2010–2019
இது எங்கு வழிநடத்தும்?
ஏப்ரல் 2019 பொது மாநாடு


இது எங்கு வழிநடத்தும்?

நாம் மாற்று வழிகளைப் பார்த்து, அவை எங்கு வழிநடத்தும் என சிந்தித்தால் நாம் சிறந்த தேர்ந்தெடுப்புகளையும்- முடிவுகளையும் செய்வோம்.

இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் வருங்காலத்தைப்பற்றி சிந்திக்க நம்மை ஊக்குவிக்கிறது. இது அநித்திய ஜீவியத்தின் நோக்கத்தையும், பின்வரவிருக்கிற வாழ்க்கையின் உண்மையையும் விளக்குகிறது. இன்று நமது செயல்களை வழிநடத்த எதிர்காலத்தைப்பற்றி பெரும் கருத்துக்களை இது போதிக்கிறது.

மாறாக தற்காலத்தில் மட்டும் அக்கறையுள்ளவர்களை நம் அனைவருக்கும் தெரியும். இன்று செலவு செய், இன்று அனுபவி, எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்காதே.

நாம் எப்போதும் எதிர்காலத்தைப்பற்றி விழிப்புடன் இருந்தால்தான், நமது தற்காலமும் வருங்காலமும் மகிழ்ச்சியாக இருக்கும். நாம் தற்போதைய முடிவுகளை செய்யும்போது, நாம் எப்போதும் கேட்போம், ”இது எங்கு வழிநடத்தும்?”

I.

சில தீர்மானங்கள் ஏதாவது செய்வதற்கும். எதுவுமே செய்யாததற்கும் இடையே உள்ள தேர்ந்தெடுப்புகள். அநேக ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஒரு பிணைய மாநாட்டில் இம்மாதிரியான தேர்ந்தெடுப்பைப்பற்றிய உதாரணத்தை நான் கேள்விப்பட்டேன்.

அந்த பின்னணி ஒரு அழகான கல்லூரி வளாகம். ஒரு இளம் மாணவர் கூட்டம் புல்லின்மேல் உட்கார்ந்திருந்தது. ஒரு அழகான பெரிய முடியுள்ள மர அணில் அழகிய பெலமான மரத்தின் அடியை சுற்றி விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என அந்த அனுபவத்தைப்பற்றி அந்த பேச்சாளர் விவரித்தார். சில சமயத்தில் அது தரையிலிருந்தது, சில சமயத்தில் அடிமரத்தில் மேலும் கீழும் போனது. அந்த தெரிந்த காட்சி, ஏன் ஒரு மாணவர் கூட்டத்தை ஈர்க்க வேண்டும்.

புல்தரைக்கு அருகில் ஒரு ஐரிஷ் நாய், கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்தது. மாணவர்களின் ஆர்வத்தின் காரணம் அதுவாயிருந்து, அந்த அணில் அதனது பொருளாயிருந்தது.. ஒவ்வொரு முறையும் மரத்தை சுற்றி அணில் பார்வைக்கு வெளியே போகும்போது, அது சில அங்குலங்கள் முன்னே நகர்ந்து, பின்பு வேறொரு நிலைக்குத் திரும்பியது. இதுதான் மாணவர்களின் ஆர்வத்தைக் கவர்ந்தது. அமைதியாகவும் அசையாமலும், அவர்கள் கண்கள் நிலைகுத்தியது, அதன் விளைவு அதிகமான தெளிவாக தெரிந்தது.

கடைசியாக அது அணிலுக்கு நெருக்கமாக வந்து அதனை வாயால் பிடிக்க இருந்தது. ஒரு பயங்கர ஏக்கத்துடன் எழுந்து, மாணவர் கூட்டம் முன்னோக்கி ஓடி, நாயிடமிருந்து சிறு பிராணியை பிடுங்கியது, ஆனால் அது மிக தாமதமாகவே. அணில் செத்தது.

