வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 123


பாகம் 123

மிசௌரியிலுள்ள லிபர்டி சிறைச்சாலையில் ஒரு கைதியாக இருந்தபோது அவர்களைத் துன்புறுத்துபவர்கள் சம்பந்தப்பட்ட பரிசுத்தவான்களின் கடமையைப்பற்றி தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தால் எழுதப்பட்டது. இந்த பாகம், மார்ச் 20, 1839 என தேதியிடப்பட்ட சபைக்கு ஒரு நிருபத்திலிருந்து தொகுப்பு. (பாகம் 121க்கான தலைப்பைப் பார்க்கவும்).

1–6, பரிசுத்தவான்களின் பாடுகள் மற்றும் துன்புறுத்தல்களின் குறிப்பை அவர்கள் சேகரித்து வெளியிடவேண்டும்; 7–10, பொய்யான மதக்கோட்பாடுகளை ஏற்படுத்திய அதே ஆவி பரிசுத்தவான்களின் துன்புறுத்தலுக்கு நடத்துகிறது; 11–17, சகல பிரிவுகளுக்கு மத்தியில் அநேகர் இனியும் சத்தியத்தைப் பெறுவார்கள்.

1 மீண்டும், மாநிலத்திலுள்ள ஜனங்களால் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிற துன்பங்களையும் துர்ப்பிரயோகங்களையும் பற்றிய எல்லா உண்மைகளின் அறிவை சேகரிப்பது பரிசுத்தவான்கள் யாவரின் பொறுப்பாக நீங்கள் கருத நாங்கள் ஆலோசனையளிக்கிறோம்;

2 நடத்தை மற்றும் தனிப்பட்ட காயங்களையும், சொத்துக்களையும்; சொத்துக்கள் எல்லாவற்றுக்கும், அவர்கள் விளைவித்த சேதங்களின் அளவையும்;

3 அவர்களைப் பிடித்து கண்டுபிடிக்க முடிகிற அளவில், அவர்களுடைய ஒடுக்கங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் அனைவரின் பெயர்களையும்கூட நீங்கள் கருத்தில் கொள்ளுங்கள்.

4 இந்த காரியங்களைக் கண்டுபிடிக்கவும், அறிக்கைகளையும் வாக்குமூலங்களையும் எடுக்கவும், பரப்பப்பட்டிருக்கும் அவதூறு வெளியீடுகளை சேகரிக்கவும்கூட ஒரு குழு நியமிக்கப்படலாம்;

5 பத்திரிக்கைகளில், கலைக்களஞ்சியங்களில், வெளியிடப்பட்ட அவதூறு வரலாறுகள் யாவும், எழுதப்பட்ட யாவும், யாரால் என்பதுவும், இந்த ஜனங்கள்மேல் நடத்தப்பட்ட பேய்த்தனமான கொடுமைகளின் தொகுப்பையும், துன்மார்க்கமான மற்றும் கொலைக்குச் சமமான திணிப்புக்களையும், நிகழ்ச்சிகள் முழுவதையும்,

6 உலகம் முழுவதற்கும் வெளியிடுவது மாத்திரமல்ல, ஆனால் அவருடைய மறைவான இடத்திலிருந்து அவரை அழைக்கிற அந்த வாக்குத்தத்தத்தை முற்றிலுமாகவும் முழுவதுமாகவும் கோருவதற்கு முன்பு, நம்முடைய பரலோக பிதாவால் நம்மீது கட்டளையிடப்பட்ட ஒரு கடைசி முயற்சியாக அவர்களுடைய எல்லா அந்தகாரமான கொடிய கூச்சல்களையும் அரசாங்க தலைவர்களிடத்தில், அவருடைய பராக்கிரம கையின் வல்லமையை அவர் அனுப்புவதற்கு முன்பு தேசம் முழுவதற்கும் போக்குச் சொல்ல இடமில்லாமல் இருக்கும்படியாகவும் சமர்ப்பிப்போம்.

