வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 104


பாகம் 104

ஐக்கிய நிறுவனத்தைக் குறித்து, ஏப்ரல் 23, 1834ல் ஒஹாயோவிலுள்ள கர்த்லாந்து அல்லது அதற்கருகில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். (பாகங்கள் 78 மற்றும் 82க்கான தலைப்புகளைப் பார்க்கவும்). சபையின் உலகப்பிரகாரமான தேவைகளைக் குறித்து கருத்தில் கொள்வதற்காக விவாதித்த ஐக்கிய நிறுவன அங்கத்தினர்களின் ஒரு ஆலோசனைக் கூட்டத்தின் தருணமாயிருந்திருக்கலாம். ஸ்தாபனம் கலைக்கப்படவேண்டுமென ஏப்ரல் 10ல் நடந்த ஒரு ஆரம்பக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக நிறுவனம் மறுஸ்தாபிதம் செய்யப்பட வேண்டுமென்றும், அவர்களுடைய உக்கிராணத்துவங்களின்படி நிறுவனத்தின் அங்கத்தினர்களுக்கு மத்தியிலே அதன் சொத்துக்கள் பிரிக்கப்படவேண்டுமென்றும் இந்த வெளிப்படுத்தல் குறிப்பிடுகிறது. ஜோசப் ஸ்மித்தின் வழிநடத்துதலின் கீழ் “ஐக்கிய நிறுவனம்” என்ற வாக்கியம் பின்னர் வெளிப்படுத்தலில் “ஐக்கிய அமைப்பு” என மாற்றியமைக்கப்பட்டது.

1–10, ஐக்கிய அமைப்புக்கு விரோதமாக மீறுகிற பரிசுத்தவான்கள் சபிக்கப்படுவார்கள்; 11–16, கர்த்தர் அவருடைய சொந்த வழிகளில் பரிசுத்தவான்களுக்கு கொடுக்கிறார்; 17–18, ஏழைகளின் பராமரிப்பை சுவிசேஷ நியாயப்பிரமாணம் அரசாளுகிறது; 19–46, பலவித சகோதரர்களின் உக்கிராணத்துவமும் ஆசீர்வாதங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது; 47–53, கர்த்லாந்தின் ஐக்கிய அமைப்பும் சீயோனின் அமைப்பும் தனித்தனியாக செயல்படவேண்டும்; 54–66, வேதங்களை அச்சடிக்க கர்த்தரின் பரிசுத்த கருவூலம் அமைக்கப்படுகிறது; 67–77, ஐக்கிய அமைப்பின் பொது கருவூலம், பொது ஒப்புதல் அடிப்படையில் செயல்படவேண்டும்; 78–86, ஐக்கிய அமைப்பிலுள்ளவர்கள் தங்களுடைய கடன்களை எல்லாம் செலுத்தவேண்டும், பணத்தின் அடிமைத்தனத்திலிருந்து கர்த்தர் அவர்களை விடுவிப்பார்.

1 என்னுடைய சிநேகிதரே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய சபையின் பலனுக்காகவும் நான் வரும்வரை மனுஷர்களின் இரட்சிப்புக்காகவும் ஒரு ஐக்கிய அமைப்பாயிருக்கவும் ஒரு நித்திய அமைப்பாயிருக்கவும் நிர்வகிக்கப்பட்டும் ஸ்தாபிக்கப்பட்டுமிருக்க நான் உங்களுக்குக் கட்டளையிட்ட, அமைப்பிற்கு சொந்தமாயிருக்கிற சகல சொத்துக்களையும் குறித்து நான் உங்களுக்கு ஒரு ஆலோசனையையும், ஒரு கட்டளையையும் கொடுக்கிறேன்,

2 நான் கட்டளையிட்டவர்கள் உண்மையுள்ளவர்களாயிருக்கிற அளவில் அசைக்க முடியாத மற்றும் மாற்ற முடியாத வாக்குத்தத்தத்துடன் அவர்கள் பன்மடங்கு ஆசீர்வாதங்களுடன் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும்;

3 ஆனால் அவர்கள் உண்மையில்லாதிருக்கிற அளவில் அவர்கள் சாபத்துக்கு சமீபமாயிருக்கிறார்கள்.

