2010–2019
நல்ல மேய்ப்பன், தேவ ஆட்டுக்குட்டி
ஏப்ரல் 2019 பொது மாநாடு


நல்ல மேய்ப்பன், தேவ ஆட்டுக்குட்டி

இயேசு கிறிஸ்து தன் ஆடுகளை தன் குரலிலும் நாமத்திலும் அழைக்கிறார். அவர் நம்மைத் தேடி கூட்டிச் சேர்க்கிறார். அன்பில் எப்படி ஊழியம் செய்வது என போதிக்கிறார்.

அன்பு சகோதர சகோதரிகளே, நீங்கள் எப்போதாவது தூக்கத்தில் ஆழ்ந்து, கற்பனையில் ஆடுகளை எண்ண முயற்சிசெய்து பிரச்சினை ஏற்பட்டதுண்டா? பஞ்சு போன்ற ஆடுகள் வேலிதாண்டி குதிக்கும்போது நீங்கள் எண்ணுங்கள்: 1,2,3, ...245, 246, ...657, 658, ...1

என் விஷயத்தில் ஆடுகளை எண்ணுவது என்னை தூக்கத்தில் ஆழ்த்துவதில்லை. ஒன்றை விட்டு விடுவது அல்லது இழப்பது, என்னை விழித்திருக்கச் செய்கிறது.

இராஜாவான ஆடு மேய்க்கும் சிறுவனுடன் நாம் அறிவிக்கிறோம்:

“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.

“அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டு போய் விடுகிறார்.

“அவர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்.“2

படம்
நல்ல மேய்ப்பன் வண்ணம் தீட்டப்பட்ட கண்ணாடி

இந்த ஈஸ்டர் காலத்தில், நாம் நல்ல மேய்ப்பனைக் கொண்டாடுகிறோம், அவரே தேவ ஆட்டுக்குட்டியும் ஆவார். அவரது அனைத்து தெய்வீக பட்டங்களைவிட, வேறெதுவும் அதிக மென்மையாயும், சொல்லக்கூடியதாகவும் இல்லை. தம்மையே நல்ல மேய்ப்பனாக தெரிவிக்கும் இரட்சகரின் குறிப்புகள் மற்றும் தேவ ஆட்டுக்குட்டியாக அவரைப் பற்றிய தீர்க்கதரிசன சாட்சிகளிலிருந்தும் நாம் அதிகம் கற்கிறோம். இந்த வேஷங்களும் அடையாளங்களும் ஆற்றல் மிக்க வகையில் நிறைவானவை--நல்ல மேய்ப்பனை விட ஒவ்வொரு அற்புதமான ஆட்டுக் குட்டிக்கும் உதவுவன, மற்றும் அவர் தேவ ஆட்டுக்குட்டி என்பதை விட நமது மேய்ப்பர் ஆகவே இருக்கலாம்?

“தன் ஒரே பேறான குமாரனைத் தந்து அவர் இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்ததால்,“ தேவனின் ஒரே பேறான குமாரன் தன் பிதாவுக்கு கீழ்ப்படிய சித்தமாயிருந்து, தன் ஜீவனை விட்டார்.3 இயேசு சாட்சியளிக்கிறார், “நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுதளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.“4 இயேசு தன் ஜீவனை விடவும், அதை மீண்டும் எடுக்கவும் வல்லமை பெற்றிருந்தார். 5 தம் பிதாவுடன் சேர்ந்து, நமது இரட்சகர் தனித்தன்மையுடன், நமது நல்ல மேய்ப்பராகவும், தேவ ஆட்டுக்குட்டியாகவும் நம்மை ஆசீர்வதிக்கிறார்,

நமது நல்ல மேய்ப்பராக இயேசு கிறிஸ்து தன் ஆடுகளை தன் குரலிலும் நாமத்திலும் அழைக்கிறார். அவர் நம்மைத் தேடி கூட்டிச் சேர்க்கிறார். அன்பாக எப்படி ஊழியம் செய்வது என போதிக்கிறார். அவர் தமது குரலிலும் நாமத்திலும், நம்மை அழைப்பதில் தொடங்கி, இந்த மூன்று தலைப்புக்களை கருத்தில் கொள்வோமாக.

