2010–2019
பரிசுத்த ஆவி வழிநடத்துவதாக
ஏப்ரல் 2017


பரிசுத்த ஆவி வழிநடத்துவதாக

தெய்வாக நியமிப்பால் பரிசுத்தஆவியானவர், கர்த்தரின் ஒளியில் நடக்க உணர்த்துகிறார், சாட்சியளிக்கிறார், போதிக்கிறார், மற்றும் தூண்டுகிறார்.

சகோதர சகோதரிகளே, நானும் உங்களனைவரையும் போல, தலைவர் தாமஸ் எஸ். மான்சன் மற்றும் அவரது காலை செய்தியிலிருந்து கர்த்தரின் பணி துரிதப்படுவதை பார்ப்பதை அடையாளம் காண்கிறேன். தலைவர் மான்சன், நாங்கள் உங்களை நேசிக்கிறோம், உங்களை ஆதரிக்கிறோம், எப்போதும் “எங்கள் அன்பான தீர்க்கதரிசியான” உங்களுக்காக ஜெபிக்கிறோம்.1

இந்த வார இறுதியில் ஆவியின் பொழிவை நாம் உணர்ந்தோம். நீங்கள் இந்த பெரிய அரங்கத்தில் இருந்தாலும் அல்லது வீடுகளிலோ, உலகத்தில் தூரமான கூடுமிடங்களில் கூடி இருந்தாலும் ஆவியின் பொழிவை உணர சந்தர்ப்பம் பெற்றீர்கள். இந்த மாநாட்டில் போதிக்கப்படும் சத்தியங்களை ஆவி உங்கள் இருதயங்களுக்கும் மனதுக்கும் உறுதி செய்கிறது.

இந்த பிரபலமான பாடலின் வார்த்தைகளைக் கருத்தில் கொள்ளவும்:

பரிசுத்த ஆவி வழிநடத்துவதாக:

சத்தியத்தை அவர் நமக்கு போதிப்பாராக.

அவர் கிறிஸ்துவை சாட்சியளிப்பார்,.

நமது மனங்களை பரலோக பார்வையால் ஒளியேற்றுவார்.2

பிற்கால வெளிப்படுத்தலிலிருந்து, தெய்வத்துவம் மூன்று தனித்தனியான வித்தியாசமானவர்களைக் கொண்டது என நாம் அறிகிறோம்: நமது பரலோக பிதா அவரது ஒரே பேறான குமாரன், இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவி. “பிதா மனுஷர் போல, தொட்டுணரக்கூடிய மாம்சமும் எலும்பும் கொண்ட சரீரம் பெற்றிருக்கிறார், குமாரனும் கூட, ஆனால் பரிசுத்த ஆவியானவர் மாம்சமும் எலும்புகளும் கொண்ட சரீரம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆவி நபராவார். அப்படியில்லையானால் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் பண்ண முடியாது”3 என நாம் அறிவோம்.

இன்று எனது செய்தி நமது வாழ்க்கையில் பரிசுத்த ஆவியின் முக்கியத்துவத்தைப் பற்றியது. அநித்தியத்தில் நாம் சவால்களும், பாடுகளும், குழப்பங்களும் எதிர்கொள்வோம் என நமது பரலோக பிதா அறிந்தார். நாம் கேள்விகளுடனும், ஏமாற்றங்களுடனும், சோதனைகளுடனும், பலவீனங்களுடனும் போரிடுவோம் என அவர் அறிவார். நமக்கு அநித்திய பெலனும் தெய்வீக வழிநடத்துதலும் கொடுக்க பரிசுத்த ஆவியானவருக்கு இன்னொரு பெயரான பரிசுத்த ஆவியை அவர் கொடுத்தார்.

பரிசுத்த ஆவியானவர் நம்மை கர்த்தரோடு இணைக்கிறார். கர்த்தரின் ஒளியில் நடக்க தெய்வீக நியமனத்தோடு அவர் உணர்த்துகிறார், சாட்சியளிக்கிறார், போதிக்கிறார், மற்றும் தூண்டுகிறார். நமது வாழ்க்கையில் அவரது செல்வாக்கை அடையாளம் கண்டு கற்கவும், பதிலளிக்கவும் நமக்கு பரிசுத்த பொறுப்பிருக்கிறது.

