2010–2019
ஊழியப் பணி: உங்கள் இருதயத்தில் உள்ளவைகளை பகிர்ந்து கொள்ளுதல்
ஏப்ரல் 2019 பொது மாநாடு


ஊழியப் பணி: உங்கள் இருதயத்தில் உள்ளவைகளை பகிர்ந்து கொள்ளுதல்

இந்த பூமியில் நீங்கள் எங்கிருந்தாலும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் நற்செய்திகளைப் பகிர்ந்துகொள்ள ஏராளமான சந்தர்ப்பங்களிருக்கின்றன.

ரோம், இத்தாலி ஆலயத்தின் பிரதிஷ்டைக்கு அவருடன் பயணம் செய்ய நமது அன்பான தீர்க்கதரிசியான தலைவர் ரசல் எம். நெல்சனால் கடந்த மாதம் பன்னிருவர் அழைக்கப்பட்டிருந்தனர். பயணத்தின்போது அப்போஸ்தலனாகிய பவுலையும் அவனுடைய பயணத்தையும்பற்றி நான் நினைத்தேன். அவனுடைய காலத்தில் எருசலேமிலிருந்து ரோமிற்குச் செல்ல ஏறக்குறைய 40நாட்கள் எடுத்திருக்கும். இன்று, எனக்கு விருப்பமான விமானங்களில் ஒன்று 3 மணி நேரத்திற்கு குறைவான நேரத்தை எடுக்கிறது.

சபை அங்கத்தினர்களை பெலப்படுத்துவதில், பின்னர் அதைப்போலவே இன்றும் திறவுகோலாக இருந்த அவனுடைய நிருபங்களை அவன் எழுதியபோது பவுல் ரோமிலிருந்தான் என வேதாகம அறிஞர்கள் நம்புகிறார்கள்.

பவுலும், பூர்வகால சபையின் பிற அங்கத்தினர்களும், ஆரம்பகால பரிசுத்தவான்களும் தியாகத்தில் நன்கு பிரசித்தம் பெற்றவர்களாயிருந்தனர். அநேகர் மரணத்திற்கும், கடுமையாக துன்புறுத்தப்பட்டனர்.

கடந்த 200 ஆண்டுகளில் மறுஸ்தாபிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சபையின் அங்கத்தினர்களாகிய பிற்காலப் பரிசுத்தவான்களும் அநேக வடிவங்களில் துன்புறுத்தலை அனுபவித்தனர். ஆனால்,அந்த துன்புறுத்தலின் நடுவிலும் சிலசமயங்களில் அதனாலும் பிற்காலப் பரிசுத்தவானகளின் இயேசு கிறிஸ்து சபை வளருவதற்கு தொடர்ந்து இப்போது உலகமுழுவதிலும் காணப்படுகிறது.

இன்னும் செய்யவேண்டியது அதிகமிருக்கிறது.

எப்படியாயினும், ஒரு கேக்கை சமைப்பதற்கு முன்பு, காகிதத்துண்டுகளை வீசி, இந்த குறிப்பிடத்தக்க வெற்றிக்கும், அந்த வளர்ச்சியை முன்னோக்காக வைக்க நாம் சிறப்பாகச் செய்வோமென்பதற்காக நம்மையே நாம் பாராட்டுவோம்.

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையிலிருக்கும் சில 16மில்லியன் அங்கத்தினர்களோடு ஒப்பிடுகையில், உலகத்தில், தோராயமாக ஏழரை பில்லியன் ஜனங்களிருக்கிறார்கள், உண்மையில் மிகச்சிறிய மந்தையே.1

இதற்கிடையில் உலகத்தில் சில பகுதிகளில் கிறிஸ்தவ விசுவாசிகள் சுருங்கிக்கொண்டு போகிறார்கள்.2

ஒட்டுமொத்த அங்கத்தினர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும்போது, கர்த்தருடைய மறுஸ்தாபித சபையில், சபைக்கு ஒழுங்காகப்போவதின் ஆசீர்வாதங்களை உரிமை கோராத அநேகர் இங்கிருக்கிறார்கள்.

