வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107


பாகம் 107

ஏறக்குறைய ஏப்ரல் 1835 ஒஹாயோவின் கர்த்லாந்தில், ஆசாரியத்துவத்தைப்பற்றி, தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். 1835ல் இந்த பாகம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும்கூட வசனங்கள் 60லிருந்து 100வரை நவம்பர் 11, 1831ல் ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட ஒரு வெளிப்படுத்தலில் அநேகமானவை இணைக்கப்பட்டிருப்பதை வரலாற்று பதிவுகள் உறுதி செய்கிறது. இந்த பாகம் பெப்ருவரி மற்றும் மார்ச் 1835ல் பன்னிருவர் குழும அமைப்பை அமைத்ததுடன் தொடர்புடையதாய் இருக்கிறது. தங்களுடைய முதல் குழும ஊழியத்தில், மே 3, 1855ல் புறப்பட இருந்தவர்களுக்கு முன்னிலையில் தீர்க்கதரிசி இதை ஒருவேளை அறிவித்திருந்திருப்பார்.

1–6, இரண்டு ஆசாரியத்துவங்கள் உள்ளன: மெல்கிசேதேக்கு மற்றும் ஆரோனிய; 7–12, மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்கள் சபையின் எல்லா அலுவல்களிலும் கடமையாற்ற அதிகாரம் பெற்றிருக்கிறார்கள்; 13–17, வெளியரங்கமான நியமங்களை நிர்வகிக்கிற, ஆரோனிய ஆசாரியத்துவத்துக்கு ஆயத்துவம் தலைமை தாங்குகிறது; 18–20, ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களின் திறவுகோல்களை மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருக்கிறது; தூதர்களின் பணிவிடையின் திறவுகோல்களை ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்திருக்கிறது; 21–38, பிரதான தலைமை, பன்னிருவர் மற்றும் எழுபதின்மர் தலைமை தாங்கும் குழுமங்களை அமைக்கின்றனர், அவர்களின் தீர்மானங்கள் ஒற்றுமையிலும் நீதியிலும் எடுக்கப்பட வேண்டும்; 39–52, கோத்திரத்தலைவனின் அமைப்பு ஆதாமிலிருந்து நோவாவரை ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது; 53–57, ஆதாம்-ஓந்தி-ஆமானில் பூர்வகால பரிசுத்தவான்கள் கூடினார்கள், கர்த்தர் அவர்களுக்கு தோன்றினார்; 58–67, சபையின் அலுவலர்களை பன்னிருவர் கிரமப்படி அமைப்பார்கள்; 68–76, இஸ்ரவேலில் பொது நியாயாதிபதிகளாக ஆயர்கள் பணிபுரிகிறார்கள்; 77–84, சபையின் மிக உயர்வான நீதிமன்றம், பிரதான தலைமையையும் பன்னிருவரையும் உள்ளடக்கியுள்ளது; 85–100, ஆசாரியத்துவ தலைவர்கள் அவர்களுக்குரிய குழுமங்களை நிர்வகிப்பார்கள்.

1 சபையில் மெல்கிசேதேக்கு மற்றும் லேவிய ஆசாரியத்துவம் உள்ளிட்ட ஆரோனிய ஆசாரியத்துவம் என இரண்டு ஆசாரியத்துவங்கள் உள்ளன.

2 முதலாமது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் என அழைக்கப்படுவது ஏனென்றால், மெல்கிசேதேக்கு ஒரு மகத்தான பிரதான ஆசாரியனாயிருந்தான்.

3 அவனது நாட்களுக்கு முன், தேவ குமாரனின் முறைமையின்படி அது பரிசுத்த ஆசாரியத்துவமாக அழைக்கப்பட்டது.

4 ஆனால் பரிபூரணரின் நாமத்திற்கு கொடுக்கப்படும் மரியாதை அல்லது பக்தியினிமித்தம், அவருடைய நாமத்தை அடிக்கடி திரும்பச் சொல்வதை தவிர்க்கவும், பூர்வ காலங்களில் சபை ஆசாரியத்துவத்தை மெல்கிசேதேக்கின் பெயரால் அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் என அழைத்தது.

5 சபையின் மற்ற அனைத்து அதிகாரங்களும் அல்லது அலுவல்களும் இந்த ஆசாரியத்துவத்திற்கு பிற்சேர்க்கைகள்.

6 ஆனால் அங்கே இரண்டு பிரிவுகள் அல்லது மிக முக்கியமான தலைமைகளிருக்கின்றன, மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் ஒன்று, மற்றொன்று ஆரோனிய அல்லது லேவி கோத்திரத்தின் ஆசாரியத்துவம்.

7 ஒரு மூப்பரின் அலுவல் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் கீழ் வருகிறது.

