2010–2019
இளைஞர்களை பெலப்படுத்த சரிப்படுத்தல்கள்
அக்டோபர் 2019 பொது மாநாடு


இளைஞர்களை பெலப்படுத்த சரிப்படுத்தல்கள்

அதிகமான இளம் ஆண்களும் இளம் பெண்களும் சவாலுக்கு மேலெழுந்து, இந்த ஒளிக்கதிரைப்போன்றதுடன் நமது இளைஞர்களிடம் கவனம் செலுத்தி உடன்படிக்கைப் பாதையில் நிலைத்திருப்பார்கள்.

ஞானஸ்நானங்களில் சாட்சிகளாயிருப்பதற்கு சம்பந்தப்பட்ட அந்த சந்தோஷமான வழிகாட்டுதலின் வெளிப்படுத்தலுக்காவும், இளைஞர்களை பெலப்படுத்தவும் அவர்களுடைய பரிசுத்த திறனை மேம்படுத்தவும் உதவ வழிநடத்தலை பகிர்ந்துகொள்ள எங்களை நீங்கள் கேட்டதற்காவும் தலைவர் நெல்சன் அவர்களே உங்களுக்கு நன்றி.

அந்த சரிசெய்தல்களை நான் பகிர்ந்துகொள்வதற்கு முன்பு நடந்துகொண்டிருக்கும் சுவிசேஷ மறுஸ்தாபிதத்தின் வளர்ச்சிகளுக்கு அங்கத்தினர்களின் விதிவிலக்கான வழியில் பதிலளித்ததற்காக எங்கள் மனமார்ந்த பாரட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். தலைவர் நெல்சன் கடந்த ஆண்டில் ஆலோசனையளித்ததைப்போல, நீங்கள் உங்கள் ஊட்டசத்தை எடுத்தீர்கள்!1

என்னைப் பின்பற்றி வாருங்களைவீட்டில் நீங்கள் ஆனந்தமாக தியானியுங்கள்2 சபையின் சரிப்படுத்தல்களுக்கும் நீங்கள் பதிலளித்தீர்கள். மூப்பர் குழும அங்கத்தினர்களும் ஒத்தாசை சங்க சகோதரிகளும் இரட்சிப்பின் பணியை ஒன்றுசேர்ந்து செய்கிறார்கள்.3

எங்களுடைய நன்றியுணர்வு நிரம்பி வழிகிறது.4 நம்முடைய இளைஞர்கள் பெலத்துடனும் விசுவாசத்துடனும் தொடர்ந்து நிலைத்திருக்கிறார்களென்பதற்காக நாங்கள் குறிப்பாக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.

நமது இளைஞர்கள் ஒரு உற்சாகமான ஆனால் சவாலான நேரத்தில் வாழ்கிறார்கள். கிடைக்கிற தேர்நதெடுப்புகள் ஒருபோதும் வியக்கத்தக்கதாக இருந்ததில்லை. ஒரு எடுத்துக்காட்டு. நவீன திறன் கைபேசி நம்பமுடியாத முக்கியமான அணுகலையும், குடும்ப வரலாறு மற்றும் பரிசுத்த வேதத்தையும் சேர்த்து, எழுச்சியான தகவலையும் வழங்குகிறது. மறுபுறம், கடந்த காலத்தில் உடனடியாக கிடைக்காத முட்டாள்தனம், ஒழுக்கக்கேடு, தீமை அதில் அடங்கியிருக்கிறது.

