2010–2019
ஆசாரியத்துவத்தின் வல்லமை
ஏப்ரல் 2018


ஆசாரியத்துவத்தின் வல்லமை

உங்கள் குடும்பங்களிலும் உங்களுடைய சபை அழைப்புகளிலும் கர்த்தரின் பணிக்கு நீங்கள் தரித்திருக்கிற பரிசுத்த ஆசாரியத்துவத்தை சிறப்பித்தல் முக்கியம்.

தலைவர் ரசல் எம். நெல்சனிடமிருந்து ஒரு புரட்சிகரமான அறிவிப்பை நாம் கேட்டோம். மூப்பர்கள் கிறிஸ்டோபர்சென், ராஸ்பன்ட் மற்றும் தலைவர் ஐரிங்கால் அறிவிக்கப்பட்ட விவரித்தல்களை நாம் கேட்டோம். தலைவர் நெல்சனிடமிருந்து இன்னமும் சொல்லப்படவேண்டியது கர்த்தருடைய தலைவர்களும் ஆசாரியத்துவத் தலைவர்களுமாகிய நீங்கள் உங்கள் பொறுப்புகளில் இப்போது என்ன செய்யப்போகிறீர்களென்று விவரிக்கும். அதற்கு உங்களுக்கு உதவுவதற்கு, நீங்கள் தரித்திருக்கிறதற்கு சம்பந்தப்பட்ட சில அடிப்படை கொள்கைகளை நான் பரிசீலிப்பேன்.

I. ஆசாரியத்துவம்

மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவமென்பது “மனுஷனின் நித்திய ஜீவனைக் கொண்டுவருகிற” (மோசே 1:39) அவருடைய பணியை நிறைவேற்ற பொறுப்பளிக்கப்பட்ட தேவனுடைய தெய்வீக அதிகாரம். 1829ல் இரட்சகரின் அப்போஸ்தலர்களான பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானால், ஜோசப் ஸ்மித் மேலும், ஆலிவர் கௌட்ரி மேலும் இது அருளப்பட்டது (கோ.உ 27:12 பார்க்கவும்). விவரிக்க, நமது சக்திகளுக்கும் அப்பால் இது பரிசுத்தமானதும் வல்லமையுள்ளதாயுமிருக்கிறது.

ஆசாரியத்துவத்தின் திறவுகோல்கள் ஆசாரியத்துவ அதிகாரத்தின் பிரயோகத்தை வழிநடத்த வல்லமைகள். இப்படியாக, மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை, ஜோசப் மற்றும் ஆலிவர் மேல் அப்போஸ்தலர்கள் அருளி, அதன் பிரயோகத்தை வழிநடத்த அவர்களிடத்தில் திறவுகோல்களையும் கொடுத்தார்கள் (கோ.உ 27:12–13 பார்க்கவும்). ஆனால் ஆசாரியத்துவத்தின் அனைத்துத் திறவுகோல்களும் அந்நேரத்தில் அருளப்படவில்லை. திறவுகோல்கள் முழுவதும், ஊழியக்காலமான காலங்களின் நிறைவேறுதலுக்கு (கோ.உ 128:18) அவசியமான திறவுகோல்களும் அறிவும் வரிவரியாகக் (வசனம் 21) கொடுக்கப்படுகிறது. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் கர்த்லாந்து ஆலயத்தில் கூடுதலான திறவுகோல்கள் கொடுக்கப்பட்டன (கோ.உ 110:11–16 பார்க்கவும்). மரித்தவர்களுக்கு ஞானஸ்நானம் போன்ற, அந்த நேரத்தில் கொடுக்கப்படுகிற கூடுதலான நியமிப்புகளில் ஆசாரியத்துவ அதிகாரத்தை வழிநடத்த இந்த திறவுகோல்கள் கொடுக்கப்பட்டன.

மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் ஒரு அந்தஸ்தோ அல்லது ஒரு அடையாளச்சீட்டோ இல்லை. அவருடைய பிள்ளைகளுக்காக தேவனின் பணியின் பலனுக்காக பயன்படுத்த நம்பிக்கையில் தரித்திருக்கப்பட்ட இது ஒரு தெய்வீக வல்லமை. ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற ஆண்கள்தான் “ஆசாரியத்துவம்” இல்லை, என்பதை எப்போதுமே நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். “ஆசாரியத்துவமும் பெண்களும்” என குறிப்பிடுவது பொருத்தமாயிருக்காது. “ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்களும் பெண்களும்” என நாம் குறிப்பிடவேண்டும்

II. சேவையின் ஒரு ஊழியம்

இப்போது ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்களிடமிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்ன எதிர்பார்க்கிறார், அவரிடத்தில் நாம் எவ்வாறு ஆத்துமாக்களைக் கொண்டுவருவோமென்பதை நாம் கருத்தில்கொள்வோம்.