8 மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தலைமையின் உரிமையைத் தரித்திருக்கிறது, மற்றும் ஆவிக்குரிய காரியங்களை நிர்வகிக்க உலகத்தின் சகல காலங்களிலும் சபையின் சகல அலுவல்களிலும் வல்லமையையும் அதிகாரத்தையும் கொண்டிருக்கிறது.

9 சபையின் சகல அலுவல்களிலும் கடமையாற்ற மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் முறைமையின்படி பிரதான ஆசாரியத்துவத்தின் தலைமைக்கு உரிமையிருக்கிறது.

10 ஆவிக்குரிய காரியங்களை நிர்வகிப்பதில், ஒரு மூப்பர், ஆசாரியர் (லேவி கோத்திரத்தின் முறைமையின்படி), ஆசிரியர், உதவிக்காரன் மற்றும் அங்கத்தினர் அலுவல்களில் கடமையாற்றவும், தலைமையின் வழிநடத்துதலின் கீழ் தங்களுடைய சொந்த தீர்மானத்தின்படி கடமையாற்ற மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் முறைமையின்படி பிரதான ஆசாரியர்களுக்கு உரிமையிருக்கிறது.

11 பிரதான ஆசாரியன் இல்லாதிருக்கும்போது அவனுக்குப் பதிலாக கடமையாற்ற ஒரு மூப்பருக்கு உரிமையிருக்கிறது.

12 சபையின் உடன்படிக்கைகளுக்கும் கட்டளைகளுக்கும் ஏற்புடைய ஆவிக்குரிய காரியங்களை பிரதான ஆசாரியனும் மூப்பரும் நிர்வகிக்கவேண்டும்; உயர் அதிகாரிகள் இல்லாதிருக்கும்போது சபையின் இந்த சகல அலுவல்களிலும் கடமையாற்ற அவர்களுக்கு உரிமையிருக்கிறது.

13 இரண்டாவது ஆசாரியத்துவம் ஆரோனின் ஆசாரியத்துவம் என அழைக்கப்படுகிறது, ஏனெனில், ஆரோன் மேலும் அவனுடைய சந்ததி மேலும் அவர்களுடைய சந்ததியார் யாவர் மேலும் அது அருளப்பட்டது.

14 இளநிலை ஆசாரியத்துவமென ஏன் அது அழைக்கப்படுகிறதென்றால், வெளியரங்கமான நியமங்களை நிர்வகிக்கும் அதிகாரமிருப்பதாலும், அது பெரிய அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்திற்கு இணைப்பாய் இருப்பதாலுமே.

15 ஆயத்துவம் இந்த ஆசாரியத்துவத்திற்கு தலைமையாயிருக்கிறது, மற்றும் அதன் திறவுகோல்கள் அல்லது அதிகாரத்தைத் தரித்திருக்கிறது.

16 ஆரோனின் நேரடி சந்ததியாயிருப்பவனைத் தவிர, இந்த அலுவலுக்கு, இந்த ஆசாரியத்துவத்தின் திறவுகோல்களைத் தரித்திருப்பதற்கு சட்டப்படியான உரிமை ஒருவனுக்குமில்லை.

17 ஆனால், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் பிரதான ஆசாரியனாக இளநிலை அலுவல்கள் அனைத்திலும் கடமையாற்ற அதிகாரமிருக்கிறது, அவன் அழைக்கப்பட்டு, இந்த அதிகாரத்திற்கு ஏற்படுத்தப்பட்டு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் தலைமையின் கைகளால் நியமனம் செய்யப்பட்டிருந்தால் ஆரோனின் நேரடி சந்ததி யாரும் காணப்படாதபோது அவர் ஆயரின் அலுவலில் கடமையாற்றலாம்.

18 உயர்ந்த, அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் வல்லமை மற்றும் அதிகாரமென்பது, சபையின் சகல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களின் அனைத்து திறவுகோல்களையும் தரித்து,

19 பரலோக ராஜ்யத்தின் இரகசியங்களைப் பெறுவதில் சிலாக்கியத்தைக் கொண்டிருப்பதும், அவர்களுக்காக வானங்கள் திறக்கப்படுவதும், பொதுச் சபையுடனும், முதற்பேறானவரின் சபையுடனும் பேசுவதும், பிதாவாகிய தேவன் மற்றும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரான இயேசுவின் ஐக்கியத்திலும் பிரசன்னத்திலும் ஆனந்தமடைவதுமாகும்.

20 இளநிலை அல்லது ஆரோனிய ஆசாரியத்துவத்தின் வல்லமை அல்லது அதிகாரமென்பது, தூதர்களின் பணிவிடையின் திறவுகோல்களை தரித்திருப்பதும், உடன்படிக்கைகளுக்கும் கட்டளைகளுக்கும் ஏற்புடைய, வெளியரங்கமான நியமங்களான, பாவங்களின் மீட்பிற்காக, மனந்திரும்புதலின் ஞானஸ்நானமாகிய, சுவிசேஷத்தின் சத்தியத்தை நிர்வகிப்பதுமாகும்.

