2010–2019
தேவனின் தீர்க்கதரிசி
ஏப்ரல் 2018


தேவனின் தீர்க்கதரிசி

ஒரு தீர்க்கதரிசி உங்களுக்கும் இரட்சகருக்கும் மத்தியில் நிற்பதில்லை. மாறாக அவர் உங்களுக்கு அருகில் நின்று இரட்சகரிடத்தில் செல்லும் வழியைக் காட்டுகிறார்.

பன்னிருவர் குழுமத்தின் இணையில்லா சகோதரத்துவத்திற்கு மூப்பர் காங்-மற்றும் மூப்பர் யூலிசஸ் சோர்ஸுக்கு என்னுடைய வரவேற்பையும் நான் சேர்த்துக்கொள்கிறேன்.

தலைவர் ரசல் எம்.நெல்சனை கர்த்தரின் தீர்க்கதரிசியாகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும் ஆதரித்தலில், நமது உலகத்தோற்றத்திற்கு முன்பிருந்து, பரலோகங்களில் இந்த கடந்த மணிநேரங்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்பட்ட பயபக்தியான, தெய்வீகத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு பயபக்தியான கூட்டத்தின் ஒரு அங்கமாயிருக்கிறோம். அவருடைய பணியை வழிநடத்துகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்று தலைவர் ஐரிங் மூலமாக அவருடைய அபிஷேகம் செய்யப்பட்ட தலைவரான அவருடைய தீர்க்கதரிசியை அறிமுகம் செய்தார், அவரை ஆதரிக்கவும் அவருடைய ஆலோசனையைப் பின்பற்றவும் நமது விருப்பத்தை பகிரங்கமாக வெளிப்படுத்த அவருடைய உடன்படிக்கையின் மக்களாகிய நமக்கு முன் வைத்தார்.

இந்த மாநாட்டு மையத்தில் நம்முடன் இல்லாத மில்லியன் கணக்கான அங்கத்தினர்களுக்கு, தலைவர் நெல்சனை ஆதரித்தபோது இக்கட்டிடத்தில் கர்த்தரின் ஆவி நீங்கள் எதிர்பார்த்தபடியே சரியாக—ஆவிக்குரிய வல்லமை முழுமையாக இருந்தது என நீங்கள் அறிய வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால் நம்முடைய பரலோக வழிநடத்துதலின் கூட்டம் இந்த மாநாட்டு மையத்தில் மட்டுமில்லை, ஆசியா, ஆப்ரிக்கா, வட அமெரிக்காவின் ஜெபக்கூடங்களிலும், மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள வீடுகளிலும், பசிபிக் மற்றும் சமுத்திரத் தீவுகளிலும், மூடப்பட்ட தாழ்வாரங்களிலும் இருக்கின்றன. இந்தக்கூட்டம் உலகெங்கிலும் நீங்கள் எங்கிருந்தாலும், ஒலி மட்டுமே கேட்கக்கூடிய உங்களுடைய கைபேசியில் இணைப்பிருந்தாலும்கூட உலகமுழுவதிலுமிருக்கின்றன. நமது உயர்த்தப்பட்ட கைகள் நமது ஆயர்களால் எண்ணப்படவில்லை, ஆனால் நமது உடன்படிக்கை தேவனோடு இருக்கும்போது அவைகள் நிச்சயமாக பரலோகத்தில் கவனிக்கப்பட்டது, நமது செயல்கள் ஜீவபுஸ்தகத்தில் பதிக்கப்பட்டன.

கர்த்தர் தன் தீர்க்கதரிசியை தெரிந்துகொள்கிறார்

தீர்க்கதரிசியின் தேர்ந்தெடுப்பு கர்த்தராலே செய்யப்பட்டது. அங்கே பிரச்சாரங்களில்லை, வாக்குவாதங்களில்லை, பதவிக்கு தோரணையில்லை, எதிர்ப்பு, நம்பிக்கையின்மை, குழப்பம், கிளர்ச்சி இல்லை. தலைவர் நெல்சனை நாங்கள் ஜெபத்துடன் சூழ்ந்துகொண்டபோது, ஆலயத்தின் மேலறையில் பரலோகத்தின் வல்லமை எங்களுடனிருந்ததையும், கர்த்தருடைய ஆதரவு அவர் மேலிருந்ததையும் அவர்மேல் மறுக்கமுடியாத அங்கீகாரமிருந்ததை உணர்ந்ததையும் நானும் உறுதிசெய்கிறேன்