4 ஆகவே என்னுடைய ஊழியக்காரர்கள் கட்டளையை கைக்கொள்ளாத அளவில் பொருளாசையாலும் போலியான வார்த்தைகளுடனும் உடன்படிக்கையை உடைத்துப் போட்டார்கள், கடினமான, ஒரு கொடிய மற்றும் பயங்கர சாபத்தினால் அவர்களை நான் சபித்தேன்.

5 ஏனெனில், கர்த்தராகிய நான் என்னுடைய இருதயத்திலே கட்டளையிட்டதாவது, அமைப்பைச் சேர்ந்த எந்த மனுஷனும் நீங்கள் கட்டப்பட்டிருக்கிற உடன்படிக்கையை மீறுகிறவனாக காணப்படுகிற அளவில், அல்லது வேறு வார்த்தைகளில் எனில், உடன்படிக்கையை முறித்துப்போட்டால், அவன் அவனது ஜீவியத்தில் சபிக்கப்பட்டு, நான் அனுப்புகிறவனால் மிதியுண்டுபோவான்.

6 ஏனெனில், கர்த்தராகிய நான் இந்தக் காரியங்களில் இகழப்படக்கூடாது,

7 இதில் எல்லாம், உங்களுக்கு மத்தியிலேயுள்ள மாசற்றவன் அநியாயக்காரனால் ஆக்கினைக்குள்ளாகாதபடிக்கும்; உங்களுக்கு மத்தியிலேயுள்ள குற்றவாளி தப்பிக்காதபடிக்குமே; ஏனெனில் என்னுடைய வலது பாரிசத்தில் உங்களுக்கு மகிமையின் கிரீடத்தை கர்த்தராகிய நான் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறேன்,

8 ஆகவே, நீங்கள் அக்கிரமக்காரர்களாக காணப்படுகிற அளவில் உங்கள் ஜீவியங்களில் என்னுடைய கோபத்திலிருந்து நீங்கள் தப்பிக்கமுடியாது.

9 மீறுதல்களுக்காக நீங்கள் அறுப்புண்டுபோகிற அளவில், மீட்பின் நாள்வரை சாத்தானின் தாக்குதலிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது.

10 இப்பொழுது, இந்த மணி நேரத்திலிருந்து நான் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன், உங்களுக்கு மத்தியிலே அமைப்பிலுள்ள எந்த ஒரு மனுஷனாவது ஒரு மீறுதல் செய்தவனாக காணப்பட்டு, தீமைக்காக மனந்திரும்பாதிருந்தால் சாத்தானின் தாக்குதலுக்கு நீங்கள் அவனை ஒப்படைக்கலாம்; உங்கள் மீது தீமையைக் கொண்டுவர அவனுக்கு அதிகாரமிருக்காது.

11 என்னிலே ஞானம் விளங்கும்; ஆகவே, நான் உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன், நீங்கள் உங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள், ஒவ்வொரு மனுஷனுக்கும் அவனுடைய உக்கிராணத்துவத்தை நியமியுங்கள்;

12 அவனுக்கு நியமிக்கப்பட்ட உக்கிராணத்துவத்தைக் குறித்து ஒவ்வொரு மனுஷனும் ஒரு கணக்கை என்னிடத்தில் கொடுக்கவேண்டும்.

13 ஏனெனில் என்னுடைய சிருஷ்டிகளுக்கு நான் உண்டுபண்ணி ஆயத்தம் செய்த பூமிக்குரிய ஆசீர்வாதங்களின்மீது ஒரு உக்கிராணக்காரனாக, கர்த்தராகிய நான் ஒவ்வொரு மனுஷனையும் பொறுப்புள்ளவனாக்க வேண்டும் என்பது அவசியமாயிருக்கிறது.

14 கர்த்தராகிய நான், வானங்களை விரித்து, என்னுடைய கைவேலையாலே பூமியை கட்டினேன்; அதிலுள்ள சகலமும் என்னுடையவைகள்.

15 என்னுடைய பரிசுத்தவான்களுக்கு அளிப்பது என்னுடைய நோக்கமாயிருக்கிறது, ஏனெனில் சகலமும் என்னுடையவைகள்.

16 ஆனால் அது என்னுடைய சொந்த வழியில் செய்யப்படவேண்டும்; தரித்திரர் மேன்மைப்படுத்தப்பட்டு ஐஸ்வர்யவான்கள் தாழ்த்தப்படும்படியாக இதோ, இந்த வழியிலேயே, கர்த்தராகிய நான் என்னுடைய பரிசுத்தவான்களுக்கு அளிக்க கட்டளையிட்டேன்.