21 தேவைக்கேற்றார்போல இந்த இரண்டு ஆசாரியத்துவங்களிலுள்ள ஏராளமான அலுவல்களுக்கு மத்தியிலிருந்து வருகிற அல்லது பணிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட தலைவர்கள் அல்லது தலைமை அலுவலர்கள் இருக்கிறார்கள்.

22 மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தில் உள்ள மூன்று தலைமை தாங்கும் பிரதான ஆசாரியர்கள், குழுவால் தெரிந்தெடுக்கப்பட்டு, பணிக்கப்பட்டு, அந்த அலுவலுக்கு நியமனம் செய்யப்பட்டு, சபையின் நம்பிக்கை, விசுவாசம், மற்றும் ஜெபத்தால் ஆதரிக்கப்படுகிறவர்கள் சபையின் தலைமையின் குழுமமாகிறார்கள்.

23 பிரயாணம் செய்யும் பன்னிரு ஆலோசகர்கள், பன்னிரு அப்போஸ்தலர்களாக, அல்லது உலகம் முழுவதிலும் கிறிஸ்துவின் நாமத்தில் விசேஷித்த சாட்சிகளாக அழைக்கப்படுகிறார்கள், இப்படியாக சபையிலுள்ள பிற அலுவலர்களின் அழைப்பின் கடமைகளிலிருந்து அவர்கள் வேறுபடுகிறார்கள்.

24 முன்பு குறிப்பிடப்பட்ட மூன்று தலைவர்களின் அதிகாரத்திலும் வல்லமையிலும் சமமாயிருந்து அவர்கள் ஒரு குழுமமாகிறார்கள்.

25 சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், புறஜாதியாருக்கும், உலகம் முழுமைக்கும் விசேஷித்த சாட்சிகளாக இருக்கவும் எழுபதின்மரும் அழைக்கப்படுகிறார்கள், இப்படியாக சபையிலுள்ள பிற அலுவலர்களின் அழைப்பின் கடமைகளிலிருந்து அவர்கள் வேறுபடுகிறார்கள்.

26 இப்போது அவர்கள் குறிப்பிடப்பட்ட பன்னிரு விசேஷித்த சாட்சிகள் அல்லது அப்போஸ்தலர்களின் அதிகாரத்திற்கு சமமான ஒரு குழுமமாகிறார்கள்.

27 இந்த குழுமங்கள் ஒவ்வொன்றிலும் எடுக்கப்படும் ஒவ்வொரு தீர்மானமும் அவர்களின் ஏகோபித்த குரலாயிருக்க வேண்டும்; அதாவது, அதே வல்லமை அல்லது மதிப்புடன் ஒருவருக்கொருவர் சட்டபூர்வமாக தங்களுடைய தீர்மானங்களை எடுக்கும்படியாக ஒவ்வொரு குழுமத்திலுமுள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் அதன் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்,

28 சூழ்நிலைகள் அதை சாத்தியமில்லாததாக்கும்போது பெரும்பான்மையானோர் ஒரு குழுமமாகலாம்,

29 அப்படியில்லையென்றால், பூர்வகாலத்தில் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் முறைமையின்படி நியமனம் செய்யப்பட்டவர்களும் நீதிமான்களும் பரிசுத்த மனுஷர்களுமாயிருந்த மூன்று தலைவர்களின் குழுமத்தின் தீர்மானங்களான அதே ஆசீர்வாதங்களுக்கு அவர்களின் தீர்மானங்கள் பாத்திரமாவதில்லை.

30 எல்லா நீதியிலும், பரிசுத்தத்திலும், இருதயத்தின் தாழ்மையிலும், சாந்தத்திலும், நீடிய சாந்தத்திலும், விசுவாசத்திலும், தைரியத்திலும், ஞானத்திலும், தன்னடகத்திலும், பொறுமையிலும், தேவபக்தியிலும், சகோதர சிநேகதத்திலும், தயாளத்திலும், இந்த குழுமங்களின் அல்லது அவை இரண்டின் தீர்மானங்கள், செய்யப்படவேண்டும்;

31 ஏனெனில், அவர்களில் இந்தக் காரியங்கள் அதிகமாயிருந்தால் கர்த்தரின் ஞானத்தில் அவர்கள் பலன் தராதிருக்கமாட்டார்கள் என்பது வாக்குத்தத்தமாயிருக்கிறது.