கர்த்தரின் வாக்குத்தத்தத்தை நினைவுகொள்ளுங்கள் “நான் உனக்கு என் ஆவியைக் கொடுப்பேன். அது உன் மனதைத் தெளிவாக்கும், அது உனது ஆத்துமாவை ஆனந்தத்தால் நிரப்பும்.”4 அந்த உறுதியை நான் நேசிக்கிறேன். நம்மை நிரப்புகிற அந்த ஆனந்தம் அன்றாட வாழ்க்கைக்கு மாறாக அதனுடன் ஒரு நித்திய பார்வையைக் கொண்டு வருகிறது. கஷ்டம் அல்லது மனவேதனை மத்தியிலும் அந்த ஆனந்தம் சமாதானமாக வருகிறது. அது ஆறுதலும் தைரியமும் அளித்து, சுவிசேஷம் பற்றிய சத்தியங்களைத் திறந்து, தேவன் மீதும் அவரது எல்லா பிள்ளைகள் மீதும் அவரது அன்பை விரிவடையச் செய்கிறது. அப்படிப்பட்ட ஆசீர்வாதங்களுக்கான தேவை அதிகமாயிருந்தாலும், அனேக வழிகளில் உலகம் அவற்றை மறந்து கைவிட்டிருக்கிறது.

ஒவ்வொரு வாரமும், நாம் பரிசுத்த திருவிருந்தில் பங்கேற்கும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அவரது பாவநிவாரண பலியையும் எப்போதும் நினைவில் வைத்திருக்க நாம் உடன்படிக்கை செய்கிறோம். இந்த பரிசுத்த உடன்படிக்கையைக் கைக்கொள்ளும்போது, “அவரது ஆவியை எப்போதும் நம்மோடு வைத்திருக்க” வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.5

நாம் அதை எப்படிச் செய்கிறோம்?

முதலாவது, ஆவிக்கு தகுதியாக வாழ நாம் முயலுகிறோம்.

“அன்றாடம் தங்கள் தேவனாகிய கர்த்தரை நினைவுகூர கவனமாய் இருப்பவர்களுடன்” பரிசுத்த ஆவி உடன் செல்லுகிறது.6 கர்த்தர் ஆலோசனையளிக்கிறபடி நாம் “உலகத்தின் காரியங்களை ஒதுக்கிவைக்க வேண்டும். சிறந்தவற்றை நாட வேண்டும்.”7 ஏனெனில் “கர்த்தருடைய ஆவி அசுத்த ஆலயங்களில் வாசம் பண்ணாது.”8 நாம் எப்போதும் தேவனின் நியாயப்பிரமாணங்களுக்குக் கீழ்ப்படியவும், வேதங்களைப் படிக்கவும், ஜெபிக்கவும், ஆலயம் செல்லவும், பதிமூன்றாவது நியாயப்பிரமாணத்துக்கு உண்மையாக வாழவும், “நேர்மை, உண்மை, கற்பு, உதாரகுணம், நற்பண்புகள் உடையவர்களாக எல்லா மனிதர்க்கும் நன்மை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.”

இரண்டாவது, ஆவியைப் பெற நாம் சித்தமாயிருக்க வேண்டும்.

கர்த்தர் வாக்களித்தார், “உங்கள் மேல் வந்து, உங்கள் இருதயத்தில் வாசம் செய்யவிருக்கிற பரிசுத்த ஆவியால் உங்கள் மனதிலும் இருதயத்திலும், நான் சொல்லுவேன்.”9 நியூ ஜெர்சி, ஸ்காச் ப்ளெய்ன்ஸில் ஒரு இளம் ஊழியக்காரனாக இதை உணர ஆரம்பித்தேன். ஒரு வெப்பமான ஜூலை காலையில் என் தோழனும் நானும் ஒரு ஆலய சதுக்க குறிப்பு விலாசத்தைத் தேட தூண்டப்பட்டோம். நாங்கள் எல்வுட் ஸ்காபர் வீட்டுக் கதவைத் தட்டினோம். திருமதி ஸ்காபர் எங்களை மரியாதையாய் திருப்பியனுப்பினார்.