படம்
வீட்டை மையப்படுத்திய பாடத்திட்டம்
படம்
இளைஞர் செயல்திட்டம்

தேர்ந்தெடுப்புகளின் இந்த பிரமையில் பயணம் செய்ய நமது இளைஞர்களுக்குதவ மூன்று மகத்துவமான விரிவான முயற்சிகளை சபை தயாரித்திருக்கிறது. முதலாவதாக, பாடத்திட்டம் வீட்டிற்காக பெலப்படுத்தப்பட்டு விரிவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, உற்சாகமான நடவடிக்கைகளும், தனிப்பட்ட முன்னேற்றங்களும் உள்ளடக்கிய பிள்ளைகள் மற்றும இளைஞர் திட்டம், தலைவர் நெல்சன், தலைவர் பாலர்ட் மற்றும் பொது அலுவலர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. நமது ஆயர்களும் மற்ற தலைவர்களும் மிக விசேஷித்த கவனத்தை இளைஞர்களுக்குக் கொடுக்க நிர்வாக மாற்றங்கள் மூன்றாவது முயற்சி. ஆவிக்குரிய ஆற்றலுள்ளதாகவும் அவர்கள் மாறும்படியாக தலைவர் நெல்சன் கேட்ட இளைஞர்கள், இளைஞர்கள் பட்டாளமாக மாற உதவவும் இந்தக் கவனம் இருக்கவேண்டும்.

பின்னியிருக்கிற மாதிரிகள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட இவைகளுடன் இந்த முயற்சிகள் தனியாக்கப்பட்ட மாற்றங்களில்லை பரிசுத்தவான்களை ஆசீர்வதிக்கவும் தேவனை அவர்கள் சந்திக்க ஆயத்தப்படுத்தவும் சரிப்படுத்தல்கள் ஒவ்வொன்றும் ஒரு பின்னப்பட்ட ஒருங்கிணைந்த பகுதி.

மாதிரியின் ஒரு பகுதி வளர்ந்துவரும் தலைமுறைகளுக்கு சம்பந்தப்பட்டது. இளைஞர்கள், அவர்களே செய்யமுடிகிறவைகளை பெற்றோரும் தலைவர்களும் எடுத்துக்கொள்ளாமல், வாலிப வயதில் அதிக தனிநபர் பொறுப்புகளை எடுத்துக்கொள்ள நமது இளைஞர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.5

அறிவிப்பு

தொகுதி மற்றும் பிணைய மட்டங்களில் இளைஞர்களுக்காக நிர்வாக மாற்றங்களை இன்று நாங்கள் அறிவிக்கிறோம். தலைவர் நெல்சன் விவரித்ததைப்போல, இளம் பெண்களுக்கான மாற்றங்களை சகோதரி போனி ஹெச்.கார்டன் இந்த மாலையில் விவாதிப்பார். இப்போது நான் விவாதிக்கப்போகிற ஆரோனிய ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்களை, குழுமங்களை, தலைமை குழுமங்களை பெலப்படுத்துவது மாற்றங்களுக்கான நமது நோக்கம். ஆயத்துவம் இந்த ஆரோனிய ஆசாரியத்துவத்திற்கு தலைமை மற்றும் அதற்கு திறவுகோல்களை அல்லது அதிகாரத்தைத் தரித்திருக்கிறது என சொல்லுகிறகோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:15வுடன் நமது பழக்கத்தை இந்த மாற்றங்கள் சீரமைக்கிறது.

ஆசாரியர்களை தலைமை தாங்குவதும் அவர்களுடன் ஆலோசனைக் குழுவில் அமர்வதும், தங்களுடைய அலுவல், கடமைகளை அவர்களுக்குப் போதிப்பதுவும் ஆயரின் வேத கடமைகளில் ஒன்று.6 கூடுதலாக, ஆயத்துவத்தில் முதலாம் ஆலோசகர் போதகர்களுக்கான குறிப்பிட்ட பொறுப்பையும், இரண்டாம் ஆலோசகர் உதவிக்காரர்களுக்கான பொறுப்பையும் கொண்டிருப்பார்கள்

அதற்கிணங்க, கோட்பாடும் உடன்படிக்கைகளுமில்லுள்ள இந்த வெளிப்படுத்தலுடன் சீரமைக்க தொகுதி மட்டத்தில் இளம் ஆண்கள் தலைமை இடைநிறுத்தம் செய்யப்படும். இந்த உண்மையுள்ள சகோதரர்கள் மிக நன்மையானவைகளைச் செய்திருக்கிறார்கள், அவர்களுக்கு நாங்கள் பாராட்டுதலைத் தெரிவித்துக்கொளகிறோம்.

