2010–2019
பின்னர் இயேசு அவனைப் பார்த்து அவனில் அன்புகூர்ந்தார்
ஏப்ரல் 2017


பின்னர் இயேசு அவனைப் பார்த்து அவனில் அன்புகூர்ந்தார்

சில கடினமான காரியத்தைச் செய்ய நீங்கள் கேட்கப்பட்டிருக்கிறீர்களென நீங்கள் எப்போதாவது நினைத்தால், உங்களைப் பார்க்கிற, உங்களிடம் அன்பு கூர்கிற, அவரைப் பின்பற்ற அழைக்கிற கர்த்தரைப்பற்றி நினையுங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, வாஷிங்டன் ஸ்போக்கேன் ஊழியத்திற்குத் தலைமை தாங்க என்னுடைய மனைவி ஜாக்குயுடன் நான் அழைக்கப்பட்டேன். அநேக விசேஷித்த இளம் ஊழியக்காரர்களுடன் பணியாற்றும் பொறுப்பில் பயமும் மற்றும் ஆர்வமும் கலந்து, ஊழியக்களத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்தோம். அவர்கள் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்திருந்தார்கள், மிக வேகமாக எங்களுடைய சொந்த மகன்களைப் போல மகள்களைப் போல மாறினார்கள்.

அநேகர் அற்புதமாக மிக நன்றாகப் பணியாற்றினாலும் கூட, அவர்களுடைய அழைப்பில் அதிக எதிர்பார்ப்புகளுடன் ஒரு சிலர் போராடிக் கொண்டிருந்தனர். “தலைவரே, எனக்கு மக்களைப் பிடிக்கவில்லை” என ஒரு ஊழியக்காரர் என்னிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. கண்டிப்பான ஊழிய விதிகளைப் பின்பற்ற விருப்பம் குறைவாயிருப்பதாக ஏராளமானோர் என்னிடம் கூறினார்கள். கீழ்ப்படிதலாயிருப்பதின் சந்தோஷத்தை இன்னமும் அறிந்துகொள்ளாதிருக்கிற சில ஊழியக்காரர்களின் இருதயங்களை எவ்வாறு நாம் மாற்றுவதென்று நான் கவலைப்பட்டு வியப்புற்றேன்.

வாஷிங்டன் ஐடஹோ எல்லையில் அழகான கோதுமை வயல்கள் வழியே ஒருநாள் நான் வண்டியோட்டிக் கொண்டிருந்தபோது புதிய ஏற்பாடு ஒலிநாடாவை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். நித்திய ஜீவனை அடைய அவன் என்ன செய்யவேண்டுமென கேட்க இரட்சகரிடத்தில் வந்த இளம் ஆஸ்திமானின் பிரசித்திபெற்ற விவரத்தை நான் கேட்டேன். ஒரு எதிர்பாராத ஆனால் இப்போது ஒரு பரிசுத்த நினைவாயிருக்கிற மகத்துவமான தனிப்பட்ட வெளிப்படுத்தலை நான் பெற்றேன்.

கற்பனைகளை இயேசு சொன்னதைக் கேட்ட பின்பு, இளம் வயதிலிருந்தே அவன் அவைகளைப் பின்பற்றுவதாக சொன்ன வாலிபனின் பதிலை நான் கவனித்தேன். இரட்சகரின் மென்மையான திருத்தத்திற்கு நான் செவிகொடுத்தேன். “உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு, நீ போய் உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, பின்பு என்னைப் பின்பற்றி வா.” 1 ஆனால் வியப்பில், இதற்கு முன்பு ஒருபோதும் கேட்டிராத, படிக்கப்படாததாகத் தோன்றிய அந்த வசனங்களுக்கு முன்பு ஆறு வார்த்தைகளை நான் கேட்டேன். வேதங்களுடன் அவை சேர்க்கப்பட்டிருப்பதாகத் தோன்றியது. பின்பு புலப்பட்ட உணர்த்துதலான புரிந்துகொள்ளுதலில் நான் ஆச்சரியப்பட்டேன்.

