2010–2019
பரிசுத்தவான்களின் மகிழ்ச்சி
அக்டோபர் 2019 பொது மாநாடு


பரிசுத்தவான்களின் மகிழ்ச்சி

கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொள்ளுவதிலிருந்தும், அவர் மூலமாக துக்கத்தையும் பெலவீனத்தையும் மேற்கொள்ளுவதிலிருந்தும், அவர் சேவை செய்ததைப்போல சேவை செய்வதிலிருந்தும் மகிழ்ச்சி வருகிறது.

லேகியின் பேரனான மார்மன் புஸ்தகத்தின் தீர்க்கதரிசி ஏனோஸ், அவனுடைய ஆரம்பகால வாழ்க்கையில் நடந்த ஒரு ஒற்றை அனுபவத்தைப்பற்றி எழுதினான். காட்டில் தனியாக வேட்டையாடிக் கொண்டிருந்தபோது அவனுடைய தகப்பன் யாக்கோபுவின் போதனைகளைப்பற்றி ஏனோஸ் தியானிக்க ஆரம்பித்தான். அவன் சொன்னான் “நித்திய ஜீவனையும் பரிசுத்தவான்களின் சந்தோஷத்தைப்பற்றியும் நான் அடிக்கடி கேள்விப்பட்ட, என் தகப்பன் பேசிய வார்த்தைகள் என் இருதயத்திலே ஆழமாகப் பதிந்தன.”1 அவனுடைய ஆவிக்குரிய தாகத்தில் ஏனோஸ் ஜெபத்தில் முழங்கால்படியிட்டு, நாள் முழுவதும் நீடித்து, பின்னர் இரவு முழுவதும் நீடித்த ஒரு குறிப்பிடத்தக்க ஜெபமான அது அவனுக்கு மிகமுக்கியமான வெளிப்படுத்தல்களையும், உறுதிப்பாட்டினையும், வாக்குறுதிகளையும் கொண்டுவந்தது.

ஏனோஸ் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன ,ஆனால் ஏனோஸின் நினைவிலிருந்த, “பரிசுத்தவான்களின் சந்தோஷத்தைப்பற்றி” அவனுடைய தகப்பன் அடிக்கடி பேசியவையே இன்று என் மனதில் நிற்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த மாநாட்டில் தலைவர் ரசல் எம்.நெல்சன் மகிழ்ச்சி பற்றிப் பேசினார்.2 பிற காரியங்களுக்கு மத்தியில் அவர் சொன்னார்:

நமது வாழ்க்கையின் சூழ்நிலைகளுடனும், நமது வாழ்க்கையின் கவனத்துடன் செய்யவேண்டியதுடனும் நாம் அனுபவிக்கிற மகிழ்ச்சி சிறியதாகத்தானிருக்கிறது.

“நமது வாழ்க்கையின் கவனம் தேவனின் இரட்சிப்பின் திட்டத்திலும். … இயேசு கிறிஸ்துவினிடத்திலும், அவருடைய சுவிசேஷத்திலுமிருக்கும்போது, நமது வாழ்க்கையில் என்ன நடக்கிறது அல்லது நடக்கவில்லை என்பதைப் பொருட்படுத்தாது நாம் மகிழ்ச்சியை அனுபவிக்கமுடியும் மகிழ்ச்சி அவரிடமிருந்தும் அவராலுமே வருகிறது. … பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு இயேசு கிறிஸ்துவே மகிழ்ச்சி.”3

ஞானஸ்நானம் மூலமாக சுவிசேஷத்தின் உடன்படிக்கைகளுக்குள் பிரவேசித்து, அவருடைய சீஷர்களாக கிறிஸ்துவைப் பின்பற்ற முயற்சித்துக்கொண்டிருப்பவர்கள் பரிசுத்தவான்கள்.4 அப்படியாக, “பரிசுத்தவான்களின் மகிழ்ச்சி”, கிறிஸ்துவைப்போலாகுவதின் சந்தோஷத்தைக் குறிக்கிறது.

அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவதிலிருந்து வருகிற மகிழ்ச்சியை, அவர் மூலமாக துக்கத்தையும், பெலவீனத்தையும் மேற்கொள்ளுகிறதிலிருந்து வருகிற மகிழ்ச்சியை, அவர் சேவை செய்ததைப்போல சேவை செய்வதில் உள்ளார்ந்த மகிழ்ச்சியைப்பற்றி பேச நான் விரும்புகிறேன்.

கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொள்ளுவதின் மகிழ்ச்சி

கர்த்தருடைய கற்பனைகளுக்கான முக்கியத்துவத்தைப்பற்றி அல்லது அவற்றை புறக்கணிப்பதைப்பற்றி அநேக கேள்விகளுள்ள ஒரு சிற்றின்ப காலத்தில் நாம் வாழ்கிறோம். கற்புடமை நியாயப்பிரமாணம், நேர்மையின் தரம், ஓய்வுநாளின் பரிசுத்தம் போன்றவற்றிற்கு தெய்வீக வழிமுறைகளை அடிக்கடி மறுக்கிற மக்கள் பெருகிவருகிறதாயும், வாழ்க்கையின் நல்ல காரியங்களை அனுபவிப்பதாகவும் , சிலநேரங்களில் கீழ்ப்படிய முயற்சித்துக்கொண்டிருப்பவர்களைவிட அதிகமாக அனுபவிப்பதாகவும் தோன்றுகிறது. முயற்சியும் தியாகங்களும் மதிப்புடையதா என சிலர் வியப்புற ஆரம்பிக்கிறார்கள். இஸ்ரவேலின் பழங்கால மக்கள் ஒருசமயம் முறையிட்டனர்.

“தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும், சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்?

“இப்போதும் அகங்காரிகளை பாக்கியவான்கள் என்கிறோம், தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள் ,அவர்கள் தேவனை பரிட்சை பார்த்தாலும் விடுவிக்கப்படுகிறாகள்.”5

“என் சம்பத்தை நான் சேர்க்கும் நாள்வரை கொஞ்சம் பொறுங்கள்” என கர்த்தர் சொன்னார். … அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியம் செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.”6 துன்மார்க்கர் “சிறிது காலத்துக்கு அவர்களுடைய கிரியைகளில் மகிழ்வார்கள்” ஆனால் அது எப்போதுமே தற்காலிகமானது.7 பரிசுத்தவான்களின் சந்தோஷம் நீடித்திருப்பது.

அவர்களுடைய உண்மையான கண்ணோட்டத்தில் தேவன் பார்க்கிறார், அநித்தியத்தின் கண்ணிகளை குழிகளைச் சுற்றி நித்திய சந்தோஷத்திற்கு நேராக நம்மை ஆற்றலுடன் வழிநடத்தி அவருடைய கற்பனைகளின் வழியாக அந்த கண்ணோட்டத்தை நம்மோடு அவர் பகிர்ந்துகொள்கிறார். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் விளக்கினார், “அவருடைய கற்பனைகள் நமக்குப் போதிக்கும்போது, அது நித்திய பார்வையுடையது. நாம் நித்தியத்தில் இருப்பதுபோல தேவனால் பார்க்கப்படுகிறோம். தேவன் நித்தியத்தில் வாசம் பண்ணுகிறார், நாம் பார்ப்பது போல காரியங்களைப் பார்ப்பதில்லை.”8

சுவிசேஷத்தை வாழ்க்கையின் பின்பகுதியில் கண்டுபிடித்து ஆரம்பத்திலே கண்டுபிடித்திருக்க விரும்பிய யாரையும் நான் சந்தித்தில்லை. “மோசமான தீர்மானங்களையும் தவறுகளையும் நான் தவிர்த்திருக்கலாம்” என அவர்கள் சொல்வார்கள். சிறந்த தேர்ந்தெடுப்புகளுக்கும் சந்தோஷமான முடிவுகளுக்கும் நமது வழிகாட்டுதலாக கர்த்தருடைய கற்பனைகளிருக்கின்றன. இந்த மிக நேர்த்தியான வழியை நமக்குக் காட்டுவதற்காக நாம் எவ்வாறு களிகூர வேண்டும்.