ஆயத்துவங்கள் அதிக வலியுறுத்தல்களைக் கொடுப்பார்களென்றும் இளம் ஆண்களின் ஆசாரித்துவ பொறுப்புகளில் கவனம் செலுத்தி, அவர்களுடைய குழும கடமைகளில் அவர்களுக்குதவுவார்களென்பது எங்கள் நம்பிக்கை. ஆரோனிய ஆசாரியத்துவத்தின் குழும தலைமைகளுக்கு உதவவும், ஆயத்துவங்களுக்கு அவர்களுடைய கடமைகளில் உதவவும் திறமையான வயதுவந்த இளம் ஆண்கள் ஆலோசகர்கள், அழைக்கப்படுவார்கள்.7 அதிகமான இளம் ஆண்களும் இளம் பெண்களும் சவாலுக்கு மேலெழுந்து, இந்த ஒளிக்கதிரைப்போன்றதுடன் நமது இளைஞர்களிடம் கவனம் செலுத்தி உடன்படிக்கைப் பாதையில் நிலைத்திருப்பார்கள்.

கர்த்தருடைய உணர்த்தப்பட்ட மாதிரியில் தொகுதியிலுள்ள ஒவ்வொருவரிடமும் ஆயருக்கு பொறுப்பிருக்கிறது. இளைஞர்களின் பெற்றோரையும் அப்படியே இளைஞர்களையும் அவர் ஆசீர்வதிக்கிறார்.. ஆபாசப்படத்துடன் போராடிக்கொண்டிருந்த ஒரு வாலிபனுக்கு அவர் ஆலோசனையளித்துக் கொண்டிருந்தபோது, அன்புடனும் புரிந்துகொள்ளுதலுடனும் நடந்துகொள்ள பெற்றோர்களுக்கு அவர் உதவும்போது மட்டுமே வாலிபனின் மனந்திரும்புதலில் அவனுக்கு அவர் உதவமுடியும் என்பதை ஒரு ஆயர் கண்டுபிடித்தார். வாலிபனுக்கு சுகமளித்தல் அவனுடைய குடும்பத்திற்கு சுகமளித்தலாகும், முழுகுடும்பத்தின் சார்பில் ஆயர் செயல்படுவதின் மூலமாக அது சாத்தியமாகும். அந்த வாலிபன் இப்போது தகுதியுள்ள மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை தரித்திருப்பதற்கு தகுதியாகி, முழுநேர ஊழியரானார்.

இந்த குறிப்பு குறிப்பிடுவதைப்போல இந்த சரிப்படுதல்கள் செய்யும்

  • இளைஞர் மற்றும் ஆரம்ப வகுப்பு பிள்ளைகள்மீது அவர்களுடைய முக்கிய பொறுப்புகளில் கவனம் செலுத்த ஆயர்களுக்கும் அவர்களுடைய ஆலோசகர்களுக்கும் உதவுங்கள்.

  • ஒவ்வொரு வாலிபனின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நோக்கத்தின் மையமாக ஆரோனிய ஆசாரியத்துவத்தின் வல்லமையையும் கடமைகளையும் வையுங்கள்.

இந்த சரிப்படுத்தல்களும்:

  • ஆரோனிய ஆசாரியத்துவத்தின் குழும தலைமைகளின் கடமைகளையும், ஆயத்துவத்துக்கு அவர்களுடைய நேரடி அறிக்கைக் கோட்டையும் வலியுறுத்துங்கள்.

  • அவர்களுடைய அலுவலின் வல்லமையையும் அதிகாரத்தையும் பெரிதாக்குவதில், ஆரோனிய ஆசாரியத்துவத்தின் குழும தலைமைகளுக்குதவ வயதுவந்த தலைவர்களை ஊக்குவியுங்கள்.