தலைவர் ஜோசப் எப். ஸ்மித் போதித்தார், “சபை மிகச்சரியாக நிறுவப்பட்டது என உண்மையில் சொல்லப்பட்டது. அவர்கள் மேலிருக்கிற பொறுப்புகளுக்கு முற்றிலுமான ஜீவனில்லை என்பது மட்டுமே பிரச்சினை. அவர்களுக்குள்ள தேவைகளுக்கு முழுமையாக அவர்கள் விழித்துக் கொள்ளுகிறவர்களாகும்போது அவர்கள் மிக உண்மையுள்ளவர்களாக, தங்கள் கடமைகளை நிறைவேற்றுவார்கள், கர்த்தருடைய பணி முழு பெலமாகவும் அதிக வல்லமையுள்ளதாகவுமாகி, உலகத்தில் செல்வாக்கு பெறும்.” 1

தலைவர் ஸ்மித் மேலும் எச்சரித்தார்,

“பரிசுத்த ஆசாரியத்துவத்துடனும் ஒழுங்குகளிலும் பல அலுவல்களுக்கு சம்பந்தப்பட்ட, தேவன் கொடுத்த மரியாதையின் பட்டங்கள், பயன்படுத்தவோ, அவைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பட்டங்களாக கருதப்படவோ கூடாது. அவைகள் அலங்கரிப்புக்காக இல்லை, அவைகள் அதிகாரத்தைக் காட்டுவதற்குமில்லை, மாறாக சேவிக்க ஏற்றுக்கொண்டிருக்கிற ஒரு எஜமானரின் பணியின் தாழ்மையான சேவைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது ....

“ ...ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக நாம் பிரயாசப்பட்டுக்கொண்டிருக்கிறோம் மற்றும் இது நம்மீது சுமத்தப்பட்ட பெரிய கடமை என நாம் உணரவேண்டும். ஆகவே, தேவனின் அன்பிற்காக, மனிதர்களின் இரட்சிப்புக்காக, பூமியின்மேல் தேவ இராஜ்ஜியத்தின் வெற்றிக்காக நமக்கு தேவைப்பட்டால் எல்லாவற்றையும் தியாகம் செய்ய விருப்பத்தை நாம் உணரவேண்டும்” 2 என தலைவர் ஸ்மித் எச்சரிக்கையையும் செய்தார்,

III. ஆசாரியத்துவத்தின் அலுவல்கள்

கர்த்தருடைய சபையில், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ அலுவல்களுக்கு வெவ்வேறான நடவடிக்கைகளிருக்கின்றன. “வெளியில் பரந்துபட்டிருக்கிற வெவ்வேறு பிணையங்களின்மேல் நிரந்தர தலைவர்கள் அல்லது ஊழியக்காரர்கள்” (கோ.உ 124:134) என பிரதான ஆசாரியர்களை கோட்பாடும் உடன்படிக்கைகளும் குறிப்பிடுகிறது. என்னுடைய சபையின் நிரந்தர ஊழியக்காரர்கள்” (கோ.உ 124:137) என மூப்பர்களை இது குறிக்கிறது. இந்த தனியான நடவடிக்கைகளில் இங்கே பிற போதனைகள்.

ஆவிக்குரிய காரியங்களில் ஒரு பிரதான ஆசாரியன் கடமையாற்றி நிர்வகிக்கிறார் (கோ.உ 107:10, 12 பார்க்கவும்). மேலும், தலைவர் ஜோசப் எப். ஸ்மித் போதித்ததைப்போல ஒரு பிரதான ஆசாரியனாக அவர் நியமிக்கப்பட்ட அளவில், பிரயத்தனத்திற்கு தகுதியான வயதுவந்த, இளமையானவர்களுக்கு முன்பாக ஒரு எடுத்துக்காட்டை அமைக்கவும், வயதின் அனுபவத்தின் பலனை வாலிபர்களுக்குக் கொடுத்து, அப்படியாக அவர் வசிக்கிற சமுதாயத்தின் மத்தியில் தனிப்பட்டவராக சக்தியுள்ளவராகி, போதனையில் மட்டுமல்ல மிகக்குறிப்பாக எடுத்துக்காட்டால் நீதியுள்ள ஆசிரியராக ஒரு இடத்தில் தன்னையே வைக்க அவர் கடமைப்பட்டவரென அவர் உணரவேண்டும்.” 3

