2010–2019
இதுவே நித்திய ஜீவன்
ஏப்ரல் 2017


இதுவே நித்திய ஜீவன்

தேவன் உங்களை அறிகிறார், அவரை அறிய உங்களை அழைக்கிறார்.

இளைஞர்கள் மற்றும் இளம் வயது வந்தோர்—கர்த்தரின் சபையின் எதிர்காலத் தலைவர்களாகிய --எழுகின்ற தலைமுறையாகிய உங்களிடம்— நான் பேசுகிறேன். இன்று உலகிலுள்ள துன்மார்க்கம், கூச்சல், பயம், மற்றும் குழப்பங்களுடன், தேவனை அறிவதன் மகத்துவம் மற்றும் ஆசீர்வாதம் குறித்து தெளிவாக உங்களுடன் பேசுகிறேன்.

பரலோக பிதாவின் மகிழ்ச்சியின் திட்டத்தையும், அதில் உங்கள் இடத்தையும், விளக்கும் அநேக சத்தியங்களை, இயேசு கிறிஸ்து போதித்தார். தேவனின் பிள்ளையாக உங்கள் அடையாளத்தை புரிந்துகொள்ளவும், வாழ்க்கையில் உங்கள் நோக்கத்தை அறியவும் உதவக்கூடிய அவற்றில் இரண்டு மீது கவனம் செலுத்துவேன்.

முதலாவது: “ தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனும் கெட்டுப்போகாமல், நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” 1

இரண்டாவதாக: “ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” 2

இந்த சத்தியங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்— நீங்களும் நாமனைவரும் தேவனை அறிவது எப்படி என விவரிக்க நான் முயலும்போது--அவை ஏன் என கற்பிக்கின்றன.

ஜெபத்தின் மூலம் அவரை அறியுங்கள்

என் இளம் நண்பர்களே, ஜெபத்தின் மூலம் நாம் தேவனை அறியத் தொடங்கலாம்

ஏப்ரல்  7, 1829ல் 22 வயது ஆலிவர் கௌட்ரி 23 வயது ஜோசப் ஸ்மித்துக்கு எழுத்தராக தன் பிரயாசங்களைத் தொடங்கினார். அவர்கள் உங்களைப் போலவே இளைஞர்கள். மறுஸ்தாபிதம் குறித்தும், அதில் அவரது பணி குறித்தும் ஒரு உறுதியை ஆலிவர் தேவனிடம் கேட்டார் பதிலாக பின்வரும் வெளிப்படுத்தலை அவர் பெற்றார்:

“இதோ, நீ என்னிடம் விசாரித்தாய் என அறிந்திருக்கிறாய், நான் உன் மனதைத் தெளிவாக்கினேன்.   ...

“ஆம், நான் உனக்குச் சொல்லுகிறேன், உனது எண்ணங்களையும், இருதயத்தின் நோக்கங்களையும் அறிபவர் தேவனைத் தவிர வேறொருவருமில்லை என நீ அறிவாயாக.   ...

“...  மேலும் சாட்சியை நீ வாஞ்சித்தால், உன் இருதயத்தில் என்னை நோக்கி அழுத இரவுக்கு உனது மனதைக் கொண்டு போ.   ...

“நான் உன் மனதில் பேசவில்லையா... தேவனிடமிருந்து பெறுவதை விட என்ன சாட்சி நீ பெற முடியும்?’ 3

நீங்கள் விசுவாசத்தோடு ஜெபிக்கும்போதும், அவரது ஆவி உங்கள் ஆவியோடு பேசும்போதும், நாம் தேவனின் அன்பை உணர்கிறோம். சில சமயங்களில் எவ்வளவு தனிமையையும் அல்லது நிச்சயமற்றதையும் நீங்கள் உணர்ந்தாலும், இந்த உலகத்தில் நீங்கள் தனிமையிலில்லை. உங்களை தனிப்பட்ட விதமாக தேவன் அறிவார். நீங்கள் ஜெபிக்கும்போது, அவரை அறிவீர்கள்.

வேதப்படிப்பு மூலம் அவரை அறியுங்கள்

நீங்கள் வேதத்தைப் படிக்கும்போது நீங்கள் இரட்சகர் பற்றி கற்பது மட்டுமின்றி, உண்மையாகவே நீங்கள் இரட்சகரை அறிகிறீர்கள்.