குறிப்பிட்டதைப்போல, இந்த சரிப்படுத்தல்கள் இளம் பெண்களுக்கான ஆயத்துவ பொறுப்புகளைக் குறைக்காது. அவருடைய தொகுதியில் “[ஆயரின்] முதலும் மிகமுக்கியமானதுமான பொறுப்பு இளம் ஆண்களையும்இளம் பெண்களையும் பராமரிப்பதாகும்”8

நமது அன்புக்குரிய, கடினஉழைப்பின் ஆயர்கள் இந்த பொறுப்பை எவ்வாறு நிறைவேற்றுவார்கள்? நீங்கள் நினைவுகூருவதைப்போல, முன்பு அவருடைய அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்ட முக்கியமான பொறுப்புகளுக்கு தோள்கொடுக்க ஆயரின் வழிநடத்துதலின் கீழ் உதவ மூப்பர் குழுமங்களாலும் ஒத்தாசை சங்கங்களாலும் முடியும்படியாக ஒத்தாசை சங்கங்களுடன் மிகநெருக்கமாக பணியாற்ற 2018 ஆம் ஆண்டில், மெல்கிசேதேக்கு குழுமங்கள் சரிக்கட்டப்பட்டது தொகுதியில், ஊழியப்பணி, ஆலய, குடும்ப வரலாற்றுப் பணி, அப்படியே தொகுதி அங்கத்தினர்களுக்கு அதிகமாக ஊழியம் செய்தல் இந்த பொறுப்புகளில் அடங்கும்.9

படம்
ஒரு ஆயரின் பொறுப்புகள்

தேவையிலிருப்போரை பராமரித்துக்கொண்டு, நிதிநிலைகளையும் உலகப்பிரகாரமான விவகாரங்களையும் மேற்பார்வை செய்துகொண்டு ஒரு பொது நீதிபதியாக இளைஞர்களைப் பெலப்படுத்துதல் போன்ற சிலபொறுப்புகளை ஆயரால் ஒப்படைக்க முடியாது எப்படியாயினும்கடந்த காலத்தில நாம் புரிந்துகொண்டதைவிட இவைகளில் சில. கடந்த ஆண்டு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ குழுமங்களுக்கான சரிகட்டுதல்கள் அறிவிக்கப்பட்டபோது, மூப்பர் ஜெப்ரி ஆர்.ஹாலன்ட் விவரித்தார். தொகுதியின் பிரதான ஆசாரியரை தலைமை தாங்குவதில் நிச்சயமாக ஆயர் நிலைத்திருப்பார். இந்த புதிய சீரமைப்பு [மூப்பர் குழுமங்கள் மற்றும் ஒத்தாசை சங்கங்கள்] அந்த அமைப்புகளின் பணியைச் செய்ய” அவர் தேவையில்லாமல் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் ஒத்தாசை சங்கத்தின் பணியை தலைமை தாங்க அவரை அனுமதிக்கவேண்டும்10

உதாரணமாக, நியமிக்கப்பட்டதைப்போல, இளம் பெண்கள் தலைவர் இளம் பெண்களுக்கு ஆலோசனையளிப்பதைப்போல வயது வந்தோருடன் ஆலோசனையளிப்பதில் ஒத்தாசை சங்கத் தலைவரும் மூப்பர் குழுமத் தலைவரும், பெரிய பாத்திரத்தை எடுக்கமுடியும். ஆயர் மாத்திரம் ஒரு பொது நீதிபதியாக பணிபுரியமுடிகிறபோது இந்த பிற தலைவர்களும் பொது நீதிபதி தேவையில்லாத அல்லது எவ்வித நிந்தனைக்கும் ஈடுபடாத சவால்களுடனிருக்கிறவர்களுக்குதவ பரலோகத்திலிருந்து வெளிப்படுத்தலுக்கு உரிமையுள்ளவர்களாயிருக்கின்றனர்.11

ஒரு இளம் பெண், ஆயரிடம் அல்லது அவளுடைய பெற்றோருடன் பேச முடியாது அல்லது பேசக்கூடாது என்று அதற்கு அர்த்தமாகாது. அவர்களுடைய கவனம் இளைஞர்கள்! ஆனால்,ஒரு இளம் பெண் தலைவர், ஒரு தனிநபர் இளம் பெண்ணின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்வாரென்று அதற்கு அர்த்தமாகாது ஆயத்துவம் இளம் ஆண்கள்மேல் அக்கறையாயிருப்பதைப்போல, இளம் பெண்கள்மீதும் அக்கறையுள்ளதாயிருக்கிறது ஆனால், அன்புள்ள,பெலமான, ஈடுபட்டிருக்கிற, கவனம் செலுத்துகிற,வழிகாட்டியான, வகுப்பு தலைமைகளின் பாத்திரங்களை எடுக்காத ஆனால் அவர்களுடைய பாத்திரங்களில் முன்னேற இளைஞர்களுக்கு உதவுகிற இளம் பெண்கள் தலைவர்களை நாங்கள் அடையாளம்காண்கிறோம்.

