வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88


பாகம் 88

டிசம்பர் 27, 28 1832ல், மற்றும் 3 ஜனுவரி 1833ல் ஒஹாயோவின், கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். “நமக்கு சமாதானமுண்டாக கர்த்தரின் செய்தியாக பரதீசின் விருட்சத்திலிருந்து பிடுங்கப்பட்ட ‘ஒலிவ இலையைப்போல’ என தீர்க்கதரிசி அதற்கு பெயரிட்டார்.” சீயோனைக் கட்டி எழுப்புதலைக்குறித்து அவருடைய சித்தத்தை தங்களுக்கு வெளிப்படுத்த பிரதான ஆசாரியர்கள் ஒரு மாநாட்டில் தனித்தனியாகவும் சத்தமாகவும் கர்த்தரிடத்தில் ஜெபித்த பின்னர் வெளிப்படுத்தல் கொடுக்கப்பட்டது.

1–5, நித்திய ஜீவனின் வாக்குத்தத்தமான தேற்றரவாளனை விசுவாசமிக்க பரிசுத்தவான்கள் பெறுகிறார்கள்; 6–13, கிறிஸ்துவின் ஒளியால் சகல காரியங்களும் கட்டுப்படுத்தப்பட்டு ஆளுகை செய்யப்படுகிறது; 14–16, மீட்பின் மூலமாக உயிர்த்தெழுதல் வருகிறது; 17–31, சிலஸ்டியல், டிரஸ்டிரியல், அல்லது டிலஸ்டியல் நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிதல், அந்தந்த ராஜ்யங்களுக்கும் மகிமைகளுக்கும் மனுஷர்களை ஆயத்தப்படுத்துகிறது; 32–35, பாவத்தில் இருக்க விரும்புகிறவர்கள் இன்னமும் அசுசியிலேயே தரித்திருப்பார்கள்; 36–41, சகல ராஜ்யங்களும் நியாயப்பிரமாணத்தால் ஆளுகை செய்யப்படும்; 42–45, சகல காரியங்களுக்கும் தேவன் ஒரு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்திருக்கிறார்; 46–50, தேவனையும் மனுஷன் அறிந்து கொள்ளுவான்; 51–61, அவனுடைய வயல்வெளிகளுக்கு வேலைக்காரர்களை அனுப்பி ஒவ்வொருவராக அவர்களை சந்தித்த மனுஷனின் உவமை; 62–73, கர்த்தரை நெருங்கு, நீ அவருடைய முகத்தைக் காண்பாய்; 74–80, உங்களை பரிசுத்தமாக்கி ராஜ்யத்தின் கோட்பாடுகளை ஒருவருக்கொருவர் போதியுங்கள்; 81–85, எச்சரிக்கப்பட்ட ஒவ்வொரு மனுஷனும் அவனுடைய அண்டை வீட்டானை எச்சரிக்கவேண்டும்; 86–94, அடையாளங்களாலும், பஞ்சபூதங்களின் பிரளயங்களாலும், தூதர்களாலும் கர்த்தரின் வருகைக்காக வழி ஆயத்தப்படுத்தப்படும்; 95–102, மரித்தவர்களை அவர்களின் வரிசைப்படி தூதனின் எக்காளச் சத்தம் அழைக்கும்; 103–116, சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தையும், பாபிலோனின் வீழ்ச்சியையும், மகத்துவமான தேவனின் யுத்தத்தையும் தூதனின் எக்காளம் அறிவிக்கிறது; 117–126, கற்றுக்கொள்ளுதலை நாடுங்கள், தேவனுக்கு ஒரு வீட்டை (ஒரு ஆலயம்) ஸ்தாபியுங்கள், தயாளத்தின் கட்டுடன் உங்களை உடுத்திக் கொள்ளுங்கள்; 127–141, கால்களைக் கழுவுதல் உள்ளிட்ட நியமத்தையும் சேர்த்து தீர்க்கதரிசிகளின் குழுவின் முறைமை ஏற்படுத்தப்படுதல்.

1 உங்களைக் குறித்த அவருடைய சித்தத்தைப் பெறுவதற்காக ஒன்றுசேரக் கூடியிருக்கிற உங்களுக்கு மெய்யாகவே இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார்:

2 இதோ, இது உங்களுடைய கர்த்தருக்கு பிரியமாயிருக்கிறது, தூதர்கள் உங்களில் களிகூருகிறார்கள்; உங்களுடைய ஜெபங்களின் யாசகங்கள் ஓய்வுநாளின் கர்த்தரின் செவிகளுக்கு வந்து எட்டின, பரிசுத்தமாக்கப்பட்டவர்களின் பெயர்களின் புஸ்தகத்திலும், அவைகள் சிலஸ்டியல் உலகத்திலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

3 ஆகவே, தேற்றரவாளனான வாக்குத்தத்தத்தின் பரிசுத்த ஆவியையும் உங்களுடைய இருதயங்களில் வாசமாயிருக்கும்படியாக உங்களிடம், என் சிநேகிதர்களான உங்களிடம் இப்பொழுது மற்றொரு தேற்றரவாளனை அனுப்புகிறேன். அவர் யோவானின் சாட்சியில் பதிக்கப்பட்டுள்ளதைப்போல என்னுடைய சீஷர்களுக்கு நான் வாக்குத்தத்தம் கொடுத்த அதே மற்றொரு தேற்றரவாளன்.

4 நித்திய ஜீவனைப்பற்றியும், சிலஸ்டியல் ராஜ்யத்தின் மகிமையைப்பற்றியும் கூட நான் உங்களுக்குக் கொடுத்த, வாக்குத்தத்தமே இந்த தேற்றரவாளன்;

5 அந்த மகிமை, முதற்பேறானவரும், தேவனும், எல்லோரையும் விட பரிசுத்தரானவரும், அவருடைய குமாரனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் மூலமாக சபையினுடையதாயிருக்கிறது,

6 உன்னதத்திற்கு ஏறின அவர், சகலவற்றிற்கும் கீழேயும் இறங்கினார், அவர் சகலவற்றிலும் மற்றும், சகலத்தின் மூலமும் சத்தியத்தின் ஒளியாக இருக்கும்படிக்கு சகலவற்றையும் அவ்விதம் அறிந்து கொண்டார்;

7 அந்த சத்தியம் பிரகாசிக்கிறது. இது கிறிஸ்துவின் ஒளி. அவர் சூரியனிலிருக்கிறார், சூரியனின் ஒளியிலுமிருக்கிறார், அது உண்டாக்கப்பட்ட வல்லமையிலுமிருக்கிறார்.

8 அவர் சந்திரனிலிருப்பது போல, சந்திரனின் ஒளியாயுமிருக்கிறார், அது உண்டாக்கப்பட்ட வல்லமையாயுமிருக்கிறார்;

9 நட்சத்திரங்களின் ஒளியாயிருப்பது போல, அது உண்டாக்கப்பட்ட வல்லமையிலுமிருக்கிறார்;

10 பூமியாயும், நீங்கள் நின்று கொண்டிருக்கிற பூமியின் வல்லமையாயும் இருக்கிறார்.

