2010–2019
ஒருமனப்பட்டு
ஏப்ரல் 2018


ஒருமனப்பட்டு

நமது மகத்துவமான இலக்கை அடையும்படிக்கு, நாம் ஒருவருக்கொருவர் தேவை, நாம் ஒன்றிணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பூமியில் மிக விசேஷித்த பூச்சிகளில் ஒன்று, மோனார்க் பட்டாம்பூச்சி. என் கணவர் குடும்பத்துடன் கிறிஸ்துமஸைக் கழிக்க மெக்ஸிகோ பயணத்தில், நாங்கள் ஒரு பட்டாம்பூச்சி சரணாலயத்துக்கு சென்றோம். அங்கு மில்லியன் கணக்கான பட்டாம்பூச்சிகள் குளிர்காலத்தைக் கழிக்கின்றன. இவ்வளவு உணரத்தக்க காட்சியை பார்க்கவும், தேவனுடைய சிருஷ்டிப்புகள் காட்டுகிற ஒற்றுமையின் உதாரணத்தையும், தெய்வீக நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிதலையும் பற்றி நாம் சிந்திப்பது, பரவசப்படுத்துவதாக உள்ளது. 1

படம்
மோனார்க் பட்டாம்பூச்சிகள்
படம்
பட்டாம் பூச்சி கூட்டம்

மோனார்க் பட்டாம்பூச்சிகள் சிறந்த மாலுமிகள். அவைகள் செல்ல வேண்டிய திசையைக் கண்டுபிடிக்க அவை சூரியன் இருக்குமிடத்தை பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு வசந்த காலத்திலும் மெக்ஸிகோவிலிருந்து கனடாவுக்கு அவை ஆயிரக்கணக்கான மைல்கள் பிரயாணம் செய்கின்றன. ஒவ்வொரு இலையுதிர் காலத்திலும் மெக்ஸிகோவின் அதே பரிசுத்தமான பர் காடுகளுக்கு திரும்புகின்றன. 2 ஒரு தடவை ஒரு சிறு சிறகடித்து இதை வருடந்தோரும் செய்கின்றன. குளிரிலிருந்தும் மாம்சபட்சிணிகளிடமிருந்தும் தங்களைக் காத்துக்கொள்ள அவர்களது பயணத்தின்போது, இரவில் மரங்களில் கூட்டமாக சேர்கின்றன. 3

படம்
பட்டாம்பூச்சி கூட்டம்
படம்
இரண்டாம் பட்டாம்பூச்சி கூட்டம்

ஒரு பட்டாம்பூச்சி கூட்டம் கலடைஸ்கோப் என அழைக்கப்படுகிறது. 4 அது ஒரு அழகான தோற்றம் இல்லையா. கலடைஸ்கோப்பின் ஒவ்வொரு பட்டாம்பூச்சியும் தனித்துவமுடையது, மற்றும் வித்தியாசமானது. ஆனாலும் பார்வைக்கு வலிமையற்ற பூச்சிகள் பிழைத்திருக்கவும், பயணம் செய்யவும், பெருகவும், மகரந்தத்தைப் பரப்பிக்கொண்டு ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவுக்கு போகும்போது உயிரையும் பரப்புகிற திறமையுடன் அன்பு மிக்க சிருஷ்டிகரால் வடிவமைக்கப்பட்டது. ஒவ்வொரு பட்டாம்பூச்சியும் வித்தியாசமானதாய் இருந்தாலும், உலகத்தை அதிக அழகானதாயும், பயனுள்ளதாயும் ஆக்க அவை ஒருமனப்பட்டு பிரயாசப்படுகின்றன.

மோனார்க் பட்டாம்பூச்சிகள்போல, நாம் நமது பரலோக வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் பயணத்திலிருக்கிறோம். அங்கு நாம் நமது பரலோக பெற்றோருடன் இணைவோம். 5 பட்டாம்பூச்சிகள் போல [நமது] சிருஷ்டிப்பின் அளவை [நிரப்ப], 6 வாழ்க்கையினூடே பயணிக்க நம்மை அனுமதிக்கிற தெய்வீக தன்மைகள் நாம் கொடுக்கப்பட்டிருக்கிறோம். அவர்களைப்போல நாம் நமது இருதயங்களை பின்னிக்கொணடால், 7 “கோழி தன் குஞ்சுகளை தன் சிறகுகளுக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல,” 8 நாம் நம்மை அழகிய கலடைஸ்கோப்பாக ஆக்கிக்கொள்ளலாம்.

