2010–2019
சபைக்கு வெளிப்படுத்தல், நமது வாழ்க்கைக்கு வெளிப்படுத்தல்
ஏப்ரல் 2018


சபைக்காக வெளிப்படுத்தல், நமது வாழ்க்கைக்காக வெளிப்படுத்தல்

வரும் நாட்களில், பரிசுத்த ஆவியின் வழிநடத்தும், வழிகாட்டும், ஆறுதலளிக்கும், மற்றும் இடைவிடாத செல்வாக்கில்லாமல் ஆவிக்குரிய விதமாக பிழைத்திருத்தல் சாத்தியமில்லை.

என் அன்பு சகோதர சகோதரிகளே, பொது மாநாட்டின் இந்த ஞாயிற்றுக்கிழமையில் உங்களுடன் ஈஸ்டர் கொண்டாடுவது எத்தனை மகிமையான சிலாக்கியமாக இருந்திருக்கிறது! பூமியில் எப்போதும் நடந்திருக்கிற மிக முக்கியமானவரை ஆராதித்து, பூமியில் எப்போதும் நிகழ்ந்திருக்கிற மிக முக்கிய நிகழ்ச்சியாக நினைவுகூர்வதை விட பொருத்தமான எதுவும் இருக்க முடியாது. இந்த பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில், கெத்சமனே தோட்டத்தில் தன் எல்லையில்லா பாவநிவர்த்தியை தொடங்கியவரை நாம் ஆராதிக்கிறோம். நம் ஒவ்வொருவரின் பாவங்களுக்காகவும் பலவீனங்களுக்காகவும், அவர் பாடுபட சித்தமாயிருந்தார், அப்பாடு அவரை” ஒவ்வொரு துவாரத்திலும் இருந்து இரத்தம் சிந்த வைத்தது.1 அவர் கல்வாரி சிலுவையில் சிலவையிலறையப்பட்டார்,2 அவர் நமது பரலோக பிதாவின் பிள்ளைகளில் முதலில் உயிர்த்தெழுந்தவராக மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். நான் அவரை நேசிக்கிறேன், அவர் ஜீவிக்கிறார் என சாட்சியளிக்கிறேன்! இச்சபையை வழிநடத்துபவர் அவரே.

இரட்சகரின் எல்லையில்லா பாவநிவர்த்தி இல்லாமல், நம்மில் ஒருவரும்கூட நமது பரலோக பிதாவிடம் திரும்பும் நம்பிக்கை பெற்றிருக்கமாட்டோம். அவரது பாவநிவர்த்தி இல்லாமல் மரணம்தான் முடிவாக இருந்திருக்கும். நமது இரட்சகரின் பாவநிவர்த்தி, நித்திய ஜீவனை சாத்தியமாக்கியது, அனைவருக்கும் அழியாமையை உண்மையாக்கியது.

தலைவர் தாமஸ் எஸ். மான்சன் திரை வழியே சென்றுவிட்டார் என்ற தொலைபேசி அழைப்பினால் நாங்கள் எழுப்பப்பட்டபோது, ஜனவரி 2, 2018ல் அவரது சீஷர்களாகிய என் மனைவி வெண்டிக்கும் எனக்கும் அவர் கொடுக்கிற அதிகமான ஊழியம் மற்றும் சமாதானத்தினிமித்தம் ஆறுதலை உணர்ந்தோம்.

படம்
தலைவர் ரசல் எம். நெல்சனும் தலைவர் தாமஸ் எஸ். மான்சனும்

நாம் தலைவர் மான்சனை இழந்திருக்கிறோம். அவரது வாழ்க்கையையும் பாரம்பரியத்தையும் நாங்கள் கனம் பண்ணுகிறோம். ஒரு ஆவிக்குரிய மாமனிதர், அவரை அறிந்தவர்கள் மற்றும் அவர் நேசித்த சபை மீதும் அவர் அழிக்கக்கூடாத முத்திரையை விட்டுச் சென்றிருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 14, 2018ல் சால்ட் லேக் ஆலயத்தின் மேல் அறையில், பிரதான தலைமை கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு எளிய ஆனால் பரிசுத்த மாதிரியில் மறுசீரமைக்கப்பட்டது. அப்போஸ்தலர்களால் எடுக்கப்பட்ட முந்தைய நடவடிக்கையை உறுதிசெய்ய பின்னர் நேற்றைய காலையின் பயபக்தியான கூட்டத்தில் உலகெங்குமுள்ள சபையார் தங்கள் கைகளைத் தூக்கினர். உங்கள் ஆதரவுக்காக நான் தாழ்மையுடன் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