17 ஏனெனில் பூமி நிறைந்திருக்கிறது, போதுமானதும் கொடுக்கக்கூடிய அளவுக்கும் இருக்கிறது; ஆம், நான் சகலவற்றையும் ஆயத்தம் செய்தேன், அவர்களுக்கே பிரதிநிதிகளாயிருக்க மனுபுத்திரர்களுக்கு வல்லமை கொடுத்திருக்கிறேன்.

18 ஆகவே, நான் உண்டு பண்ணின பரிபூரணத்தை எந்த மனுஷனாவது எடுத்துக்கொண்டு, என்னுடைய சுவிசேஷத்தின் நியாயப்பிரமாணத்தின்படி அவனுடைய பங்கை ஏழைகளுக்கும் தரித்திரருக்கும் பிரித்துக் கொடுக்காதிருந்தால் துன்மார்க்கருடன் அவன் பாதாளத்திலே வேதனைப்படுகிறபோது தன் கண்களை ஏறெடுத்துப் பார்ப்பான்.

19 இப்பொழுது, அமைப்பின் சொத்துகளைக் குறித்து மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்,

20 அவன் இப்பொழுது வசித்துக் கொண்டிருக்கிற இடத்தையும், என்னுடைய சித்தத்தின்படியும் நான் அவனுக்கு கட்டளையிடும்போது, என்னுடைய திராட்சைத் தோட்டத்திலே அவன் பிரயாசப்பட்டுக் கொண்டிருக்கும்போது அவனுடைய ஆதரவுக்காகவும் அவனுடைய உக்கிராணத்துவத்துக்காகவும் தோல் பதனிடும் இடத்தையும் அவனுக்கு என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி ரிக்டன் நியமித்தான்.

21 அமைப்பின் ஆலோசனையின்படி, ஒருங்கிணைந்த ஒப்புதலால் அல்லது கர்த்லாந்து தேசத்தில் வசிக்கும் அமைப்பின் குரலால் சகல காரியங்களும் செய்யப்படுவதாக.

22 அவன் மேலும் அவனுக்குப்பின் அவனுடைய சந்ததி மேலும் ஒரு ஆசீர்வாதத்திற்காக இந்த உக்கிராணத்துவத்தையும் ஆசீர்வாதத்தையும் என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி ரிக்டன்மீது கர்த்தராகிய நான் அருளினேன்;

23 எனக்கு முன்பாக அவன் தன்னை தாழ்த்துகிற அளவில் அவன்மீது ஆசீர்வாதங்களை நான் பலுகப்பண்ணுவேன்.

24 மீண்டும், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜான் ஜான்சன் அவனுக்காகவும் அவனுக்குப்பின் அவனுடைய சந்ததிக்கும் அவனுடைய முந்தைய சுதந்தரத்தை பரிமாற்றம் செய்து பெற்றுக்கொண்ட அதிக நிலங்களுக்கு அவனுடைய உக்கிராணத்துவத்திற்காக என்னுடைய ஊழியக்காரனாகிய மார்ட்டின் ஹாரிஸ் அவனுக்குக் கொடுப்பானாக;

25 அவன் உண்மையுள்ளவனாயிருக்கிற அளவில் அவன்மீதும் அவனுக்குப்பின் அவனுடைய சந்ததிமீதும் ஆசீர்வாதங்களை நான் பலுகப்பண்ணுவேன்.

26 என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித், இளையவன் வழிகாட்டுவதைப்போல, என்னுடைய வார்த்தைகளை அறிவிப்பதற்காக என்னுடைய ஊழியக்காரனாகிய மார்ட்டின் ஹாரிஸ் தன்னுடைய பணத்தை அர்ப்பணிப்பானாக.

27 மீண்டும் என்னுடைய ஊழியக்காரனாகிய பிரடெரிக் ஜி. வில்லியம்ஸ், இப்பொழுது அவன் வசிக்கிற இடத்தை வைத்துக் கொள்வானாக.

28 அச்சடிப்பு அலுவலகமாக இருக்கப்போகும், முதலாம் எண் பாகமும், அவனது தகப்பன் வசிக்கிற அந்தப் பாகமுமான, அவனது வீட்டை ஒட்டியுள்ள பாகத்தை என்னுடைய ஊழியக்காரனாகிய ஆலிவர் கௌட்ரி பெறுவானாக.