சிறுமிகளே, சிறுவர்களே, இளம்பெண்களே வாலிபர்களே, சகோதர சகோதரிகளே, நாம் இந்த பயணத்தில் ஒன்றாக இருக்கிறோம். நமது மகத்தான இலக்கை அடைய, நமக்கு ஒருவருக்கொருவர் தேவை. நாம் ஒன்றுபட்டிருக்க வேண்டும். கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார், “ஒன்றாயிருங்கள், நீங்கள் ஒன்றாயில்லாவிட்டால், நீங்கள் என்னுடையவர்கள் அல்ல.” 9

தன் பிதாவுடனான ஒற்றுமைக்கு, இயேசு கிறிஸ்து மேலான உதாரணம். “குமாரனின் சித்தம் பிதாவின் சித்தத்தால் விழுங்கப்பட்டு” 10 நோக்கத்திலும் அன்பிலும் கிரியையிலும் அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள்.

அவரது பிதாவுடன் கர்த்தரின் ஒற்றுமையின் பரிபூரண உதாரணத்தை நாம் எவ்வாறு பின்பற்றி, அவர்களுடனும் ஒருவருக்கொருவருடனும் ஒன்றாக இருக்கலாம்?

ஒரு உணர்த்துதலான மாதிரி அப்போஸ்தலர் 1:14ல் காணப்படுகிறது. “[மனுஷர்] ஸ்திரீகளோடும் ஒருமனப்பட்டு ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்,” என நாம் வாசிக்கிறோம். 11

“ஒருமனப்பட்டு” என்கிற வார்த்தை அப்போஸ்தலர் புஸ்தகத்தில் பலமுறை தோன்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உயிர்த்தெழுந்தவராக பரலோகத்துக்கு ஏறிப்போன பிறகு, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் உடனே என்ன செய்தார்கள், மற்றும் அவர்களது முயற்சியினால் அவர்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும் பற்றி நாம் வாசிக்கிறோம். கர்த்தர் அவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஊழியம் செய்த சமயத்தில் அமெரிக்க கண்டத்தில் விசுவாசமிக்கவர்களிடையே அதே மாதிரியை நாம் பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. “ஒருமனப்பட்டு” என்பதற்கு ஒப்புதலுடன், ஒற்றுமையாக, மற்றும் மொத்தமாக, என்பது அர்த்தம்.

இரண்டு இடங்களிலும் விசுவாசமிக்க பரிசுத்தவான்கள் ஒற்றுமையாக செய்த காரியங்களில் சில, அவர்கள் இயேசு கிறிஸ்து பற்றி சாட்சியளித்தனர், தேவ வார்த்தையைப் படித்தனர், அன்புடன் ஒருவருக்கொருவர் பணிவிடை செய்தனர். 12

கர்த்தரைப் பின்பற்றியவர்கள் நோக்கத்திலும், அன்பிலும், கிரியைகளிலும் ஒன்றாயிருந்தார்கள். தாங்கள் யார் என அறிந்திருந்தார்கள், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என அறிந்திருந்தார்கள், தேவனிடத்திலும் ஒருவருக்கொருவரிடத்திலும் அன்புடன் அதைச்செய்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டு, முன்னேறிக்கொண்டிருந்த மகத்தான கலடைஸ்கோப்பின் பாகமாக இருந்தனர்.

அவர்கள் பெற்ற ஆசீர்வாதங்களில் சில, அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டனர், அவர்களுக்குள்ளே அற்புதங்கள் நடந்தன, சபை வளர்ந்தது, ஜனங்களுக்குள்ளே பிணக்குகள் இல்லை, எல்லாவற்றிலும் கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்தார்.13

அவர்கள் அவ்வளவு ஒற்றுமையாக இருந்ததற்கு காரணம், அவர்கள் கர்த்தரை தனிப்பட்டவிமாக அறிந்திருந்தனர் என்பதாலேயே, என நாம் அனுமானிக்கலாம். அவர்கள் அவருக்கு நெருக்கமாக இருந்தார்கள், அவரது தெய்வீக ஊழியம் பற்றியும், அவர் செய்த அற்புதங்கள் பற்றியும், அவரது உயிர்த்தெழுதல் பற்றியும், சாட்சியாக அவர்கள் இருந்தார்கள். அவரது கைகளிலும் கால்களிலும் இருந்த தழும்புகளைப் பார்த்து தொட்டனர். அவர் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியா, உலகத்தின் மீட்பர் என உறுதியாக அறிந்தனர். “அவரே எல்லா குணமாக்குதல், சமாதானம் மற்றும் நித்திய முன்னேற்றத்தின் ஆதாரம்,” என அவர்கள் அறிந்தனர்.14

