2010–2019
உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி
அக்டோபர் 2017


உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி

சகல குணமாக்குதலுக்கும், சமாதானத்திற்கும், நித்திய முன்னேற்றத்திற்கும் இயேசு கிறிஸ்து ஆதாரமாயிருக்கிறார்.

சகோதர சகோதரிகளே, உங்களோடு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இக்காலையில் அதுபற்றிதான் நான் உங்களோடு பேச விரும்புகிறேன்—முழுமையான மகிழ்ச்சியடைவது.

“உலக நாடுகளை பேராபத்துக்கள் குலுக்குகிறது.” 1 புயல்களிலிருந்தும், வெள்ளங்களிலிருந்தும், வெப்ப அலைகள் மற்றும் பஞ்சங்கள்வரை, காட்டுத் தீ மற்றும் பூமியதிர்ச்சியிலிருந்தும், யுத்தங்கள் மற்றும் கொடிய நோய்கள்வரை “பூமி முழுவதும் குழப்பத்திலிருப்பதாகத்” 2 தோன்றுகிறதென சமீபத்திய செய்தித் தாளின் தலைப்பில் எழுதப்பட்டிருக்கிறது.

லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தார்கள், இந்த சவால்களால் எண்ணிலடங்காதவர்கள் இடையூறு அடைந்தார்கள். குடும்பங்களிலும் சமுதாயங்களிலும் சச்சரவுகளும், அப்படியே பயம், சந்தேகம், நிறைவேறாத எதிர்பார்ப்புகளுடன் மன போராட்டங்களும் கூட நம்மை நிலைகுலையச் செய்கின்றன. வாழ்க்கையின் நோக்கம் என லேகி போதித்த சந்தோஷத்தை உணர கஷ்டமாயிருக்கிறது. 3 “சமாதானத்திற்கு நான் எங்கே போவேன்? என் ஆறுதல் எங்கே ... ?” 4 என சிலநேரங்களில் நாம் எல்லோருமே கேட்கிறோம். “அநித்திய வாழ்க்கையில் பிரச்சினைகளுக்கும் மேலாக நான் எவ்வாறு சந்தோஷத்தைக் காண்பேன்?” என நாம் வியப்புறுகிறோம்.

பதில்கள் மிக எளிதாகத் தோன்றலாம், ஆனால் இது ஆதாம் காலத்திலிருந்தே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நமது இரட்சகராகிய, இயேசு கிறிஸ்துவை முக்கியப்படுத்துவதிலும், அவரால் காட்டப்பட்டு போதிக்கப்பட்டதைப்போல சுவிசேஷத்தின்படி வாழ்வதிலுமே நிலையான சந்தோஷம் காணப்படுறது. இயேசு கிறிஸ்துவைப்பற்றி நாம் அதிகமாக அறிந்துகொண்டு, அவரில் விசுவாசம் வைத்து, அவரைப் பின்பற்றும்போது சகல குணமாக்குதலுக்கும், சமாதானத்திற்கும், நித்திய முன்னேற்றத்திற்கும் அவரே ஆதாரமாயிருக்கிறார் என்பதை நாம் அதிகமாகப் புரிந்துகொள்வோம். தலைவர் ஹென்றி  பி. ஐரிங் வர்ணிப்பதைப்போல, “யாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான அழைப்பான”6, அவரண்டை வர நம் ஒவ்வொருவரையும் அவர் அழைக்கிறார். 5

இயேசு கிறிஸ்துவை பற்றி அறிந்துகொள்ளுங்கள்

நாம் எவ்வாறு அவரண்டை வரமுடியும்? கடந்த ஏப்ரலில் தலைவர் ரசல்  எம். நெல்சனும், மூப்பர் எம். ரசல் பலார்டும், இரட்சகரைப்பற்றி அறிந்துகொள்ளும் பகுதியாக “ஜீவிக்கிற கிறிஸ்துவைப்” 7 படிக்க நம்மை ஊக்குவித்தார்கள். அநேகர் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு சொற்றொடரையும் விவரிக்க சுவிசேஷ படங்களுடன் ஆவணத்தின் பிரதிகளை அவளுடைய வயதுவந்த பிள்ளைகளுக்கு ஒரு அன்பான தோழி சமீபத்தில் கொடுத்தாள். அதைப் புரிந்துகொள்ளவும் மனப்பாடம் செய்யவும் அவளுடைய பேரப்பிள்ளைகளுக்கு உதவ அவளுடைய பிள்ளைகளை அவள் ஊக்குவித்தாள். சிலகாலங்களுக்குப் பின், அவளுடைய ஆறு வயது பேத்தி லேனீ மனப்பாடம் செய்த உரையை ஆர்வத்துடனும் நிதானத்துடனும் ஒப்புவித்த ஒரு காணொலியை என்னுடைய தோழி பகிர்ந்தாள். ஒரு ஆறு வயது குழந்தையால் இதை சொல்லமுடிந்தால் என்னாலும் முடியுமே என நான் நினைத்தேன்!

