2010–2019
நிறைவுக் குறிப்புகள்
ஏப்ரல் 2019 பொது மாநாடு


நிறைவுக் குறிப்புகள்

திரையின் இருமருங்கிலுமுள்ள அவரது பிள்ளைகளுக்கும், தேவனுக்கும் சேவை செய்து நமது வாழ்க்கையை அர்ப்பணித்து மறு அர்ப்பணிப்பு செய்வோமாக.

என் அன்பு சகோதர, சகோதரிகளே, இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டின் நிறைவுக்கு நாம் வரும்போது, அவரது உணர்த்துதலுக்காகவும் பாதுகாப்புக்காகவும் நாம் கர்த்தருக்கு நன்றி தெரிவிக்கிறோம். செய்திகள் நமக்கு அறிவுறைகள் கொடுத்து தெளிவுபடுத்தி இருக்கின்றன.

செய்தியாளர்களுக்கு தலைப்புகள் கொடுக்கப்படவில்லை. தங்கள் செய்திகளை ஆயத்தம் செய்ய அவர்கள் தனிப்பட்ட வெளிப்படுத்தலுக்காக ஒவ்வொருவரும் ஜெபித்திருக்கிறார்கள். எனக்கு எப்படி அச்செய்திகள் ஒன்றுக்கொன்று பொருந்துகிறது என்பது முக்கியமானது. நீங்கள் அவற்றைப் படிக்கும்போது, அவரது ஊழியக்காரர்கள் மூலம்உங்களுக்கு கர்த்தர் என்ன போதிக்க விரும்புகிறார் என அறிய நாடுங்கள்.

இசை மகிமையாயிருந்திருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் கர்த்தரின் ஆவியைக் கொண்டுவர தங்கள் தாலந்துகளை இணைத்த அநேக இசைக்கலைஞர்களுக்கு நாங்கள் ஆழ்ந்த நன்றியுடையவர்களாக இருக்கிறோம். ஒவ்வொரு கூட்டத்திலும் ஜெபங்களையும் கூட்டத்தாரையும் அவர் ஆசீர்வதித்திருக்கிறார். உண்மையாகவே, மாநாடு நம் அனைவருக்கும் மீண்டும் ஆவிக்குரிய விருந்தாக இருந்திருக்கிறது.

ஒவ்வொரு அங்கத்தினரின் வீடும் கர்த்தரின் ஆவி தங்குகிற விசுவாசத்தின் உண்மையான சரணாலயமாக ஆக நாங்கள் நம்பி ஜெபிக்கிறோம். நம்மை சுற்றிலும் பிணக்கு இருந்தாலும், படிப்பும், ஜெபமும், விசுவாசமும் அன்பால் இணைகிற பரலோக ஸ்தலமாக ஒருவரின் வீடு ஆக முடியும். நாம் எங்கிருந்தாலும், அவருக்காக எழுந்து பேசி, உண்மையாகவே கர்த்தரின் சீஷர்களாகலாம்.

தேவனின் நோக்கமே நமது நோக்கமாக இருக்க வேண்டும். அவரது பிள்ளைகள் ஆயத்தமாகி, தகுதிபெற்று, தரிப்பிக்கப்பட்டு, முத்திரிக்கப்பட்டு, பரிசுத்த ஆலயங்களில் செய்த உடன்படிக்கைகளுக்கு விசுவாசமாயிருந்து, அவரிடம் திரும்ப அவரது பிள்ளைகள்தெரிந்துகொள்ளவேண்டும் என அவர் விரும்புகிறார்.

இப்போது நமக்கு 162 அர்ப்பணிக்கப்பட்ட ஆலயங்கள் இருக்கின்றன. முந்தயவை, நமது அன்புக்குரிய முன்னோடிகளின் விசுவாசத்துக்கும் தரிசனத்துக்கும் புராதனச் சின்னங்களாக நிற்கின்றன. அவர்களால் கட்டப்பட்ட ஒவ்வொரு ஆலயமும் அவர்களது மாபெரும் தனிப்பட்ட தியாகத்தாலும் முயற்சியாலும் வந்தன. ஒவ்வொன்றும் முன்னோடிகளின் சாதனைக் கிரீடத்தில் மின்னும் ஆபரணமாக நிற்கின்றன.

அவற்றைக் கவனித்துக்கொள்வது நமது பரிசுத்த பொறுப்பு ஆகும். ஆகவே இந்த முன்னோடி ஆலயங்கள், புதுப்பித்தலும், புத்தாக்கமும், சிலவற்றுக்கு அதிக புனர் நிர்மாணமும் பெறுகிற காலம் சீக்கிரம் வரும். சாத்தியமான இடங்களிலெல்லாம், உணர்த்துதலான அழகையும், தலைமுறைகள் கடந்த தனித்துவமிக்க கலைத்திறனையும் ஒவ்வொரு ஆலயத்தின் வரலாற்று தனிச்சிறப்பையும் பாதுகாக்க முயற்சி செய்யப்படும்.

