2010–2019
நம்மால் சிறப்பாகச் செய்யமுடியும், சிறப்பாக இருக்கமுடியும்
ஏப்ரல் 2019 பொது மாநாடு


நம்மால் சிறப்பாகச் செய்யமுடியும், சிறப்பாக இருக்கமுடியும்

முன்பு எப்போதையும்விட அதிக வல்லமையுடன் ஆசாரியத்துவத்தை நீங்கள் பயிற்சி செய்யும்படியாக உங்களுடைய வாழ்க்கையில் மிக ஒருங்கிணைந்ததாக அன்றாட மனந்திரும்புதலில் உங்கள் கவனத்தை வையுங்கள்.

எனக்கன்பான சகோதரரே, ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற கர்த்தருடைய பட்டாளத்தின் இந்த பரந்த சபையை மேலாகப் பார்க்க அது உணர்த்துதலாயிருக்கிறது. நன்மைக்கு என்ன ஒரு பராக்கிரம படையாய் நீங்களிருக்கிறீர்கள். நாங்கள் உங்களை நேசிக்கிறோம். நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம். நாங்கள் உங்களுக்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.

“இந்த சந்ததிக்கு மனம்திரும்புதலையன்றி எதையும் சொல்லாதிருப்பாயாக”1 என்று தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட கர்த்தருடைய அறிவுறுத்தலுக்கு நானே இழுக்கப்பட்டதாக சமீபத்தில் நான் கண்டேன். வேதங்கள் முழுவதிலும் இந்த பிரகடனம் அடிக்கடி மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது.2எல்லோருமே மனந்திரும்பவேண்டுமா என்ற ஒரு வெளிப்படையான கேள்வியை இது தூண்டுகிறது. பதில் ஆம் என்பதே.

மிகமோசமான சூழ்நிலைகளைத் தவிர தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாக, மனந்திரும்புதலை தண்டனையாக அநேக மக்கள் கருதுகிறார்கள். ஆனால் தண்டிக்கப்படுவதான இந்த உணர்வை சாத்தான் தோற்றுவிக்கிறான். நம்மை குணமாக்கவும், மன்னிக்கவும், சுத்தப்படுத்தவும், பெலப்படுத்தவும், தூய்மைப்படுத்தவும், பரிசுத்தப்படுத்தவும் நம்பிக்கையுடனும் விருப்பத்துடனும் நீட்டிய கரங்களுடன் 4 நின்றுகொண்டிருக்கிற இயேசு கிறிஸ்துவிடம் நோக்குவதிலிருந்து நம்மை தடுக்க அவன் முயற்சிக்கிறான்.3

கிரேக்க புதிய ஏற்பாட்டில் மனந்திரும்புதலுக்கான வார்த்தை மெட்டானியோ. மாற்றம் என்பது மெட்டாவின் முன்சேர்க்கையின் அர்த்தம். பின்னொட்டான மெட்டா கிரேக்க வார்த்தைகளுக்கு சமபந்தப்பட்டு, “மனம்”, “அறிவு”, “ஆவி”, “மூச்சுக்காற்று”5 என அர்த்தமாகிறது.

அப்படியாக, “மனந்திரும்ப”6 உங்களையும் என்னையும் இயேசு கேட்கிறபோது, நமது மனதையும், அறிவையும், நமது ஆவியையும், நாம் மூச்சுவிடுகிற வழியையும்கூட மாற்ற அவர் நம்மை அழைத்துக்கொண்டிருக்கிறார். நாம் அன்பு செலுத்துகிற, சிந்திக்கிற, சேவை செய்கிற, நமது நேரத்தை செலவழிக்கிற, நமது மனைவிகளை நடத்துகிற, நமது பிள்ளைகளுக்கு போதிக்கிற, நமது சரீரங்களைப் பேணுவதையும்கூட மாற்ற அவர் நம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மனந்திரும்புதலில் ஒரு வழக்கமான, அன்றாட கவனம் செலுத்துவதைவிட, எதுவுமே அதிக விடுவிப்பதாக, அதிக அந்தஸ்தை உயர்த்துவதாக, நம்முடைய தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு முக்கியமானதாக இருக்கப்போவதில்லை. மனந்திரும்புதல் ஒரு நிகழ்ச்சி இல்லை, இது ஒரு நடைமுறை. சந்தோஷத்திற்கும் மனசமாதானத்திற்கும் இது திறவுகோல். விசுவாசத்துடன் இணைக்கப்படும்போது, இயேசு கிறிஸ்துவின் பாநிவர்த்தியின் வல்லமைக்கு மனந்திரும்புதல் நமது அணுகலுக்குத் திறக்கிறது.7

