2010–2019
ஆவிக்குரிய பொக்கிஷங்கள்
அக்டோபர் 2019 பொது மாநாடு


ஆவிக்குரிய பொக்கிஷங்கள்

கர்த்தரிலும் அவருடைய ஆசாரியத்துவ வல்லமையிலும் விசுவாசத்தை நீங்கள் பயிற்சி செய்யும்போது, கர்த்தர் கிடைக்கச் செய்த ஆவிக்குரிய பொக்கிஷத்தை ஈர்க்கும் திறன், அதிகரிக்கும்.

அந்த அழகான இசைக்காக உங்களுக்கு நன்றி. “We Thank Thee, O God, for a Prophet,”என்ற இடைநிலைப் பாடலைப் பாட நின்றபோது, இரண்டு வல்லமையான எண்ணங்கள் எனக்கு வந்தன. ஒன்று இந்த ஊழியக்காலத்தின் தீர்க்கதரிசியாகிய தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் பற்றியது. அவர் மீது எனது அன்பும் ஈர்ப்பும் கடந்துபோகிற ஒவ்வொரு நாளும் வளர்கிறது. என் மனைவியையும், என் மகள்களையும், பேத்திகளையும், கொள்ளுப்பேத்திகளையும் பார்க்கும்போது இரண்டாவது எண்ணம் வந்தது. உங்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பத்தின் பாகமாக நான் உரிமை கோருவது போல் உணர்ந்தேன்.

பல மாதங்களுக்கு முன்பு, ஆலய தரிப்பித்தல் கூட்டத்தின் முடிவில் என்னுடைய மனைவி வெண்டியிடம் நான் சொன்னேன், ஆலயத்தில் அவர்களுக்கான ஆவிக்குரிய பொக்கிஷங்களைப்பற்றி சகோதரிகள் புரிந்துகொள்வார்களென நான் நம்புகிறேன். சகோதரிகளே,வெண்டியும் நானும் ஹார்மனி பென்சில்வேனியாவுக்கு வருகை தந்தபோது, இரண்டு மாதங்களுக்கு முன்பையும் சேர்த்து அடிக்கடி நான் உங்களைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பவனாக காண்கிறேன்,

படம்
ஆரோனிய ஆசாரியத்துவத்தின் மறுஸ்தாபிதம்

அது அங்கே எங்களுடைய இரண்டாவது பயணம். இரண்டு முறைகளிலும், அந்த பரிசுத்த தரையின்மேல் நாங்கள் நடந்தபோது நாங்கள் ஆழமாக அசைக்கப்பட்டோம். ஹார்மனியில்தான் யோவான் ஸ்நானன் ஜோசப் ஸ்மித்துக்குத் தோன்றி ஆரோனிய ஆசாரியத்துவத்தை மறுஸ்தாபிதம் செய்தான்.

படம்
மெல்கிசெதேக்கு ஆசாரியத்துவத்தின் மறுஸ்தாபிதம்

அங்குதான் அப்போஸ்தலர்களாகிய பேதுருவும், யாக்கோபுவும், யோவானும் தோன்றி மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை மறுஸ்தாபிதம் செய்தார்கள்.

ஹார்மனியில்தான் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மார்மன் புஸ்தகத்தை மொழிபெயர்த்துக்கொண்டிருந்தபோது எம்மா ஹேல் ஸ்மித் அவருடைய கணவரின் முதல் எழுத்தராக பணிபுரிந்தார்,