கர்த்தரின் தீர்க்கதரிசியாக சேவை செய்ய தலைவர் நெல்சனின் தேர்ந்தெடுப்பு நீண்ட காலத்திற்கு முன்பே செய்யப்பட்டது. “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன், நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்” 1 என்ற எரேமியாவுக்கு கொடுக்கப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகள் தலைவர் நெல்சனுக்கும் பொருந்துகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மூப்பர் நெல்சன், மூன்று மூத்த அப்போஸ்தலர்களில் இருவர் அவரைவிட இளையவர்களாயிருந்ததுடன், 90 வயதில் மூத்தவர்களில் நான்காவதாயிருந்தார். ஜீவனையும் மரணத்தையும் கர்த்தர் கட்டுப்படுத்துகிறார். 93 வயதில் தலைவர் நெல்சன் திடகாத்திரமாக இருக்கிறார். அவர் நம்முடன் இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகளிருப்பார் என நான் நம்புகிறேன், ஆனால் இப்போது பனிச்சறுக்கிலிருந்து விலகியிருக்க வற்புறுத்த நாங்கள் முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்.

கர்த்தருடைய அபிஷேகம்பண்ணப்பட்டவராக தீர்க்கதரிசியை நாம் ஆதரிக்கும்போது, தேவனாகிய நமது பரலோக பிதாவையும் அவருடைய தெய்வீகக் குமாரனையும் மட்டுமே நாம் தொழுதுகொள்கிறோம் என்பதை தெளிவுபடுத்துகிறோம். நமது இரட்சகரான இயேசு கிறிஸ்துவின் நன்மதிப்புகள், இரக்கம் மற்றும் கிருபையின் மூலமாக, ஒருநாள் அவர்களின் பிரசன்னத்தில் மீண்டும் நாம் பிரவேசிக்கமுடியும். 2

நாம் ஏன் தீர்க்கதரிசியைப் பின்பற்றுகிறோம்

ஆனால், அவர் அனுப்புகிற ஊழியக்காரர்களைப்பற்றி ஒரு முக்கியமான சத்தியத்தையும் இயேசு போதிக்கிறார். அவர் சொன்னார், “உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.” 3

கர்த்தருடைய தீர்க்கதரிசியின் மிகமுக்கியமான பாத்திரம், இரட்சகரைப்பற்றி நமக்கு போதிப்பதும் அவரிடத்தில் நம்மை நடத்துவதுமே.

தலைவர் ரசல் எம். நெல்சனைப் பின்பற்ற முரண்பாடில்லாத காரணங்களிருக்கின்றன. நமது விசுவாசத்தில் இல்லாதவர்கள் அவரை மிக புத்திசாலி என அழைக்கலாம். அவர் 22வயதில் ஒரு மருத்துவராயிருந்தார். ஒரு மதிப்புமிக்க இருதய அறுவை சிகிச்சையாளராகவும், திறந்த இருதய அறுவை சிகிச்சையை விருத்தி செய்வதில் ஒரு புகழ்பெற்ற முன்னோடியாகவும் இருந்தார்.

அவருடைய ஞானத்தையும், தீர்மானத்தையும், வாழ்க்கையையும் மரணத்தையும் பற்றிய அவருடைய 90 ஆண்டுகளின் கற்றுக்கொளுதலையும், சுயநலமில்லா வாழ்க்கையையும், பூலோகத்தின் ஒவ்வொரு மூலையிலும் தேவனுடைய பிள்ளைகளை நேசிப்பதையும், கற்றுக்கொடுப்பதையும், 10 பிள்ளைகள், 57 பேரப்பிள்ளைகள், 117 கொள்ளுப்பேரப்பிள்ளைகளை வளர்த்துவரும் அனுபவங்களையும் அதிகமானோர் ஏற்றுக் கொள்வர் (இந்த எண், அடிக்கடி மாறிக்கொண்டிருக்கிறது. கடந்த புதன் கிழமைதான் ஒரு கொள்ளுப்பேரன் பிறந்திருக்கிறான்).