வேறு வார்த்தைகளெனில், இந்த பூமியில் நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் சந்திக்கிற சேர்ந்து படிக்கிற, வாழ்கிற அல்லது வேலை செய்கிற, பழகுகிற மக்களுடன், நற்செய்தியான இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள ஏராளமான சந்தர்ப்பங்களிருக்கின்றன.3

இந்த கடந்த ஆண்டின்போது, சபையின் உலகளாவிய ஊழிய நடவடிக்கைகளில் ஆழமாக ஈடுபட்டிருக்க உற்சாகமான சந்தர்ப்பம் எனக்கிருந்தது. “ஆகையால். நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று அவருடைய பிள்ளைகளான நமக்கு அவருடைய சீஷர்களுக்கு இரட்சகரின் மகத்தான கட்டளையைப்பற்றி நான் அடிக்கடி தியானித்து, ஜெபிக்கிறேன்.4

“அங்கத்தினர்களாகவும், கிறிஸ்துவின் சீஷர்களாகவும், நமது அன்றாட வாழ்க்கையில் அந்த மகத்தான ஆணையை எப்படி சிறப்பாக நிறைவேற்றமுடியும்?” என்ற கேள்வியுடன் நான் மல்லுக்கட்டினேன்.

உங்கள் இருதயத்திலும் மனதிலும் இதே கேள்வியை தியானிக்க இன்று நான் உங்களை அழைக்கிறேன்.5

ஊழியப் பணிக்கான ஒரு வரம்

“ஒவ்வொரு அங்கத்தினரும் ஒரு ஊழியக்காரர்” என்ற முழக்கும் அழைப்பை சபைத் தலைவர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள்.6

கடந்த காலங்களிலும் அப்படியே நம்முடைய காலங்களிலும் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்கள் ஆர்வத்துடனும் சந்தோஷத்துடனும் சுவிசேஷத்தை நண்பர்களுடனும் பரிச்சயமானவர்களுடனும் பகிர்ந்தார்கள். இயேசு கிறிஸ்துவின் சாட்சியுடன் அவர்களுடைய இருதயங்கள் ஒளிவிட்டு, இரட்சகரின் சுவிசேஷத்தில் அவர்கள் கண்ட அதே சந்தோஷத்தை மற்றவர்களும் அனுபவிக்க அவர்கள் உண்மையில் விரும்பினார்கள்.

சபை அங்கத்தினர்களில் சிலருக்கு இதற்கான வரமிருப்பதாகத் தோன்றுகிறது. சுவிசேஷத்தின் தூதுவர்களாக இருக்க அவர்கள் விரும்புகிறார்கள். ஊழிய அங்கத்தினர்களாக அவர்கள் தைரியமாக, சந்தோஷமாக சேவை செய்து பணியை நடத்துகிறார்கள்.

ஆயினும் நம்மில் சிலர் தயக்கமடைகிறார்கள். சபைக் கூட்டங்களில் ஊழியப்பணியைப்பற்றி விவாதிக்கப்படும்போது தனிஇருக்கைக்குப் பின்னால் மூழ்கும்வரை குழந்தை மட்டத்திற்குப்போய் தலைகள் மெதுவாக குனிந்து, வேதப்புத்தகங்களில் கண்கள் கவனமாகி, அல்லது பிற அங்கத்தினர்களுடைய கண்தொடர்பை தவிர்க்க கண்கள் மூடப்பட்டு தியானத்திற்குள் போகிறார்கள்.

ஏன் இது? சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ள அதிகமாய் செய்யாததற்காக நம் குற்ற உணர்வாக அது இருக்கலாம். ஒருவேளை இதை எப்படிச் செய்வதென்பதைப்பற்றி நிச்சயமின்மையை நாம் உணரலாம். அல்லது, நமது வசதி எல்லையை விட்டு வெளியே வருவதைப்பற்றி தயக்கமாக உணரலாம்.