ஹார்மனியில்தான், கர்த்தருடைய சித்தத்தை எம்மாவுக்கு வெளிப்படுத்தி ஜோசப் ஸ்மித் ஒரு வெளிப்படுத்தலை பெற்றார். வேதத்தை விவரிக்கவும், சபைக்கு புத்தி சொல்லவும், பரிசுத்த ஆவியைப் பெறவும், அதிகமானவற்றைக் கற்றுக்கொள்ள அவருடைய அதிகமான நேரத்தைச் செலவழிக்கவும் எம்மாவுக்கு கர்த்தர் அறிவுறுத்தினார். உலகத்தின் காரியங்களை ஒதுக்கிவிட்டு சிறப்பானவற்றை நாட வேண்டுமெனவும், தேவனோடு அவளுடைய உடன்படிக்கைகளை பற்றிப்பிடித்துக் கொள்ளவும் எம்மா ஆலோசனையளிக்கப்பட்டார். “யாவருக்கும் இதுவே எனது குரல்”1 என்ற இந்த கட்டாயமான வார்த்தைகளுடன் கர்த்தர் அவருடைய அறிவுரைகளை நிறைவுசெய்தார்.

இப்பகுதியில் நடந்த எல்லாமுமே உங்கள் வாழ்க்கைக்கு ஆழமான தாக்கங்களாயிருக்கின்றன. எம்மாவுக்கு கர்த்தருடைய ஆலோசனையுடன் ஆசாரியத்துவத்தின் மறுஸ்தாபிதம் உங்கள் ஒவ்வொருவரையும் வழிநடத்தி ஆசீர்வதிக்கும். ஆசாரியத்துவத்தின் மறுஸ்தாபிதம் உங்களுக்கு பொருத்தமாயிருப்பதைப்போல, ஒரு பெண்ணுக்கும், எந்த மனிதனுக்கும் பொருத்தமாயிருக்கிறது என புரிந்துகொள்ள உங்களுக்காக நான் எவ்வளவு ஏங்குகிறேன். மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டதால் உடன்படிக்கையைக் கைக்கொள்ளும் பெண்களும் ஆண்களும் சபையின்அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற முடியும்”.2 அல்லது அவருடைய பிள்ளைகளுக்கு கர்த்தர் வைத்திருக்கிற எல்லா ஆவிக்குரிய பொக்கிஷங்களையும் என நாம் சொல்லலாம்.

தேவனோடு உடன்படிக்கைகளைச் செய்து அந்த உடன்படிக்கைகளை கைக்கொள்ளுகிற எல்லா ஆண்களும் பெண்களும், ஆசாரியத்துவ நியமங்களில் தகுதியுள்ளவர்களாக பங்குபெறுகிறவர்கள் தேவனின் வல்லமையை நேரடியாக பெறலாம். கர்த்தரின் ஆலயத்தில் தரிப்பிக்கப்பட்டவர்கள், அந்த வல்லமையை எவ்வாறு நெருங்கிவருவதென்பதை அறிந்துகொள்ள அறிவின் வரத்துடன், தேவனின் ஆசாரியத்துவ வல்லமையின் வரத்தைப் பெறுகிறார்கள்.

ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற ஆண்களுக்கு அவைகளிருப்பதைப்போல, தங்களுடைய ஆசாரியத்துவ உடன்படிக்கைகளிலிருந்து வழிந்தோடுகிற தேவனின் வல்லமையோடு தரிப்பிக்கப்பட்ட பெண்களுக்கு பரலோகங்கள் திறந்திருக்கின்றன. உங்கள் வாழ்க்கையை மாற்றுமென நான் நம்புவதால், அந்த உண்மை உங்கள் ஒவ்வொருவரின் இருதயங்களிலும் பதிவுசெய்யப்பட நான் ஜெபிக்கிறேன். சகோதரிகளே, உங்கள் குடும்பத்திற்கும் நீங்கள் நேசிப்பவர்களுக்கும் உதவ இரட்சகரின் வல்லமையை தாராளமாக பெற உங்களுக்கு உரிமையிருக்கிறது.

“இது அற்புதமாகத் தெரிகிறது, ஆனால் நான் இதை எப்படிச் செய்யமுடியும்?” என இப்போது நீங்கள் உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளலாம். என்னுடைய வாழ்க்கையில் இரட்சகரின் வல்லமையை நான் எவ்வாறு பெற முடியும்?”

