2010–2019
உடன்படிகைக்குச் சொந்தமாதல்
அக்டோபர் 2019 பொது மாநாடு


உடன்படிகைக்குச் சொந்தமாதல்

தேவனுக்கு சொந்தமாவதும், அவரது உடன்படிக்கையின் பாதையில் பிறருடன் நடப்பதும் உடன்படிக்கைக்கு சொந்தமாவதால் ஆசீர்வதிக்கப்படுவதற்கே.

அன்பு சகோதர சகோதரிகளே, ஜெபிக்க கற்றுக்கொள்கிற ஒரு ஆரம்ப வகுப்பு சிறுமிபற்றி ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. “எழுத்து Aக்காகவும், எழுத்து Bக்காகவும் … எழுத்து Gக்காகவும் உமக்கு நன்றி. குழந்தையின் ஜெபம் தொடர்கிறது, எழுத்துக்கள் X,Y,Z க்காகவும் உமக்கு நன்றி. அன்புள்ள பரம பிதாவே, எண் 1க்காகவும், எண் 2க்காகவும் உமக்கு நன்றி.” ஆரம்ப வகுப்பு ஆசிரியை கவலைப்படுகிறார், ஆனால் ஞானமாக காத்திருக்கிறார். குழந்தை சொல்கிறது, “எண் 5, எண்6க்காகவும் உமக்கு நன்றி. என் ஆரம்ப வகுப்பு ஆசிரியருக்காகவும் உமக்கு நன்றி. அவர்தான் என் ஜெபத்தை முடிக்க அனுமதிக்கிற ஒரே நபர்.”

பரலோக பிதா ஒவ்வொரு குழந்தையின் ஜெபத்தையும் பரிபூரணமாக கேட்கிறார். அளவற்ற அன்பினால், உடன்படிக்கையால் வந்து நம்பவும் சொந்தமாயிருக்கவும் அவர் நம்மை அழைக்கிறார்.

இந்த உலகம் கானல் நீராலும், மாயையாலும், கைவேலைகளாலும் நிறைந்திருக்கிறது. அனேகமானவை நிலையற்றதாகவும் மேலோட்டமானதாயும் தோன்றுகின்றன. நாம் முகமூடிகளையும், வேஷங்களையும், கூட்டத்திலிருந்து வரும் விருப்பங்களையும், விருப்பமில்லாதவைகளையும் விலக்கும்போது, வரிசையான போலிகள், தற்காலிக தொடர்புகள், அல்லது முடிவாக உலகப்பிரகார சுய ஆர்வ வெற்று முயற்சிகளுக்காக நாம் ஏங்குகிறோம். நன்றிகூரத்தக்க வகையில், அதற்கு பதிலளிக்க ஒரு வழி இருக்கிறது.

உடன்படிக்கை மூலம் அவரையும் நம்மைச் சுற்றியுள்ளோரையும் நேசிக்க தேவனின் பெரும் கட்டளைகளை பார்க்கும்போது, ஒரு அறிமுகமில்லாதவராகவோ, அல்லது விருந்தாளியாகவோ அல்லாமல் ஆனால் வீட்டிலுள்ள அவரது பிள்ளையாக பார்க்கிறோம்.1 இந்த பழங்கால முரண்பாடு இன்றும் உண்மைதான். உடன்படிக்கைக்கு சொந்தமாதலில் நமது சுயத்தை இழப்பதில், நமது சிறந்த நித்திய மனிதனை கண்டு அப்படி ஆகிறோம்.2—சுதந்திர, ஜீவனுள்ள, உண்மையான—மற்றும் நமது மிக முக்கிய உறவுகளை வரையறுக்கிறது. உடன்படிக்கைக்குச் சொந்தமாதல், தேவனுக்கும் ஒவ்வொருவருக்கும் நமது வாழ்க்கையில் வெளிப்பட தெய்வதன்மையின் வல்லமையை வரவேற்கிற, பரிசுத்த நியமங்கள் முலம், பரிசுத்த வாக்களிப்பை செய்து காத்துக்கொள்வதாகும்.3 நம்மிலுள்ள அனைத்துடனும் நாம் உடன்படிக்கை செய்யும்போது, நாம் இருப்பதை விட அதிகமாக ஆக முடியும். உடன்படிக்கைக்கு சொந்தமாதல் நமக்கு இடமும், காரணமும், ஆகும் தகுதியும் கொடுக்கிறது. வாழ்க்கைக்கும் இரட்சிப்புக்கும் அது விசுவாசமளிக்கிறது.4