இதை நான் புரிந்துகொள்கிறேன்.

ஆனால் நிபுணரையும் தவறே இல்லாத ஊழிய முயற்சிகளையும் கர்த்தருக்கு ஒருபோதும் தேவையாயிருப்பதில்லை. பதிலாக, “ஒரு வாஞ்சையுள்ள இருதயமும் மனதுமே கர்த்தருக்குத் தேவையாயிருக்கிறது” என்பதை நினைவுகூருங்கள்.7

ஊழியப்பணியை நீங்கள் ஏற்கனவே சந்தோஷமாக செய்துகொண்டிருந்தால் தயவுசெய்து தொடர்ந்து செய்து மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் நில்லுங்கள். கர்ததர் உங்களை ஆசீர்வதிப்பார்.

எப்படியாயினும், சுவிசேஷச் செய்தியை பகிர்ந்துகொள்ளுதலுக்கு வரும்போது உங்கள் கால்களை இழுத்துக்கொணடு நடப்பதாக நீங்கள் உணர்ந்தால், இஸ்ரவேலில் கூடிச்சேருவதற்கு உதவ இரட்சகரின் மகத்தான ஆணையில் பங்கேற்க யாராலும் செய்யமுடிகிற குற்றஉணர்வி்ல்லாத ஐந்து காரியங்களை நான் பரிந்துரைக்கட்டுமா?

ஐந்து எளிய பரிந்துரைகள்

முதலாவதாக தேவனிடம் நெருக்கமாயிருங்கள். கர்த்தரிடத்தில் அன்புகூருவது, முதல் பெரிய கட்டளை. 8 இது, இந்த பூமியில் ஏன் நாமிருக்கிறோம் என்பதன் முதன்மை காரணம். “பரலோக பிதாவை உண்மையில் நான் நம்புகிறேனா?”

“அவரில் அன்புகூர்ந்து அவரை நம்புகிறேனா?” என உங்களையே கேளுங்கள்.

நமது பரலோக பிதாவண்டை நாம் நெருங்கும்போது உங்களுக்குள்ளிருந்து அவருடைய ஒளியும் சந்தோஷமும் அதிகமாய் பிரகாசிக்கும். உங்களைப்பற்றி ஏதோ தனித்துவமாகவும் விசேஷமாகவுமிருப்பதாகவும் மற்றவர்கள் கவனிப்பார்கள். அதைப்பற்றி அவர்கள் கேட்பார்கள்.

இரண்டாவதாக, மற்றவர்களுடன் அன்பினால் உங்கள் இருதயத்தை நிரப்புங்கள். இது இரண்டாவது பெரிய கட்டளை.9 உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் தேவனின் பிள்ளையாக உண்மையாகப் பார்க்க முயற்சியுங்கள். உங்களுடைய ஊழியம் செய்தலின் சகோதரி அல்லது சகோதரர் பட்டியலில் அவர்களுடைய பெயர்கள் இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு ஊழியம் செய்யுங்கள்.

அவர்களோடு சேர்ந்து சிரியுங்கள். அவர்களுடன் களிகூருங்கள். அவர்களுடன் அழுங்கள். அவர்களை மதியுங்கள் அவர்களை குணப்படுத்தி, தூக்கி பெலப்படுத்துங்கள்.

கிறிஸ்துவின் அன்பைப் பின்பற்ற முயற்சித்து, உங்களிடத்தில் அன்பில்லாதவர்களாய், உங்களைக் கேலி செய்கிறவர்களாய், உங்களுக்கு தீங்குவிளைவிக்க விரும்புகிறவர்களாயிருந்தாலும், மற்றவர்களிடத்தில் இரக்கமாயிருங்கள். அவர்களிடத்தில் அன்புகூர்ந்து, பரலோக பிதாவின் சக பிள்ளைகளாக அவர்களை நடத்துங்கள்.