இந்த செயல்முறை எந்த கையேட்டிலும் எழுதப்பட்டதை உங்களால் காணமுடியாது. நீங்கள் அறியவும், கர்த்தர் விரும்புகிறதை புரிந்துகொள்ளவும் நீங்கள் நாடும்போது, பரிசுத்த ஆவி உங்கள் தனிப்பட்ட ஆசானாயிருப்பார். இந்த செயல்முறை விரைவாகவும் எளிதாகவுமிருப்பதில்லை, ஆனால் இது ஆவிக்குரியவிதத்தில் ஆற்றலளிப்பதாக இருக்கிறது. தேவனுடைய வல்லமை—ஆசாரியத்துவத்தின் வல்லமை என புரிந்துகொள்ள பரிசுத்த ஆவியுடன் பிரயாசப்படுவதைவிட எது உற்சாகமளிப்பதாக இருக்கமுடியும்?

என்னால் உங்களுக்கு எதைக்கூற முடியுமென்றால், உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை பெறுவதற்கு, செய்யும்படியாக எம்மாவுக்கும் உங்களுக்கும் கர்த்தர் அறிவுறுத்திய அதே காரியங்கள் தேவையாயிருக்கிறது.

ஆகவே, கோட்பாடும் உடன்படிக்கைகளும் பாகம்25ஐ ஜெபத்துடன் தியானிக்கவும், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு எதைப் போதிப்பார் என்பதைக் கண்டுபிடிக்கவும் நான் உங்களை அழைக்கிறேன். உங்களுடைய ஆவிக்குரிய பெரும் முயற்சி, நீங்கள் தரிப்பிக்கப்பட்டதற்காக வருகிற வல்லமையை, பெறும்போதும், புரிந்துகொள்ளும்போதும், பயன்படுத்தும்போதும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்.

இந்த பெரும் முயற்சியின் பகுதி, இந்த உலகத்தின் அநேக காரியங்களை பக்கத்தில் ஒதுக்கி வைக்க வேண்டியதிருக்கும். சிலநேரங்களில், உலகத்திலிருந்தும் அதன் சர்ச்சைகள், பரவலான சோதனைகள் மற்றும் பொய்யான தத்துவங்களிலிருந்தும் விலகி நடப்பதைப்பற்றி கிட்டத்தட்ட சாதாரணமாக நாம் பேசுகிறோம். ஆனால்உண்மையில் அப்படிச் செய்ய உங்கள் வாழ்க்கையை நீங்கள் உன்னிப்பாகவும், வழக்கமாகவும் பரிட்சித்துப் பார்த்தல் தேவையாயிருக்கிறது. நீங்கள் அப்படிச் செய்யும்போது, இனியும் தேவையில்லாததை, உங்கள் நேரத்திற்கும் ஆற்றலுக்கும் தகுதியில்லாதததைப்பற்றி பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உணர்த்துவார்.

உலகத்தின் கவனச் சிதறுதல்களிலிருந்து உங்கள் கவனத்தை நீங்கள் மாற்றும்போது, உங்களுக்கு முக்கியமானவையாகத் தோன்றுகிற ஒன்று இப்போது முன்னுரிமையிலிருந்து பின்வாங்குகிறது. அவைகள் தீங்கற்றவையாகத் தோன்றினாலும் சில காரியங்களுக்கு இல்லை என நீங்கள் சொல்லவேண்டியதிருக்கும். நீங்கள் தொடங்கும்போது, கர்த்தரிடத்தில் உங்கள் வாழ்க்கையை பரிசுத்தமாக்குகிற இந்த வாழ்நாள் செயல்முறையை தொடரும்போது, உங்களுடைய முன்னோக்கு, உணர்ச்சிகள், ஆவிக்குரிய பெலனின் மாற்றங்கள் உங்களை ஆச்சரியப்படவைக்கும்.