தங்கள் கைகளை அசைத்தோ, கத்தியோ, அந்த கூட்டத்தில் யாராவது அணிலை எந்த நேரத்திலாவது எச்சரித்திருக்க முடியும், ஆனால் ஒருவரும் செய்யவில்லை. தடுக்க முடியாத நிகழ்வு நெருங்கும்வரை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் கேட்கவில்லை, ”இது எங்கு வழிநடத்தும்?” யூகிக்கக்கூடியது நடந்தபோது, விளைவைத் தடுக்க அனைவரும் ஓடினர், ஆனால் அது தாமதமானது. அவர்கள் கொடுக்க முடிந்ததெல்லாம் கண்ணீருடன் வருத்தம்தான்.

அந்த உண்மைக் கதை ஒருவித உவமை. நாம் பார்க்கிற காரியங்களை, நமது வாழ்க்கையிலும், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும், சூழ்நிலைகளிலும் நாம் பயன்படுத்துறோம். நாம் நேசிக்கிற நபர்கள் அல்லது பொருட்கள் மீது பயமுறுத்தல்கள் வருவதை நாம் பார்க்கும்போது, நாம் பேச அல்லது செய்ய அல்லது அமைதியாயிருக்க தெரிந்துகொள்ளலாம். நம்மை நாமே கேட்பது நல்லது, ”இது எங்கு வழிநடத்தும்?” விளைவுகள் உடனடியாகவும் கடுமையாகவும் இருக்கும்போது, நாம் ஒன்றும் செய்யாமல் இருக்க முடியாது. இன்னும் நேரமிருக்கும்போது, நாம் பொருத்தமான எச்சரிக்கை செய்ய வேண்டும், அல்லது பொருத்தமான தடுப்பு முயற்சிகளுக்கு ஆதரவு தர வேண்டும்.

நான் இப்போது விவரித்த முடிவுகளில் நடவடிக்கை எடுப்பது அல்லது நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கிடையே உள்ள தேர்ந்தெடுப்புகளை கொண்டது. ஒரு செயல் அல்லது மற்றொன்றுக்கு இடையே இந்த தேர்ந்தெடுப்புகள் சகஜமானவை. நல்லது அல்லது தீயதுக்கு இடையேயான தேர்ந்தெடுப்புகளை இது உள்ளடக்கியுள்ளது, ஆனால் மிக அடிக்கடி, அவை இரு நல்லவைக்கு இடையேயான தேர்ந்தெடுப்புகளாக இருக்கின்றன. இது எங்கு வழிநடத்தும் என கேட்பது இங்கும் விரும்பத்தக்கது. அடிக்கடி நமது நேரத்தை எப்படி செலவிடுவோம் என்பதில், நாம் இரு நல்லவைக்கு இடையே அநேக தேர்ந்தெடுப்புகள் செய்கிறோம். வீடியோ கேம் ஆடுவது, செய்தி அனுப்புவது மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது அல்லது செல் போனில் பேசுவதில் எந்த தவறும் இல்லை ஆனால் இவை ஒவ்வொன்றிலும், ”சந்தர்ப்ப கிரயம்” என்றழைக்கப்படுவது உள்ளது, அதாவது நாம் ஒன்றைச் செய்து, நேரம் செலவிட்டால், மற்றொன்றை செய்யும் சந்தர்ப்பத்தை இழக்கிறோம். அது பரிபூரணமாக நல்லதாக இருந்தாலும், நாம் ஒரு செயலில் செலவு செய்யும் நேரத்தில் நாம் எதை இழக்கிறோம் என அறிவோடு நாம் அளக்க வேண்டும் என உங்களால் பார்க்க முடியும் என நான் உறுதியாக இருக்கிறேன்.

சிறிது காலத்துக்கு முன் நான் “நல்லது, மிக நல்லது, மிக மிக நல்லது” என ஒரு செய்தி கொடுத்தேன். அந்த செய்தியில் நான் சொன்னேன், “ஒன்று நல்லதாகஇருப்பதாலேயே அதைச் செய்வதற்கு போதுமான காரணம் இல்லை. நாம் செய்யக்கூடிய நல்ல காரியங்களின் எண்ணிக்கை, அவற்றை சாதிக்க கிடைக்கும் நேரத்தை விட மிக அதிகமாயிருக்கிறது. சில காரியங்கள் நல்லதை விட சிறப்பானவை, இவைதான் நமது வாழ்க்கையில் முன்னுரிமையான கவனம் பெற வேண்டும். … மிக நல்லது அல்லது மிக மிக நல்லவற்றைத் தேர்ந்தெடுக்க நாம் சில நல்ல காரியங்களை இழக்க நேரிடும்“.1

