வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 66


பாகம் 66

அக்டோபர் 29, 1831ல் ஒஹாயோவின் ஹைரமில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். ஜோசப் ஸ்மித் அறியாத ஐந்து கேள்விகளுக்கு தீர்க்கதரிசி மூலமாக பதிலைக் கொடுக்க வில்லியம் இ. மெக்லெலின் இரகசியமாக கர்த்தரை வேண்டினார். வில்லியம் இ. மெக்லெலினின் வேண்டுகோளின்படி, தீர்க்கதரிசி கர்த்தரிடம் கேட்டு இந்த வெளிப்படுத்தலைப் பெற்றார்.

1–4, நித்திய உடன்படிக்கை, சுவிசேஷத்தின் பரிபூரணம்; 5–8, மூப்பர்கள், பிரசங்கிக்கவும், சாட்சி கொடுக்கவும், ஜனங்களுடன் நியாயப்படுத்தி விளக்க வேண்டும்; 9–13, உண்மையுள்ள ஊழியச் சேவை நித்திய ஜீவனின் சுதந்தரத்தை உறுதிப்படுத்துகிறது.

1 இதோ, என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம் இ. மெக்லெலினுக்கு கர்த்தர் இப்படியாகச் சொல்லுகிறார், உன்னுடைய அக்கிரமங்களிலிருந்து நீ விலகி, என்னுடைய சத்தியத்தை பெறுகிற அளவில் நீயும் என்னுடைய நாமத்தில் விசுவாசமுள்ள அநேகரும் பாக்கியவான்களாயிருப்பீர்கள் என உங்களுடைய மீட்பரும், உலகத்தின் இரட்சகருமான கர்த்தர் சொல்லுகிறார்.

2 மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், பூர்வ நாட்களில் தீர்க்கதரிசிகளாலும், அப்போஸ்தலர்களாலும், அது எழுதப்பட்டதைப்போல, அவைகள் ஜீவனைக் கொண்டிருக்கவும், கடைசி நாட்களில் வெளிப்படுத்தப்படப்போகிற, மகிமைகளில் பங்காளிகளாக்கப்பட மனுபுத்திரருக்குள் அனுப்பப்பட்ட, என்னுடைய நித்திய உடன்படிக்கையையும், என்னுடைய சுவிசேஷத்தின் பரிபூரணத்தையும் பெறுவதால் நீ பாக்கியவானாயிருக்கிறாய்.

3 மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம், நீ சுத்தமாயிருக்கிறாய், ஆனால் எல்லாவற்றிலும் அல்ல; ஆகவே என்னுடைய பார்வைக்கு பிரியமாயில்லாத அந்தக் காரியங்களுக்காக மனந்திரும்பு என கர்த்தர் சொல்லுகிறார், ஏனெனில் கர்த்தர் அவைகளை உனக்குக் காட்டுவார்.

4 இப்பொழுது, மெய்யாகவே, உன்னைக் குறித்து நான் என்ன செய்வேன் என்பதை அல்லது உன்னைப்பற்றிய என்னுடைய சித்தத்தை கர்த்தராகிய நான் உனக்குக் காட்டுவேன்.

5 இதோ, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், தேசம் விட்டு தேசத்துக்கும், பட்டணம் விட்டு பட்டணத்துக்கும், ஆம், அது அறிவிக்கப்படாத சுற்றிலுமுள்ள அந்த பகுதிகளிலும் என்னுடைய சுவிசேஷத்தை நீ அறிவிக்க வேண்டுமென்பது என்னுடைய சித்தமாயிருக்கிறது.

6 இந்த இடத்தில் அநேக நாட்கள் தங்கவேண்டாம்; இப்போதே சீயோன் தேசத்திற்கு போகவேண்டாம்; ஆனால் எவ்வளவு அனுப்பமுடியுமோ, அவ்வளவு அனுப்பு; அதாவது, உன் ஆஸ்தியைப்பற்றி நினைக்கவேண்டாம்.

7 கிழக்கு தேசங்களுக்குப் போ, எல்லா இடத்திலும், எல்லா ஜனங்களிடத்திலும், அவர்களுடைய ஜெப ஆலயங்களிலும், ஜனங்களிடத்தில் விவரித்துச் சொல்லிக்கொண்டு சாட்சி கொடு.

8 என்னுடைய ஊழியக்காரனாகிய சாமுவேல் ஹெச். ஸ்மித் உன்னோடு வருவானாக, அவனைக் கைவிடாதே, உன்னுடைய அறிவுரைகளை அவனுக்குக் கொடு; எல்லா இடத்திலும் உண்மையுள்ளவன் பெலப்படுத்தப்படுவான்; கர்த்தராகிய நான் உன்னோடு வருவேன்.

9 வியாதியஸ்தர்மேல் உன் கைகளை வை, அவர்கள் குணமடைவார்கள். கர்த்தராகிய நான் உன்னை அனுப்புமட்டும் திரும்பாதே. உபத்திரவத்திலே பொறுமையாயிரு. கேள், பெற்றுக்கொள்வாய், தட்டு, உனக்குத் திறக்கப்படும்.

10 வருத்தமாயிருக்க நாடாதே. சகல அநீதியானவைகளையும் விட்டுவிடு. நீ தொந்தரவு அடைந்த சோதனையான, விபசாரம் செய்யாதிருப்பாயாக.

11 இந்த சொற்களைக் கைக்கொள், ஏனெனில் அவைகள் சத்தியமும் உண்மை உள்ளவைகளுமாயும் இருக்கிறது, உன்னுடைய அலுவலை சிறப்பாக்கு, தங்கள் தலைகளின்மேல் நித்திய சந்தோஷத்தின் பாடல்களுடன் சீயோனுக்கு அநேக ஜனங்களை அனுப்பு.

12 முடிவுபரியந்தமும் இந்தக் காரியங்களைத் தொடர்ந்து செய், கிருபையும் சத்தியமும் நிறைந்த என்னுடைய பிதாவின் வலது பாரிசத்தில் நித்திய ஜீவனின் கிரீடத்தை நீ பெறுவாய்.

13 மெய்யாகவே, உன்னுடைய தேவனாகிய கர்த்தரும், மீட்பருமான, இயேசு கிறிஸ்து இப்படிச் சொல்லுகிறார். ஆமென்.