“ஒரு மூப்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரு ஊழியக்காரர். . . . தன்னுடைய சகமனிதர்களுக்கு ஊழியம் செய்வதில் அவருடைய எஜமானுக்குப் பதிலாக அந்த இடத்தில் நிற்க அவர் ஆணையிடப்பட்டிருக்கிறார். அவர் கர்த்தரின் பிரதிநிதி” 4 என ஒரு மூப்பரின் கடமையாக, பன்னிருவர் குழுமத்தின் மூப்பர் ப்ரூஸ் ஆர். மெக்கான்கி போதித்தார்.

ஒருவர் “ஒரு மூப்பராக மட்டுமே” இருக்கமுடியுமென்ற கருத்தை மூப்பர் மெக்கான்கி விமர்சித்தார். “சபையிலுள்ள ஒவ்வொரு மூப்பரும் சபையின் தலைவரைப்போன்றளவுக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிறார்கள்” … அவர் சொன்னார், “ஒரு மூப்பர் என்றால் என்ன? அவர் ஒரு மேய்ப்பர். நல்ல மேய்ப்பனின் மந்தையில் சேவை செய்துகொண்டிருக்கிற ஒரு மேய்ப்பர்”. 5

நல்ல மேயப்பனின் மந்தையில் ஊழியம் செய்ய இந்த முக்கியமான நடவடிக்கைகளில், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தில் பிரதான ஆசாரியர்கள் மற்றும் மூப்பர்களுக்கிடையிலுள்ள அலுவல்களில் வித்தியாசமில்லை. கோட்பாடும் உடன்படிக்கைகளுமின் பாகம் 107ல் “ஆவிக்குரிய காரியங்களை நிர்வகிப்பதில், ஓர் மூப்பர் [அல்லது ஆரோனிய ஆசாரியத்துவத்தின் எந்த அலுவலிலும்], தலைமையின் வழிநடத்துதலின்கீழ் தங்களுடைய சொந்த தீர்மானத்தின்படி கடமையாற்ற மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் முறைமையின்படி பிரதான ஆசாரியர்களுக்கு உரிமையிருக்கிறது” (கோ.உ 107:10;  12வது வசனத்தையும் பார்க்கவும்) என கர்த்தர் அறிவிக்கிறார்.

மார்மன் புஸ்தகத்தில் தீர்க்கதரிசி யாக்கோபுவால் போதிக்கப்பட்ட கொள்கை, ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற அனைவருக்கும் மிகமுக்கியமானது. அவனும் அவனுடைய சகோதரனான யோசேப்பும், ஆசாரியர்கள் மற்றும் ஜனங்களின் ஆசிரியர்களாக அபிஷேகிக்கப்பட்ட பின்பு, “சகல கருத்தோடும் தேவனுடைய வார்த்தையை ஜனங்களுக்குப் போதிக்கவில்லையெனில் ஜனங்களின் பாவங்களை எங்களின் சொந்த சிரசுகளின்மீது சுமப்பவர்களாகவும் எங்களின்மீது சுமையைத் தரித்துக்கொள்ளவும் பொறுப்பாளிகளாயிருந்து தேவனிடத்தில் எங்கள் ஸ்தானத்தை நிறைவேற்றினோம்” (யாக்கோபு 1:19) என அவன் அறிவித்தான்.

சகோதரரே, ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்களாக நமது பொறுப்புகள் மிகமுக்கியமான காரியங்கள். தங்களுடைய தகவல்களைக் கொடுப்பதிலும், தங்களுடைய பிற செயல்களை நடப்பிப்பதிலும் உலகத்தரங்களுடன் பிற நிறுவனங்கள் திருப்தியடையலாம். ஆனால், தேவனின் ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற நமக்கு, தேவனின் சிலஸ்டியல் இராஜ்ஜியத்திற்குள் போக நிர்வகிக்கிற தெய்வீக வல்லமையையும் இருக்கிறது. கோட்பாடும் உடன்படிக்கைகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட முன்னுரையில் கர்த்தர் விவரித்திருக்கிற நோக்கமும் பொறுப்பும் நமக்கிருக்கிறது. பின்வருபவற்றை நாம் உலகத்திற்கு பிரகடனப்படுத்தவேண்டும்.

