வேதங்கள்
ஆபிரகாம் 3


அதிகாரம் 3

ஊரீம் மற்றும் தும்மீம் மூலமாக சூரியன் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களைப்பற்றி ஆபிரகாம் அறிந்துகொள்ளுகிறான் – ஆவிகளின் நித்திய தன்மையைப்பற்றி அவனுக்கு கர்த்தர் வெளிப்படுத்துகிறார் – பூலோக ஜீவியத்திற்கு முந்தியதையும், குறிக்கப்பட்டிருத்தலையும், சிருஷ்டிப்பையும், ஒரு மீட்பரைத் தெரிந்துகொள்ளுதலையும், மனுஷனின் பூலோக ஜீவியத்தைப்பற்றியும் அவன் அறிந்துகொள்ளுகிறான்.

1 கல்தேயரின் ஊரில், என்னுடைய தேவனாகிய கர்த்தர் எனக்குக் கொடுத்த ஊரீம் மற்றும் தும்மீம், ஆபிரகாமாகிய என்னிடத்திலிருந்தது;

2 நான் நட்சத்திரங்களைக் கண்டேன், அவைகள் மிக அதிகமாயிருந்தன, அவைகளில் ஒன்று தேவனின் சிங்காசனத்திற்கு அருகாமையிலிருந்தது; அதற்கருகிலிருந்த அநேக மகத்தானவைகளும் அங்கிருந்தன;

3 கர்த்தர் எனக்குச் சொன்னார், இவைகள் ஆளுகை செய்பவைகள்; இது எனக்கருகிலிருப்பதால் பிரகாசமானதின் பேர் கோலோப், ஏனெனில் நானே உன்னுடைய தேவனாகிய கர்த்தர், நீ நின்றுகொண்டிருக்கிற அதே ஒழுங்கிற்கு சொந்தமான அவைகள் எல்லாவற்றையும் ஆளுகை செய்ய இதை நான் வைத்தேன்.

4 அதிலுள்ள சுழற்சிகளில் அதன் சமயங்களின் காலங்கள் மற்றும் பருவங்களின்படி கோலோப் கர்த்தரின் முறைமையின்படியே இருந்ததாகவும், அவருடைய முறைமையின்படி கணக்கிடுவதில் கர்த்தருக்கு ஒரு சுழற்சி ஒரு நாளென்றும், நீ நின்றுகொண்டிருக்கிற இடத்தில் நியமிக்கப்பட்டிருக்கிறபடி அது ஒரு ஆயிரம் வருஷங்களாக இருக்கிறதென்றும் ஊரீம் மற்றும் தும்மீம் மூலமாக கர்த்தர் எனக்குச் சொன்னார். கோலோப்பின் கணக்கிடுதலின்படி இது கர்த்தரின் நேரக் கணக்கிடுதலாகும்.

5 கர்த்தர் எனக்குச் சொன்னார், பகலையும் இரவையும் ஆளக்கூடிய சுடரைவிட சிறிய சுடரான சிறிய சுடருடைய கிரகம் கணக்கிடுவதற்காய் நீ நின்றுகொண்டிருக்கிறதைவிட மேலாக அல்லது பெரியதாயிருக்கிறது, ஏனெனில் அது ஒழுங்கின்படி மிக மெதுவாக நகர்ந்தது; இது ஒழுங்கின்படி இருக்கிறது, ஏனெனில் நீ நின்றுகொண்டிருக்கிற பூமிக்குமேலே நின்றுகொண்டிருக்கிறது, ஆகவே அதன் நேரத்தைக் கணக்கிடுதல் நாட்கள், மாதங்கள் மற்றும் வருஷங்களின் இலக்கங்களைவிட அதிகமானதாயில்லை.

6 கர்த்தர் எனக்குச் சொன்னார், இப்பொழுது ஆபிரகாமே, இந்த இரண்டு உண்மைகளிருக்கின்றன, இதோ, உன்னுடைய கண்கள் அதைக் காண்கிறது; நேரங்களைக் கணக்கிடுதலை, குறித்த நேரம், ஆம், நீ நின்றுகொண்டிருக்கிற பூமியின் குறித்த நேரத்தை, பகலை ஆளக் குறித்த பெரிய சுடரின் குறித்த நேரத்தையும் இரவை ஆளக் குறித்த சிறிய சுடரின் குறித்த நேரத்தையும் அறிந்துகொள்ள அது உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

7 இப்பொழுது நீ நின்றுகொண்டிருக்கிற பூமியின் நேரத்தைக் கணக்கிடுதலைவிட சிறிய சுடரின் குறித்த நேரம் அதன் கணக்கிடுதலில் நீண்ட நேரமாயிருக்கிறது.