மூன்றாவதாக, சீஷத்துவத்தின் பாதையில் நடக்க முயற்சியுங்கள். தேவனிடத்திலும் அவருடைய பிள்ளைகளிடத்திலும் உங்கள் அன்பு ஆழப்படும்போது, அதைப்போன்றே இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற உங்களுடைய அர்ப்பணிப்பும் ஆழமாகிறது.

அவருடைய வார்த்தைகளில் உண்டுகளிக்கும்போதும், தற்கால தீர்க்கதரிசிகளின், அப்போஸ்தலர்களின் போதனைகளுக்கு செவிகொடுத்து பிரயோகப்படுத்தும்போதும் அவருடைய வழியைப்பற்றி நீங்கள் அறிந்துகொள்வீர்கள். கற்றுக்கொள்ளும் இருதயத்துடன் அவருடன் நீங்கள் தொடர்புகொள்ளும்போது, அவருடைய வழியைப் பின்பற்ற தன்னம்பிக்கையிலும், தைரியத்திலும் நீங்கள் வளருவீர்கள்.

ஒவ்வொரு நாளும், சிறிது சிறிதாகவும், கிருபையின் மேல் கிருபையாகவும்,10சீஷத்துவத்தின் பாதையில் நடப்பதற்கு பயிற்சி வேண்டும்.”11 சிலநேரங்களில் இரண்டடி முன்னாலும் ஒரு அடி பின்னாலுமாயிருக்கிறது.

நீங்கள் கைவிடமாட்டீர்களென்பது முக்கியமான காரியம், அதைச் சரியாக அடைய முயற்சிசெய்துகொண்டிருங்கள். இறுதியாக, நீங்கள் சிறப்பாகி, சந்தோஷமாகி, அதிக நம்பத்தகுந்தவர்களாகுவீர்கள். உங்கள் விசுவாசத்தைப்பற்றி மற்றவர்களிடம் பேசுதல் சாதாரணமாகவும் இயற்கையாகவும் மாறும். உண்மையில், இதைப்பற்றி மற்றவர்களிடம் பேசாதிருத்தல் செயற்கையாக உணரப்படுகிறதாகி, சுவிசேஷம் உங்கள் வாழ்க்கையில் இத்தகைய ஒரு அத்தியாவசியமான, விலையேறப்பெற்ற பகுதியாகும். அது உடனடியாக நடக்காதிருக்கலாம், இது வாழ்நாள் முயற்சி. ஆனால் இது நடக்கும்.

நான்காவதாக, உங்கள் இருதயத்திலுள்ளவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள். ஒரு தெரு முனையில் ஒலிபெருக்கியோடு நின்றுகொண்டு, நமது மார்மன் புஸ்தக வசனங்களை கத்தவேண்டும் என நான் உங்களைக கேட்கவில்லை. தனிப்பட்ட முறையிலும், அப்படியே இணையதளத்தின் மூலமாகவும் மக்களுடன் சாதாரண, இயற்கையான தொடர்பில் உங்கள் விசுவாசத்தை உயரே கொண்டு வரக்கூடிய சந்தர்ப்பங்களுக்காக எப்போதும் தேடுங்கள் என்றுதான் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எல்லா நேரங்களிலும் சுவிசேஷத்தின் வல்லமையைக்குறித்து நீங்கள் சாட்சியாக நில்லுங்கள்,12 தேவைப்படும்போது வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள் என நான் உங்களைக் கேட்கிறேன்.13

ஏனெனில், “கிறிஸ்துவின் சுவிசேஷம், இரட்சிப்புக்கு தேவனின் வல்லமை, இதை நீங்கள் பகிர்ந்துகொள்ளும்போது, நீங்கள் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் அடக்கத்துடனுமிருப்பீர்கள்.14 தன்னம்பிக்கை, தைரியம், அடக்கம் எதிரான பண்புகளாகத் தோன்றலாம், ஆனால் அவைகள் அப்படியல்ல. சுவிசேஷத்தின் மதிப்புகளையும் கொள்கைகளையும் ஒரு மரக்காலுக்குக் கீழே மறைக்கவேண்டாம் ஆனால் உங்கள் நல்ல பணிகள் உங்கள் பரலோக பிதாவை மகிமைப்படுத்தும்படியாக உங்கள் ஒளி பிரகாசிக்கட்டும் என்ற இரட்சகரின் அழைப்பை அவைகள் பிரதிபலிக்கின்றன.15