“சகல மனுஷரும், உலகத்தின் இரட்சகரான கர்த்தராகிய தேவனின் நாமத்தில் பேசும்படிக்கும்,

“விசுவாசமும் பூமியின்மீது அதிகரிக்கப்படும்படிக்கும்,

“எனது நித்திய உடன்படிக்கை நிலைவரப்படும்படிக்கும்,

“எனது பூரண சுவிசேஷம் பலவீனராலும், பேதையராலும், பூமியின் கடையாந்தர மட்டுமாகவும், ராஜாக்களுக்கும் தேசாதிபதிகளுக்கும் முன்பாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது” (கோ.உ 1:20–23).

இந்த தெய்வீக கட்டளையை நிறைவேற்ற நமது ஆசாரியத்துவ அழைப்புகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில் நாம் உண்மையுள்ளவர்களாயிருக்கவேண்டும் (கோ.உ 1:20–23 பார்க்கவும்). “ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவராக ஒருவர் மாறும்போது அவர் கர்த்தரின் ஒரு பிரதிநிதியாக மாறுகிறார். அவர் கர்த்தரின் பணியிலிருப்பதாக அவருடைய அழைப்பைப்பற்றி அவர் நினைக்கவேண்டும். இதுதான் ஆசாரியத்துவத்தை நிறைவேற்றுதல் என்பதற்கு அர்த்தம்” 6 என ஆசாரியத்துவத்தை நிறைவேற்றுதல் என்றால் என்ன என்பதை மூப்பர் ஹெரால்ட் பி. லீ விளக்கினார்.

ஆகவே, சகோதரரே, அவருடைய ஊழியக்காரர்கள் மூலமாக அவர் செய்துவந்த, அவருடைய குமாரர்கள் அல்லது குமாரத்திகள் ஒருவருக்கு உதவும்படி கர்த்தரே உங்களிடம் கேட்டால், அதை நீங்கள் செய்யமாட்டீர்களா? நீங்கள் அதைச் செய்தால், அவருடைய வாக்களிக்கப்பட்ட உதவியைச் சார்ந்து “கர்த்தருடைய பணியில்” அவருடைய பிரதிநிதியாக நீங்கள் செயல்படமாட்டீர்களா?

ஆசாரியத்துவத்தை நிறைவேற்றுவதைப்பற்றி மூப்பர் லீயிடம் மற்றொரு பாடமிருக்கிறது. ஒரு பொருளின் மேல் நீங்கள் ஒரு பூதக்கண்ணாடியை பிடித்தால், உங்களின் வெறும் கண்களால் பார்க்கிறதைவிட அந்த பொருளை பெரிதாகக் காட்டுகிறது, அது ஒரு பூதக்கண்ணாடி. இப்போது யாராவது தங்கள் ஆசாரியத்துவத்தை நிறைவேற்றினால், அதாவது அவர்கள் அதை முதலில் நினைத்ததைவிட பெரிதாகச் செய்து, அது இப்படியிருந்தது என நினைக்கிற எல்லோரையும்விட மிகமுக்கியமானதாகிறது, அந்த வழியில்தான் நீங்கள் உங்கள் ஆசாரியத்துவத்தை நிறைவேற்றுகிறீர்கள்”. 7

ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற ஒருவர் தனது ஆசாரியத்துவ பொறுப்புகளை நிறைவேற்றுகிறதைப்பற்றி இங்கே ஒரு எடுத்துக்காட்டு. ஐடஹோவில் பிணைய மாநாட்டில் என் கூட்டாளியாயிருந்த மூப்பர் ஜெப்ரி டி. எரிக்சன்னிடமிருந்து இதை நான் கேட்டேன். திருமணமான இளம் மூப்பராகவும், மிக ஏழ்மையிலுமிருந்த ஜெப்ரி தனது கடைசி ஆண்டு கல்லூரிப் படிப்பை முடிக்கமுடியாமல் கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டு நல்ல ஊதியம் கிடைக்கிற ஒரு வேலையை ஏற்றுக்கொள்ள தீர்மானித்தார். சில நாட்களுக்குப் பின்னர் அவருடைய மூப்பர் குழுமத் தலைவர் அவருடைய வீட்டிற்கு வந்தார். “நான் தரித்திருக்கிற ஆசாரியத்துவ திறவுகோல்களின் முக்கியத்துவத்தை நீ புரிந்திருக்கிறாயா?” தலைவர் கேட்டார். புரிந்திருக்கிறேன் என்று ஜெப்ரி சொன்னபோது, கல்லூரிப்படிப்பை நிறுத்துகிற அவனது எண்ணத்தைக் கேட்டதிலிருந்து அவருடைய தூக்கமில்லாத இரவுகளில் கர்த்தர் அவரைத் தொந்திரவு செய்து இந்த செய்தியை ஜெப்ரிக்குக் கொடுக்கும்படியாக அவரிடம் கூறினார். “உன்னுடைய மூப்பர் குழுமத் தலைவராக, கல்லூரிப் படிப்பை நிறுத்தவேண்டாமென நான் ஆலோசனையளிக்கிறேன். இது கர்த்தரிடமிருந்து உனக்கு வந்த செய்தி.” ஜெப்ரி கல்லூரியைத் தொடர்ந்தான். பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு வெற்றிகரமான வர்த்தகராக நான் அவனைப் பார்த்தேன், “அந்த [ஆலோசனை] என் வாழ்க்கையில் எல்லா வித்தியாசத்தையும் உண்டாக்கியதென” ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிறவர்கள் கூட்டத்தில் அவன் கூறியதை நான் கேட்டேன்.

தனது ஆசாரியத்துவத்தையும் அழைப்பையும் ஆசாரியத்துவத்தைத் தரித்திருந்த ஒருவர் நிறைவேற்றி, அது மற்றொரு தேவனின் பிள்ளையின் வாழ்க்கையில் “எல்லா வித்தியாசத்தையும்” உண்டாக்கியது

IV. குடும்பத்தில் ஆசாரியத்துவம்

இப்போதுவரை சபையில் ஆசாரியத்துவத்தின் செயல்பாடுகளைப்பற்றி நான் பேசிக்கொண்டிருக்கிறேன். இப்போது குடும்பத்தில் ஆசாரியத்துவத்தைப்பற்றி நான் பேசுவேன். திறவுகோல்களிலிருந்து நான் ஆரம்பிக்கிறேன். அந்த நடவடிக்கைக்காக திறவுகோல்களைத் தரித்திருக்கிறவரின் வழிநடத்துதலின் கீழ் மட்டுமே ஆசாரியத்துவ அதிகாரம் பிரயோகப்படுத்தப்படலாம் என்ற கொள்கை சபையில் அடிப்படையாகும் ஆனால் குடும்பத்தில் ஆசாரியத்துவ அதிகாரத்தைப் பிரயோகப்படுத்த இது பொருந்துகிறதில்லை. 8 தான் தரித்திருக்கிற ஆசாரியத்துவ அதிகாரத்தால், ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற ஒரு தகப்பன் தன் குடும்பத்துக்குத் தலைமை தாங்குகிறான். தனது குடும்பத்தினருக்கு ஆலோசனையளிக்கும்படியாகவும், குடும்ப கூட்டங்களைக் கூட்ட, தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களைக் கொடுக்க, அல்லது குடும்பத்தினருக்கு அல்லது மற்றவர்களுக்கு குணமளிக்கும் ஆசீர்வாதங்களைக் கொடுக்க ஆசாரியத்துவ திறவுகோல்களின் வழிநடத்துதலை அல்லது அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளத் தேவையில்லை.

படம்
குடும்பம் ஒன்றாக படித்தல்

தங்களுடைய குடும்பத்தில் தங்கள் ஆசாரியத்துவத்தை தகப்பன்மார்கள் நிறைவேற்றினால், அது வேறு எதுவும் செய்யக்கூடிய அளவில் சபையின் ஊழியத்தை அதிகரிக்கும். மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற தகப்பன்மார்கள், தங்களுடைய குடும்பத்தினருக்கு ஆசீர்வாதங்களைக் கொடுக்க ஆசாரியத்துவத்தின் வல்லமையைக் கொண்டிருக்கும்படியாக அவர்கள் கற்பனைகளைக் கைக்கொள்ளவேண்டும். ஆசீர்வாதங்களைக் கேட்க குடும்பத்தினர் விரும்பும்படியாக தகப்பன்மார்கள் அன்பான குடும்ப உறவுகளை வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.