அவர் கதவை மூடத்தொடங்கியபோது, நான் ஒருபோதும் செய்திராததும், அப்போதிலிருந்து செய்யாததையும் செய்ய, நான் உணர்த்தப்பட்டேன். நான் கால்களை கதவில் வைத்துக்கொண்டு, எங்கள் செய்தியில் ஆர்வம் கொண்ட யாராவது இருக்கிறார்களா? என நான் கேட்டேன். அவரது 16 வயது மகள் மார்ட்டி, ஆர்வம் கொண்டு முந்திய நாள் உருக்கமாக வழிகாட்டுதலுக்காக ஜெபித்திருக்கிறாள். மார்ட்டி எங்களைச் சந்தித்தாள், சிறிது நேரத்தில் அவளது அம்மாவும் இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றார். இருவரும் சபையில் சேர்ந்தனர்

படம்
ஒரு ஊழியக்காரராக மூப்பர் ராஸ்பாண்ட்

மார்ட்டியின் ஞானஸ்நானத்தின் விளைவாக 136 பேர் அவளது குடும்பத்தினர் உள்ளிட்டோர் ஞானஸ்நானம் பெற்று, சுவிசேஷ உடன்படிக்கைகள் செய்திருக்கின்றனர். அந்த வெப்பமான ஜூலை நாளில் ஆவிக்குச் செவிகொடுத்து, கதவில் காலை வைத்ததற்காக நான் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன். மார்ட்டியும் அவளுடைய குடும்ப அங்கத்தினர் பலரும் இன்று இங்கிருக்கிறார்கள்.

மூன்றாவது, அது வரும்போது, நாம் ஆவியை அடையாளம் காண வேண்டும்.

ஆவி அடிக்கடி ஒரு உணர்வாக தொடர்பு கொள்கிறது என்பது எனது அனுபவம். உங்களுக்கு அர்த்தம் தெரிகிற, “உங்களைத் தூண்டுகிற” அறிந்த வார்த்தைகளில் அதை நீங்கள் உணர்கிறீர்கள். கர்த்தர் அவர்களுக்காக ஜெபித்ததைக் கேட்ட நெப்பியர்களின் பதிலைக் கருத்தில் கொள்ளவும். “திரளானோர் கேட்டு சாட்சி பகர்கிறார்கள், அவர்களது உள்ளங்கள் திறந்திருந்தன, அவர்கள் ஜெபித்த வார்த்தைகளை தங்கள் உள்ளங்களிலே உணர்ந்தார்கள்.”10 அவரது ஜெபத்தின் வார்த்தைகளை அவர்கள் தங்கள் இருதயங்களிலே உணர்ந்தார்கள். பரிசுத்த ஆவியின் குரல் அமர்ந்த மெல்லிய சத்தம்.

பழைய ஏற்பாட்டில், பாகாலின் ஆசாரியர்களிடம் எலியா தகராறு செய்தான். ஆசாரியர்கள் பாகாலின் “குரல்” இடி போல இறங்கி வந்து, அவர்களது தீயை மூட்டும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அங்கே குரலில்லை, நெருப்புமில்லை.11

பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் எலியா ஜெபித்தான், “இதோ கர்த்தர் கடந்து போனார், கர்த்தருக்கு முன்பாக பர்வதங்களைப் பிளக்கிறதும், கன்மலைகளை உடைக்கிறதுமான பெருங்காற்று உண்டாயிற்று. ஆனாலும் அந்தக்காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை, காற்றிற்குப் பின் பூமியதிர்ச்சி உண்டாயிற்று. பூமியதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை:

“பூமியதிர்ச்சிக்குப் பின் அக்கினி உண்டாயிற்று. அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை. அக்கினிக்குப் பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று.”12

அந்தக் குரல் உங்களுக்குத் தெரியுமா?