11 உங்களுக்கு ஒளிகொடுக்கிற பிரகாசிக்கிற ஒளி, அவர் மூலமாக உங்கள் கண்களை தெளிவுபடுத்தி, அந்த ஒளியே உங்களுடைய புரிந்துகொள்ளுதலை உயிர்ப்பிக்கிறது;

12 அந்த ஒளி, பரந்த விண்வெளியை நிரப்ப தேவ பிரசன்னத்திலிருந்து வருகிறது,

13 சகலவற்றிலுமிருக்கிற, சகலவற்றுக்கும் ஜீவன் கொடுக்கிற, சகல காரியங்களும் ஆளுகை செய்யப்படுகிற நியாயப்பிரமாணமாகிய, சிங்காசனத்தில் வீற்றிருக்கிற தேவனின் வல்லமையாயிருக்கிற, நித்தியத்தின் நெஞ்சிலிருக்கிற, சகல காரியங்களுக்கும் நடுவிலிருப்பவரே அந்த ஒளி.

14 இப்பொழுது, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களுக்காக உண்டாக்கப்பட்ட மீட்பின் மூலமாக, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் நிறைவேற்றப்படுகிறது.

15 ஆவியும் சரீரமும் மனுஷனின் ஆத்துமா.

16 மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலே ஆத்துமாவின் மீட்பு.

17 பூமியில் எளிமையானவர்களும் சாந்தகுணமுள்ளவர்களும் அதை சுதந்தரித்துக்கொள்ள வேண்டுமென அவரது மனதிலே தீர்மானிக்கப்படுகிற, சகலத்தையும் உயிர்ப்பிக்கிறவரின் மூலமாகவே ஆத்துமாவின் மீட்பு வருகிறது.

18 ஆகவே, சிலஸ்டியல் மகிமைக்காக அது ஆயத்தப்படும்படியாக, எல்லா அநீதியிலும் இருந்து அது பரிசுத்தமாக்கப்படவேண்டும்;

19 ஏனெனில், தன் சிருஷ்டிப்பின் அளவை அது நிரப்பிய பின், பிதாவாகிய தேவனின் பிரசன்னத்தோடும் மகிமையால் அது முடிசூட்டப்படும்;

20 சிலஸ்டியல் ராஜ்யத்திலிருப்பவர்களின் சரீரங்கள் அதை என்றென்றைக்குமாய் கொண்டிருக்கும்; ஏனெனில், இந்த நோக்கத்திற்காகவே அது உண்டாக்கப்பட்டு சிருஷ்டிக்கப்பட்டது, இந்த நோக்கத்திற்காகவே அவைகள் பரிசுத்தமாக்கப்பட்டன.

21 நான் உங்களுக்குக் கொடுத்த கிறிஸ்துவின் நியாயப்பிரமாணத்தின் மூலம் பரிசுத்தமாக்கப்படாத அவர்கள், மற்றொரு ராஜ்யத்தை, ஒரு டிரஸ்டிரியல் ராஜ்யம் போன்ற அல்லது டிலஸ்டியல் ராஜ்யம் போன்ற ஒன்றை சுதந்தரிக்கவேண்டும்.

22 ஏனெனில் சிலஸ்டியல் ராஜ்யத்தின் நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருக்க முடியாதவன் ஒரு சிலஸ்டியல் மகிமையில் நிலைத்திருக்கமுடியாது.

23 டிரஸ்டியல் ராஜ்யத்தின் நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருக்க முடியாதவன் ஒரு டிரஸ்டியல் மகிமையில் நிலைத்திருக்க முடியாது.

24 டிலஸ்டியல் ராஜ்யத்தின் நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருக்க முடியாதவன் ஒரு டிலஸ்டியல் மகிமையில் நிலைத்திருக்க முடியாது; ஆகவே ஒரு மகிமையின் ராஜ்யத்திற்காக அவன் தகுதியாயில்லை. ஆகவே ஒரு மகிமையின் ராஜ்யமல்லாத ஒரு ராஜ்யத்தில் அவன் நிலைத்திருக்கவேண்டும்.

25 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு சிலஸ்டியல் ராஜ்யத்தின் நியாயப்பிரமாணத்தில் பூமி நிலைத்திருக்கிறது, ஏனெனில் தன் சிருஷ்டிப்பின் அளவை அது நிரப்பி, நியாயப்பிரமாணத்தை மீறுவதில்லை,

26 ஆகவே, அது பரிசுத்தமாக்கப்படும்; ஆம், ஆனாலும் அது மரிக்கும், அது மீண்டும் உயிர்ப்பிக்கப்படும், அது உயிர்ப்பிக்கப்பட்ட வல்லமையில் நிலைத்திருக்கும், நீதிமான்கள் அதை சுதந்தரித்துக்கொள்வார்கள்.

27 ஏனெனில் அவர்கள் மரித்தாலும், அவர்கள் ஆவிக்குரிய ஒரு சரீரமாக மீண்டும் உயிர்த்தெழுவார்கள்.

28 ஒரு சிலஸ்டியல் ஆவியோடிருக்கிற அவர்கள் ஒரு ஜென்ம சரீரமாயிருக்கிற அதே சரீரத்தைப் பெறுவார்கள்; நீங்களும் உங்கள் சரீரங்களைப் பெறுவீர்கள், உங்களுடைய சரீரங்கள் உயிர்ப்பிக்கப்பட்ட அதே மகிமையே உங்களுடைய மகிமையாயிருக்கும்.

29 சிலஸ்டியல் மகிமையின் ஒரு பகுதியால் உயிர்ப்பிக்கப்பட்ட நீங்கள், பின்னர் பரிபூரணமாய் அதையே பெறுவீர்கள்.

30 டிரஸ்டிரியல் மகிமையின் ஒரு பகுதியால் உயிர்ப்பிக்கப்பட்ட அவர்கள், பின்னர் பரிபூரணமாய் அதையே பெறுவார்கள்.

31 டிலஸ்டியல் மகிமையின் ஒரு பகுதியால் உயிர்ப்பிக்கப்பட்ட அவர்களும்கூட, பின்னர் பரிபூரணமாய் அதையே பெறுவார்கள்.

32 மீதியானவர்களும்கூட உயிர்ப்பிக்கப்படுவார்கள், ஆயினும், அவர்கள் பெற்றிருக்கவேண்டியதை அவர்கள் அனுபவிக்க விரும்பாததால், அவர்கள் பெற விரும்பியதை அனுபவிக்க, மீண்டும் அவர்களின் சொந்த இடத்திற்குத் திரும்புவார்கள்.