இப்போது எச்சரிக்கையான ஒரு சிறிய வார்த்தை. தேவனின் வல்லமையை கேட்கிற உங்கள் திறமையை சிதைக்கிறவர்கள் இருக்கிறார்கள். உங்களைப்பற்றி சந்தேகப்படுகிறவர்கள், நீதியுள்ள பெண்ணாக உங்கள் உயர்வான ஆவிக்குரிய திறனைக் குறைக்கிறவர்கள் சிலரிருக்கிறார்கள்.

மிக நிச்சயமாக, ஞானஸ்நானத்தில் நீங்கள் செய்த உடன்படிக்கையை, அல்லது அறிவின் மகத்துவமான தரிப்பித்தலை, நீங்கள் பெற்ற அல்லது கர்த்தருடைய வீடான ஆலயத்தில் நீங்கள் பெறப்போகிற வல்லமையைப் புரிந்துகொள்ள சத்துரு விரும்புவதில்லை, ஆலயத்தில் தகுதியுள்ளவராக நீங்கள் சேவை செய்யும்போதும், தொழுதுகொள்ளும்போதும், நீங்கள் தேவனுடனும், உங்கள்மீது பொறுப்பேற்றுக்கொண்ட அவருடைய தூதர்களுடைய வல்லமையுடனும் நீங்கள் விடப்படுகிறீர்களென்று நீங்கள் புரிந்துகொள்ள நிச்சயமாக சாத்தான் விரும்புவதில்லை.3

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிற, ஆசீர்வதிக்கப்பட முடிகிறதுடன் ஆவிக்குரிய வரங்களை நீங்கள் புரிந்துகொள்ளுவதிலிருந்து உங்களைத் தடுக்க, சாத்தானும் அவனுடைய கூட்டாளிகளும் சாலைத் தடுப்புகளை வைக்க தொடர்ந்து திட்டமிடுவார்கள். துரதிருஷ்டவசமாக, சில சாலைத்தடுப்புகள் மற்றொருவரின் தவறான நடத்தையின் பலனாயிருக்கலாம். ஒதுக்கப்பட்டவர்களாக, அல்லது ஆசாரியத்துவ தலைவர் ஒருவரால் நம்பப்படாதவராக, அல்லது ஒரு கணவரால், தகப்பனால், அல்லது நண்பராயிருக்க வேண்டியவரால், நிந்திக்கப்பட்டவராக, துரோகமிழைக்கப்பட்டவராக உங்களில் யாராவது உணர்வதை நினைத்துப் பார்ப்பது எனக்கு துக்கமாயிருக்கிறது. ஓரங்கட்டப்பட்டவராக, அவமரியாதை, அல்லது தவறாக தீர்ப்பளிக்கப்பட்டவராக உங்களில் யாராவது உணர்வது என்னை ஆழமாகத் துக்கப்படுத்துகிறது. அத்தகைய குற்றங்களுக்கு தேவனின் ராஜ்ஜியத்தில் இடமில்லை.

மாறாக, தொகுதியிலும், பிணைய ஆலோசனைக் குழுவிலும் பெண்களின் பங்கேற்பை ஆவலுடன் நாடுகிற ஆசாரியத்துவத் தலைவர்களைப்பற்றி நான் அறியும்போது அது எனக்கு சிலிர்ப்பூட்டுகிறது. அவருடைய மிக முக்கியமான ஆசாரியத்துவ பொறுப்பு அவருடைய மனைவியை பராமரிப்பதென்பதை காட்டுகிற ஒவ்வொரு கணவன்மாராலும் நான் உணர்த்தப்படுகிறேன்.4 வெளிப்படுத்தலைப் பெற தனது மனைவியின் தகுதியை ஆழமாக மதிக்கிற, அவர்களுடைய திருமணத்தில் ஒரு சமபங்குதாரராக அவளைப் பொக்கிஷப்படுத்துகிற மனிதனை நான் புகழுகிறேன்.

ஒரு நீதியுள்ள, நாடுகிற, தரிப்பிக்கப்பட்ட பிற்காலப் பரிசுத்தவான்களான பெண்களின் கெம்பீரத்தையும் வல்லமையையும் ஒரு மனிதன் புரிந்துகொள்ளும்போது அவள் அறையில் நுழையும்போது அவன் எழுந்து நிற்கிறதைப்போல உணருகிறதில் எதாவது ஆச்சரியமிருக்கிறதா?