தலைவர் மான்சன் போதித்தார், “நாம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரும்போது, நாம் ஆவியின் மொழியைக் கற்போமாக.”13 நாம் உணருகிற வார்த்தைகளை ஆவி பேசுகிறது. இந்த உணர்வுகள் மென்மையானவை. செயலாற்ற, ஒன்றை செய்ய, ஒன்றை சொல்ல, குறிப்பிட்ட விதத்தில் பதிலளிக்க ஒரு இடி. நாம் நமது ஆராதனையில் சாதாரணமாக அல்லது சாதுவாக இருந்தால், உலகப்பிரகார முயற்சிகளில் ஈர்க்கப்பட்டு, உணர்வில்லாமல் இருந்தால், உணர்கிற திறமையில் நாம் குறைவுபடுகிறோம். நெப்பி லாமானுக்கும் லெமுவேலுக்கும் சொன்னான், “அவருடைய சத்தத்தை காலாகாலங்களில் நீங்கள் கேட்டுமிருக்கிறீர்கள். மேலும் அவர் அமர்ந்த மெல்லிய சத்தத்தில் உங்களோடு பேசினார். நீங்கள் அவருடைய வார்த்தைகளை உணராதபடிக்கு, உணர்வில்லாதவர்கள் ஆனீர்கள்.”14

கடந்த ஜூனில் நான் ஒரு பணிக்காக தென் அமெரிக்காவில் இருந்தேன். கொலம்பியா, பெரு, மற்றும் ஈக்வேடார் செல்கிற 10 நாள் திட்டத்தில் நாங்கள் இருந்தோம். ஒரு மாபயங்கர பூமியதிர்ச்சி, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று, பல்லாயிரம் பேரை காயப்படுத்தி, ஈக்வேடாரின் போர்ட்டோவிஜோ மற்றும் மான்டா பட்டணங்களின் வீடுகளையும் கிராமங்களையும் அழித்தது. அப்பட்டணங்களில் வசிக்கும் அங்கத்தினர்களைச் சந்திக்கும் திட்டத்தைச் சேர்க்க நான் தூண்டப்பட்டேன். சாலைகள் பழுதானதால் நாங்கள் அங்கு போவது உறுதியாக இல்லை. உண்மையில் நாங்கள் அங்கு போக முடியாது என சொல்லப்பட்டோம், ஆனால் தூண்டுதல் அகலவில்லை. அதன் விளைவாக நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டோம், நாங்கள் இரண்டு பட்டணங்களுக்கும் செல்ல முடிந்தது.

குறுகிய கால அழைப்பில், அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் சில ஆசாரியத்துவத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என நான் எதிர்பார்த்தேன். எனினும் எல்லா கூடுமிடங்களிலும் மேடைவரை நிறைந்திருந்ததைப் பார்க்க நாங்கள் ஒவ்வொரு பிணைய மையத்துக்கும் சென்றோம். பங்கேற்ற சிலர் அப்பகுதியில் பலம் பொருந்தியவர்கள், சபையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட முன்னோடிகள், பிறரை அவர்களுடன் ஆராதிக்கவும் ஆவியை உணரவும் ஊக்குவித்தவர்கள். முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுடைய அன்பானவர்களையும் அக்கம்பக்கத்தாரையும் பூமியதிர்ச்சியில் இழந்தவர்கள். வந்திருந்தவர்கள் அனைவருக்கும் நான் முதன் முதலில் கொடுத்த என்னுடைய அப்போஸ்தல ஆசியை அருள நான் தூண்டப்பட்டேன். அறையின் முற்பகுதியில் நான் நின்றிருந்தாலும், ஒவ்வொருவர் தலையிலும் என் கை வைக்கப்பட்டது போல கர்த்தரின் வார்த்தைகள் பொழியப்படுவதை உணர்ந்தேன்.