செயின்ட் ஜார்ஜ் ஆலயம், யூட்டாவுக்கான விவரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன. சால்ட் லேக் ஆலயம், ஆலய சதுக்கம், மற்றும் சபை அலுவலக கட்டிடத்துக்கு அருகிலுள்ள அடுத்துள்ள கட்டிடத்தின் புதுப்பிக்கும் திட்டமும் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2019 அன்று அறிவிக்கப்படும்.

மான்டை மற்றும் லோகன் ஆலயங்களும் வருகிற ஆண்டுகளில் புதுப்பிக்கப்படும். அந்த திட்டங்கள் ஆயத்தமாகும்போது, அவையும் அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு ஆலயமும் ஒரு காலகட்டத்துக்கு மூடப்படுவது இப்பணிக்கு தேவைப்படும். சபையார் அருகிலுள்ள பிற ஆலயங்களில் ஆலய ஆராதனையும் சேவையும் தொடர்ந்து அனுபவிக்கலாம். ஒவ்வொரு திட்டமும் முடிக்கப்படும்போது, ஒவ்வொரு வரலாற்று சிறப்புடைய ஆலயமும் மறுபிரதிஷ்டை செய்யப்படும்.

சகோதர சகோதரிகளே, சபையில் ஆலயத்தை நாம் மிகவும் பரிசுத்த கட்டிடமாக கருதுகிறோம். நாம் புதிய ஆலயம் கட்ட திட்டங்களை அறிவிக்கும்போது, அது நமது பரிசுத்த வரலாற்றின் பகுதியாக மாறுகிறது. இப்போது தயவுசெய்து கவனமாகவும், பயபக்தியுடனும் கேளுங்கள். உங்களுக்கு விசேஷமானதாக இருக்கிற இடத்தில் ஒரு ஆலயத்தை நான் அறிவித்தால், உங்கள் இருதயங்களில் நன்றியுணர்வின் மௌனமான ஜெபத்துடன் உங்கள் தலையை மட்டும் குனியுங்கள். இந்த மாநாட்டின் மற்றும் கர்த்தரின் பரிசுத்த ஆலயங்களின் புனித தன்மையை, மாற்ற சத்தங்கள் நமக்கு தேவையில்லை.

பின்வரும் இடங்களில் கட்டப்படவிருக்கிற கூடுதல் ஆலயங்கள் கட்டும் திட்டங்களை அறிவிப்பதில் நாங்கள் இன்று மகிழ்ச்சியடைகிறோம்.

பகோ பகோ, அமெரிக்க சமோவா; ஒக்கினாவா சிட்டி, ஒக்கினாவா; நெயாபு, டோங்கா; டூலே வேலி, யூட்டா; மோசஸ் லேக், வாஷிங்டன்; சான் பெட்ரோ சூலா, ஹோண்டுராஸ்; அன்டோபகஸ்டா, சிலி; புடாபெஸ்ட், ஹங்கேரி.

உங்களுக்கு நன்றி, என் அன்பு சகோதர சகோதரிகளே.

நமது பழைய மற்றும் புதிய ஆலயங்கள் பற்றி நாம் பேசும்போது, நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் என்பதை நமது செயல்களால் நாம் ஒவ்வொருவரும் காட்டுவோமாக. அவரில் நமது விசுவாசம் மற்றும் நம்பிக்கை மூலம் நாம் நமது வாழ்க்கையை புதுப்பிப்போமாக. ஒவ்வொரு நாளும் நமது மனந்திரும்புதலால், அவரது பாவநிவர்த்தியின் வல்லமையை நாம் அடைவோமாக. திரையின் இருமருங்கிலுமுள்ள அவரது பிள்ளைகளுக்கும், தேவனுக்கும் சேவை செய்து நமது வாழ்க்கையை அர்ப்பணித்து மறு அர்ப்பணிப்பு செய்வோமாக.

கர்த்தரின் சபையாகிய இதில் வெளிப்படுத்தல் தொடர்கிறது என உங்களுக்கு உறுதியளித்து, என் அன்பையும் ஆசீர்வாதத்தையும் உங்களுக்கு கொடுக்கிறேன். “தேவனின் நோக்கங்கள் நிறைவேறும்வரை பணி முடிக்கப்பட்டது என மகத்துவமுள்ள யேகோவா சொல்லும்வரை,“ இது தொடரும்.1

நான் அப்படியே உங்களை ஆசீர்வதித்து, தேவன் ஜீவிக்கிறார் என எனது சாட்சியை கூறுகிறேன். இயேசுவே கிறிஸ்து இது அவரது சபை. நாம் அவருடைய பிள்ளைகள். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.

குறிப்பு

  1. Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 142.