நான் நிற்கிற தோள்களுக்கு சொந்தக்காரர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 34 ஆண்டுகளாக பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தில் சேவை செய்ததும் சபையின் முந்தைய 10 தலைவர்களை நேரடியாக அறிந்ததும் என் சிலாக்கியம். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நான் அதிகம் கற்றிருக்கிறேன்.

என் முன்னோருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது அனைத்து எட்டு கொள்ளு பெற்றோரும் ஐரோப்பாவில் சபைக்கு மனமாறியவர்கள். அந்த ஒவ்வொரு பலத்த ஆத்துமாக்களும் சீயோனுக்கு வர அனைத்தையும் தியாகம் செய்தனர். எனினும் பின்வந்த தலைமுறைகளில் அனைவரும் ஒப்புக்கொடுத்தலுடன் இல்லை. அதன் விளைவாக நான் சுவிசேஷத்தை மையமாகக் கொண்ட வீட்டில் வளர்க்கப்படவில்லை.

படம்
தலைவர் நெல்சனின் பெற்றோர்
படம்
இளம் தலைவர் நெல்சனின் குடும்பம்

நான் என் பெற்றோரை வணங்குகிறேன். அவர்கள் எனக்கு உலகமாயிருந்தனர், எனக்கு முக்கிய பாடங்களைக் கற்பித்தனர். எனக்கும் என் உடன்பிறந்தோருக்கும் அவர்கள் உருவாக்கிய மகிழ்ச்சியான வீட்டு வாழ்க்கைக்காக அவர்களுக்கு என்னால் நன்றி சொல்ல முடியாது. ஆயினும் நான் ஏதோவொன்றை இழப்பதாக அறிந்தேன். ஒருநாள் நான் தெருவண்டியில் ஏறி சபையைப்பற்றிய ஒரு புஸ்தகத்தை கண்டு பிடிக்க எல்.டி.எஸ் புத்தகக் கடைக்கு சென்றேன். சுவிசேஷத்தைப்பற்றி அறிய நான் விரும்பினேன்.

நான் ஞானவார்த்தையைப் புரிந்து கொண்டேன், அந்த நியாயப்பிரமாணத்தை என் பெற்றோர் கடைபிடிக்க விரும்பினேன். ஆகவே ஒருநாள் மிகவும் இளைஞனாக இருந்தபோது அடித்தளத்துக்குச் சென்று, கான்கிரீட் தரையில் எல்லா பாட்டில் மதுவையும் உடைத்தேன்! என் அப்பா என்னைத் தண்டிப்பார் என எதிர்பார்த்தேன், ஆனால் அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

நான் பெரியவனாகி, பரலோக பிதாவின் மகத்துவத்தை புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அடிக்கடி எனக்குள்ளே சொன்னேன், “எனக்கு இன்னொரு கிறிஸ்துமஸ் பரிசு வேண்டாம். நான் என் பெற்றோருடன் முத்திரிக்கப்படவே விரும்புகிறேன்.” என் பெற்றோர் 80 வயதைக் கடக்கும்வரை நான் ஏங்கிய, நடக்காத அது நடந்தது.. அந்த நாளில் நான் அடைந்த மகிழச்சியை முழுவதும் சொல்ல முடியாது3 அவர்களது முத்திரித்தல் மற்றும் நான் அவர்களோடு முத்திரிக்கப்பட்ட மகிழ்ச்சியை நான் ஒவ்வொரு நாளும் உணர்கிறேன்.