ஏப்ரல் 1985ல் மூப்பர் புரூஸ்  ஆர். மெக்கான்கி அவர் மரிப்பதற்கு 13 நாட்களுக்கு முன் பேசினார். இந்த சாட்சியுடன் அவர் முடித்தார்:

“நான் அவரது சாட்சிகளில் ஒருவன், வருகிற ஒரு நாளில் அவரது கரங்களில் ஆணித்தழும்புகளை நான் உணர்வேன் மற்றும் அவரது பாதங்களை எனது கண்ணீரால் நனைப்பேன்.

“அவர் தேவனுடைய சர்வவல்ல குமாரன், அவரே நமது இரட்சகரும் மீட்பருமானவர், இரட்சிப்பு அவரது பாவநிவர்த்தி செய்த இரத்தத்தின் மூலம் வருகிறது, வேறு வழியிலல்ல என நான் இப்போது அறிவதை விட ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.” 4

அன்று மூப்பர் மெக்கான்கி பேசக்கேட்ட நாம், எப்படி உணர்ந்தோம் என்பதை மறக்கவில்லை. அவர் பேசத்தொடங்கியபோது, அவரது சாட்சி ஏன் வல்லமையானது என தெரிவித்தார்.

“அவை வேத வார்த்தைகள் என நீங்கள் நினைத்தாலும், இந்த அற்புதமான காரியங்கள் பற்றி பேசும்போது நான் என் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவேன்.   ...

“பிறரால் அவை முதலில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இப்போது அவை என்னுடையவை. ஏனெனில் முதன் முதலில் கர்த்தர் எனக்கு இப்போது வெளிப்படுத்தியது போல இருந்தாலும், அவை சத்தியமானவை என தேவனின் பரிசுத்த ஆவி சாட்சி கொடுத்திருக்கிறார். நான் அவ்வாறு அவரது குரலைக் கேட்டு அவரது வார்த்தையை அறிந்திருக்கிறேன்.”5

நீங்கள் வேதம் வாசித்து சிந்திக்கும்போது, நீங்களும் தேவனின் குரலைக் கேட்பீர்கள், அவரது வார்த்தைகளை அறிவீர்கள், அவரையும் அறிவீர்கள். தனிப்பட்ட விதமாக உங்களுக்கு அவரது நித்திய சத்தியங்களை தேவன் வெளிப்படுத்துவார். உங்கள் ஆத்துமாவிலிருந்து யாரைப்போல் தோன்றுகிறீர்களோ அல்லது தோன்றுவீர்களோ, இந்தக் கோட்பாடுகளும் கொள்கைகளும் அவரது பகுதியாகும்.

தனிப்பட்ட படிப்புடன், குடும்பத்துடன் வேதங்களைப் படிப்பதுவும் முக்கியமாகும்.

எங்கள் வீட்டில் எங்கள் பிள்ளைகள் ஆவியின் குரலை அடையாளம் காண வேண்டும் என நாங்கள் விரும்பினோம். குடும்பமாக ஒவ்வொரு நாளும் மார்மன் புஸ்தகம் படிக்கும்போது அது நடந்தது என நாங்கள் நம்புகிறோம். பரிசுத்த சத்தியங்கள் பற்றி நாங்கள் பேசியபோது எங்கள் சாட்சிகள் பலப்பட்டன.

வேதப்படிப்பு நம் ஒவ்வொருவருக்கும் பழக்கப்பட்ட கற்பித்தலைக் கொடுக்கிற ஆவிக்கு வழியாகிறது. ஒவ்வொரு நாளும் நீங்கள் வேதங்களைப் படிக்கும்போது, தனியாயும் உங்கள் குடும்பத்துடனும் ஆவியின் குரலை நீங்கள் அடையாளம் காணக் கற்றுக்கொண்டு, தேவனை அறிவீர்கள்.

அவரது சித்தத்தைச் செய்து அவரை அறியுங்கள்

நமது ஜெபம் மற்றும் வேதத்தை படிப்பதுடன், தேவனது சித்தத்தையும் நாம் செய்ய வேண்டும்.

