2010–2019
என்னோடு நட
ஏப்ரல் 2017


“என்னோடு நட”

ஆசாரியத்துவத்துக்கு நமது நியமனம் அவருடன் நடக்கவும், அவர் செய்வதை செய்யவும், அவர் சேவை செய்கிற விதமாக சேவை செய்யவும் கர்த்தரிடமிருந்து ஒரு அழைப்பு ஆகும்.

என்னுடைய அன்பு ஆசாரியத்துவ சகோதரர்களே, உங்களுடைய ஆசாரியத்துவ சேவையில் உங்களை திடப்படுத்துவதும் உற்சாகமூட்டுவதுமே இன்றிரவு என்னுடைய நோக்கம். “நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும்” என்று கேட்ட ஒரு இளம் ஆஸ்திமானை அவர் சந்தித்தபோது, இரட்சகருக்கும் அதே நோக்கமிருந்திருக்கிறதென சிலவழிகளில் நான் கற்பனை செய்கிறேன்.( மத்தேயு 19:16) ஒருவேளை உங்கள் சேவை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்திருக்கிறதா என ஆச்சரியப்பட்டு, இந்த இளம் வாலிபன் இரட்சகரிடத்தில் போனதைப்போல, நீங்கள் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கலாம். அதே நேரத்தில் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது, ஒருவேளை மிக அதிகமிருக்கிறதென நீங்கள் உணரலாம். அவருடைய பரிசுத்த ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவராக இன்னமும் அடைவதற்கு அவருடைய உதவியுடன் ஒரு ஊக்கமளிக்கிற குறிப்பை கொடுத்து, நீங்கள் ஏற்கனவே செய்ததற்காக கர்த்தரின் அன்பான அங்கீகாரத்தை உங்களுக்குத் தெரிவிக்கவும், என்னால் இயல வேண்டும் என நான் ஜெபிக்கிறேன்.

தனக்குள்ள எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்குக் கொடுத்துவிட்டு இரட்சகரைப் பின்பற்றிப் போக இளம் ஆஸ்திமான் கேட்கப்பட்டான், உங்கள் வருங்கால முன்னேற்றத்திற்கு இது தேவையாயிருக்காது, ஆனால், இதற்கு ஒரு அளவு தியாகம் தேவைப்படுகிறது. எந்த வழியிலும் அந்த இளம் மனிதன் செய்ததைப்போல துக்கமாய்ப் போக என் செய்தி காரணமாயிருக்காதென நான் நம்புகிறேன். (மத்தேயு 19:16–22 பார்க்கவும்). மாறாக, நீங்கள் முன்னேற விரும்புவதால், உங்களால் முடியும் என நீங்கள் நினைப்பதால் களிகூருதலுடன் நீங்கள் உங்கள் வழியே போவீர்களென (கோ.உ 84:105) நான் நம்புகிறேன்.

இருந்தாலும் எதைச் செய்யவேண்டுமென கர்த்தர் நம்மை அழைத்தாரோ அதை நாம் கருத்தில்கொள்ளும்போது சில குறைகளை உணருவது இயற்கையே. உண்மையில், உங்கள் ஆசாரியத்துவ அழைப்புகளை நிறைவேற்றுவதில் நீங்கள் முழு ஆற்றலுள்ளவர்களாய் உணருகிறீர்களென என்னிடம் நீங்கள் கூறினால் நீங்கள் அவற்றைப் புரிந்துகொள்ளவில்லை என நான் கவலைப்படலாம். ஆயினும், உங்கள் திறமைகளுக்கும் மிக அப்பால் பணியிருப்பதால், நீங்கள் கைவிட உணருவதாக என்னிடம் கூறினால், தனியாக ஒருபோதும் செய்திராத காரியங்களைச் செய்ய, அவரது ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்களை கர்த்தர் எவ்வாறு சிறப்பித்து பெலப்படுத்துகிறார், என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ விரும்புகிறேன்.