படம்
ஆசாரியத்துவ ஆசீர்வாதம்

குடும்ப பிரகடனம் போதிப்பதைப்போல, 9 தகப்பன்மார்களே, உங்கள் மனைவிகளை “சமபங்குதாரர்களாக” வைத்து செயல்படுங்கள். தகப்பன்மார்களே, உங்கள் ஆசாரியத்துவ அதிகாரத்தின் வல்லமையையும் செல்வாக்கையும் பிரயோகப்படுத்த உங்களுக்கு சிலாக்கியமிருக்கும்போது “போதகத்தாலும், நீடிய சாந்தத்தாலும், தயவாலும், சாந்தத்தாலும் ஊக்கமுள்ள அன்பாலும்” (கோ.உ 121:41) அதைச் செய்யுங்கள். ஆசாரியத்துவ அதிகாரத்தை பிரயோகப்படுத்துவதற்கான அந்த உயர்ந்த தரம், குடும்பத்தில் மிகமுக்கியமானது. அவர் சபையின் தலைவரான பின்னர் தலைவர் ஹெரால்ட் பி. லீ இந்த வாக்களிப்பைக் கொடுத்தார். “உங்கள் வீட்டில் ஒரு குழப்பமிருக்கும்போது, மோசமான வியாதியிலிருக்கும்போது அல்லது ஒரு பெரிய தீர்மானத்தை எடுக்க வேண்டியதிருக்கும்போதைவிட, நீங்கள் தரித்திருக்கிற ஆசாரியத்துவத்தின் வல்லமை அதிக அற்புதமாக ஒருபோதுமிருக்காது. சர்வவல்லமையுள்ள தேவனின் வல்லமையாயிருக்கிற ஆசாரியத்துவத்தின் வல்லமை அடங்கியிருப்பதில், அப்படியிருக்க கர்த்தருடைய சித்தமிருந்தால் அது அற்புதங்களை நடத்தும் வல்லமை, ஆனால், அந்த ஆசாரியத்துவத்தை நாம் பயன்படுத்தும்படியாக, அதைப் பிரயோகப்படுத்த நாம் தகுதியுள்ளவர்களாயிருக்கவேண்டும். இந்தக் கொள்கையைப் புரிந்துகொள்ள தோல்வி, அந்த மகத்தான ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பெற ஒரு தோல்வியாகும்”. 10

என்னுடய அன்பான சகோதரரே, உங்கள் குடும்பங்களிலும் உங்களுடைய சபை அழைப்புகளிலும் கர்த்தரின் பணிக்கு நீங்கள் தரித்திருக்கிற பரிசுத்த ஆசாரியத்துவத்தை நிறைவேற்றுதல் முக்கியம்.

ஆசாரியத்துவத்துக்கு சொந்தக்காரராயிருக்கிற அவரைக்குறித்து நான் சாட்சியளிக்கிறேன். அவருடைய பாவநிவர்த்தியின் பாடுகள் மற்றும் தியாகத்தின், உயிர்த்தெழுதல் மூலமாக அநித்தியத்தின் நிச்சயமும், நித்திய ஜீவனுக்கான சிலாக்கியமும் சகல ஆண்களுக்கும் பெண்களுக்குமிருக்கிறது. நமது நித்திய தேவனின் இந்த மகத்தான பணியில் நம் பங்கைச் செய்வதில் நாம் ஒவ்வொருவரும் உண்மையுள்ளவர்களாயும் சிரத்தையுள்ளவர்களாயுமிருக்கவேண்டும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

குறிப்புகள்

  1. Teachings of Presidents of the Church: Joseph F. Smith (1998), 343.

  2. Teachings: Joseph F. Smith, 340, 343.

  3. Joseph F. Smith, Gospel Doctrine, 5th ed. (1939), 182.

  4. Bruce R. McConkie, “Only an Elder,” Ensign, June 1975, 66; emphasis in original not preserved.

  5. Bruce R. McConkie, “Only an Elder,” 66; emphasis in original not preserved.

  6. Teachings of Presidents of the Church: Harold B. Lee (2000), 93.

  7. The Teachings of Harold B. Lee, ed. Clyde J. Williams (1996), 499.

  8. See Dallin H. Oaks, “Priesthood Authority in the Family and the Church,” Liahona, Nov. 2005, 24–27.

  9. See “The Family: A Proclamation to the World,” Liahona, May 2017, 145.

  10. Teachings: Harold B. Lee, 97.