வேதங்கள்
நகல் 1


ஆபிரகாம் புஸ்தகத்திலிருந்து ஒரு பிரதி

எண் 1

படம்
நகல்1

விளக்கம்

உருவம். 1. கர்த்தரின் தூதன்.

உருவம். 2. ஆபிரகாம் ஒரு பலிபீடத்தின்மேல் கட்டப்பட்டான்.

உருவம். 3. எல்கெனாவின் விக்கிரகாராதனை செய்யும் ஆசாரியர்கள் ஆபிரகாமை பலிகொடுக்க முயற்சித்துக்கொண்டிருத்தல்.

உருவம். 4. எல்கெனா, லிப்னா, மஹ்மேக்ரா, கோராஷ் மற்றும் பார்வோனின் கடவுள்களின் முன்னால் விக்கிரகாராதனை செய்யும் ஆசாரியர்கள் பலிகொடுக்கும் பலிபீடம் நின்றுகொண்டிருக்கிறது.

உருவம். 5. எல்கெனாவின் விக்கிரகக் கடவுள்.

உருவம். 6. லிப்னாவின் விக்கிரகக் கடவுள்.

உருவம். 7. மஹ்மேக்ராவின் விக்கிரகக் கடவுள்.

உருவம். 8. கோராஷின் விக்கிரகக் கடவுள்.

உருவம். 9. பார்வோனின் விக்கிரகக் கடவுள்.

உருவம். 10. எகிப்தில் ஆபிரகாம்.

உருவம். 11. எகிப்தியர்களால் புரிந்துகொள்ளப்பட்டபடி பரலோகத்தின் தூண்களை பிரதிபலிக்க வடிவமைக்கப்பட்டது.

உருவம். 12. விரிவைக் குறிக்கிற ராக்கீயாங், அல்லது நமது தலைகள்மீதான ஆகாயவிரிவு; ஆனால் இந்த விஷயத்தில் இந்த பொருளுக்கு சம்பந்தப்பட்ட, எபிரேயு வார்த்தையான ஷாமஹயீமுக்கு பதிலளிக்க உயர்வாக, அல்லது வானங்களாயிருக்க ஷாமைக் குறிக்க எகிப்தியர்கள் அதைக் குறிப்பிட்டார்கள்.