படம்
புதிய கொள்ளுப் பேரனுடன் தலைவர் ரசல் எம். நெல்சன்

தலைவர் நெல்சன், வாழ்க்கையின் கடினங்களை விசுவாசத்தினாலும் தைரியத்தினாலும் எதிர்கொண்டிருக்கிறாரென்று அவரை நன்றாக அறிந்தவர்கள் பேசுவார்கள். ஒரு அன்பான கணவரையும் ஐந்து சிறுபிள்ளைகளையும் தவிக்கவிட்டு அவருடைய 37வயது மகள் எமிலி புற்றுநோயால் மரித்தபோது, “நான் அவளுடைய தகப்பன், ஒரு மருத்துவர், இயேசு கிறிஸ்துவின் ஒரு அப்போஸ்தலர், ஆனால், ‘என்னுடைய சித்தப்படியல்ல, உம்முடைய சித்தப்படியே ஆகுமென்று,’ என்னுடைய தலையைத் தாழ்த்தி ஏற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது’” 4 என்று அவர் சொன்னதை நான் கேட்டேன்.

கோபுரத்தில் காவற்காரன்

இந்த அனைத்து நல்ல குணங்களையும் நாம் பாராட்டினாலும், நாம் ஏன் தலைவர் நெல்சனை பின்பற்றுகிறோம்? கோபுரத்தின்மேல் அவரது காவற்காரராக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அழைத்து, அவருக்கு பொறுப்பளித்திருப்பதால்.

படம்
கார்க்கசோனே, ப்ரான்ஸ்

இடைக்காலங்களிலிருந்தே நின்றுகொண்டிருக்கிற கார்க்கசோனே பிரான்ஸின் ஒரு விசேஷித்த சுவர்களால் சூழப்பட்ட நகரம். எதிரிகளுக்காக தூரத்திலிருந்து தங்களுடைய கவனத்தை இறுக்கமாக வைத்திருந்து இரவு பகலாக அந்த மேடையில் நின்றுகொண்டிருந்த காவற்காரர்களுக்காக கட்டப்பட்ட பாதுகாப்பு சுவர்களிலிருந்து உயரமான கோபுரங்கள் உயரமாக எழும்பியிருந்தன. ஒரு எதிரி அணுகுவதை காவற்காரன் பார்க்கிறபோது, அவர்களால் பார்க்கமுடியாத பெரிய அபாயத்திலிருந்து கார்க்கசோனே ஜனங்களை அவனுடைய எச்சரிக்கைக் குரல் பாதுகாத்தது.

நம்மால் பார்க்கமுடியாத ஆவிக்குரிய அபாயங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரு காவற்காரரே ஒரு தீர்க்கதரிசி.

“நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவற்காரனாக வைத்தேன், ஆகவே நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக” 5 என எசேக்கியேலிடம் கர்த்தர் சொன்னார்.

தீர்க்கதரிசியைப் பின்பற்ற நமது தேவைகளைப்பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம். ஆனால் அவருடைய தீர்க்கதரிசி மேல் கர்த்தர் வைக்கிற இந்த சுமையான பாரங்களைப்பற்றி கருத்தில் கொள்ளவும். “துன்மார்க்கனை எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான், அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.” 6

ஒரு மாபெரும் தனிப்பட்ட சாட்சி

பேதுரு அல்லது மோசேயின் காலத்தில் நாம் வாழ்ந்திருந்தால் அவர்களைத் தழுவியிருந்திருப்பது போன்று தலைவர் நெல்சனை நாம் தழுவுகிறோம். “நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்” 7 என மோசேயிடம் கர்த்தர் கூறினார். அவருடைய வார்த்தைகள் தீர்க்கதரிசியின் “[கர்த்தருடைய] சொந்த வாயிலிருந்து”8 வருவதாக நாம் விசுவாசித்து கர்த்தருடைய தீர்க்கதரிசிக்கு நாம் செவிகொடுக்கிறோம்8.