காலத்தின் தொடக்கத்திலிருந்து, தவறிலிருந்து சரியானதைக் கண்டுபிடிக்கும் திறமையான ஒரு தனித்துவமான ஒழுக்க திசைகாட்டியுடன் பெண்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். உடன்படிக்கையைச் செய்து அதைக் கைக்கொள்ளுபவர்களுக்கு அந்த வரம் மேம்படுத்தப்படுகிறது. தேவனுடைய கற்பனைகளை வேண்டுமென்றே புறக்கணிப்பவர்களில் அது மங்குகிறது.

அவர்களுக்கான தேவனுடைய தேவை மற்றும் சரியானதற்கும் தவறானவற்றிற்குமிடையில் பகுத்தறிவதிலிருந்தும் எந்த வழியிலும் மனிதர்களை நான் விடவில்லை என்பதை துரிதப்படுத்துகிறேன். ஆனால் எனக்கன்பான சகோதரிகளே, தவறிலிருந்து சத்தியத்தை பகுத்தறியவும், அறநெறியின் சமுதாய காவலர்களைாயிருக்க உங்கள் திறனும் இந்த பிற்காலங்களில் மிக முக்கியமானவை. அதைப்போன்று செய்ய மற்றவர்களுக்குப் போதிக்க நாங்கள் உங்களைச் சார்ந்திருக்கிறோம். இதைப்பற்றி நான் மிகத்தெளிவாகக் கூறுகிறேன். இந்த உலகம் அதன் பெண்களின் ஒழுக்க நேர்மையை இழக்கும்போது, இந்த உலகம் ஒருபோதும் குணமடையாது.

பிற்காலப் பரிசுத்தவான்களாக நாம் உலகத்தைச் சார்ந்தவர்களில்லை, நாம் உடன்படிக்கை இஸ்ரவேலைச் சார்ந்தவர்கள். கர்த்தருடைய இரண்டாம் வருகைக்காக ஜனத்தை ஆயத்தப்படுத்த நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

பெண்களுக்கும் ஆசாரியத்துவத்திற்கும் மரியாதையுடன் ஏராளமான கூடுதல் குறிப்புகளுடன் இப்போது நான் தெளிவுபடுத்துகிறேன். உங்கள் ஆயர் அல்லது பிணையத் தலைவர்களைப் போன்று ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற ஒருவரின் வழிநடத்துதலின் கீழ் ஒரு அழைப்பை நீங்கள் தெரிந்தெடுக்கப்படும்போது, அந்த அழைப்பில் செயல்பட நீங்கள் ஆசாரியத்துவ அதிகாரம் கொடுக்கப்படுகிறீர்கள்.

அதைப்போன்றே, பரிசுத்த ஆலயத்தில் நீங்கள் பங்கேற்கிற ஒவ்வொரு முறையும் ஆசாரியத்துவ நியமங்களை நடத்தவும் கடமையாற்றவும் உங்களுக்கு அதிகாரமளிக்கப்படுகிறது. அதைச் செய்ய உங்களுடைய ஆலய தரிப்பித்தல் உங்களை ஆயத்தப்படுத்துகிறது.

நீங்கள் தரிப்பிக்கப்பட்டுள்ளீர்கள் ஆனால் ஆசாரியத்துவத்தை தரித்திருக்கிற ஒருவரை திருமணம் செய்துள்ளீர்கள் என்றால், ஒருவர் உங்களிடம், “உங்கள் வீட்டில் ஆசாரியத்துவமில்லாததால் என்னை மன்னித்துக்கொள்” என சொன்னால், அந்த வாசகம் தவறானது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். ஆசாரியத்துவத்தைத் தரித்தவர் உங்கள் வீட்டில் இல்லாமலிருக்கலாம், ஆனால் அவருடைய ஆலயத்தில் தேவனுடன் நீங்கள் பரிசுத்த உடன்படிக்கைகளைப் பெற்றீர்கள், மற்றும் செய்திருக்கிறீர்கள். அந்த உடன்படிக்கைகளிலிருந்து உங்கள்மேல் அவருடைய ஆசாரியத்துவ வல்லமையின் ஒரு தரிப்பித்தல் வழிகிறது. உங்கள் கணவர் மரிப்பதாயிருந்தால்நீங்கள் உங்கள் வீட்டில் தலைமை தாங்குவீர்கள்.