இரக்கத்தின் அன்றாட செயல்களிலிருந்து, யு டியுப், முகநூல், இன்ஸ்டாகிராம் அல்லது டியுட்டரில் நீங்கள் சந்திக்கிற மனுஷர்களுடன் தனிப்பட்ட உரையாடல்களில் சாட்சிகளால், இதைச் செய்ய அநேக சாதாரணமான, இயற்கையான வழிகளிருக்கின்றன. நமது வீடுகளிலும் ஞாயிறு பள்ளியிலும் இந்த ஆண்டு நாம் புதிய ஏற்பாடிலிருந்து கற்றுக்கொள்கிறோம். இரட்சகரைப்பற்றி உங்களோடு சேர்ந்து கற்றுக்கொள்ள நண்பர்களையும், அண்டைவீட்டாரையும் சபைக்கும் உங்கள் வீடுகளுக்கும் அழைக்க என்ன ஒரு அற்புதமான தருணம். வந்து என்னைப் பின்பற்றுங்களை அவர்கள் கண்டுபிடிக்க முடிகிற Gospel Library செயலியை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இளம் மக்களையும் குடும்பங்களையும் நீங்கள் அறிந்தால் வாலிபர்களின் பெலத்திற்காக பிரதியை அவர்களுக்குக் கொடுத்து அந்த கொள்கைகளின்படி வாழ எப்படி நம் இளம் மக்கள் முயற்சிக்கிறார்களென்று வந்து பார்க்க அவர்களை அழைக்கவும்.

ஒருவர் உங்களுடைய வாரஇறுதியைப்பற்றி கேட்டால், சபையில் உங்கள் அனுபவத்தைப்பற்றிப் பேச தயங்காதிருங்கள். ஒரு சபையின் முன் நின்று, எவ்வாறு அவர்கள் கிறிஸ்துவைப் போன்றிருக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்களென ஆர்வத்துடன் பாடிய சிறுபிள்ளைகளைப்பற்றி பேசுங்கள். தனிப்பட்ட வரலாறுகளைத் தொகுக்க ஓய்வு வீடுகளிலிருக்கிற வயதானவர்களுக்கு உதவிசெய்துகொண்டிருக்கிற வாலிபக் குழுவைப்பற்றிப் பேசுங்கள். நமது ஞாயிறு கூட்ட நேர அட்ட்வணையின் சமீபத்திய மாறுதலைப்பற்றியும் அது எவ்வாறு உங்கள் குடும்பங்களை ஆசீர்வதிக்கிறதென்பதைப்பற்றியும் பேசுங்கள். அல்லது, இது இயேசு கிறிஸ்து சபை என்றும், பூர்வகால சபையின் அங்கத்தினர்களும் பரிசுத்தவான்கள் என அழைக்கப்பட்டதைப்போல நாம் பிற்காலப் பரிசுத்தவான்கள் என ஏன் நாம் வலியுறுத்துகிறோம் என விவரியுங்கள்.

இயற்கையாகவும், சாதாரணமாகவும் உங்களுக்கு எந்த வழி தோன்றுகிறதோ அதில், ஏன் உங்களுக்கு இயேசு கிறிஸ்துவும் அவருடைய சபையும் முக்கியமானதென மக்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். “வந்து பார்க்க” அவர்களை அழையுங்கள்.16 பின்னர் வந்து உதவ அவர்களை ஊக்குவியுங்கள். நமது சபையில் உதவுவதற்கு மக்களுக்கு எண்ணற்ற சந்தர்ப்பங்களிருக்கின்றன.