உங்களுடைய அழைப்புகளில் இருப்பதைப் போல என்னுடைய அழைப்பிலும் இது உண்மை. நம்முடைய சொந்த ஞானத்தையும் தாலந்துகளையும் மட்டுமே சார்ந்து ஆசாரியத்துவப் பணியை செய்யவும் அதைச் சிறப்பாகச் செய்யவும் நம்மில் ஒருவராலும் முடியாது. ஏனென்றால் இது நமது பணியல்ல, இது கர்த்தரின் பணி. ஆகவே, திருவிருந்து நியமத்திற்கு சிறிதளவு ஆவிக்குரிய வல்லமையைக் கொண்டுவருகிற பணியுடன் நம்பிக்கையான ஒரு புதிதாய் அழைக்கப்பட்ட உதவிக்காரனானாலும் அல்லது உங்களுக்குத் தெரியாத, உங்கள் அன்பையும் அல்லது உங்கள் பணிவிடையையும் விரும்புவதாகத் தோன்றாத ஒரு குடும்பத்திற்கு நியமிக்கப்பட்ட இளம் வீட்டுப் போதகரானாலும், அல்லது உங்கள் வீட்டை நீதியில் நீங்கள் தலைமை தாங்க வேண்டும் என அறிந்து, ஆனால் ஒருவேளை அதை எப்படிச் செய்வது என்பதில் நீங்கள் உறுதியில்லாமலிருந்து, பிள்ளைகள் வேகமாக வளர்ந்து, உலகம் கடுமையாகவும் விரோதமாகவுமிருப்பதாகத் தோன்றுகிறதால் நேரம் ஓடிக்கொண்டிருப்பதாக நினைக்கிற ஒரு தகப்பனானாலும், வெற்றிபெறும் ஒரே வழி அவரைச் சார்ந்திருப்பதுவே.

ஆகவே நீங்கள் சிறிது கவலைப்பட்டவராக உணர்ந்தால் அதை ஒரு நல்ல அடையாளமாக எடுத்துக்கொள்ளுங்கள். தேவன் உங்கள் மேல் வைத்திருக்கிற நம்பிக்கையின் அளவை நீங்கள் உணர முடியுமென இது குறிப்பிடுகிறது. உண்மையில் ஆசாரியத்துவம் என்னவென்பதைப்பற்றிய ஒரு சிறிய புரிந்துகொள்ளுதல் உங்களுக்கிருக்கிறதென்பது இதன் அர்த்தம்.

அந்த புரிந்துகொள்ளுதலிருக்கிற ஒரு சிலரே இந்த உலகத்திலிருக்கிறார்கள். ஒரு அர்த்தமுள்ள விளக்கத்தைக் கொடுப்பவர்கள் கூட உண்மையில் இதைப் புரிந்துகொள்ளாமலிருக்கலாம். அவை தாங்கியிருக்கிற ஆவியின் வல்லமையின் மூலமாக பரிசுத்த ஆவியைப்பற்றிய நமது வியக்கும் உணர்வை ஆழமாக்கக்கூடிய சில வசனங்களிருக்கின்றன. அந்த வசனங்களில் சில:

“மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் வல்லமை மற்றும் அதிகாரமென்பது, சபையின் சகல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களின் அனைத்து திறவுகோல்களையும் தரித்து,

“பரலோக இராஜ்ஜியத்தின் இரகசியங்களைப் பெறுவதில் சிலாக்கியத்தைக்கொண்டிருப்பதும், அவர்களுக்காக வானங்கள் திறக்கப்படுவதும், பொதுச் சபையுடனும், முதற்பேறானவரின் சபையுடனும் பேசுவதும், பிதாவாகிய தேவன் மற்றும் புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரான இயேசுவின் ஐக்கியத்திலும் பிரசன்னத்திலும் ஆனந்தமடைவதுமாகும்.

“ஆரோனிய ஆசாரியத்துவத்தின் வல்லமை அல்லது அதிகாரமென்பது தூதர்களின் பணிவிடையின் திறவுகோல்களைத் தரித்திருப்பதாகும்.”(கோ.உ 107:18–20)

“அந்த [ஆசாரியத்துவ] நியமங்களில் தேவதன்மையின் வல்லமை வெளிப்படுத்தப்படுகிறது.   . .

“ஏனெனில் இது இல்லாமல் பிதாவாகிய தேவனின் முகத்தை எந்த மனுஷனும் கண்டு பிழைக்கமுடியாது.”(கோ.உ 84:20, 22).