இது குருட்டுத்தனமான விசுவாசமா? இல்லை, அப்படியில்லை. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தின் உண்மை பற்றி நம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆவிக்குரிய சாட்சியிருக்கிறது. நமது “தன்னம்பிக்கையாலும், விசுவாசத்தாலும், ஜெபங்களாலும்,” 9 அவருடைய ஆலோசனையைப் பின்பற்றவும் கர்த்தரின் தீர்க்கதரிசியை ஆதரிக்க நமது விருப்பத்தை அறிவித்து நமது சொந்த விருப்பத்தாலும் தேர்ந்தெடுப்பாலும் இந்தக் காலைநேரத்தில் நாம் நம் கைகளை உயர்த்தினோம். தலைவர் நெல்சனுடைய அழைப்பு தேவனிடமிருந்து வந்ததென ஒரு தனிப்பட்ட சாட்சியைப்பெற பிற்காலப் பரிசுத்தவான்களாக நமக்கு சிலாக்கியமிருக்கிறது. என்னுடைய மனைவி கேதிக்கு தனிப்பட்ட முறையில் தலைவர் நெல்சனை ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாகத் தெரியும், 34 ஆண்டுகளில் அவருடைய எல்லா பொது மாநாட்டு உரைகளையும் படித்து அவருடைய தெய்வீக பொறுப்பைப்பற்றி, அவருடைய தெரிந்துகொள்ளுதல் அவர் பணிக்கப்பட்டது, எந்த கேள்வியுமில்லாமல் அவருடைய தீர்க்கதரிசன பாத்திரத்திற்கான ஒரு ஆழமான நிச்சயத்திற்காக ஜெபித்தாள். இதை நீங்கள் அடக்கமாகவும் தகுதியாகவும் நாடும்போது இந்த மிக அதிக சாட்சி உங்களுக்கு வருமென நான் உங்களுக்கு சாட்சியளிக்கிறேன்.

நமது தீர்க்கதரிசியின் குரலைப் பின்பற்ற நாம் ஏன் மிகவும் விரும்புகிறோம்? நித்திய ஜீவனை சிரத்தையோடு நாடுகிறவர்களுக்கு மிகக் குழப்பமான நேரங்களில் தீர்க்கதரிசியின் குரல் ஆவிக்குரிய பாதுகாப்பைக் கொண்டுவருகிறது.

கோடிக்கணக்கான சத்தங்களுடன் கூச்சலிடுகிற ஒரு கோளத்தில் நாமிருக்கிறோம். இணையதளம், கைபேசிகள், கேளிக்கையின் நமது பெருத்த பெட்டிகள் எல்லாம் நமது கவனத்திற்காக வேண்டி, அவர்களுடைய பொருட்களை நாம் வாங்கி, அவர்களுடைய தகுதிகளை நாம் பயன்படுத்துவோமென்ற நம்பிக்கையில், அவர்களின் செல்வாக்கை நம்மீது திணிக்கின்றனர்.

“சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான” “தந்திரமுமுள்ள” 12 போதகமாகிய பலவித காற்றினாலே11 அலைகளைப்போல “முன்னும் பின்னும் வீசப்பட்டு” 10 அலைகிறவர்களாயிராமல் தகவல் மற்றும் கருத்துக்களின் முடிவற்ற அணியாகத் தோன்றுகிறவை, வேத எச்சரிக்கைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் நமது ஆத்துமாக்களை நங்கூரமிடுவதற்கு அவர் அனுப்புகிறவர்களுக்கு செவிகொடுத்தல் தேவையாயிருக்கிறது. குழப்பத்திலிருக்கிற ஒரு உலகத்தில் தீர்க்கதரிசியைப் பின்பற்றுதல், ஒரு குளிரான நாளில் நல்ல வெதுவெதுப்பான கம்பளியால் போர்த்திக்கொண்டிருப்பதைப் போன்றது.

காரணம், போட்டி, விவாதம், நியாயம் மற்றும் விளக்கத்தின் உலகத்தில் நாம் வாழ்கிறோம். “ஏன்?” என்று கேள்வி கேட்பது, ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்கிற எண்ணிலடங்கா தேர்ந்தெடுப்புகளுக்கும் தீர்மானங்களுக்கும் வழிநடத்த நமது புத்திசாலித்தனத்தின் சக்தியை அனுமதித்து, நமது வாழ்க்கையின் மிக அநேக பரிமாணங்களில் நேர்மறையாக இருக்கிறது.

ஆனால், கர்த்தரின் குரல் வழக்கமாக விளக்கமில்லாமல் வருகிறது. 13 நம்பியிருக்கிற துணைகள் மற்றும் பிள்ளைகள்மீது திணிக்கப்படுகிற துரோகத்தின் பாதிப்பைப்பற்றி கல்விமான்கள் ஆராய்வதற்கு நீண்ட காலத்திற்கு முன் “விபச்சாரம் செய்யாதிருப்பாயாக” 14 என கர்த்தர் அறிவித்தார். புத்திசாலித்தனத்திற்கும் அப்பால், பரிசுத்த ஆவியின் வரத்தை நாம் பொக்கிஷப்படுத்துகிறோம்.

