வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68


பாகம் 68

ஜெபத்திற்குப் பதிலாக, ஆர்சன் ஹைட், லூக் எஸ். ஜான்சன், லைமன் இ. ஜான்சன் மற்றும் வில்லியம் இ. மெக்லெலினைக் குறித்து கர்த்தரின் எண்ணம் அறியப்படுவதற்காக நவம்பர் 1, 1831ல் ஒஹாயோவின் ஹைரமில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த நான்கு மனுஷர்களைப்பற்றி இந்த வெளிப்படுத்தல் கொடுக்கப்பட்டாலும்கூட அவற்றிலுள்ள அதிகமானவை முழு சபையையும் பற்றியது. கோட்பாடும் உடன்படிக்கைகளுமின் 1835 பதிப்பு வெளியிடப்பட்டபோது இந்த வெளிப்படுத்தல் ஜோசப் ஸ்மித்தின் வழிகாட்டுதலின் கீழ் விரிவாக்கப்பட்டது.

1–5, பரிசுத்த ஆவியால் அசைக்கப்படும்போது மூப்பர்களின் வார்த்தைகள் வேதமாகும்; 6–12, மூப்பர்கள் பிரசங்கிக்கவும் ஞானஸ்நானம் கொடுக்கவும் வேண்டும், உண்மையான விசுவாசிகளை அடையாளங்கள் தொடரும்; 13–24, ஆரோனின் குமாரர்களில் மூத்தவன் பிரதான தலைமையின் வழிகாட்டுதலின் கீழ் தலைமை தாங்கும் ஆயராக, சேவை செய்யலாம் (அதாவது ஆயராக தலைமையின் திறவுகோல்களை தரித்திருக்கிறான்); 25–28, தங்கள் பிள்ளைகளுக்கு சுவிசேஷத்தைப் போதிக்க பெற்றோர் கட்டளையிடப்படுகிறார்கள்; 29–35, பரிசுத்தவான்கள் ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரித்து, கருத்தாய் உழைத்து, ஜெபிக்கவேண்டும்.

1 ஜனங்களிலிருந்து ஜனங்களுக்கும், தேசங்களிலிருந்து தேசங்களுக்கும் துன்மார்க்கர் சபைகளிலும், அவர்களுடைய ஜெப ஆலயங்களிலும், சகல வேதங்களையும் அவர்களுடன் பேசி, விவரித்து, ஜீவிக்கிற தேவனின் ஆவியால் நித்திய சுவிசேஷத்தை பிரகடனப்படுத்த என்னுடைய ஊழியக்காரனாகிய ஆர்சன் ஹைட், அவனுடைய நியமனத்தால் அழைக்கப்பட்டான்.

2 இதோ, இந்த ஆசாரியத்துவத்திற்கு நியமனம் செய்யப்பட்ட, இந்த ஊழியத்துக்குப் போக நியமிக்கப்பட்ட அனைவருக்கும் இது ஒரு முன்மாதிரியாயிருக்கிறது,

3 பரிசுத்த ஆவியால் அவர்கள் அசைக்கப்பட்டு பேசும்போது, அவர்களுக்கு இது ஒரு முன்மாதிரியாயிருக்கிறது.

4 பரிசுத்த ஆவியால் அவர்கள் அசைக்கப்படும்போது அவர்கள் எதைப் பேசினாலும், அவை வேதமாகும், கர்த்தரின் சித்தமாகும், கர்த்தருடைய சிந்தையாகும், கர்த்தரின் வார்த்தையாகும், கர்த்தரின் தொனியாகும் மற்றும் இரட்சிப்புக்கேதுவான தேவனின் வல்லமையாகும்.

5 இதோ, என்னுடைய ஊழியக்காரர்களே, இது உங்களுக்கு கர்த்தரின் வாக்குத்தத்தமாகும்.

6 ஆகவே, திடன் கொள்ளுங்கள், பயப்படாதிருங்கள், ஏனெனில் கர்த்தராகிய நான் உங்களுடனேயே கூட இருக்கிறேன், உங்களுக்கு பக்கத்திலே நிற்பேன், இருந்தவரும், இருப்பவரும், வரப்போகிறவருமான இயேசு கிறிஸ்துவாகிய நானே ஜீவிக்கிற தேவனின் குமாரன் என நீங்கள் என்னைக்குறித்து சாட்சி கொடுப்பீர்கள்.

7 என்னுடைய ஊழியக்காரனாகிய ஆர்சன் ஹைடுக்கும், என்னுடைய ஊழியக்காரனாகிய லூக் ஜான்சனுக்கும், என்னுடைய ஊழியக்காரனாகிய லைமன் ஜான்சனுக்கும், என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம் இ. மெக்லெலினுக்கும் என்னுடைய சபையின் உண்மையுள்ள எல்லா மூப்பர்களுக்கும் இது கர்த்தருடைய வார்த்தையாயிருக்கிறது.