தெய்வீக உடன்படிக்கைகள் தேவன் மீதும், அவரிடமிருந்தும் அதனால் ஒருவருக்கொருவருக்காகவும், ஒருவருக்கொருவருடனும், அன்பின் ஆதாரமாகிறது. நமது பரலோக பிதாவாகிய தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிறார், நம்மை நாம் நேசிப்பதை விடவும் அறிவதை விடவும் அதிகம் செய்கிறார். இயேசு கிறிஸ்துவில் விசுவாசமும் தனிப்பட்ட மாற்றமும், மனந்திரும்புதல் இரக்கமும், கிருபையும், மன்னிப்பும் கொண்டு வருகிறது. இவை அநித்தியத்தில் அனுபவிக்கிற காயத்தையும், தனிமையையும், அநீதியையும் ஆறுதல் படுத்துகின்றன. தேவனாக இருப்பதனால், நமது பரலோக பிதா நாம் தேவனின் மாபெரும் வரமாகிய அவரது மகிழ்ச்சி, அவரது நித்திய ஜீவனைப் பெற வேண்டுமென விரும்புகிறார்.5

நமது தேவன் ஒரு உடன்படிக்கையின் தேவன். அவரது தன்மையால், அவர் உடன்படிக்கையைக் காத்து, இரக்கம் காட்டுகிறார்.6 அவரது உடன்படிக்கைகள், காலம் இருக்கும்வரை, அல்லது பூமி இருக்கும்வரை, அல்லது இரட்சிக்கப்பட பூமியின் மீது ஒருவன் இருக்கும்வரை நிலைத்திருக்கும்.”7 நாம் வாழும் நிச்சயமின்மையிலும் சந்தேகத்திலும் அலைய வேண்டியவர்களல்ல, “மரணத்தின் கண்ணிகளை விட பலமாக” பெற்றுள்ள உடன்படிக்கையின் உறவுகளில் களிகூர வேண்டியவர்கள்.8

தேவனின் நியமங்களும் உடன்படிக்கைகளும் தேவையில் உலகத்தளவிலானது, சந்தர்ப்பத்தில் தனித்துவமானது. தேவனின் நியாயத்தில், எல்லா இடத்திலும், காலத்திலும் உள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கும் நியமங்கள் பெற முடியும். சுயாதீனம் பொருந்துகிறது—கொடுக்கப்பட்ட நியமங்களை ஏற்கலாமா என தனிப்பட்டவர்களே தீர்மானிக்கின்றனர். தேவனின் நியமங்கள் அவரது உடன்படிக்கையின் பாதையில் வழிகாட்டுதல் கொடுக்கிறது. அவரது பிள்ளைகளை வீட்டுக்குக் கொண்டுவரும் தேவனின் திட்டத்தை நாம், மீட்பின் திட்டம், இரட்சிப்பின் திட்டம், மகிழ்ச்சியின் திட்டம் என அழைக்கிறோம். மீட்பு, இரட்சிப்பு, சிலஸ்டியல் மகிழ்ச்சி, இயேசு கிறிஸ்து “தன் பரிபூரண பாவநிவர்த்தியை செய்ததால்” சாத்தியமாகிறது, 9

தேவனுக்கு சொந்தமாவதும், அவரது உடன்படிக்கையின் பாதையில் பிறருடன் நடப்பதும் உடன்படிக்கைக்கு சொந்தமாவதால் ஆசீர்வதிக்கப்படுவதற்கே.