ஆச்சரியப்படாதீர்கள்

படம்
நோவா போதித்தல்

அன்போடு பேசப்படும்போது தீர்க்கதரிசியின் குரல் வழக்கமாக, மாற்றிக்கொள்ள, மனந்திரும்ப, கர்த்தரிடத்தில் திரும்பிவர கேட்டுக்கொள்ளும் ஒரு குரலாக இருக்கிறது. சரிப்படுத்துதல் தேவைப்படும்போது நாம் தாமதியாதிருப்போமாக. அந்த நாளின் பிரசித்தமான கருத்துக்கு எதிராக தீர்க்கதரிசியின் எச்சரிக்கையின் குரலிருக்கும்போது, திடுக்கிடவேண்டாம். தீர்க்கதரிசி பேச ஆரம்பித்தவுடனேயே எரிச்சலடையும் அவிசுவாசிகளின் கேலியின் தீப்பந்துகள் எப்போதுமே தூக்கி எறியப்படும். கர்த்தரின் தீர்க்கதரிசியின் ஆலோசனையைப் பின்பற்றுவதில் நீங்கள் அடக்கமுள்ளவராயிருக்கும்போது, பாதுகாப்பு மற்றும் சமாதானத்தின் ஒரு கூடுதலான ஆசீர்வாதத்தை உங்களுக்கு நான் வாக்களிக்கிறேன்.

படம்
லாமானியனான சாமுவேல் தீர்க்கதரிசனமுறைக்கிறான்

ஆரம்பத்தில், சிலநேரங்களில் உங்களின் சொந்த கருத்துகள் ஒருசிலவற்றோடு, கர்த்தரின் தீர்க்கதரிசியின் போதனைகள் இசைவில்லாதிருந்தால் ஆச்சரியப்படாதீர்கள். ஜெபத்தில் நாம் முழங்கால்படியிடும்போது, இது அடக்கத்தைக் கற்றுக்கொள்ளும் நேரம். காலஓட்டத்தில் நமது பரலோக பிதாவிடமிருந்து அதிக ஆவிக்குரிய தெளிவைப்பெறுவோமென அறிந்திருந்து, தேவனில் நம்பிக்கை வைத்து நாம் விசுவாசத்தில் முன்னேறி நடக்கிறோம். “குமாரனுடைய சித்தம் பிதாவினுடைய சித்தத்தால் விழுங்கப்பட்டிருக்கிறது” 15 என இரட்சகரின் ஒப்பிடமுடியாத வரத்தை ஒரு தீர்க்கதரிசி விளக்கினார். நமது சித்தத்தை தேவனுடைய சித்தத்துக்கு சரணயடைச் செய்வது உண்மையில் சரணடையச் செய்வதே அல்ல, ஆனால் ஒரு மகிமையான வெற்றி.

அவருடைய தீர்க்கதரிசன குரல் என்ன, அவருடைய தனிப்பட்ட கருத்து என்னவென தீர்மானிக்க போராடி, தீர்க்கதரிசியின் வார்த்தைகளை மிக அதிகமாக கூறுபோட சிலர் முயற்சிப்பார்கள்.

1982ல் ஒரு பொதுஅதிகாரியாக அழைக்கப்படுவதற்கு முன் சகோதரர் ரசல் எம். நெல்சன் சொன்னார், “எப்போது தீர்க்கதரிசி ஒரு தீர்க்கதரிசியாக பேசுவார், எப்போது அப்படி பேசமாட்டாரென நான் ஒருபோதும் என்னையே கேட்கமாட்டேன். நான் எவ்வாறு அவரைப் போலாகுவதென்பதே எனது ஆர்வமாயிருந்தது?’” அவர் தொடர்ந்தார், தீர்க்கதரிசியின் உரைகளுக்குப் பின்னால் கேள்விக்குறிகளைப் போடுவதை நிறுத்தி அதற்குப் பதிலாக ஆச்சரியக்குறிகளைப் போடுவது என்னுடைய [தத்துவம்]” 16 இவ்வாறாகத்தான் ஒரு அடக்கமான, ஆவிக்குரிய மனிதன் தன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த தேர்ந்தெடுக்கிறான். இப்போது 36 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் கர்த்தரின் தீர்க்கதரிசியாக இருக்கிறார்.