29 என்னுடைய ஊழியக்காரனாகிய பிரடெரிக் ஜி. வில்லியம்ஸூம், ஆலிவர் கௌட்ரியும், அச்சடிப்பு அலுவலகத்தையும், அதற்கு சம்பந்தப்பட்ட சகல காரியங்களையும் பெறுவார்களாக.

30 அவர்களுக்கு நியமிக்கப்படவிருக்கிற இது அவர்களுடைய உக்கிராணத்துவமாயிருக்கும்.

31 அவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருக்கிற அளவில் இதோ, அவர்களை நான் ஆசீர்வதித்து, அவர்கள்மேலே ஆசீர்வாதங்களை பலுகப்பண்ணுவேன்.

32 அவர்களுக்காகவும் அவர்களுக்குப்பின் அவர்களுடைய சந்ததிக்காகவும் அவர்களுக்கு நான் நியமித்த உக்கிராணத்துவத்தின் ஆரம்பமே இது.

33 அவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருக்கிற அளவில் அவர்கள்மேலும், அவர்களுக்குப் பின்வரும் அவர்களுடைய சந்ததிமேலும் ஆசீர்வாதங்களை, பலமடங்கு ஆசீர்வாதங்களை நான் பலுகப்பண்ணுவேன்.

34 மீண்டும், சுதந்தரங்களுக்கு சம்பந்தப்பட்டதாயிருக்கிற, என்னுடைய ஊழியக்காரனாகிய ஆலிவர் கௌட்ரிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அந்த பாகமான, என்னுடைய ஜெபவீடுகளைக் கட்ட ஒதுக்கிவைக்கப்பட்ட நிலத்தைத் தவிர, அவன் வசித்துக் கொண்டிருக்கும் வீடு மற்றும் சுதந்தரத்தையும் என்னுடைய ஊழியக்காரனாகிய ஜான் ஜான்சன் பெறுவானாக.

35 அவன் உண்மையுள்ளவனாயிருக்கிற அளவில் அவன்மீது நான் ஆசீர்வாதங்களை பலுகப்பண்ணுவேன்.

36 ஆவியின் குரலாலும், அமைப்பின் ஆலோசனையின்படியும், அமைப்பின் குரலாலும், அதை அவன் அறியும்படி செய்கிற அளவில், என்னுடைய பரிசுத்தவான்களின் பட்டணத்தைக் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பாகங்களை அவன் விற்கவேண்டும் என்பது, என்னுடைய சித்தமாகும்.

37 அவனுக்கும் அவனுக்குப்பின் அவனுடைய சந்ததிக்கும் ஒரு ஆசீர்வாதத்திற்காக அவனுக்கு நான் நியமித்த உக்கிராணத்துவத்தின் ஆரம்பமே இது.

38 அவன் உண்மையுள்ளவனாயிருக்கிற அளவில் அவன்மீது பலமடங்கு ஆசீர்வாதங்களை பலுகப்பண்ணுவேன்.

39 மீண்டும், ஜெபவீடுகளையும், அவன் இப்பொழுது வசிக்கிற பாகத்தையும், வர்த்தக ஸ்தாபனம் செயல்படுகிற பங்கையும் கட்டிடத்தையும், வர்த்தக ஸ்தாபனம் இருக்கிற பாகத்தையும், கட்டிடத்தையும், வர்த்தக ஸ்தாபனத்துக்கு தெற்கு மூலையில் அமைந்திருக்கிற பாகத்தையும், சாம்பல் தொழிற்சாலை அமைந்திருக்கிற பாகத்தையும் என்னுடைய ஊழியக்காரனாகிய நீவல் கே. விட்னி தனக்கு நியமித்துக்கொள்வானாக.

40 அவனுடைய உக்கிராணத்துவத்துக்காகவும், அவன்மீதும் அவனுக்குப் பின்வரும் அவனுடைய சந்ததிமீதும் ஒரு ஆசீர்வாதத்திற்காகவும், கர்த்லாந்து தேசத்தில் என்னுடைய பிணையத்துக்காக என்னுடைய அமைப்பில் நான் ஸ்தாபித்த வர்த்தக ஸ்தாபனத்தின் பலனுக்காகவும், இவை யாவையும் என்னுடைய ஊழியக்காரனாகிய நீவல் கே. விட்னிக்கு நான் நியமித்திருக்கிறேன்.

