2010–2019
நேசக் குமாரத்திகள்
அக்டோபர் 2019 பொது மாநாடு


நேசக் குமாரத்திகள்

இளம் பெண்களுக்கு நாம் செய்கிற எல்லாவற்றின் இருதயத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் அசைக்கமுடியாத விசுவாசத்தை நீங்கள் பெற உதவுவதே எங்கள் விருப்பம்.

என் அன்பு சகோதரிகளே, உங்களுடனிருப்பது மகிழ்ச்சியாயிருக்கிறது. நாம் ஆத்துமாவை இழுக்கிற மற்றும் மகிழ்ச்சியாக்குகிற வெளிப்படுத்தல் பொழிகிறதை பார்க்கிறோம்.

நாம் தொடங்கும்போது, சில நண்பர்களை உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன். அவர்கள் தாலந்து, கலாச்சாரம், தனிப்பட்ட, குடும்ப சூழ்நிலைகளுடைய மற்றும் விசேஷ திறமைகளுடைய இளம் பெண்கள். ஒவ்வொருவரும் உங்கள் அனைவரையும்போல என் உள்ளத்தைக் கொள்ளைகொண்டவர்கள்.

படம்
பெல்லா

முதலில் பெல்லாவைச் சந்தியுங்கள். ஐஸ்லாந்தில் தன் கிளையில் ஒரே இளம்பெண்ணாக பெலசாலியாக நிற்கிறாள்.

படம்
ஜோசப்பைன்

மார்மன் புஸ்தகத்தை தினமும் படிக்க மீண்டும் ஒப்புக்கொடுத்திருக்கிற ஆப்பிரிக்காவிலிருந்து வந்த அர்ப்பணிப்பு மிக்க ஜோசப்பைனை சந்தியுங்கள், இந்த எளிய, விசுவாச செயலால் வருகிற வல்லமை மற்றும் ஆசீர்வாதங்களை அவள் கண்டுபிடிக்கிறாள்.

படம்
அஷ்டைன்

கடைசியாக புற்றுநோயுடன் ஆறு வருட போராட்டத்துக்குப் பின், மரித்த விசேஷித்த இளம் பெண்ணாகிய ஆஷ்டினை சந்தியுங்கள். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி குறித்த அவளது சாட்சி இன்னும் என் இருதயத்தில் எதிரொலிக்கிறது.

நீங்கள் அனைவரும் விசேஷித்த இளம்பெண்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வரங்களுடனும், அனுபவங்களுடனும் விசேஷித்தவர்கள், இருப்பினும் மிக முக்கிய, நித்திய வழிகளில் ஒன்றுபோலிருக்கிறீர்கள்.

நீங்கள் தத்ரூபமாக பரலோக பெற்றோரின் ஆவிக்குமாரத்திகள், அவர்களது அன்பிலிருந்தும் உங்கள் இரட்சகரின் அன்பிலிருந்தும் உங்களை ஒன்றும் பிரிக்க முடியாது.1 நீங்கள் அவருக்கு நெருக்கமாக வரும்போது, முன்னோக்கி சிறு குழந்தை அடி வைத்தாலும் கூட, நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசமிக்க சீஷையாக, உங்கள் ஆத்துமாவில் அமர்கிற நீடித்த சமாதானத்தைக் காண்பீர்கள்.

நீங்கள் “[உங்கள்] பரிசுத்த தனிப்பட்ட திறமையை விருத்தி செய்யவும்,”2 நீங்கள் நீதியான செல்வாக்கை அதிகரிக்கவும் உங்களுக்கு உதவக்கூடிய சில உணர்த்தப்பட்ட அனுசரிப்புகளைப் பகிர தலைவர் ரசல் எம். நெல்சன் என்னிடம் கேட்டிருக்கிறார். இன்று அனுசரிப்பின் நான்கு பகுதிகளை நான் கூறுவேன்.