இன்றிரவு, இளம் பெண்களுக்கான கூடுதலான, உற்சாகமளிக்கிற மாற்றங்களை சகோதரி கார்டன் பகிர்ந்துகொள்வார். ஆயினும், இப்போது தொகுதியின் ஆயரிடத்தில் தொகுதி இளம் பெண்கள் தலைவர்கள் அறிக்கை கொடுப்பார்கள், நேரடியாக ஆலோசனையளிப்பார்கள் என நான் அறிவிக்கிறேன், கடந்த காலத்தில், இந்த நியமிப்பு ஒரு ஆலோசகரிடத்தில் ஒப்படைக்கப்படும் ஆனால், முன்னேறும் இளம் பெண்கள் தொகுதிக்கான தலைமைதாங்கும் திறவுகோல்களை தரித்திருக்கும் ஒருவரின் நேரடி பொறுப்பிலிருப்பார்கள். ஒத்தாசை சங்க தலைவர் ஆயரிடத்தில் தொடர்ந்து அறிக்கையளிப்பார்.12

பொது மற்றும் பிணைய மட்டங்களில் நாம் தொடர்ந்து இளம் ஆண்கள் தலைமையைக் கொண்டிருப்போம். பிணைய மட்டத்தில் ஒரு பிரதான ஆலோசகர் இளம் ஆண்கள் தலைவராயிருப்பார்,13 மற்றும் இளம் பெண்களுக்கும் ஆரம்ப வகுப்புக்கும் நியமிக்கப்பட்டிருக்கிற பிரதான ஆலோசகர்களுடன் அவர்கள் பிணைய ஆரோனிய ஆசாரியத்துவத்திற்கும் இளம்பெண்கள் ஆலோசனைக் குழுவுக்கும் ஒரு பகுதியாயிருப்பார்கள். இந்த சகோதரர்கள் இந்த ஆலோசனைக் குழுவில் பிணைய இளம் பெண்கள் தலைமையுடன் பணியாற்றுவார்கள். பிணைய தலைவருக்கு ஒரு ஆலோசகருடன் தலைவராக, இந்த ஆலோசனைக்குழு அதிகரிக்கப்பட்ட முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பார்கள், ஏனெனில் புதிய பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் முயற்சிகளில் அநேக திட்டங்களும் நடவடிக்கைகளும் பிணைய மட்டத்திலிருக்கும்.

இந்த பிரதான ஆலோசகர்கள், பிணைய தலைமையின் வழிநடத்துதலின் கீழ் தொகுதி மூப்பர் குழுமத்திற்கு பிரதான ஆலோசகர்களால் சேவை வழங்கப்படுகிறதைப்போல ஒரு வகையில் ஆயருக்கும் ஆரோனிய ஆசாரியத்துவத்தின் குழுமங்களுக்கும் ஒரு ஆதாரமாக சேவை செய்யமுடியும்.

ஒரு சம்பந்தப்பட்ட காரியமாக, பிணைய ஞாயிறுபள்ளி தலைவராக மற்றொரு பிரதான ஆலோசகர் பணியாற்றுவார், தேவைக்கேற்றார்போல, பிணைய ஆரோனிய ஆசாரியத்துவம், இளம் பெண்கள் ஆலோசனைக்குழுவில் அவர் பணியாற்றலாம்.14

கூடுதலான நிர்வாக மாற்றங்கள், தலைவர்களுக்கு தகவல் அனுப்பும்போது அது அதிகமாக விவரிக்கப்பட்டிருக்கும். இந்த மாற்றங்களில் அடங்குபவை.

  • ஆயத்துவத்தின் இளைஞர் ஆலோசனைக்குழு கூட்டம், தொகுதி இளம் ஆலோசனைக் குழுவால் மாற்றியமைக்கப்படும்.