உடன்படிக்கைப் பாதையில் நீங்கள் சிரத்தையுடன் போய்க்கொண்டிருக்கிறீர்களோ, உடன்படிக்கைப் பாதையிலிருந்து நீங்கள் நழுவியோ அல்லது விலகியோ போகிறீர்களோ, அல்லது இப்போது நீங்களிருக்கிற இடத்திலிருந்து உடன்படிக்கைப் பாதையைப் பார்க்க முடியவில்லையோ, மனந்திரும்ப உங்களை நான் வேண்டுகிறேன். அன்றாட மனந்திரும்புதலின் வல்லமையை பெலப்படுத்துதலை, ஒவ்வொரு நாளும் சிறிது சிறப்பாக இருத்தலை, செய்தலை அனுபவியுங்கள்.

மனந்திரும்புதலுக்கு நாம் தேர்ந்தெடுக்கும்போது மாற்றத்திற்கு நாம் தேர்ந்தெடுக்கிறோம்! நமக்குள்ள சிறந்த பதிப்புக்குள் நம்மை மாற்ற, இரட்சகரை நாம் அனுமதிக்கிறோம். ஆவிக்குரியதில் வளரவும், அவரில் மீட்பின் சந்தோஷமான சந்தோஷத்தைப் பெறவும் நாம் தேர்ந்தெடுத்தோம்.8 நாம் மனந்திரும்ப தெரிந்தெடுக்கும்போது, அநேகமாக இயேசு கிறிஸ்துவைப் போலாக மாற நாம் தெரிந்தெடுக்கிறோம்!9

சகோதரரே, நாம் சிறப்பாகவும் சிறப்பாகவும் செய்யவேண்டும், சிறப்பாயிருக்கவேண்டும் ஏனெனில் நாம் ஒரு யுத்தத்திலிருக்கிறோம். பாவத்துடனான யுத்தம் உண்மையானது. சாட்சிகளை இடையூறு செய்யவும், கர்த்தருடைய பணியை தாமதப்படுத்தவும் சத்துருவானவன் அவனுடைய முயற்சிகளை நான்குமடங்காக்குகிறான். கர்த்தருடைய சந்தோஷத்தையும் அன்பையும் பங்கேற்பதிலிருந்து நம்மை தள்ளிவைக்க, சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் தனது கூட்டாளிகளை அவன் ஆயுதந்தரிக்கிறான்.10

சத்துருவின் கண்ணிகளால் தண்டனை கொடுக்கிற துயரத்தை தவிர்க்க மனந்திரும்புதல் முக்கியமானது. நமது நித்திய முன்னேற்றத்தின் இந்த நிலையில் முழுநிறைவை கர்த்தர நம்மிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதிகமாக தூய்மையாக மாற அவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். அன்றாட மனந்திரும்புதல் தூய்மைக்கு நடைபாதை, தூய்மை வல்லமையைக் கொண்டுவருகிறது. தனிப்பட்ட தூய்மை, தேவனுடைய கரங்களில் நம்மை சக்திவாய்ந்த கருவிகளாக்குகிறது. நமது மனந்திரும்புதல், நமது தூய்மை, இஸ்ரவேலின் கூடிச்சேர்தலில் உதவ நமக்கு அதிகாரமளிக்கும்.

“ஆசாரியத்துவத்தின் உரிமைகள் பரலோகத்தின் வல்லமைகளோடு பிரிக்கப்படாதபடிக்கு இணைக்கப்பட்டிருக்கிறது, நீதியின் கொள்கைகளால் மாத்திரமே பரலோகத்தின் வல்லமைகள் கட்டுப்படுத்தப்படவோ கையாளப்படவோ முடியாது”11 என தேவன் ஜோசப் ஸ்மித்துக்கு போதித்தார்.