33 ஏனெனில், அவன்மேல் ஒரு வரம் அருளப்பட்டு அவன் அந்த வரத்தைப் பெறவில்லையானால் மனுஷனுக்கு பிரயோஜனமென்ன? இதோ, அவனுக்குக் கொடுக்கப்பட்டதில் அவன் மகிழ்ச்சியடைகிறதில்லை, வரத்தைக் கொடுக்கிற அவரிலும் மகிழ்ச்சியடைகிறதில்லை.

34 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நியாயப்பிரமாணத்தால் ஆளுகை செய்யப்படுகிறவை நியாயப்பிரமாணத்தாலேயே பாதுகாக்கப்பட்டு அதனாலேயே பரிபூரணமாக்கப்பட்டு, பரிசுத்தப்படுத்தப்படுகிறது.

35 ஒரு நியாயப்பிரமாணத்தை மீறுகிற, நியாயப்பிரமாணத்தில் இல்லாத, தாமே ஒரு நியாயப்பிரமாணமாக மாறுவதற்கு நாடுகிற, பாவத்தில் நிலைத்திருக்க விரும்புகிற, மொத்தத்தில் பாவத்தில் நிலைத்திருப்பது நியாயப்பிரமாணத்தாலும் பரிசுத்தமாக்கப்பட முடியாது, இரக்கத்தாலும், நீதியாலும், நியாயத்தீர்ப்பாலும் முடியாது. ஆகவே, இன்னமும் அவர்கள் அசுசியில் நிலைத்திருக்கவேண்டும்.

36 சகல ராஜ்யங்களுக்கும் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கிறது;

37 அங்கே ராஜ்யங்கள் பல உண்டு; ஏனெனில் ராஜ்யமில்லாத வானவெளி இல்லை. ஒரு பெரிய ராஜ்யமோ அல்லது இளநிலை ராஜ்யமோ, வானவெளி இல்லாத இடத்தில் ராஜ்யமில்லை.

38 ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் ஒரு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கிறது; ஒவ்வொரு நியாயப்பிரமாணத்திற்கும் குறிப்பிட்ட எல்லைகளும் நிபந்தனைகளும்கூட இருக்கின்றன.

39 அந்த நிபந்தனைகளில் நிலைத்திராத சகல மனுஷர்களும் நீதிமான்களாக்கப்படுவதில்லை.

40 ஏனெனில் புத்திசாலித்தனம் புத்திசாலித்தனத்தோடு இசைந்திருக்கிறது; ஞானம் ஞானத்தை ஏற்றுக்கொள்கிறது; சத்தியம் சத்தியத்தை அண்டிக்கொண்டிருக்கிறது; நற்குணம் நற்குணத்தை நேசிக்கிறது; ஒளி ஒளியுடன் இசைந்திருக்கிறது; இரக்கம் இரக்கத்துடன் மனதுருக்கமாயிருந்து, அவளை சொந்தம் கொண்டாடுகிறது; நீதி அதன் வழியில் தொடர்ந்து சொந்தம் கொண்டாடுகிறது; சிங்காசனத்திலே வீற்றிருந்து அரசாளுகிற சகல காரியங்களையும் செய்கிற அவருடைய முகத்திற்கு முன்பாக நியாயத்தீர்ப்பு நிறைவேறுகிறது.

41 சகல காரியங்களையும் அவர் அறிகிறார், சகல காரியங்களும் அவருக்கு முன்பாக இருக்கின்றன, சகல காரியங்களும் அவரைச் சுற்றியிருக்கின்றன; சகல காரியங்களுக்கும் அவர் மேலானவராயிருக்கிறார், சகல காரியங்களிலும் இருக்கிறார், சகல காரியங்களின் மூலமுமிருக்கிறார், சகல காரியங்களையும் சுற்றியிருக்கிறார்; சகல காரியங்களும் தேவனான அவராலும், அவரிலும், என்றென்றைக்குமாய் இருக்கின்றன.

42 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், சகல காரியங்களுக்கும் அவர் ஒரு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்திருக்கிறார், அவற்றால் அவைகள் தங்கள் நேரங்களின்படியும் தங்கள் காலங்களின்படியும் நடக்கின்றன;

43 பூமியையும் சகல கிரகங்களையும் அறிந்திருக்கிறவரால் அவைகளுடைய வழிகள், வானங்கள் மற்றும் பூமியின் வழிகளும்கூட வகுக்கப்பட்டிருக்கிறது.

44 தங்களுடைய நேரங்களிலும், தங்களுடைய காலங்களிலும், தங்களுடைய நிமிடங்களிலும், தங்களுடைய மணி நேரங்களிலும், தங்களுடைய நாட்களிலும், தங்களுடைய வாரங்களிலும், தங்களுடைய மாதங்களிலும், தங்களுடைய வருஷங்களிலும் ஒன்றுக்கொன்று அவைகள் ஒளி கொடுக்கின்றன, இவைகளெல்லாம் தேவனுக்கு ஒரு வருஷம், ஆனால் மனுஷனுக்கல்ல.

45 தேவனின் வல்லமையின் மத்தியில், தங்களின் மகிமையில் தங்கள் செட்டைகளின் மேலே அவைகள் உருளும்போது, அவளுடைய சிறகுகளின்மேல் பூமி உருளுகிறது, சூரியன் பகலில் அவனது ஒளியைக் கொடுக்கிறான், இரவில் நிலா அவளது ஒளியைக் கொடுக்கிறாள், நட்சத்திரங்களும் அவைகளின் ஒளியைக் கொடுக்கின்றன.

46 நீங்கள் புரிந்துகொள்ளும்படியாக, இந்த ராஜ்யங்களை நான் எதற்கு ஒப்பிடுவேன்?

47 இதோ, இவைகள் யாவும் ராஜ்யங்கள், இவைகளில் எதையாவது அல்லது இவற்றில் சிறியதையாவது எந்த மனுஷனாவது கண்டால், அவருடைய மகத்துவத்திலும் வல்லமையிலும் அசைவாடிக் கொண்டிருக்கிற தேவனைக் காண்கிறான்.

48 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவரை அவன் கண்டான்; ஆயினும், அவருக்குச் சொந்தமானவர்களிடத்தில் வந்த அவர் அறிந்து கொள்ளப்படவில்லை.

49 இருளில் ஒளி பிரகாசிக்கிறது, இருளானது அதை விளங்கிக்கொள்ளவில்லை; ஆயினும், அவரில் அவரால் உயிர்ப்பிக்கப்பட்டவர்களாக தேவனையும் நீங்கள் அறிகிற நாள் வரும்.

50 பின்னர், நானே என்றும், உங்களிலிருக்கிற மெய்யான ஒளி நானே என்றும், நீங்கள் என்னிலிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் என்னைக் கண்டதையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள், இல்லையெனில் நீங்கள் செழித்திருக்கமுடியாது.