படம்
“ஜீவிக்கும் கிறிஸ்துவை” மனப்பாடம் செய்த லேனீ

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் போதனைகளையும் நான் மிக கவனத்துடனும் பொறுப்புடனும் படித்தபோது, ஜீவிக்கிற கிறிஸ்து நினைவுக்கு வந்து இரட்சகரிடத்தில் என் நன்றியுணர்வும் அன்பும் அதிகரித்தது. அந்த உணர்த்துதலான ஆவணத்தின் ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒரு பிரசங்கம் அடங்கியிருந்தது, அவருடைய தெய்வீகப் பாத்திரங்கள் மற்றும் பூலோகத்தின் ஊழியம் எனது புரிந்துகொள்ளுதலை அதிகரித்தது. இதைப் படித்ததின் மூலமாக நான் கற்றுக்கொண்டதும் உணர்ந்ததும், சிந்தனையும், உண்மையிலேயே “இயேசு உலகத்தின் ஒளியாகவும், ஜீவனுமாகவும், நம்பிக்கையாயுமிருக்கிறார்” 8 என உறுதியளிக்கிறது. பூர்வகால வேதமும், பிற்காலத் தீர்க்கதரிசிகள் அவரைத் துதித்து எழுதிய, பேசிய வார்த்தைகளும் “இந்த உலகத்திலும் வரப்போகிற நித்திய ஜீவனிலும் சந்தோஷத்துக்கு நடத்துகிறதே அவருடைய பாதை” 9 என சாட்சியளிக்கிறது.

இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருங்கள்

நூற்றுக்கணக்கான வழிகளில் கிறிஸ்துவின் வாழ்க்கையையும் போதனைகளையும் நீங்கள் படிக்கும்போது அவரிலுள்ள உங்கள் விசுவாசம் அதிகரிக்கும். அவர் உங்களை தனிப்பட்டவிதமாக நேசிக்கிறாரென்றும் உங்களை பரிபூரணமாக புரிந்துகொள்கிறார் எனவும் நீங்கள் அறிவீர்கள். அவருடைய 33 ஆண்டுகளின் பூலோக வாழ்க்கையில், மறுதலித்தல், துன்புறுத்தல், மாம்ச பசி, தாகம் மற்றும் களைப்பினாலும், 10 தனிமை, பேச்சு மற்றும் சரீர நிந்தனையால் அவர் பாடுபட்டு இறுதியாக துன்மார்க்க மனிதர்களின் கைகளில் ஒரு சித்திரவதையுடன் மரித்தார். 11 கெத்செமனே தோட்டத்திலும் கல்வாரியின் சிலுவையிலும், நமது வேதனைகள், உபத்திரவங்கள், சோதனைகள், வியாதிகள் மற்றும் குறைபாடுகளை அவர் உணர்ந்தார். 12

நாம் எவ்வளவு பாடுபட்டாலும், அவரே குணமாக்குதலின் ஆதாரம். எந்த வகையிலும் நிந்தனை, அழிவுக்கேதுவான இழப்பு, தீராத நோய் அல்லது ஊனத்தின் உபத்திரவம், பொய்யான குற்றச்சாட்டுக்கள், துன்மார்க்க துன்புறுத்துதல்கள், பாவத்திலிருந்து அல்லது புரிந்துகொள்ளாததிலிருந்து வருகிற ஆவிக்குரிய சேதம் அனைத்தும் உலகத்தின் மீட்பரால் குணமாக்கப்படும். ஆயினும் அழைப்பில்லாமல் அவர் பிரவேசிக்கமாட்டார். நாம் அவரிடத்தில் வந்து, அவருடைய அற்புதங்களைச் செய்ய அவரை அனுமதிக்கவேண்டும்.