“[தேவ] குமாரனின் முறைமையினாலான இந்தப் பிரதான ஆசாரியத்துவம், உலக அஸ்திபாரம் முதலே இருந்தது. . அல்லது வேறுவார்த்தைகளிலெனில் சகலத்தையும்பற்றிய அவருடைய முன்னறிவின்படியே நாட்களின் தொடக்கமும், வருஷங்களின் முடிவுமில்லாமல் சதா காலங்களுக்குமாக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறது.”(ஆல்மா 13:7)

“இந்த முறைமையின்படி நியமிக்கப்பட்டு அழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் மலைகளை உடைக்கவும், சமுத்திரங்களைப் பிளக்கவும், தண்ணீர்களை உலரவைக்கவும், தங்களுடைய பாதைகளிலிருந்து அவைகளைத் திருப்பவும் விசுவாசத்தால் வல்லமையிருக்கவேண்டும்.

“தேசங்களின் படைகளை எதிர்ப்பதுவும், பூமியைப் பிளப்பதுவும், ஒவ்வொரு கட்டுக்களையும் உடைப்பதுவும், தேவனின் பிரசன்னத்தில் நிற்பதுவும், சகல காரியங்களையும் அவருடைய சித்தத்தின்படியும், அவருடைய கட்டளைகளின்படியும் செய்வதுவும், கொள்கைகளுக்கும் வல்லமைகளுக்கும் பணிந்து, இது உலகத்தோற்றத்திற்கு முன்பிருந்தே, தேவகுமாரனின் சித்தத்தின்படிதான் இருக்கிறது.” (Joseph Smith Translation, Genesis 14:30–31 [in the Bible appendix])

ஆசாரியத்துவ வல்லமையின் இத்தகைய வியத்தகு விளக்கங்கள், அவை நமக்குப் பொருந்தாதென எண்ணுவது பதிலளிக்கும் ஒரு வகை. மற்றொரு வழி நமது சொந்த இருதயங்களில் கேட்கப்படுகிற இது போன்ற ஆத்துமத் தேடுதலின் கேள்வி, எனக்காக வானங்கள் திறக்கப்பட்டன என நான் எப்போதாவது உணர்ந்ததுண்டா? என்னுடைய ஆசாரியத்துவ சேவையை விவரிக்க “தூதர்களின் பணிவிடை” என்ற சொற்றொடரை யாராவது பயன்படுத்துவார்களா? நான் சேவிக்கிறவர்களின் வாழ்க்கையில் தெய்வ தன்மையின் வல்லமையை நான் கொண்டு வந்திருக்கிறேனா? நான் எப்போதாவது மலையை உடைத்திருக்கிறேனா, இராணுவத்தை எதிர்த்திருக்கிறேனா, ஒருவரின் கட்டுக்களை உடைத்திருக்கிறேனா, சொல்லப்போனால் தேவனின் சித்தத்தை நிறைவேற்றும்படியாக உலகத்தின் வல்லமைகளைப் பணிய வைத்திருக்கிறேனா?

இத்தகைய சுயபரிசோதனை எப்போதுமே, கர்த்தரின் சேவையில் நாம் அதிகமாய் செய்துகொண்டிருக்க முடியும் என்ற உணர்வைக் கொண்டுவருகிறது. நீங்கள் அதிகமாய் செய்ய விரும்புகிறீர்கள், கர்த்தரின் அற்புதமான பணியில் மிக முழுமையாக பங்கேற்க ஒரு நீண்ட விருப்பமிருக்கிறதென ஒரு உணர்வையும் இது கொண்டுவருகிறதென நான் நம்புகிறேன். ஆசாரியத்துவ சேவை, உருவாக்க வேண்டிய வகையான மனிதர்களாகுவதற்கு இத்தகைய உணர்வுகள் முதல் படியாகும்.

யேகோவாவுக்கும் ஏனோக்குக்கும் இடையிலான ஒரு உரையாடலில் அடுத்த படி விளக்கப்பட்டிருக்கிறது. மகா துன்மார்க்கத்திற்கு மத்தியில் சீயோனை ஸ்தாபித்த ஒரு வல்லமையான தீர்க்கதரிசியாக ஏனோக்கை நாம் அறிவோம். அவன் ஒரு வல்லமையான தீர்க்கதரிசியாவதற்கு முன்பு, ஏனோக்கு தன்னை “ஒரு வாலிபனாகவும், திக்குவாயனாகவும்,” சகல ஜனங்களும் அவனை வெறுப்பதாகவும் (மோசே 6:31) தன்னைப் பார்த்தான். ஏனோக்கை ஊக்குவிக்க கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளைக் கேளுங்கள். .ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவராக மற்றவர்களுக்கு பணிவிடை செய்ய அழைக்கப்பட்டவர்களாகிய உங்களுக்கும் இவை அவருடைய வார்த்தைகள்.