8 இந்த இரண்டு உண்மைகளிருக்கும்போது அவைகளுக்கு மேலாக மற்றொரு உண்மையுமிருக்கிறது, அதாவது இன்னமும் அதன் கணக்கிடுதலில் நீண்ட நேரமாயிருக்கிற மற்றொரு கிரகமுமிருக்கும்;

9 இவ்விதமாக, கர்த்தரின் நேரத்தைக் கணக்கிடுதலின் முறைமையின்படியிருக்கிற கோலோப்பான, தேவனின் சிங்காசனத்திற்கு சமீபமாக அமைக்கப்பட்டிருக்கிற கோலோப்பான நீ நின்று கொண்டிருக்கும் அதே ஒழுங்கிற்கு சொந்தமான சகல கிரகங்களையும் ஆள, கோலோப்புக்கு சமீபமாக நீ வரும்வரை நேரத்தை ஒரு கிரகத்திற்கு மேலாக கணக்கிட மற்றொன்று இருக்கும்.

10 தேவனின் சிங்காசனத்திற்கு அருகில் நீ வரும்வரை வெளிச்சம் கொடுக்க அமைக்கப்பட்டிருக்கிற சகல நட்சத்திரங்களின் குறித்த நேரத்தையும் நீ அறிந்துகொள்ள உனக்கு அது கொடுக்கப்பட்டிருக்கிறது.

11 இவ்விதமாக, ஒரு மனுஷன் மற்றொருவருடன் பேசுவதைப்போன்று ஆபிரகாமாகிய நான், முகமுகமாய் கர்த்தரோடு பேசினேன்; அவருடைய கைகள் செய்த கிரியைகளை அவர் எனக்குக் கூறினார்;

12 அவர் எனக்குச் சொன்னார்: என் மகனே, என் மகனே, (அவருடைய கை நீட்டப்பட்டிருந்தது), இதோ, இவைகள் எல்லாவற்றையும் நான் உனக்குக் காட்டுவேன். அவருடைய கையை என் கண்கள்மீது வைத்தார், அவருடைய கைகளால் செய்யப்பட்ட அநேகமாயிருந்த அந்த காரியங்களை நான் கண்டேன்; என்னுடைய கண்களுக்கு முன்பாக அவைகள் பலுகிப்பெருகின, அதன் எல்லையை என்னால் காணமுடியவில்லை.

13 அவர் எனக்குச் சொன்னார்: சூரியனாயிருக்கும் இதுவே ஷினேஹா. அவர் என்னிடம் சொன்னார்: நட்சத்திரமே கோகோப். அவர் எனக்குச் சொன்னார்: சந்திரனே ஒலியா. அவர் என்னிடம் சொன்னார்: நட்சத்திரங்களை அல்லது ஆகாயவிரிவிலே இருந்த சகல பெரிய சுடர்களையும் குறிக்கிற கோக்காபீம்.

14 இந்த வார்த்தைகளை கர்த்தர் என்னிடம் பேசியபோது அது இரவு நேரமாயிருந்தது, நான் உன்னையும் உனக்குப்பின் உன் சந்ததியையும் இவைகளைப்போல பெருகப்பண்ணுவேன்; கடற்கரை மணலை உன்னால் எண்ண முடியாதிருப்பதைப்போலவே உன்னுடைய சந்ததியுமிருக்கும்.

15 கர்த்தர் எனக்குச் சொன்னார், ஆபிரகாமே, இந்த சகல வார்த்தைகளையும் நீ அறிவிக்கத்தக்கதாக, நீ எகிப்துக்குப் போவதற்கு முன்பே இந்தக் காரியங்களை நான் உனக்குக் காட்டுகிறேன்.

16 இரண்டு காரியங்களிருந்தால் ஒன்றுக்கு மேலே ஒன்றிருக்கும், அவைகளுக்கு மேலே பெரிய காரியங்களிருக்கும்; ஆகவே நீ பார்த்த கோலோப்பே சகல கோக்காபீமிலும் மிகப்பெரிதாயிருக்கிறது, ஏனெனில் இது எனக்கு அருகாமையிலிருக்கிறது.

17 இப்பொழுது ஒன்றுக்கு மேலே ஒன்றாக இரண்டு காரியங்களிருந்தால் சந்திரன் பூமிக்கு மேலாக இருக்கும், பின்னர் ஒரு கிரகம் அல்லது ஒரு நட்சத்திரம் அதற்கு மேலாக இருக்கும்; அவர் செய்யப் போவதைத்தவிர வேறெதையும் உன்னுடைய தேவனாகிய கர்த்தர் அவருடைய இருதயத்தில் எடுத்துக்கொள்ளமாட்டார்.

18 ஆனாலும் அவர் பெரிய நட்சத்திரங்களை உண்டுபண்ணினார்; அப்படியே அங்கே இரண்டு ஆவிகளிருந்தால் ஒன்று மற்றொன்றைவிட அதிக புத்திசாலியாயிருக்கும், இருந்தும் இந்த இரண்டு ஆவிகள் ஒன்று மற்றொன்றைவிட அதிக புத்திசாலியாயிருந்தும் அவைகளுக்கு ஆரம்பமில்லை; அவைகள் முன்பே இருந்தன, அவைகளுக்கு முடிவில்லை, பின்பும் அவைகளிருக்கும், ஏனெனில் அவைகள் நோலாம் அல்லது நித்தியமானவை.