32 எந்த வகையிலாவது இந்த குழுமங்கள் எந்த தீர்மானத்தையாவது அநீதியில் எடுத்திருந்தால், சபையின் ஆவிக்குரிய காரியங்களின் அதிகாரிகளால் அமைந்திருக்கிற ஏராளமான குழுமங்களின் ஒரு பொதுக் குழுவிற்கு முன்பாக அது கொண்டுவரப்படலாம்; இல்லையெனில் அவர்களின் தீர்மானத்தில் எந்த மேல்முறையீடுமிருக்காது.

33 சபையைக் கட்டவும், முதலில் புறஜாதியாருக்கும் இரண்டாவதாக யூதருக்கும் சகல தேசங்களிலும் அதே விவகாரங்களை ஒழுங்குபடுத்த, பரலோக விதிக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதான, சபையின் பிரதான தலைமையின் வழிகாட்டுதலின் கீழ் கர்த்தரின் நாமத்தில் தலைமைதாங்க பன்னிருவர் பிரயாணம் செய்யும் தலைமை பிரதான ஆலோசனைக்குழுவாக இருக்கிறார்கள்.

34 சபையைக் கட்டுவதிலும், முதலில் புறஜாதியாருக்கும், இரண்டாவதாக யூதருக்கும், சகல தேசங்களிலும், அதே விவகாரங்களை ஒழுங்கு படுத்துவதிலும், பன்னிருவர் அல்லது பிரயாணம் செய்யும் தலைமை பிரதான ஆலோசனைக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் கர்த்தரின் நாமத்தில் எழுபதின்மர் செயல்படவேண்டும்,

35 இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை முதலில் புறஜாதியாருக்கும் இரண்டாவதாக யூதருக்கும் அறிவிப்பதால் வாசலைத்திறக்க, திறவுகோல்களைத் தரித்தவர்களாக பன்னிருவர் அனுப்பப்படுகிறார்கள்.

36 சீயோனின் பிணையங்களில் நிலையான பிரதான ஆலோசனைக் குழுக்கள், சபையின் விவகாரங்களில் தங்களுடைய சகல தீர்மானங்களிலும் தலைமைக் குழுமத்திற்கு அல்லது பிரயாணம் செய்யும் பிரதான ஆலோசனைக் குழுவுக்கு சமமான ஒரு குழுமத்தை அமைக்கிறார்கள்.

37 சீயோனின் பிரதான ஆலோசனைக்குழு தங்களுடைய சகல தீர்மானங்களிலும் சீயோனின் பிணையங்களிலுள்ள பன்னிருவர் ஆலோசனைக் குழுவுக்கு சபையின் விவகாரங்களில் சமமான அதிகாரமுடைய ஒரு குழுமத்தை அமைக்கிறார்கள்.

38 சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கும் நிர்வகிப்பதற்குமான ஏராளமான அழைப்புகளை நிரப்ப அவர்களுக்கு உதவி தேவைப்படும்போது மற்றவர்கள் யாருக்கும் பதிலாக எழுபதின்மரை அழைப்பது பிரயாணம் செய்யும் பிரதான ஆலோசனைக் குழுவின் கடமையாகும்.

39 சபையின் சகல பெரிய கிளைகளிலும் வெளிப்படுத்தலால் அவர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டபடி சுவிசேஷகர்களாக அவர்களை நியமனம் செய்வது பன்னிருவரின் கடமையாகும்,

40 ஆசாரியத்துவத்தின் முறைமை பிதாவிடமிருந்து குமாரனுக்கு ஒப்படைக்கப்பட உறுதிசெய்யப்பட்டு, வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டவர்களான நேரடி வம்சத்தாரின் தெரிந்தெடுக்கப்பட்ட சந்ததிக்கு சரியானபடி சொந்தமாயிருக்கிறது.

41 இந்த முறைமை ஆதாமின் நாட்களில் ஏற்படுத்தப்பட்டு, பின்வரும் விதமான வம்சாவழியில் வந்தது:

42 ஆதாமிலிருந்து, அறுபத்தொன்பது வயதில் ஆதாமால் நியமனம் செய்யப்பட்ட சேத்துக்குப் போய், அவனுடைய (ஆதாமின்) மரணத்திற்கு மூன்று வருஷங்களுக்கு முன்பு அவனால் ஆசீர்வதிக்கப்பட்டு, அவனுடைய சந்ததி கர்த்தரால் தெரிந்து கொள்ளப்படுமென்றும் பூமியின் முடிவுபரியந்தம் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் அவனுடைய பிதாவால் தேவனுடைய வாக்குத்தத்தைப் பெற்ற சேத் வரை வந்தது;

43 அவன் (சேத்) ஒரு பரிபூரணமான மனுஷனாயிருந்ததாலும் அவனுடைய சாயல் அவனுடைய பிதாவின் சாயலின் தன்மையாயிருந்து, சகல காரியங்களிலும் அவனுடைய பிதாவைப்போல் இருந்ததாலும், அவனுடைய வயதினால் மட்டுமே அவனை வேறுபடுத்திக் காண முடிந்தது.