51 இதோ, ஒரு வயலைக் கொண்டிருந்த ஒரு மனுஷன் நிலத்தை உழுவதற்கு அவனுடைய வேலைக்காரர்களை வயலுக்கு அனுப்பியதை இந்த ராஜ்யங்களுக்கு நான் ஒப்பிடுவேன்.

52 முதலாவது வந்தவனிடத்தில் அவன் சொன்னான்: நீ வயலுக்குப்போய் பிரயாசப்படு, முதலாம் மணிநேரத்தில் நான் உன்னிடத்தில் வருவேன், என்னுடைய முகத்தின் மகிழ்ச்சியை நீ பார்ப்பாய்.

53 இரண்டாவது வந்தவனிடத்தில் அவன் சொன்னான்: நீயும்கூட வயலுக்குப்போய் பிரயாசப்படு, இரண்டாம் மணிநேரத்தில் என்னுடைய முகத்தின் மகிழ்ச்சியுடன் நான் உன்னிடத்தில் வருவேன்.

54 மூன்றாவது வந்தவனிடத்திலும் அவன் சொன்னான்: நான் உன்னிடத்தில் வருவேன்;

55 நான்காவது வந்தவனிடத்திலும் பன்னிரண்டாவதாக வந்தவன்வரை.

56 வயலுக்கு சொந்தக்காரன் முதலாம் மணிநேரத்தில் முதலாமவனிடத்திற்கு சென்று அந்தமணிநேரம் முழுவதும் அவனோடு தங்கியிருந்தான், அவனுடைய எஜமானனின் முகத்தின் ஒளியினால் அவன் சந்தோஷப்பட்டான்.

57 இரண்டாம், மூன்றாம், நான்காம், அப்படியே பன்னிரண்டாமவன்வரை அவன் செல்லவேண்டியதிருந்ததால் முதலாமவனை விட்டுச் சென்றான்.

58 இப்படியாக, ஒவ்வொரு மனுஷனும் அவனுடைய மணிநேரத்திலும், அவனுடைய நேரத்திலும், அவனுடைய காலத்திலும் தங்களுடைய எஜமானனின் முகரூபத்தின் ஒளியை அவர்கள் யாவரும் பெற்றார்கள்,

59 முதலாமவனிடத்திலிருந்து ஆரம்பித்து கடைசியுள்ளவன் வரையும், கடைசியாயிருந்தவனிடத்திலிருந்து முதலாமவன் வரையும், முதலாமவனிலிருந்து கடைசியுள்ளவன் வரைக்கும்;

60 அவனுடைய மணிநேரம் முடியும்வரை, அவனுடைய எஜமானன் அவனிலும், அவன் அவனது எஜமானனிலும் மகிமைப்படும்படியாகவும், அவர்கள் யாவரும் மகிமைப்படும்படியாகவும் அவனுடைய எஜமானன் அவனுக்கு கட்டளையிட்டபடி ஒவ்வொரு மனுஷனும் அவனவனது வரிசையில் வருவான்.

61 ஆகவே, ஒவ்வொரு ராஜ்யமும் அதனுடைய மணிநேரத்திலும், அதனுடைய நேரத்திலும், அதனுடைய காலத்திலும், தேவன் கொடுத்த ஆணையின்படி இந்த சகல ராஜ்யங்களுக்கும் அவைகளிலுள்ள குடிகளுக்கும் இந்த உவமையை ஒப்பிடுவேன்.

62 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய சிநேகிதரே, நான் அருகிலிருக்கும்போது என்னை நீங்கள் கூப்பிடும்படியாக, நான் உங்களுக்குக் கொடுக்கிற இந்த கட்டளையுடன் உங்கள் இருதயங்களில் சிந்திக்கும்படியாக இந்த சொற்களை நான் உங்களிடத்தில் விட்டுச் செல்கிறேன்,

63 என்னிடத்தில் கிட்டிச் சேருங்கள், நான் உங்களிடத்தில் கிட்டிச் சேருவேன்; கருத்தாய் என்னைத் தேடுங்கள், நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள்; கேளுங்கள், பெற்றுக் கொள்வீர்கள், தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்.

64 என்னுடைய நாமத்தில் பிதாவிடத்தில், உங்களுக்கு அவசியமாயிருக்கிற நீங்கள் எதைக் கேட்டாலும் அது உங்களுக்குக் கொடுக்கப்படும்;

65 உங்களுக்கு அவசியமில்லாத எதை நீங்கள் கேட்டாலும், அது உங்களின் ஆக்கினையாகத் திரும்பும்.

66 இதோ, நீங்கள் கேட்பது வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தத்தைப் போலிருக்கும், ஏனெனில் வனாந்தரத்தில் அவனை உங்களால் காணமுடியாது, என்னுடைய சத்தம், ஏனெனில் என்னுடைய சத்தம் ஆவியாயிருக்கிறது; என்னுடைய ஆவி சத்தியமாயிருக்கிறது; சத்தியம் நிலைத்திருக்கிறது, அதற்கு முடிவில்லை; அது உன்னிலிருந்தால் அது செழித்திருக்கும்.

67 என்னுடைய மகிமைக்கென்று உங்கள் கண் ஒரே நோக்கத்திலிருந்தால் உங்களுடைய முழு சரீரங்களும் ஒளியால் நிரப்பப்படும், உங்களில் இருளிருக்காது, ஒளியால் நிரப்பப்பட்ட அந்த சரீரம் சகல காரியங்களையும் அறியும்.

68 ஆகவே, உங்களுடைய மனங்கள் ஒரே நோக்கமாயிருக்கும்படிக்கு, உங்களை பரிசுத்தப்படுத்துங்கள். அவரை நீங்கள் காண்கிற நாட்கள் வரும்; ஏனெனில் உங்களுக்கு அவர் தன்னுடைய முகத்தைக் காட்டுவார், அது அவருடைய ஏற்றகாலத்திலும், அவருடைய சொந்த வழியிலும், அவருடைய சொந்த சித்தத்தின்படியும் நடக்கும்.

69 நான் உங்களுக்குக் கொடுத்த பெரியதும் கடைசியுமான வாக்குத்தத்தத்தை நினைவுகூருங்கள்; உங்களுடைய சோம்பேறித்தனமான சிந்தனைகளையும், உங்களுடைய மிகுந்த நகைப்பையும் உங்களிடமிருந்து தூர விலக்குங்கள்.

70 நீங்கள் தங்கியிருங்கள், நீங்கள் இங்கே தங்கியிருங்கள், இந்த கடைசி ராஜ்யத்தில் முதல் வேலைக்காரர்களையும் ஒரு பயபக்தியான கூட்டத்துக்கு அழையுங்கள்.

71 அவர்களுடைய பயணத்தில், எச்சரித்தவர்கள் கர்த்தரை அழைத்து தங்களுடைய இருதயங்களில் தாங்கள் பெற்றுக்கொண்ட எச்சரிக்கைகளைக்குறித்து ஒரு சிறிது காலத்திற்கு சிந்திப்பார்களாக.