நீண்ட பார்வை பாருங்கள். நாம் தற்போது செய்யும் தீர்மானங்களால் எதிர்கால விளைவு யாது? கல்வி பெறுதல், சுவிசேஷம் படித்தல், திருவிருந்தில் பங்கேற்பதால் நமது உடன்படிக்கைகளை புதுப்பித்தல், மற்றும் ஆலயம் செல்லுதலின் முக்கியத்துவத்தை நினைவுகொள்ளுங்கள்.

II.

நாம் நம்மை எப்படி முத்திரை குத்துவோம் என தேர்ந்தெடுக்க, ”இது எங்கு வழிநடத்தும்?” என்பதுவும் முக்கியம். மிக முக்கியமாக நாம் ஒவ்வொருவரும், நித்திய ஜீவன் இலக்குக்கு தகுதியுள்ள தேவனின் பிள்ளை. தொழில், இனம், சரீர குணாதிசயங்கள், பெருமைகள் போன்ற எந்த பிற முத்திரையும், நித்திய காரியத்தில் தற்காலிகமானது, அல்லது பயனற்றது. உங்களையே முத்திரை குத்தாதீர்கள் அல்லது நீங்கள் முயற்சிக்கிற இலக்குக்கு வரையறை போடுகிற கட்டுப்பாடுகளைப்பற்றி எண்ணாதீர்கள்.

நான் இங்கு சொல்வதை பார்க்கிற அல்லது வாசிக்கிற என் சகோதர சகோதரிகளே, நாங்கள் கொடுக்கிற போதனைகளையும் ஆலோசனைகளையும் உங்கள் தலைவர்கள் ஏன் கொடுக்கிறார்கள் என நீங்கள் அறிவீர்கள் என நான் நம்புகிறேன். நாங்கள் உங்களை நேசிக்கிறோம், பரலோக பிதாவும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் உங்களை நேசிக்கிறார்கள். நமக்காக அவர்களது திட்டம் ”மகிழ்ச்சியின் பெரும் திட்டம்” ஆல்மா 42:8. அந்த திட்டமும், அவர்களது கட்டளைகளும், நியமங்களும் உடன்படிக்கைகளும், நம்மை பெரும் மகிழ்ச்சிக்கும், இந்த வாழ்க்கையிலும், வரவிருக்கிற வாழ்க்கையிலும் சந்தோஷத்துக்கும் நம்மை வழிநடத்துகின்றன. பிதா மற்றும் குமாரனின் சேவகர்களாக, பரிசுத்த ஆவியால் அவர்கள் வழிநடத்தியபடி, நாங்கள் போதித்து ஆலோசனையளிக்கிறோம். சத்தியத்தை தவிர எதையும் பேசுவதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை, “தேவனின் எல்லா வரங்களிலும் மிகப் பெரியதாகிய, நித்திய ஜீவனுக்கு பாதையாக அவர்கள் கோடிட்டுக் காட்டியதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.”கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:7.

III.

தற்காலத்தில் செய்யப்பட்ட தீர்மானங்களின் எதிர்கால விளைவுகளுக்கு இங்கே மற்றொரு உதாரணம். ஒரு முக்கிய எதிர்கால இலக்கை அடைய, தற்கால தியாகம் செய்வதை இந்த எடுத்தக்காட்டு குறித்தது.