முதலாவதாக, உடன்படிக்கைக்குச் சொந்தமாதல் “புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக” இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டிருக்கிறது.10 “பிதாவின் உடன்படிக்கையில் … கிறிஸ்துவில் பரிசுத்தப்படும்போது,” நமது நன்மைக்கேதுவாக அனைத்தும் இருக்கும்.11 ஒவ்வொரு நல்ல, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆசீர்வாதமும், இறுதிபரியந்தம் விசுவாசமாயிருப்பவர்களுக்கு வருகிறது. “தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுபவர்களின்மகிழ்ச்சியான நிலை”, மற்றும் “ஆவிக்குரியதும், லௌகீகமானதுமான சகல காரியங்களிலும் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” “முடிவற்ற மகிழ்ச்சியுள்ள நிலையில் தேவனோடு வாசம் செய்வார்கள்.”12

நமது உடன்படிக்கைகளின்படி வாழ்வதில், நம்மால் சிறந்ததைச் செய்யும்போது, சில சமயங்களில் நாம் தூதுவர்களோடு இருப்பது போல உணருவோம். நாம் திரையின் இப்பக்கத்தில் நாம் நேசிப்பவர்களாயும், நம்மை ஆசீர்வதிப்பவர்களாயும், திரையின் மறுபக்கத்திலிருந்து நம்மை நேசிப்பவர்களாயும் ஆசீர்வதிப்பவர்களாயும் இருப்போம்,

அண்மையில் சகோதரி காங்கும் நானும், ஒரு மருத்துவமனையயில் உடன்படிக்கைக்குச் சொந்தமாயிருத்தலை அதன் சிறந்த மென்மை வடிவத்தில் பார்த்தோம். ஒரு நம்பிக்கையற்ற தகப்பனுக்கு சிறுநீரக மாற்று தேவையாயிருந்தது. அவர் ஒரு சிறுநீரகம் பெற வேண்டுமென அவரது குடும்பம் அழுது, உபவாசித்து ஜெபித்தனர். உயிர் காக்கும் ஒரு சிறுநீரகம் கிடைத்தது என செய்தி வந்தபோது, அவரது மனைவி அமைதியாக சொன்னார், “அந்த குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும். என நம்புகிறேன்.” உடன்படிக்கையால் சொந்தமாவது அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளில், “உங்களிலும் என்னிலும் உள்ள விசுவாசத்தினால், உங்களோடே கூட நானும் ஆறுதலைடையும்படிக்கு,”.13

வாழ்க்கைப்பாதையில், நாம் தேவனினில் விசுவாசத்தை இழக்கலாம், ஆனால் அவர் நம்மில் ஒருபோதும் விசுவாசத்தை இழப்பதில்லை. முன்பு போலவே, அவரது முகப்பு விளக்கு எப்போதும் எரிந்துகொண்டிருக்கிறது. அவரது பாதையை அடையாளப்படுத்துகிற உடன்படிக்கைகளுக்கு நாம் வர அல்லது திரும்ப அவர் நம்மை அழைக்கிறார். நாம் தூரத்தில் வரும்போதே, நம்மைத் தழுவிக்கொள்ள அவர் தயாராகக் காத்திருக்கிறார்.14 நமது சந்தோஷங்களிலும் நமது அனுபவத்தின் மாதிரிகளை, வளைவுகளை அல்லது இணைக்கும் புள்ளிகளை விசுவாசக் கண்ணோடு நாம் பார்க்கும்போது, விசேஷமாக நமது பாடுகளிலும், துக்கங்களிலும், சவால்களிலும், நமது சந்தோஷங்களிலும் கூட அவரது மெல்லிய இரக்கங்களையும், ஊக்கத்தையும் நாம் பார்க்கலாம். எனினும் அடிக்கடி நாம் தடுமாறும்போது அல்லது விழும்போது, நாம் அவரை நோக்கி நகர்ந்தால், படிப்படியாக அவர் நமக்கு உதவுவார்.

இரண்டாவதாக, உடன்படிக்கைக்கு சொந்தமாவதில், நாம் நமது கரங்களில் வைக்கக்கூடிய கையிலிருக்கிற ஆதாரம், மார்மன் புஸ்தகம். ஒரு புதிய உடன்படிக்கையாக, தீர்க்கதரிசனம் சொல்லப்பட்ட தேவனின் பிள்ளைகளின் கூடுகைக்கு மார்மன் புஸ்தகம் வாக்களிக்கப்பட்ட கருவியாக இருக்கிறது.15 நாமாக அல்லது பிறருடன் நாம் மார்மன் புஸ்தகம் வாசிக்கும்போது, அமைதியாகவோ அல்லது சத்தமிட்டோ “நீங்கள் உண்மையான இருதயத்தோடும், முழுநோக்கத்தோடும், கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து” நாம் தேவனிடம் கேட்டால், மார்மன்புஸ்தகம் உண்மையானது என பரிசுத்த ஆவியின் வல்லமையால் உறுதி பெறலாம்.16 இயேசு கிறிஸ்து நமது இரட்சகர், ஜோசப் ஸ்மித் மறுஸ்தாபிதத்தின் தீர்க்கதரிசி, கர்த்தரின் சபை அவரது பெயரால் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை என அழைக்கப்படுகிறது, என்பதும் இதில் அடங்குகிறது.17