ஒரு அழகிய வசந்த காலத்தில் சுத்தமான காற்றை அனுபவிக்க நான் கதவைத் திறந்துவிட்டேன். ஒரு சிறிய பறவை திறந்த கதவின் வழியாக உள்ளே பறந்துவந்து பின்னர் அது இருக்கவேண்டிய இடம் இதுவல்ல என உணர்ந்தது. மிகவேகமாக அறையைச் சுற்றி அது பறந்து, தப்புவிக்கும் ஒரு முயற்சியாக கண்ணாடி ஜன்னலுக்கருகில் மீண்டும் மீண்டும் பறந்தது. திறந்த கதவை நோக்கி அதை வழிகாட்ட நான் மெதுவாக முயற்சித்தேன். ஆனால் அது பயந்துபோய் பாய்ந்து பறந்தது. இறுதியாக மிகுந்த களைப்புடன் அது ஜன்னலுக்கு மேலே அமர்ந்தது. நான் ஒரு துடைப்பத்தை எடுத்து, உயரத்திலிருந்த பறவையை, அதன் நுனியை அடையும்படியாக தூக்கினேன். அதன் கால்களுக்குப் பக்கத்தில் நான் துடைப்பத்தின் அடிப்பாகத்தை வைத்தபோது தற்காலிகமாக பறவை துடைப்பத்தின் நுனியில் ஏறியது. மெதுவாக, மிக மெதுவாக, என்னால் முடிந்தவரை துடைப்பத்தை அசைக்காமல் பிடித்துக்கொண்டு, திறந்த கதவை நோக்கி நான் நடந்தேன். திறந்த கதவுக்கருகில் நாங்கள் வந்தடைந்தபோது, பறவை வேகமாக சுதந்தரமாக பறந்து சென்றது.

அந்தப் பறவையைப்போல, தேவனுடைய ஒப்பற்ற அன்பையும் நமக்குதவ அவரது விருப்பத்தையும் நாம் புரிந்துகொள்ளாததால், சிலநேரங்களில் நம்புவதற்கு நாம் பயப்படுகிறோம். ஆனால், பரலோக பிதாவின் திட்டத்தையும் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தையும் நாம் அறிந்துகொள்ளும்போது நமது நித்திய சந்தோஷமும், முன்னேற்றமுமே அவர்களின் நோக்கமென்பதை நாம் புரிந்துகொள்கிறோம். 13 நாம் கேட்டு, தேடி, தட்டும்போது நமக்குதவுவதில் அவர்கள் ஆனந்தமடைகிறார்கள். 14. நாம் விசுவாசத்தை செயல்படுத்தி, அவர்களுடைய பதில்களுக்கு தாழ்மையுடன் நம்மையே நாம் திறக்கும்போது நமது புரிந்துகொள்ளாமை, மற்றும் நிதானிக்கிற கட்டுப்பாடுகளிலிருந்து நாம் விடுபட்டு முன்செல்லும் வழி நமக்குக் காட்டப்படுகிறது.

இயேசு கிறிஸ்து சமாதானத்திற்கும் ஆதாரமாயிருக்கிறார். “[தனது] பரந்த தோள்களில் சாய்ந்துகொள்ள” 15 அவர் நம்மை அழைத்து, நம்மை எந்த சவால்கள் சூழ்ந்திருந்தாலும் அவரது ஆவி “நம்முடைய ஆத்துமாக்களுக்கு சமாதானத்தை உரைக்கும்போது” 17 “எல்லாப் புத்திக்கும் மேலான சமாதானத்தை” 16 வாக்களிக்கிறார் என்ற ஒரு உணர்வு வருகிறது.

படம்
ஜெசானா பாட்வின்ஸ்கி, க்ரோஷியாவில் ஒரு சபை அங்கத்தினர்

கடந்த ஆண்டில், குரோஷியாவிலுள்ள கார்லோவாக்கின் குறைந்த எண்ணிக்கையுள்ள பரிசுத்தவான்களில், ஒருவரான ஜெசானா பாட்வின்ஸ்கியின் கணவரும், பெற்றோர் இருவரும் ஆறு மாத காலத்திற்குள் மரித்தபோது அவள் இரட்சகர் மீது சாய்ந்தாள். மிகுந்த துக்கமடைந்தவளாக ஆனால் நித்தியத்திற்கும் குடும்பங்களிருக்குமென்ற ஒரு சாட்சியைக் கொண்டவளாக ஆலயத்திற்குப் போக அவள் தன்னுடைய சேமிப்புகள் அனைத்தையும் பயன்படுத்தினாள். அங்கே அவளுடைய கணவருடனும் பெற்றோருடனும் அவள் முத்திரிக்கப்பட்டாள். ஆலயத்திலிருந்த அந்த நாட்கள் அவளுடைய வாழ்க்கையில் மிகமுக்கியமானதென அவள் பகிர்ந்துகொண்டாள். இயேசு கிறிஸ்துமீதும், அவருடைய பாவநிவர்த்தியிலும் அவளுடைய உறுதியான சாட்சியினால் அவள் சமாதானத்தை உணர்ந்து, அவளைச் சுற்றியிருந்தவர்களுக்கும் பெலனாயிருந்த குணமாக்குதலை அவள் உணர்ந்தாள்.