படம்
தென் அமெரிக்காவில் மூப்பர் மற்றும் சகோதரி ராஸ்பாண்ட்

அத்துடன் அது முடியவில்லை. இயேசு கிறிஸ்து அமெரிக்க ஜனங்களை சந்தித்தபோது, செய்ததுபோல, பேச நான் தூண்டப்பட்டேன். “அவர் அவர்களுடைய சிறுபிள்ளைகளை ஒவ்வொருவராய் எடுத்து, அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்காக பிதாவினிடத்தில் ஜெபித்தார்.”15 நாங்கள் ஈக்வேடாரில் இருந்தோம், நாங்கள் பிதாவின் பணியிலிருந்தோம், இவர்கள் அவரது பிள்ளைகள்.

நான்காவது, நாம் முதல் தூண்டுதலிலேயே செயல்பட வேண்டும்.

நெப்பியின் வார்த்தைகளை நினைவுகொள்ளுங்கள்: “நான் என்ன காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதை முன்னதாக அறியாதவனாய், நான் ஆவியினால் நடத்திச் செல்லப்பட்டேன். இருந்த போதிலும் நான் போனேன்”16 என அவன் சொன்னான்.

நாமும் அப்படிச் செய்ய வேண்டும். நமது முதல் தூணடுதலில் நாம் நமபிக்கையாய் இருக்க வேண்டும். சில சமயங்களில் நாம் ஆவிக்குரிய உணர்வுகளை உணர்கிறோமா அல்லது இவை நமது சொந்த நினைவுகளா என நாம் காரணப்படுத்துகிறோம். இரண்டாம் யூகம், மூன்றாம் யூகத்தில் கூட நமது உணர்வுகளை நாம் ஆரம்பிக்கும்போது, நாம் ஆவியை இழக்கிறோம், இழந்திருக்கிறோம். நாம் தெய்வீக ஆலோசனையை கேள்வி கேட்கிறோம். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் போதித்ததாவது, “நீங்கள் முதல் உணர்த்துதல்களை கேட்டால், பத்துக்கு ஒன்பது முறை நீங்கள் சரியாக பெறுவீர்கள்.” 17

இப்போது ஒரு எச்சரிக்கை நீங்கள் பரிசுத்த ஆவியானவருக்கு பதிலளித்ததால் வாணவேடிக்கைகளை எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் “அமர்ந்த மெல்லிய சத்தத்தின்” பணியில் இருக்கிறீர்கள் என்பதை நினைவு கூருங்கள்.

நியூயார்க் சிட்டியில் ஊழியத்தலைவராக பணியாற்றியபோது, ப்ராங்க்ஸில், ஒரு உணவகத்தில் நான் ஊழியக்காரர்களுடன் இருந்தேன். ஒரு இளம் குடும்பம் வந்து அருகில் அமர்ந்தனர். சுவிசேஷத்துக்கு அவர்கள் தங்கம் போல் தோன்றினார்கள். அவர்கள் என்னுடன் இருக்கும்போது நான் ஊழியக்காரர்களைக் கவனித்தேன், பின் அந்தக் குடும்பமும் உணவை முடித்து வெளியேறுவதைக் கவனித்தேன். அப்போது நான் சொன்னேன், “மூப்பர்களே, இன்று ஒரு பாடம் இருக்கிறது. ஒரு அருமையான குடும்பம் உணவகத்துக்கு வந்ததை நீங்கள் பார்த்தீர்கள். நாம் என்ன செய்திருக்க வேண்டும்?”

மூப்பர்களில் ஒருவர் சீக்கிரமாகப் பேசினார், “நான் எழுந்து அவர்களிடம் போய் பேச நினைத்தேன். நான் குத்தலை உணர்ந்தேன், ஆனால் பதிலளிக்கவில்லை.”

நான் சொன்னேன், “மூப்பர்களே நாம் எப்போதுமே நமது முதல் உணர்த்துதலில் செயல்பட வேண்டும். நாங்கள் உணர்ந்த அந்த குத்தல் பரிசுத்த ஆவியானவர்!”