நீதியுள்ள, தரிப்பிக்கப்பட்ட பிற்காலப் பரிசுத்தவான் பெண்ணாக தேவனிடமிருந்து வல்லமையுடனும் அதிகாரத்துடனும் நீங்கள் பேசுகிறீர்கள், போதிக்கிறீர்கள். அறிவுரையாலோ, அல்லது மனமாற்றத்தினாலோ உங்கள் குரல் கிறிஸ்துவின் கோட்பாட்டைப் போதிக்க நாங்கள் விரும்புகிறோம். குடும்பத்தில், தொகுதியில், பிணைய ஆலோசனைக் குழுக்களில் உங்கள் உள்ளீடு எங்களுக்குத் தேவை. உங்களுடைய பங்களிப்பு ஒருபோதும் அலங்காரமாயிராமல் அத்தியாவசியமாயிருக்கிறது.

எனக்கன்பான சகோதரிகளே, நீங்கள் மற்றவர்களுக்கு சேவை செய்யும்போது உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். உங்களுடைய ஜெபங்கள், உபவாசம், வேதப்படிப்புக்கான நேரம், ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப் பணியின் சேவை, உங்களுக்காக பரலோகங்களைத் திறக்கும்.

ஆசாரியத்துவத்தின் வல்லமையைப்பற்றி நீங்கள் காணக்கூடிய சத்தியங்கள்அனைத்தையும் ஜெபத்துடன் படிக்க நான் உங்களை மன்றாடுகிறேன். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84, மற்றும் 107 பாகங்களிருந்து நீங்கள் ஆரம்பிக்கலாம். அந்த பாகங்கள் பிற பத்திகளுக்கு உங்களை நடத்தும். வேதங்களும், தற்கால தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள், வெளிப்படுத்துபவர்களின் போதனைகளும் இந்த சத்தியங்களால் நிறைந்திருக்கிறது. உங்களுடைய புரிந்துகொள்ளுதல் அதிகரிக்கும்போது, கர்த்தரிடத்திலும் அவருடைய ஆசாரியத்துவ வல்லமையிலும் நீங்கள் விசுவாசத்தை பயிற்சி செய்யும்போது, உங்களுக்குக் கிடைக்ககூடியதாய் கர்த்தர் செய்திருக்கிற இந்த ஆவிக்குரிய பொக்கிஷத்திற்கு நெருங்கிவர உங்களுடைய திறமை அதிகரிக்கும். நீங்கள் அப்படிச் செய்யும்போது ஒற்றுமையான, கர்த்தருடைய ஆலயத்தில் முத்திரிக்கப்பட்ட நித்திய குடும்பங்களை உருவாக்க உதவமுடிகிறவர்களாகவும் நமது பரலோக பிதாவிடத்திலும் இயேசு கிறிஸ்துவிடத்திலும் முழுஅன்பை வைக்கிறவர்களாகவும் நீங்களே உங்களை சிறப்பானவர்களாகக் காண்பீர்கள்.

ஒருவருக்கொருவர் ஊழியம் செய்தலின் நமது அனைத்து முயற்சிகளும் சுவிசேஷத்தை அறிவிக்கிறது, பரிசுத்தவான்களை பூரணப்படுத்துகிறது, பரிசுத்த ஆலயத்தில் கூடியிருக்கிற மரித்தவர்களின் மீட்பை வழங்குகிறது. இப்போது நமக்கு 166 ஆலயங்களிருக்கின்றன,இன்னும் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன.