கொலம்பியாவின் காலியில், ஒரு பிணைய மாநாட்டில், அருகிலுள்ள ஆலயம் பெருவிலிருக்கும்போது, அவளும் அவளது காதலனும் எப்படி ஆலயத்தில் திருமணம் செய்ய விரும்பினார்கள், ஆனால் அந்த நேரத்தில் நெருக்கமான ஆலயம் பெருவிலிருந்து மிகத்தொலைவிலிருந்தது என ஒரு சகோதரி சொன்னாள். பேருந்து கட்டணத்துக்காக நீண்ட நாட்களாக அவர்கள் பணத்தை சேமித்தார்கள். கடைசியாக போகோட்டாவுக்கு அவர்கள் பேருந்தில் ஏறினார்கள், ஆனால் அங்கே வந்த பிறகு லிமா, பெருவுக்கு அனைத்து சீட்டுகளும் வாங்கப்பட்டுவிட்டன என அறிந்தனர். அவர்கள் திருமணம் செய்யாமல் வீட்டுக்குச் செல்ல வேண்டும் அல்லது ஆலயத்துக்கு வெளியே திருமணம் செய்ய வேண்டும். அதிர்ஷ்ட வசமாக மற்றொரு மாற்று இருந்தது. ஐந்து முழு நாட்களும், ஐந்து முழு இரவுகளும் பேருந்து பிரயாணத்தில் பேருந்தில் தரையில் உட்கார அவர்கள் தயாராக இருக்க வேண்டும். இதைச் செய்ய அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். சிலர் சிலசமயங்களில் தாங்கள் சிறிது காலை நீட்டி கொள்ள அவர்களது இருக்கையை சில பயணிகள் கொடுத்தாலும், அது கடினமாக இருந்தது என அவள் சொன்னாள்.

அவளது பேச்சில் என்னைக் கவர்ந்த வாசகம், இந்த விதமாக அவளும் அவளது கணவனும் ஆலயத்துக்கு செல்ல முடிந்ததற்காக அவள் நன்றியுடனிருப்பதாக சொன்னாள், ஏனெனில் அது சுவிசேஷத்தைப்பற்றி அவர்கள் உணர்ந்ததையும், ஆலயத்தில் திருமணத்தைப்பற்றி அவர்கள் உணர்ந்ததையும் மாற்றியது. தியாகத்தால் வருகிற வளர்ச்சியால் கர்த்தர் அவர்களுக்கு பிரதிபலன் அளித்துள்ளார். தியாகமில்லாமல் ஆலயம் செல்லும் அநேக பயணங்களை விட அவர்களது ஐந்து நாள் ஆலய பயணம் அவர்களது ஆவிக்குரிய தன்மையை கட்ட அதிக அளவில் சாதித்தது என அவள் கூறினாள்.

அந்த சாட்சியைக் கேட்ட வருடங்களிலிருந்து, அவர்கள் ஆலயத்தில் திருமணம் செய்ய தேவையான தியாகத்தை விடுத்து, வேறொரு தேர்வு செய்திருந்தால், அந்த இளம் தம்பதியினரின் வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமாயிருந்திருக்கும் என நான் ஆச்சரியப்பட்டேன்.

சகோதரரே, வாழ்க்கையில் நாம் எண்ணற்ற தேர்ந்தெடுப்புகள் செய்கிறோம், சில பெரியவை, சில பார்வைக்கு சிறியவை. திரும்பிப் பார்த்தால், நமது வாழ்க்கையில் சில தேர்ந்தெடுப்புகள் செய்த பெரிய வித்தியாசங்களை நாம் பார்க்க முடியும். நாம் மாற்று வழிகளைப் பார்த்து, அவை எங்கு வழிநடத்தும் என சிந்தித்தால் நாம் சிறந்த தேர்ந்தெடுப்புகளையும்- முடிவுகளையும் செய்வோம். நாம் செய்யும்போது, முடிவை மனதில் வைத்து, ஆரம்பிக்க தலைவர் நெல்சனின் ஆலோசனையை நாம் பின்பற்றுவோம்.2 நமக்கு, தேவ வரங்களில் மிகப் பெரியதாகிய நித்திய ஜீவனுக்கு ஆலயம் மூலம் உடன்படிக்கையின் பாதைதான் எப்போதும் முடிவு.

இயேசு கிறிஸ்து, அவரது பாவநிவர்த்தியின் விளைவுகள் மற்றும் அவரது நித்திய சுவிசேஷத்தின் பிற சத்தியங்களைப்பற்றி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. Dallin H. Oaks, “Good, Better, Best,” Liahona, Nov. 2007, 104, 107.

  2. Russell M. Nelson, “As We Go Forward Together,” Liahona, Apr. 2018, 7. பார்க்கவும்.