இளம்பெண்கள் தலைப்பு

முதலாவது, இளம் பெண்களுக்கு நாம் செய்கிற எல்லாவற்றின் இருதயத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் அசைக்கமுடியாத விசுவாசத்தையும் தேவ குமாரத்தியாக உங்கள் தெய்வீக அடையாளத்தைப்பற்றிய உறுதியான அறிவையும் நீங்கள் பெற உதவுவதே எங்கள் விருப்பம். 3.

இன்றிரவில், இளம் பெண்கள் தலைப்புக்கு ஒரு திருத்தத்தை அறிவிக்க நான் விரும்புகிறேன். நான் புதிய கருத்தை சொல்லும்போது, இந்த வார்த்தைகள் குறித்த சத்தியத்தைப்பற்றி பரிசுத்த ஆவியானவர் சாட்சி கூறுவதை நீங்கள் உணர வேண்டும் என நான் ஜெபிக்கிறேன்.

தெய்வீக தன்மை மற்றும் நித்திய இலக்குடன்5 நான் பரலோக பெற்றோரின் ஆவிக்குமாரத்தி.4

இயேசு கிறிஸ்துவின் சீஷையாக6 நான் அவரைப் போலாக முயற்சி செய்கிறேன்.7 தனிப்பட்ட வெளிப்படுத்தல்படி நான் நாடி செயல்படுகிறேன்.8, அவரது பரிசுத்த நாமத்தில் பிறருக்கு ஊழியம் செய்வேன்.9

எல்லா நேரங்களிலும், எல்லாவற்றிலும், எல்லா இடங்களிலும் நான் தேவனின் சாட்சியாக நிற்பேன்.10

மேன்மைப்படுதலுக்கு தகுதிபெற நான் முயலும்போது,11, மனந்திரும்புதலின் வரத்தை பேணுகிறேன்12, ஒவ்வொரு நாளும் முன்னேற முயல்வேன்.13 விசுவாசத்துடன்14, என் வீட்டையும் குடும்பத்தையும் பெலப்படுத்துவேன்15, பரிசுத்த உடன்படிக்கைகள் செய்து காத்துக் கொள்வேன் 16, நியமங்களைப் பெறுவேன்17, பரிசுத்த ஆலயங்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவேன்.18

“நாம்” என்பதிலிருந்து “நான்” என்பதற்கு மாறியதை கவனியுங்கள். இந்த சத்தியங்கள் உங்களுக்கு தனித்தனியே பொருந்தும். நீங்கள் பரலோக பெற்றோரின் நேசக் குமாரத்திகளாக இருக்கிறீர்கள். நீங்கள் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் உடன்படிக்கையின் சீஷையாக இருக்கிறீர்கள். இந்த வார்த்தைகளை நீங்கள் படித்து சிந்திக்க நான் உங்களை அழைக்கிறேன். நீங்கள் அப்படி செய்யும்போது, அவற்றின் சத்தியம் குறித்து சாட்சி பெறுவீர்கள். இச்சத்தியங்களைப் புரிந்துகொள்வது, நீங்கள் சவால்களைச் சந்திக்கும் விதத்தை மாற்றும். உங்கள் அடையாளத்தையும் நோக்கத்தையும் அறிதல், உங்கள் சித்தத்தை இரட்சகரோடு இணைக்க உதவும்.

நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும்போது, சமாதானமும் வழிநடத்தலும் உங்களுடையதாயிருக்கும்.

இளம்பெண்கள் வகுப்புக்கள்

இரண்டாம் பகுதி அனுசரிப்பு, இளம் பெண்கள் வகுப்புக்களை பாதிக்கிறது. “அடிக்கடி ஜனங்களுக்கு அதிகமாக தேவைப்படுவது, சொந்தமான ஒரு மறைவிடத்தில் வாழ்க்கையின் புயல்களிலிருந்து பாதுகாக்கப்படுவதே”19 என மூப்பர் நீல் ஏ. மாக்ஸ்வெல் சொன்னார், நமது வகுப்புக்கள் புயல்களுக்குப் பாதுகாப்பிடமாகவும், அன்பு மற்றும் சொந்தமாவதன் பாதுகாப்பான இடமாகவும் இருக்க வேண்டும். அதிக ஒற்றுமையைக் கட்டும், நட்பைப் பெலப்படுத்தும், மற்றும் இளம்பெண்களுக்கிடையே சொந்தமாகும் உணர்வை அதிகரிக்கும் முயற்சியில், வகுப்பு அமைப்பில் நாம் சில அனுசரணைகளைச் செய்கிறோம்.

