வேதங்கள்
மோசே 8


அதிகாரம் 8

(பிப்ருவரி 1831)

மெத்தூசலா தீர்க்கதரிசனமுரைக்கிறான் – நோவாவும் அவனுடைய குமாரர்களும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார்கள் – மிகுந்த துன்மார்க்கம் நிலவுகிறது – மனந்திரும்புதலுக்கான அழைப்பு செவிகொடுக்கப்படவில்லை – வெள்ளத்தால் சகல மாம்சங்களையும் அழிக்க தேவன் கட்டளையிடுகிறார்.

1 ஏனோக்குடைய நாளெல்லாம் நானூற்று முப்பது வருஷம்.

2 ஏனோக்கிடம் அவர் செய்த கர்த்தருடைய உடன்படிக்கைகள் நிறைவேறத்தக்கதாக ஏனோக்கின் குமாரனான மெத்தூசலா எடுத்துக் கொள்ளப்படவில்லை; ஏனெனில் நோவா அவனுடைய சந்ததியாயிருக்கும்படியாக அவர் உண்மையிலேயே ஏனோக்குடன் உடன்படிக்கை செய்திருந்தார்.

3 அவனுடைய சந்ததியிலிருந்து பூமியின் சகல ராஜ்யங்களும் எழும்புமென (நோவாவின் மூலமாக) மெத்தூசலா தீர்க்கதரிசனமுரைத்தான், அவன் தனக்குத்தானே மகிமையை எடுத்துக்கொண்டான்.

4 தேசத்திற்குள் ஒரு பெரும் பஞ்சம் வந்து, ஒரு கொடிய சாபத்தால் கர்த்தர் பூமியை சபித்தார், அங்கே அநேக குடிகள் மரித்துப்போயினர்.

5 மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றான்.

6 மெத்தூசலா லாமேக்கைப் பெற்ற பின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

7 மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம், அவன் மரித்தான்.

8 லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது ஒரு குமாரனைப் பெற்று,

9 கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும் இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.

10 லாமேக்கு நோவாவைப் பெற்ற பின் ஐநூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

11 லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருஷம், அவன் மரித்தான்.

12 நோவா நானூற்று ஐம்பது வயதானபோது யாப்பேத்தைப் பெற்றான்; நாற்பத்திரண்டு வருஷங்களுக்குப் பின் யாப்பேத்தின் தாயான அவளிடம் சேமைப் பெற்றான், அவனுக்கு ஐந்நூறு வயதானபோது அவன் காமைப் பெற்றான்.

13 நோவாவும் அவனுடைய குமாரர்களும் கர்த்தருக்கு செவி கொடுத்து, உற்றுக்கேட்டு அவர்கள் தேவபுத்திரர்களென அழைக்கப்பட்டார்கள்.

14 இந்த மனுஷர்கள் பூமியின்மேலே பலுகிப்பெருகத் துவங்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது, அந்த குமாரத்திகளை மனுபுத்திரர்கள் அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்கு மனைவிகளைத் தெரிந்துகொண்டார்கள்.

15 கர்த்தர் நோவாவிடம் சொன்னார்: உன்னுடைய குமாரர்களின் குமாரத்திகள் தங்களையே விற்றுப்போட்டார்கள், ஏனெனில் இதோ, மனுபுத்திரர்களுக்கு எதிராக என்னுடைய கோபம் மூண்டது, ஏனெனில் என்னுடைய சத்தத்திற்கு அவர்கள் செவிகொடுக்கமாட்டார்கள்.

16 நோவா தீர்க்கதரிசனமுரைத்து ஆதியிலே இருந்ததைப்போலவே தேவனின் காரியங்களைப் போதித்தான்.

17 கர்த்தர் நோவாவிடம் சொன்னார்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; ஏனெனில் சகல மாம்சமும் மரிக்குமென அவன் அறிந்து கொள்வான்; அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம்; மனுஷர்கள் மனந்திரும்பாவிடில் நான் அவர்கள் மேல் வெள்ளங்களை அனுப்புவேன்.