8 நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிற அதிகாரத்தில் செயல்பட்டு, பிதா, குமாரன், மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து உலகம் முழுவதிலும் சென்று சகல சிருஷ்டிகளுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

9 விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசிக்காதவன் ஆக்கினைக்குள்ளாவான்.

10 விசுவாசிக்கிறவன், எழுதப்பட்டதைப்போல தொடரும் அடையாளங்களுடன் ஆசீர்வதிக்கப்படுவான்.

11 காலங்களின் அடையாளங்களையும், மனுஷ குமாரனின் வருகையின் அடையாளங்களையும் அறியத்தக்கவையாக உங்களுக்குக் கொடுக்கப்படும்;

12 எவ்வளவு பேரைக் குறித்து பிதா சாட்சி கொடுக்கிறாரோ, அவர்களை நித்திய ஜீவனுக்கு முத்திரையிட உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படும். ஆமென்.

13 இப்பொழுது, உடன்படிக்கைகளுக்கும் கட்டளைகளுக்கும் கூடுதலான காரியங்களைக் குறித்தவைகள் இவைகளே,

14 கர்த்தரின் ஏற்ற காலத்தில் முற்காலத்தைப்போல ஊழியம் செய்ய சபையில் பிற ஆயர்கள் பணிக்கப்படுவார்கள் என்பது இப்போதிலிருந்து இருக்கிறது;

15 ஆகவே தகுதியுள்ளவர்கள் பிரதான ஆசாரியர்களாயிருப்பார்கள், ஆரோனின் நேரடி சந்ததியார் இல்லாவிட்டால், அவர்கள் மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவத்துக்கு பிரதான தலைமையினால் நியமிக்கப்படுவார்கள்.

16 அவர்கள் ஆரோனின் நேரடி சந்ததியராக இருந்தால், அவர்கள் ஆரோனின் குமாரர்களுக்கு மத்தியில் முதற்பேறானவர்களாயிருந்தால் அவர்களுக்கு சட்டப்படியாக ஆயத்துவத்துக்கு உரிமையுண்டு;

17 ஏனெனில் இந்த ஆசாரியத்துவத்தின் தலைமைக்கும், திறவுகோல்கள் அல்லது அதிகாரத்துக்கும் முதற்பேறானவன் உரிமை பெற்றிருக்கிறான்,

18 ஆரோனின் நேரடியான சந்ததியும், முதற்பேறானவனுமின்றி இந்த ஆசாரியத்துவத்தின் திறவுகோல்களைத் தரிக்க, இந்த அலுவலுக்கு எவனுக்கும் ஒரு சட்டப்படியான உரிமை இல்லை.

19 ஆனால், மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவத்தின் ஒரு பிரதான ஆசாரியனாக இளநிலை அலுவல்கள் அனைத்திலும் கடமையாற்ற அதிகாரம் பெற்றிருக்கிறான், இந்த அதிகாரத்திற்கு அவன் அழைக்கப்பட்டு, பணிக்கப்பட்டு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் பிரதான தலைமையின் கைகளால் நியமனம் செய்யப்பட்டால் ஆரோனின் நேரடி சந்ததி காணப்படாதபோது ஆயரின் அலுவலில் அவன் செயல்படலாம்.

20 ஆரோனின் நேரடி சந்ததியும்கூட இந்த தலைமையில் பதவியளிக்கப்பட்டு, தகுதியுள்ளவராக காணப்பட்டு, இந்த தலைமையின் கைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, நியமனம் செய்யப்படவேண்டும், இல்லையெனில் அவர்களின் ஆசாரியத்துவத்தில் கடமையாற்ற அவர்களுக்கு சட்டப்படி அதிகாரமளிக்கப்படவில்லை.

21 ஆனால், தகப்பனிடமிருந்து குமாரனுக்கு வருகிற ஆசாரியத்துவத்தின் உரிமையைக் குறித்த கட்டளையின் நிமித்தம், எந்த சமயத்திலும் அவர்களின் வம்சாவளியை நிரூபிக்க முடிந்தால் அல்லது கர்த்தரிடமிருந்து வருகிற வெளிப்படுத்தலால் அதை உறுதிசெய்யமுடிந்தால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைமையின் கைகளால் அவர்களின் அபிஷேகத்தை அவர்கள் உரிமைகோரலாம்.

