2010–2019
இரண்டு மிகப்பெரிய கற்பனைகள்
அக்டோபர் 2019 பொது மாநாடு


இரண்டு மிகப்பெரிய கற்பனைகள்

மிகப்பெரிய கற்பனைகள் இரண்டையும் கைக்கொள்ள நாம் முயற்சிக்கவேண்டும். அப்படிச் செய்ய சட்டத்திற்கும் அன்புக்குமிடையில் ஒரு நேர்த்தியான கோட்டில் நாம் நடக்கிறோம்.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திலிருக்கிற என்னுடைய அன்பான சகோதரிகளே, நித்திய குடும்பத்தின் நியமிக்கப்பட்ட தெய்வீக பாதுகாவலர்களாக நாங்கள் உங்களை வாழ்த்துகிறோம். “குடும்பங்கள் அமைக்கப்பட, முத்திரிக்கப்பட, நித்தியமாக மேன்மையடையும்படியாக சபை மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது”1 என தலைவர் ரசல் எம்,நெல்சன் நமக்கு போதித்திருக்கிறார். பெண் ஓரின சேர்க்கையாளர், ஆண் ஓரின சேர்க்கையாளர், இருபால் அல்லது திருநங்கைகள், பொதுவாக எல்.ஜி.பி.டி என்று குறிப்பிடப்படுகிற அடையாளம் காணப்படுகிற நபர்களுக்காக அந்த போதனைகள் முக்கியமான தாக்கங்களைக் கொண்டிருக்கின்றன.2 “[எப்போதும்] ஒருவரையொருவர் நேசிக்க ஒருவருக்கொருவருடன் நாம் சம்மதிக்க வேண்டியதில்லை”3 எனவும் தலைவர் நெல்சன் நினைவூட்டினார். பிள்ளைகள் மற்றும் இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க குடும்ப கலந்துரையாடலுக்கு இந்த தீர்க்கதரிசன போதனைகள் முக்கியமானவை. சபையில் நேரடியாக அல்லது மறைமுகமாக எல்லா குடும்பத்தையும் பாதிக்கிற இந்தக் கேள்விகளால் நீங்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படுவதால் இந்தப் பார்வையாளர்களிடம் பேச உணர்த்தப்பட நான் ஜெபத்துடன் நாடியிருக்கிறேன்.

I.

இயேசு போதித்த இரண்டு மிகப்பெரிய கற்பனைகளுடன் நான் ஆரம்பிக்கிறேன்.

“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.

“இது முதலாவதும் மிகப் பெரிய கற்பனையுமாகும்.

“இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக.”4

ஒவ்வொருவனும் நமது அண்டைவீட்டான் என இயேசுவின் நல்ல சமாரியன் உவமை போதிப்பதால் ஒவ்வொருவரையும் நேசிக்க நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம் என்பது இதன் அர்த்தமாகும்.5 ஆனால், இந்த இரண்டாவது கற்பனையைக் கைக்கொள்ள நமது வைராக்கியம், தேவனிடத்தில் நமது முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும் அன்புகூருவாயாக என்ற முதலாம் கற்பனையை நாம் மறக்க காரணமாயிருக்கக்கூடாது. “[அவருடைய] கற்பனைகளைக் கைக்கொள்ளுவதால்.”6 அந்த அன்பை நாம் காட்டுகிறோம். அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய தேவன் நம்மைக் கோருகிறார், ஏனென்றால் மனந்திரும்புதலையும் சேர்த்து அந்த கீழ்ப்படிதல் மூலமாக மட்டுமே அவருடைய பிரசன்னத்திற்கு நாம் திரும்பிச்சென்று அவரைப்போன்று பரிபூரணராகலாம்.

“தேவனுடைய அன்புக்கும் அவருடைய நியாயப்பிரமாணங்களுக்குமிடையில் பலமான இணைப்பு”7 என அவர் அழைக்கிறதை இளம் வயதுவந்தோருக்கு அவருடைய சமீபத்திய உரையில் தலைவர் ரசல் எம். நெல்சன் பேசினார். எல்.ஜி.பி.டி என அடையாளம் காணப்படுகிறவர்களுக்கு தொடர்பான சிக்கல்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பொருந்தும் பிரமாணம் திருமணத்திற்கும் அதன் துணையான கற்புடமைக்குமான தேவனுடைய பிரமாணம். அவருடைய பிள்ளைகளுக்கான பரலோகத்திலுள்ள நமது பிதாவின் இரட்சிப்பின் திட்டத்தில் இரண்டும் அத்தியாவசியமானது. தலைவர் நெல்சன் போதித்ததைப்போல, “நம்மீதுள்ள அவருடைய எல்லையில்லா அன்பினாலும், தேவனுடைய பிரமாணங்கள் முற்றிலும் உந்துதலாயிருக்கிறது, மேலும் நாம் மாறக்கூடிய அனைத்திலும் மாறுவது நம்மிடம் அவருடைய விருப்பமாயிருக்கிறது”8