இரட்சகர் நமது பரிபூரண உதாரணம். அவர் சொன்னார், “என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்.” 6

உயிர்த்தெழுந்த இரட்சகர் நெப்பியர்களிடம் தோன்றியபோது, அவர் சொன்னார், “இதோ, நானே இவ்வுலகின் ஒளியும் ஜீவனுமாயிருக்கிறேன், என் பிதா எனக்குக் கொடுத்த அந்த கசப்பான பிச்சிலிருந்து பானம் பண்ணியிருக்கிறேன். உலகினுடைய பாவங்களை என்மேல் எடுத்துக்கொண்டதினிமித்தம், பிதாவை மகிமைப்படுத்தியிருக்கிறேன். அப்படியாக ஆதியிலிருந்து சகல காரியங்களிலும் பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்பட்டிருக்கிறேன்.” 7

நமது உடன்படிக்கைகளைக் கனம்பண்ணி, கட்டளைகளைக் கைக்கொண்டு, தேவனுக்கும் நமது சக மனுஷருக்கும் சேவை செய்து நீங்களும் நானும் பிதாவின் சித்தத்தைச் செய்கிறோம்

என் மனைவி, ரோண்டாவும் நானும்—ஒருவேளை உங்களில் அநேகரைப் போல சாதாரண பெற்றோரையே பெற்றிருக்கிறோம். ஆனால் நான் எங்கள் பெற்றோரை நேசிப்பதற்கான ஒரு காரணம், தேவனை சேவிக்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் அவர்கள், அதையே செய்ய எங்களுக்குக் கற்பித்தனர்.

ரொண்டாவின் பெற்றோர் திருமணம் செய்த இரண்டு வருடங்களுக்குள், அவளது 23 வயது அப்பா முழுநேர ஊழியம் செய்ய அழைக்கப்பட்டார். அவர் தனது இளம் மனைவியையும் இரண்டு வயது மகளையும் விட்டுச் சென்றார். பின்னர் தங்கள் மகளை உறவினர்களிடம் விட்டு விட்டு அவரது ஊழியத்தின் கடைசி ஏழு மாதங்கள் ஊழியம் செய்ய அவரது மனைவியும் அழைக்கப்பட்டார்.

சில வருடங்களுக்குப் பின், நான்கு பிள்ளைகளுடன் அவளது அப்பா பல்கலைக் கழகத்துக்கு செல்லும்படிக்கு அவர்கள் மோண்டானாவின் மிஸ்ஸோலாவுக்குச் சென்றனர். எனினும் அவர்கள் சில மாதங்களே அங்கிருந்தனர், அப்போது தலைவர் ஸ்பென்சர்  டபிள்யூ. கிம்பலும் மூப்பர் மார்க் ஈ. பீட்டர்சனும் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த மிஸ்ஸோலா பிணையத்துக்கு முதல் தலைவராயிருக்க என் மாமனாருக்கு அழைப்பு விடுத்தனர். அவருக்கு 34 வயது மட்டுமே. அவரது சித்தத்தையல்ல, கர்த்தரின் சித்தப்படிசெய்ய அவர் நாடியதால், பல்கலைக் கழகம் பற்றிய சிந்தனைகள் கைவிடப்பட்டன.

என் பெற்றோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலயத்தில் சேவை செய்திருக்கின்றனர்—அப்பா முத்திரிப்பவராகவும், அம்மா ஆலய நியமப்பணியாளராகவும். அவர்கள் ரிவர்சைட், கலிபோர்னியாவிலும், உலன்பட்டார் மங்கோலியாவிலும், நைரோபி கென்யாவிலும், நாவூ இல்லினாய் ஆலயத்திலும், மாண்டெரி மெக்ஸிகோ ஆலயத்திலும் ஐந்து முழு நேர ஊழியம் செய்திருக்கிறார்கள். மெக்ஸிகோவில் ஒரு புதிய மொழியைக் கற்க கடினமாக உழைத்தனர், 80 வயதில் அது எளிதாக இருக்கவில்லை. வாழ்க்கையின் சொந்த வாஞ்சைகளை முயற்சிப்பதை விட அவர்கள் கர்த்தரின் சித்தப்படி செய்ய நாடினர்.