41 ஆம், மெய்யாகவே, இந்த வர்த்தக ஸ்தாபனம் முழுவதையும் அவனுக்கும் அவனுடைய பிரதிநிதிக்கும், அவனுக்குப் பின்வரும் அவனுடைய சந்ததிக்கும் என, என்னுடைய ஊழியக்காரனாகிய என்.கே.விட்னிக்கு நான் நியமித்த உக்கிராணத்துவம் இதுவே.

42 நான் அவனுக்குக் கொடுத்த என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவதில் அவன் உண்மையுள்ளவனாயிருக்கிற அளவில் அவன்மீது ஆசீர்வாதங்களையும் அவனுக்குப் பின்வரும் அவனுடைய சந்ததிமேல், பலமடங்கு ஆசீர்வாதங்களையும் நான் பலுகப்பண்ணுவேன்.

43 மீண்டும், நாற்பது கோல் நீளமும் பன்னிரண்டு கோல் அகலமுமுடைய, என்னுடைய ஆலயம் கட்டப்படுவதற்காக விடப்பட்டிருக்கிற பாகத்தையும், இப்பொழுது அவனுடைய தகப்பன் வசித்துக்கொண்டிருக்கிற சுதந்தரத்தையும்கூட என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித், இளையவன் தனக்கு நியமித்துக் கொள்வானாக;

44 அவன்மீதும் அவனுடைய தகப்பன்மீதும் ஒரு ஆசீர்வாதத்திற்காக அவனுக்கு நான் நியமித்த உக்கிராணத்துவத்தின் ஆரம்பமே இது.

45 ஏனெனில் இதோ, அவனுடைய தகப்பனின் ஆதரவுக்காக ஒரு சுதந்தரத்தை நான் ஒதுக்கிவைத்திருக்கிறேன்; ஆகவே அவன் என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித், இளையவன் வீட்டாராக கருதப்படுவான்.

46 என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவன் உண்மையாயிருக்கும் அளவில், அவனுடைய வீட்டின்மீது பலமடங்கு ஆசீர்வாதங்களால் ஆசீர்வதிப்பேன்.

47 இப்பொழுது சீயோனைக்குறித்து நான் உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன், இந்த விவரத்தில் மட்டும் சீயோனின் உங்களுடைய சகோதரருக்கு, ஒரு ஐக்கிய அமைப்பாக நீங்கள் இனியும் கட்டுண்டிருக்கமாட்டீர்கள்,

48 நீங்கள் உங்களை ஒழுங்குபடுத்திய பின்பு கர்த்லாந்து பட்டணத்தில் சீயோனின் பிணையம், கர்த்லாந்து பட்டண ஐக்கிய அமைப்பு, என நீங்கள் அழைக்கப்படுவீர்கள். உங்களது சகோதரர்கள், அவர்கள் ஒழுங்கு படுத்தப்பட்டபின்பு சீயோன் பட்டணத்தின் ஐக்கிய அமைப்பு என அழைக்கப்படுவார்கள்.

49 அவர்களுடைய சொந்த பெயரில் மற்றும் அவர்களுடைய சொந்த பெயர்களில் அவர்கள் ஒழுங்கு படுத்தப்படுவார்கள்; அவர்களுடைய சொந்த பெயரில் மற்றும் அவர்களுடைய சொந்த பெயர்களில் அவர்கள் பரிவர்த்தனைகளைச் செய்வார்கள்;

50 உங்களுடைய சொந்த பெயரில் மற்றும் உங்களுடைய சொந்த பெயர்களில் நீங்கள் உங்களுடைய பரிவர்த்தனைகளைச் செய்வீர்கள்.

51 அவர்கள் விரட்டி அடிக்கப்படுகிற மற்றும் வரவிருப்பனவற்றின் விளைவாக, உங்களுடைய இரட்சிப்புக்காகவும், அவர்களுடைய இரட்சிப்புக்காகவும் செய்யப்பட வேண்டுமென இதை நான் கட்டளையிட்டேன்.