முதலாவதாக, நமது நல்ல மேய்ப்பன் “தன் சொந்த மந்தையை பெயர் சொல்லி அழைக்கிறார். … அவை அவனது சத்தத்தை அறியும்.”6 ”கிறிஸ்து என்ற தம்முடைய சொந்த நாமத்தினபடியே உங்களை அவர் அழைக்கிறார்.”7 இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற நாம் உண்மையான நோக்கத்தோடு தேடும்போது, நன்மை செய்யவும், தேவனை நேசிக்கவும், அவரை சேவிக்கவும் உணர்த்துதல் வருகிறது.8 நாம் படித்து, சிந்தித்து, ஜெபிக்கும்போது, நாம் ஒழுங்காக திருவிருந்து மற்றும் ஆலய உடன்படிக்கைகளை புதுப்பிக்கும்போது, அவரது சுவிசேஷத்துக்கு வர நாம் அனைவரையும் அழைக்கும்போது, நாம் அவரது குரலுக்கு செவி கொடுக்கிறோம்.

நமது நாளில் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய பெயரால் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையை அழைக்க தலைவர் ரசல் எம். நெல்சன் நமக்கு ஆலோசனையளிக்கிறார்: பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை. 9 கர்த்தர் சொன்னார், நீங்கள் எதைச் செய்தாலும் என் நாமத்தில் அதைச் செய்யுங்கள். ஆகவே என் நாமத்தில்சபையை நீங்கள் அழையுங்கள். என் நாமத்தில் சபையை அவர் ஆசீர்வதிக்கத் தக்கதாக பிதாவைக் கூப்பிடுங்கள்.10 உலகமெங்கிலும், நமது இருதயங்களிலும் வீடுகளிலும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நாம் தேவனை அழைக்கிறோம். நமது வீட்டை மையமாகக் கொண்ட, சபையால் ஆதரிக்கப்பட்ட ஆராதனை, சுவிசேஷப்படிப்பு, ஆரோக்கியமான குடும்ப நிகழ்ச்சிகள் நிறைந்த தாராளமான ஆசீர்வாதத்துக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

இரண்டாவதாக, நமது நல்ல மேய்ப்பன், தமது ஒரே மந்தைக்குள்ளே நம்மை தேடி கூட்டிச் சேர்க்கிறார். அவர் கேட்கிறார், ”உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமல் போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமல் போன ஆட்டைக்கண்டுபிடிக்கும் அளவும் தேடித்திரியானோ?”11

நமது இரட்சகர் அடிக்கடி ஒரே நேரத்தில் ஒன்றையும் தொண்ணூற்று ஒன்பதையும் கண்டுபிடிக்கிறார். நாம் ஊழியம் செய்யும்போது, வழிதவறிப்போன ஒன்றுக்காக நாம் ஏங்கும்போது, உறுதியாகவும் அசைக்க முடியாமலும் இருக்கிற தொண்ணூற்று ஒன்பதை நாம் பாராட்டுகிறோம். எல்லா இடங்களிலிருந்தும் நம்மை நமது கர்த்தர் தேடி விடுவிக்கிறார்,12பூமியின் நான்கு திசைகளிலிருந்தும்.13 பரிசுத்த உடன்படிக்கையாலும், அவரது பாவநிவர்த்தி செய்த இரத்தத்தாலும் அவர் நம்மை கூட்டிச் சேர்க்கிறார்.14

நமது இரட்சகர் தமது புதிய ஏற்பாட்டு சீஷர்களிடம் சொன்னார், ”இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு.”15 அமெரிக்காவில் லேகியின் உடன்படிக்கையின் பிள்ளைகளோடு உயிர்த்தெழுந்த கர்த்தர் சாட்சியளித்தார், ”நீங்கள் என் ஆடுகள்.”16 இன்னும் பிற ஆடுகளும் தன் குரலைக் கேட்கும் என இயேசு சொன்னார். 17 இயேசு கிறிஸ்துவின் குரலை சாட்சியளிக்கிற மார்மன்புத்தகம் மற்றொரு சாட்சி என்பது எவ்வளவு ஆசீர்வாதம்!