லேகியின் பிள்ளைகளாகிய, “தீர்க்கதரிசியின் பிள்ளைகள்” உங்களோடு மார்மன் புஸ்தகம் பூர்வகால மற்றும் தற்கால தீர்க்கதரிசிகளைக் கொண்டும் பேசுகிறது.18 மார்மன் புஸ்தகத்தில் புழுதியிலிருந்து பேசுவது போல ஒரு குரலை அவர்களது சந்ததியர் அடையாளம் காண்பார்கள் என உங்கள் முற்பிதாக்கள் உடன்படிக்கை வாக்குத்தத்தம் பெற்றார்கள்.19 நீங்கள் உணர்கிற அந்தக்குரல் நீங்கள் வாசிக்கிறபோது, நீங்கள் “உடன்படிக்கையின் பிள்ளைகள்,”20 இயேசு உங்கள் நல்ல மேய்ப்பன் என சாட்சியளிக்கிறது.

ஆல்மாவின் வார்த்தைகளில் மார்மன் புஸ்தகம் நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறது, “தம் ஆவியை உங்கள் மீது நிறைவாய் ஊற்றும்படிக்கு அவரை சேவித்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.”21 ஒருவர் சொல்வது போல, நன்மைக்கு நாம் மாற விருமபினால், “துர்பாக்கியமாய் இருப்பதை நிறுத்த, மகிழ்ச்சியாய் மகிழ்ந்திருக்க,” நாம் வழிகாட்டுதலுக்கும், உதவிக்கும், பெலத்துக்கும் பாத்திரராகிறோம். உடன்படிக்கையால் தேவனுக்கு சொந்தமாயிருக்கவும், விசுவாசமிக்க சமூகத்தவராயிருக்கவும், கிறிஸ்துவின் கோட்பாட்டில் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆசீர்வாதத்தை நாம் இப்போதே பெறலாம்.22

தன் அனைத்து பிள்ளைகளையும் ஆசீர்வதிக்க, மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட ஆசாரியத்துவ அதிகாரமும் வல்லமையும், உடன்படிக்கைக்கு சொந்தமாவதன் மூன்றாம் பரிமாணம். இந்த ஊழியக்காலத்தில், யோவான் ஸ்நானனும், அப்போஸ்தலர்களாகிய பேதுருவும், யாக்கோபுவும், யோவானும் அவரது ஆசாரியத்துவ அதிகாரத்தை மறுஸ்தாபிதம் செய்ய, தேவனிடமிருந்து மகிமை பெற்ற தூதுவர்களாக வந்தனர்.23 தேவனின் ஆசாரியத்துவமும், அதன் நியமங்களும் பூமியில் உறவுகளை இனிமையாக்குகிறது, பரலோகத்தில் பெலன் பெற உடன்படிக்கையின் உறவுகளுக்கு அதிகாரமளிக்கிறது.24

