வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 125


பாகம் 125

அயோவா பிராந்தியத்தில் பரிசுத்தவான்களைக் குறித்து மார்ச் 1841ல் இலினாயின் நாவூவில் தீர்க்கதரிசியின் மூலமாக கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல்.

1–4, பரிசுத்தவான்கள் பட்டணங்களைக் கட்ட வேண்டும், சீயோனின் பிணையங்களில் கூடிச்சேர வேண்டும்.

1 அயோவா பிரதேசத்தில் பரிசுத்தவான்களைக் குறித்து கர்த்தரின் சித்தமென்ன?

2 மெய்யாகவே, இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார், என்னுடைய நாமத்தினால் தங்களை அழைத்து என்னுடைய பரிசுத்தவான்களாக அழைக்கப்பட அவர்கள் முயற்சித்துக்கொண்டிருந்தால், அவர்கள் என்னுடைய சித்தத்தை செய்து அவர்களைக் குறித்த என்னுடைய கட்டளைகளை கைக்கொண்டால், என்னுடைய ஊழியக்காரனான ஜோசப்பால் என்னுடைய நாமத்தில் அவர்களுக்கு நான் நியமித்த இடங்களில் அவர்கள் கூடிவந்து, வரப்போகிற ஒரு சமயத்திற்காக வைக்கப்பட்டிருக்கிற அவர்கள் ஆயத்தமாயிருக்கும்படியாக, என்னுடைய நாமத்தில் பட்டணங்களைக் கட்டுவார்களாக, என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

3 நாவூ பட்டணத்தின் எதிரேயுள்ள நிலத்தில் என்னுடைய நாமத்தில் அவர்கள் ஒரு பட்டணத்தைக் கட்டுவார்களாக, அதன் மேல் சாரகெம்லாவின் பெயர் சூட்டப்படுவதாக.

4 அங்கே வசிக்க வேண்டுமென விருப்பங்கள் கொண்ட, கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் வருகிற அனைவரும் அங்கேயே, அப்படியே நாஷ்வில் பட்டணத்தில் அல்லது நாவூ பட்டணத்திலும் நான் நியமித்த அனைத்து பிணையங்களிலும் தங்களுடைய சுதந்தரத்தை எடுத்துக்கொள்வார்களாக என கர்த்தர் சொல்லுகிறார்.