அவரது குரலைக் கேட்கிற அனைவரையும் வரவேற்குமாறும், அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுமாறும் சபையை இயேசு கிறிஸ்து அழைக்கிறார்18 கிறிஸ்துவின் கோட்பாட்டில் தண்ணீராலும், அக்கினியாலும், பரிசுத்த ஆவியாலும் ஞானஸ்நானமும் அடங்கும். 19 நேபி கேட்கிறான், ”தேவாட்டுக்குட்டியானவர் பரிசுத்தமாயிருந்தும், எல்லா நீதியையும் நிறைவேற்றும்படி, தண்ணீரில் ஞானஸ்நானம் பெறுவது அவசியமாயிருக்குமெனில், பரிசுத்தமற்றவர்களாயிருக்கிற நாம், தண்ணீரில் ஞானஸ்நானம் பெறுவது எவ்வளவு முக்கியமாயிருக்கும்!”20

படம்
யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தல்

இன்று நாம் செய்வதையும், நாம் யாராக ஆகிறோம் என்பதையும், அவரைப் பின்பற்றி வர அழைக்க வேண்டும் எனவும் நமது இரட்சகர் விரும்புகிறார். அனைத்து குடும்ப தலைமுறைகளை ஆசீர்வதிக்கக்கூடிய இரட்சிப்புக்கான பரிசுத்த நியமங்களுள்ள தேவனின் பரிசுத்த ஆலயங்கள் உள்ளிட்ட அன்பு, குணமாக்குதல், தொடர்பு மற்றும் அவருக்குச் சொந்தமாகிற உடன்படிக்கை கண்டு, அவ்வாறாக திரையின் இருமருங்கிலும் இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க வாருங்கள். 21

மூன்றாவதாக இஸ்ரவேலின் மேய்ப்பர்களாக 22 இஸ்ரவேலின் மேய்ப்பர்கள் எப்படி அன்பாக ஊழியம் செய்கிறார்கள் என இயேசு கிறிஸ்து உதாரணம் காட்டுகிறார். நாம் அவரை நேசிக்கிறோமா என நமது கர்த்தர் கேட்கும்போது, அவர் சீமோன் பேதுருவுக்கு செய்ததுபோல நமது இரட்சகர் நமக்கு சொல்லுகிறார்: ”என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக. … என் ஆடுகளை மேய்ப்பாயாக. ... என் ஆடுகளை மேய்ப்பாயாக.”23 அவரது மேய்ப்பர்கள் அவரது ஆட்டுக்குட்டிகளையும் ஆடுகளையும் மேய்க்கும்போது, அவரது மந்தையிலிருப்பவர்களுக்கு கர்த்தர் வாக்களிக்கிறார் ”அவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லை.”24

நமது நல்ல மேய்ப்பன் இஸ்ரவேலின் மேய்ப்பர்கள் தூங்கக்கூடாதெனவும்,25 சிதறக்கூடாது அல்லது ஆடுகள் வழிதவறிப் போகக் கூடாது எனவும்,26நமது சொந்த லாபத்துக்காக நமது சொந்த வழியில் செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கிறார்.27 தேவனின் மேய்ப்பர்கள் பெலப்படுத்தவும், குணமாக்கவும், உடைந்ததைக் கட்டவும், வெளியே துரத்தப்பட்டவற்றை திரும்பக் கொண்டு வரவும், இழக்கப்பட்டதை தேடவும் வேண்டும்.28

”ஆடுகளுக்காக கவலைப்படாத” கூலியாள் பற்றியும் கர்த்தர் எச்சரிக்கிறார்,29 மற்றும் ”கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், ஆனால் உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.”30