தலைவர் நெல்சன் போதித்தார்: “அநேக நாடுகள் … ஓரின திருமணத்தை சட்டபூர்வமாக்கியிருக்கின்றன. சபையின் அங்கத்தினர்களாக, சமூக திருமணத்தையும் சேர்த்து, நாட்டின் சட்டங்களை நாம் மதிக்கிறோம். உண்மை என்னவென்றால் எப்படியிருந்தாலும் ஆரம்பத்தில் திருமணம் தேவனால் நியமிக்கப்பட்டது! ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இந்நாள்வரை இது அவரால் வரையறைக்கப்பட்டுள்ளது. திருமணத்தின்அவருடையவரையறையை தேவன் மாற்றவில்லை.”

தலைவர் நெல்சன் தொடர்ந்தார்:“அவருடைய கற்புடமை பிரமாணத்தையும் தேவன் மாற்றவில்லை. ஆலயத்திற்குள் பிரவேசிப்பதற்கான தேவைகளும் மாறவில்லை”.9

அப்போஸ்தலர்களாக எங்களுடைய அதிகாரம் சத்தியத்தைத் தவிர வேறெதையும் போதிப்பது அல்ல என தலைவர் நெல்சன் நம்மனைவருக்கும் நினைவுபடுத்தினார். தெய்வீக பிரமாணத்தை மாற்றியமைக்கும் அதிகாரத்தை அந்த அதிகாரம் [அப்போஸ்தலர்களுக்கு] கொடுக்கவில்லை”.10 அப்படியாக, என் சகோதரிகளே, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான திருமணத்தின் மற்றும் கற்புடமையைச் சார்ந்த பிரமாணத்தின் தனிப்பட்ட முக்கியத்துவத்தை சபையின் தலைவர்கள் எப்போதும் போதிக்கவேண்டும்.

II.

சிலஸ்டியல் இராஜ்ஜியத்திற்காக தேவனுடைய பிள்ளைகளை, மிகக்குறிப்பாக அதன் மிக உயர்ந்த மகிமை, மேன்மையடைதல் அல்லது நித்திய ஜீவனுக்கு ஆயத்தப்படுத்தல், தொடர்பாக ஆயத்தம் செய்வதே பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் பணி. நித்தியத்திற்கான திருமணம் மூலமாக மட்டுமே மிகஉயர்ந்த இலக்கு சாத்தியமாகும்.11 நித்திய ஜீவனில் ஆண் பெண் இணைவதில் அமையப்பெற்ற சிருஷ்டிப்பின் வல்லமைகள் அடங்கியிருக்கிறது.“12 அதை தற்கால வெளிப்படுத்தல் என்றென்றைக்குமாய் சந்ததிகளின் தொடர்ச்சி,”13 என விவரிக்கிறது.

இளம் வயது வந்தோருக்கு அவரது செய்தியில், தலைவர் நெல்சன் போதித்தார், தேவனின் நியாயப்பிரமாணங்களில் நிலைத்திருப்பது, மேன்மையடைதலை நோக்கி நீங்கள் முன்னேறும்போது, உங்களைப் பாதுகாப்பாக வைக்கும்.14—அதாவது, மேன்மைப்படுத்தப்பட்ட ஜீவியத்துடன் நமது பரலோக பெற்றோரின் தெய்வீக திறனுடன் தேவனைப் போலாவது. நாம் நேசிக்கிற அனைவருக்குமாக நாம் விரும்புகிற இதுவே இலக்கு. நாம் நேசிக்கிறவர்களுக்கு அவர்களுடைய மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொண்டுவரும் என்று நாம் அறிந்திருக்கிற, நமது அன்பினால் தேவனுடைய கற்பனைகளையும், திட்டத்தையும், பணியையும் அந்த அன்பு மேலோங்க நாம் அனுமதிக்க முடியாது.

ஆனால், மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைக் கொண்டிருப்வர்கள், அல்லது திருமணத்தையும் கற்புடமைப் பிரமாணத்தையும்பற்றிய தேவனுடைய கற்பனைகளைப் பின்பற்றாமலிருக்க தீர்மானித்தவர்கள் அல்லது தேர்ந்தெடுக்காதவர்கள் சிலரையும் சேர்த்து நாம் நேசிக்கிறவர்கள் அநேகரிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நிகழும்?