தெரிந்தெடுக்கப்பட்டவர்களைக் காண மட்டும் ஊழியக்காரர்களுக்காக ஜெபிக்காதீர்கள். வந்து பார்க்கிறவர்களை, வந்து உதவுகிறவர்களை, வந்து தங்குகிறவர்களை நீங்கள் காணும்படியாக உங்கள் முழுஇருதயத்தோடும் தினசரி ஜெபியுங்கள். முழுநேர ஊழியக்காரர்களை வளையத்தில் வைத்திருங்கள். உதவுவதற்கு ஆயத்தமாயிருக்கிற அவர்கள் தூதர்களைப் போன்றவர்கள்.

இயேசு கிறிஸ்துவின் சவிசேஷத்தின் நற்செய்திகளை நீங்கள் பகிர்ந்துகொள்ளும்போது அன்புடனும் பொறுமையுடனும் அதைச் செய்யுங்கள். அவர்கள் விரைவிலேயே வெள்ளை ஆடையணிந்து, பக்கத்திலுள்ள ஞானஸ்நானத்தொட்டிக்கு வழி கேட்பார்கள் என்ற ஒரே எதிர்பார்ப்புடன் நாம் மக்களுடன் தொடர்புகொண்டால், அதை நாம் தவறாகச் செய்கிறோம்.

வந்து பார்க்கிற சிலர் ஒருவேளை ஒருபோதும் சபையில் சேரமாட்டார்கள், சிலர் பின்னர் ஒரு நேரத்தில் சேருவார்கள். அது அவர்களுடைய தேர்ந்தெடுப்பு ஆனால் நமக்கு அவர்கள்மீதுள்ள நமது அன்பை அது மாற்றாது. வந்து பாருங்கள், வந்து உதவுங்கள் என்றும் வந்து தங்குங்கள் என்றும் தனிப்பட்டவர்களையும் குடும்பங்களையும் தொடர்ந்து அழைக்கிற நமது ஆர்வமுள்ள முயற்சிகளை இது மாற்றுவதில்லை.

ஐந்தாவதாக, அவருடைய அற்புதங்கள் செயல்பட கர்த்தரை நம்புங்கள். மக்களை மனமாற்றுவது உங்களுடைய வேலை அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அது பரிசுத்த ஆவியின் பாத்திரம். உங்களுடைய இருதயத்திலுள்ளவற்றை பகிர்ந்து கொள்வதும் உங்களுடைய நம்பிக்கைகளுடன் சீராக வாழ்வதுவுமே உங்களுடைய பாத்திரம்.

ஆகவே, உடனேயே சுவிசேஷச் செய்தியை ஒருவர் ஏற்றுக்கொள்ளாதிருந்தால், ஊக்கமிழக்காதிருங்கள். இது ஒரு பெயர் மாற்றம் இல்லை.

அது தனிப்பட்டவருக்கும் பரலோக பிதாவுக்குமிடையிலானது

தேவனையும், அவருடைய பிள்ளைகளான உங்களுடைய அண்டைவீட்டாரையும் நேசிப்பதே உங்களுடையது.

நம்புங்கள், அன்புசெலுத்துங்கள், செயல்படுங்கள்.

இந்த பாதையை பின்பற்றுங்கள், அவருடைய விலையேறப்பெற்ற பிள்ளைகளை ஆசீர்வதிக்க உங்கள் மூலமாக தேவன் அற்புதங்களை நடப்பிப்பார்.

பூர்வ காலங்களிலிருந்து இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் செய்ததை நீங்கள் செய்ய, இந்த ஐந்து ஆலோசனைகள் உங்களுக்குதவும். உங்கள் வாழ்க்கையிலும், நீங்கள் யார், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதிலும் அவருடைய சுவிசேஷமும் சபையும், ஒரு முக்கிய பங்காயிருக்கிறது வந்து பாருங்கள், வந்து உதவுங்கள் என்று மற்றவர்களை அழையுங்கள், தேவன் அவருடைய இரட்சிப்பின் பணியைச் செய்வார், அவர்கள் வந்து தங்குவார்கள்.