52 மீறுதல் மூலமாக, பொருளாசையாலும், போலியான வார்த்தைகளாலும் உடன்படிக்கைகள் மீறப்படுகின்றன,

53 ஆகவே, உங்களுடைய சூழ்நிலையும், ஆலோசனைக்குழு வழிகாட்டுதலின் குரலும் அனுமதிக்கிறார்போல, ஆலோசனைக் குழுவில் இந்த அமைப்பு ஒப்புக்கொண்டதைப்போல, கடனால் இந்த விவரத்தில் மட்டும் நான் சொன்னதைப்போல இந்த மணிநேரம்வரை மட்டுமே அவர்களுக்கு நீங்கள் கட்டுண்டவர்களாயிராதபடிக்கு, உங்களுடைய சகோதரருடன் ஒரு ஐக்கிய அமைப்பாயிருந்ததில் இருந்து நீங்கள் கலைக்கப்படுகிறீர்கள்.

54 மீண்டும், நான் உங்களுக்கு நியமித்த உங்களுடைய உக்கிராணத்துவத்தைக் குறித்து நான் உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன்.

55 இதோ, இந்த சொத்துக்கள் முழுவதும் என்னுடையவைகள், அல்லது உங்களுடைய விசுவாசம் விருதா, நீங்கள் மாயக்காரராக கருதப்படுகிறீர்கள், என்னுடன் நீங்கள் செய்துகொண்ட உடன்படிக்கைகள் மீறப்படுகின்றன;

56 சொத்துக்கள் என்னுடையவைகளாயிருந்தால், அப்போது நீங்கள் உக்கிராணக்காரர்களாய் இருக்கிறீர்கள்; இல்லையெனில் நீங்கள் உக்கிராணக்காரர்களில்லை.

57 ஆனால், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஆலயத்திற்கு உக்கிராணக்காரர்களாயிருக்க, ஆம், உண்மையிலேயே உக்கிராணக்காரர்களாயிருக்க, நான் உங்களை நியமித்தேன்.

58 இந்த நோக்கத்திற்காகவே உங்களை ஒழுங்குபடுத்த, என்னுடைய வேதங்களின் பரிபூரணமான, நான் உங்களுக்குக் கொடுத்த, வெளிப்படுத்தல்களான, என்னுடைய வார்த்தைகளையும் மற்றும் இப்போதிலிருந்து நான் உங்களுக்கு அவ்வப்போது கொடுக்கிறவற்றையும்,

59 பூமியில் என்னுடைய சபையையும், ராஜ்யத்தையும் கட்டுவதன் நோக்கத்திற்காக மற்றும் சமீபமாயிருக்கிற, அவர்களோடு நான் வாசம் செய்யப்போகிற, காலத்திற்காக, என்னுடைய ஜனங்களை ஆயத்தம் செய்ய, அச்சடிக்க நான் உங்களுக்குக் கட்டளையிட்டேன்.

60 மேலும் உங்களுக்காக, கருவூலத்திற்காக, ஒரு இடத்தை நீங்கள் ஆயத்தம் செய்து அதை என்னுடைய நாமத்தில் பரிசுத்தப்படுத்துங்கள்.

61 கருவூலத்தை நிர்வாகம் செய்ய உங்களுக்கு மத்தியிலே ஒருவனை நீங்கள் நியமியுங்கள் மற்றும் இந்த ஆசீர்வாதத்திற்கு அவன் நியமனம் செய்யப்படுவான்.

62 கருவூலத்திற்கு ஒரு முத்திரையிருக்கும், சகல பரிசுத்தமான பொருட்களும் கருவூலத்திற்கு அனுப்பப்படும்; உங்களுக்கு மத்தியிலுள்ள எந்த மனுஷனும் அதை, அதிலுள்ள எந்த பகுதியையும் சொந்தமாக்கிக் கொள்ளக்கூடாது, ஏனெனில் ஒரே நோக்கத்துடன் உங்கள் யாவருக்கும் அது சொந்தமாயிருக்கும்.

63 இந்த மணிநேரத்திலேயே நான் உங்களுக்கு அதைக்கொடுக்கிறேன்; நான் சொன்னதைப்போல இந்த பரிசுத்தமான காரியங்களை அச்சடிப்பதன் நோக்கத்திற்காக, பரிசுத்தமானவை தவிர, நான் உங்களுக்கு நியமித்த உக்கிராணத்துவங்களை இப்பொழுது நீங்கள் போய் பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள்.

64 பெறப்படுகிற பரிசுத்த பொருட்கள் கருவூலத்தில் வைக்கப்படும், அதன்மீது ஒரு முத்திரையிருக்கும்; அமைப்பின் குரலால் அல்லது கட்டளையால் மாத்திரமேயன்றி யாராலும் அது பயன்படுத்தப்படவோ அல்லது கருவூலத்திலிருந்து எடுக்கப்படவோ மாட்டாது, அதன்மீது பதிக்கப்பட்டுள்ள முத்திரையும் உடைக்கப்படக் கூடாது.