72 இதோ, நான் உங்களுடைய மந்தைகளை பராமரித்து மூப்பர்களை எழுப்பி அவர்களிடம் அனுப்புவேன்.

73 இதோ, நான் ஏற்றகாலத்திலே இதை தீவிரமாய் நடப்பிப்பேன்.

74 நீங்கள் ஒன்றுகூடிவரவும், உங்களை ஒழுங்குபடுத்திக்கொள்ளவும், உங்களை ஆயத்தப்படுத்தவும், உங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவும் இந்த கடைசி ராஜ்யத்தில் முதல் வேலைக்காரர்களாகிய உங்களுக்கு நான் ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன்; ஆம், உங்கள் இருதயங்களை சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள், நான் உங்களை சுத்தமாக்கும்படியாக எனக்கு முன்பாக உங்கள் கைகளையும் கால்களையும் கழுவுங்கள்;

75 இந்த துன்மார்க்க சந்ததியின் இரத்தத்திலிருந்து நீங்கள் சுத்தமானவர்களென, உங்களுடைய பிதாவிடத்திலும், தேவனிடத்திலும், என்னுடைய தேவனிடத்திலும், நான் சாட்சி கொடுக்கும்படியாகவும், நான் விரும்பும்போது உங்களிடத்தில் நான் செய்த இந்த பெரியதும் கடைசியுமான வாக்குத்தத்தமான, இந்த வாக்குத்தத்தத்தை நான் நிறைவேற்றும்படியாகவும்.

76 இந்த நேரத்திலிருந்து நீங்கள் ஜெபத்திலும் உபவாசத்திலும் தொடர்ந்திருக்கும்படியாகவும் உங்களுக்கு நான் ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன்.

77 ராஜ்யத்தின் கோட்பாட்டை ஒருவருக்கொருவர் நீங்கள் போதிக்கும்படியாகவும் நான் உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன்.

78 கருத்தாய் போதியுங்கள், கருத்தியலிலும், கொள்கையிலும், கோட்பாட்டிலும், சுவிசேஷத்தின் நியாயப்பிரமாணத்திலும், நீங்கள் புரிந்துகொள்ள அவசியமாயிருக்கிற தேவனின் ராஜ்யம் குறித்த சகல காரியங்களிலும், நீங்கள் மிகப் பரிபூரணமாக அறிவுறுத்தப்படும்படியாக என் கிருபை உங்களோடிருக்கும்;

79 வானத்திலும் பூமியிலும், பூமியின் கீழுள்ள காரியங்களையும், இருந்தவைகளையும், இருப்பவைகளையும், சீக்கிரத்திலேயே நடக்கப்போகிற காரியங்களையும், வீட்டிலேயுள்ள காரியங்களையும், வெளியிலுள்ள காரியங்களையும், தேசங்களின் யுத்தங்களுக்கும், குழப்பங்களுக்கும், தேசத்தின்மீதுள்ள நியாயத்தீர்ப்புகளுக்கும், தேசங்களை மற்றும் ராஜ்யங்களைப்பற்றிய ஒரு அறிவிற்கும்,

80 உங்களை நான் அழைத்த அழைப்பையும், நான் உங்களுக்குக் கட்டளையிட்ட ஊழியத்தையும் சிறப்பாக்கவும் மீண்டும் நான் உங்களை அனுப்பும்போது சகல காரியங்களிலும் நீங்கள் ஆயத்தமாயிருக்கும்படியாக,

81 இதோ, சாட்சி கொடுக்கவும், ஜனங்களை எச்சரிக்கவும் நான் உங்களை அனுப்பினேன், எச்சரிக்கப்பட்ட ஒவ்வொரு மனுஷனும் அவனுடைய அண்டை வீட்டானை எச்சரிக்க வேண்டும்.

82 ஆகவே, அவர்கள் போக்குச் சொல்ல இடமில்லாமல் விடப்பட்டுள்ளனர், அவர்களின் பாவங்கள் அவர்கள் தலைகள் மேலிருக்கின்றன.

83 அதிகாலமே என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள், கைவிடப்படுவதில்லை.

84 ஆகவே, கர்த்தரின் வாய் பெயரிட்டு அழைக்கிற அவ்வளவுபேரும், கடைசி முறையாக புறஜாதிகளுக்கு மத்தியில் போவதற்கு உங்கள் ஊழியத்தில் நீங்கள் பரிபூரணப்படவும், நியாயப்பிரமாணத்தைக் கட்டவும், சாட்சியை முத்திரிக்கவும், வரப்போகிற நியாயத்தீர்ப்பின் மணிநேரத்திற்காக பரிசுத்தவான்களை ஆயத்தப்படுத்தவும் தங்கியிருங்கள், கருத்தாய் பிரயாசப்படுங்கள்;

85 இம்மையிலும் மறுமையிலும் துன்மார்க்கருக்காக காத்திருக்கும் அருவருப்பான பாழ்க்கடிப்புக்கும், தேவனின் கோபத்திலிருந்து அவர்களுடைய ஆத்துமா தப்பவும், நீங்கள் தங்கியிருந்து கருத்தாய் பிரயாசப்படுங்கள். மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கர்த்தரின் வாய் அவர்களை அழைக்கும் வரை முதல் மூப்பர்களாயிராதவர்கள் திராட்சைத் தோட்டத்திலே தொடர்ந்திருப்பார்களாக, ஏனெனில் அவர்களின் நேரம் இன்னும் வரவில்லை, இந்த சந்ததியின் இரத்தத்திலிருந்து அவர்களுடைய வஸ்திரங்கள் சுத்தமாயில்லை.

86 நீங்கள் விடுதலையாக்கப்பட்ட சுதந்தரத்திலே நிலைத்திருங்கள்; பாவத்தில் உங்களை அகப்படுத்திக் கொள்ளாதிருங்கள், ஆனால், கர்த்தர் வருகிறவரை உங்களுடைய கைகள் சுத்தமாயிருப்பதாக.

87 ஏனெனில் கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே பூமி நடுங்கி, ஒரு குடிகாரனைப்போல அங்கேயும் இங்கேயும் தள்ளாடும்; சூரியன் தன் முகத்தை மறைத்து ஒளி கொடுக்க மறுக்கும்; சந்திரன் இரத்தத்தில் குளிப்பாட்டப்படும்; நட்சத்திரங்கள் மிகுந்த கோபம்கொள்ளும், ஒரு அத்திமரத்திலிருந்து ஒரு அத்திப்பழம் விழுவதைப்போல அவைகள் கீழே விழும்.

88 உங்களுடைய சாட்சிக்குப் பின்னர் ஜனங்கள்மேல் மூர்க்கமும் சினமும் வரும்.