ஆனால், கடினமாயிருந்தால் என்ன?

ஆனால், இதை எல்லாவற்றையும் நான் செய்து மக்கள் மோசமாக நடந்துகொண்டால் நான் என்ன செய்ய என நீங்கள் கேட்கலாம். சபையைப்பற்றி அவர்கள் விமர்சித்தால் என்ன? அவர்கள் என் நட்பை புறக்கணித்தால் என்ன?

ஆம், அது நடக்கலாம். பூர்வ காலங்களிலிருந்தே, இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் அடிக்கடி துன்புறுத்தப்பட்டார்கள்.17 “கிறிஸ்துவின் பாடுகளை நீங்கள் பகிர்ந்துகொள்ளும்போது களிகூருங்கள்” என அப்போஸ்தலன் பேதுரு சொன்னான்.18 அந்த பூர்வகால பரிசுத்தவான்கள் “அவருடைய நாமத்துக்காக அவமானமடைவதற்கு பாத்திரராக எண்ணப்பட்டு களிகூர்ந்தார்கள்”.19

கர்த்தர் மர்மமான வழிகளில் செயல்படுகிறார் என்பதை நினைவுகூருங்கள். மிருதுவாக்கப்படக்கூடிய ஒரு கடினமான இருதயத்தை நிராகரிப்பதின் உங்களுடைய கிறிஸ்துவைப் போன்ற பதிலால் இது இப்படியிருக்கும்.

பரலோக பிதாவிடத்திலும், அவருடைய பிள்ளைகளிடத்திலும் உங்கள் அன்பின் ஒரு வெளிப்பாடாக அவருடைய பணியில் உதவ, அடக்கத்துடன், எப்போதுமே பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் ஒரு அங்கத்தினராக அடையாளம் காணப்பட தைரியத்துடன், சுவிசேஷ மதிப்புகளின் ஒரு ஜீவிக்கிற சாட்சியாயிருக்க, நம்பிக்கையுடன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரு அப்போஸ்தலனாக, நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்.

என்னுடைய அன்பான நண்பர்களே “வல்லமையுடனும், மகத்தான மகிமையோடும், சகல பரிசுத்த தூதர்களுடனும்”, கிறிஸ்துவின் வருகைக்காக ஆயத்தப்பட்டு நீண்ட காலமாக முன்னுரைத்த இஸ்ரவேலின் கூடிச்சேர்தலில் நீங்கள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பாகமெனபதை அறிந்துகொண்டதில் நீங்கள் களிகூருவீர்கள்.20

பரலோக பிதா உங்களை அறிகிறார். கர்த்தர் உங்களை நேசிக்கிறார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். இந்த பணி அவரால் நியமிக்கப்பட்டது இதை உங்களால் செய்ய முடியும். நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து இதைச் செய்யலாம்.

அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. தேவ ஆட்டுக்குட்டியானவரின் சபை “பூமியின் பரப்பின்மேலெல்லாம்” பரவினாலும் உலகத்தின் துன்மார்க்கத்தினால் மேலோட்டமாக அவர்கள் “சிறியதாயிருந்தார்கள்” (1 நெப்பி 14:12; லூக்கா 12:32).ஐயும் பார்க்கவும்.

  2. உதாரணமாக, அமெரிக்க ஐக்கியநாடுகளில் கிறிஸ்தவர்கள் என தங்களை விவரிக்கிறவர்களான (18 வயதுக்கும் மேற்பட்டவர்கள்) வயதுவந்தோரின் சதவிகிதம் 2007ல் 78.4% லிருந்து 2014ல் 70.6% ஆக ஏழு ஆண்டுகளில் ஏறக்குறைய எட்டு சதவிகிதம் குறைந்திருக்கிறதென பியு ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய ஆராய்ச்சி கண்டுபிடித்தது. இதே காலகட்டத்தில், தங்களை நாத்திகர், யதார்த்தவாதி அல்லது குறிப்பாக எதையும் சாராதவர் என விவரித்துக்கொண்டிருக்கிற மதரீதியாக தங்களை இணைத்துக்கொள்ளாத அமெரிக்கர்களின் சதவிகிதம் 16.1 லிருந்து 22.8க்கு ஆறு புள்ளிகள் மேலுயர்ந்தது. (“America’s Changing Religious Landscape,” Pew Research Center, May 12, 2015, pewforum.org).