65 பரிசுத்தமான மற்றும் நீதியான நோக்கங்களுக்காக இப்படியாக, கொண்டுவரப்படுகிற பரிசுத்த பொருட்களை நீங்கள் பாதுகாப்பீர்களாக.

66 கர்த்தரின் பரிசுத்த கருவூலமென இது அழைக்கப்படுவதாக; அது கர்த்தருக்கு பரிசுத்தமாகவும் பரிசுத்தமாக்கப்பட்டதாகவும் இருக்கும்படிக்கு, அதன்மீது ஒரு முத்திரை பதிக்கப்படுவதாக.

67 மீண்டும், அங்கே மற்றுமொரு கருவூலம் ஆயத்தம் பண்ணப்படும், கருவூலத்தை நிர்வாகம் செய்ய ஒரு கருவூலக் காப்பாளர் நியமிக்கப்பட்டு அதன்மீது ஒரு முத்திரை பதிக்கப்படும்;

68 நான் உங்களுக்கு நியமித்த சொத்துக்களை விருத்தி செய்து, வீடுகளில், அல்லது நிலங்களில், அல்லது கால்நடைகளில், அல்லது நீதியான மற்றும் பரிசுத்தமான நோக்கங்களுக்காக நானே ஒதுக்கிவைத்திருக்கிற, நீதியான மற்றும் பரிசுத்தமான எழுத்துக்களைத்தவிர, உங்களுடைய உக்கிராணத்துவத்தில் நீங்கள் பெறும் பணங்கள் யாவும், நூறாக, அல்லது ஐம்பதாக, அல்லது இருபதுகளாக, அல்லது பத்துகளாக, அல்லது ஐந்துகளாக, நீங்கள் பணத்தைப் பெற்ற உடனேயே கருவூலத்திலே போடப்படவேண்டும்.

69 அல்லது வேறு வார்த்தைகளில் எனில், உங்களுக்கு மத்தியிலே எந்த மனுஷனாவது ஐந்து டாலர்களைப் பெற்றால் அதை அவன் கருவூலத்திற்குள் வைப்பானாக; அல்லது அவன் பத்து, அல்லது இருபது, அல்லது ஐம்பது, அல்லது ஒரு நூறை பெற்றாலும் அப்படியே அவன் செய்வானாக;

70 அது தன்னுடையது என உங்களுக்கு மத்தியிலே எவனாவது சொல்லாதிருப்பானாக; ஏனெனில் அது அல்லது அதின் எந்த பகுதியும் அவனுடையதென கருதப்படுவதில்லை.

71 அமைப்பின் குரலாலும் பொது ஒப்புதலினாலுமேயன்றி, அதன் எந்த பகுதியும் பயன்படுத்தப்படவோ, கருவூலத்திலிருந்து எடுக்கப்படவோ மாட்டாது.

72 உங்களுக்கு மத்தியிலே எந்த மனுஷனாவது கருவூலக் காப்பாளரிடம், என்னுடைய உக்கிராணத்துவத்தில் எனக்குதவ இது எனக்கு அவசியமாயிருக்கிறது என்று சொன்னால்,

73 அவனுடைய உக்கிராணத்துவத்தில் அவனுக்குதவ அவனுக்கு அவசியமாயிருக்கிற அது ஐந்து டாலர்களாயிருந்தால், அல்லது பத்து டாலர்களாயிருந்தால் அல்லது இருபது அல்லது ஐம்பது அல்லது ஒரு நூறை,

74 அவன் மீறுதல் செய்தவனாக கண்டுபிடிக்கப்பட்டு மற்றும் அவன் ஒரு உண்மையற்றவனும், புத்தியில்லாதவனுமான உக்கிராணக்காரன் என்றும் அமைப்பின் ஆலோசனைக் குழுவிற்கு முன் தெளிவாக அது வெளியரங்கப்படும்வரை, கருவூலக் காப்பாளர் தொகையை அவனுக்குக் கொடுப்பார், இதுவே அமைப்பின் குரலும் பொது ஒப்புதலாயுமிருக்கும்.