இத்தகைய ஒரு ஆழமான பாதிப்பை உண்டாக்கிய இந்த ஆறு வார்த்தைகள் எவை? சாதாரணமான வார்த்தைகளாகத் தோன்றுகிற, பிற சுவிசேஷத்தில் காணப்படாத, மாற்கு சுவிசேஷத்தில் காணப்படுகிற விவரங்களை உங்களால் கண்டுபிடிக்கமுடிகிறதா என பாருங்கள்.

“ஒருவன் ஓடிவந்து. . . . நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டுமெனக் கேட்டான்?

“அதற்கு இயேசு.   . . .

“விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார்.

“அதற்கு அவன்,  போதகரே இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்  என்றான்.

இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு, நீ போய் உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்கு பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றி வா என்றார்.” 2

“பின்பு இயேசு அவனைப் பார்த்து அவனிடத்தில் அன்புகூர்ந்தார்.

இந்த வார்த்தைகளை நான் கேட்டபோது, நமது கர்த்தர் இந்த இளம் மனிதனைக் கடந்துபோய் அவனைப் பார்த்த ஒரு பிரகாசமான உருவம் என் மனதை நிரப்பியது. பார்த்தார் என்பது, அவனுடைய நன்மையையும் அவனுடைய ஆற்றலையும் கண்டுகொண்டு, அப்படியே அவனுடைய அதிகத் தேவையை பகுத்தறிந்து ஆழமாக பார்த்தல் மற்றும் அவனுடைய ஆத்துமாவிற்குள் உற்றுநோக்குதல் என்பதாகும்.

பின்னர் இயேசு அவனிடத்தில் அன்பு கூர்ந்தார் என்ற எளிய வார்த்தைகள். இந்த நல்ல வாலிபனிடத்தில் ஒரு அளவிடமுடியாத அன்பை அவர் உணர்ந்து, இந்த அன்பினிமித்தம், இந்த அன்புடன், அவனிடத்தில் இயேசு அதிகமாய்க் கேட்டார். அவனுக்குள்ள எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்குக் கொடுக்கச் சொல்லுதல் என்ற மிகக்கடினமான ஒன்றைச் செய்ய கேட்கிறபோது இத்தகைய அன்பால் மூடப்பட்ட இந்த வாலிபனைப்பற்றி என்ன உணர முடியுமென நான் கற்பனை செய்தேன்.

அந்த நேரத்தில் மாறுதல் தேவையான நமது சில ஊழியக்காரர்களின் இருதயங்களல்ல அவை என நான் அறிவேன். அது என்னுடைய இருதயமுமே. ஒரு விரக்தியடைந்த ஊழியக்காரரை எப்படி ஒரு ஏமாற்றமடைந்த ஊழியத் தலைவர் சிறப்பாய் நடந்துகொள்ள வைப்பாரென்பது இனியும் கேள்வியல்ல. மாறாக, என் மூலமாக தேவனுடைய அன்பை ஒரு ஊழியக்காரர் உணரமுடிகிறதற்கு நான் எவ்வாறு கிறிஸ்துவைப்போன்ற அன்பால் நிரப்பப்பட முடியுமென்பது கேள்வியாயிருந்தது. அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் அல்லது செய்யவில்லை என்பதைவிட அவர்கள் உண்மையில் யாராயிருந்தார்கள், அவர்கள் யாராக முடியும் என்பதைப் பார்ப்பதில், அந்த இளம் ஆஸ்திமானை கர்த்தர் பார்த்த அதே வழியில் அவன் அல்லது அவளை நான் எவ்வாறு பார்க்க முடியும்? நான் எவ்வாறு இரட்சகரைப் போலாக முடியும்?

“பின்னர் இயேசு அவனைப் பார்த்து அவனிடத்தில் அன்புகூர்ந்தார்.”