நாம் நமது இரட்சகரை நமது மாம்ச கண்களால் பார்க்கவில்லையானாலும் அவர் ஜீவிக்கிறார் என நாம் அறியலாம். நாம் அவரை நெருங்கும்போது, அவரது தெய்வீக ஊழியம் பற்றி பரிசுத்த ஆவியானவர் மூலம் தனிப்பட்ட சாட்சி பெற நாடும்போது, நமது நோக்கம் பற்றி சிறப்பாக அறியலாம். தேவ அன்பு நமது இருதயங்களில் தங்கும். 15 நமது குடும்பங்கள், தொகுதிகள் மற்றும் சமுதாய கலடைஸ்கோப்புகளிலும், ஒன்றாயிருக்க தீர்மானமாயிருப்போம், “புதிய, சிறந்த வழிகளில்” நாம் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்வோம். 16

தேவையிலுள்ள பிறரிடம் செல்ல, ஆவியால் வழிநடத்தப்பட்டு, தேவபிள்ளைகள் ஒன்றாக உழைக்கும்போது அற்புதங்கள் நடக்கின்றன.

படம்
மீட்பவர்களால் தெரு நிறைந்தது

அழிவு தாக்கும்போது, ஜனங்களிடையே அண்மையிலிருப்போர் அன்பு காட்டிய பல கதைகளை நாம் கேட்கிறோம். உதாரணமாக கடந்த ஆண்டு ஹூஸ்ட்டன் பட்டணம் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, ஜனங்கள் தங்கள் தேவைகளை மறந்து, மீட்புக்கு சென்றனர். அந்த சமுதாயத்துக்கு உதவிட ஒரு மூப்பர் குழும தலைவர் அழைப்பு அனுப்பினார், வேகமாக 77 படகுகள் வரிசை அமைக்கப்பட்டது. மீட்புக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று, நமது ஒரு கூடுமிடத்துக்கு அனைத்து குடும்பங்களையும் ஏற்றிச் சென்றனர், அவர்கள் அங்கு அடைக்கலமும், அதிகம் தேவையான உதவியையும் பெற்றார்கள். ஒரே நோக்கத்துடன் அங்கத்தினர்களும் அங்கத்தினரல்லாதோரும் ஒன்றாக உழைத்தனர்.

படம்
ஸ்பானிஷ் கற்பிக்கும் ஊழியக்காரர்கள்

சிலியின் சான்றியாகோவில், ஒரு ஒத்தாசைச் சங்க தலைவி, ஹெய்ட்டியிலிருந்து வந்த அவரது சமுதாயத்திலிருந்த புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவ விருப்பம் கொண்டார். தன் ஆசாரியத்துவத் தலைவர்களுடன் ஒன்றிணைந்து, ஆலோசித்து தங்கள் புதிய வீடுகளில், நன்கு இணைந்திருக்க உதவ, ஸ்பானிஷ் வகுப்பு நடத்தும் அபிப்பிராயம் பெற்றனர். எல்லா சனிக்கிழமையும் ஊழியக்காரர்கள் தங்கள் ஆர்வமிக்க மாணவர்களுடன் ஒன்றாகக் கூடினார்கள். அக்கட்டிடத்திலிருந்த ஒற்றுமையுணர்வு, பல்வேறு பின்னணியுடையவர்கள் ஒருபமனப்பட்டு சேவை செய்வது ஜனங்களின் உணர்த்துதலுடைய உதாரணம்.

படம்
மெக்சிகோவில் தன்னார்வலர்கள்

மெக்ஸிகோவில் நூற்றுக்கணக்கான அங்கத்தினர்கள் இரு பூகம்பத்தால் உயிர்பிழைத்தோருக்கு உதவ, பல மணிநேரங்கள் பயணித்தார்கள். அவர்கள் கருவிகளுடனும், எந்திரங்களுடனும், தங்கள் அயலார் மீது அன்பாலும் வந்தனர். அறிவுரைக்காக காத்துக் கொண்டு நமது ஒரு கூடுமிடத்தில் தன்னார்வலர்கள் கூடியதை இக்ஸாடன் பட்டண மேயர், “கிறிஸ்துவின் பரிபூரண அன்பின்” 17 வெளிப்பாட்டைப் பார்த்தபோது அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