ஒரு நூற்றாண்டாக, இளம்பெண்கள் முன்று வகுப்புக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். உடனே தொடங்கி, நாங்கள் இளம் பெண்கள் தலைவர்களையும் ஆயர்களையும், ஒவ்வொரு இளம்பெண்ணின் தேவைகளை ஜெபத்தோடு கருத்தில்கொண்டு, தொகுதியின் குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப வயதுப்படி அவர்களை ஒழுங்கமைக்க அழைக்கிறோம். இது எப்படி இருக்கும் என்பதற்கு இதோ சில உதாரணங்கள்.

  • உங்களுக்கு சில இளம்பெண்கள் இருந்தால், ஒவ்வொருவரும் ஒன்றாக கூடுகிற ஒரு இளம்பெண்கள் வகுப்பு இருக்கலாம்.

  • ஒருவேளை 12 வயதில் பெரிய குழுவாக இளம் பெண்கள் இருக்கிறார்கள், வயது அதிகமான சிறு குழு இளம் பெண்கள் இருக்கலாம். நீங்கள் இரண்டு வகுப்புக்கள் வைத்திருக்க தீர்மானிக்கலாம், இளம் பெண்கள் 12 மற்றும் இளம்பெண்கள் 13–18.

  • அல்லது 60 இளம்பெண்கள் வருகிற பெரிய தொகுதியாக இருந்தால், வயது வாரியாக அமைக்கப்பட்ட ஒவ்வொரு வயதுக்குமாக ஆறு வகுப்புக்கள் நீங்கள் வைத்திருக்கலாம்.

உங்கள் வகுப்புக்கள் எப்படி அமைக்கப்பட்டாலும், ஒற்றுமையைக் கட்டுவதில் இளம்பெண்களாகிய நீங்கள் முக்கியமானவர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒளியாயிருங்கள். பிறரிடமிருந்து நீங்கள் பெற விரும்புகிற அன்பு மற்றும் கரிசனத்தின் ஆதாரமாக இருங்கள். உங்கள் இருதயத்தில் ஜெபத்துடன், தொடர்ந்து சென்று, நன்மைக்கேதுவான சக்தியாயிருங்கள். நீங்கள் அப்படிச் செய்யும்போது, உங்கள் வாழ்க்கை தயவால் நிரப்பப்படும். பிறரைப்பற்றி உங்களுக்கு நல்ல உணர்வுகள் இருக்கும், பிரதிபலனாக நன்மையைப் பார்க்கத் தொடங்குவீர்கள்.

இளம் பெண்கள் வகுப்பு பெயர்கள்

மூன்றாவது, இந்த புதிய வகுப்பு அமைப்புடன், எல்லா வகுப்புக்களும் இளம்பெண்கள் என்னும் ஒருங்கிணைந்த பெயரிலே இருக்கும்.20 பீஹைவ், மியா மெய்ட், லாரல் என்ற பெயர்களை நாம் நீக்குவோம்.

வகுப்பு தலைமைகளை பெலப்படுத்துங்கள்.

நான் குறிப்பிட விரும்புகிற கடைசி பகுதி, வகுப்புத் தலைமைகளின் முக்கியத்துவம். இளம்பெண்கள் வகுப்பு எப்படி அமைக்கப்பட்டாலும், ஒவ்வொரு வகுப்பும் ஒரு வகுப்புத் தலைமை பெற வேண்டும்!21 தெய்வீக வடிவமைப்பின்படி, இளம் பெண்கள் வகுப்புக்கு தலைமை தாங்க அழைக்கப்படுகிறார்கள்.