பரலோகத்தின் வல்லமைகளுக்கு அதிக அணுகுதலை எது நமக்குக் கொடுக்குமென நாம் அறிவோம். நமது முன்னேற்றத்தை எது தடங்கல் செய்யும், பரலோகத்தின் வல்லமைகளுக்கு நமது அணுகுதலை அதிகரிக்க எதை நாம் நிறுத்தவேண்டும் எனவும் நாம் அறிவோம். சகோதரரே, உங்கள் மனந்திரும்புதலின் வழியில் எது நிற்கிறது என புரிந்துகொள்ள ஜெபத்துடன் நாடுங்கள். மனந்திரும்புதலிலிருந்து உங்களை எது நிறுத்துகிறதென அடையாளம் காணுங்கள். பின்னர், மாறுங்கள்! மனந்திரும்புங்கள்! எப்போதையும்விட நாம் அனைவரும் சிறப்பாகச் செய்யமுடியும், சிறப்பாக இருக்கமுடியும்.12

ஒருவேளை மேம்படுத்த குறிப்பிட்ட வழிகளிருக்கின்றன. நமது சரீரங்களை நாம் நடத்துகிற வழி ஒன்று. மனித சரீரத்தின் அற்புதத்தில் நான் மலைத்து நிற்கிறேன். நமது இறுதியான தெய்வீகத் திறனுக்கு நேராக நமது படிப்படியான ஏற்றத்திற்கு அத்தியாவசியமான இது ஒரு மகத்துவமான சிருஷ்டிப்பு. இது இல்லாமல் நம்மால் முன்னேற முடியாது. ஒரு சரீரத்தின் வரத்தை நமக்குக் கொடுத்ததில், அவரைப்போலாகுவதற்கு நேராக ஒரு முக்கிய படியை எடுக்க தேவன் நம்மை அனுமதித்தார்.

இதை சாத்தான் புரிந்துகொள்கிறான். பொறாமை மற்றும் விரக்தியின் ஒரு நிரந்தர நிலையில் அவனைவிட்டு, அவனுடைய அநித்தியத்திற்கு முந்தைய மதமாறுபாடு இந்த சிலாக்கியத்திலிருந்து அவனை நிரந்தரமாக தகுதியற்றவனாக்குகிறது என்ற உண்மையில் அவன் கோபமடைகிறான். அப்படியாக, நமது பாதையில் அவன் போடுகிற அதிகம் இல்லையென்றாலும், சோதனகள், நமது சரீரங்களை, அல்லது மற்றவர்களின் சரீரங்களை நிந்திக்க காரணமாகிறது. ஒரு சரீரமில்லாமல் சாத்தான் பரிதாபமாயிருக்கிறான், நமக்கிருப்பதால் நாம் பரிதாபமாயிருக்க அவன் விரும்புகிறான்.13

உங்களுடைய நித்திய ஆவியை தங்கவைக்க உருவாக்கப்பட்ட, உங்களுடைய சரீரம், உங்களுடைய தனிப்பட்ட ஆலயம்.14 அந்த ஆலயத்தின் உங்கள் கவனிப்பு முக்கியமானது. சகோதரரான உங்களை நான் கேட்கிறேன். தேவனை சந்தோஷப்படுத்துவதைவிட, உலகத்தின் கவனத்தைக் கவர உங்கள் சரீரத்தை உடுத்துவதிலும் சீர்ப்படுத்துவதிலும் நீங்கள் மிகவும் ஆர்வமாயிருக்கிறீர்களா? உங்களுக்கு, அவருடைய தலைசிறந்த வரத்திற்கு சம்பந்தமான உங்களுடைய உணர்வைப்பற்றி அவருக்கு ஒரு நேரடியான செய்தியை உங்களுடைய பதில் அனுப்புகிறது. உங்களுடைய சரீரங்களுக்கான இந்த பயபக்தியில் சகோதரரே, நாம் சிறப்பாக செய்யமுடியும், சிறப்பாக இருக்கமுடியுமென நான் நினைக்கிறேன்.

நமது மனைவிகளுடன், மகள்களுடன், நமது தாய்மார்களுடன், சகோதரிகளுடன் ஆரம்பித்து நமது வாழ்க்கையில் பெண்களை நாம் எவ்வாறு மதிக்கிறோம் என்பது நாம் சிறப்பாக செய்வதற்கும், சிறப்பாயிருக்கவும் மற்றொரு வழி.15

சில மாதங்களுக்கு முன்பு, ஒரு அன்பான சகோதரியிடமிருந்து இதயத்தை உடைக்கிற ஒரு கடிதம் வந்தது. “24/7 விளையாட்டு மேம்படுத்தல்களிலும், காணொலி விளையாட்டுகளிலும், பங்குச் சந்தை மேம்படுத்தல்களிலும், ஒவ்வொரு [தொழில்முறை] விளையாட்டின் முடிவில்லாத பகுப்பாய்வுகளிலும், கவனிப்பதிலும் எங்கள் கணவன்மார்களுடைய, மகன்களுடைய பிரிக்கமுடியாத கவனத்தினால் [என்னுடைய மகள்களும் நானும்] கடுமையான போட்டியிலிருந்தோம் என உணர்ந்தோம். [விளையாட்டுகளில்] அவர்களுடைய நிரந்தரமான முதல் வரிசை இருக்கைகளால் எங்களுடைய கணவன்மார்களுடனும் மகன்களுடனும் எங்களுடைய முதல்வரிசை இருக்கைகளை நாங்கள் இழக்கிறோம் என்பதைப்போல உணர்ந்தோம்”.16