அவர்களுக்கும், உலகமெங்கும் சேவை செய்துகொண்டிருக்கும் அப்படிப்பட்ட அனைத்து அர்ப்பணிப்பு உடைய பிற்காலப் பரிசுத்தவான்களுக்கும், ஏலமனின் குமாரனாகிய தீர்க்கதரிசி நெப்பிக்கு கர்த்தரால் பேசப்பட்ட வார்த்தைகளை எதிரொலிக்கிறேன்: “நெப்பியே நீ செய்தவைகளினிமித்தம் நீ பாக்கியவனாயிருக்கிறாய், நான் இந்த ஜனங்களுக்காக உன்னிடம் கொடுத்த வார்த்தையை நீ சோர்ந்து போகாமல் அறிவித்தாய் என்பதை நான் பார்த்திருக்கிறேன். மேலும் நீ அவர்களுக்குப் பயப்படாமல்,  ...  உன் சொந்த ஜீவனைக் குறித்து கவலைப்படாமல், என் சித்தத்தையும் என் கற்பனைகளைக் கைக்கொள்ளவும் வகை தேடினாய்.” 8

அவருக்கும் நமது சக மனுஷருக்கும் விசுவாசமாக சேவை செய்து தேவ சித்தத்தை நாடும்போது, நாம் அவரது அங்கீகாரத்தை உணர்ந்து, உண்மையாகவே அவரை அறிகிறோம்.

அவரைப் போலாகி அவரை அறியுங்கள்

தேவனை அறிய சிறந்த வழி அவரைப் போலாவதுதான் என இரட்சகர் நமக்குச் சொல்கிறார். அவர் போதித்தார், “நீங்கள் எத்தகைய மனுஷராய் இருக்க வேண்டும்? மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னைப்போலவே இருக்க வேண்டும்.” 9

அவரைப் போலாக தகுதி முக்கியம். அவர் கட்டளையிட்டார், “நான் உங்களை சுத்தமாக்கும்படிக்கு, உங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ளுங்கள், ஆம், உங்கள் இருதயங்களை சுத்தப்படுத்துங்கள், கைகளைக் கழுவுங்கள். 10 அவரைப்போலாகும் சாலையில் தொடங்கி, நாம் மனந்திரும்பி அவரது மன்னிப்பைப் பெறுகிறோம், அவர் நமது ஆத்துமாக்களை சுத்திகரிக்கிறார்.

வாக்குத்தத்தத்தை கர்த்தர் கொடுத்தார், “தனது பாவங்களை விட்டு விட்டு என்னிடம் வந்து என் நாமத்தைக் கூப்பிட்டு, என் குரலுக்குக் கீழ்ப்படிகிற, என் கட்டளைகளைக் காத்துக்கொள்கிற ஒவ்வொரு ஆத்துமாவும், என் முகத்தைப் பார்த்து நானே என அறியும்.” 11

அவரது பாவ நிவாரண பலி மீது நமது விசுவாசத்தின் மூலம், இரட்சகர் நம்மைக் கழுவுகிறார், குணமாக்குகிறார், அவரைப் போலாக நமக்கு உதவிசெய்து, அவரை அறிய நமக்குச் சாத்தியமாக்குகிறார். மார்மன் போதித்தான், “தேவனுடைய குமாரர்களாகவும் [குமாரத்திகளாகவும்] இருக்க, அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே இருக்க, பிதாவிடத்தில் இருதயத்தின் முழு ஊக்கத்தோடும் ஜெபியுங்கள்.” 12 நாம் தேவனைப்போலாக முயலும்போது, நாம் நம்மை ஆக்க இயல்வதை விட அதிகமாக அவர் நம்மை ஆக்க முடியும்.

ஆலோசகர்களைப் பின்பற்றி அவரை அறியுங்கள்

நமது முயற்சியில் நமக்கு உதவ, தேவன் நமக்கு மாதிரிகளை, ஆலோசகர்களைக் கொடுத்துள்ளார். என்னுடைய ஒரு ஆலோசகரான மூப்பர் நீல்  ஏ. மாகஸ்வெல் பற்றி என் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தேவனைப் போல ஆகும் அவரது முயற்சியில், பிதாவின் சித்தத்துக்கு தமது சித்தத்தை சமர்ப்பிக்க அவர் தொடர்ந்து நாடினார்.