44 ஆதாமின் கையால், நூற்று முப்பத்தினான்கு வருஷங்களும் நான்கு மாதங்களுமாயிருந்த வயதில் ஏனோஸ் நியமனம் செய்யப்பட்டான்.

45 கேனானின் நாற்பதாவது வயதில் வனாந்தரத்தில் தேவன் அவனை அழைத்தார்; ஷெடோலாமேக் என்ற இடத்திற்கு பிரயாணம் செய்துகொண்டிருக்கும்போது அவர் ஆதாமை சந்தித்தார், தன்னுடைய நியமனத்தை அவன் பெற்றபோது அவன் எண்பத்து ஏழு வயதாயிருந்தான்.

46 ஆதாம் கையால் மகலாலெயேல் நியமிக்கப்பட்டபோது அவன் நானூற்று தொண்ணூற்று ஆறு வயதும் மற்றும் ஏழு நாட்களுமாயிருந்தான், மற்றும் அவனை ஆசீர்வதித்தான்.

47 ஆதாமின் கையால் அவன் நியமிக்கப்பட்டபோது, யாரேது இருநூறு வயதாயிருந்தான், மற்றும் அவனை ஆசீர்வதித்தான்.

48 ஆதாமின் கையால் அவன் நியமிக்கப்பட்டபோது ஏனோக்கு இருபத்தைந்து வயதாயிருந்தான்; அவனுக்கு அறுபத்தைந்து வயதானபோது ஆதாம் அவனை ஆசீர்வதித்தான்.

49 அவன் கர்த்தரைக் கண்டான், அவரோடு சஞ்சரித்தான், தொடர்ந்து அவருடைய முகத்திற்கு முன்பாக இருந்தான்; அவன் முன்னூற்று அறுபத்தைந்து வருஷங்களாக தேவனோடு சஞ்சரித்தான். அவன் மறுரூபமாக்கப்பட்டபோது அவன் நானூற்று முப்பது வயதாயிருந்தான்.

50 ஆதாமின் கையால் அவன் நியமிக்கப்பட்டபோது மெத்தூசலா நூறு வயதாயிருந்தான்.

51 சேத்தின் கையால் அவன் நியமிக்கப்பட்டபோது லாமேக் முப்பத்திரண்டு வயதாயிருந்தான்.

52 மெத்தூசலாவின் கையால் அவன் நியமிக்கப்பட்டபோது நோவா பத்து வயதாயிருந்தான்.

53 ஆதாமின் மரணத்திற்கு மூன்று வருஷங்களுக்கு முன்பு, அவனுடைய மீதியாயிருந்த சந்ததியருடன் அவர்கள் அனைவரும் பிரதான ஆசாரியர்களாயிருந்த, ஆதாம்-ஓந்தி-ஆமான் பள்ளத்தாக்கில் நீதிமான்களாயிருந்த சேத், ஏனோஸ், கேனான், மகலாலெயேல், யாரேது, ஏனோக்கு, மெத்தூசலாவை அவன் அழைத்து அவனுடைய கடைசி ஆசீர்வாதங்களை அவர்கள்மீது அருளினான்.

54 கர்த்தர் அவர்களுக்கு முன்பாக தோன்றி, அவர்கள் எழும்பி ஆதாமை ஆசீர்வதித்து பிரபுவும், பிரதான தூதனுமான மிகாவேல் என அவனை அழைத்தார்கள்.

55 ஆதாமுக்கு கர்த்தர் ஆறுதலை கொடுத்து அவனுக்குச் சொன்னார்: தலைமையாயிருக்க உன்னை நான் ஏற்படுத்தினேன்; தேசங்களின் திரளானோர் உன்னிடத்திலிருந்து வருவார்கள், என்றென்றைக்குமாய் அவர்கள்மேல் நீ பிரபுவாயிருப்பாய்.

56 சபைக்கு மத்தியில் ஆதாம் எழுந்து நின்றான்; வயது முதிர்ந்தவனாய் இருந்தும், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவனாக தற்போதைய தலைமுறைவரை அவனுடைய சந்ததிக்கு நேரிடப் போகிறவற்றை முன்னறிவித்தான்.

57 இந்தக் காரியங்கள் யாவும் ஏனோக்கின் புஸ்தகத்தில் எழுதப்பட்டன, மற்றும் ஏற்ற காலத்தில் சாட்சியளிக்கப்படவேண்டும்.