நமது ஆசாரியத்துவ குழுமங்களிலும், ஒத்தாசைச் சங்கங்களிலும் ஒவ்வொரு மாதமும் ஒன்றாக ஆலோசிக்கும் சந்தர்ப்பத்தை கர்த்தர் நமக்கு இப்போது கொடுக்கிறார். ஆகவே நாம் அனைவரும் நாம் எல்லோரும் பொருந்தக்கூடிய, நாம் எல்லோரும் தேவைப்படுகிற இடமாகிய நமது தொகுதிகள் அல்லது கிளை கலடைஸ்கோப்பில் மிக உற்சாகமான பங்காளர்களாக இருக்கலாம்.

நமது பாதைகள் ஒவ்வொன்றும் வித்த்தியசமானவை, ஆயினும் நாம் ஒன்றாக நடக்கிறோம். நாம் என்ன செய்திருக்கிறோம், எங்கிருந்திருக்கிறோம் என்பதைப் பற்றியதல்ல நமது பாதை. ஒற்றுமையாக நாம் எங்கு போகிறோம், என்னவாகிறோம் என்பதைப் பற்றியது. நாம் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டு ஒன்றாக ஆலோசிக்கும்போது, நாம் எங்கிருக்கிறோம், எங்கிருக்க வேண்டும் என பார்க்க முடியும். நமது சுபாவ கண்கள் பார்க்க முடியாத பார்வையை பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கொடுக்கிறார், ஏனெனில் “வெளிப்படுத்தல் நமக்குள்ளே பரவியிருக்கிறது,” 18 நாம் அந்த வெளிப்படுத்தலை ஒன்றிணைக்கும்போது, நாம் அதிகம் பார்க்க முடியும்.

நாம் ஒற்றுமையுடன் உழைக்கும்போது, நமது நோக்கம் தேடுவதும் கர்த்தருடைய சித்தத்தை செய்வதுமாக இருக்க வேண்டும். நமது ஊக்குவிப்பு தேவனிடத்திலும் நமது அயலாரிடத்திலும் நாம் உணர்கிற அன்பாக இருக்க வேண்டும். 19 நமது மிகப்பெரிய வாஞ்சை “கருத்தாய் பிரயாசப்படுவதாக” 20 இருக்க வேண்டும். அவ்வாறு நாம் நமது இரட்சகரின் மகிமையான வருகைக்கு வழியை ஆயத்தம் செய்யலாம். அப்படிச்செய்ய ஒரே வழி ஒருமனப்பட்டு என்பதாகவே இருக்க வேண்டும்.

மோனார்க் பட்டாம்பூச்சிகள் போல, நாம் ஒவ்வொருவரும் நமது சொந்த மனோபாவங்களுடனும், கொடைகளாலும், இதை மிக அழகான மற்றும் பலனுள்ள உலகாக மாற்ற உழைத்து, தேவ கட்டளைகளுடன் இணக்கமாகவும் ஒரு சமயத்தில் ஒரு அடியாக வைத்து, அந்த நோக்கத்துடன் ஒன்றாக நமது பயணத்தை தொடர்வோமாக.

அவரது நாமத்தில் நாம் ஒன்றாக கூடும்போது, அவர் நமது மத்தியில் இருப்பதாக நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். 21 அவர் ஜீவிக்கிறார், இன்றுபோலவே ஒரு அழகிய வசந்த கால காலையில் அவர் உயிர்த்தெழுந்தார் என நான் சாட்சியளிக்கிறேன். அவர் எல்லா அதிபதிகளுக்கும் மேலான அதிபதி, “இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தா.” 22

நாம் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படும்போது, பிதாவையும் அவரது குமாரனையும் போல, ஒன்றாக இருப்போமாக என்பதே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் தாழ்மையான ஜெபமாகும், ஆமென்.

குறிப்புகள்

  1. ஆபிரகாம் 3:26; 4:7, 9–12, 15, 18, 21, 24–25 பார்க்கவும்.