இரட்சகரிடத்தில் உங்கள் விசுவாசத்தை அதிகரித்தல்

தேவனுடைய தீர்க்கதரிசியின் வார்த்தைகளை ஜெபத்துடனும், கவனத்துடனும், படிப்படியாக படித்து, என்னுடைய சித்தத்தை அவருடைய உணர்த்துதலான போதனைகளுடன் ஆவியில் பொருத்தும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் என் விசுவாசம் எப்போதுமே அதிகரிக்கிறது என்பதை என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான் கண்டேன். 17 அவருடைய ஆலோசனையை ஓரத்தில் ஒதுக்கி வைத்து நமக்கு நன்றாகத் தெரியுமென்று தீர்மானிக்க நாம் தேர்ந்தெடுத்தால் நமது விசுவாசம் பாடுபட்டு நமது நித்திய தோற்றம் மங்குகிறது. தீர்க்கதரிசியைப் பின்பற்றுகிறதில் நீங்கள் பின்வாங்காது நிலைத்திருந்தால் இரட்சகரிடத்தில் உங்கள் விசுவாசம் அதிகரிக்குமென நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன்.

“எல்லா தீர்க்கதரிசிகளும் என்னைக் குறித்து சாட்சி கொடுத்திருக்கிறார்கள்” 18 என இரட்சகர் சொன்னார்.

உங்களுக்கும் இரட்சகருக்குமிடையில் ஒரு தீர்க்கதரிசி நிற்கிறதில்லை. மாறாக, அவர் உங்களுக்கு பின்னால் நின்று இரட்சகரிடத்திற்கு வழியைக் காட்டுகிறார். இயேசுவே கிறிஸ்து என்கிற அவருடைய நிச்சயமான சாட்சியும், அவருடைய நிச்சயமான அறிவுமே நமக்கு ஒரு தீர்க்கதரிசியின் மகத்தான வரம். பூர்வகால பேதுருவைப்போல நமது தீர்க்கதரிசி அறிவிக்கிறார், “[அவர்] ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து.” 19

வருங்காலத்தில் ஒருநாள் நமது அநித்தியத்தில் நாம் திரும்பிப் பார்க்கும்போது, ஒரு ஜீவிக்கிற தீர்க்கதரிசியின் காலத்தில் நாம் பூமியின்மீது நடந்தோமென நாம் சந்தோஷத்தில் களிகூருவோம். அந்த நாளில் இவ்வாறாக நம்மால் சொல்லமுடியும் என நான் ஜெபிக்கிறேன்..

நாம் அவருக்கு செவிகொடுத்தோம்.

நாம் அவரில் நம்பிக்கை வைத்தோம்.

பொறுமையோடும் விசுவாசத்தோடும் அவருடைய வார்த்தைகளை நாம் படித்தோம்.

அவருக்காக நாம் ஜெபித்தோம்.

நாம் அவரோடு நின்றோம்.

அவரைப் பின்பற்ற நாம் போதுமான தாழ்மையுள்ளவர்களாயிருந்தோம்.

நாம் அவரில் அன்பு வைத்தோம்

இயேசுவே கிறிஸ்துவென்றும், நமது மீட்பரும் இரட்சகருமானவரென்றும், தலைவர் ரசல் எம்.நெல்சன் பூமியின்மேல் அவருடைய அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசியென்றும் என்னுடைய பயபக்தியான சாட்சியை உங்களுக்குக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.

குறிப்புகள்

  1. எரேமியா 1:5.

  2. 2 நெப்பி 2:8 பார்க்கவும்

  3. மத்தேயு 10:40.

  4. Personal memory; also see Spencer J. Condie, Russell M. Nelson: Father, Surgeon, Apostle (2003), 235.

  5. எசேக்கியல் 33:7.

  6. எசேக்கியல் 33:8.

  7. யாத்திராகமம் 4:12.

  8. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 21:5.

  9. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:22.

  10. எபேசியர் 4:14.

  11. யாக்கோபு 1:6.

  12. எபேசியர் 4:14.