படம்
ரசல் மற்றும் டான்ட்செல் நெல்சன்

1945ல் நான் மருத்துவக் கல்லூரியில் இருந்தபோது, சால்ட் லேக் ஆலயத்தில் டாண்சல் ஒய்ட்டை திருமணம் செய்தேன். அவளும் நானும் அழகிய ஒன்பது மகள்களுடனும், ஒரு அருமையான மகனுடனும் ஆசீர்வதிக்கப்பட்டோம். இன்று வளர்ந்து கொண்டிருக்கும் எங்கள் குடும்பம் என் வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சிகளில் ஒன்று.

படம்
தலைவர் மற்றும் சகோதரி நெல்சனும் அவர்களது மகள்களும்
படம்
தலைவர் நெல்சனும் அவரது மகனும்

2005ல் திருமணத்துக்கு 60 வருடங்கள் கழித்து என் அருமை டாண்சல் எதிர்பாராத விதமாக திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்டாள். கொஞ்ச காலத்துக்கு என் சோகம் விலகாமலிருந்தது. ஆனால் ஈஸ்டரின் செய்தியும், உயிர்த்தெழுதலின் வாக்குத்தத்தமும் என்னைத் தாங்கின.

படம்
வெண்டியும் தலைவர் நெல்சனும்

பின் கர்த்தர் என் பக்கத்தில் வெண்டி வாட்சனைக் கொண்டு வந்தார். ஏப்ரல் 6, 2006ல் நாங்கள் சால்ட் லேக் ஆலயத்தில் முத்திரிக்கப்பட்டோம். நான் அவளை மிகவும் நேசிக்கிறேன். அவள் ஒரு அசாதாரண பெண், எனக்கும், எங்கள் குடும்பத்துக்கும், மொத்த சபைக்கும் அவள் மாபெரும் ஆசீர்வாதம்.

இந்த ஒவ்வொரு ஆசீர்வாதங்களும், பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதல்களைத் தேடி செவிகொடுத்ததன் விளைவு. தலைவர் லோரன்ஸோ ஸ்நோ சொன்னார், “இது ஒவ்வொரு பிற்காலப் பரிசுத்தவானின் சிலாக்கியம் ... நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், ஆவியின் வெளிப்படுத்தல்களைப் பெறுவது நமது உரிமை.” 4

சபைத்தலைவராக எனது புதிய அழைப்பு வந்ததிலிருந்து, ஆவியானவர் என் மனதில் திரும்பத் திரும்ப உணர்த்திய காரியங்களில் ஒன்று, அவரது மனதையும் சித்தத்தையும் வெளிப்படுத்த கர்த்தர் எவ்வளவு சித்தமாயிருக்கிறார் என்பதுவே. வெளிப்படுத்தல் பெறும் சிலாக்கியம் தன் பிள்ளைகளுக்கு தேவனின் மிகப்பெரிய வரங்களில் ஒன்று.

பரிசுத்த ஆவியானவரின் வெளிப்படுத்தல்கள் மூலம் நமது நீதியான முயற்சிகளில் கர்த்தர் நமக்கு உதவுவார். ஒரு அறுவைச் சிகிச்சை அறையில், ஒரு நோயாளி அருகில்—ஒரு முன்பு நடந்திராத முறையை எப்படி செய்வது என உறுதியில்லாமல் நின்றிருக்கிறேன்—என் மனதில் பரிசுத்த ஆவியானவர் அந்த முறையை படம் வரைந்து காட்டினார் என்பதை நான் நினைவுகொள்கிறேன். 5

வெண்டியிடம் என் முன்மொழிதலை பலப்படுத்த, நான் அவளிடம் சொன்னேன், “வெளிப்படுத்தலையும் அதை எப்படி பெறுவது என்பது பற்றியும் எனக்குத் தெரியும்.” நான் அறிந்தபடி அவளது விசேஷித்த குணத்தின்படி, எங்களைப்பற்றி அவள் ஏற்கனவே கேட்டு தன் சொந்த வெளிப்படுத்தலை பெற்றுவிட்டிருக்கிறாள், அது அவளுக்கு ஆம் சொல்லும் தைரியத்தைக் கொடுத்தது.

பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் அங்கத்தினராக, வெளிப்படுத்தலுக்காக நான் தினமும் ஜெபித்தேன், அவர் என் இருதயத்திலும் மனதிலும் பேசிய ஒவ்வொரு முறையும் கர்த்தருக்கு நன்றி சொன்னேன்.

அந்த அற்புதத்தை கற்பனை செய்யுங்கள்! நமது சபை அழைப்பு எதுவானாலும், நாம் நமது பரலோக பிதாவிடம் ஜெபித்து, வழிநடத்துதல் பெறலாம், ஆபத்துக்கள் மற்றும் கவனச்சிதறலைப்பற்றி எச்சரிக்கப்படலாம், நாமாக செய்யமுடியாதவற்றை சாதிக்க சாத்தியப்படுத்தப்படலாம். நாம் உண்மையாகவே பரிசுத்த ஆவியைப் பெற்று, அவரது உணர்த்துதலைப் பிரித்தறிந்து புரிந்தால், பெரிய மற்றும் சிறிய காரியங்களில் நாம் வழிநடத்தப் படுவோம்.

அண்மையில் இரண்டு ஆலோசகர்களைத் தேர்வு செய்யும் தைரியமான கடமையை எதிர்கொண்டபோது, நான் நேசிக்கிற மதிக்கிற பன்னிரண்டு பேரில் எப்படி இருவரை மட்டும் தேர்வு செய்வது என ஆச்சரியப்பட்டேன்.

நல்ல உணர்த்துதல், நல்ல தகவல் அடிப்படையில்தான் இருக்கிறது என நான் அறிவதால், நான் ஜெபத்துடன் ஒவ்வொரு அப்போஸ்தலரையும் தனித்தனியே சந்தித்தேன். 6 பின்னர் ஆலயத்தில் தனியறையில் தனியாக தொடர்புபடுத்தி கர்த்தரின் சித்தத்தை கேட்டேன். பிரதான தலைமையில் தலைவர் டாலின் எச். ஓக்ஸையும், தலைவர் ஹென்றி பி. ஐரிங்கையும் ஆலோசகர்களாக பணிசெய்ய தேர்வு செய்யுமாறு கர்த்தர் எனக்கு அறிவுறுத்தினார், என நான் சாட்சியளிக்கிறேன்.

அதுபோலவே, மூப்பர் கெரிட் டபிள்யூ. காங் மற்றும் மூப்பர் யூலிசஸ் சோர்ஸ் அப்போஸ்தலர்களாக நியமிக்கப்பட அழைப்பை கர்த்தர் உணர்த்தினார் என நான் சாட்சியளிக்கிறேன். இந்த தனித்துவம் வாய்ந்த சேவையின் சகோதரத்துவத்துக்கு நானும் நாமும் உங்களை வரவேற்கிறோம்.

பிரதான தலைமை மற்றும் பன்னிருவர் ஆலோசனைக்குழுவை நாங்கள் கூட்டும்போது, எங்கள் கூடும் அறைகள் வெளிப்படுத்தலின் அறைகள் ஆகின்றன. ஆவி தெளிவாக பிரசன்னமாகி இருக்கிறது. நாம் குழப்பமான காரியங்களோடு போராடும்போது, ஒவ்வொரு அப்போஸ்தலரும் தன் சிந்தனைகளையும் கருத்தையும் சுதந்திரமாக தெரிவிக்கும்போது, சிலிர்க்க வைக்கும் முறை திறக்கிறது. முதல் பார்வையில் நாங்கள் வேறுபட்டாலும், நாங்கள் ஒருவருக்கொருவர் உணர்கிற அன்பு நிரந்தரமானது. நமது ஒற்றுமை அவரது சபைக்கு கர்த்தரின் சித்தத்தைப் பிரித்தறிய நமக்கு உதவுகிறது.