நாம் தனிப்பட்ட ஒழுக்க சுயாதீனத்தை ஆர்வத்தோடும் விசுவாசத்தோடும் பிரயோகிக்கும்போது, நமது நல்ல மேய்ப்பன் களிகூர்கிறார். அவரது பாவ நிவாரண பலிக்காக, அவரது மந்தையிலுள்ளவர்கள் நன்றியுணர்வுடன் அவரை நோக்கிப் பார்க்கிறார்கள். நாம் மந்தமாகவோ, குருட்டுத்தனமாகவோ, அல்லது அசட்டுத்தனமாகவோ அவரைப் பின்பற்ற உடன்படிக்கை செய்யவில்லை. ஆனால் மாறாக, தேவனையும் நமது அயலாரையும் நேசிக்க நமது இருதயத்தோடும் மனத்தோடும் நேசிக்க விரும்பி, ஒருவருக்கொருவரின் பாரங்களைச் சுமந்து, ஒருவருக்கொருவரின் சந்தோஷத்தில் களிகூர வேண்டும். இயேசு கிறிஸ்து தனது சித்தத்தை பிதாவின் சித்தத்துக்கு தாமாக அர்ப்பணித்ததால், நாம் பயபக்தியுடன் அவரது பெயரை நம்மீது தரித்துக்கொள்கிறோம். தேவனின் அனைத்து பிள்ளைகளுக்கும் அவரது பணியாகிய கூட்டிச் சேர்த்தல், ஊழியம் செய்தல் பணியில் நாம் மகிழ்ச்சியுடன் சேருகிறோம்.

சகோதர சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவே நமது பரிபூரண மேய்ப்பர். ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுத்திருப்பதால்,இப்போது அவர் மகிமையோடு உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, பரிபூரணமான தேவ ஆட்டுக்குட்டி.31

தேவனின் பலி ஆட்டுக்குட்டி, முதலிலிருந்தே நிழலாட்டமாகத் தெரிந்தது. என்றென்றைக்கும் குமாரனின் நாமத்தில் மனந்திரும்பி தேவனை அழைக்கிற பிதாவின் ஒரேபேறானவரின் பலியின் மாதிரி என தூதன் ஆதாமின் பலி பற்றி சொன்னான்.32

பூமியிலுள்ள அனைவருக்கும் உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை ஏற்படுத்திய தகப்பனாகிய ஆபிரகாம், தன் ஒரே பேறான குமாரனை கொடுப்பது என்றால் என்ன என்பதை அனுபவித்தான்.

”அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி, என் தகப்பனே என்றான். அதற்கு அவன் என் மகனே இதோ இருக்கிறேன் என்றான். அவன், இதோ நெருப்பும் கட்டையும் இருக்கிறது, ஆனால்.... ஆட்டுக்குட்டி எங்கே என்றான்...?

”அதற்கு ஆபிரகாம் என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்.”33

அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் தேவ ஆட்டுக்குட்டியானவரின் முன்னியமிக்கப்பட்ட ஊழியத்தை முன்பே பார்த்து களிகூர்ந்தனர். பழைய உலகத்தில் யோவானும் புதிய உலகத்தில் நேபியும், ”தேவ ஆட்டுக்குட்டி” பற்றி சாட்சியளித்தார்கள்.34 ”அவரே நித்திய பிதாவின் குமாரன், … உலகத்தின் மீட்பர்.”35

இயேசு கிறிஸ்துவின் பாவ நிவாரண பலி பற்றி அபிநாதி சாட்சியளித்தான், “செம்மறியாடுகளைப்போல நாமெல்லாரும் வழிமாறிப்போய், அவனவன் தன் சொந்த வழிக்குத் திரும்பினோம். கர்த்தரே நம் எல்லோருடைய உபத்திரவங்களையும் அவர் மீது விழப்பண்ணினார்.”36 “அவையனைத்துக்கும் மேலான முக்கியமான ஒரு காரியம் உண்டு என ஆல்மா தேவ குமாரனின் மகத்தான கடைசி பலி என அழைத்தான்.” ஆல்மா ஊக்குவித்தான், “தேவ ஆட்டுக்குட்டியானவர்மேல் விசுவாசம் வையுங்கள்,“ “பயப்படாது வாருங்கள்.“ 37

இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி பற்றி தன் அருமையான சாட்சியை அவள் எப்படி பெற்றாள் என ஒரு அன்பு சிநேகிதி பகிர்ந்தார். பாவம் நம்மால் மட்டுமே அனுபவிக்கப்படுகிற பெரும் தண்டனையை எப்போதும் கொண்டுவருமென நம்பி அவள் வளர்ந்தாள். தெய்வீக மன்னிப்பின் சாத்தியம் பற்றி புரிந்துகொள்ள அவள் தேவனிடம் மன்றாடினாள். மனந்திரும்பியவர்களை எப்படி இயேசு கிறிஸ்து மன்னிக்க முடியும், இரக்கம் எப்படி நீதியை சரிக்கட்ட முடியும் என்று அறிய அவள் ஜெபித்தாள்.