“ஏனோக்கிடம் கர்த்தர் சொன்னார், நீ போய் நான் உனக்குக் கட்டளையிட்டதைப் போலச் செய். உன்னை ஒருவனும் குத்துவதில்லை. உன்னுடைய வாயைத் திற, அது நிரப்பப்படும், நான் உனக்குப் பேச்சைக் கொடுப்பேன், ஏனெனில் சகல மாம்சங்களும் என்னுடைய கைகளிலிருக்கிறது, என்னுடைய பார்வைக்கு நலமானதை நான் செய்வேன். .

“இதோ என்னுடைய ஆவி உன் மேலிருக்கிறது, ஆகவே உன்னுடைய வார்த்தைகள் யாவற்றையும் நான் நியாயப்படுத்துவேன், மலைகள் உனக்கு முன்பாக ஓடிப்போகும், நீ என்னில் வாசம் செய்வாய், நான் உன்னிலிருப்பேன், ஆகவே என்னோடு நீ நட”(மோசே 6:31)

சகோதரரே, அவரோடு நடக்க கர்த்தரிடமிருந்து ஒரு அழைப்பே ஆசாரியத்துவத்திற்கு நமது நியமனம். கர்த்தருடன் நடப்பதென்றால் என்ன? அவர் செய்கிறதைச் செய்ய, அவர் சேவிக்கிற விதமாய் சேவிக்க என்பதே அதன் அர்த்தம். வறியோரை ஆசீர்வதிக்க தனது சொந்த வசதிகளை அவர் தியாகம் செய்தார், அதையே செய்ய நாம் முயற்சிக்கவேண்டும். கவனிக்கப்படாமலும், உதாசீனப்படுத்தப்பட்டுமுள்ள குறிப்பிட்டவர்களை அவர் கவனித்ததாகத் தோன்றுகிறதையே நாமும் செய்ய முயற்சிக்கவேண்டும். அது பிரசித்தமில்லாதிருந்தும் அவருடைய பிதாவிடமிருந்து அவர் பெற்ற உண்மையான கோட்பாட்டை அவர் துணிவாகவும், இருந்தும் அன்புடனும் போதித்தார், அதை நாமும் செய்யவேண்டும். “என்னிடத்தில் வாருங்கள்” (மத்தேயு 11:28), என அவர் எல்லோரிடத்திலும் சொன்னார், “அவரிடத்தில் வாருங்கள்” என நாம் அனைவரிடமும் சொல்கிறோம். ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்களாக நாம் அவருடைய பிரதிநிதிகள். நாம் நமக்காக செயல்படுவதில்லை, அவருக்காகவே. நாம் நமது வார்த்தைகளைப் பேசுவதில்லை, அவருடையவற்றையே. நமது சேவையால் நாம் சேவிக்கிற மக்கள் அவரைப்பற்றி மிக நன்றாக அறிந்துகொள்கிறார்கள்.

“என்னோடு நட” என்ற கர்த்தரின் அழைப்பை நாம் ஏற்றுக்கொள்ளும்போது நமது ஆசாரியத்துவ சேவையின் தன்மை மாறுகிறது. நாம் தனியாக இல்லை என்பதை நாம் அறிந்திருப்பதால் உயர்ந்ததாகவும் புனிதமாகவும் ஆனால் அதிகமாய் அடைவதாகவும் கூட உடனே மாறுகிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதைய எனது அழைப்பில் எனது சேவையை நான் ஆரம்பித்தபோது, தலைவர் தாமஸ்  எஸ். மான்சன் தனது கைகளை என் தலையில் வைத்து என்னை ஆசீர்வதித்தபோது இதை மிக வல்லமையுடன் நான் உணர்ந்தேன். அந்த ஆசீர்வாதத்தின்போது இரட்சகரின் இந்த வார்த்தைகளை அவர் உரைத்தார்: “உங்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் எவர்களோ அங்கே நானிருப்பேன், ஏனெனில் நான் உங்கள் முகத்துக்கு முன்னே போவேன். நான் உங்களுடைய வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலுமிருப்பேன். என்னுடைய ஆவி உங்களுடைய இருதயங்களிலே இருக்கும், உங்களைத் தாங்கிக்கொள்ள என்னுடைய தூதர்கள் உங்களைச் சுற்றிலுமிருப்பார்கள்.” (கோ.உ 84:88).