சகோதரரே, ஆசாரியத்துவத்தைத் தரித்தவராக உங்களுடைய முதலும் முதன்மையுமான கடமை உங்கள் மனைவியை நேசிப்பதும் கவனித்துக்கொள்வதுவுமே. அவளோடு ஒன்றாகுங்கள் அவளுடைய பங்காளியாயிருங்கள். உங்களுடையவராயிருக்க அவளுக்கு எளிதாக்குங்கள். வாழ்க்கையில், அவளுடன் ஒரு நித்திய உறவை கட்டுவதில் எந்த பிற விருப்பங்களும் முன்னுரிமை எடுக்கக்கூடாது. அவளுடைய நல்வாழ்வைவிட, டிவி, கைப்பேசி கருவி அல்லது கம்யுட்டர் எதுவும் அதிக முக்கியமானதில்லை. உங்கள் நேரத்தை நீங்கள் எவ்வாறு செலவு செய்கிறீர்கள், உங்கள் சக்தியை எங்கே நீங்கள் ஒதுக்குகிறீர்களென்று ஒரு கணக்கு எடுங்கள். உங்கள் இருதயம் எங்கிருக்கிறதென அது உங்களுக்குக் கூறும். உங்கள் மனைவியின் இருதயத்தோடு உங்கள் இருதயம் இசைந்திருக்க ஜெபியுங்கள். அவளுக்கு சந்தோஷத்தைக் கொண்டுவர நாடுங்கள். அவளுடைய ஆலோசனை நாடி அதற்கு செவிகொடுங்கள். அவளுடைய உள்ளீடு உங்கள் வெளியீட்டை மேம்படுத்தும்.

உங்களுக்கு நெருக்கமான பெண்ணை நீங்கள் நடத்திய விதத்தினால் நீங்கள் மனந்திரும்ப தேவையாயிருந்தால் அது இப்போது ஆரம்பமாகும். மேலும், உங்களுடைய வாழ்க்கையின் பெண், கர்த்தருடைய கற்புடமை பிரமாணத்தில் வாழுவதிலிருந்து பெறப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெற உதவுவது உங்களுடைய பொறுப்பு என்பதை நினைவில் வைத்திருங்கள். ஒரு பெண் அவளுடைய ஆலய ஆசீர்வாதங்களைப் பெறமுடியாதிருப்பதற்கு ஒருபோதும் காரணமாயிருக்காதீர்கள்.

சகோதரரே, மனந்திரும்புதல் நம் அனைவருக்கும் தேவை. நாம் படுக்கையிலிருந்து எழுந்து, தொலைஇயக்கியை கீழே வைத்து, நமது ஆவிக்குரிய நித்திரையிலிருந்து விழித்துக்கொள்வோம். பூமியில் மிகமுக்கியமான பணியில் நாம் ஈடுபடும்படியாக தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை அணிந்துகொள்ள இதுவேநேரம். “ [நம்முடைய] அரிவாளை நீட்டி [நமது] முழு ஊக்கத்தோடும், மனதோடும், பெலத்தோடும் அறுப்பதற்கு.”17 இதுவே நேரம். இன்று அவர்கள் மோதுவதைவிட அதிக பெலத்துடன் தீமையின் படைகள்ஒருபோதும் மோதவில்லை. இந்த யுத்தம் மூழும்போது கர்த்தருடைய வேலைக்காரர்களாக நாம் நித்திரையடைய முடியாது.

உங்களுடைய குடும்பத்திற்கு உங்களுடைய தலைமையும் அன்பும் தேவையாயிருக்கிறது. உங்களுடைய குழுமமும் உங்களுடைய தொகுதி அல்லது கிளையிலுள்ளவர்களுக்கு உங்களுடைய பெலம் தேவையாயிருக்கிறது. கர்த்தருடைய ஒரு உண்மையான சீஷன் எப்படியிருப்பான், எப்படி செய்வான் என உங்களைச் சந்திக்கிற அனைவரும் அறியவேண்டும்.