முதல் தூண்டுதல்கள் பரலோத்திலிருந்து வரும் உணர்த்துதல்கள். அவை உறுதிப்படுத்தி நமக்கு சாட்சியளிக்கும்போது, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என நாம் அடையாளம் காண வேண்டும், அவை நழுவிச் செல்ல அனுமதிக்கக்கூடாது. ஆகவே தேவையிலுள்ள ஒருவரை, குடும்பத்தை, குறிப்பாக நண்பர்களை நாடிச்செல்ல அடிக்கடி உணர்த்துவது ஆவியாகும். “அப்படியாக கிசுகிசுக்கிற, எல்லாவற்றையும் ஊடுருவுகிற அமர்ந்த மெல்லிய சத்தம்,”18 சுவிசேஷத்தைப் போதிக்கவும், மறுஸ்தாபிதம் மற்றும் இயேசு கிறிஸ்து பற்றி சாட்சியளிக்கவும், தேவனின் விலையேறப்பெற்ற பிள்ளைகளில் ஒருவரை மீட்க ஆதரவும் அக்கரையும் கொடுத்து, நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

“முதல் பதிலளிப்போராக” அழைக்கப்பட்டவராயிருக்கிறவர் பற்றி சிந்தியுங்கள். அதிகமான சமூகங்களில் சோகங்களிலும், பேரிடர்களிலும், குழப்பங்களிலும் முதல் பதிலளிப்போர் தீயணைப்போர், காவல் அதிகாரிகள், மருத்துவ உதவியாளர்கள்—ஒளிவீசும் விளக்குகளுடன் வருகிறார்கள், நாம் அவர்களுக்கு மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கிறோம் என்பதையும் சேர்த்துக் கொள்ளட்டுமா. கர்த்தரின் வழி குறைவாகத்தான் தெரியும், ஆனால் உடனடி பதில் தேவைப்படுகிறது. கர்த்தர் தன் பிள்ளைகளின் தேவைகளை அறிவார், உதவ யார் ஆயத்தத்துடன் இருக்கிறார்கள் எனவும் அவர் அறிவார். நாம் ஆயத்தமாக இருக்கிறோம் என நமது காலை ஜெபங்களில் நாம் கர்த்தர் அறியச்செய்தால், பதிலளிக்க அவர் நம்மை அழைப்பார். நாம் பதிலளித்தால் அவர் நம்மை மீண்டும் மீண்டும் அழைப்பார், தலைவர் மான்சன் அழைக்கிற “கர்த்தரின் பணியில்” நாம் இருக்கக் காண்போம்.19 உன்னதத்திலிருந்து உதவி கொண்டு வருகிற முதல் ஆவிக்குரிய பதிலளிப்போராக நாம் ஆவோம்.

நமக்கு வருகிற தூண்டுதல்களுக்கு நாம் கவனம் செலுத்தினால், நாம் வெளிப்படுத்தலின் ஆவியில் வளரச்சியடைந்து, ஆவி கொடுக்கிற உள்ளணர்வும் வழிகாட்டுதலும் அதிகமதிகமாக பெறுவோம். கர்த்தர் சொன்னார், “நன்மைக்கு வழிநடத்துகிற ஆவியில் உங்கள் நமபிக்கையை வையுங்கள்.”20

“திடன் கொண்டிருங்கள் ஏனெனில் நான் உங்களை வழிநடத்துவேன்” என்ற கர்த்தரின் அழைப்பை அக்கறையாக எடுத்துக்கொள்வோமாக.21 அவர் நம்மை பரிசுத்த ஆவியானவர் மூலம் வழிநடத்துகிறார். நமது முதல் தூண்டுதல்கள் தேவனிடமிருந்து வருகின்றன என அறிந்து, விரைவாக செயல்பட்டு, ஆவிக்கு நெருக்கமாக வாழ்வோமாக. பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துகிற, பாதுகாக்கிற, என்றும் நம்மோடு இருக்கிற வல்லமை பற்றி நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.