நீங்கள் அறிந்தபடியே, சால்ட் லேக் ஆலயம், ஆலய சதுக்கம், சபை அலுவலக கட்டிடத்திற்கருகில் இருக்கிற மையம், இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்போகிற ஒரு திட்டத்தில் புதுப்பிக்கப்படும். இந்த தலைமுறைகளில் நம்மை இது ஆசீர்வதித்ததைப்போல, வருங்கால தலைமுறைகளை உணர்த்த இந்த பரிசுத்த ஆலயம் பாதுகாக்கப்பட்டு ஆயத்தப்படுத்தப்பட வேண்டும்.

சபை வளரும்போது, நித்திய ஜீவனான அனைத்து ஆசீர்வாதங்களிலும் மிகப்பெரியதற்கு அதிக குடும்பங்கள் செல்வதற்காக அதிக ஆலயங்கள் கட்டப்படும்5 சகோதர சகோதரிகளே, சபையில் ஆலயத்தை நாம் ஒரே மிகவும் பரிசுத்த கட்டிடமாக கருதுகிறோம். புதிய ஆலயத்தைக் கட்டுவதற்கு திட்டங்கள் அறிவிக்கப்படும் போதெல்லாம், அது நமது வரலாற்றில் ஒரு முக்கியமான பங்காக மாறுகிறது. இன்றிரவு இங்கே நாம் கலந்துரையாடியதைப்போல, உங்களுடைய மிகஉயர்ந்த ஆவிக்குரிய பொக்கிஷங்களை நீங்கள் பெறப்போகிற ஆலயமான, ஆலயப்பணிக்கு சகோதரிகளான நீங்கள் முக்கியமானவர்கள்.

எட்டு புதிய ஆலயங்களைக் கட்டும் திட்டங்களை நான் இப்போது அறிவிக்கும்போது, தயவுசெய்து கவனமாகவும், பயபக்தியுடனும் கேளுங்கள். உங்களுக்கு உகந்ததாக இருக்கிற ஒரு இடம் அறிவிக்கப்பட்டால், உங்கள் இருதயங்களில் நன்றியுணர்வுடன் உங்கள் தலைகளைத் தாழ்த்த மட்டும் நான் ஆலோசனையளிக்கிறேன். பின்வரும் இடங்களில் ஆலயங்கள் கட்ட திட்டங்களை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்: ப்ரீடவுன், சியாரா லியோன்; ஓரம், யூட்டா; போர்ட் மோர்ஸ்பி, பப்புவா நியூகினியா; பென்டன்வில், ஆர்க்கன்சாஸ்; பக்கோலோட், பிலிப்பைன்ஸ்; மெக்கல்லன், டெக்ஸாஸ்; கோபன் கௌட்டமாலா; மற்றும் டெய்லர்ஸ்வில், யூட்டா. உங்களுக்கு நன்றி, அன்பான சகோதரிகளே. இந்த திட்டங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டதையும், உங்கள் பயபக்தியான பதிலையும் நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.

முடிவாக, நீங்கள் தரிப்பிக்கப்பட்ட ஆசாரியத்துவ வல்லமையை நீங்கள் புரிந்துகொள்ளும்படியாக, கர்த்தரிடத்திலும் அவருடைய வல்லமையிலும் உங்களுடைய விசுவாசத்தை பயிற்சி செய்வதால் அந்த வல்லமையை பெரிதாக்கும்படியாக, உங்கள்மேல் ஒரு ஆசீர்வாதத்தை விட்டுப்போக நான் விரும்புகிறேன்.

அன்பான சகோதரிகளே, ஆழமான மரியாதையுடனும் நன்றியுணர்வுடனும் உங்கள்மீதுள்ள அன்பை நான் தெரியப்படுத்துகிறேன். தேவன் ஜீவிக்கிறாரென நான் தாழ்மையுடன் அறிவிக்கிறேன்! இயேசுவே கிறிஸ்து இது அவரது சபை. அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.