குணமாக்குதல் மற்றும் சமாதானத்தைவிட இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் அதிக வரங்களைக் கொண்டுவருகிறது. தலைவர் ஹென்றி  பி. ஐரிங் பகிர்ந்துகொண்டதைப்போல, “எனக்கு சமாதானம் தேவைப்பட்டபோது தேற்றரவாளனோடு கர்த்தர் அநேக வழிகளில் என்னை சந்தித்ததற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இருந்தும் பரலோகத்திலுள்ள பிதா நமது வசதிகளைப்பற்றி மட்டும் அக்கறைகொண்டவரில்லை ஆனால் நமது மேல்நோக்கிய முன்னேற்றத்தைப்பற்றியும் அக்கறை கொண்டவராயிருக்கிறார்.” 18

மீட்பு மற்றும் உயிர்த்தெழுதலின் வரங்களையும் அடக்கியிருக்கிற இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியால், மனந்திரும்பவும், மாறவும், நித்தியமான முன்னேற்றத்திற்கும் நமக்கு சாத்தியமாகிறது. நாம் கீழ்ப்படிதலுள்ளவர்களாயிருக்கும்போது நமக்கு அவர் கொடுக்கிற வல்லமையினால் நம் சொந்தவழிகளைவிட மிக அதிகமாக நம்மால் ஆகமுடிகிறது. எவ்வாறென முற்றிலுமாக நாம் புரிந்துகொள்ளாதிருக்கலாம், ஆனால் கிறிஸ்துவில் விசுவாசம் அதிகரித்ததாக உணருகிற நம் ஒவ்வொருவரும் நமது தெய்வீக அடையாளத்தையும் நோக்கத்தையும் பற்றி ஒரு அதிக புரிந்துகொள்ளுதலைப் பெறுவோம். அந்த அறிவுடன் சீராயிருக்கிற தெரிந்தெடுப்புகளைச் செய்ய அது நம்மை நடத்துகிறது.

“மிருகங்களின்” 19 அளவுக்கு நம்மை கீழே தள்ளிப்போட முயற்சிக்கும் உலகத்திற்கும் அப்பால், தேவன் நமது பிதா என்பதை அறிந்திருத்தல், நமக்கு தெய்வீக ஆற்றலாகிய இராஜ வாக்களிப்பாயிருக்கிறதென்றும் நமக்கு உறுதியளிக்கிறது. இந்த வாழ்க்கை ஒரு இறுதிமுடிவு என நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கிற உலகத்திற்கும் அப்பால், மீட்கப்படவும் உயிர்த்தெழவும் தேவனின் ஒரேபேறான குமாரன் நமக்கு சாத்தியமாக்கினார் என்ற அறிவு நித்திய முன்னேற்றத்திற்கு நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது.

இயேசு கிறிஸ்துவைப் போலாகுங்கள்

இயேசு கிறிஸ்துவைப்பற்றி நாம் அதிகமாக அறிந்துகொள்ளும்போது, அவரில் நாம் அதிக விசுவாசத்தை விருத்திசெய்து, இயற்கையாக நாம் அவருடைய எடுத்துக்காட்டை பின்பற்ற விரும்புவோம். அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வது நமது பெரும் விருப்பமாயிருக்கிறது. அவர் செய்ததைப்போல மற்றவர்களின் பாடுகளிலிருந்து விடுவிக்க நமது இருதயங்கள் ஏங்குகிறது. நாம் கண்ட சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அவர்கள் அனுபவிக்க நாம் விரும்புவோம்.