89 ஏனெனில் உங்களுடைய சாட்சிக்குப் பின்னர் பூமியதிர்ச்சியின் சாட்சி வருகிறது, அதன் நடுவில் அது முனகுதல்களை உண்டாக்கும், மனுஷர்கள் தரையில் விழுவார்கள், அவர்களால் நிற்கமுடியாது.

90 இடிகளின் சத்தம், மற்றும் மின்னல்களின் சத்தம் மற்றும் புயல்களின் சத்தம் மற்றும் அவைகளின் எல்லைகளுக்கும் அப்பாலும் பெருமூச்சு விடும். கடல் அலைகளின் சத்தத்தின் சாட்சியும்கூட வருகிறது.

91 சகல காரியங்களும் குழப்பத்திலிருக்கும்; நிச்சயமாய் மனுஷர்களுடைய இருதயங்கள் தோற்றுப்போகும்; ஏனெனில் சகல ஜனங்கள் மீதும் பயம் வரும்.

92 ஒரு மகா சத்தத்தில் கூக்குரலிட்டு, தேவனின் எக்காள சத்தத்துடன் தூதர்கள் வானத்தின் மத்தியிலே பறந்துவந்து சொல்வார்கள், பூமியின் குடிகளே, ஆயத்தப்படுங்கள், ஆயத்தப்படுங்கள்; ஏனெனில் நம்முடைய தேவனின் நியாயத்தீர்ப்பு வருகிறது. இதோ, மணவாளன் வருகிறார்; அவருக்கு எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள்.

93 உடனேயே வானத்தில் பெரியதான ஒரு அடையாளம் தோன்றும், சகல ஜனங்களும் அதை ஒன்றுகூடிக் காண்பார்கள்.

94 மற்றொரு தூதன் அவனுடைய எக்காளத்தை ஊதி சொல்வான்: எல்லா அருவருப்புகளுக்கும் தாயான அந்த மிகப் பெரிய சபை, தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்த, தேவனின் பரிசுத்தவான்களை துன்புறுத்திய, அவர்களுடைய இரத்தத்தை சிந்திய, அநேக தண்ணீர்கள்மேல், சமுத்திரத்தின் தீவுகள்மேல் வீற்றிருக்கிற அவள், இதோ, அவள் பூமியின் பதர்; அவள் கட்டுக்களாக கட்டப்பட்டிருக்கிறாள்; அவளுடைய கயிறுகள் பலமாக்கப்படும், எவனாலும் அவைகளை அவிழ்க்கமுடியாது; ஆகவே அவள் சுட்டெரிக்கப்பட ஆயத்தமாயிருக்கிறாள். அவனுடைய எக்காளத்தை நீட்டியும் சத்தமாயும் ஊதுவான், சகல தேசங்களும் அதைக் கேட்கும்.

95 பரலோகத்தில் அரைமணி நேரம் அமைதி உண்டாயிருக்கும்; ஒரு புஸ்தகம் சுருட்டப்பட்டபின் திறக்கப்பட்டதைப் போல பரலோகத்தின் திரை திறக்கப்பட்ட பின் உடனேயே கர்த்தரின் முகம் திறக்கப்படும்;

96 உயிரோடிருக்கிற பூமியிலுள்ள பரிசுத்தவான்கள் மறுரூபமாக்கப்பட்டு அவரை சந்திக்க எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

97 தங்களுடைய கல்லறைகளிலே நித்திரையடைந்தவர்கள் எழுந்து வருவார்கள், ஏனெனில் அவர்களுடைய கல்லறைகள் திறக்கப்படும்; அவரை சந்திக்க வானத்தின் தூணுக்கு மத்தியிலே அவர்கள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்,

98 அவர்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; முதற்கனிகள்; அவரோடேகூட முதலில் இறங்குபவர்கள், பூமியிலிருக்கிற மற்றும் தங்களுடைய கல்லறையிலிருக்கிறவர்கள் அவர்கள், அவரை சந்திக்க முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டவர்கள், மற்றும் இவை அனைத்தும் தேவ தூதன் எக்காளம் ஊதும் சத்தத்தாலேயே.

99 இதன் பின்னர் மற்றொரு தூதன் ஊதுவான்; அது இரண்டாவது எக்காளம். சுவிசேஷத்தை அவர்கள் பெறத்தக்கதாக அவர்களுக்காக ஆயத்தப்படுத்தப்பட்ட அந்த சிறைச்சாலையில் அவர்களின் பங்கைப் பெற்றுக் கொண்டவர்கள், மாம்சத்தில் மனுஷர்களின்படி நியாயந்தீர்க்கப்பட, பின்னர் அவரது வருகையில் கிறிஸ்துவினுடையவர்களின் மீட்பு வருகிறது.

100 மீண்டும், மூன்றாவது எக்காளமான மற்றொரு எக்காளம் ஊதப்படும்; பின்னர் நியாயந்தீர்க்கப்பட வேண்டிய ஆக்கினையின் கீழ் காணப்படுகிற, மனுஷர்களின் ஆவிகள் வருகின்றன.

101 மரித்தவர்களில் மீதியானவர்கள் இவர்களே; ஆயிரம் வருஷம் முடியுமட்டுமோ, வருஷங்கள் முடியும் வரைக்கும் பூமியின் முடிவுமட்டும் அவர்கள் மீண்டும், பிழைத்திருக்கமாட்டார்கள்.

102 நான்காவது எக்காளமான மற்றொரு எக்காளம் ஊதப்பட்டு சொல்கிறதாவது: மாபெரும் கடைசிநாள் மட்டும், முடிவுவரை நிலைத்திருக்க வேண்டியவர்களிடையே, இன்னமும் அசுத்தத்தில் நிலைத்திருப்பவர்கள் காணப்படுவார்கள்.

103 மற்றொரு எக்காளம் ஊதப்படும்; அது ஐந்தாவது எக்காளம், வானத்தின் மத்தியிலே பறந்துவந்து சகல தேசத்தாருக்கும், இனத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனங்களுக்கும் நித்திய சுவிசேஷத்தை ஒப்புக்கொடுக்கிற அவன் ஐந்தாவது தூதன்.

104 வானத்திலும் பூமியிலும், பூமியின் கீழுமுள்ள சகல ஜனங்களுக்கும், சொல்லுகிற அவனுடைய எக்காளத்தின் சத்தமாயிருக்கும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற தேவனுக்கு என்றென்றைக்கும் பயப்படுங்கள், அவரை என்றென்றைக்குமாய் மகிமைப்படுத்துங்கள், ஏனெனில் அவரது நியாயத்தீர்ப்பின் வேளை வந்தது என்று சொல்கிற, வந்துவிட்டது என்ற எக்காள சத்தத்தை அவர்கள் கேட்கும்போது ஒவ்வொரு காதும் அதைக் கேட்கும், ஒவ்வொரு முழங்காலும் முடங்கும், ஒவ்வொரு நாவும் அறிக்கைபண்ணும்.