படம்
சகோதரி காம்வான்யா

காங்கோ ஜனநாயகக் குடியரசிலிருந்து, ஒரு இளம் பிராயமான சகோதரி கலோம்போ ரோசெட் காம்வான்யா, கோட்டே இவையர் அபிட்ஜன், மேற்கு ஊழியத்தில் இப்போது ஊழியம் செய்துகொண்டிருக்கிற அவள் செய்ய வேண்டிய, தேவன் விரும்புகிற வழிகாட்டுதலைக் கண்டுபிடிக்க மூன்று நாட்களாக உபவாசித்து ஜெபித்தாள். ஒரு குறிப்பிடத்தக்க இரவு தரிசனத்தில், இப்போது ஒரு ஆலயமாக அவள் உணர்கிற ஒரு தேவாலயம் அவளுக்குக் காட்டப்பட்டது. அவளுடைய சொப்பனத்தில் அவள் கண்ட தேவாலயத்தை அவள் தேட ஆரம்பித்து விரைவிலேயே கண்டாள். அடையாளம் சொன்னது, “பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை” சகோதரி காம்வான்யா ஞானஸ்நானம் பெற்று பின்னர் அவளுடைய தாயும் அவளுடைய ஆறு சகோதரர்களும் ஞானஸ்நானம் பெற்றார்கள். சகோதரி காம்வான்யா சொன்னாள், “சுவிசேஷத்தை நான் பெற்றபோது, சிறைபிடிக்கப்பட்டஒரு பறவை விடுதலையாக்கப்பட்டது போல நான் உணர்ந்தேன். என் மனம் சந்தோஷத்தால் நிரம்பியது. … தேவன் என்னை நேசிக்கிறார் என்ற உறுதி எனக்கிருந்தது”.9

கர்த்தருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுதல், மிக எளிதாகவும் மிகமுற்றிலுமாக அவரது அன்பை உணர நமக்கு சாத்தியமாக்குகிறது. இடுக்கமானதும் நெருக்கமானதுமான கட்டளைகளின் பாதை, மிகவும் இனிப்பான “எல்லாவற்றையும் விட விரும்பத்தக்க” ஜீவ விருட்சத்துக்கு நேரடியாக நம்மை வழிநடத்துகிறது,10 அவை தேவ அன்பின் வடிவம் மற்றும் ஆத்துமாவை “அதிக மகிழ்ச்சியால்” நிரப்புகிறது.11 இரட்சகர் சொன்னார்

“நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால் என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

“என்னுடைய மகிழ்ச்சி உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் மகிழ்ச்சி நிறைவாயிருக்கும்படிக்கும் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்”12

கிறிஸ்துவின் மூலமாக மேற்கொள்ளுதலின் மகிழ்ச்சி

உண்மையுள்ளவர்களாக கற்பனைகளைக் கைக்கொள்ளுவதாக நாம் காணப்படும்போதும், நமது சந்தோஷத்தை தடங்கல் செய்ய சோதனைகளும் துயரங்களும் இருக்கின்றன. ஆனால், இரட்சகரின் உதவியுடன் இந்த சவால்களை மேற்கொள்ள நாம் முயற்சிக்கும்போது இப்போது நாம் உணருகிற மகிழ்ச்சியையும் நாம் எதிர்பார்க்கிற மகிழ்ச்சியையும் அது பாதுகாக்கிறது. அவருடைய சீஷர்களுக்கு கிறிஸ்து மறுஉத்தரவாதம் கொடுத்தார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு ,ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்.”13 இது, அவரிடத்தில் திரும்பும்போதும், அவருக்குக் கீழ்ப்படியும்போதும், அவரோடு நம்மையே கட்டும்போதும், அந்த சோதனையும் துயரமும் மகிழ்ச்சியாக மாறுகின்றன. ஒரு எடுத்துக்காட்டை நான் குறிப்பிடுகிறேன்.

1989வது ஆண்டில், ஜாக் ரஷ்டன், இர்வின் கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் பிணையத்தில் தலைவராக ஊழியம் செய்துகொண்டிருந்தார். கலிபோர்னியா கடற்கரையில், ஒரு குடும்ப விடுமுறையின்போது ஜாக் உடல் அலையாடல் செய்துகொண்டிருந்தபோது, ஒரு அலை அவரை மூழ்கியிருந்த ஒரு பாறையில் அடித்து, அவருடைய கழுத்து முறிந்து, அவருடைய முதுகுதண்டில் கடுமையான காயத்தை ஏற்படுத்தியது. நான் மோதிய உடனே நான் செயலிழந்தேன் என எனக்குத் தெரியும்”14 என பின்னர் ஜாக் சொன்னார். அவராகவே பேசவோ அல்லது மூச்சுவிடவோ இனி அவரால் முடியாது.15