ஒரு சிசுவுக்கு பெயரிடுதல், மற்றும் ஆசீர்வதித்தலிலிருந்து, கல்லறை பிரதிஷ்டை வரை தொட்டில் முதல் கல்லறை வரை ஆசாரியத்துவம் ஆசீர்வதிக்க முடியும். ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள், குணமாக்குகின்றன, ஆறுதலளிக்கின்றன, ஆலோசனையளிக்கின்றன. தகப்பன் தன் மகனுக்கு மென்மையான ஆசாரியத்துவ ஆசீர்வாதம் கொடுக்கும்போது மன்னிக்கும் அன்பு வரும் வரை, தகப்பன் மகன் மீது கோபமாயிருந்தான். தன் குடும்பத்தில் சபையின் ஒரே அங்கத்தினராக, ஒரு அன்பான இளம்பெண், ஒரு உணர்த்தப்பட்ட ஆசாரியத்துவ ஆசீர்வாதம் பெறும்வரை, தேவ அன்பு பற்றி நிச்சயமற்றவளாக இருந்தாள். உலகம் முழுவதும் மகத்தான கோத்திர பிதாக்கள் கோத்திர பிதா ஆசீர்வாதம் கொடுக்க ஆவிக்குரிய விதமாக ஆயத்தம் செய்கிறார்கள். கோத்திரபிதா உங்கள் தலைமீது கைகளை வைக்கும்போது, அவர் உங்கள் மீது தேவனின் அன்பை உணர்ந்து, தெரிவிக்கிறார். இஸ்ரவேல் வீட்டில் உங்கள் வம்சாவளியை அவர் கூறுகிறார். அவர் கர்த்தரிடமிருந்து ஆசீர்வாதங்களைக் குறிப்பிடுகிறார். குறிப்பாக சிந்திக்க, கணவர் கோத்திரபிதா ஆசீர்வாதம் கொடுக்கும் நாட்களில், அவரும் அவரது குடும்பத்தினரும் எப்படி ஆவியை வரவேற்றார்கள் என ஒரு கோத்திர பிதாவின் மனைவி என்னிடம் சொன்னாள்.

இறுதியாக உடன்படிக்கைக்குச் சொந்தமாதலின் ஆசீர்வாதங்கள், நாம் கர்த்தரின் தீர்க்கதரிசியைப் பின்பற்றும்போதும், திருமணம் உள்ளிட்ட ஆலய உடன்படிக்கையின்படி வாழ்வதில் களிகூரும்போதும் வருகிறது. நமது சொந்த மகிழ்ச்சியை விட, நமது துணைவர் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சியை நாம் அன்றாடம் தேர்வுசெய்யும்போது, உடன்படிக்கை திருமணம் உயர்வானதாகவும், நித்தியமாகவும் ஆகிறது. “நான்” “நாமாக” ஆகும்போது, நாம் ஒன்றாக வளர்கிறோம். நாம் ஒன்றாக வளர்கிறோம், ஒன்றாக இளமையாகிறோம். வாழ்நாளில் நாம் நம்மை மறந்து ஒருவரையொருவர் ஆசீர்வதிக்கும்போது, இப்போதும் நித்தியத்துக்கும், அமைதியாக நம்பிக்கையிலும், மகிழ்ச்சியிலும், நமது அருமையான கனவுகள் பரிசுத்தமாகின்றன.

சூழ்நிலைகள் மாறும்போது, நம்மால் இயன்ற அனைத்தையும் நாம் செய்யும்போது, நம்மால் முடிந்த சிறப்பானதை செய்யும்போது, அவ்வாறே அவரது உதவியை கேட்டு நாடும்போது, பரிசுத்த ஆவி மூலம், அவரது நேரத்திலும், விதத்திலும் கர்த்தர் நம்மை வழிநடத்துவார்.25 திருமண உடன்படிக்கைகள் அவற்றைச் செய்பவர்களின் பரஸ்பர தேர்வால் கட்டப்படுகின்றன—சுயாதீனத்தின்பால் தேவனின் நினைவூட்டு மற்றும் நமது மதிப்பு, மற்றும் நாம் பரஸ்பரம் கேட்கும்போது அவரது உதவியின் ஆசீர்வாதம்.

குடும்ப சந்ததிகள்தோறும் உடன்படிக்கைக்கு சொந்தமாவதன் பயன்கள், நமது வீடுகளிலும் இருதயங்களிலும் உணரப்படுகின்றன. சொந்த உதாரணங்கள் மூலம் நான் விளக்க தயவுசெய்து அனுமதியுங்கள்.

திருமணம் செய்ய, நானும் சகோதரி காங்கும் காதல் வயப்பட்டபோது, நான் சுயாதீனம் மற்றும் தீர்மானங்கள் பற்றி கற்றேன். சில காலங்களாக நாங்கள் இரு வேறு நாடுகளில், இறுவேறு கண்டங்களில் படித்தோம். இதனால்தான் நான் சர்வதேச தொடர்புகளில் முனைவர் பட்டம் பெற முடிந்தது என நேர்மையாக நான் சொல்ல முடியும்.