ஒரு நாள் அவளது ஜெபம் ஒரு ஆவிக்குரிய விதமாக மாற்றும் அனுபவத்துடன் பதிலளிக்கப்பட்டது. இரண்டு உணவுப் பைகளை சுமந்து கொண்டு, அவசரமாக ஒரு இளைஞன் மளிகைக் கடையிலிருந்து ஓடி வந்தான். கடை மேலாளரால் துரத்தப்பட்டு, ஒரு சுருசுருப்பான தெருவில் ஓடினான். அவர் அவனைப் பிடித்து திட்டி சண்டையிடத் தொடங்கினார். பயப்பட்ட இளைஞனை திருடன் எனத் தீர்ப்பதற்குப் பதிலாக, எதிர்பாராத விதமாக என் சிநேகிதி அவன் மீது அதிகமான மனதுருக்கத்தால் நிரப்பப்பட்டாள். தன் சொந்த பாதுகாப்பு பற்றி எந்த பயமோ அக்கறையோ இல்லாமல், அவள் நேராக சண்டையிடும் இரண்டு மனிதர்களிடம் சென்றாள். அந்த இருவரிடமும் சொன்னாள், “உணவுக்காக நான் பணம் கொடுக்கிறேன். தயவுசெய்து அவனைப் போக விடுங்கள். தயவு செய்து உணவுக்காக நான் பணம் கொடுக்கிறேன்.“

அவள் ஒருபோதும் உணர்ந்திராத பரிசுத்த ஆவியாலும் அன்பாலும் நிரப்பப்பட்டதால் தூண்டப்பட்டு, என் சிநேகிதி சொன்னாள், “நான் விரும்பியதெல்லாம், அந்த இளைஞனுக்கு உதவி செய்து காப்பாற்றுவதுதான்.“ இயேசு கிறிஸ்துவையும் அவரது பாவ நிவர்த்தியையும் புரிந்துகொள்ளத் தொடங்கியதாகவும், அவளது இரட்சகராகவும், மீட்பராகவும் இயேசு கிறிஸ்து எப்படி, ஏன் சுத்தமான பரிசுத்த அன்புடன் தாமாக பலியானார், அவள் அவரைப் போலாக ஏன் விரும்பினாள் என சொன்னாள். 38

நாம் பாடுவது அதிசயமல்ல.

நல்ல மேய்ப்பர் தேடுகிறார் பாருங்கள்,

காணாமற்போன ஆடுகளைத் தேடுகிறார்.

களிகூர்ந்தது திரும்பக் கொண்டு வருகிறார்.

எல்லையில்லா விலையால் காத்தார்.39

தேவ ஆட்டுக்குட்டியாக, இரட்சகர் நாம் எப்போது தனிமையாக, உற்சாகமற்று, நிச்சயமற்று அல்லது பயந்திருப்போம் என அறிகிறார். தரிசனத்தில் தேவ ஆட்டுக்குட்டியின் வல்லமை, “ஆட்டுக் குட்டியானவரின் சபையின் பரிசுத்தவான்கள் மீதும், கர்த்தருடைய உடன்படிக்கையின் மக்கள் மீதும் இறங்கியதை“ நேபி பார்த்தான். “பூமியின் பரப்பின் மீது சிதறடிக்கப்பட்டிருந்தாலும், … நீதியினாலும் மகா மகிமையிலிருக்கிற தேவனுடைய வல்லமையினாலும் ஆயுதந்தரித்தவர்களாயிருந்தார்கள்.”40

இந்த நம்பிக்கை மற்றும் ஆறுதலின் வாக்குத்தத்தம் நமது நாளையும் அடக்கியது.