அநேக முறைகள் அந்த வாக்களிப்பை நான் சார்ந்திருந்திருக்கிறேன், என்னுடைய 72 ஆண்டுகளின் ஆசாரியத்துவ சேவை முழுவதிலும் அநேக வழிகளில் அது நிறைவேறியிருப்பதை நான் கண்டிருக்கிறேன். திருவிருந்து பரிமாற நான் பணிக்கப்பட்டு, ஒரு புதிய ஆரோனிய ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவனாக நானிருந்தபோது இது நடந்தது. நான் தவறு செய்துவிடுவேனோ என பயந்து கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஜெபக்கூடத்திற்கு வெளியே போய் தேவன் எனக்குதவ வேண்டுமென்று கவலையுடன் ஜெபித்தேன். ஒரு பதில் வந்தது. கர்த்தர் என்னுடனிருப்பதாக நான் உணர்ந்தேன். அவரது தன்னம்பிக்கையை நான் என்னில் உணர்ந்தேன், ஆகவே அவரது பணியில் என்னுடைய பங்கில் நான் தன்னம்பிக்கையை உணர்ந்தேன்.

நான் ஆயராக ஊழியம் செய்துகொண்டிருந்தபோது மீண்டும் இது நிகழ்ந்தது. ஒரு பெரிய தவற்றைச் செய்து இப்போது ஒரு கடினமான, வாழ்க்கையை மாற்றிப்போடும் தீர்மானத்தை எதிர்கொள்ளவேண்டிய ஒரு பெண், என்னைத் தொலைபேசியில் அழைத்தாள். நான் அவளைச் சந்தித்தபோது அவளுடைய பிரச்சினைக்கு பதில் எனக்குத் தெரியுமென நான் உணர்ந்தேன், ஆனால் அவளுக்காக அவள் பெறும்படியாக தேவைப்பட்ட அந்த பதிலை அவளுக்குக் கொடுக்கக்கூடாதென்றும் நான் பலமாக உணர்ந்தேன். “நீ கர்த்தரைக் கேட்டால் என்ன செய்யவேண்டுமென அவர் உனக்குக் கூருவார் என நான் நம்புகிறேன்” என்பது அவளுக்கு எனது வாரத்தைகளாயிருந்தது. அவள் அவரைக் கேட்டதாகவும், அவளுக்கு அவர் கூறியதாகவும் பின்னர் அவள் கூறினாள்.

மற்றொரு சம்பவத்தில். நான் ஆயராக இருந்தபோது, இந்த முறை போலீசிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு குடிகார வண்டியோட்டி வங்கியின் முன்னறையின் கண்ணாடியை உடைத்து விட்டதாக. பாதுகாப்பு காவலாளி தனது ஆயுதத்தை தன்னை நோக்கி குறி வைத்திருந்ததைப் பார்த்து பயந்துபோன ஓட்டுனர், “என்னை சுடாதீர்கள். நான் ஒரு மார்மன்!” என்று கத்தினார்.

அந்த போதையிலிருந்த ஓட்டுனர் சமீபத்தில் எனது தொகுதியில் ஞானஸ்நானம் பெற்ற ஒரு அங்கத்தினரென கண்டுபிடிக்கப்பட்டார். அவருடன் பேசுவதற்காக ஆயர் அலுவலகத்தில் நான் காத்திருந்தபோது அவர் தன் உடன்படிக்கையை மீறி சபையை வெட்கப்படவைத்ததற்காக அவரை வருத்தப்படவைக்க நான் என்ன சொல்லவேண்டுமென நான் திட்டமிட்டேன். ஆனால் நான் அவரை நோக்கி அமர்ந்திருந்தபோது என்னுடைய மனதில் ஒருவர் என்னிடம் பேசுவது போல தெளிவாக ஒரு குரலைக்கேட்டேன். “நான் அவனைப் பார்ப்பதைப் போலவே உன்னையும் பார்க்க வைக்கப்போகிறேன்”. பின்னர் சிறிது நேரத்தில் அவரது முழுத்தோற்றமும் மாறியது. ஒரு மயக்கமான வாலிபனை நான் பார்க்கவில்லை, ஒரு பிரகாசமான, புனிதமான தேவனின் குமாரனைக் கண்டேன். திடீரென அவன் மேல் கர்த்தருக்கிருந்த அன்பை நான் உணர்ந்தேன். அந்தக் காட்சி எங்கள் உரையாடலை மாற்றியது. அது என்னையும் மாற்றியது.