19 கர்த்தர் எனக்குச் சொன்னார், ஒன்று மற்றொன்றைவிட அதிக புத்திசாலியாயிருக்கிற இரண்டு ஆவிகளிருக்கின்றன என்ற இரண்டு உண்மைகளிருக்கின்றன; அவைகளைவிட அதிக புத்திசாலியான மற்றொன்று இருக்கும்; உன்னுடைய தேவனாகிய கர்த்தர் நானே, அவைகள் எல்லாவற்றையும்விட நானே அதிக புத்திசாலி.

20 எல்கெனாவின் ஆசாரியனின் கைகளிலிருந்து உன்னை விடுவிக்க தன்னுடைய தூதனை உன்னுடைய தேவனாகிய கர்த்தர் அனுப்பினார்.

21 அவர்கள் யாவருக்கும் நடுவிலே நான் வாசம் செய்கிறேன்; ஆகவே அவைகள் எல்லாவற்றிலும் என்னுடைய ஞானம் அதிகமாயிருக்கிற என்னுடைய கைகள் செய்த கிரியைகளை நான் உனக்கு அறிவிக்க நான் இப்பொழுது உன்னிடத்தில் வந்திருக்கிறேன், ஏனெனில் ஆரம்பத்திலிருந்து உன் கண்கள் காண்கிற சகல புத்திக்கும் மேலான, சகல ஞானத்தோடும் புத்தியோடும் மேலே வானத்திலும் கீழே பூமியிலும் நான் ஆளுகைசெய்கிறேன்; நீ கண்ட சகல புத்திக்கும் நடுவிலே ஆரம்பத்திலே நான் இறங்கிவந்தேன்.

22 இப்பொழுது உலகத்தோற்றத்திற்கு முன்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட புத்திகளை ஆபிரகாமாகிய என்னிடம் காட்டினார்; இவைகள் எல்லாவற்றிற்கும் மத்தியிலே பிரபுக்களும் அதிகாரிகளுமிருந்தனர்;

23 இந்த ஆத்துமாக்கள் நல்லவையென தேவன் கண்டார், அவைகளுக்கு மத்தியிலே அவர் நின்றுகொண்டிருந்து அவர் சொன்னார், இவர்களை என்னுடைய அதிபதிகளாக்குவேன்; ஏனெனில் ஆவிகளாயிருந்த அவைகளுக்கு மத்தியிலே அவர் நின்றுகொண்டிருந்தார், அவைகள் நல்லவையென அவர் கண்டார்; அவர் என்னிடம் சொன்னார், ஆபிரகாமே நீ அவர்களில் ஒருவன்; நீ பிறப்பதற்கு முன்பே நீ தெரிந்துகொள்ளப்பட்டாய்.

24 அவர்களுக்கு மத்தியிலே தேவனைப்போல ஒருவர் நின்றுகொண்டிருந்தார், அவரோடிருந்தவர்களுக்கு அவர் சொன்னார்: நாம் இறங்கிப்போவோம், அங்கே இடமிருக்கிறது, இந்தப் பொருட்களை நாம் எடுத்துப்போவோம், இவைகள் வாசம்செய்ய ஒரு பூமியை நாம் உண்டாக்குவோம்;

25 அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு கட்டளையிட்ட சகல காரியங்களையும் அவர்கள் செய்வார்களாவென அவர்களை நாம் சோதித்துப் பார்ப்போம்;

26 அவர்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொண்டவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்; தங்களுடைய ஆதி மேன்மையை காத்துக் கொள்ளாதவர்கள் தங்களுடைய ஆதி மேன்மையை காத்துக் கொண்டவர்களின் அதே ராஜ்யத்தில் மகிமையைக் கொண்டிருக்க மாட்டார்கள்; தங்களுடைய பூலோக ஜீவியத்தைக் காத்துக் கொள்பவர்கள் என்றென்றைக்குமாக தங்களுடைய தலைகளின்மேல் மகிமையை சேர்த்துக்கொள்வார்கள்.

27 கர்த்தர் சொன்னார், நான் யாரை அனுப்புவேன்? மனுஷகுமாரனைப் போலிருந்த ஒருவர் சொன்னார், இதோ இருக்கிறேன், என்னை அனுப்பும். மற்றொருவன் பதில் கொடுத்து சொன்னான், இதோ இருக்கிறேன், என்னை அனுப்பும். அதற்கு கர்த்தர் முதலாமவரை நான் அனுப்புவேன் என்றார்.

28 இரண்டாமவன் கோபம் கொண்டு அவனுடைய ஆதி மேன்மையை காத்துக் கொள்ளவில்லை; அந்த நாளில் அநேகர் அவனுக்குப் பின்சென்றார்கள்.