என்னுடைய அன்பு சகோதரரே, உங்களுடைய அநித்தியத்திற்கு முந்தைய ஆவிக்குரிய வீரத்தினிமித்தம் இந்த முக்கியமான நேரத்தில் பூமிக்கு வர நமது பிதாவால் நீங்கள் தெரிந்தெடுக்கப்பட்டீர்கள். பூமிக்கு இதுவரை வராத மிகநேர்த்தியான, வீரமான ஆண்களுக்கு மத்தியில் நீங்களிருக்கிறீர்கள். அநித்தியத்திற்கு முந்தி நீங்கள் யாரென்று சாத்தான் அறிந்திருந்து, இரட்சகர் திரும்பிவருவதற்கு முன் செய்யவேண்டிய பணியை புரிந்துவைத்திருக்கிறான். அவனுடைய தந்திரமான செயல்களின் ஆயிரக்கணக்கானபயிற்சிகளுக்குப் பின், சத்துரு திருத்தமுடியாது அனுபவித்தான்.

நன்றியுடன், நாம் தரித்திருக்கிற ஆசாரியத்துவம், சத்துருவின் தந்திரங்களைவிட அதிக வலிமையுள்ளது. நீங்கள் இருக்கவேண்டுமென கர்த்தர் விரும்புகிற ஆண்களாகவும் இளம் வாலிபர்களாகவுமிருக்க நான் உங்களை வேண்டுகிறேன். முன்பு எப்போதையும்விட அதிக வல்லமையுடன் ஆசாரியத்துவத்தை நீங்கள் பயிற்சி செய்யும்படியாக உங்களுடைய வாழ்க்கையில் மிக ஒருங்கிணைந்ததாக அன்றாட மனந்திரும்புதலில் உங்கள் கவனத்தை வையுங்கள். நமக்கு முன்னாலிருக்கிற சாவால்களின் நாட்களில் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆவிக்குரிய பாதுகாப்பில் நீங்கள் வைத்திருக்க இது ஒன்றே வழி.

தங்களுடைய நல்வாழ்விற்கு மேலாக மற்றவர்களின் நல்வாழ்வை வைக்கிற சுயநலமற்ற ஆண்கள் கர்த்தருக்குத் தேவை. தெளிவுடன் ஆவியின் குரலைக் கேட்க ஆண்கள் அவருக்குத் தேவை நாணயத்துடன் அவர்களுடைய உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளும் உடன்படிக்கை ஆண்கள் அவருக்கு வேண்டும். தங்களை பாலியில் தூய்மையில் காத்துக்கொள்கிற, தூய்மையான இருதயங்களுடனும், சுத்தமான மனங்களுடனும் வாஞ்சையுள்ள கரங்களுடனும் ஆசீர்வாதங்களைக் கொடுக்க சிறிதுநேர அவகாசத்தில் அழைக்கப்படக்கூடிய தகுதியான ஆண்கள் அவருக்கு வேண்டும். மனந்திரும்ப ஆர்வமாயிருக்கிற, பெரும் ஆர்வத்துடன் சேவை செய்ய, ஆசாரியத்துவத்தைத் தகுதியானவர்களாக தரித்திருக்கிற கர்த்தரின் படைகளில் ஒரு அங்கமாயிருக்க ஆர்வமுள்ள ஆண்கள் கர்த்தருக்கு வேண்டும்.

அந்த ஆண்களாய் மாற நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். அன்றாடம் மனந்திரும்ப தைரியத்துடனும், ஆசாரியத்துவத்தின் முழுமையான வல்லமையை எவ்வாறு பிரயோகப்படுத்த என கற்றுக்கொள்ளுதலுடனும் நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். உங்கள் மனைவியிடத்திலும், பிள்ளைகளிடத்திலும், உங்களுக்குத் தெரிந்த அனைவரிடத்திலும் இரட்சகரின் அன்பை தொடர்புகொள்ளவும் நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். சிறப்பாகச் செய்யவும் சிறப்பாக இருக்கவும் நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். மேலும், இந்த முயற்சிகளை நீங்கள் எடுக்கும்போது உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை நீங்கள் அனுபவிக்கும்படியாக நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்.

சர்வவல்லமையுள்ள தேவனின் பணியில் நாம் ஈடுபட்டிருக்கிறோம். இயேசுவே கிறிஸ்து நாம் அவருடைய வேலைக்காரர்கள். அப்படியே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.