உங்கள் வீட்டிலும், பள்ளியிலும், வேலைஸ்தலத்திலும், அல்லது சமூகத்திலும், நீங்கள் ஒரே அங்கத்தினரா? உங்கள் கிளை சில சமயங்களில் சிறியதாகவும் தனியாகவும் இருப்பதாக உணர்கிறதா? நீங்கள் ஒருவேளை அறியாத மொழியும், பழக்கங்களும் உள்ள புதிய இடத்துக்கு நகர்ந்திருக்கிறீர்களா? ஒருவேளை உங்கள் வாழ்க்கைச் சூழ்நிலைகள், நடக்காது என நீங்கள் நினைத்தவை இப்போது உங்களை எதிர்கொள்கிறதா? நாம் யாராயிருந்தாலும், நமது சூழ்நிலைகள் எதுவாயிருந்தாலும், நமது இரட்சகர் உறுதியளிக்கிறார், “ஆட்டுக்குட்டிகளை தமது புயத்தினால் சேர்த்து தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.“ 41

படம்
நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளைக் கூட்டிச் சேர்த்தல்

சகோதர சகோதரிகளே, நமது நல்ல மேய்ப்பர் தமது குரலிலும், தமது நாமத்திலும் நம்மை அழைக்கிறார். அவர் தேடி, கூட்டிச் சேர்த்து, தம் ஜனத்தண்டை வருகிறார். அவரது ஜீவிக்கும் தீர்க்கதரிசி மற்றும் நம் ஒவ்வொருவர் மூலமும், முழுமையாக மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட அவரது சுவிசேஷத்திலும், அவரது உடன்படிக்கையின் பாதையிலும், சமாதானமும், நோக்கமும், குணமாக்குதலும், சந்தோஷமும் காண எல்லாரையும் அழைக்கிறார். உதாரணத்தால் அவரது அன்பால் ஊழியம் செய்ய இஸ்ரவேலின் மேய்ப்பர்களுக்கு அவர் போதிக்கிறார்.

தேவ ஆட்டுக்குட்டியாக அவரது தெய்வீக ஊழியம், அப்போஸ்தலர்களாலும், தீர்க்கதரிசிகளாலும் முன்னியமிக்கப்பட்டு களிகூரப்படுகிறார். அவரது எல்லையற்ற நித்திய பாவநிவர்த்தி, மகிழ்ச்சியின் திட்டத்துக்கும், சிருஷ்டிப்பின் நோக்கத்துக்கும் மையமானது. நமது சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், அவரது இருதயத்துக்கு நெருக்கமாக நம்மை சுமக்கிறார் என நமக்கு உறுதியளிக்கிறார்.

அன்பு சகோதர சகோதரிகளே, தேவன் மற்றும் ஆட்டுக்குட்டியானவரின் தாழ்மையான பின்பற்றுபவர்களாக இருக்க நாம் வாஞ்சிக்கிறோம்.42 ஒருவேளை நமது பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் எழுதப்படவும்,43 ஆட்டுக்குட்டியானவரின் பாடலைப் பாடவும், 44ஆட்டுக்குட்டியானவரின் விருந்துக்கு அழைக்கப்படுவோம்.45

மேய்ப்பனும் ஆட்டுக்குட்டியுமான அவர் அழைக்கிறார்,“உங்களின் மீட்பர் பற்றிய சத்திய ஞானத்துக்குள்ளும், ... மகத்துவமுள்ள மெய்யான மேய்ப்பரிடமும்“ மீண்டும் வாருங்கள். 46 “அவரது கிருபையால் நாம் கிறிஸ்துவில் பரிபூரணமாகலாம்“ என அவர் வாக்களிக்கிறார்.47

இந்த ஈஸ்டர் காலத்தில் நாம் அவரை ஸ்தோத்தரிக்கிறோம்.

“ஆட்டுக்குட்டியானவர் மேலானவர்!“48

“தேவனுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் ஓசன்னா!“49

நமது பரிபூரணமான நல்லமேய்ப்பன், பரிபூரணமான தேவ ஆட்டுக்குட்டி, என நான் சாட்சியளிக்கிறேன். அவர் நம்மை நமது பெயராலும், இயேசு கிெரிஸ்துவின் பரிசுத்தமான, புனிதமான அவரது நாமத்திலும் அவர் அழைக்கிறார்.