வேதங்கள்
மரோனி 3


அதிகாரம் 3

மூப்பர்கள் கைகளை வைப்பதன் மூலமாய் ஆசாரியர்களையும் ஆசிரியர்களையும் நியமனம் செய்தல். ஏறக்குறைய கி.பி. 401–421.

1 சபையின் மூப்பர்கள் என்று அழைக்கப்பட்ட சீஷர்கள், ஆசாரியர்களையும், ஆசிரியர்களையும் நியமனம் செய்த முறையாவது,

2 அவர்கள் கிறிஸ்துவின் நாமத்தினாலே பிதாவினிடத்தில் ஜெபம் பண்ணின பின்பு, அவர்கள் தங்கள் கைகளை அவர்கள் மேல் வைத்துச் சொன்னதாவது:

3 முடிவுபரியந்தம் அவரது நாமத்தில் விசுவாசமாய் நிலைத்திருந்து, இயேசு கிறிஸ்து மூலமாய் மனந்திரும்புதலையும், பாவமன்னிப்பையும் பிரசங்கிக்க, உன்னை ஆசாரியனாக (அல்லது அவன் ஆசிரியனாயிருந்தால், உன்னை ஆசிரியராக) இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நியமனம் செய்கிறேன். ஆமென்.

4 இப்படியாக அவர்கள் தேவன் மனுஷருக்குக் கொடுக்கும் வரங்களுக்கும் அழைப்புகளுக்கும் தக்கதாக ஆசாரியர்களையும் ஆசிரியர்களையும் நியமனம் செய்தார்கள்; அவர்களுக்குள்ளிருந்த பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே அவர்களை அவர்கள் நியமனம் செய்தார்கள்.