வகுப்புத் தலைமையின் பங்கும் நோக்கமும் பெலப்படுத்தப்பட்டு, மிக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஊழியம் செய்தல், ஊழியப்பணி, ஆர்வமூட்டல், மற்றும் ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்று பணி பகுதிகளில், இரட்சிப்பின் பணி மிக முக்கிய பொறுப்புக்களில் ஒன்று.22 ஆம், கர்த்தருடைய இளம் படையாக இளம் பெண்கள் அனைவருக்கும் ஒரு மகிமையான பணியான இது நாம் எவ்வாறு இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்ப்பதென்பதாகும்23.

சபையின் எல்லா மட்டத்திலும் தன் ஜனத்தை வழிநடத்த கர்த்தர் தலைமைகளை அழைத்திருக்கிறார். இளம் பெண்களே, வகுப்புத் தலைமையின் ஒரு அங்கத்தினராக இருப்பது இந்த உணர்த்தப்பட்ட தலைமைத்துவ அமைப்பில் பங்கேற்க உங்கள் முதல் சந்தர்ப்பம். வயது வந்தோர் தலைவர்களே, வகுப்புத் தலைமைகளை அழைப்பதை முன்னுரிமையாக்குங்கள். பின் தோளோடு தோளாக நின்று வழிநடத்தி, அவர்கள் வெற்றிபெறத்தக்கதாக, ஆலோசனை சொல்லி வழிநடத்துங்கள்.24 ஒரு வகுப்புத் தலைமையின் அனுபவ அளவு எவ்வளவிருந்தாலும், அவர்கள் இருக்குமிடத்திலிருந்தே தொடங்கி, தலைவர்களாக அவர்களை ஆசீர்வதிக்கிற திறமைகளையும் தன்னம்பிக்கைகளையும் விருத்தி செய்ய உதவுங்கள். அவர்களுக்கு நெருக்கமாக இருங்கள், ஆனால் முந்தாதீர். நீங்கள் அவர்களை வழிநடத்தும்போது, ஆவியானவர் உங்களை வழிநடத்துவார்.

படம்
சோலே

ஆலோசகர்களாக பெற்றோர் மற்றும் தலைவர்களின் முக்கிய பங்கை விளக்க, நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லுகிறேன். சோலே ஒரு வகுப்புத் தலைவியாக சேவை செய்ய அழைக்கப்பட்டாள். அவளது ஞானமிக்க ஆசாரியத்துவத் தலைவர் அவளது தலைமைக்கு பெயர்களை பரிந்துரைக்க கர்த்தரின் உதவியை நாட அவளை ஊக்குவித்தார். சோலே ஜெபித்து, விரைவாக அவளது ஆலோசகர்களாக யாரை பரிந்துரைப்பதென்ற உணர்த்துதல் பெற்றார். ஒரு செயலாளரைப்பற்றி அவள் தொடர்ந்து சிந்தித்து ஜெபித்தபோது, சபைக்கோ, நிகழ்ச்சிகளுக்கோ அரிதாக வந்த ஒரு இளம்பெண் மீது அவளது கவனம் தொடர்ந்து ஆவியால் இழுக்கப்படுவது அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அந்தத் தூண்டுதலால் பாதுகாப்பற்றதாக உணர்ந்து, சோலே தன் தாயுடன் பேசினாள். மீண்டும் வருகிற சிந்தனைகள் மூலம் நாம் வெளிப்படுத்தல் பெறலாம் என்பது ஒரு வழி என அவர் விளக்கினார். புதுப்பிக்கப்பட்ட தன்னம்பிக்கையுடன், இந்த இளம் பெண்ணை பரிந்துரைக்க வேண்டும் என உணர்ந்தாள். ஆயர் அழைப்பு விடுத்தார், அந்த இளம் பெண் ஏற்றுக்கொண்டாள். பணிக்கப்பட்ட பிறகு, அந்த இனிய செயளாளர் சொன்னாள், “எனக்கு ஒரு இடம் இருப்பதாக, அல்லது எங்காவது தேவைப்படுபவளாக நான் ஒருபோதும் உணரவில்லை. நான் பொருத்தமானவளாக உணரவில்லை. ஆனால் இந்த அழைப்பால், எனக்காக பரலோக பிதா ஒரு நோக்கமும் இடமும் வைத்திருக்கிறார் என உணர்கிறேன்.” சோலேவும் அம்மாவும் கூட்டத்திலிருந்து சென்றபோது, சோலே அம்மாவிடம் திரும்பி, கண்களில் கண்ணீருடன் சொன்னாள், “வெளிப்படுத்தல் உண்மையானது! வெளிப்படுத்தல் உண்மையாகவே வேலை செய்கிறது!”