எங்கள் கூட்டங்களில் பெரும்பான்மை ஒருபோதும் ஆள்வதில்லை. ஒருவருக்கொருவர் ஜெபத்துடன் செவிமடுக்கிறோம், நாங்கள் ஒன்றாகும்வரை ஒருவருக்கொருவருடன் பேசுகிறோம். பின்பு நாங்கள் முற்றிலும் ஒருமனப்படும்போது, பரிசுத்த ஆவியானவரின் ஒன்றிணைக்கும் செல்வாக்கு, மெய்சிலிர்க்க வைக்கிறது. “ஒற்றுமை உணர்ச்சியால் நாம் தேவனிடமிருந்து வல்லமை பெறுகிறோம்,” 7 என சொன்னபோது தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் அறிந்ததை நாங்கள் அனுபவிக்கிறோம். பிரதான தலைமை அல்லது பன்னிருவர் குழுமத்தின் யாரும், தன் சொந்த தீர்ப்பை கர்த்தரின் சபைக்கான தீர்மானங்களாக ஒருபோதும் விடுவதில்லை!

சகோதர சகோதரிகளே, கர்த்தர் விரும்புவது போல நாம் இருக்கும்படியாக—கிறிஸ்து போன்ற ஊழியக்காரர்களான, ஆண்களும் பெண்களுமாக, எப்படி ஆகலாம்? நம்மை குழப்புகிற கேள்விகளுக்கு எப்படி பதில் காணலாம். பரிசுத்த தோப்பில் ஜோசப் ஸ்மித்தின் ஆழ்ந்த அனுபவம் எதையாவது நமக்குப் போதிக்கிறதானால், அது பரலோகங்கள் திறந்திருக்கின்றன, தேவன் தன் பிள்ளைகளுடன் பேசுகிறார் என்பதாகும்..

நமது கேள்விகளுக்குப் பதிலளிக்க பின்பற்ற, தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் ஒரு மாதிரியை ஏற்படுத்தியிருக்கிறார். நாம் ஞானத்தில் குறைவுள்ளவர்களாக இருந்தால் தேவனிடத்தில் கேட்க வேண்டும் என்ற யாக்கோபுவின் வாக்குத்தத்தத்துக்கு ஈர்க்கப்பட்டவராய், சிறுவன் ஜோசப் தன் கேள்வியை பரலோக பிதாவிடம் கொண்டு போனார். 8 அவர் தனிப்பட்ட வெளிப்படுத்தல் தேடினார், அவரது தேடுதல் கடைசி ஊழியக்காலத்தைத் திறந்தது.

அதுபோலவே, நீங்கள் தேடுவது எதை உங்களுக்குத் திறக்கும். நீங்கள் எந்த ஞானத்தில் குறைவுள்ளவர்கள். அறியவோ, புரியவோ அவசர தேவை என எதை உணர்கிறீர்கள். தீர்க்கதரிசி ஜோசப்பின் உதாரணத்தைப் பின்பற்றுங்கள். நீங்கள் வழக்கமாக செல்லக்கூடிய அமைதியான இடத்தைக் கண்டு பிடியுங்கள். தேவனுக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள். உங்கள் இருதயத்தை பரலோக பிதாவிடம் ஊற்றுங்கள். பதில்களுக்காகவும் ஆறுதலுக்காகவும் அவரிடத்தில் திரும்புங்கள்.

உங்கள் அக்கறைகள், பயங்கள், பெலவீனங்கள், ஆம், உங்கள் இருதயங்களின் ஏக்கங்களைப்பற்றி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபியுங்கள். பின்பு கேளுங்கள். உங்கள் மனதுக்குள் வருகிற சிந்தனைகளை எழுதுங்கள். உங்கள் உணர்வுகளை பதிவு செய்யுங்கள், நீங்கள் செய்யுமாறு உணர்த்தப்பட்ட செயல்களைச் செய்யுங்கள். தினமும், மாதந்தோறும், வருடந்தோறும் இம்முறையைப் பின்பற்றுங்கள், “வெளிப்படுத்தலின் கொள்கையில் வளர்வீர்கள்.” 9