105 மீண்டும் ஆறாவது தூதனான மற்றொரு தூதன் அவனுடைய எக்காளத்தை ஊதி சொல்கிறதாவது: தன் வேசித்தனமான உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தவள் விழுந்தாள், அவள் விழுந்தாள், விழுந்தாள்.

106 மீண்டும் ஏழாவது தூதனான மற்றொரு தூதன் அவனுடைய எக்காளத்தை ஊதி சொல்கிறதாவது: முடிந்தது; முடிந்தது; தேவ ஆட்டுக்குட்டி மேற்கொண்டு, சர்வவல்லமையுள்ள தேவனின் கோபத்தின் உக்கிரத்தில் தனியாக திராட்சை ஆலையை மிதித்திருக்கிறார்.

107 பின்னர் அவருடைய வல்லமையின் மகிமையுடன் தூதர்கள் முடி சூட்டப்படுவார்கள், அவருடைய மகிமையுடன் பரிசுத்தவான்கள் நிரப்பப்பட்டு, தங்களுடைய சுதந்தரத்தைப் பெற்று அவருடன் சமமாக்கப்படுவார்கள்.

108 பின்னர் முதல் தூதன் உயிரோடிருக்கிற யாவரின் காதுகளில் அவனுடைய எக்காளத்தை ஊதி, முதல் ஆயிரம் வருஷங்களில் மனுஷர்களின் இரகசிய நடவடிக்கைகளையும் தேவனின் பராக்கிரம கிரியைகளையும் வெளிப்படுத்துவான்.

109 பின்னர் இரண்டாவது தூதன் அவனுடைய எக்காளத்தை ஊதி, இரண்டாவது ஆயிரம் வருஷங்களில் மனுஷர்களின் இரகசிய நடவடிக்கைகளையும், அவர்களின் இருதயங்களின் சிந்தனைகளையும் நோக்கங்களையும், தேவனின் பராக்கிரம கிரியைகளையும் வெளிப்படுத்துவான்,

110 ஏழாவது தூதன் அவனுடைய எக்காளத்தை ஊதும்வரை தொடர்ந்தது; அவன் நிலத்தின்மேலும் சமுத்திரத்தின் மேலும் நின்று சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அவருடைய நாமத்தில் ஆணையிடுவான்; இனி காலம் செல்லாது, பிசாசானவன் என்றழைக்கப்பட்ட பழைய சர்ப்பமான சாத்தான் கட்டப்பட்டு, ஆயிரம் வருஷ காலத்திற்கு கட்டவிழ்க்கப்பட மாட்டான்.

111 பின்னர் அவனுடைய சேனைகளை கூட்டிச்சேர்க்கும்படியாக, கொஞ்ச காலத்திற்கு அவன் கட்டவிழ்க்கப்படுவான்.

112 பிரதான தூதனான, ஏழாவது தூதனாகிய மிகாவேல் தன்னுடைய சேனைகளையும், வானத்து சேனைகளையும் கூட்டிச் சேர்ப்பான்.

113 பிசாசானவன் அவனுடைய சேனைகளையும், பாதாளத்து சேனைகளையும் கூட்டிச் சேர்த்து, மிகாவேலுடனும் அவனுடைய சேனைகளுடனும் போராட வருவான்.

114 பின்னர், மகத்தான தேவனின் யுத்தம் வருகிறது; பிசாசானவனும் அவனுடைய சேனைகளும் அவர்களின் இடத்திற்கு தள்ளப்படுவார்கள், பரிசுத்தவான்கள்மேல் அவர்களுக்கு இனி அதிகாரமிருக்காது.

115 ஏனெனில் மிகாவேல் அவர்களுக்காக யுத்தம் பண்ணுவான், சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் ஆட்டுக்குட்டியானவரின் சிங்காசனத்தை நாடுகிற அவனை மேற்கொள்ளுவான்.

116 இதுவே தேவனின் மகிமையாயும் பரிசுத்தம் பண்ணப்பட்டதுமாயிருக்கிறது; அவர்கள் இனி ஒருபோதும் மரணத்தைக் காண்பதில்லை.

117 ஆகவே, என்னுடைய சிநேகிதரே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் உங்களுக்குக் கட்டளையிட்டதைப்போல உங்கள் பயபக்தியான கூட்டத்தை கூட்டுங்கள்.

118 விசுவாசம் எல்லாரிடத்திலும் இல்லாதிருப்பதால் நீங்கள் கருத்தாய் நாடி ஒருவருக்கொருவர் ஞான வார்த்தையைப் போதியுங்கள்; ஆம், சிறந்த புஸ்தகங்களில் ஞானமான வார்த்தைகளை தேடுங்கள்; படிப்பதாலும் விசுவாசத்தாலும் கற்றுக்கொள்ள நாடுங்கள்.

119 உங்களை ஒழுங்குபடுத்துங்கள்; அவசியமான எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்துங்கள்; வீடு ஒன்றை, ஜெப வீட்டை, உபவாச வீட்டை, விசுவாசத்தின் வீட்டை, கற்றுக்கொள்ளும் வீட்டை, மகிமையின் வீட்டை, ஒழுங்கின் வீட்டை, தேவனின் வீட்டை ஸ்தாபியுங்கள்;

120 நீங்கள் பெற்றுக்கொள்பவை கர்த்தரின் நாமத்திலிருப்பதாக; நீங்கள் கொடுப்பவை கர்த்தரின் நாமத்திலிருப்பதாக; உன்னதமானவருக்கு உயர்த்தப்பட்ட கைகளுடன் உங்களின் வந்தனங்கள் கர்த்தரின் நாமத்திலிருப்பதாக.

121 ஆகவே, உங்களின் கவனக்குறைவான பேச்சுக்கள் எல்லாவற்றையும், உங்கள் நகைப்புகள் எல்லாவற்றையும், உங்களின் காமவிகார ஆசைகள், உங்களின் பெருமை மற்றும் நிர்விசாரங்கள் எல்லாவற்றையும், உங்களின் துன்மார்க்கச் செயல்கள் எல்லாவற்றையும் நிறுத்துங்கள்.

122 உங்களுக்குள் ஒரு ஆசிரியரை ஏற்படுத்துங்கள், ஒரே நேரத்தில் அனைவரும் பேசாதிருப்பார்களாக; ஆனால், அப்படியாக அனைவரும் பேசியபிறகு அனைவரும் அனைவராலும் பக்திவிருத்தியடைந்து, ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு சமமான சிலாக்கியம் கிடைக்கும்படியாக, ஒரு நேரத்தில் ஒருவர் பேசி அவன் சொல்வதை அனைவரும் கேட்பார்களாக.

123 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; பொருளாசை உள்ளவர்களாய் இராதிருங்கள்; சுவிசேஷத்திற்குத் தேவையாயிருப்பதைப்போல ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள்.