18 அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள், நோவாவின் ஜீவனை எடுத்துக்கொள்ள அவர்கள் வகைதேடினார்கள்; ஆனால் கர்த்தர் நோவாவுடனிருந்தார், கர்த்தருடைய வல்லமை அவனுடனிருந்தது.

19 அவருடைய சொந்த முறைமையின்படி கர்த்தர் நோவாவை நியமனம் செய்து, அது ஏனோக்குக்குக் கொடுக்கப்பட்டதைப்போல மனுபுத்திரர்களுக்கு அவருடைய சுவிசேஷத்தை அறிவிக்க அவன் போகவேண்டுமென அவனுக்குக் கட்டளையிட்டார்.

20 அவர்கள் மனந்திரும்பவேண்டுமென மனுபுத்திரர்களை நோவா அழைத்தான்; ஆனால் அவனுடைய வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை;

21 மேலும், அவர்கள் அவன் சொன்னதைக் கேட்ட பின்பு அவனுக்கு முன்பாக வந்து, இதோ, நாங்கள் தேவபுத்திரர்கள், நாங்கள் மனுஷ குமாரத்திகளை எங்களுக்கென்று தெரிந்து கொள்ளவில்லையா, நாங்கள் புசித்தும், குடித்தும் பெண் எடுத்தும் கொடுத்தும் இருக்கவில்லையா, எங்களுக்கு எங்கள் மனைவிமார்கள் பூர்வகால மனுஷர்களையும், பேர் பெற்ற மனுஷர்களையும் போன்ற அதே பராக்கிரமசாலிகளுமான பிள்ளைகளைப் பெற்றார்கள். நோவாவின் வார்த்தைகளை அவர்கள் கேட்கவில்லை.

22 மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும் ஒவ்வொரு மனுஷனும் நித்தமும் பொல்லாததாய் இருக்கிற அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றத்தில் உயர்த்தப்பட்டான் என்றும் கர்த்தர் கண்டார்.

23 செவிகொடுங்கள், என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.

24 நம்முடைய பிதாக்களைப்போல, விசுவாசித்து உங்களுடைய பாவங்களுக்காக மனந்திரும்பி தேவ குமாரனான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுங்கள், சகல காரியங்களும் உங்களுக்கு வெளிப்படுத்தப்படும்படியாக பரிசுத்த ஆவியை நீங்கள் பெறுவீர்கள்; நீங்கள் இதைச் செய்யாவிட்டால் உங்கள்மேல் வெள்ளங்கள் வரும் எனச் சொல்லி நோவா ஜனங்களுக்குப் போதித்தான்; ஆயினும் அவர்கள் செவிகொடுக்கவில்லை.

25 அது நோவாவை மனஸ்தாபப்படவைத்து, கர்த்தர் பூமியின்மேல் மனுஷனை உண்டாக்கியதற்காக அவனுடைய இருதயம் வேதனையடைந்து அது அவனுடைய இருதயத்தைத் துக்கப்படுத்தியது.

26 அப்பொழுது கர்த்தர், நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம் பண்ணுவேன்; நான் அவர்களை சிருஷ்டித்து, நான் அவர்களை உண்டாக்கினது நோவாவுக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னை நோக்கி கெஞ்சினான்; ஏனெனில் அவர்கள் அவனுடைய பிராணனை வாங்க வகைதேடினார்கள் என்றார்.

27 அப்படியாக நோவாவுக்கு கர்த்தருடைய கண்களில் தயவு கிடைத்தது; ஏனெனில் நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானாயிருந்தான்; அவன் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான், அவனுடைய மூன்று குமாரர்களான சேம், காம், யாப்பேத்தும்கூட அப்படியே செய்தார்கள்.

28 பூமியானது தேவன் முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது, பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.

29 தேவன் பூமியைப் பார்த்தார், இதோ, அது சீர்கெட்டதாயிருந்தது. மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

30 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி, மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது, அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது, நான் மாம்சமான யாவற்றையும் பூமியிலிருந்து அழித்துப் போடுவேன் என்றார்