“பரலோக பிதாவே நான் சூசனை மணக்கலாமா?” என கேட்டபோது. நான் சமாதானத்தை உணர்ந்தேன். ஆனால் உண்மையான நோக்கத்துடன் ஜெபிக்க நான் கற்றபோது, “பரலோக பிதாவே, நான் சூசனை நேசிக்கிறேன், நான் அவளை மணக்க விரும்புகிறேன். என்னால் இயன்றவரை சிறந்த கணவனாக இருப்பேன் என வாக்களிக்கிறேன்”—நான் செயல்பட்டு, சிறந்த முடிவுகளைச் செய்தபோது, பலத்த ஆவிக்குரிய உறுதி வந்தது.

இப்போது காங் மற்றும் லிண்ட்சே குடும்ப தேடுதல் மரங்கள், கதைகள் மற்றும் புகைப்படங்கள், தலைமுறையாக உடன்படிக்கைக்கு சொந்தமாதலில் வாழ்ந்த அனுபவத்தின் மூலம், கண்டுபிடிக்கவும் தொடர்பு கொள்ளவும் எங்களுக்கு உதவுகிறது.26 நமக்கு மரியாதைக்குரிய சந்ததியரில் சேருவோர்,

படம்
ஆலிஸ் ப்ளார் பாங்கர்ட்டர்

கொள்ளுப்பாட்டி ஆலிஸ் ப்ளார் பாங்கர்ட்டர், ஒரே நாளில் மூன்று திருமண முன்மொழிதல்கள் பெற்றார், பின்னர் வெண்ணெய் எடுக்கவும், தைக்கவும், ஒரே நேரத்தில் வாசிக்கவும், ஒரு மிதிப்பானை செய்யச் சொன்னார்.

படம்
லாய் கூய் சார்

கொள்ளுத் தாத்தா லாய் கூய் சார் தன் பிள்ளைகளை முதுகிலும், தன் குடும்ப உடமைகளை கழுதை மீதும் ஹவாயின் பிக் தீவின் லாவா நிலத்தின்மீது கொண்டு சென்றார். சார் குடும்ப தலைமுறைகளின் ஒப்புக்கொடுத்தலும், தியாகமும் இன்று எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்கிறது.

படம்
மேரி ஆலிஸ் போவெல் லிண்ட்சே

சில நாட்கள் இடைவெளியில், அவரது கணவரும் மூத்த மகனும் திடீரென மரித்தபோது, ஐந்து பிள்ளைகளுடன் க்ராம் மேரி ஆலிஸ் போவெல் விடப்பட்டார். 47 ஆண்டுகளாக விதவையாக, உள்ளூர் தலைவர்கள் மற்றும் அங்கத்தினர்களின் ஆதரிக்கும் அன்புடன் தன் குடும்பத்தை வளர்த்தார். அந்த அநேக ஆண்டுகளில், அவர் தனக்கு உதவினால், ஒருபோதும் புகார் சொல்லமாட்டேன் என கர்த்தருக்கு வாக்களித்தார். கர்த்தர் அவருக்கு உதவினார். அவர் ஒருபோதும் புகார் சொல்லவில்லை.

அன்பு சகோதர சகோதரிகளே, பரிசுத்த ஆவியால் சாட்சியளிக்கப்பட்டபடி, நல்லதும் நித்தியமானதும் நமது நித்திய பிதாவாகிய தேவனிலும், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிலும், அவரது பாவநிவர்த்தியின் நிச்சயத்திலும் மையமாக உள்ளது. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தர். இயேசு கிறிஸ்து பற்றிய சாட்சியளிப்பதே மார்மன் புஸ்தகத்தின் உடன்படிக்கை நோக்கமாகும்.27 வாக்காலும் உடன்படிக்கையாலும், தேவனின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட ஆசாரியத்துவ அதிகாரம் உடன்படிக்கை திருமணம், குடும்ப சந்ததி, மற்றும் தனிப்பட்ட ஆசீர்வாதங்கள் மூலம் தேவனின் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் நோக்கமுடையதாகும்.

நமது இரட்சகர் அறிவிக்கிறார், நானே ஆல்பாவும் ஒமேகாவாகவும் இருக்கிறேன். ஆம் நானே அவர். ஆதியும் அந்தமுமான உலக மீட்பர்.28

ஆதியில் நம்முடனிருந்தார், முடிவுபரியந்தம் நமது அனைத்து உடன்படிக்கைக்கு சொந்தமாதலிலும் நம்முடனிருக்கிறார். அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த, தூய நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.