படம்
ரஷ்டன்களுக்கு குடும்பமும் நண்பர்களும் உதவி செய்தல்

குடும்பம், நண்பர்கள், பிணைய அங்கத்தினர்கள் சகோதரர் ரஷ்டனையும் அவரது மனைவி ஜோ ஆனையும் சுற்றி திரண்டனர், பிற காரியங்களுக்கு மத்தியில் ஜாக்கின் சக்கர நாற்காலிக்கு இடம் ஒதுக்க அவர்களுடைய வீட்டின் ஒரு பகுதி மாற்றியமைக்கப்பட்டது . அடுத்த 23 ஆண்டுகள் ஜோ ஆன் ஜாக்கின் முக்கிய பராமரிப்பவரானார். அவருடைய ஜனங்களை அவர்களுடைய உபத்திரவங்களிலே எவ்வாறு கர்த்தர் சந்தித்து அவர்களுடைய பாரங்களை இலகுவாக்கினார் என்ற மார்மன் புஸ்தகத்தின் விவரங்களைக் குறிப்பிட்டு16, “என்னுடைய கணவரைக் கவனிப்பதில் நான் உணருகிற இருதயத்தின் இலகுவைப்பற்றி நான் அடிக்கடி வியப்புறுவேன்”17 என ஆன் சொன்னார்.

படம்
ஜாக் மற்றும் ஜோ ஆன் ரஷ்டன்

அவருடைய சுவாச அமைப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு ஜாக்கின் பேசும்திறன் மீட்டெடுக்கப்பட்டது, ஒரு ஆண்டுக்குள் சுவிசேஷ கோட்பாடு ஆசிரியராகவும் கோத்திரப் பிதாவாகவும் ஜாக் அழைக்கப்பட்டார். கோத்திரப் பிதாவின் ஆசீர்வாதத்தை அவர் கொடுக்கும்போது, ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற மற்றொருவர், ஆசீர்வாதம் பெறுகிற நபரின் தலையின்மேல் சகோதரர் ரஷ்டனின் கையை வைத்து, ஆசீர்வாதத்தின்போது அவரது கையை தாங்குகிறார். 22 ஆண்டுகளின் அர்ப்பணிப்பான சேவைக்குப் பின்னர், 2012வது ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில் ஜாக் மரித்தார்.

படம்
ஜாக் ரஷ்டன்

ஒரு சமயம் நேர்காணலின்போது ஜாக் சொன்னார், நம் அனைவரின் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் வரும், இங்கே இந்த பூமியில் இருப்பதில் இது ஒரு பகுதி. மதம் அல்லது தேவனில் விசுவாசம் வைத்திருப்பது மோசமான காரியங்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்என சிலர் நினைக்கிறார்கள். அது சரியென நான் நினைக்கவில்லை. நமது விசுவாசம் வலுவாயிருந்தால், நடக்கக்கூடிய மோசமான காரியங்கள் நடக்கும்போது அவைகளை சமாளிக்க நம்மால் முடியுமென்பது முக்கியமென நான் நினைக்கிறேன். . .. என்னுடைய விசுவாசம் ஒருபோதும் அசையாதது ஆனால் எனக்கு மனச்சோர்வுகள் இல்லை என அதற்கு அர்த்தமாகாது. என்னுடைய வாழ்க்கையில் நான் ஒரு எல்லைக்குத் தள்ளப்பட்டேன், உண்மையில் எங்கும் திரும்ப இடமில்லை என முதல்முறையாக நான் நினைத்தேன், ஆகவே நான் கர்த்தரிடத்தில் திரும்பினேன், இந்நாள்வரை தானாக வரும் மகிழ்ச்சியைநான் உணருகிறேன்.”18

இது சிலநேரங்களில் உடைகளில், பொழுதுபோக்குகளில், பாலின தூய்மையில் கர்த்தருடைய தரங்களை நிலைநிறுத்த முற்படுகிறவர்களுக்கு எதிராக நேரில் சமூக ஊடகங்களின் இரக்கமற்ற தாக்குதல்களின் நாளாக இருக்கிறது. இது வழக்கமாக பரிசுத்தவான்களுக்கு மத்தியில் வாலிப மற்றும் வாலிப வயதுவந்தோருக்கும் அப்படியே, இந்த கேலியின் சிலுவையையும் துன்புறுத்தலையும் தாங்குகிற பெண்களுக்கும் தாயமார்களுக்கும் இது நடக்கிறது. இத்தகைய நிந்தனைக்கு மேலே எழுவது எளிதானதல்ல, ஆனால் பேதுருவின் வார்த்தைகளைக் கேளுங்கள்: “நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள், ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார், அவர்களாலே தூஷிக்கப்படுகிறார், உங்களாலே மகிமைப்படுகிறார்”.19

ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் “துர்பாக்கியத்தை அறியாததினிமித்தம் சந்தோஷத்தை அறியாதிருந்துமாசற்ற நிலையிலிருந்தார்கள்.”20 இப்போது பொறுப்புள்ள மனிதர்களாயிருப்பதால், அது, பாவமாக, சோதனையாக, பெலவீனமாக, அல்லது சந்தோஷத்திற்கு வேறு எந்தவித தடையாகவோ, எந்த வடிவத்திலிருந்தாலும், துர்பாக்கியத்தை மேற்கொள்வதில் நாம் மகிழ்ச்சி காண்கிறோம். சீஷத்துவத்தின் பாதையில் முன்னேற்றத்தை உணருகிற இதுவே மகிழ்ச்சி, பாவங்களின் மன்னிப்பைப் பெற்ற, மனசமாதானத்தைப் பெற்ற மகிழ்ச்சி21, கிறிஸ்துவின் கிருபையின் மூலமாக ஒருவரின் ஆத்துமா விரிவடைந்து வளருகிற உணர்வின் மகிழ்ச்சி.22

கிறிஸ்து சேவை செய்ததைப்போல சேவை செய்வதன் மகிழ்ச்சி.

மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டுவருவதில் இரட்சகர் மகிழ்ச்சி காண்கிறார்23 இரட்சகரின் பாவநிவர்த்தியைப்பற்றி பேசும்போது தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னார்:

“அனைத்துக் காரியங்களிலும் இருப்பதைப்போல, தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு சிலுவையைச் சகித்த இயேசு கிறிஸ்து நமது இறுதியான உதாரணபுருஷர்[எபிரேயர் 12:2]. அதைப்பற்றி சிந்தியுங்கள்! பூமியில் இதுவரை அனுபவித்த மிக மோசமான அனுபவத்தை அவர் சகித்துக்கொள்வதற்காக, நம்முடைய இரட்சகர் மகிழ்ச்சியில் கவனம் செலுத்தினார்.

அவருக்கு முன் வைத்திருந்த மகிழ்ச்சி யாது? நிச்சயமாக, அதில் கழுவுதலின், குணமாக்குதலின், நம்மைப் பெலப்படுத்துவதின் மகிழ்ச்சி, மனந்திரும்புகிற அனைவரின் பாவங்களுக்காக கிரயம் செலுத்துவதன் மகிழ்ச்சி, சுத்தமாகவும் தகுதியாயும் வீட்டிற்குத் திரும்பவும் நமது பரலோகப் பெற்றோருடனும் குடும்பங்களுடனும் வாழ உங்களுக்கும் எனக்கும் சாத்தியமாக்குகிறதில் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது”24

அதைப்போன்று, நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கிற மகிழ்ச்சி மீட்பின் அவரது பணியில் இரட்சகருக்கு உதவுவதின் மகிழ்ச்சி. ஆபிரகாமின் சந்ததியையும் பிள்ளைகளையும் போல,25 “நித்திய ஜீவன்களின் ஆசீர்வாதங்களான சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களுடன்”26 பூமியிலுள்ள சகல குடும்பங்களையும் ஆசீர்வதிப்பதில் நாம் பங்கேற்கிறோம்.

ஆல்மாவின் வார்த்தைகள் மனதில் வருகிறது:

“நான் சில ஆத்துமாக்களை மனந்திரும்புதலுக்குள்ளாகக் கொண்டுவருகிற கருவியாய் கர்த்தரின் கரங்களில் இருக்கக்கூடும் என்பதில் மேன்மை பாராட்டுகிறேன் ,இதுவே என் மகிழ்ச்சியாயிருக்கிறது.