தேவன் உண்மையாகவே உங்களிடம் பேச விரும்புகிறாரா ஆம்! “தண்ணீர் குறைந்த மிசௌரி நதியை நிறுத்த பராக்கிரமமான மனிதன் போல தன் சிறிய கரத்தை நீட்டுவது ... பிற்காலப் பரிசுத்தவான்களின் தலைமீது பரலோகத்திலிருந்து அறிவை ஊற்றுவதிலிருந்து சர்வ வல்லவரை தடுப்பது போலத்தான்.” 10

எது உண்மை என நீங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. 11 நீங்கள் பாதுகாப்பாக யாரை நம்பலாம் என வியக்க வேண்டியதில்லை. உங்கள் தனிப்பட்ட வெளிப்படுத்தல் மூலம் மார்மன் புஸ்தகம் தேவ வார்த்தை எனவும், ஜோசப் ஸ்மித் ஒரு தீர்க்கதரிசி எனவும், இது கர்த்தரின் சபை எனவும் உங்கள் சொந்த சாட்சியைப் பெற முடியும். பிறர் என்ன சொல்கிறார்கள் அல்லது செய்கிறார்கள் என்பது பொருட்டின்றி எது சத்தியம் என்பதைப்பற்றிய உங்கள் இருதயம் மற்றும் மனதில் பிறந்த சாட்சியை யாராலும் எடுத்துப்போட முடியாது.

தனிப்பட்ட வெளிப்படுத்தல் பெற உங்களது தற்போதைய திறமைக்கு அப்பாலும் முயல நான் உங்களை வலியுறுத்துகிறேன், ஏனெனில் கர்த்தர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார், “நித்திய ஜீவனைக் கொண்டு வருகிற, சந்தோஷம் கொண்டு வருகிற, அற்புதங்களையும் சமாதானமானவற்றையும் நீங்கள் அறிந்து கொள்ளும்படிக்கு, நீங்கள் தேடினால் வெளிப்படுத்தல் மேல் வெளிப்படுத்தலும், அறிவின் மேல் அறிவும் பெறுவீர்கள்.” 12

நீங்கள் அறிய வேண்டுமென பரலோக பிதா விரும்புகிற அநேக காரியங்கள் உண்டு. மூப்பர் நீல் ஏ. மாக்ஸ்வெல் போதித்தபடி, “பார்க்க கண்களும், கேட்க காதுகளும் உள்ளவர்களுக்கு, பிதாவும் குமாரனும் பிரபஞ்சத்தின் இரகசியங்களைக் கொடுக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.” 13

அதிக பரிசுத்தம், சரியான கீழ்ப்படிதல், உருக்கமான தேடுதல், மற்றும் மார்மன் புஸ்தகத்தில் கிறிஸ்துவின் வார்த்தைகளை தினமும் ருசித்தல்14 மற்றும் ஆலயத்துக்கும் குடும்ப வரலாற்றுப்பணிக்கும் ஒதுக்கப்பட்ட ஒழுங்கான நேரம் போன்றவை போல, ஒன்றும் பரலோகத்தை திறப்பதில்லை.

பரலோகங்கள் மூடப்பட்டன என்பது போல நீங்கள் உணரக்கூடிய நேரங்கள் கண்டிப்பாக இருக்கலாம். ஆனால் நீங்கள் தொடர்ந்து கீழ்ப்படிந்திருந்தால், கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற ஒவ்வொரு ஆசீர்வாதத்துக்கும் நன்றி தெரிவித்தால், கர்த்தரின் கால அட்டவணையை பொறுமையாக கனம் பண்ணினால், உங்களுக்கு அறிவும், நீங்கள் தேடுகிற புரிதலும் கொடுக்கப்படும் என நான் வாக்களிக்கிறேன். உங்களுக்காக கர்த்தர் வைத்திருக்கிற ஆசீர்வாதமும், அற்புதமும் கூட தொடரும். தனிப்பட்ட வெளிப்படுத்தல் உங்களுக்குச் செய்வதும் அதுதான்.