58 கீழே சொல்லப்பட்டிருக்கிற வெளிப்படுத்தலுக்கு ஏற்றதாய் சபையின் சகல பிற அலுவலர்களை நியமனம் செய்வதும் ஒழுங்குபடுத்துவதும் பன்னிருவரின் கடமையாயிருக்கிறது:

59 சபை விவகாரத்தைப்பற்றிய சபையின் சட்டங்களுடன் சேர்த்து சீயோன் தேசத்தின் கிறிஸ்து சபைக்கு,

60 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், ஒரு மூப்பரின் அலுவலிலுள்ளவர்களுக்கு தலைமை தாங்க தலைமை தாங்கும் மூப்பர்கள் இருக்கவேண்டும்;

61 ஆசாரியரின் அலுவலில் உள்ளவர்களுக்கு தலைமை தாங்க ஆசாரியர்களும் இருக்கவேண்டும்;

62 ஆசிரியனின் அலுவலில் உள்ளவர்களுக்கு தலைமை தாங்க ஆசிரியர்களும் இருக்கவேண்டும், அதைப் போன்று உதவிக்காரர்களும் இருக்கவேண்டும்,

63 ஆகவே, உதவிக்காரனிலிருந்து ஆசிரியனுக்கு, ஆசிரியனிலிருந்து ஆசாரியனுக்கு, ஆசாரியனிலிருந்து மூப்பருக்கு பலவகையாக ஏற்படுத்தப்பட்டபடி, சபையின் உடன்படிக்கைகள் மற்றும் கட்டளைகளின்படி இருக்க வேண்டும்.

64 பின்னர் சகலத்திலும் மிகப்பெரியதான பிரதான ஆசாரியத்துவம் வருகிறது.

65 ஆகவே, ஆசாரியத்துவத்தின்மீது தலைமை தாங்க பிரதான ஆசாரியத்துவத்திலிருந்து ஒருவர் நியமிக்கப்படுவது அவசியமாயிருக்கிறது, அவர் சபையின் பிரதான ஆசாரியத்துவத்தின் தலைவராக;

66 அல்லது, வேறு வார்த்தைகளில் எனில், சபையின் பிரதான ஆசாரியத்துவத்தின்மீது தலைமை தாங்கும் பிரதான ஆசாரியராக அழைக்கப்படுவார்.

67 அதிலிருந்தே, கைகள் வைப்பதால் சபையில் நியமங்களையும் ஆசீர்வாதங்களையும் நிர்வகிப்பதுவும் வருகிறது.

68 ஆகவே, ஆயரின் அலுவல் அதற்கு சமமானதல்ல; ஏனெனில் சகல உலகப்பிரகாரமான காரியங்களையும் நிர்வகிப்பதே ஒரு ஆயரின் அலுவல்;

69 ஆயினும், ஆரோனின் நேரடி சந்ததியாய் அவன் இல்லாவிட்டால், பிரதான ஆசாரியத்துவத்திலிருந்தே ஒரு ஆயர் தெரிந்து கொள்ளப்படவேண்டும்;

70 ஏனெனில் ஆரோனின் நேரடி சந்ததியாய் அவன் இல்லாவிட்டால், ஆசாரியத்துவத்தின் திறவுகோல்களை அவன் தரித்திருக்க முடியாது.

71 ஆயினும், அதாவது, மெல்கிசேதேக்கு முறைமையில், சத்தியத்தின் ஆவியால் அவைகளைப்பற்றிய ஒரு அறிவு பெற்றிருக்கிற ஒரு பிரதான ஆசாரியன் உலகப்பிரகாரமான காரியங்களின் பணிவிடைக்கு ஏற்படுத்தப்படலாம்;

72 சபையின் விவகாரத்தை நடத்த, இஸ்ரவேலின் ஒரு நியாயாதிபதியாயிருக்க, சட்டங்களின்படி அவருக்கு முன்பாக சாட்சியாக வைக்கப்படுகிறபடி, அவன் தெரிந்துகொண்ட அல்லது சபையின் மூப்பர்களுக்கு மத்தியிலிருந்து தெரிந்து கொள்ளப்போகிற அவருடைய ஆலோசகர்களின் உதவியால் மீறுதல் செய்தோரை நியாயந்தீர்க்க அமர வேண்டும்.

73 இதுவே ஆரோனின் ஒரு நேரடி சந்ததியாய் இல்லாதிருந்து, ஆனால் மெல்கிசேதேக்கு முறைமையில் பிரதான ஆசாரியத்துவத்திற்கு நியமனம் செய்யப்பட்ட ஒரு ஆயரின் கடமையாகும்.