அவர் செய்ததைப்போல செய்ய முயற்சிப்பது ஏன் மிக வல்லமையுடையதாய் இருக்கிறது? ஏனெனில் நமது விசுவாசத்தை செயல் படுத்தும்போது நித்திய சத்தியத்தை பரிசுத்த ஆவியானவர் சாட்சியளிக்கிறார். 20 அவருடைய எடுத்துக்காட்டை நாம் பின்பற்றும்போது, நாம் மகிழ்ச்சியை அனுபவிக்க ஆரம்பிப்போம், அவரது பாதையில் நாம் தொடர்ந்திருக்கும்போது நாம் மகிழ்ச்சியின் பரிபூரணத்திற்கு வருவோம் என அவர் அறிந்திருப்பதால் அவரது கட்டளைகளைக் கைக்கொள்ள அவருடைய சீஷர்களுக்கு இயேசு அறிவுறுத்துகிறார். “என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” 21 என அவர் விளக்கினார்.

நமது சாட்சிகள் இயேசு கிறிஸ்துவின் மற்றும் அவரது சுவிசேஷத்தின் அசைக்கமுடியாத அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிறதா? வாழ்க்கையின் புயல்கள் நம்மீது அழுத்தும்போது உதவிக்கு, எப்படி செய்வது புத்தகத்தை அல்லது இணையதள பதிவை மூர்க்கத்தனமாக தேடுகிறோமா? இயேசு கிறிஸ்து பற்றிய நமது அறிவு மற்றும் சாட்சிகளைக் கட்டவும் பெலப்படுத்தவும் நாம் நேரம் எடுத்துக்கொள்வது, சோதனை மற்றும் உபத்திரவத்தின் நேரங்களில் வளமான பிரதிபலன்களை கொடுக்கும். வேதங்களை தினமும் படித்தல், ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை தியானிப்பது, அர்த்தமுள்ள தனிஜெபங்களில் ஈடுபட்டிருப்பது, ஒவ்வொரு வாரமும் மனமுவந்து திருவிருந்தில் பங்கேற்பது, இரட்சகரைப்போல சேவை செய்வது போன்ற இந்த ஒவ்வொரு எளிய செயல்களும் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஒரு கட்டுமான கருங்கல்லாக மாறுகிறது.

எது உங்களுக்கு சந்தேஷத்தைக் கொண்டுவருகிறது? ஒரு நீண்ட நாளின் முடிவில் நீங்கள் நேசிப்பவர்களைப் பார்க்கும்போதா? ஒரு வேலையைச் சிறப்பானதாகச் செய்த திருப்தியிலா? மற்றவர்களின் சுமையை நீங்கள் பகிர்ந்துகொள்ளும்போது யாரோ ஒருவரின் கண்களிலுள்ள ஒளியா? உங்கள் இருதயங்களின் ஆழத்தை அடைகிற ஒரு துதிப்பாடலின் வரிகளா? ஒரு நெருங்கிய நண்பரின் கைகுலுக்குதலா? உங்களின் ஆசீர்வாதங்களை சிந்தித்துப் பார்க்க சிறிது தனிமையான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், பின்னர் அவற்றைப் பகிர்ந்துகொள்ள வழிகளைக் கண்டுபிடியுங்கள். உங்கள் அண்டைவீட்டாருக்கு அல்லது உலகமுழுவதிலுமுள்ள உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு சேவை செய்யவும், உயர்த்தவும் நீங்கள் தொடர்ந்து அணுகும்போது, நீங்கள் அதிக சமாதானத்தையும், குணமாக்குதலையும் முன்னேற்றத்தையும் உணருவீர்கள்.

உங்கள் வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவில் மையப்படுத்தும்போது, உங்கள் சூழ்நிலைகள் எதுவாயிருந்தாலும் அதில் நீங்கள் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். உண்மையில் “அவர் ஒருவர் மட்டுமே பதிலாயிருக்கிறார்.” 22 சிரத்தையுடன் படிப்பதின் மூலமாக இயேசு கிறிஸ்துவை நாம் அறிந்துகொள்ளும்போது, அவரில் அதிக விசுவாசத்தை விருத்தி செய்வதில், எப்போதுமே அவரைப்போலாக முயற்சிப்பதில் “அவருடைய தெய்வீக குமாரனின் ஒப்பிடமுடியாத வரத்திற்காக தேவனே உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்” 23 எனச் சிறு லேனீயுடன் சொல்வதற்கு நாமும் அசைக்கப்படுவோம். இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வதிக்கபட்ட மற்றும் பரிசுத்த நாமத்தில், ஆமென்.