  2. மோனார்க் பட்டாம்பூச்சிகள் பற்றிய உண்மையாவது, அது கனடாவுக்கு வடக்கு நோக்கிய பயணத்தை மேற்கொள்ள அதற்கு மூன்று தலைமுறைகள் ஆகும். எனினும் ஒரு உயர்வான தலைமுறை தெற்கு நோக்கி மெக்சிகோவுக்கு குளிர் காலத்தை அங்கு களித்து, முழு பயணத்தையும் செய்து, திரும்ப வடக்கே முதல் பயணத்தை செய்கிறது. See “Flight of the Butterflies” [video, 2012]; “‘Flight’: A Few Million Little Creatures That Could,” WBUR News, Sept. 28, 2012, wbur.org.)

  3. See “Why Do Monarchs Form Overnight Roosts during Fall Migration?” learner.org/jnorth/tm/monarch/sl/17/text.html.

  4. See “What Is a Group of Butterflies Called?” amazingbutterflies.com/frequentlyaskedquestions.htm; see also “kaleidoscope,” merriam-webster.com. Kaleidoscope comes from the Greek kalos (“beautiful”) and eidos (“form”).

  5. குடும்பம் உலகத்துக்கு ஒரு பிரகடனம், ” பார்க்கவும். Liahona, May 2017, 145.

  6. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:19; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:25.

  7. மோசியா 18:21 பார்க்கவும்.

  8. 3 நெப்பி 10:4.

  9. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:27.

  10. மோசியா 15:7.

  11. அப்போஸ்தலர் 1:14, முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  12. எருசலேமில் பரிசுத்தவான்கள் செய்த சில காரியங்கள்: ஒரு புதிய அப்போஸ்தலனையும் நேர்மையான ஏழு மனுஷரையும் தெரிந்து கொண்டார்கள் (அப்போஸ்தலர் 1:26; 6:3–5) பெந்தேகோஸ்தே நாளில் ஒன்று கூடினர் (அப்.2:1); இயேசு கிறிஸ்து பற்றி சாட்சி கொடுத்தனர் (அப். 2:22–36, 3:13–26, 4:10, 33, 5:42). ஜனங்களை மனந்திரும்புதலுக்கு அழைத்து ஞானஸ்நானம் கொடுத்தனர் (அப். 2:38–41 பார்க்கவும்). ஐக்கியத்திலும் அப்பம் பிட்குதலிலும் ஜெபத்திலும் தொடர்ந்திருந்தனர் (அப். 2:42). ஒன்றாக இருந்து எல்லாவற்றையும் பொதுவில் வைத்தனர் (அப் 2:44–46,4:34–35). ஆலயம் சென்றனர் (அப். 2:46). உணவை மகிழ்ச்சியுடனும் ஒருமனப்பட்டும் சாப்பிட்டனர் (அப். 2:46). தேவனை துதித்து அனைவரிடத்திலும் செல்வாக்கு பெற்றனர் (அப். 2:47). விசுவாசத்துக்கு கீழ்ப்படிந்திருந்தனர் (அப். 6:7). தொடர்ந்து ஜெபித்து வார்த்தையைக் குறித்து ஊழியம் செய்தனர் (அப். 6:4). பரிசுத்தவான்கள் அமெரிக்க கண்டத்தில் செய்த காரியங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பிரசங்கித்தனர் (3 நெப்பி 28:23). கிறிஸ்துவின் சபையை நிறுவினர் (4 நெப்பி 1:1). ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தனர் (4 நெப்பி 1:1); எல்லாரும் ஒருவருக்கொருவர் நேர்மையாக நடந்தனர் (4 நெப்பி 1:2) எல்லாவற்றையும் அவர்களுக்குள்ளே பொதுவாக வைத்திருந்தனர் (4 நெப்பி 1:3). பட்டணங்களை திரும்பக் கட்டினர் (4 நெப்பி 1:7–9). திருமணம் செய்தனர் (4 நெப்பி 1:11). தேவனிடமிருந்து தாங்கள் பெற்ற கட்டளைகளின்படி நடந்தனர் (4 நெப்பி 1:12). உபவாசத்திலும் ஜெபத்திலும் தொடர்ந்தனர் (4 நெப்பி 1:12 பார்க்கவும்). கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கவும் ஜெபிக்கவும் அடிக்கடி ஒன்று கூடினர் (4 நெப்பி 1:12).