  3. சுவிசேஷம் என்ற வார்த்தைக்கு “நற்செய்திகள்” என்று அர்த்தம் கல்லறையிலிருந்து முழு மனுக்குலமும் மீட்கப்படச் செய்கிற ஒரு நிறைவான பாவநிவர்த்தியை இயேசு கிறிஸ்து செய்தார் மற்றும் அவன் அல்லது அவளின் ஒவ்வொரு தனிப்பட்டவரின் செயல்களுக்குத் தகுந்தாற்போல பலனடைவார்கள் என்பதே நற்செய்திகள். அநித்தியத்திற்கு முந்திய உலகத்தில் அவருடைய நியமிப்புடன் இந்த பாவநிவர்த்தி ஆரம்பமாகி, அவருடைய சொற்பகால அநித்தியத்தின்போது தொடர்ந்து அவருடைய மகிமையான உயிர்த்தெழுதலில் முடிவடைந்தது. அவருடைய அநித்திய வாழ்க்கை, ஊழியம், பலியின் வேதாகம குறிப்புகள் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் சுவிசேஷங்கள் என அழைக்கப்படுகிறது.

  4. மத்தேயு 28:19.

  5. “மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய சிநேகிதரே, உங்கள் இருதயங்களில் சிந்திக்கும்படியாக இந்த சொற்களை நான் உங்களிடத்தில் விட்டுச் செல்லுகிறேன்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:62).

    “இதோ நான் உனக்குச் சொல்லுகிறேன், இதை நீ மனதில் ஆராயவேண்டும். பின்னர் அது சரியானதாவென என்னிடம் கேள். அது சரியாயிருந்தால் உனக்குள்ளே உனது மார்பை அனலடையச் செய்வேன். ஆகவே அது சரியானதென நீ உணருவாய்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 9:8).

  6. 1922 லிருந்து 1924 வரை தலைவர் டேவிட் ஐரோப்பிய ஊழியத்தை தலைமை தாங்கிக்கொண்டிருந்தபோது, ஒவ்வொரு அங்கத்தினரும் ஒரு ஊழியக்காரராக இருக்க ஊக்குவித்து, 1952ன் ஆரம்பத்தில் சபை பொதுமாநாட்டில் இதே செய்தியை அவர் பகிர்ந்துகொண்டார்.(“‘Every Member a Missionary’ Motto Stands Firm Today,” Church News, Feb. 20, 2015, news.ChurchofJesusChrist.org) பார்க்கவும்.

  7. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:34.

  8. மத்தேயு 22:37-38 பார்க்கவும்.

  9. மத்தேயு 22:39 பார்க்கவும்.

  10. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:12.

  11. ஏசாயா 28:10.

  12. மோசியா 18:9.

  13. இந்த சிந்தனை அசிசியின் புனித பிரான்சிஸூக்கு சாரும் யோவான் 10:36-38 ஐயும் பார்க்கவும்.

  14. ரோமர் 1:16.

  15. மத்தேயு 5:15-16 பார்க்கவும்.

  16. யோவான் 1:46; emphasis added.

  17. யோவான் 15:18 பார்க்கவும்.

  18. 1 பேதுரு 4:13, ஆங்கில தர பதிப்பு சுவிசேஷத்திற்காக பாடுகளை கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் எவ்வாறு பார்க்கவேண்டும் என்பதைப்பற்றி கூடுதலானவற்றிற்கு வசனங்கள் 1-19 ஐயும் பார்க்கவும்.

  19. அப்போஸ் 5:41.

  20. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:44.