வகுப்புத் தலைமைகளே, நீங்கள் தேவனால் அழைக்கப்பட்டவர்கள், அவரது குமாரத்திகளின் குழுவை வழிநடத்த நம்பப்பட்டவர்கள். “கர்த்தர் உங்களை அறிகிறார். … அவர் உங்களைத் தெரிந்து கொண்டார்.”25 ஆசாரியத்துவ அதிகாரம் பெற்றவரால், தெரிந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள், அதாவது உங்கள் அழைப்பின் கடமைகளை நீங்கள் நிறைவேற்றும்போது, நீங்கள் ஆசாரியத்துவ அதிகாரத்தைப் பிரயோகிக்கிறீர்கள். நீங்கள் செய்ய ஒரு முக்கிய பணி இருக்கிறது. பரிசுத்த ஆவியின் தூண்டுதல்கள்படி செயல்பட உணர்வோடிருங்கள். நீங்கள் அப்படிச் செய்யும்போது, நீங்கள் தன்னம்பிக்கையுடன் சேவை செய்ய முடியும். ஏனெனில் நீங்கள் தனியாக சேவை செய்யவில்லை.

வகுப்புத் தலைவர்களே, மூப்பர் க்வெண்டின் எல். குக் இன்று அறிவித்த புதிய தொகுதி இளைஞர் குழுவில், உங்கள் ஞானமும், குரலும், சக்தியும் எங்களுக்குத் தேவை. உங்கள் சகோதர சகோதரிகளின் தேவைகளைச் சந்திக்க தீர்வின் ஒரு முக்கிய பாகம் நீங்கள்.26

தொகுதிகளும் கிளைகளும் ஆயத்தமானவுடன், இந்த அனுசரிப்புகள் வகுப்பு அமைப்பிலும் தலைமையிலும் தொடங்கலாம், ஆனால் ஜனுவரி 1, 2020க்குள் அமைக்கப்பட வேண்டும்.

என் அன்பு சகோதரிகளே, இன்று நான் பேசிய அனுசரிப்புகள் கர்த்தரிடமிருந்து உணர்த்தப்பட்ட வழிகாட்டுதல் என நான் சாட்சியளிக்கிறேன். இந்த அனுசரிப்புகளை நாம் கருத்தாய் நடைமுறைப்படுத்தும்போது, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் நமது தீர்மானத்தை பெலப்படுத்தவும், பிறர் அவரிடம் வர உதவவும், நாம் நமது நோக்கத்தை ஒருபோதும் விடக்கூடாது. இது அவரது சபை என நான் சாட்சியளிக்கிறேன். அவரது பரிசுத்த பணியில் ஒரு முக்கிய பாகமாக இருக்க அவர் நம்மை அனுமதிக்கிறார் என்பதற்காக நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

இந்த அனுசரிப்புகளை வழிநடத்திய அதே ஆவி, நீங்கள் உடன்படிக்கையின் பாதையில் முன்னோக்கிச் செல்லும்போது, உங்களை வழிநடத்துமாறு நான் ஜெபிக்கிறேன். அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.