7 நாம் கொண்டுவரப்பட்டு அவர்களோடு நிற்கப்போகிற தேவனுக்கும், தூதர்களுக்கும் நாம் கடன்பட்டவர்களென்பதால் இது ஒரு முக்கிய கடமையாகும், மிக இழிவான கொலையின், கொடுங்கோலின், ஒடுக்கத்தின் கரத்தின் கீழ் துக்கத்தோடும் வேதனையோடும், கவலையோடும் பணிய வைத்த, நம்முடைய மனைவிகளுக்கும் பிள்ளைகளுக்கும் நமக்கும்கூட. பிதாக்களின் மதக்கோட்பாடுகளை மிகப் பலமாக இணைத்த அந்த ஆவியின் செல்வாக்கால் ஆதரிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டார்கள். மற்றும் பிள்ளைகளின் இருதயங்களில் பொய்யை சுதந்தரித்துக்கொள்ளச் செய்து, உலகத்தை குழப்பத்தால் நிரப்பி, வலிமையாக வளர்ந்து, இப்பொழுது அது எல்லா சீரழிவுகளிலும் முக்கியமானதாக இருக்கிறது. அதன் அக்கிரமத்தின் அழுத்தத்தால் முழு உலகமும் பெருமூச்சுவிடுகிறது.

8 அது ஒரு இரும்பு நுகம், அது ஒரு பலமான கட்டு, அவைகள்தான் பாதாளத்தின் கைவிலங்குகள், சங்கிலிகள், கால்விலங்குகள் மற்றும் கால் கட்டுக்களாகும்.

9 ஆகவே, நமது சொந்த மனைவிகளுக்கும், பிள்ளைகளுக்கும் மட்டும் அல்ல, அவர்களுடைய கணவன்மார்களும் தகப்பன்மார்களும் அந்த இரும்புக் கரத்தினால் கொலை செய்யப்பட்ட, விதவைகளுக்கும் தகப்பனில்லாதோருக்கும், இது நாம் கடன்பட்டுள்ள முக்கியமான கடமையாகும்.

10 அந்தகார மற்றும் மாசுபடுத்துகிற கிரியைகள், பாதாளத்தையே நடுங்க வைக்கவும், பீதியோடும் வெளிறிப்போயும் நிற்கவும், பிசாசானவனின் கைகள் நடுங்கி முடங்கவும் போதுமானதாகும்.

11 வளர்ந்துவரும் தலைமுறைகளுக்கும் இருதயத்தில் சுத்தமுள்ளவர்களுக்கும் நாம் கடன்பட்டிருக்கிற முக்கிய கடமையாகும்,

12 ஏனெனில், இன்னமும் பூமியில் எல்லா பிரிவுகளிலும், கட்சிகளிலும், சபைப் பிரிவுகளிலும் மனுஷர்களின் சூதான தந்திரத்தால் குருடானவர்கள் பலர் இருக்கிறார்கள், அதனால் அவர்கள் வஞ்சிக்க காத்திருக்கிறார்கள். ஏனெனில் அதை எங்கே காண்பதென அவர்கள் அறியாததால் அவர்கள் சத்தியத்திலிருந்து விலக்கப்பட்டார்கள்,

13 ஆகவே, அந்தகாரத்தின் சகல மறைபொருட்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் நாம் நம்முடைய ஜீவன்களை வீணாக்கி, இழக்க வேண்டும், அவற்றினால் அவைகளை நாம் அறிந்துகொள்கிறோம்; மெய்யாகவே அவைகள் பரலோகத்திலிருந்து வெளிப்படுத்தப்படுகின்றன,

14 பின்னர் இவைகள் மிகுந்த கருத்துடன் கவனிக்கப்பட வேண்டும்.

15 எந்த மனுஷனும் அவற்றை சிறிய காரியங்களாக எண்ணவேண்டாம்; ஏனெனில் பரிசுத்தவான்கள் சம்பந்தப்பட்ட இந்தக் காரியங்களை சார்ந்திருக்கிற அதிகமானவை வருங்காலத்திலிருக்கின்றன.

16 ஒரு புயல் நேரத்தில் காற்றிலும் அலைகளிலும் செயல்பட வைத்திருப்பதில் ஒரு சிறிய சுக்கானால் ஒரு மிகப் பெரிய கப்பல் பலனடைகிறது என்பது சகோதரரே உங்களுக்குத் தெரியுமா.

17 ஆகவே, மிக அன்புக்குரிய சகோதரரே, நம்முடைய சக்திக்குட்பட்ட சகல காரியங்களையும் நாம் உற்சாகமாகச் செய்வோமாக; பின்னர் உத்திரவாதத்துடன், தேவனின் இரட்சிப்பைக் காணவும், அவருடைய கரம் வெளிப்படவும் உறுதியுடன் நாம் நிற்போமாக.