  13. தலைவர் டாலின் எச். ஓக்ஸ் ஒருமுறை சொன்னார்:

    “ஒரு 1988 நேர்காணலில் ... தெய்வீக வெளிப்படுத்தலுக்கு உலகப்பிரகார காரணங்களைக் கொடுக்கும் முயற்சி பற்றி என் மனோபாவத்தை விளக்கினேன்:

    ‘“கர்த்தர் ஏன் இதைக் கடளையிட்டார் அல்லது அவர் ஏன் அதைக் கட்டளையிட்டார்” என மனதில் இக்கேள்வியோடு வேதங்களை நீங்கள் வாசித்தால், நூறு கட்டளைகளில் ஒன்றில் கூட எந்தக் காரணத்தையும் காண மாட்டீர்கள். காரணங்கள் கொடுப்பது கர்த்தரின் மாதிரியல்ல. நாம் [அநித்தியமானவர்கள்] வெளிப்படுத்தலுக்கு காரணங்கள் கொடுக்கலாம். கட்டளைகளுக்கு காரணங்கள் கொடுக்கலாம். நாம் அப்படிச் செய்யும்போது நாம் நாமாகவே செய்கிறோம். சிலர் [வெளிப்படுத்தலுக்கு] காரணங்கள் கொடுக்கின்றனர். ..., அவை நிச்சயமாக தவறாகவே ஆகின்றன. அதில் ஒரு பாடம் இருக்கிறது, ... கட்டளையில் எனக்கு விசுவாசம் இருக்கிறது, மற்றும் அதற்காக ஆலோசனையளிக்கப்பட்ட காரணங்களில் எனக்கு விசுவாசம் இல்லை என வெகு நாட்களுக்கு முன்பே நான் தீர்மானித்தேன்.’ ...

    ‘“ …காரணங்களின் முழு தொகுப்பும் தேவையற்ற ஆபத்தானதாக எனக்குத் தோன்றியது. ... வெளிப்படுத்தலுக்கு காரணங்கள் கொடுக்க முயன்று, கடந்த காலத்தில் செய்த தவறுகளை செய்யாமலிருப்போமாக. … காரணங்கள் பெருமளவில் மனிதன் செய்வதாவே இருக்கின்றன. கர்த்தரின் சித்தமாகவும், அங்குதான் பாதுகாப்பு இருக்கிறது எனவும் நாம் ஆதரிப்பவை வெளிப்படுத்தல்கள்”’ (Life’s Lessons Learned [2011], 68–69).

  14. யாத்திராகமம் 20:14.

  15. மோசியா 15:7.

  16. Russell M. Nelson, in Lane Johnson, “Russell M. Nelson: A Study in Obedience,” Tambuli, Jan. 1983, 26.

  17. தலைவர் ஹென்றி பி. ஐரிங் சொன்னார்: தீர்க்கதரிசிகளின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ளாதிருப்பது, நல்ல அறிவுரைகளை ஏற்றுக் கொள்வது மற்றும் அதன் ஆதாயங்களைப் பெறுவது அல்லது இருக்கிறவாறே இருப்பது என்பதல்ல, என்பது மற்றொரு பொய். ஆனால் தீர்க்கதரிசன ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளாதிருக்க தெரிந்துகொள்ளுதல், நாம் இருக்கும் நிலைமையை மாற்றுகிறது. அது அதிக ஆபத்தானதாகிறது. தீர்க்கதரிசன ஆலோசனையை ஏற்றுக் கொள்ளத் தவறுதல் எதிர்காலத்தில் உணர்த்தப்பட்ட ஆலோசனையை நாம் ஏற்றுக்கொள்ளும் நமது வல்லமையை குறைக்கிறது. நோவா பேழையைக் கட்ட உதவ தீர்மானித்த சிறந்த நேரம், அவன் கேட்ட முதல் தடவைதான். அதற்குப் பின் அவன் கேட்ட ஒவ்வொரு முறையும், பதிலளிக்க ஒவ்வொரு தவறுதலும் ஆவியை உணருவதை உரைத்திருக்கக் கூடும். ஆகவே மழை வரும்வரை ஒவொருமுறை அவனது விண்ணப்பம் முட்டாள்தனமாக தோன்றியிருக்கலாம். பின்பு அது மிக தாமதமாகும். (“Finding Safety in Counsel,” Ensign, May 1997, 25).

  18. 3 நெப்பி 20:24.

  19. மத்தேயு 16:16; யோவான் 6:69 ஐயும் பார்க்கவும்