வேதங்கள்
ஏத்தேர் 5


அதிகாரம் 5

மூன்று சாட்சிகளும், பணியுமே மார்மன் புஸ்தகத்தின் சத்தியத்திற்குச் சாட்சியமாக நிற்கும்.

1 இப்பொழுதும் மரோனியான நான் எனக்குக் கட்டளையிட்டபடியே, எனது ஞாபகத்தின்படியே வார்த்தைகளை எழுதியிருக்கிறேன்; நான் முத்திரையிட்ட காரியங்களை உனக்குச் சொல்லியிருக்கிறேன்; ஆதலால் நீ மொழிபெயர்ப்பதற்காக அவைகளைத் தொடாதிருப்பாயாக; அது தேவ ஞானமாயிருந்தாலொழிய, அந்தக் காரியம் உனக்கு தடை செய்யப்பட்டதாயிருக்கிறது.

2 இதோ, இந்தப் பணியை நடப்பிக்கும்படி உதவி செய்கிறவர்களுக்கு, இத்தகடுகளைக் காண்பிக்கிற பாக்கியத்தை நீ பெறலாம்.

3 தேவ வல்லமையால் அவை மூவருக்கு காண்பிக்கப்படும். ஆகையால் இவைகள் நிச்சயமாகவே சத்தியமானவை என்று அவர்கள் அறிவார்கள்.

4 மூன்று சாட்சிகளின் நாவுகளினாலே இக்காரியங்கள் ஸ்தாபிக்கப்படும்; மூவரின் சாட்சியமத்திலும், இப்பணியிலும் தேவ வல்லமையும், அவருடைய வார்த்தையும் காண்பிக்கப்படும். இதைக் குறித்து பிதாவும் குமாரனும், பரிசுத்த ஆவியானவரும் சாட்சி கொடுக்கிறார்கள். இவை யாவும் உலகத்திற்கு விரோதமாக கடைசி நாளின்போது சாட்சியமாக நிற்கும்.

5 அவர்கள் மனந்திரும்பி, இயேசுவின் நாமத்தில் பிதாவினிடத்தில் வந்தால், அவர்கள் தேவ ராஜ்யத்தினுள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.

6 இப்பொழுது, இக்காரியங்களுக்கான அதிகாரத்தை நான் பெற்றிருக்கவில்லையா என்று நீங்களே நிதானித்துப் பாருங்கள்; நீங்கள் என்னைப் பார்க்கும்போது, நான் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறேன் என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள். கடைசி நாளின்போது தேவனுக்கு முன்பாக நாம் நிற்போம். ஆமென்.