ஜார்ஜ்,” “கஷ்டமான நேரம் ஜார்ஜ்,” “உனக்கு ஏராளமான நண்பர்கள், ஜார்ஜ்”.

“கடைசி வண்டியில் ... மச்சம் நிறைந்த முகமுடைய ஜாஸ்பர் ரோல்ப் வந்தார். உற்சாக வாழ்த்துதலுடன் கையசைத்து, “அவ்வளவுதான் ஜார்ஜ் மாமா,” என்றார்.

“[சகோதரர் கோட்ஸ்] ப்ரான்ஸிஸிடம் திரும்பிசொன்னார், “இவை யாவும் நம்முடையவையாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.”

“பண்ணை வாசலுக்கு அவர்கள் வந்தபோது, ப்ரான்ஸிஸ் பெரிய பீட்ரூட் வண்டியிலிருந்து குதித்து, வாயிலைத் திறக்க, [அவரது தகப்பன்] [ஜார்ஜ்] உள்ளே போய் வண்டியை நிறுத்தி வயலைப் பார்த்தார். வயல் முழுவதும் ஒரு பீட்ரூட்டும் இல்லை. இப்போது ரோல்ப், “அவ்வளவுதான் ஜார்ஜ் மாமா,” என கத்தியது நினைவு வந்தது.

“[ஜார்ஜ்] வண்டியிலிருந்து இறங்கி, செழுமையான பழுப்பு நிற, அவர் நேசித்த மண்ணை எடுத்து, பின் ஒரு பீட்ரூட் தளையை எடுத்து, அவரது உழைப்பின் அடையாளங்களை தன் கண்களை நம்பாதது போல ஒருகணம் பார்த்தார்.

“பின்னர் [அவர்]ஒரு பீட்ரூட் தளை குவியலில் அமர்ந்து—ஆறு நாட்களுக்குள் தன் அன்புக்குரியவர்களில் நாலு பேரை அடக்கம் செய்ய வீட்டுக்குக் கொண்டு வந்து, பெட்டிகள் செய்து, குழிகள் வெட்டி, அடக்கத்துக்கான துணிகள் கூட தைத்த இந்த அற்புதமான வேதனையான துயரத்தில் தளராத, தொய்ந்து போகாத, நடுங்காத மனிதன், பீட்ரூட் தளைக் குவியலில் உட்கார்ந்து சிறு பிள்ளை போல அழுதார்.

“‘பின் அவர் எழுந்து கண்களைத் துடைத்துக்கொண்டு, வானத்தை நோக்கிப் பார்த்து சொன்னார், எங்கள் தொகுதி மூப்பர்களுக்காக நன்றி, பிதாவே.’” 6

ஆம், தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும், சீயோனை ஸ்தாபிப்பதில் இன்னும் நீங்கள் உயர்த்திக்கொண்டிருக்கிற ஆசாரியத்துவ ஆண்களுக்காக, தேவனுக்கு நன்றி உரித்தாகுக.

பிரதான தலைமை, பன்னிரு அப்போஸ்தலர் குழுமம், மற்றும் எழுபதின்மரின் தலைமை இந்த அனுசரிப்புகளை நீண்ட காலத்துக்கு கருத்தில் கொண்டிருக்கின்றனர். அதிக ஜெபத்துடனும், ஆசாரியத்துவ குழுமங்களின் வேத அடிப்படைகளைப்பற்றிய கவனமான ஆராய்ச்சியுடனும், இது கர்த்தருடைய சித்தம் என உறுதி செய்து, மறுஸ்தாபிதத்தை வெளிக்கொண்டு வந்ததில் உண்மையாகவே ஒரு படி என, ஒருமனப்பட்டு நாம் முன்னேறுகிறோம். கர்த்தரின் வழிகாட்டுதல் வெளிப்பட்டிருக்கிறது, நான் இதற்காக களிகூர்கிறேன், அவர், அவரது ஆசாரியத்துவம், அந்த ஆசாரியத்துவத்தில் உங்கள் நியமனங்களைப்பற்றி நான் சாட்சியளிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.

  1. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 41:3.

  2. See, for example, William G. Hartley, “The Priesthood Reorganization of 1877: Brigham Young’s Last Achievement,” in My Fellow Servants: Essays on the History of the Priesthood (2010), 227–64; “To the Seventies,” in James R. Clark, comp., Messages of the First Presidency of The Church of Jesus Christ of Latter-day Saints (1965), 352–54; Hartley, “The Seventies in the 1880s: Revelations and Reorganizing,” in My Fellow Servants, 265–300; Edward L. Kimball, Lengthen Your Stride: The Presidency of Spencer W. Kimball (2005), 254–58; Susan Easton Black, “Early Quorums of the Seventies,” in David J. Whittaker and Arnold K. Garr, eds., A Firm Foundation: Church Organization and Administration (2011), 139–60; Richard O. Cowan, “The Seventies’ Role in the Worldwide Church Administration,” in A Firm Foundation, 573–93.

  3. Russell M. Nelson, “Introductory Remarks,” Liahona, May 2018, 54.

  4. Boyd K. Packer, “What Every Elder Should Know—and Every Sister as Well: A Primer on Principles of Priesthood Government,” Tambuli, Nov. 1994, 17, 19.

  5. See Handbook 2: Administering the Church (2010), 7.3.1.

  6. D. Todd Christofferson, “The Priesthood Quorum,” Liahona, Jan. 1999, 47; see also Vaughn J. Featherstone, “Now Abideth Faith, Hope, and Charity,” Ensign, July 1973, 36–37.