2010–2019
மார்மன் புத்தகத்தின் வல்லமை
ஏப்ரல் 2017


மார்மன் புத்தகத்தின் வல்லமை

ஒவ்வொரு நாளும் மார்மன் புத்தகத்தை ஜெபத்துடன் படித்து, சிந்திக்க நம் ஒவ்வொருவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

என் அன்பு சகோதர சகோதரிகளே, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் மாபெரும் பொது மாநாட்டில் மீண்டும் நாம் சந்திக்கையில், நான் உங்களை மிகவும் அன்போடு வாழ்த்துகிறேன். எனது வழக்கமான செய்திக்கு முன்பு பின்வரும் இடங்களில் கட்டப்படவிருக்கிற ஐந்து புதிய ஆலயங்களை அறிவிக்க விரும்புகிறேன்: ப்ரேசிலியா, ப்ரேசில்; மணிலா பெருநகர், பிலிப்பைன்ஸ் பகுதி; நைரோபி, கென்யா; பொகடெல்லோ, ஐடஹோ, அஐநா; மற்றும் சரட்டகோ ஸ்ப்ரிங்ஸ், யூட்டா, அஐநா.

இந்த காலைவேளையில் மார்மன் புத்தகத்தின் வல்லமை பற்றியும், சபையின் அங்கத்தினர்களாக நமது வாழ்க்கையில் அதன் போதனைகளைப் படித்து, சிந்தித்து, பிரயோகிக்க நமக்கிருக்கிற முக்கிய தேவையைப் பற்றியும் பேசுகிறேன். மார்மன் புத்தகம் பற்றிய திடமான மற்றும் உறுதியான சாட்சி பெறுவதன் முக்கியத்துவம் மிகைப்படுத்தப்பட முடியாது.

அதிகமாக தொந்தரவும் பொல்லாங்கும் நிறைந்த சமயத்தில் நாம் வாழ்கிறோம். இன்று அதிகமாக உலகத்திலிருக்கிற பாவத்திலிருந்தும் தீமையிலிருந்தும் நம்மை யார் பாதுகாப்பார்கள்? நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மற்றும் அவரது சுவிசேஷம் பற்றிய பலத்த சாட்சி நாம் பாதுகாப்பாக இருக்க உதவும் என நான் கூறுகிறேன். நீங்கள் தினமும் மார்மன் புத்தகத்தை வாசிக்கவில்லையெனில் தயவுசெய்து வாசியுங்கள். நீங்கள் ஜெபத்துடனும் சத்தியத்தை அறியும் உண்மையான வாஞ்சையுடனும் அதை வாசித்தால், உங்களுக்கு அதன் சத்தியத்தை பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துவார். அது உண்மையானால், நான் பயபக்தியோடு சாட்சியளிப்பதாவது— ஜோசப் ஸ்மித் பிதாவாகிய தேவனையும், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் பார்த்த ஒரு தீர்க்கதரிசி.

மார்மன் புத்தகம் உண்மையாக இருப்பதால், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை இங்கு பூமியிலுள்ள கர்த்தரின் சபை, மற்றும் தேவனின் பரிசுத்த ஆசாரியத்துவம் தன் பிள்ளைகளின் ஆதாயத்துக்காகவும் ஆசீர்வாதத்துக்காகவும் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டிருக்கிறது.

இவற்றைப் பற்றிய உறுதியான சாட்சி உங்களுக்கு இல்லையானால், அதைப் பெற தேவையானதைச் செய்யுங்கள். இந்தக் கடினமான காலத்தில், உங்கள் சொந்த சாட்சியைப் பெற்றிருப்பது அவசியமாகும், ஏனெனில் பிறரது சாட்சி உங்களை இதுவரைக்கும்தான் சுமந்து செல்லும். எனினும் ஒருமுறை பெற்ற சாட்சி, தேவ கட்டளைகளுக்கு தொடர்ந்து கீழ்ப்படிவதாலும், தினசரி வேதப்படிப்பு மற்றும் ஜெபத்தாலும் உயிரோட்டமுள்ளதாகவும், ஜீவனுள்ளதாகவும் வைக்கப்பட வேண்டும்.

கர்த்தருடைய பணியில் என் பங்காளர்களே, தினமும் மார்மன் புத்தகத்தை ஜெபத்துடன் படித்து சிந்திக்குமாறு நம் ஒவ்வொருவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் அப்படிச் செய்யும்போது, ஆவியின் குரலைக் கேட்கவும், சோதனையை எதிர்க்கவும் சந்தேகத்தையும் பயத்தையும் ஜெயிக்கவும், நமது வாழ்க்கையில் பரலோக உதவியைப் பெறும் நிலையிலும் இருப்போம். என் முழு இருதயத்தோடு இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.