75 ஆனால் அவன் ஐக்கியத்திலிருக்குமட்டும், அவனுடைய உக்கிராணத்துவத்தில் உண்மையுள்ளவனாயும் புத்திசாலியாகவும் இருக்கும்வரை, கருவூலக் காப்பாளர் வைத்திருக்காமலிருக்க கருவூலக் காப்பாளருக்கு இது அவனுடைய அடையாளமாயிருக்கும்.

76 ஆனால் மீறுதலாயிருந்தால், ஆலோசனைக்குழுவின், கட்டளையின் குரலுக்கு கருவூலக் காப்பாளர் கீழ்ப்படிவார்.

77 ஒருவேளை கருவூலக் காப்பாளர் ஒரு நேர்மையற்றவனாகவும், புத்தியில்லாத உக்கிராணக்காரனாகவும் காணப்பட்டால், அவன் அமைப்பின் ஆலோசனைக்குழுவின், குரலுக்கு கீழ்ப்பட்டவனாயிருப்பான், அவனுடைய ஸ்தானத்திலிருந்து நீக்கப்பட்டு, அவனுக்குப்பதிலாக வேறொருவன் நியமிக்கப்படுவான்.

78 மீண்டும், உங்களுடைய கடனைப்பற்றி மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இதோ, உங்களுடைய கடன்களையெல்லாம் நீங்கள் செலுத்த வேண்டுமென்பது என்னுடைய சித்தமாயிருக்கிறது.

79 எனக்கு முன்பாக நீங்கள் உங்களைத் தாழ்த்தி, உங்களுடைய சிரத்தையாலும், தாழ்மையாலும், விசுவாசத்தின் ஜெபத்தாலும் இந்த ஆசீர்வாதங்களைப்பெற வேண்டுமென்பது என்னுடைய சித்தமாயிருக்கிறது.

80 நீங்கள் சிரத்தையாயும், தாழ்மையாயுமிருந்து, விசுவாசத்தின் ஜெபத்தை பிரயோகிக்கிற அளவில், இதோ, உங்களின் விடுதலைக்காக உங்களுக்கு நான் வழிவகைகளை அனுப்பும்வரை நீங்கள் கடன்பட்டிருக்கிறவர்களின் இருதயங்களை நான் இளகப்பண்ணுவேன்.

81 ஆகவே நியூயார்க்கிற்கு சீக்கிரத்திலேயே எழுதுங்கள், மற்றும் என்னுடைய ஆவியினால் கட்டளையிடுகிறபடி எழுதுங்கள்; உங்களுக்கு உபத்திரவம் கொடுப்பதை, அவர்களின் மனங்களிலிருந்து அது எடுக்கப்படும்படியாக, நீங்கள் கடன்பட்டிருக்கிறவர்களின் இருதயங்களை நான் இளகப்பண்ணுவேன்.

82 நீங்கள் தாழ்மையாயும் உண்மையுள்ளவர்களாயுமிருந்து, என்னுடைய நாமத்தில் அழைக்கும் அளவில் நான் உங்களுக்கு ஜெயம் தருவேன்.

83 உங்களுடைய அடிமைத்தனத்திலிருந்து இந்த ஒருமுறை நீங்கள் விடுதலையாக்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுக்கிறேன்.

84 நூற்றுக்கணக்கில், அல்லது ஆயிரக்கணக்கில், பணத்தை நீங்கள் கடன் பெற ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்கும் அளவில், அடிமைத்தனத்திலிருந்து உங்களை நீங்களே விடுதலையாக்க போதுமான அளவிற்கு நீங்கள் கடன் பெறும்வரை, அது உங்களின் சிலாக்கியம்.

85 பொது ஒப்புதலால் அல்லது வேறு விதத்தில் உங்களுடைய பெயர்களைக் கொடுத்து, உங்களுக்கு நன்மையாய் தோன்றுகிறபடி, இந்த முறை, நான் உங்களுடைய கைகளில் கொடுத்த சொத்துக்களை அடமானம் வையுங்கள்.

86 இந்த முறை இந்த சிலாக்கியத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்; இதோ, என்னுடைய கட்டளைகளின்படி, உங்களுக்கு முன் நான் வைத்த காரியங்களைச் செய்ய நீங்கள் ஆரம்பித்தால், இந்த காரியங்கள் யாவும் என்னுடையவைகள், நீங்கள் என்னுடைய உக்கிராணக்காரர்கள், தன்னுடைய வீடு இடிக்கப்பட எஜமான் விடமாட்டார். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.