20 ஆண்டுகளுக்கும் முன்பு, புற்று நோய் கண்டுபிடிக்கப்பட்ட உடனே, அவர் தன் உணர்வுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவர் என்னிடம் சொன்னார், “நான் ஆட்டக்குழுவில் இருக்க விரும்புகிறேன், [திரையின்] இந்தப்பக்கம், அல்லது அந்தப்பக்கம். நான் ஓரமாக இருக்க விரும்பவில்லை. நான் ஆட்டத்தை ஆட விரும்புகிறேன்.’ 13

அடுத்த சில வாரங்களாக தன்னைக் குணப்படுத்துமாறு தேவனிடம் கேட்க அவர் தயங்கினார். அவர் தேவ சித்தத்தை செய்யவே விரும்பினார். அவரது மனைவி கொலீன் கெத்சமனே தோட்டத்தில் இயேசுவின் முதல் கூக்குரல், “இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்யும்,” என்பதாக இருந்தது என சுட்டிக் காட்டினார். பின்பு இரட்சகர் சொன்னார், “ஆகிலும் என் சித்தப்படியல்ல, உமது சித்தத்தின் படியே ஆகக்கடவது.” 14 நிவாரணம் கேட்க இரட்சகரின் உதாரணத்தைப் பின்பற்றவும், பின்னர் தனது சித்தத்தை தேவ சித்தத்துக்கு சமர்ப்பிக்கவும் அவர் மூப்பர் மாக்ஸ்வெல்லை ஊக்குவித்தார், அவர் அதைச் செய்தார். 15

கிட்டத்தட்ட ஒரு வருடம் விரிவான, பலவீனப்படுத்தும் சிகிச்சைகளால் பாடுபட்ட பின், அவர் முற்றிலும் முழுவதுமாக “ஆட்டத்தில்” இருந்தார். அவர் மேலும் ஏழு ஆண்டுகள் சேவை செய்தார்.

அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் நான் அவருடன் பல பணிகள் செய்தேன். என் தயவையும், மனதுருக்கத்தையும், அன்பையும் உணர்ந்தேன். அவர் இரட்சகரைப் போல ஆக முயன்றபோது, அவரது தொடர்ந்த பாடுகளிலும், தொடர் சேவையிலும், அவரது அதிகரித்த சுத்திகரிப்பைப் பார்த்தேன்.

நம் அனைவருக்கும் கிடைத்திருக்கிற இறுதியான மாதிரியும், ஆலோசகரும் நமது கர்த்தரும் இரட்சருமான இயேசு கிறிஸ்துவே. அவர் சொன்னார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” 16 “என்னைப் பின்பற்றி வா.” 17

என் இளம் சகோதர சகோதரிகளே, தேவனை அறிவது ஒரு வாழ்நாள் தேடுதல். “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் [நாம்] அறிவதே நித்திய ஜீவன்.” 18

“இப்படிப்பட்ட மாபெரும் காரியத்துக்காக, நாம் செல்லக்கூடாதா? ... தைரியமடையுங்கள் என் இளம் நண்பர்களே வெற்றிக்கு மென்மேலும் முன்னேறிச் செல்லுங்கள்.” 19

தேவன் உங்களை அறிகிறார், அவரை அறிய உங்களை அழைக்கிறார். பிதாவிடம் ஜெபியுங்கள், வேதங்களைப் படியுங்கள், தேவ சித்தத்தைச் செய்ய நாடுங்கள், இரட்சகரைப்போல ஆக முயலுங்கள், நீதியான ஆலோசகர்களை பின்பற்றுங்கள். அப்படிச் செய்யும்போது, நீங்கள் தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் அறிவீர்கள். நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்வீர்கள். நியமிக்கப்பட்ட விசேஷித்த அவர்களின் சாட்சியாக இது உங்களுக்கு எனது அழைப்பு. அவர்கள் ஜீவிக்கிறார்கள். அவர்கள் உங்களை நேசிக்கிறார்கள். அவ்விதமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.