74 இப்படியாக அவர் ஒரு நியாயாதிபதியாய் பணிக்கப்பட்டு, சீயோனின் குடிகளுக்கு மத்தியிலே ஒரு பொது நியாயாதிபதியாய் அல்லது சீயோனின் ஒரு பிணையத்தில், அல்லது சீயோனின் எல்லைகள் விரிவாக்கப்பட்டு, சீயோனிலோ அல்லது வேறு எங்கேயும் பிற ஆயர்கள் அல்லது நியாயாதிபதிகளிருக்க அவசியமாகும்வரை சபையின் எந்த கிளையிலும் அவர் இருப்பார்.

75 அங்கே பிற ஆயர்கள் நியமிக்கப்படுகிற அளவில் அதே அலுவலில் அவர்கள் செயல்படுவார்கள்.

76 ஆனால் மெல்கிசேதேக்கு முறைமையின்படி பிரதான ஆசாரியத்துவத்தின் தலைவர், விசாரிக்கப்படும் வழக்கு தவிர, இஸ்ரவேலின் நியாயாதிபதியாக அமர, இந்த ஆசாரியத்துவத்தின் தலைமைக்கும், இந்த ஊழியத்தின் திறவுகோல்களுக்கும், ஆயரின் அலுவலில் ஆலோசகர்களில்லாமல் சுதந்தரமாக செயல்பட ஆரோனின் நேரடி சந்ததிக்கு ஒரு சட்டப்படியான உரிமையுண்டு.

77 இந்த ஆலோசனைக் குழுக்கள் ஒன்றின் தீர்மானம் கட்டளைக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதாய் இருக்கிறது, அது சொல்லுகிறது:

78 மீண்டும், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், சபையின் மிக முக்கியமான விவகாரம், சபையின் மிகவும் கடினமான வழக்கு, ஆயர் அல்லது நீதிபதியின் தீர்மானத்தில் திருப்தியில்லாத அளவில் பிரதான ஆசாரியத்துவத்தின் தலைமைக்கு முன்பாக அது ஒப்படைக்கப்பட்டு சபையின் ஆலோசனைக் குழுவிற்கு எடுத்துச்செல்லப்படும்.

79 ஆலோசகர்களாக உதவ பிற பிரதான ஆசாரியர்களையும், பன்னிருவரையும்கூட, அழைக்க, பிரதான ஆசாரியத்துவத்தின் ஆலோசனைக்குழுவின் தலைமைக்கு அதிகாரமிருக்கிறது; அப்படியாக சபையின் சட்டங்களின்படி சாட்சியின் அடிப்படையில் தீர்மானிக்க பிரதான ஆசாரியத்துவத்தின் தலைமைக்கும் அதன் ஆலோசகர்களுக்கும் அதிகாரமிருக்கிறது.

80 இந்த தீர்மானத்திற்குப் பின் அது கர்த்தருக்கு முன்பாக இனியும் நினைக்கப்படமாட்டாது; ஏனெனில் இது தேவனின் சபையின் மிக மேலான ஆலோசனைக் குழுவாகவும், ஆவிக்குரிய காரியங்களின் முரண்பாடுகளில் ஒரு இறுதியான தீர்ப்பாகவுமிருக்கிறது.

81 சபைக்கு சொந்தமான எவனும், சபையின் இந்த ஆலோசனைக் குழுவிலிருந்து விலக்களிக்கப்படவில்லை.

82 பிரதான ஆசாரியத்துவத்தின் தலைவர் மீறுகிற அளவில், பிரதான ஆசாரியத்துவத்தின் பன்னிரு ஆலோசகர்களால் உதவப்படுகிற சபையின் பொது ஆலோசனைக்கு ழுவுக்கு முன்பாக அவன் நினைவில் வைக்கப்படுவான்;

83 அவனுடைய தலையின்மேல் அவர்களின் தீர்மானம் அவனைக் குறித்த முரண்பாடுகளுக்கு ஒரு முடிவாயிருக்கும்.

84 இப்படியாக, சத்தியம் மற்றும் நீதியின்படி அவருக்கு முன்பாக சகல காரியங்களும் ஒழுங்கிலும் பக்தியிலும் செய்யப்படும்படியாக, நீதியிலிருந்தும் தேவனின் நியாயப்பிரமாணங்களிலிருந்தும் ஒருவனும் விலக்களிக்கப்படமாட்டான்.

85 பன்னிரண்டு உதவிக்காரர்களுக்கு தலைமை தாங்கவும், அவர்களுடன் ஆலோசனையில் அமரவும், அவர்களுடைய கடமையை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும், உடன்படிக்கைகளில் அது கொடுக்கப்பட்டபடி ஒருவருக்கொருவர் பக்தி வைராக்கியம் விருத்தி செய்யவும் ஒரு உதவிக்காரர் அலுவலின் தலைவரின் கடமையாயிருக்கிறதென மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

86 இருபத்தி நான்கு ஆசிரியர்களுக்கு தலைமை தாங்கவும், அவர்களுடன் ஆலோசனையில் அமரவும், உடன்படிக்கைகளில் கொடுக்கப்பட்டபடி அவர்களுடைய அலுவலின் கடமைகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதிலும் ஆசிரியர்களின் அலுவலின் தலைவரின் கடமையாயிருக்கிறது.