  • “பரஸ்பரம்” என்ற வார்த்தை எடுக்கப்பட்டு “இளம் பெண்கள் நடவடிக்கைகள்”, “ஆரோனிய ஆசாரியத்துவ குழும நடவடிக்கைகள்” அல்லது “இளைஞர் நடவடிக்கைகள்” என மாறி சாத்தியப்படுகிற இடத்தில் நடைபெறும்.

  • இளைஞர்களுக்கான தொகுதி வரவு செலவு திட்டம், ஒவ்வொரு நிர்வாகத்திலுமிருக்கிற இளைஞர் எண்ணிக்கையின்படி இளம் ஆண்களுக்கும் இளம் பெண்களுக்குமிடையில் சமமாக பிரிக்கப்படும். ஒரு போதுமான தொகை ஆரம்ப வகுப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும்.

  • எல்லா மட்டங்களிலும் தொகுதி, பிணையம் மற்றும் பொதுவான இடங்களில் துணைச் சங்கம் என்ற பதத்தைவிட நிர்வாகம் என்ற பதத்தை நாம் பயன்படுத்துவோம். பொது ஒத்தாசை சங்கம், இளம் பெண்கள், இளம் ஆண்கள் ,ஆரம்ப வகுப்பு, ஞாயிறுபள்ளி நிர்வாகங்கள் “பொது அலுவலர்கள்” என அறியப்படும். தொகுதி மற்றும் பிணைய மட்டங்களில் நிர்வாகங்களை நடத்துபவர்கள் தொகுதி அலுவலர்கள் மற்றும் பிணைய அலுவலர்கள் என்று அறியப்படும்.15

இன்று அறிவிக்கப்பட்ட சரிசெய்தல்கள், கிளைகள் தொகுதிகள், சேகரங்கள் மற்றும் பிணையங்கள் தயாராயிருந்து ஆனால் ஜனுவரி 2020க்குளிருக்க வேண்டும் என்பதில் விரைவில் ஆரம்பமாகும். முந்திய சரிசெய்தல்களுடன் இணைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படும்போது இந்த சரிசெய்தல்கள், உடன்படிக்கைப் பாதையில் நாம் முன்னேறும்போது நமது இரட்சகரான இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற உதவிக்கொண்டு, ஒவ்வொரு மனிதனையும், பெண்ணையும், இளைஞர்களையும் பிள்ளையையும் ஆசீர்வதிக்க, பெலப்படுத்த, கோட்பாட்டுடன் ஒத்துப்போகிற ஒரு ஆவிக்குரிய, நிர்வாக முயற்சியை பிரதிபலிக்கிறது.

அன்பான சகோதர சகோதரிகளே, ஒரு உணர்த்தப்பட்ட தலைவரும் தீர்க்கதரிசியுமான ரசல் எம்.நெல்சனின் வழிநடத்துதலின் கீழ் இந்த விரிவான மாற்றங்கள் சபை அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் அதிகாரமளித்து பெலப்படுத்தும் என நான் வாக்களித்து சாட்சியளிக்கிறேன். நமது இளைஞர்கள் இரட்சகரிடத்தில் அதிக விசுவாசத்தை வளர்த்து, சத்துருவின் சோதனைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு, வாழ்க்கையின் சவால்களை சந்திக்க ஆயத்தமாய் நிற்பார்கள். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.

குறிப்புகள்

  1. Russell M. Nelson, in “Latter-day Saint Prophet, Wife and Apostle Share Insights of Global Ministry,” Newsroom, Oct. 30, 2018, newsroom.ChurchofJesusChrist.org.

  2. கூடுதலாக, தலைவர் ரசல் எம்,நெல்சனால் போதிக்கப்பட்டதைப்போலவும், நீங்கள் செய்வதைப்போல நமது இரட்சகரை அன்போடும் பக்தியுடனும் நினைவுகூருவதைப்போலவும் சபையின் சரியான பெயரைப் பயன்படுத்த நீங்கள் ஒரு விசேஷித்த முயற்சியை எடுத்தீர்கள்.