நான் எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கையோடிருக்கிறேன். நாம் முன்னேறவும், கொடுக்கவும், பூமியின் ஒவ்வொரு மூலைக்கும் சுவிசேஷத்தை கொண்டு செல்லவும் நம் ஒவ்வொருவருக்கும் சந்தர்ப்பங்கள் நிறைந்திருக்கும். ஆனால் வருங்காலத்தைப்பற்றி நான் உணர்வில்லாமலும் இல்லை. குழப்பங்களும் பிணக்குகளும் அதிகரிக்கிற உலகத்தில் நாம் வாழ்கிறோம். சமூக ஊடகங்கள் இடைவிடாமல் கிடைப்பதும், 24 மணி நேர சேவையும் நம்ப முடியாத செய்திகளுடன் நம்மை தாக்குகின்றன. திரளான குரல்கள் மற்றும் சத்தியத்தை தாக்குகிற மனுஷரின் தத்துவங்களை நாம் சலித்தெடுக்கும் நம்பிக்கை பெற வேண்டுமானால், நாம் வெளிப்படுத்தல் பெற கற்க வேண்டும்.

இப்போதுக்கும் அவர் மீண்டும் வருவதற்கும் மத்தியில், நமது இரட்சகரும் மீட்பருமான இயேசு கிறிஸ்து சில பராக்கிரமமான கிரியைகளை நிறைவேற்றுவார். மகத்துவத்திலும் மகிமையிலும், பூமியின் மீது பிதாவாகிய தேவனும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் இச்சபைக்குத் தலைமை தாங்குகிறார்கள் என்ற அற்புதமான அறிகுறிகளை நாம் பார்ப்போம். ஆனால் வருகிற நாட்களில் பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டல், வழிநடத்துதல், ஆறுதலளிக்கும் மற்றும் இடைவிடாத செல்வாக்கு இல்லாமல், ஆவிக்குரிய விதமாக பிழைத்திருத்தல் சாத்தியமாகாது.

என் அன்பு சகோதர சகோதரிகளே, வெளிப்படுத்தல் பெற உங்கள் ஆவிக்குரிய திறனை அதிகரிக்க நான் உங்களை கெஞ்சுகிறேன். இந்த ஈஸ்டர் ஞாயிறு உங்கள் வாழ்க்கையின் சிறப்பான தருணமாக இருப்பதாக. ஆவியின் குரலை அடிக்கடியும், அதிக தெளிவாகவும் கேட்க, பரிசுத்த ஆவியானவரின் வரத்தை அனுபவிக்க தேவையான ஒரு வேலையைத் தெரிந்தெடுங்கள்.

மரோனியுடன் இந்த ஈஸ்டர் ஓய்வு நாளில், உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய, மாற்றுகிற வரமாகிய பரிசுத்த ஆவியின் வரத்தில் தொடங்கி, “கிறிஸ்துவிடம் வந்து, ஒவ்வொரு நல்ல வரத்தையும் பெற்றுக்கொள்ள,” 15 நான் உங்களை அறிவுறுத்துகிறேன்.

நாமனைவரும் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள். பரிசுத்த ஆவியானவர் எப்போதும் உங்களுக்கு சாட்சி கொடுக்கக்கூடிய மிக முக்கிய சத்தியம் இயேசுவே கிறிஸ்து, ஜீவிக்கும் தேவனின் குமாரன் என்பதாகும். அவர் ஜீவிக்கிறார். அவரே பிதாவிடம் நமது பரிந்து பேசுபவர், நமது உதாரணம், நமது மீட்பர். இந்த ஈஸ்டர் ஞாயிறில், நாம் அவரது பாவநிவாரண பலியையும், அவரது உண்மையான உயிர்த்தெழுதலையும், அவரது தெய்வீகத்தையும் நினைவுகூர்கிறோம்.

இது அவரது சபை, ஜோசப் ஸ்மித் மூலம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது. உங்கள் ஒவ்வொருவர் மேலும் அன்பு தெரிவித்து, இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தினாலே, அவ்விதமே சாட்சியளிக்கிறேன், ஆமென்.