அந்த நேரத்திலிருந்து அதன் பின்பு, கீழ்ப்படிதலின் சில காரியங்களுடன் போராடிக்கொண்டிருக்கும் ஒரு இளம் ஊழியக்காரருடன் நெருக்கமாக நான் அமரும்போது, ஒரு ஊழியம் செய்ய வருவதற்கு விருப்பமுள்ளவராக செயல்பட்டவர்களை இப்போது நான் ஒரு விசுவாசமுள்ள இளம் ஆணாக அல்லது இளம் பெண்ணாக என்னுடைய இருதயத்திற்குள் நான் பார்த்தேன். பின்னர் ஒரு உருக்கமான பெற்றோரின் எல்லா உணர்ச்சிகளையும்கொண்டு3, “மூப்பரே, அல்லது சகோதரியே நான் உங்களிடத்தில் அன்பாயில்லாவிட்டால் உங்கள் ஊழியத்தில் என்ன நடக்கிறதென்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, என என்னால் சொல்லமுடியும். ஆனால் நான் உங்களை நேசிக்கிறேன், நான் உங்களை நேசிப்பதால் நீங்கள் யாராய் மாறுகிறீர்களென உங்களைப்பற்றி அக்கறையுள்ளவனாயிருக்கிறேன். ஆகவே உங்களுக்கு கடினமாயிருக்கிற அந்த காரியங்களை மாற்ற, கர்த்தர் நீங்கள் யாராயிருக்க விரும்புகிறாரோ அவர்களாயிருக்க விரும்புகிறவற்றிற்கு நான் உங்களை அழைக்கிறேன்.”

ஊழியக்காரர்களை நேர்காண ஒவ்வொருமுறையும் நான் போனபோது, தயாளத்தின் வரத்திற்கும், கர்த்தர் அவர்களைப் பார்ப்பதைப்போல ஒவ்வொரு மூப்பரையும் சகோதரியையும் நான் காண இயல நான் முதலில் ஜெபித்தேன்.

மண்டல மாநாடுகளுக்கு முன்பு, ஒவ்வொருவராக ஒவ்வொரு ஊழியக்காரரையும் சகோதரி பால்மரும் நானும் வாழ்த்தியபோது, வார்த்தைகளல்லாத நேர்காணலாக, நான் நிறுத்தி, அவர்களுடைய கண்களை நேராய் நோக்கி, அவர்களைப் பார்த்து, தவறாமல், தேவனின் இந்த விலையேறப்பெற்ற குமாரர்கள், குமாரத்திகளுக்காக அதிக அன்பால் நிரப்பப்பட்டேன்.

மாற்கு 10லுள்ள இந்த ஆழமான தனிப்பட்ட அனுபவத்திலிருந்து வாழ்க்கையை மாற்றும் அநேக பாடங்களை நான் கற்றுக்கொண்டேன். நம் ஒவ்வொருவருக்கும் உதவுமென நான் நம்புகிற இந்த நான்கு பாடங்கள் இங்கே.

  1. நம்முடைய சொந்தக் கண்களால் பார்ப்பதை விட கர்த்தர் அவர்களைப் பார்க்கிறதைப் போல மற்றவர்களைப் பார்க்க நாம் கற்றுக்கொள்ளும்போது, அவர்கள் மீது நமது அன்பும், அவர்களுக்கு உதவும் நமது விருப்பமும் வளரும். அவர்களே தங்களிடம் பார்க்காத திறமைகளை, மற்றவர்களிடம் நாம் பார்ப்போம். “பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளுவதால்” 4 கிறிஸ்துவைப்போன்ற அன்புடன் துணிவுடன் பேச நாம் பயப்படமாட்டோம். அன்பு செலுத்த கடினமான அதிக அன்பு தேவையாயிருக்கிறவர்களை நினைத்து நாம் ஒருபோதும் விட்டு விடமாட்டோம்.