“இதோ, என் சகோதரரில் அநேகர் மனத்தாழ்ச்சியாய் தங்கள் தேவனிடத்தில் வருகிறதை நான் காணும்போது என் ஆத்துமா சந்தோஷத்தால் நிரம்புகிறது. …

“ஆனால் என் ஜெயத்திற்காக மாத்திரம் நான் சந்தோஷமடைவதில்லை ,என் சந்தோஷம் நேபியின் தேசத்திற்கு போய் வந்த என் சகோதரரின் ஜெயத்தினிமித்தம் பூரணப்பட்டிருக்கிறது. …

“இப்பொழுது இந்த சகோதரரின் ஜெயத்தை எண்ணும்போது,என் ஆத்துமா சரீரத்திலிருந்து பிரிந்துபோகும் மட்டுமாய் எடுத்துச் செல்லப்படுவது போல் என் சந்தோஷம் மிகுதியாயிருந்தது”.27

சபையில் ஒருவருக்கொருவரான நமது சேவையின் கனிகள் “நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கிற” மகிழ்ச்சியின் பகுதி. ஊக்கமின்மை அல்லது மனஅழுத்தத்தின் சிலநேரங்களில் கூட, தேவனை மகிழ்ச்சியாக்கும் சந்தோஷத்தில் கவனம் செலுத்தி, நமது சகோதர சகோதரிகளான அவருடைய பிள்ளைகளுக்கு ஒளியையும், நிவாரணத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவருவதில் நாம் பொறுமையுடன் ஊழியம் செய்யமுடியும்.

போர்ட்-அ-பிரின்ஸ் ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக கடந்த மாதம் ஹெயிட்டியில் இருந்தபோது, ஒரு சில நாட்களுக்கு முன் ஒரு பரிதாபமான விபத்தில் கணவன் கொல்லப்பட்ட சகோதரியை மூப்பர் டேவிட்டும் சகோதரி சூசன் பெட்னாரும் சந்தித்தார்கள். அவளுடன் சேர்ந்து அவர்கள் அழுதார்கள். இருந்தும், ஞாயிற்றுக்கிழமையில் ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அனைவரிடமும் ஒரு மென்மையான, வரவேற்பின் புன்னகையோடு, பிரதிஷ்டை நிகழ்ச்சிகளில், இந்த அன்பான பெண் அவளுடைய இடத்திலிருந்தாள்.

அவர்களுக்காக இரட்சகர் மன்றாடுகிறார்28 என்பதையும், நமக்காக பிதாவிடத்தில் அவர் ஜெபிக்கிறாரென்பதைக் கேட்கும்போது அது நம் ஆத்துமாக்களை நிரப்புகிற மகிழ்ச்சியை எவராலும் நினைக்கமுடியாதென்றும் அறிவதில் பரிசுத்தவான்களின் முடிவான மகிழ்ச்சி வருகிறதென நான் நம்புகிறேன்.”29 பரிசுத்தவான்களின் நிறைவான சந்தோஷம் அவர்களுக்காக இரட்சகர் கெஞ்சுகிறார் எனவும், பிதாவிடம் நமக்காக இயேசு ஜெபித்துக் கொண்டிருக்கிறார் என நாம் கேள்விப்படும்போது, நமது ஆத்துமாக்களை நிரப்புகிற மகிழ்ச்சியை யாராலும் உணர முடியாது என்பதிலுமிருந்து வருகிறது என நான் நம்புகிறேன். “இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்டபடி, உலகத்தின் சிலுவையை சகித்த”30, “ஒரு நீதியான வாழ்க்கையை வாழ விருப்பத்துடன் முயற்சித்துக் கொண்டிருக்கிற” 31விசுவாசமுள்ள பரிசுத்தவான்களுக்கு மகிழ்ச்சி ஒரு வரமென தலைவர் ரசல் எம். நெல்சனுடன் நான் சாட்சியளிக்கிறேன். உங்களுடைய மகிழ்ச்சி நிறைவாயிருப்பதாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. ஏனோஸ் 1:3

  2. Russell M. Nelson, “Joy and Spiritual Survival,” Liahona, Nov. 2016, 81–84 பார்க்கவும்.

  3. Russell M. Nelson, “Joy and Spiritual Survival,” 82.

  4. Bible Dictionary, “Saint” பார்க்கவும்.

  5. மல்கியா 3:14–15.

  6. மல்கியா 03:17-18.