நாம் அனைவரும் அவருடைய பிள்ளைகள் என்றும் சந்தோஷமாயிருக்க அவர் நம்மை சிருஷ்டித்திருக்கிறார் என்றும் தேவனின் கோட்பாடு காட்டுகிறது.15 அவருடைய மிகஉயர்ந்த ஆசீர்வாதங்களை நாட அல்லது குறைந்த மகிமையின் இராஜ்ஜியங்களில் ஒன்றிற்கு நடத்துகிற தேர்ந்தெடுப்புகளைச் செய்ய அனைவரும் கீழ்ப்படிதலை தேர்ந்தெடுக்கலாம் என்பதில் ஒரு அநித்திய அனுபவத்திற்காக தேவன் ஒரு திட்டத்தை வழங்கியிருக்கிறாரென்று தற்கால வெளிப்படுத்தல் போதிக்கிறது.16 அவருடைய பிள்ளைகள் அனைவர் மீதும் தேவனின் பெரிய அன்பினால், அந்த குறைவான இராஜ்ஜியங்கள், மனிதர்கள் புரிந்துகொள்வதைவிட இன்னும் அற்புதமானது.17 அவர் “பிதாவை மகிமைப்படுத்தி, அவரது கைகளின் சகல கிரியைகளையும் பாதுகாக்கிறபோது18 இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி இது எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது.

III.

முதலாம் கற்பனையைப்பற்றி நான் பேசினேன் ஆனால் இரண்டாவதைப்பற்றி என்ன? நமது அண்டைவீட்டாரை நேசிக்க நாம் எவ்வாறு கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறோம்? பெண் ஓரின, ஆண் ஓரின, இருபால் அல்லது திருநங்கை போதனைகளையும் செயல்களையும் பின்பற்றுகிற நமது அண்டைவீட்டாரிடத்தில் அன்பை காட்டும்படி அன்புடன் நமது இரட்சகர் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரென்று நமது அங்கத்தினர்களை நாம் சம்மதிக்க வைக்க நாடுகிறோம். அவ்விதம், ஓரின திருமணம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டபோது, பிரதான தலைமையும் பன்னிருவர் குழுமமும் அறிவித்தனர், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் நாம் ஏற்றுக்கொள்ளாதபோதும், அனைவரையும் அன்புடன் நடத்த வேண்டும் என நமக்கு போதிக்கிறது. ஓரின திருமணத்தை அங்கீகரிக்கிற சட்டங்களை அல்லது நீதிமன்ற தீர்ப்புகளைப் பெற்றிருக்கிறவர்களை நாம் மரியாதைக் குறைவாக நடத்தக்கூடாது என உறுதிசெய்கிறோம்.”19

கூடுதலாக, நமது நம்பிக்கைகளையும் ஒப்புக்கொடுத்தல்களையும் பகிர்ந்துகொள்ளாதவர்களை நாம் ஒருபோதும் துன்புறுத்தக்கூடாது.20 வருந்தத்தக்கதாக, சில நபர்கள் இந்த சிக்கல்களை சந்தித்து, நமது குடும்பங்களில், தொகுதிகளில், பிணையங்களில் சில அங்கத்தினர்களால், தலைவர்களால் ஒதுக்கப்பட்டவர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக தொடர்ந்து உணருகிறார்கள். அன்புள்ளவர்களாகவும் அதிக மரியாதையுள்ளவர்களாயுமிருக்க நாம் அனைவரும் முயற்சிக்கவேண்டும்.

IV.

நாம் புரிந்துகொள்ளாத காரணங்களுக்காக நமது அநித்திய அனுபவங்களில் நமக்கு வெவ்வேறு சவால்கள் உண்டு. ஆனால், உண்மையுள்ளவர்களாக நாம் அவருடைய உதவியை நாடினால் இந்த சவால்களை மேற்கொள்ள நம் ஒவ்வொருவருக்கும் தேவன் உதவுவார் என நாம் அறிவோம். சட்டங்களை மீறியதற்காக துன்பத்திற்கும் மனந்திரும்புதலுக்கும் பின்னர் நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம், நாம் அனைவரும் மகிமையின் இராஜ்ஜியத்திற்காக விதிக்கப்பட்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவரையும் நியாயந்தீர்க்க தேவையான அறிவு, ஞானம், கிருபையை கொண்டிருக்கிற கர்த்தரால், இறுதியான, முடிவான தீர்ப்பு வரும்.