  13. எருசலேமில் பரிசுத்தவான்கள் பெற்ற ஆசீர்வாதங்கள்:அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள் (அப்போஸ்தலர் 2:4; 4:31பார்க்கவும்); அவர்கள் அந்நிய பாஷைகளின் வரங்களைப் பெற்று, தீர்க்கதரிசனமுரைத்தார்கள், மற்றும் “தேவனின் அற்புத கிரியைகள் பற்றி பேசினார்கள்” ( அப்போஸ்தலர் 2:4–18பார்க்கவும்); அப்போஸ்தலர்களால் அனேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டன (அப்போஸ்தலர்கள் 2:43பார்க்கவும்); அற்புதங்கள் நடைபெற்றன ( அப்போஸ்தலர் 3:1–10பார்க்கவும்; 5:18–19; 6:8, 15); அதிக ஜனங்கள் சபையில் சேர்ந்தார்கள் (அப்போஸ்தலர் 2:47; 5:14பார்க்கவும்). அமெரிக்க கண்டத்தில் பரிசுத்தவான்கள் பெற்ற சில ஆசீர்வாதங்கள்: ஜனங்கள் கர்த்தருக்குள்ளாக மனந்திரும்பினார்கள் (3 நெப்பி 28:23பார்க்கவும்; 4 நெப்பி 1:2); ஒரு தலைமுறை ஆசீர்வதிக்கப்பட்டது (3 நெப்பி 28:23பார்க்கவும்); அவர்களுக்குள்ளே பிணக்குகளோ வாக்குவாதங்களோ இருக்கவில்லை ( 4 நெப்பி 1:2, 13, 15, 18பார்க்கவும்); அவர்களுக்குள்ளே ஐஸ்வர்யவான்களோ தரித்திரரோ இல்லை (4 நெப்பி 1:3பார்க்கவும்); “அவர்கள் எல்லாரும் சுதந்தரவாளிகளாக்கப்பட்டு, பரலோக வரத்தின் பங்காளிகளானார்கள்” (4 நெப்பி 1:3); தேசத்தில் சமாதானம் இருந்தது (4 நெப்பி 1:4பார்க்கவும்); பெரும் அற்புதங்கள் நடந்தன ( 4 நெப்பி 1:5, 13பார்க்கவும்); கர்த்தர் அவர்களை அதிகமாய் வர்த்திக்கச் செய்தார் (4 நெப்பி 1:7, 18பார்க்கவும்}); அவர்கள் பலசாலிகளாகவும் விரைவில் பலுகிப்பெருகி, அழகானவர்களாயும் மகிழ்ச்சியானவர்களாயும் இருந்தனர்(4 நெப்பி 1:10பார்க்கவும்); கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த திரளான ஆசீர்வாதங்களால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டனர் (4 நெப்பி 1:11பார்க்கவும்); “தேசத்தில் இருந்த ஜனங்களின் இருதயங்களில் இருந்த தேவ அன்பினிமித்தம் தேசத்தில் பிணக்குகள் இல்லை” (4 நெப்பி 1:15); “அங்கு பொறாமைகளோ பிணக்கோ குழப்பங்களோ, வேசித்தனங்களோ, பொய்யுரைகளோ, கொலைகளோ, எந்த விதமான காம விகாரங்களோ, இருக்கவில்லை. தேவ கரத்தால் சிருஷ்டிக்கப்பட்ட ஜனங்கள் எல்லாருக்குள்ளும் இவர்களைக் காட்டிலும் மிகுந்த மகிழ்ச்சியான ஜனம் நிச்சயமாக இருந்திருக்க முடியாது” (4 நெப்பி 1:16); “அங்கே திருடர்களோ கொலைகாரர்களோ லாமானியரோ அல்லது எந்தப் பிரிவும் இல்லை. அவர்கள் கிறிஸ்துவினுடைய பிள்ளைகளாய் ஒன்றாயிருந்தார்கள். தேவ இராஜ்யத்துக்கு சுதந்தரவாளிகளாக இருந்தார்கள் ” (4 நெப்பி 1:17); அவர்கள் செய்த எல்லா காரியங்களிலும் கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்தார் (4 நெப்பி 1:18பார்க்கவும்).

  14. ஜீன் பி. பிங்காம், “That Your Joy Might Be Full,” Liahona, Nov. 2017, 85.

  15. 4 நெப்பி 1:15 பார்க்கவும்.

  16. Jeffrey R. Holland, “Emissaries to the Church,” Liahona, Nov. 2016, 62.

  17. மரோனி 7:47.

  18. Neil L. Andersen, in “Auxiliary Panels Use New Training Library,” Liahona, Apr. 2011, 76.

  19. மத்தேயு 22:37–40 பார்க்கவும்.

  20. யாக்கோபு 5:61.

  21. மத்தேயு 18:20 பார்க்கவும்.

  22. 1 தீமோத்தேயு 6:15.