  7. ஒரு சபை (அல்லது ஒரு வாழ்க்கை) “என் சுவிசேஷத்தின்மேல் கட்டப்படாமல், மனுஷரின் கிரியைகளின்மேலோ, அல்லது பிசாசின் கிரியைகளின் மேலோ கட்டப்பட்டிருந்தால், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் அவர்கள் தங்கள் கிரியைகளில் கொஞ்சகாலம் மகிழ்ந்திருப்பார்கள், சீக்கிரமாய் முடிவுவரும், அவர்கள் வெட்டப்பட்டு திரும்ப வரமுடியாத இடமாகிய அக்கினியிலும் போடப்படுவார்கள்” (3 நேபி 27:11) என இரட்சகர் அறிவித்தார்.

  8. Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 475.

  9. தனிப்பட்ட தொடர்பு.

  10. 1 நேபி 11:22; மற்றும் 1 நேபி15:17, 21 பார்க்கவும்.

  11. 1நேபி 08:12.

  12. யோவான் 15:10;முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  13. யோவான் 16:33.

  14. Jack Rushton, in “Faith in Adversity: Jack Rushton and the Power of Faith,” SmallandSimpleTV, Sept. 2, 2009, YouTube.com.

  15. Allison M. Hawes, “It’s Good to Be Alive,” Ensign, Apr. 1994, 42 பார்க்கவும்.

  16. மோசியா24:14 பார்க்கவும்.

  17. Jo Anne Rushton, in Hawes, “It’s Good to Be Alive,” 43.

  18. Jack Rushton, in “Faith in Adversity: Jack Rushton and the Power of Faith.”

  19. 1 பேதுரு 4:14. 2நேபி 9:18 and 3 நேபி 12:12.,ல் குறிக்கப்பட்டிருக்கிறதையும் நினைவுகூருங்கள்.

  20. 2 நேபி 02:23; மோசே5:10–11ஐயும் பார்க்கவும்.

  21. மோசியா 4:3.

  22. தேவனிடம் கேட்கும்படியாக ஜோசப் ஸ்மித்தை உணர்த்திய யாக்கோபுவின் வார்த்தைகளை நாம் நினைவுகூருகிறோம்(யாக்கோபு 1:5). முந்தைய வசனங்கள் குறைந்த பரிச்சயமானவை.

    என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, அதை எல்லாம் மகிழ்ச்சியாக எண்ணுங்கள்.

    உங்கள் விசுவாசத்தின் பரிட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாய் எண்ணுங்கள்.

    “எதையும் விரும்பாமல், நீங்கள் பரிபூரணராயும் முழுமையாயும் இருக்கும்படிக்கு, பொருமை தன் பரிபூரண கிரியையை செய்வதாக” (Joseph Smith Translation, James 1:2 [in James 1:2, footnote a]; James 1:3–4).

  23. மோசே 01:39 பார்க்கவும்.

  24. Russell M. Nelson, “Joy and Spiritual Survival,” 82–83; emphasis in original.

  25. “நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்” (கலாத்தியர் 3:29; ஆதியாகமம்22:18யும் பார்க்கவும்; 26:4; 28:14; அப்போஸ் 3:25; 1 நேபிi 15:18; 22:9; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:58).

  26. ஆபிரகாம் 02:11.

  27. ஆல்மா 29:9–10, 14, 16. அப்படியிருந்தும் கர்த்தர் நமக்குச் சொல்லுகிறார், “எனது பிதாவின் இராஜ்ஜியத்துக்கு, என்னிடத்தில் நீங்கள் கொண்டுவந்த ஒரு ஆத்துமாவுக்காக உங்களின் சந்தோஷம் பெரிதாயிருந்தால், அநேக ஆத்துமாக்களை என்னிடத்தில் நீங்கள் கொண்டுவருவீர்களானால் உங்களின் சந்தோஷம் எவ்வளவு பெரிதாயிருக்கும்!கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:16. “உலகம் நிலைத்திருக்கும்போது,” (3 நேபி 28:9) கிறிஸ்துவண்டை ஆத்துமாக்களைக் கொண்டுவர அவர்கள் வாஞ்சையாயிருந்தபடியால் மூன்று நேபியர்களும் பூரண சந்தோஷம் வாக்களிக்கப்பட்டார்கள்: மேலும் 3 நேபி 28:10) பார்க்கவும்.

  28. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:3-5 பார்க்கவும்.

  29. 3 நேபி 17:17.

  30. 2 நேபி 09:18.

  31. Russell M. Nelson, “Joy and Spiritual Survival,” 84.