இதற்கிடையில் மிகப்பெரிய கற்பனைகளான இரண்டையும் கைக்கொள்ள நாம் முயற்சிக்கவேண்டும். அப்படிச் செய்ய, வழியிலே நமது அண்டைவீட்டாரை நேசித்துக்கொண்டிருக்கும்போது கற்பனைகளைக் கைக்கொண்டு, உடன்படிக்கை பாதையில் நடந்துகொண்டு பிரமாணத்திற்கும் அன்பிற்குமிடையில் ஒரு நேர்த்தியான பாதையில் நாம் நடக்கிறோம். எதை ஆதரிக்கவேண்டும் எதை எதிர்க்கவேண்டும், எப்படி நேசிக்கவேண்டும் என்றும் மரியாதையுடன் கவனித்து முறையாக போதிப்பதில் தெய்வீக உணர்த்துதலை இந்த நடைக்கு தேவையாயிருக்கிறது. கற்பனைகளை நாம் சமரசம் செய்யமாட்டோம் என்பது நமது நடைக்கு தேவைப்படுகிறது, ஆனால், புரிந்துகொள்ளுதல் மற்றும் அன்பின் முழு அளவைக் காட்டுகிறது. தங்களது பாலின நோக்குநிலையைக் குறித்து நிச்சயமில்லாமலிருக்கிற குழந்தைகளைக் கருத்தில்கொள்வதாக நமது நடை இருக்கவேண்டும், ஆனால் இது முதிராத அடையாளப்படுத்தலை ஊக்கமிழக்கச் செய்கிறது ஏனெனில், காலப்போக்கில் அத்தகைய நிச்சயமின்மை குறிப்பிடத்தக்க அளவில் குறைகிறது.21 உடன்படிக்கை பாதைக்கு வெளியே ஆட்சேர்ப்பை நமது நடை எதிர்க்கிறது, மேலும் கர்த்தரிடமிருந்து விலக ஜனங்களை நடத்துகிற யாருக்கும் அது ஆதரவை மறுக்கிறது. இவை அனைத்திலும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நம்பிக்கையையும், இறுதியான மகிழ்ச்சியையும் ஆசீர்வாதங்களையும் தேவன் வாக்களிக்கிறாரென்று நாம் நினைவுகூருகிறோம்.

V.

இரண்டு மிகப்பெரிய கற்பனைகளைப் போதிக்க, தகப்பன்மார்களும் தாய்மார்களும், நாம் அனைவரும் பொறுப்புடையவர்களாயிருக்கிறோம். சபையின் பெண்களுக்கு, அக்கடமையை இந்த மாபெரும் தீர்க்கதரிசனத்தில் தலைவர் ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பல் விவரித்தார்: “கடைசி நாட்களில் சபைக்கு வருகிற அதிக வளர்ச்சி, உலகத்தின் நல்ல பெண்களில் அனேகர் பெரும் எண்ணிக்கையில் ஈர்க்கப்படுவதால்தான். சபையின் பெண்கள் நீதியையும் தங்களுடைய வாழ்க்கையின் தெளிவான உச்சரிப்பையும் பிரதிபலிப்பார்கள், உலகத்தின் பெண்களிலிருந்து தனித்துவமான வித்தியாசமானவர்களாக இருக்கிற அளவுக்கு, சபையின் பெண்கள் இருப்பார்கள் என்றளவுக்கு இது நடைபெறும். அப்படியாக, கடைசி நாட்களில் எண்ணிக்கையிலும் ஆவிக்குரிய வளர்ச்சியிலும் சபையின் பெண் எடுத்துக்காட்டுகள் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக இருப்பார்கள்.”22

அந்த தீர்க்கதரிசனத்தைப்பற்றி பேசும்போது “தலைவர் கிம்பல் முன்னறிந்த அந்த நாள் இன்றுதான் என தலைவர் ரசல் எம்.நெல்சன் அறிவித்தார். அவர் முன்னறிவித்த பெண்கள் நீங்களே”23 40ஆண்டுகளுக்கு முன் அந்த தீர்க்கதரிசனத்தைக் கேட்டு சிறிதே செய்த நாம் இந்த சபையின் பெண்களுக்கு மத்தியில் உலக முன்னுரிமைகள் மற்றும் பிசாசின் சிதைவுகளால் தற்போது செல்வாக்கடைந்திருக்கிற தங்கள் சொந்த அன்பான நண்பர்களையும் குடும்பத்தையும் இரட்சிக்கிறதாயிருக்கும். அந்த தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற நீங்கள் போதித்து செயல்படுவீர்களென்பது எனது ஜெபமாகவும் ஆசீர்வாதமாகவுமிருக்கிறது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.