22 மீண்டும், சபையின் பிரதான தலைமைக்கு முன்பாகத் தவிர, இந்த ஊழியத்திற்கு பணிக்கப்பட்ட எந்த ஆயரும் அல்லது பிரதான ஆசாரியரும் எந்த குற்றத்திற்காகவும் விசாரிக்கப்படவோ தண்டிக்கப்படவோ கூடாது;

23 அகற்றப்பட முடியாத சாட்சியால் இந்த தலைமைக்கு முன்பாக அவன் குற்றமுள்ளவனாக கண்டுபிடிக்கப்படுகிற அளவில், அவன் தண்டிக்கப்படுவான்;

24 ஆனால் அவன் மனந்திரும்பினால் சபையின் உடன்படிக்கைகள் மற்றும் கட்டளைகளின்படி அவன் மன்னிக்கப்படுவான்.

25 மீண்டும், சீயோனில், அல்லது அமைக்கப்பட்ட அதன் எந்த பிணையங்களிலுமுள்ள பெற்றோருக்கு பிள்ளைகளிருக்கிற அளவில், மனந்திரும்புதலின் கோட்பாட்டை புரிந்து கொள்ளவும், ஜீவிக்கிற தேவகுமாரனான கிறிஸ்துவில் விசுவாசத்தையும், அவர்களுக்கு எட்டு வயதாகும்போது, ஞானஸ்நானம் மற்றும் கைகள் வைக்கப்படுவதால் பரிசுத்த ஆவியின் வரத்தைப்பற்றியும் போதிக்காதிருந்தால், பெற்றோர்களின் சிரசுகள்மேல் பாவம் வைக்கப்படும்.

26 ஏனெனில், சீயோனின் குடிகளுக்கு, அல்லது அமைக்கப்பட்ட அதன் எந்த பிணையங்களுக்கும் இது பிரமாணமாயிருக்கும்.

27 அவர்களின் பிள்ளைகளுக்கு எட்டு வயதாகும்போது, அவர்களின் பாவங்களின் மன்னிப்புக்காக ஞானஸ்நானம் பெற்று கைகள் வைக்கப்படுவார்கள்.

28 ஜெபிக்கவும், கர்த்தருக்கு முன்பாக உத்தமமாய் நடக்கவும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு அவர்கள் கற்றுக் கொடுப்பார்கள்.

29 சீயோனின் குடிகளும்கூட ஓய்வுநாளை பரிசுத்தமாய் கைக்கொள்ள அதை ஆசரிப்பார்கள்.

30 சீயோனின் குடிகளும்கூட முழுமையான விசுவாசத்துடன் பிரயாசப்பட அவர்கள் நியமிக்கப்படுகிற அளவில் அவர்கள் தங்கள் பிரயாசங்களை நினைவுகூருவார்கள்; ஏனெனில் சோம்பேறிகள் கர்த்தருக்கு முன்பாக நினைவுகூரப்படுவார்கள்.

31 இப்பொழுது, கர்த்தராகிய நான் சீயோனின் குடிகள்மேல் பிரியமாயிருக்கவில்லை, ஏனெனில் அவர்களுக்கு மத்தியிலே சோம்பேறிகளிருக்கிறார்கள்; அவர்கள் பிள்ளைகளும்கூட துன்மார்க்கத்தில் வளர்ந்து வருகிறார்கள், நித்தியத்தின் ஐஸ்வரியத்தையும் கருத்தாய் அவர்கள் நாடாதிருக்கிறார்கள், ஆனால் அவர்களுடைய கண்கள் பேராசையால் நிறைந்திருக்கிறது.

32 இந்தக் காரியங்கள் இருக்கக்கூடாது, அவர்களுக்கு மத்தியிலிருந்து விலக்கப்பட வேண்டும்; ஆகவே, என்னுடைய ஊழியக்காரனாகிய ஆலிவர் கௌட்ரி இந்த வாசகங்களை சீயோன் தேசத்திற்கு எடுத்துப் போவானாக.

33 அந்த சமயத்தில் கர்த்தருக்கு முன்பாக அவனுடைய ஜெபங்களை ஏறெடுக்காதவன், என்னுடைய ஜனங்களின் நியாயாதிபதிக்கு முன்பாக நினைவுகூரப்படுவானாக என்ற கட்டளையை நான் அவர்களுக்குக் கொடுக்கிறேன்.

34 இந்த வாசகங்கள் சத்தியமாயும் உண்மையுள்ளதாயும் இருக்கின்றன; ஆகவே, அவைகளை மீறவோ, அங்கிருந்து எடுத்துப் போடவோ வேண்டாம்.

35 இதோ, நானே அல்பாவும் ஓமெகாவாகவுமிருக்கிறேன், நான் சீக்கிரத்திலே வருகிறேன். ஆமென்.