87 நாற்பத்தி எட்டு ஆசாரியர்களுக்கு தலைமை தாங்கவும், அவர்களுடன் ஆலோசனையில் அமரவும், உடன்படிக்கைகளில் கொடுக்கப்பட்டபடி அவர்களுடைய அலுவலின் கடமைகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் ஆரோனின் ஆசாரியத்துவத்தின் அலுவலின் தலைவரின் கடமையாயிருக்கிறது,

88 இந்த தலைவர் ஒரு ஆயராக இருக்க வேண்டும்; ஏனெனில் இந்த ஆசாரியத்துவத்தின் கடமைகளில் இதுவும் ஒன்றாயிருக்கிறது.

89 மீண்டும், தொண்ணூற்று ஆறு மூப்பர்களுக்கு தலைமை தாங்கவும், அவர்களுடன் ஆலோசனையில் அமரவும், உடன்படிக்கைகளின்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதும் மூப்பர்களின் அலுவலின் தலைவரின் கடமையாயிருக்கிறது.

90 இந்த தலைமை எழுபதின்மரிலிருந்து மாறுபட்டது, உலகம் முழுவதும் பிரயாணம் செய்யாமலிருப்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.

91 மீண்டும், சபை முழுவதுக்கும் தலைமை தாங்குவதும், மோசேயைப் போலிருப்பதும் பிரதான ஆசாரியத்துவத்தின் தலைவரின் கடமையாயிருக்கிறது,

92 இதோ, இதிலே ஞானம் விளங்கும்; ஆம், சபையின் தலைமை மீது அவர் அருளுகிற தேவனின் சகல வரங்களையும் பெற்று, ஞானதிருஷ்டிக்காரராக, வெளிப்படுத்துபவராக, மொழிபெயர்ப்பாளராக, மற்றும் தீர்க்கதரிசியாக இருக்க,

93 எழுபதின்மரின் அமைப்பைக் காட்டுகிற தரிசனத்தின்படி, அவர்களுக்கு தலைமை தாங்க, எழுபதின்மரின் எண்ணிக்கையிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அவர்கள் ஏழு தலைவர்களைப் பெற்றிருக்கவேண்டும்;

94 இந்த தலைவர்களின் ஏழாவது தலைவர் ஆறு தலைவர்களுக்கு தலைமை தாங்கவேண்டும்;

95 அவர்கள் சார்ந்திருக்கிற மற்றும் அவர்கள் தலைமை தாங்கவிருக்கிற, முதல் எழுபதின்மரைத்தவிர, பிற எழுபதின்மரை இந்த ஏழு தலைவர்கள் தெரிந்தெடுக்கவேண்டும்;

96 திராட்சைத் தோட்டத்தின் பிரயாசத்தின் தேவைக்கு அது அவசியமாயிருந்தால் எழுபதின்மர் ஏழுமடங்காகும்வரை பிற எழுபதின்மரும் தெரிந்தெடுக்கப்பட வேண்டும்.

97 முதலில் புறஜாதியாரிடத்திலும், யூதர்களிடத்திலும்கூட, இந்த எழுபதின்மர் பயணம் செய்யும் ஊழியக்காரர்களாய் இருக்க வேண்டும்.

98 பன்னிருவருக்கும், எழுபதின்மருக்கும் சொந்தமில்லாத சபையின் பிற அலுவலர்கள் சகல தேசங்களுக்கும் மத்தியில் பயணம் செய்யும் பொறுப்பின் கீழிருக்கமாட்டார்கள், ஆனால், அவர்கள் சபையில் உயர்ந்த மற்றும் பொறுப்புள்ள அலுவல்களைப் பெற்றிருந்தாலும் கூட அவர்களுடைய சூழ்நிலை அனுமதிக்கிறதைப்போல, பிரயாணம் செய்ய வேண்டும்.

99 ஆகவே, இப்பொழுது ஒவ்வொரு மனுஷனும் அவனுடைய கடமையை அறிந்துகொண்டு அவன் நியமிக்கப்பட்ட அலுவலில் முழு சிரத்தையுடன் செயல்படுவானாக.

100 சோம்பேறியாயிருப்பவன் நிற்க தகுதியாய் எண்ணப்படாதிருப்பான், அவனுடைய கடமையைக் கற்றுக் கொள்ளாதிருப்பவனும் அங்கீகரிக்கப்படாதவன் போல காட்டிக் கொள்பவனும் நிற்க தகுதியுடையவனாக எண்ணப்படாதிருப்பான். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.