124 சோம்பேறியாயிராதிருங்கள்; அசுத்தமாயிராதிருங்கள்; ஒருவருக்கொருவர் குற்றம் காணாதிருங்கள்; தேவைக்கு மிகுதியாய் நீண்ட நேரம் உறங்காதிருங்கள்; நீங்கள் களைப்படையாதிருக்கும்படியாக சீக்கிரமே உங்கள் படுக்கைக்குச் செல்லுங்கள். உங்கள் சரீரமும் மனதும் உற்சாகமாயிருப்பதற்காக சீக்கிரமே எழும்புங்கள்.

125 எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு சால்வையைப்போல, பரிபூரணம் மற்றும் சமாதானத்தின் கட்டான, தயாளத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள்.

126 நான் வருகிறவரை நீங்கள் சோர்ந்து போகாமலிருக்க எப்பொழுதும் ஜெபியுங்கள். இதோ, நான் சீக்கிரத்திலே வருவேன், உங்களை என்னிடத்திலே சேர்த்துக்கொள்வேன். ஆமென்.

127 மீண்டும், அவர்களுக்குத் தேவையான சகல காரியங்களிலும் அவர்களின் அறிவுரைக்காக ஸ்தாபிக்கப்பட்ட தீர்க்கதரிசிகளின் கூட்டத்தின் தலைமைக்காகவும், சபையின் சகல அதிகாரிகளுக்காகவும், அல்லது வேறு வார்த்தைகளில் எனில், பிரதான ஆசாரியர்களிலிருந்து ஆரம்பித்து உதவிக்காரர்கள்வரை சபையின் ஊழியத்திற்கு அழைக்கப்பட்டவர்களுக்கும் ஆலயத்தின் ஒழுங்கு ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறது.

128 இது கூட்டத்தின் தலைமையின் வீட்டின் ஒழுங்காயிருக்கும். தலைவனாக, அல்லது ஆசிரியனாக நியமிக்கப்படுகிறவன் அவனுக்காக ஆயத்தம் செய்யப்படுகிற தன்னுடைய இடத்தில், வீட்டில் நிலைத்திருக்கக் காணப்படுவான்.

129 ஆகவே, ஆலயத்தில், உரத்த சத்தமில்லாமல் அவனுடைய வார்த்தைகளை கவனமாகவும் தனியாகவும் சபையார் கேட்கிற ஒரு இடமான தேவனுடைய வீட்டில் அவன் முதன்மையாயிருப்பான்.

130 அவன் தேவனுடைய வீட்டில் வரும்போது, அவனே வீட்டில் முதன்மையாயிருக்க வேண்டியதால், இதோ, அவன் ஒரு எடுத்துக்காட்டாயிருப்பதால், இது அழகாயிருக்கிறது,

131 நித்திய உடன்படிக்கையின் அடையாளமாக அல்லது நினைவுகூர்தலாக, தேவனுக்கு முன்பாக தன்னுடைய முழங்காலில் விழுந்து ஜெபத்தில் அவன் தன்னை ஒப்படைப்பானாக.

132 எவனாவது அவனுக்குப் பின்னாக வரும்போது, ஆசிரியன் எழுந்து, வானத்திற்கு நேராக கைகளை உயர்த்தி, ஆம், நேரடியாக அவனுடைய சகோதரனை அல்லது சகோதரர்களை இந்த வார்த்தைகளால் வாழ்த்துவானாக.

133 நீங்கள் சகோதரனா அல்லது சகோதரர்களா? அன்பின் கட்டுக்களில் தேவனின் கிருபையின் மூலமாக உங்கள் சிநேகிதராகவும் சகோதரராகவுமிருக்க என்றென்றைக்கும் நன்றி செலுத்துவதில் மாசற்றவர்களாக தேவனின் கட்டளைகள் எல்லாவற்றின்படி நடக்க, நிலையானதான, அசைக்கமுடியாத மற்றும் மாற்றமுடியாத தீர்மானத்தின் ஐக்கியத்தில் உங்களை நான் ஏற்றுக்கொண்ட உடன்படிக்கையான நித்திய உடன்படிக்கையின் அடையாளத்தில் அல்லது நினைவுகூர்தலில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களை வணங்குகிறேன். ஆமென்.

134 இந்த வணக்கத்துக்கு தகுதியற்றவனாக காணப்படுகிறவனுக்கு உங்களுக்கு மத்தியிலே இடமிருக்காது; ஏனெனில் என்னுடைய ஆலயம் அவனால் தீட்டுப்பட நீங்கள் விடக்கூடாது.

135 உள்ளே வந்து, எனக்கு முன்பாக உண்மையாயிருப்பவன் ஒரு சகோதரனாயிருக்கிறான் அல்லது அவர்கள் சகோதரர்களாயிருந்தால் வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி, இந்த அதே ஜெபத்துடன் அல்லது உடன்படிக்கையுடன் அல்லது அதே அடையாளத்தில் ஆமென் என சொல்வதில் தலைவரை அல்லது ஆசிரியரை அவர்கள் வணங்குவார்களாக.

136 இதோ, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கர்த்தரின் ஆலயத்தில் தீர்க்கதரிசிகளின் குழுவில் ஒருவரையொருவர் வணங்குவதற்காக உங்களுக்கு இது ஒரு மாதிரியாகும்.

137 உங்களுடைய பக்திவிருத்திக்காக அது ஒரு புகலிடமாகவும் பரிசுத்த ஆவியின் கூடாரமாகவும் கர்த்தரின் வீட்டில், தீர்க்கதரிசிகளின் கூட்டத்தில் நீங்கள் செய்கிற சகலவற்றிலும் ஆவி பேசுகிறதைப்போல, ஜெபத்தோடும், நன்றியறிதலோடும் இதைச் செய்ய நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

138 இந்த சந்ததியின் இரத்தத்திலிருந்து சுத்தமானவனைத்தவிர இந்த கூட்டத்தில் யாரையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளாதிருங்கள்;

139 கால்களைக் கழுவுகிற நியமத்தால் அவன் ஏற்றுக் கொள்ளப்படுவான், ஏனெனில் இதற்காகவே கால்களைக் கழுவுகிற நியமம் ஏற்படுத்தப்பட்டது.

140 மீண்டும், சபையின் தலைவரால் அல்லது தலைமை மூப்பரால் கால்களைக் கழுவுகிற நியமம் நிர்வகிக்கப்படவேண்டும்.

141 அது ஜெபத்தால் ஆரம்பிக்கப்பட வேண்டும்; அப்பத்திலும் திராட்சை ரசத்திலும் பங்கேற்ற பின்பு என்னைக் குறித்து யோவானின் சாட்சியின் பதிமூன்றாம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற மாதிரியின்படி அவன் அரைக்கட்டிக்கொள்ள வேண்டும். ஆமென்.