அவருடைய பணியைச் செய்துகொண்டு அவருடன் நடக்கிற இந்த அனுபவங்களிலிருந்து முக்கியமான பாடங்களை நான் கற்றேன். அவைகளில் மூன்றை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, புதிய, இளம் உதவிக்காரனையும் தேவன் கவனித்து ஆதரிக்கிறார். நீங்கள் மிகச் சிறியவர் அல்லது உங்களையும் அவருடைய நாமத்தில் நீங்கள் செய்துகொண்டிருக்கும் சேவையையும் அவர் கவனிக்கிற அளவுக்கு மிக முக்கியமானதல்ல என நீங்கள் ஒருபோதும் உணரத் தேவையில்லை.

இரண்டாவது பாடம், கர்த்தருடைய பணி பிரச்சினைகளைத் தீர்ப்பதுமட்டுமல்ல, இது மக்களைக் கட்டுவது. ஆகவே, ஆசாரியத்துவ சேவையில் நீங்கள் அவரோடு நடக்கும்போது மிக ஆற்றலுள்ள தீர்வு எனத் தோன்றுவது, கர்த்தரின் தெரிந்தெடுக்கப்பட்ட தீர்வாயிருக்காது என நீங்கள் காண்பீர்கள், ஏனெனில் அது மக்களை வளரவிடாது. நீங்கள் செவிகொடுத்தால் அவருடைய வழிகளை அவர் போதிப்பார். கர்த்தரின் பணியும் மகிமையும் ஒரு ஆற்றல்மிக்க ஸ்தாபனத்தை நடத்துவதற்காக அல்ல; மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டுவருகிறதற்கே என்பதை நினைவுகூருங்கள். (மோசே 1:39). இதனால்தான் உங்களையும் என்னையும்போன்ற குறைவுள்ள மனிதர்களிடம் அவருடைய ஆசாரியத்துவ அதிகாரத்தைக் கொடுத்து அவருடைய பணியில் பங்கேற்க நம்மை அழைக்கிறார். நமது முன்னேற்றமே அவருடைய பணி.

இப்போது மூன்றாவது பாடம். ஆசாரியத்துவ சேவையில் இரட்சகரோடு நடத்தல் மற்றவர்களை நீங்கள் பார்க்கும் வழியை மாற்றுகிறது. அவருடைய கண்களின் வழியே அவர்களைப் பார்க்க அவர் உங்களுக்கு கற்றுக்கொடுப்பார். அதாவது, வெளித்தோற்றத்தைப் பார்க்காமல் இருதயத்தைப் பார்ப்பது (1  சாமுவேல் 16:7 பார்க்கவும்). இப்படித்தான் சீமோனை இரட்சகரால் பார்க்க முடிந்தது, ஒரு திறமையுள்ள மீன்பிடிக்கிறவனாக இல்லை, கன்மலையைப் போன்ற அவருடைய சபையின் வருங்காலத் தலைவராக, பேதுருவாக பார்த்தார். (லூக்கா 5:1–11 பார்க்கவும்). இப்படித்தான், மற்றவர்கள் பார்த்ததைப்போல ஒரு ஊழல் படிந்த வரி வசூலிப்பவனாக அல்ல, ஒரு நேர்மையான நல்வழியில் நடக்கிற ஆபிரகாமின் குமாரனாக சகேயுவை அவரால் பார்க்கமுடிந்தது (லூக்கா 19:1–9 பார்க்கவும்). நீங்கள் நீண்டதூரம் இரட்சகரோடு நடந்தால், அவன் அல்லது அவளின் கடந்தகாலம் எப்படியிருந்தாலும், அளவிட முடியாத திறமையுடன் தேவனின் பிள்ளையாக ஒவ்வொருவரையும் பார்க்க நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் இரட்சகரோடு தொடர்ந்து நடந்தால் அந்த திறமையை அவர்களுக்குள்ளே காணவும், ஆகவே மனந்திரும்பவும் மக்களுக்கு உதவுதலின் திறமையான மற்றொரு வரத்தை நீங்கள் விருத்தி செய்வீர்கள்.