  2. ஏமாற்றத்தில் அல்லது கோபத்தில் செய்யப்படுகிற எந்த போதனையும் கற்றுக்கொள்ளுதலும் எப்போதும் நடைபெறாது, அன்பில்லாத இடத்தில் இருதயங்கள் மாறாது. பெற்றோராக, ஆசிரியர்களாக, அல்லது தலைவர்களாக, கண்டனத்தைவிட நம்பிக்கையின் ஒரு சூழலில் மட்டுமே உண்மையான போதனை நடைபெறும். நமது வீடுகள் நமது பிள்ளைகளுக்கு எப்போதுமே, விரோதமான சூழ்நிலைகளிலில்லாமல், பாதுகாப்பான புகலிடமாயிருக்கவேண்டும்.

  3. நமது எதிர்பார்ப்புகளின்படி வாழ ஒரு பிள்ளை, நண்பன், அல்லது குடும்ப அங்கத்தினர் தவறும்போது ஒருபோதும் அன்பு பின்வாங்கப்படக் கூடாது. துக்கத்தோடு சென்ற பின் அந்த இளம் ஆஸ்திமானுக்கு என்ன நடந்ததென நமக்குத் தெரியாது, ஆனால் அவன் எளிய பாதையை தேர்ந்தெடுத்திருந்தாலும் கூட இன்னமும் இயேசு அவனை பரிபூரணமாக நேசித்தாரென நான் நம்புகிறேன். ஒருவேளை வாழ்க்கையின் பிற்பகுதியில் அவனுடைய ஆஸ்தி வெறுமையானதென அவன் கண்டு, கர்த்தர் அவனைப் பார்த்து, அவனிடம் அன்புகூர்ந்து, அவரைப் பின்பற்ற அவனை அழைத்த அந்த ஒரு அனுபவத்தை நினைவுகூர்ந்து அதன்படி அவன் நடந்திருக்கலாம்.

  4. அவர் நம்மை நேசிப்பதால், கர்த்தர் நம்மிடமிருந்து அதிகமாய் எதிர்பார்க்கிறார். நாம் அடக்கமுள்ளவர்களாயிருந்தால், மனந்திரும்பவும், தியாகம் செய்யவும் நமக்கான அவருடைய பரிபூரண அன்பிற்காக சேவை செய்யவும் கர்த்தரின் அழைப்பை நாம் வரவேற்போம். மனந்திரும்ப ஒரு அழைப்பு, மன்னிப்பு மற்றும் சமாதானத்தின் அற்புதமான வரத்தைப்பெற, ஒரு அழைப்பாகவுமிருக்கிறது. ஆகவே, “கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்து போகாதே, கர்த்தர் எவனிடத்தில் அன்பு கூர்கிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்.” 5

என்னுடைய சகோதர சகோதரிகளே, ஒரு கெட்ட பழக்கத்தை அல்லது போதைக்கு அடிமைத்தனத்தை விட்டுவிட, உலகத்தின் தேடுதல்களை ஒதுக்கிவிட, அது ஒரு ஓய்வுநாளாயிருப்பதால் மிகவும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சியை தியாகம் செய்ய, உங்களுக்கு தவறிழைத்த ஒருவரை மன்னிக்க, மிகக் கடினமான ஒன்றைச் செய்ய, இப்போது நீங்கள் எந்த நேரத்திலும் கேட்கப்படுவதாக நீங்கள் உணரலாம். கர்த்தர் உங்களைப் பார்ப்பதை, உங்களிடம் அன்புகூறுவதை, போய் அவரைப் பின்பற்ற உங்களுக்கு ஒரு அழைப்பைப்பற்றி நினைத்துப் பாருங்கள். நீங்கள் அதிகமாய்ச் செய்யும்படிக்கு உங்களை அதிகமாய் நேசிப்பதற்காக அவருக்கு நன்றி செலுத்துங்கள்.

நமது இரட்சகரான இயேசு கிறிஸ்துவைக் குறித்து நான் சாட்சியளித்து, நம்மைப் பார்த்து அவருடைய பரிபூரண அன்பினால் நம்மை சூழ்ந்து நம் ஒவ்வொருவரையும் அவரது கரங்களால் அணைக்கிற நாளை எதிர்பார்த்திருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்.