  3. “இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்கள் மனுஷர்களின் ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக அவருடைய திராட்சைத் தோட்டத்திலே பிரயாசப்பட அனுப்பப்பட்டார்கள்’ (கோட்பாடும் உடன்படிக்கைகளும்138:56). இரட்சிப்பின் பணியில் அங்கத்தினர் ஊழியப்பணி, மனம்மாறியோர் தக்கவைத்தல், ஆர்வம் குறைந்த அங்கத்தினர்களை ஆர்வமூட்டுதல், ஆலய மற்றும் குடும்ப வரலாற்றுப்பணி மற்றும் சுவிசேஷம் போதித்தல் அடங்கும். தொகுதியில் தொகுதி ஆலோசனைக்குழுவின் பிற அங்கத்தினர்களால் உதவப்பட்டு, இந்த பணியை ஆயத்துவம் நடத்துகிறார்கள்” (Handbook 2: Administering the Church, 5.0, ChurchofJesusChrist.org).

  4. தலைவர்களாக, உங்களுடைய நற்குணத்திற்காகவும் உங்களுடைய சீஷத்துவத்திற்காகவும் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை அங்கத்தினர்களை நாங்கள் நேசிக்கிறோம். தனிநபர்களுக்கும், தாய்மார்களுக்கும், தகப்பன்மார்களுக்கும், இளைஞர்களுக்கும், உடன்படிக்கைப் பாதையில் நடந்துகொண்டிருக்கும், அப்படிச் செய்வதால் அர்ப்பணிப்புடனும் மகிழ்ச்சியுடனுமிருக்கிற பிள்ளைகளுக்கும் நாங்கள் அஞ்சலிசெலுத்துகிறோம்.

  5. 2019ல் 11வயது உதவிக்காரர்கள் திருவிருந்தை பரிமாற ஆரம்பித்தார்கள், 11வயது இளம் ஆண்களும் இளம் பெண்களும் வரையறுக்கப்பட்ட பயன்பாடு ஆலய பரிந்துரையைப் பெற்றார்கள். கடந்த ஆண்டு, திரையின் இருபக்கங்களிலும் சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்க்க ஒரு இளைஞர் படை.யில் ஒரு அங்கமாயிருக்க நமது இளம் ஆண்களையும் இளம் பெண்களையும் தலைவர் நெல்சன் சவால் விடுத்தார்.(“Hope of Israel” [worldwide devotional for youth, June 3, 2018], HopeofIsrael.ChurchofJesusChrist.org பார்க்கவும்). பதில் வியக்கத்தக்கதாயிருந்தது

    முழுநேர ஊழியக்காரர்கள், மிகஇளைய வயதில் ஒரு விதிவிலக்கான வழியில் இப்போது சேவை செய்கிறார்கள். அக்டோபர்6, 2019லிருந்து இளம் ஆண்கள் 18வயதிலும் இளம் பெண்கள் 19வயதிலும் ஊழியம் செய்ய தகுதி பெறுகிறார்கள்.

  6. “மேலும், ஆரோனிய ஆசாரித்துவத்தின்மேல் தலைவரின் கடமை, ஆசாரியர்கள்மேல் தலைமை தாங்கவும், அவர்களோடு ஆலோசனைக் குழுவில் அமர்வதும், அவர்களுடைய அலுவலின் கடமையை அவர்களுக்குப் போதிப்பதுமாகும். … இந்த தலைவர், ஆயராயிருக்கலாம், ஏனெனில் இது இந்த ஆசாரியத்துவத்தின் கடமைகளில் ஒன்று.(கோட்பாடும் உடன்படிக்கைகளும்107:87–88)

  7. நிகழ்ச்சிகளிலும், நடவடிக்கைகளிலும் உதவுவது, ஆயத்துவம், இளம் பெண்கள் வகுப்புகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் வழக்கமாக வருகை தர, எப்போதாவது ஆரம்ப வகுப்புக்கு வருகைதரும்படியாக வயதுவந்த தலைவர்கள் ஆரோனிய ஆசாரியத்துவ குழுமத்தின் வல்லுனர்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஒரு முகாம் போன்ற ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு உதவ சில வல்லுனர்கள் அழைக்கப்படக்கூடும், மற்றவர்கள், குழும ஆலோசகர்களாக உதவுவதற்கு நீண்ட கால அடிப்படையில் அழைக்கப்படலாம். ஒவ்வொரு குழுமக் கூட்டங்களிலும், நிகழ்ச்சி, அல்லது நடவடிக்கையில் எப்போதுமே இரண்டு வயதுவந்த ஆண்களிருப்பார்கள். பாத்திரங்களும் தலைப்புகளும் மாறும்போது, ஆரோனிய ஆசாரியத்துவ குழுமங்களில் சேவை செய்வதிலும், ஆதரிப்பதிலும் வயது வந்த ஆண்களின் எண்ணிக்கை குறைவதை நாம் எதிர்பார்ப்பதில்லை.