என்னுடைய அன்பான ஆசாரியத்துவ சகோதரரே, அந்த முதல் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையில் எம்மாவு சாலை வழியே நடந்த இரண்டு சீஷர்களைப்போல அநேக விதங்களில் நாமிருக்கிறோம். அது உயிர்த்தெழுந்த காலையாயிருந்தது, ஆனால் அங்கே உயிர்த்தெழுதலிருந்தது, அல்லது உயிர்த்தெழுதல் என்றால் என்னவென்று இன்னமும் அவர்களுக்கு நிச்சயமில்லை. [நாசரேத்தின் இயேசு] “இஸ்ரவேலை மீட்டிருப்பார் என அவர்கள் நம்பினார்கள்,” ஆனால் உயிர்த்தெழுதலைப்பற்றி வேதங்கள் போதித்த எல்லாவற்றையும் அவர்கள் “விசுவாசிப்பதற்கு மந்த இருதயமுள்ளவர்களாயிருந்தார்கள்.” அவர்கள் நடந்து ஒன்று சேர்ந்து காரணத்தை அறிய முயற்சித்தபோது, இயேசு தாமே அவர்களுடனே கூட சேர்ந்து நடந்து போனார். ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.” (லூக்கா 24:13–32 பார்க்கவும்).

ஆசாரியத்துவத்தின் சேவையில் நாம் நடக்கும்போது, இது அவருடைய பாதையாய், அவருடைய வழியாயிருப்பதால் இரட்சகரான இயேசு கிறிஸ்து நம்முடன் வருகிறாரென நான் சாட்சிளிக்கிறேன். அவருடைய ஒளி நம்முன்னே போகிறது, அவருடைய தூதர்கள் நம்மைச் சுற்றியிருக்கிறார்கள். ஆசாரியத்துவம் என்றால் என்ன அல்லது அவர் செய்ததைப்போல எவ்வாறு அதை செய்வதென்பதைப் பற்றிய முழுமையான புரிந்துகொள்ளுதலில் நாம் குறைவுள்ளவர்களாயிருக்கலாம். ஆனால் அந்த நேரங்களை நாம் கூர்ந்து கவனித்தால் நமது இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியும்போது (லூக்கா 24:32), நமது கண்கள் திறக்கப்பட்டு, நமது வாழ்க்கையிலும் நமது சேவையிலும் அவரது கரங்களை நாம் பார்ப்போம். அவருடன் பணியாற்றுவதிலும், தேவனுடைய பிள்ளைகளுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் மகத்தான பணியில் அவருக்கு சேவை செய்வதிலும் நாம் அவரை நன்றாக அறிகிறோமென்று நான் சாட்சியளிக்கிறேன். “தான் சேவித்திராத, தனக்கு அந்நியனும், தன் உள்ளத்தின் எண்ணங்களிலும், நோக்கங்களிலிருந்தும் தூரமாயுமிருக்கிற ஒரு எஜமானை ஒரு மனுஷன் எப்படி அறிவான்?” (மோசியா 5:13). இயேசு கிறிஸ்து நமது எஜமானன். இது அவருடைய சபை. நாம் தரித்திருக்கிற இந்த ஆசாரியத்துவம் அவருடையது. அவருடன் நடக்கவும் அவர் எப்படி நம்முடன் நடக்கிறாரென கண்டுகொள்ளவும் நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வோமாக.

இயேசுவே கிறிஸ்து, நமது உயிர்த்தெழுந்த கர்த்தர் என என்னுடைய பக்தியான சாட்சியை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். அவருடைய நாமத்தில் பேசவும், செயல்படவும் நம்மீது பொறுப்பளிக்கப்பட்டிருக்கிற ஆசாரியத்துவத்திற்கு வல்லமையிருக்கிறதென என்னுடைய சாட்சியை உங்களுக்குப் பகருகிறேன். நமது ஜெபங்களுக்கு பதிலளித்து, பெறுவதற்கு நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு ஆசாரியத்துவ பொறுப்புகளிலும் நம்மைப் பெலப்படுத்த பரிசுத்த ஆவியை அனுப்புகிற, ஒரு நேசமுள்ள பரலோக பிதாவுக்கு நாம் பிள்ளைகள். பிதாவையும் குமாரனையும் ஜோசப் ஸ்மித் பார்த்தார். இன்றிரவு அவைகளைப் பிரயோகப்படுத்துகிற தலைவர் தாமஸ்  எஸ். மான்சனுக்கு அளிக்கப்பட்ட ஆசாரியத்துவத்தின் திறவுகோல்களை அவர் பெற்றார். அவ்வாறே நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சாட்சியளிக்கிறேன், ஆமென்.