  8. Russell M. Nelson, “Witnesses, Aaronic Priesthood Quorums, and Young Women Classes,” Liahona, Nov. 2019, 39, emphasis added; see also Ezra Taft Benson, “To the Young Women of the Church,” Ensign, Nov. 1986, 85.

  9. இளம் ஒற்றை வயதுவந்தோர் அங்கத்தினர்களுடனும் தங்களுடைய சொந்த குடும்பத்தினருடனும் அதிக நேரத்தைச் செலவழிக்க ஆயர்களுக்கும் நாங்கள் புத்தி சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

  10. Jeffrey R. Holland, general conference leadership meeting, Apr. 2018; see also “Effective Ministering,” ministering.ChurchofJesusChrist.org. சபையின் நிதிநிலைகளையும் உலகயியல் விவகாரங்களையும் கண்காணிப்பதில், ஏழைகளையும் வறியோரையும் பராமரிப்பதில் ஒரு பொது நீதிபதியாயிருப்பதில், ஆயர் ஒப்படைக்கமுடியாத பொறுப்புகள் ஆரோனிய ஆசாரியத்துவத்தின் குழுமங்களை, இளம் பெண்களை தலைமை தாங்குவது. மூப்பர் குழும, ஒத்தாசை சங்க தலைமைகளும் மற்றவர்களும் ஊழியப்பணி, ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப்பணி, தொகுதியில் போதித்தலின் தரம் மற்றும் சபையின் அங்கத்தினர்களுக்கு ஊழியம் செய்தலுக்கு முக்கியமான பொறுப்புகளை எடுக்கலாம்.

  11. ஒரு பொது நீதிபதியின் திறவுகோல்கள் தேவையாயிருப்பதன் சூழ்நிலைகளுக்குக் கூடுதலாக, எந்த வகையிலுமான நிந்தைகளின் விவகாரங்கள் சபை கொள்கைகளுக்கேற்ப ஆயர்களால் கையாளப்படவேண்டும்.

  12. பிணைய ஒத்தாசை சங்க தலைவரும் பிணைய தலைவருக்கு நேரடியாக தொடர்ந்து அறிக்கையளிப்பார்.

  13. பிணைய இளம் ஆண்கள் தலைவர்களின் ஆலோசகர்கள் பிணையத்தின் அங்கத்தினரிலிருந்து அழைக்கப்படலாம் அல்லது தேவைக்கேற்ப, இளம் பெண்களுக்கு பிரதான ஆலோசகராக நியமிக்கப்பட்டவரும், ஆரம்ப வகுப்புக்கு நியமிக்கப்பட்ட பிரதான ஆலோசகர் இருக்கலாம்.

  14. ஞாயிறுபள்ளி தலைவராக சேவை செய்துகொண்டிருக்கும் சகோதரர் ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஞாயிறுகளுக்கும் இளைஞர் பாடத்திட்டத்திற்கு விசேஷமாக பொறுப்புள்ளவராயிருப்பார்.

  15. ஒத்தாசை சங்கம், இளம் பெண்கள், ஞாயிறுபள்ளி, பொதுவாக ஆரம்பவகுப்பு மற்றும் பிணைய மட்டங்களில் தலைமைகள் பொது அலுவலர்கள் அல்லது பிணைய அலுவலர்களிருப்பார்கள். இளம் ஆண்கள் ஆலோசகர்கள் தொகுதி அலுவலர்களாயில்லாமலிருப்பதால், தொகுதி மட்டத்தில் ஆயத்துவம் இளம் ஆண்களை நடத்துகிறார்கள்.